புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!” Poll_c10கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!” Poll_m10கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!” Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 6%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!”

sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Thu May 19, 2011 12:44 pm

கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!”
-------------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Thursday 19 May 2011, 05:50 GMT
--------------------------------------------------------------------------------------------------------------
புதுடில்லி, இந்தியா: கடந்த 3 தினங்களாக புதுடில்லி விஜயத்தை மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், புதுடில்லியை விட்டுக் கிளம்பும்போது களைத்துப்போய், பெருமூச்சு விடவேண்டிய நிலைமை! “ஸ்ஸ் அப்பாடா.. ஒருவழியாக இங்கிருந்து கிளம்பிவிட்டோம்”

அந்தளவுக்கு அவரை இருத்தி எழுப்பி, ட்ரில் வாங்கிவிட்டது புதுடில்லி.

இதற்கு முந்தைய அவரது புதுடில்லி விஜயங்கள் எல்லாவற்றிலும் பார்த்ததைவிட, வித்தியாசமான புதுடில்லியை அவர் இம்முறை பார்க்க நேர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முகத்துடன் புதுடில்லி!

அதிலும் புதுடில்லி, தமிழக நடப்பு அரசியலுக்கும் புதிய தமிழக முதல்வருக்கும் கொடுத்த முக்கியத்துவம், அவரை ஆச்சரியப்பட வைத்திருக்கும்.

“ஸ்ரீலங்காவில் நடைபெறும் விஷயங்கள், தமிழகத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்துங்கள்”

மேலேயுள்ள வாக்கியத்தை வெளியுறவு அமைச்சர் பீரிஸ், கடந்த 3 நாட்களில் 30 தடவையாவது கேட்டிருப்பார் என்கிறார்கள் அவருடன் சென்ற அதிகாரிகள்.

புதுடில்லியில் அவர் சந்தித்த இந்தியத் தலைவர்களில் இருந்து, அதிகாரிகள் வரை, கிட்டத்தட்ட ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருமே தமிழக நிலவரம் பற்றியும் குறிப்பிட்டதாகத் தெரியவருகின்றது. இந்திய அரசின் முக்கியமான ஒருவர், “தமிழகத்தில் ஏற்படும் ஸ்ரீலங்கா தொடர்பான மாற்றங்கள், டில்லியை யோசிக்க வைத்திருக்கிறது. நீங்களும் (ஸ்ரீலங்கா) இனிவரும் காலங்களில் தமிழக விவகாரங்களை சீரியஸாக எடுக்க வேண்டியிருக்கும்” என்றும் குறிப்பிட்டாராம்!

ஒருகட்டத்தில் வெளியுறவு அமைச்சர் பீரிஸ், “என்னுடன் பேசுவதற்காக அனைவரும் ஒரே இடத்தில் பயிற்சி எடுத்தார்களோ” என்று தன்னுடன் சென்றவர்களிடம் காமன்ட் அடித்திருக்கிறார். அந்தளவுக்கு சொல்லிச் சொல்லி ஒவ்வொரு சந்திப்பிலும் தமிழகம் பற்றிய பேச்சு சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது!

இதற்கெல்லாம் உச்சக்கட்டம், ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சருக்கு இந்திய உட்துறை அமைச்சினால் கொடுக்கப்பட்ட அட்வைஸ்.

“தேவையில்லாமல் தமிழகத்தின் புதிய முதல்வர் ஜெயலலிதாவுடன் பகைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் நினைப்பதுபோல இலகுவான நபரல்ல அவர். முடிந்தவரை அவருடன் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்” என்பதுதான் அந்த அட்வைஸ்!

இதில் வேடிக்கை என்னவென்றால், அத்துறைக்கு அமைச்சராக இருப்பர், தமிழகத் தேர்தலில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுக்கு எதிராக முழங்கிய ப.சிதம்பரம்!

தமிழகத் தேர்தலில் ஜெயித்தவுடன் ஜெயலலிதா விட்ட ஆரம்ப அறிக்கைகள் ஒன்றில், ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியிருந்தார். போர்க்குற்ற விசாரணைகள் பற்றியும் பிரஸ்தாபித்திருந்தார். அதுபற்றி கருத்துத் தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா அரசு, “ஜெயலிதாவையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை” என்ற தொனியில் கூறியிருந்தது.

ஆனால் ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சரின் புதுடில்லி விஜயத்தின்போது, ஜெயலலிதா கூறுபவற்றைக் கணக்கில் எடுத்தேயாக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டது ஸ்ரீலங்கா அரசு. அதற்குப்பின் அவரைச் சீண்டும் படியான அறிக்கைகள் கொழும்பிலிருந்து வெளியாகாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

அப்படியிருந்தும், ஸ்ரீலங்கா அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே உரசல் போல ஒரு தோற்றம் ஏற்பட்டிருப்பதை புதுடில்லி அரசியல் தலைவர் ஒருவர் ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சருக்குச் சுட்டிக் காட்டினார்.

அந்த இந்திய அரசியல் தலைவரால் கூறப்பட்ட காரணம், கொழும்பிலிருந்து வெளியான ஆரம்ப அறிக்கை (“ஜெயலிதாவையெல்லாம் நாம் கணக்கில் எடுப்பதில்லை”) நந்திபோல குறுக்கே நிற்கின்றது என்பதே!

“இந்த நந்தியை அகற்றுவதற்கு ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள்” என்று அமைச்சர் பீரிஸிடம் கூறப்பட்டது.

தமிழக முதல்வர் விஷயத்தில் புதுடில்லியின் மனநிலையைப் புரிந்துகொண்ட அமைச்சர் பீரிஸ், புதுடில்லியில் இருந்தவாறே கொழும்பைத் தொடர்பு கொண்டு இதுபற்றிப் பேசியிருக்கிறார்.

ஸ்ரீலங்கா அரசிடமிருந்து தமிழக முதல்வர் பற்றி சாதகமான வேறொரு அறிக்கை வெளியிடுவது சாத்தியமா என்று அவர் கேட்டதாகத் தெரிகின்றது. இதுபற்றிக் கொழும்பில் உடனடியாக ஆராயப்பட்டது.

இந்த யோசனையை கொழும்பு அதிகாரிகள் சிலர் எதிர்த்தனர். காரணம் மரபு ரீதியாக அதிலுள்ள சிக்கல்.

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் அரசு, மற்றொரு நாட்டின் தலைவரைப் பற்றி வேண்டுமானால் அறிக்கை வெளியிடலாம். ஆனால், மற்றொரு நாட்டின் மாநில அரசின் தலைவரைப் பற்றி அறிக்கை விடுவதற்கு, ஸ்ரீலங்காவின் புரோட்டோகாலில் இடமில்லை என்று அந்த அதிகாரிகள் வாதிட்டிருக்கின்றனர்.

புதுடில்லியில் தங்கியிருந்த அமைச்சர் பீரிஸின் அதிகாரிகளுக்கும், கொழும்பு அதிகாரிகளுக்கும் இடையே சில மணிநேரமாக இந்த வாதங்கள் நடைபெற்றதை, நாம் தொடர்பு கொண்ட கொழும்பு அதிகாரி ஒருவர் ஒப்புக் கொண்டார்.

அமைச்சர் பீரிஸே இதுபற்றி நேரடியாகத் தலையிட்டு கொழும்பு அதிகாரிகளுடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எப்படியோ, அமைச்சர் பீரிஸ் கொண்டுவர முயன்ற ஜெயலலிதாவுக்குச் சார்பான அறிக்கை, ஸ்ரீலங்காவின் புரோட்டோகால் காரணமாக கொழும்பிலிருந்து கடைசிவரை வெளியாகவில்லை.

இப்படியொரு முயற்சி செய்தும், அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களால் முடியாது போனதுபற்றி, புதுடில்லித் தலைவர் ஒருவரிடம் ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் பிரஸ்தாபித்திருக்கிறார். அதற்கு அந்த இந்தியத் தலைவர், “நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது, ஆனால் ஏதாவது செய்யுங்கள். புதிய தமிழக முதல்வருடன் நீங்கள் முரண்படுவது போன்ற தோற்றம் மத்திய அரசுக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்தே ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சர் புதிய தமிழக முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்ட அந்த வாழ்த்துக் கடிதம் மிகவும் சுருக்கமாக அமைந்திருந்த போதிலும், அதன் உள்ளடக்கம் வெறும் வாழ்த்துத் தெரிவிப்பதோடு முடிந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர் ஸ்ரீலங்கா அதிகாரிகள்.

“இரு நாடுகளின் மக்களின் நன்மைக்காகவும் ஸ்ரீலங்கா அரசு, தமிழக முதல்வருடன் இணைந்து செயலாற்ற விரும்புகின்றது” என்ற வாக்கியம் ஒன்றும் அந்தக் கடிதத்தில் உள்ளது.

ஒருவகையில் பார்க்கப்போனால், இது தமிழகத்துக்கு வெளியே, தமிழக முதல்வருக்குக் கிடைத்துள்ள முதலாவது அங்கீகாரம் மாத்திரமல்ல. அகில இந்திய இந்திய அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் என்பது மாத்திரமும் அல்ல. அதையும் தாண்டி, சர்வதேச ராஜதந்திர அளவுக்குச் சென்றிருக்கின்றது.

கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இதுபற்றிப் பேசிப் பார்த்தோம். அவர்கள், “ஸ்ரீலங்கா அரசு, இனிவரும் நாட்களில் புதிய தமிழக முதல்வரின் பேச்சுக்களை உன்னிப்பாகக் கவனிக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினையில், புதிய தமிழக முதல்வரின் கருத்துக்கள் ஸ்ரீலங்கா அரசால் சீரியசாக எடுத்துக் கொள்ளப்படும்” என்கின்றனர்.

இதற்குமுன், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழக மீனவர் பற்றிக் கூறிய கருத்துக்கள் எவற்றுக்கும், ஸ்ரீலங்காவில் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டதில்லை.

முன்பெல்லாம், கொழும்பில் நடைபெறும் முக்கிய பிரஸ்மீட்களில், தமிழக மீனவர் பிரச்சினை பற்றிய கேள்விகள் அவ்வப்போது எழுவதுண்டு. அப்போது பிரஸ்மீட்டில் கலந்துகொள்ளும் ஏதாவது ஒரு தமிழ் ஊடகம், “கலைஞர் இப்படிக் கூறியிருக்கிறாரே… அதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டால், ஸ்ரீலங்கா அமைச்சர்களோ, அதிகாரிகளோ பதில் கூறாமல் லேசாகச் சிரித்துவிட்டு, அடுத்த கேள்விக்குச் சென்றுவிடுவார்கள்.

தமிழக அரசுக்கு, ஸ்ரீலங்காவில் முன்பு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அவ்வளவுதான்! இப்போது, புதிய தமிழக முதல்வருக்கு, தமக்குச் சங்கடமான நிலையிலும் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கிறது ஸ்ரீலங்கா அரசு.

ஸ்ரீலங்கா பற்றி முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள கருத்தில் இருக்கும் ஒரு முக்கிய விஷயத்தை, யாராவது கவனித்தீர்களா தெரியவில்லை.

இதற்கு முன்பும் தமிழக முதல்வர்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியிருக்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள கருத்து, ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான கருத்து என்பதைவிட, ஐ.நா. என்ற உலக அமைப்புக்குச் சார்பான கருத்து என்றே சர்வதேச அரசியலில் எடுத்துக் கொள்ளப்படும்.

மொத்தத்தில், ஜெயலலிதாவின் பெயர் சர்வதேச அரசியலில் அடிபடப் போகின்றது! அப்படி அடிபட்டால், சர்வதேச அரசியலில் கவனிக்கப்படும், முதலாவது ‘தமிழ் முதலமைச்சர்’ என்ற பெயர் அவருக்குக் கிடைக்கும்!

-விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி.

http://viruvirupu.com/2011/05/19/2049/

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 12:52 pm

எது எப்படியிருந்தாலும் கடைசியில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான விடயங்கள் நடக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்தும் ஆகும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 1:03 pm

"புரட்சி தலைவி" என்ற வார்த்தையை உண்மையாக்கிவிட்டார்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 19, 2011 1:03 pm

மீனவர் மற்றும் ஈழ பிரச்சனைக்கு ஒரு தீர்வை ஜெ கண்டாரெனில், அடுத்த முதல்வரும் ஜெ தான்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 19, 2011 1:55 pm

அசுரன் wrote:எது எப்படியிருந்தாலும் கடைசியில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான விடயங்கள் நடக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்தும் ஆகும்.
சியர்ஸ்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu May 19, 2011 1:56 pm

கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!” 224747944

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக