புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:04 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
83 Posts - 44%
heezulia
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
82 Posts - 44%
mohamed nizamudeen
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
6 Posts - 3%
prajai
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
6 Posts - 3%
Jenila
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
jairam
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
kargan86
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
125 Posts - 52%
ayyasamy ram
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
10 Posts - 4%
prajai
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
8 Posts - 3%
Jenila
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
4 Posts - 2%
Rutu
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உறவுகள்! (சிறுகதை) Poll_c10உறவுகள்! (சிறுகதை) Poll_m10உறவுகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள்! (சிறுகதை)


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 08, 2009 12:25 am

- ஆர்.பரிமளா ராஜேந்திரன்


மகன் அஸ்வத்தை அணைத்தபடி, திரும்பி படுத்துக் கொண்டாள் அனு.




"இங்க பாரு, அனு... உன் கோபம், நியாயம் இல்லாதது. வீட்டை தேடி விருந்தாளிங்க வர்றது தப்பா... என்ன பேசற... இவ்வளவு நாளா பெங்களூருவில் இருந்தோம்; இப்பதான், ஒரு வருஷமா சென்னைக்கு வந்திருக்கோம். எனக்கு, அப்பா வழியிலும், அம்மா வழியிலும் சொந்தங்கள் அதிகம்.
""சென்னைக்கு வேலையா வர்றவங்க, ஒருநாள் ராத்திரி நம்ம வீட்ல தங்கி, வந்த வேலையை பார்த்துட்டு கிளம்பிடறாங்க. நாம பெருசா என்ன செஞ்சுடறோம்... ஏதோ, ஒருநாள் தங்க இடம், ஒருவேளை காபி, சாப்பாடு அவ்வளவு தானே... இது பெரிய விஷயமா அனு!''




""அதுக்காக, யாராவது ஒருத்தர், மாசத்துக்கு நாலு முறை கிராமத்திலிருந்து வந்து, லாட்ஜ் மாதிரி, நம்ம வீட்ல தங்கிட்டு போறாங்க... எல்லாருமே, தூரத்து சொந்தம், தெரிஞ்சவங்க, அவ்வளவுதான்... இவங்களை எல்லாம் வீட்ல கூட்டி வச்சு கவனிக்கணும்ன்னு தேவையா, சொல்லுங்க...
""போனவாரம், உங்க தாத்தா முறைன்னு ஒருத்தர், வந்திருந்தாரு... அவரை பார்த்த அஸ்வத், "யாரும்மா அது... ஹாலில் முண்டாசு கட்டிட்டு, பூச்சாண்டி மாதிரி உட்கார்ந்திருக்காரு...'ன்னு கேட்டான்...''




""அவனுக்கு என்ன தெரியும், குழந்தை... நீதான் அவனுக்கு புரியும்படி சொல்லணும்... கிராமத்திலிருந்து வந்திருக்காரு... உனக்கு தாத்தான்னு நீ தான் சொல்லிக் கொடுக்கணும்...''
""ம்க்கும்... எத்தனை தாத்தாவையும், மாமாவையும் அவனுக்கு அறிமுகப்படுத் துறதுன்னு எனக்கு தெரியலை... பேசாம, பெங்களூரிலேயே இருந்திருக்கலாம்; சென்னைக்கு எதுக்கு டிரான்ஸ்பர் வந்துச்சுன்னுதோணுது...''
அவள் குரலில் கோபம் தெரிந்தது.




அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மெதுவாகத்தான் எழுந்தாள் அனு. வெளியில் ரகு, அஸ்வத்துடன் பேசிக் கொண்டிருக்க, மூவருக்கும் காபி கலந்தாள்.
""வாங்க, அத்தை... சவுக்கியமா?''
ரகு, யாரையோ வரவேற்கும் குரல் கேட்டு, அனு முகத்தில் இருந்த மலர்ச்சி தொலைந்து போனது. ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக, யாரோ விருந்தாளி வந்திருக்கின்றனர்.




""நல்லா இருக்கியாப்பா ரகு... உன் மகனா? கை குழந்தையா இருந்தப்ப பார்த்தது... நீ எங்கே கிராமத்து பக்கம் வர்ற...''
""என்ன விஷயம் அத்தை... நீங்க தனியா சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கீங்க?''
""எல்லாம் நல்ல சமாசாரம் தான்பா... என் கடைசி மகள் வள்ளி, புரசைவாக்கத்தில் ஒரு ஸ்கூல்ல, டீச்சரா வேலை பார்க்கிறாள்... அங்க, பக்கத்திலேயே ஹாஸ்டலில் தங்கி இருக்கா... யாரோ அவளுக்கு பழக்கமான பையன், வங்கியில் வேலை பார்க்கிறானாம்...





""நம்ப வள்ளியை, அவனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. கல்யாணம் பண்ணிக்க, பையனோட அப்பா, அம்மா, சம்மதம்சொல்லிட்டாங்களாம்...
""நீயே சொல்லு... நம்ப ஜாதி, ஜனம்ன்னு பார்த்து, ஏன் நல்ல வரனை ஒதுக்கணும்... எல்லாம் மனுஷ ஜாதி தான். பையனும், அவன் குடும்பமும் நல்ல மாதிரியாக இருந்து, நம்ம பொண்ணை நல்லபடியா வச்சுக்கிட்டாலே போதும்; என்ன... நான் சொல்றது சரிதானே?''
""ரொம்ப சந்தோஷம் அத்தை... சம்பந்தம் பேச வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க!''




""அந்த பையனோட அப்பா, அம்மா, இன்னும் நம்ம வள்ளியை பார்க்கலை... முறைபடி வந்து பெண் பார்க்க பிரியப்படறாங்க... "கிராமத்துக்கு வர்றதை விட, வள்ளி, சென்னையில இருக்கிறதால, இங்கேயே, உங்க உறவுக்காரங்க இருந்தா, அழைச்சுட்டு வந்துடுங்க... நாங்க வந்து பார்த்துட்டு போறோம்... பிறகு, மத்த விஷயங்கள் பேசலாம்...'ன்னு சொன்னாங்க...
""எனக்கு, உடனே உன் ஞாபகம் வந்துச்சு, புறப்பட்டு வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில், வள்ளியும் இங்கே வந்துடுவா... அவ வந்ததும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு போன் போட்டு, சாயந்தரம் இங்க வந்து பெண் பார்த்துட்டு போகச் சொல்லலாம்... நீ என்னப்பா சொல்ற?''




""வரட்டும், அத்தை... நம்ம வீட்லே வச்சு வள்ளிக்கு ஒரு நல்ல இடம் அமைஞ்சு, கல்யாணம் நடக்கப் போறது சந்தோஷம் தானே... கவலைப்படாதீங்க... தடபுடலாக கவனிச்சு அனுப்பலாம்...''
அத்தை குளித்துக் கொண்டிருக்க, ரூமுக்குள் நுழைந்தவன் காதில் கிசுகிசுத்தாள் அனு.
""என்னங்க, ஏதோ உறவுகாரங்க வந்துட்டு போயிட்டு இருந்தாங்க... இப்ப, நம்ப வீட்ல வச்சு பெண் பார்க்கிற படலமெல்லாம் நடக்கப் போகுது... இதுக்கும் நான், வாய் மூடிட்டுதான் இருக்கணுமா?''




""இங்க பாரு, அனு... இப்பவும் சொல்றேன்... உனக்கு பிடிக்கலைங்கிறதுக்காக, உறவுகளை என்னால் விலக்க முடியாது. நீ ஒண்ணும் சிரமப்பட வேண்டாம்... சாயந்தரம் வர்றவங்களுக்கு தேவையான பலகாரங்கள், கூல்டிரிங்ஸ் எல்லாம், நான், கடையில வாங்கிட்டு வந்திடறேன். நல்ல காரியம் நடக்கும் போது, தடங்கல் சொல்லாதே...'' என, அவள் வாயை அடைத்தான்.
அத்தை மகள் வள்ளி, நல்ல மாதிரியாக இருந்தாள். "அக்கா, அக்கா' என்று, அனுவிடம் உரிமையுடன் பழகினாள்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 08, 2009 12:25 am

""நான் சமைக்கிறேன்கா... என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க...'' என, அவளை வேலை செய்யவிடாமல், எல்லாவற்றையும் இழுத்து போட்டு, உரிமையுடன் செய்தாள். ரகுவுக்காக, தன் வெறுப்பை வெளிப்படுத்தாமல், அவர்களிடம் சகஜமாக நடந்துக் கொண்டாள் அனு.
சாயந்தரம், மாப்பிள்ளை வீட்டிலிருந்து, பையனுடன், அம்மா, அப்பா, அவர்களின் நண்பரும், அவர் மனைவியுமாக ஐந்து பேர் வந்தனர்.
மாப்பிள்ளை பையன், களையாக இருந்தான்; எல்லாரிடமும், சிரித்த முகத்துடன் பேசினான். அவனின் பெற்றோருக்கு, வள்ளியை மிகவும் பிடித்துப் போனது.




""நீங்க, பெண்ணோட அம்மாவுக்கு, என்ன உறவுமுறை வேணும்?'' என, மாப்பிள்ளையின் அப்பா, ரகுவை கேட்டார்.
""இவங்க, எனக்கு தூரத்து சொந்தம்... அத்தை முறை வேணும். கிராமத்தில் இருக்காங்க. மாமா இறந்ததிலிருந்து, சொந்தக்காரங்க, அவங்களுக்கு உதவியா, அனுசரணையா இருக்காங்க... தனி மனுஷின்னு நினைச்சு, எப்படி கல்யாணம் செய்வாங்களோன்னு நீங்க நினைக்க வேண்டாம்...




""எங்க கிராமத்துக்கு வந்து பாருங்க... எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, அவங்க வீட்டு விசேஷம் போல சிறப்பாக செய்துடுவாங்க. எங்க வள்ளியும், நல்ல பொறுமையான பொண்ணு,'' என்றான் ரகு.
""இப்படி, உறவுகளோடு இணைந்து இருக்கிற குடும்பத்திலிருந்து பெண் எடுக்கிறது, எங்களுக்கு சந்தோஷமா இருக்கு... நானும், பெரிய குடும்பத்தில் பிறந்தவன் தான். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று ஏழு பேர் இருக்காங்க... இருந்து என்ன பிரயோஜனம்... கோபதாபங்கள், மனஸ்தாபம்ன்னு, ஒருத்தருக்கொருத்தர், முகம் கொடுத்து பேசறது கூட கிடையாது; தனித்தனி தீவாக ஒதுங்கி இருக்கோம்.




""நல்லது, கெட்டதுன்னா ஒண்ணு சேருவோம்; அதுவும், யாரோ மூணாம் மனுஷங்க மாதிரி வந்து போவாங்க. எனக்கு, சொந்த, பந்தங்களோடு சேர்ந்து வாழணும்ன்னு தான் ஆசை... என்ன செய்யறது... நான் அதுக்கு கொடுத்து வைக்கலை. உங்களுக்கு, குறிப்பா, உங்க மனைவிக்கு நல்ல மனசு... வீட்டுக்கு வர்ற பெண், கணவன் குடும்பத்தை அனுசரிச்சு, அவங்களை, தன் உறவுகளாக ஏத்துக்கும்போது, அந்த குடும்பமே சந்தோஷப்படும்.




""இவங்க, உங்களுக்கு தூரத்து சொந்தம்ன்னு சொல்றீங்க, அப்படியிருந்தும், உள்ளார்ந்த பிரியத்தோடு அவங்களை அழைச்சு, எங்களையும் வரவழைச்சு, இவ்வளவு பிரியமாக, அன்பாக பழகறீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு!
""எங்க வீட்டுக்கு வரப்போற உங்க பொண்ணு, நிச்சயம் உங்க மனைவி மாதிரி, எங்க குடும்ப உறவுகளை, நிறை, குறையோடு ஏத்துக்கிட்டு, எங்க குடும்பத்தையும் ஒற்றுமைப்படுத்துவான்னு நம்பறோம். கல்யாணத்துக்கு, நல்ல நாள் பார்த்து முடிவு பண்ணுவோம். நீங்க சொன்ன மாதிரி, கிராமத்திலேயே சிறப்பா செய்துடுவோம்...''




"அப்ப, நாங்க கிளம்பறோம் தம்பி... வள்ளியை ஹாஸ்டலில் விட்டுட்டு, நான் ஊருக்கு போறேன். நீயும், அனுவும், வள்ளி கல்யாணத்தை பொறுப்பாக பேசி முடிவு பண்ணியது, மனசுக்கு நிறைவா இருக்குப்பா... அதேபோல, கல்யாணத்துக்கும், நாலு நாள் முன்னால வந்து இருந்து, சிறப்பா நடத்திக் கொடுக்கணும்...'' என்று அத்தை சொல்ல...
""என்னம்மா... ராத்திரி நேரம்புறப்படறோம்ன்னு சொல்றீங்க... இருங்க... காலையில் டிபன் சாப்பிட்டு கிளம்பலாம்,'' என்ற அனு, வள்ளியிடம் திரும்பி, ""வள்ளி... ரவா தோசை நல்லா செய்வேன்னு சொன்னியே, ராத்திரி டிபன் ரவா தோசையும், கெட்டி சட்னியும் செய், பார்ப்போம்...''
உரிமையுடன் அனு சொல்ல, இனி அந்த வீட்டில், உறவுகள், சந்தோஷமாக வரவேற்கப்படுவர் என்பது ரகுவுக்கு புரிந்தது.











ஒன்னும் புரியல (படித்ததில் பிடித்தது) ஒன்னும் புரியல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக