ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

Go down

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!  Empty கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

Post by மஞ்சுபாஷிணி Thu May 19, 2011 4:22 pm

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!





கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!  P28(1)
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!  P29
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!  P29a

ஞ்ச பூதங்களால் ஆனது நம் உடல். அதேபோல், பரப்பிரம்மத்துக்கு பஞ்சப் பிராகாரங்கள் உள்ளன. அவற்றை, பரரூபம், வியூக மூர்த்தம், விபவாதாரம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என ஐந்து நிலைகளாக உள்ளன என்று பார்த்தோம், இல்லையா?!
மேலும், பரரூபம் என்பது ஸ்ரீவைகுண்டநாதனின் திருக்கோலம்; அதாவது ஸ்ரீமந் நாராயணன். வைகுண்டத்தில் பரந்தாமன் எழுந்தருளியுள்ள நிலை. வியூக மூர்த்தம் என்பது, திருப்பாற்கடலில் திருமாலின் திருக்கோலம்; அதாவது அவதாரங்களுக்கு முந்தைய திருமேனி. விபவாதாரம் என்பது, திரு அவதாரத் திருக்கோலங்கள். அந்தர்யாமி என்பது, நமக்குள் குடிகொண்டிருக்கிற இறைத் தன்மையின் அரூப நிலை. ஆலயங்களில் இன்றைக்குத் தரிசிக்கக் கிடைக்கிற திருமேனிதான், அர்ச்சாவதாரக் கோலம் என்றும் பார்த்தோம்!

கீதையில், முதலாவது திருநாமம் துவங்கி, 122-வது திருநாமம் வரை, பரரூபமாக இருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனைப் பற்றியும், அவனது பெருமைகளையும் விவரிக்கின்றன. அடுத்ததாக, 123-வது திருநாமத்தில் இருந்து 146-வது திருநாமங்கள் வரை, திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ள பரந்தாமனின் வியூகாவதாரத்தை எடுத்துரைக்கின்றன.
இதையடுத்து, 147-வது திருநாமத்தில் இருந்து இறுதி வரைக்கும், விபவாதாரத்தைப் பற்றி மிக அருமையாக, ஆத்மார்த்தமாக விவரிக்கப்பட்டுள்ளன.
'சரி.. அப்படியெனில், அந்தர்யாமியையும் அர்ச்சாவதாரத்தையும் சொல்லவில்லையா? விவரிக்கவில்லையா?’ என நீங்கள் கேட்பது புரிகிறது.
அதாவது, அந்தர்யாமி என்கிற உள்ளுக்குள் இருக்கிற அரூப நிலையை, பரரூபத்துடனும்... அர்ச்சாவதாரத்தை விபவரூபத்துடனும் சேர்த்து, திருநாமங்களாக அழகுறத் தரப்பட்டுள்ளது.
எத்தனை அவதாரங்கள்... எவ்வளவு திருநாமங்கள்! ஆனால் என்ன... 697-ல் துவங்கி 770 வரைக்கும்; அதையடுத்து 989 முதல் 992 வரைக்கும் எந்த அவதாரத்தின் மகிமையையும் மகோன்னதத்தையும் விவரித்துள்ளார்கள், தெரியுமா? கிட்டத் தட்ட 78 திருநாமங்களில், பகவான் ஸ்ரீகிருஷ்ணரையே சிலாகித்துள்ளது கீதை. பின்னே... பாட்டுடைத் தலைவன் ஸ்ரீகிருஷ்ணன்தானே?!
அதில் முக்கியமானதும் முதலாவதுமான திருநாமம், வசுரேதாஹ! வசுரேதன் என்பது ஸ்ரீகண்ணனைக் குறிக்கும் திருநாமம். வசு என்றால் ஜோதி என்று பொருள். வசுரேதன் என்றால், திவ்வியமான ஜோதி வடிவினன் என்று அர்த்தம்.
பராசர பட்டர், தன்னுடைய சீடன் மைத்ரேயரிடம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தை விவரிக்கிறார். அப்போது, 'கம்சனின் தொல்லை தாங்க முடியவில்லை. அவனால் தேசத்தில் அனைவருக்கும் நிம்மதியே போய்விட்டது. நீங்கள்தான் அருளவேண்டும்’ என்று ஸ்ரீமந் நாராயணனிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்! அப்போது, திருமால்... ''என் தலையில் இருந்து, வெளுத்த முடி ஒன்றையும் கறுத்த முடி ஒன்றையும் கிள்ளிப் போடுகிறேன். வெளுத்த முடி,
ஸ்ரீபலராமனாகத் தோன்றுவான். கறுத்த முடி, நானாகவே அவதரிப்பேன்'' என்று சொல்லி அருளியதுடன், அப்படியே பிறப்பெடுத்தாராம் ஸ்ரீமந் நாராயணன். ஆக, பகவானின் தலைமுடியானது கூட தேஜஸ் பொருந்தியதாக, ஒளி படைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தன்னுடைய சீடனுக்கு அற்புதமாக விளக்கியுள்ளார் பராசர பட்டர்.
ஆக மொத்தத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவான் ஒளிமயமானவன்; தேஜஸ் நிரம்பியவன் என்பதையே அட்சரம் பிசகாமல் வலியுறுத்துகின்றனர் சான்றோர்!
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!  P31நம்மாழ்வார் மட்டும் சும்மா இருந்துவிட்டாரா, என்ன? ஒளி, ஒளி, ஒளி... ஒளிமயமானவன் ஸ்ரீகிருஷ்ண பகவான் என்பதை தன்னுடைய பத்துப் பாடல்களில் மிகப்பிரமாதமாக எடுத்துரைத் திருக்கிறார். 'ஆதி எம் சோதி உருவை அங்கு வைத்தாற் போன்று’ என்று பாடுகிறார்.
அதாவது, ஆதியும் ஜோதியுமான உருவம் கொண்டிருக்கிற பரந்தாமன், பரமபதத்தில் இருக்கிற நிலையைப் போலவே இங்கேயும் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்தான் என்று உருகுகிறார் நம்மாழ்வார். அதுமட்டுமா? எத்தனை இடர்கள் வந்தாலும், ஸ்ரீகண்ணனின் நாம சங்கீர்த்தனங்களைச் சொல்லி வந்தோமானால், வாழ்வில் உய்யலாம் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார்.
அதுவும், பகவானின் திருநாமங்களை எப்படிச் சொல்ல வேண்டுமாம்?
ஆடிக்கொண்டே திருநாமங் களைச் சொல்ல வேண்டுமாம்! அந்த ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? தலை காலைத் தட்டவேண்டும்; கால்கள் தலையைத் தட்ட வேண்டும். 'என்னடா இவன்... தலை கால் புரியாம ஆடுறானே...’ என்போமே! அந்த அர்த்தத்தில், தன்னையே மறந்து இறைவன் ஒருவனையே நினைந்து, ஆடவேண்டும் என்கிறார் நம்மாழ்வார்.
'இந்தக் காலத்தில், இப்படி ஆடினால், சுற்றியிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’ எனும் கேள்வி எழலாம். இப்போது நம்மிடையே தோன்றியுள்ள வினாவுக்கு, அப்போதே விடை அளித்துவிட்டார் நம்மாழ்வார்.
எப்படி?
பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லியபடி தன்னையே மறந்து ஆடும்போது, எவரேனும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள் என்றால், அதற்காகக் கவலைப் படாதீர்கள்; வெட்கப்படாதீர்கள்; சட்டென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு, நாமசங்கீர்த்தனம் சொல்வதையும் நிறுத்திவிட்டு, உடைந்துவிடாதீர்கள். அவர்கள் கைத்தட்டுகிறார்கள், அல்லவா? அந்தக் கைத்தட்டலுக்குத் தக்கபடி, உங்களின் ஆட்டத்தை மாற்றி ஆடுங்கள்; திவ்விய நாமங்களைச் சொல்லிக் கொண்டே ஆடுங்கள். உங்களின் ஆட்டமும்பாட்டமும் பார்த்து, மலைத்துப் போய், வியந்தும் நெகிழ்ந்துமாக, அவர் களும் உங்களுடன் சேர்ந்து ஆடுவதற்கு வந்துவிடுவார்கள்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்குவார்கள் என குழம்பிய மனத்துக்குத் தெளிவூட்டுகிறார் நம்மாழ்வார்.
ஒரு விஷயத்தைத் துவங்குவதுதான் நம்முடைய வேலை; அதைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது இறைவனின் கடமை. திருப்பதிக்குப் போய், க்யூவில் நிற்பதுதான் நம்முடைய வேலை. அந்தக் கூட்டம் நெட்டித் தள்ள, நெட்டித் தள்ள... திருவேங்கடமுடையானுக்கு அருகில் போய்த்தானே ஆகவேண்டும்?! அதேபோல், பகவானின் நாமசங்கீர்த்தனம் செய்து பாடிக் கொண்டிருப்பது தான் நம்முடைய பணி; தன்னுடைய திருவடியில் நம்மைச் சேர்த்துக் கொள்வது இறைவனின் கடமை! நம்முடைய பணியைச் செம்மையாகச் செய்து கொண்டிருந்தால், இறைவன் தனது கடமையை, கருணையும் வாஞ்சையும் பொங்க, சீக்கிரமே நிறைவேற்றுவான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் தெரிவிக்கிறான்...''நான் பிறக்காதவனாகவே; நான் சரீரத்துடன் பிறக்காதவனாகவே; அப்படிப் பிறந்தாலும், சர்வேஸ்வரத்தை விடாதவனாகவே...'' என அருள்கிறார்.
அதாவது, மனிதர்களைப் போல் உடம்புடனோ அவர்களுக்கு உண்டான கர்ம நியதிகளுடனோ பிறக்கவில்லை. அப்படி மனித உருவெடுத்து வந்தபோதிலும், என் குணங்களை, எந்தத் தருணத்திலும் விட்டுவிலகவில்லை என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
ஆக, தன்னுடைய குணங்களை எந்தத் தருணத்திலும் விட்டு விலகாத ஸ்ரீகிருஷ்ணர், அவருடைய குழந்தைகளான நம்மை மட்டும் விட்டுவிட்டு, விலகிவிடுவாரா என்ன?
பகவானை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைப்போம்; அவர் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைப்பார்!

நன்றி விகடன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum