ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்

Go down

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  Empty உலகின் பெண் பூமித் தெய்வங்கள்

Post by தாமு Fri May 20, 2011 11:48 am

பரந்து விரிந்த இந்த உலகில் இனம், மொழி, மதம், கலாச்சாரம், வகுப்பு என பல பிரிவினைகள் காணப்பட்டாலும் அநேகமான மானுட ஜீவராசிகள் பூமியை பெண்ணாக போற்றித் துதிக்கும் ஒற்றுமை வியப்புக்குரியது.

பல்வேறு முரண்பாடுகள் நிறைந்த இந்த சமூகத்தில் அநேகமான மக்கள் பூமிக் கடவுளாக பெண் தெய்வங்களை வழிபாடு செய்கின்றனர். இவ்வாறான பெண் பூமித் தெய்வங்கள் பற்றிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
ஐசிஸ் (Isis)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0113
செழுமையான நாகரீக பாரம்பரியத்தைக் கொண்ட எகிப்து மக்களின் மிக முதன்மையான தெய்வங்களில் ஒன்றாக ஐசிஸ் குறிப்பிடப்படுகிறது. மரணச் சடங்குகளில் மட்டுமன்றி, நோய்களைக் குணப்படுத்தும் பிரார்த்தனை, குழந்தைபேறு, செல்வம் தொடர்பான வேண்டுதல்; உள்ளிட்ட பல்வேறு முக்கிய கிரியைகளில் ஐசிஸ் பெண் தெய்வம் முதனிலை வகிக்கின்றது.

கிரேக்க மக்களின் பூமித் தாயான ஐசிஸ் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக மக்கள் நம்புகின்றனர். பூமிக் கடவுளான கெப் மற்றும் வான தெய்வமான நட் ஆகியோரின் குழந்தையாக ஐசிஸ் தெய்வத்தை கிரேக்க மத வரலாறு சித்தரிக்கின்றது. எகிப்து மன்னர் ஒசிரிசைஸ் ஐசிஸ் தெய்வம் மணந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துர்கா (Durga)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0216
இந்துக்களின் கடவுளான துர்க்கை பிரபஞ்சத்தின் தெய்வமாக போற்றித் துதிக்கப்படுகின்றார். எட்டு கரங்களையும் சிங்கத்தை வாகனமாகவும் கொண்ட துர்க்கை ஏனைய கடவுளரினால் அழிக்க முடியாத தீய சக்திகளை இலகுவில் இல்லாதொழிப்பதாக இந்து மக்கள் நம்புகின்றனர்.

பூமித் தாயாக போற்றப்படும் துர்க்கையை காவல் தெய்வமாகவே வழிபடுகின்றனர். கிழக்கு இந்திய பகுதிகளில் துர்க்கை அம்மனுக்கு நன்றி பாராட்டும் விசேட பண்டிகைகள் வருடாந்தம் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
நூ குவா (Nu Gua)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0313
மனிதத் தலையும் மீன் அல்லது பாம்பின் உடலையும் கொண்டமைந்த தெய்வமான நூ குவாவை சீன மக்கள் முக்கியமான கடவுளரில் ஒருவராக வழிபடுகின்றனர். (சீன வரலாற்றின் அடிப்படையில் இந்த பூமியில் தோன்றிய முதல் பெண் நூ குவாவாகும்)

ஆண் பெண் பால் ஒழுக்கம் மற்றும் திருமண பந்தம் தொடர்பான நியதிகளை வகுத்த தெய்வமாக நூ குவா போற்றப்படுகின்றார். சொர்க்கத்தில் ஏற்படும் வெற்றிடங்களையும் நூ குவா தெய்வம் நிரப்புவதாகவும், பூமியில் ஏற்படும் பழுதுகளை சீர் செய்பவராகும் கருதப்படுகின்றார்.
காய்யா (Gaia)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0415
பண்டைய கிரேக்க கவிஞர் ஹிசியோட் இந்தப் பிரபஞ்சத்தின் தலைர் என்னும் சொல்லை தனது படைப்புக்களில் பயன்படுத்தாது, பிரபஞ்சத்தின் தலைவி என உருவகித்துள்ளார். இதன் மூலம் காய்யா ஓர் பெண் தெய்வம் என்பது புலனாகின்றது.

கடல், வான், மலைகள் ஆகிய பல பிரதேசங்களைச் சேர்ந்த கடவுளருக்கும் தலைமைக் கடவுளாக காய்யா போற்றப்படுகின்றார். வானத்தை கடவுளாக கொண்ட காய்யா சக்தி வாய்ந்த கடவுளாக கருதப்படுகின்றார்.
கொட்லிக்யூ (Coatlicue)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0512
கொட்லிக்யூ கடவுள் பூமித் தெய்வமாகப் போற்றப்படுகின்றார். படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை மேற்கொள்ளும் கடவுளாகவும், கடவுளரின் தாயாகவும் கொட்லிக்யூ கருதப்படுகின்றார். சந்திரனையும் நட்சத்திரங்களையும் பிரசவித்த தெய்வமாக கொட்லிக்யூவை அடையாளப்படுத்துகின்றனர்.

குழந்தை பிரசவிப்புக்களின் போது வழிபாடு செய்யப்படும் பிரதான தெய்வமாக கொட்லிக்யூ தெய்வம் திகழ்கின்றார். வாழ்க்கை, மீள் பிறப்பு, பிறப்பு, தீ, செல்வம் போன்றவற்றின் குறியீடாகவும் கொட்லிக்யூ போற்றப்படுகின்றார்.

தாய்க் கடவுளாக வர்ணிக்கப்படுகின்ற போதிலும் இந்தக் கடவுளின் தோற்றம் பிரசன்னமானதல்ல. பாம்பு, மனிதரின் உடல் பாகங்கள் போன்றவற்றினால் இந்த தெய்வத்தின் உருவம் சித்தரிக்கப்படுகின்றது.
நின்சுன் (Ninsun)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0611
நின்சுன் என்பதற்கு காட்டு பெண் எருமை என்று பொருள். எனினும் சுமேரியர்கள் இந்தப் பெண் தெய்வத்தில் பல்வேறு தெய்வீக சக்திகளை கண்டனர். தாயாகவும், மாசற்றதாகவும், குழந்தைகள் மீது பிரியமானதாகவும் நின்சுன் தெய்வம் போற்றப்படுகின்றது.

தெய்வீக சக்தியினால் மனிதர்களுக்கு பல்வேறு அருள்களை பாலிக்கும் தேவதையாக நின்சுன் தெய்வத்தை மக்கள் நோக்கினர். எருமை என்ற பொருளைக் கொண்டிருந்த போதிலும், இந்தப் பெண் தெய்வத்தின் உருவம் மனிதருக்கு நிகரானத் தோற்றத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அசேசீ யா (Asase Yaa)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0712
மேற்கு ஆபிரிக்க மக்களின் பூமித் தெய்வமாக அசேசீ யா போற்றப்படுகின்றார். நியாயத்தை, உண்மையை நிலைநாட்டும் கடவுளாக ஆபிரிக்க மக்கள் அசேசீ யா தெய்வத்தை நோக்குகின்றனர். அசேசீ யா தெய்வத்தின் நாளாக வியாழக்கிழமை கருதப்படுகின்றது.
தானு (Danu)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0812
அயர்லாந்து மக்களின் ஐதீகத்தின் அடிப்படையில் தானு பூமிக்கடவுளாக போற்றப்படுகின்றார். தெய்வீகம், செல்வம் மற்றும் காற்றின் குறியீடாக தானு தெய்வம் கருதப்படுகின்றார். தீய சக்திகளிடமிருந்து தானு மக்களை காப்பாற்றி சுபீட்சம் அளித்ததாக வரலாற்றுக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அர்ட்டிமிஸ் (Artemis)

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  0911
கிரேக்க மக்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாக அர்ட்டிமிஸ் போற்றப்படுகின்றார். ஸியோஸ் மற்றும் லிட்டோ ஆகிய கடவுளரின் புதல்வியாக அர்ட்டிமிஸ் கருதப்படுகின்றார்.

காலத்திற்கு ஏற்ற வகையில் பல தெய்வங்களை குறிப்பதற்கு அர்ட்டிமிஸின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாய் தெய்வமாக, பிரசவ தெய்வமாக, அர்ட்டிமிஸ் போற்றப்படுகின்றார். மானை வாகனமாகவும், நிறைய அம்புகளைத் தாங்கிய தெய்வமாகவும் அர்ட்டிமிஸ் சித்தரிக்கப்படுகின்றார்.
பிரிக்கா

உலகின் பெண் பூமித் தெய்வங்கள்  1016
ஒடின் தெய்வத்தின் மனைவியாக பிரிக்கா தெய்வம் கருதப்படுகின்றார். பிரிக்கா தெய்வமும் பூமித் தாயாக போற்றப்படுகின்றார்.

குழந்தை பிரசவம் தொடர்பான வழிபாட்டுத் தெய்வாகமாகவும் சித்தரிக்கப்படுகின்றார். இருண்ட காலத்தில் ஸ்கன்டினேவியாவில் ஏற்பட்ட குழப்பங்களின் போது இந்தத் தெய்வம் அருள் பாலித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.





வணக்கம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum