புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அடாவடிகளும் ஆணவப்போக்கும் அமைச்சர்களின் வெற்றியைக் காவு வாங்கத் தயங்காது என்பது குறித்து, '6 மந்திரிகள் அவுட்... 7 பேர் டவுட்!’ என்ற தலைப்பில் 3.4.11 தேதியிட்ட ஜூ.வி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டு இருந்தோம். வானில் மிதப்பவர்களாக வலம் வந்த தி.மு.க. அமைச்சர்கள், 'நாங்கள் வெற்றி பெறப்போகும் வித்தியாசத்தை ஜூ.வி. பார்க்கத்தானே போகிறது?’ என்று சவால் விட்டார்கள். வாக்கு எண்ணிக்கை வெளியான நாளில் நம் கணிப்பு அப்படியே நிகழ்ந்தது. 26 அமைச்சர்களில் 18 பேர் மண்ணைக் கவ்வினார்கள். அசைக்க முடியாத சக்திகளாக வலம் வந்த தி.மு.க. அமைச்சர்கள் செமத்தியாக வீழ்த்தப்பட்டதற்கு என்ன காரணம்?
'அய்யோ பாவம்’ அன்பழகன்!
'துறைமுகம் தொகுதியில் இருந்து வில்லிவாக்கத்துக்கு மாறினாலும் அன்பழகனுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை!’ எனச் சொல்லி இருந்தோம். அது அப்படியே நிகழ்ந்தது. அடாவடி, முறைகேடு உள்ளிட்ட புகார்கள் அறவே இல்லை என்றாலும், ஆக்கபூர்வமான பணி எதுவுமே இல்லை என்பதால், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் இந்த பழுத்த அரசியல்வாதி!
'ஆறு கொலை’யால் வீழ்ந்த ஆறுமுகம்!
தடாலடிக்குக் குறைவு இல்லாத வீரபாண்டி ஆறுமுகம் தற்காப்பு முயற்சியாக இந்தத் தேர்தலில் சங்ககிரி தொகுதிக்கு மாறினார். ஆனாலும், மக்களின் ஆவேசத்தில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. சேலத்தில் ஒரே வீட்டில் நடந்த ஆறு படுகொலைகளும், அதில் வீரபாண்டியாரின் உறவினரான பாரப்பட்டி சுரேஷ் வளைக்கப்பட்டதும், சொத்துக் குவிப்புகளும் மாவட்டத்தையே திகைக்கவைத்தது. போதாக் குறைக்கு ஸ்டாலினுடன் மோதல் வேறு. எல்லாமும் சேர்ந்துதான் தலை குப்புறத் தள்ளிவிட்டது, இந்தத் தடாலடிப் புள்ளியை!
பொன்முடியைப் புரட்டிய 'எரிச்சல்!’
பொன்முடி, கட்சிக்காரர்களிடம் எரிந்து விழும் வழக்கம்கொண்டவர். இவரை வீழ்த்த சரியான ஆயுதமாக, மென்மைப் புள்ளியான சி.வி.சண்முகத்தை அ.தி.மு.க. நிறுத்தியது. அப்போதே உஷாராகி இருக்கவேண்டிய பொன்முடி, கரன்ஸியை நம்பினாரே தவிர, கட்சிக்காரர்களைக் கடுகளவும் மதிக்கவில்லை. தேர்தல் முடிந்த ஒரு மாத இடைவெளியில், பொன்முடியின் கல்லூரிக்காக 30 பேருந்துகள் வாங்கப்பட்டன. 'மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆவார்’ என்கிற நம்பிக்கையில் அவற்றை வாங்கி வந்தது பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி. மக்களின் மனநிலை புரியாமல் 'பெருக்குவதிலேயே’ தீவிரமாக இருந்ததால்தான், பொன்முடிக்கு இந்தப் பொளேர் அடி!
நெளிய முடியாத நேரு!
'ஊரையே வளைத்துப் போட்டுள்ள நேருவின் அடாவடிகளே, திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க-வை அமோகமா ஜெயிக்கவெச்சிடுவாங்கம்மா!’ என ஜெயலலிதாவிடம் சொன்னார் நேருவை எதிர்த்துக் களம் இறங்கிய மரியம் பிச்சை. 'திருச்சியில் மலைக்கோட்டையை மட்டும்தான் விட்டுவெச்சிருக்கியா நேரு?’ என கருணாநிதியே நேரடியாக நேருவை கிண்டல் அடித்ததாகச் சொல்வார்கள். தேர்தல் நேரத்தில் நேருவின் உறவினருக்குச் சொந்தமான எம்.ஜெ.டி. பேருந்தில், ஐந்தரை கோடி ரூபாய் பிடிபட்டது. நேருவின் சகோதரர்கள் சேர்த்துவைத்த 'நல்ல’ பெயர்களும் சந்தி சிரித்தன. தொகுதி முழுக்கப் பண மழை பொழிந்தும் நேரு வெல்ல முடியாததற்குக் காரணம், அதே பணம்!
பரிதாபப் பரிதி!
பரபரப்பும் விறுவிறுப்புமாக பரிதியைப் பார்த்து பலவருடங்களாகிவிட்டன. மிகச் சொற்பமான வாக்குகள் முன்னும் பின்னுமாக ஏறி இறங்கியபோது, 'என் தொகுதி என்னைக் கைவிடாது’ என நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் பரிதி. கட்சியின் அடிமட்டத் தொண்டன் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் தேர்தலுக்கு முன்னால் கண்டுகொள்ளவில்லை என்ற கோபம் இவர் மீது இருந்தது!
அடங்காத அன்பரசன்!
ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டே இருப்பது தா.மோ.அன்பரசனின் வழக்கம். அதனாலேயே இவருடைய பெயரை டவுட் பட்டியலில் எழுதி இருந்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பல்லாவரம் தொகுதி நிர்வாகிகளைச் சரிக்கட்டி, பெரும் வெற்றிக்குத் தயாராக இருந்தார். தேர்தல் நேரத்திலும் தீராத பண மழை... ஆனாலும், ஸீட் கிடைக்காத வருத்தத்தில் இருந்த இ.கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகளை, அன்பரசனால் சரிக்கட்ட முடியவில்லை.மணல் விவகாரம் தொடங்கி பல விவகாரங்கள், அவருடைய வெற்றிக்கு ஆப்புவைத்தன!
இடியில் சிக்கிய எம்.ஆர்.கே.!
'நிச்சயம் ஜெயிப்பார்!’ எனக் கட்சி இவரை உறுதியாக நம்பியபோதும், இவர் தேறுவது கடினம் என்றே எழுதி இருந்தோம். கடுகடு முகம்... சிடுசிடு வார்த்தை... எனக் கட்சிக்காரர்களிடம் எம்.ஆர்.கே. சம்பாதித்த 'நல்ல’ பெயருக்கு அளவே இல்லை. 'அவரை வளர்ப்பது... இவரை வளைப்பது’ எனக் கோஷ்டி அரசியலை கொம்பு சீவிவிட்டதிலும் எம்.ஆர்.கே-வுக்கு பெரிய 'புண்ணியம்.’ யாரையும் மதிக்காத 'மாண்பே’ இவரை இடியில் சிக்கவைத்தது!
ஒன்றும் செய்யாத உபயதுல்லா!
மூன்று முறை தொடர்ந்து தஞ்சாவூரில் வென்று இருந்தாலும், தொகுதிக்கு உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. 'நான் நிச்சயம் தோற்றுவிடுவேன்’ எனப் பிரசாரத்தின்போது வெளிப்படையாகப் பேசி, பீதியைக் கிளப்பினார். மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் உள்ளடி வேலைகளைத்தான் அப்படி சூசகமான வார்த்தைகளால் சொன்னார். அது அப்படியே பலித்தது!
மன்றாடிய மதிவாணன்!
'மதிவாணனுக்கு பால் பொங்குவது கஷ்டம்!’ என சொல்லி இருந்தோம். கீழ்வேளூர் தொகுதியின் மீனவர் பகுதி வாக்குகள் இவரைத் தலைகுப்புறத் தள்ளித் தோற்கடித்தன. ஆரம்பத்தில் ஓலைக் குடிசையில் வாழ்ந்த மதிவாணன், பங்களா கட்டி பால் காய்ச்சியபோதே, அய்யாவின் செல்வாக்கு அவுட். 'அங்கே சொத்து... இங்கே ஃபேக்டரி...’ என எதிர்க் கட்சிகள் கிளப்பிய பிரசாரமும் நன்றாக எடுபட்டது!
செல்வாக்கு இழந்த செல்வராஜ்!
வனத் துறை அமைச்சராக இருந்த செல்வராஜ், கோஷ்டி அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர். நேருவுக்கும் இவருக்கும் நேரடியாகவே மோதல் நடந்தது. சாதிய வாக்குகளை மட்டுமே நம்பியதும், உள்ளடி வேலைகளும்தான் செல்வராஜின் செல்வாக்கை ஓட்டையாக்கின!
சுறுசுறு இழந்த சுரேஷ்ராஜன்!
அசராத சுறுசுறுப்பாலேயே அமைச்சர் பதவி பெற்றவர். எளிமையும் சுறுசுறுப்பும் சைரன் கார் சத்தத்தில் சைலன்ட்டானது. உள்ளடிப் பூசல்களும் நிறைய. உறவு வட்டமும் கட்சியை ஆட்டிப் படைத்ததால், இவருடைய தோல்வியில் கட்சித் தலைமைக்கே பெரிய ஆச்சர்யம் இல்லை!
புகழ் இழந்த பொங்கலூர் பழனிசாமி!
அமைச்சர் ஆனது முதல் 'கோஷ்டி’ அக்கப்போரில் இறங்கியதும், கட்சி வேலைகளைவிடச் சொந்த சம்பாத்தியங்களில் கவனம் செலுத்தியதும்தான் இவரது தோல்விக்குக் காரணம். உள்ளடி உபத்திரவங்களே பழனிசாமியைப் பஞ்சராக்கின!
சக்தி இழந்த சாத்தூர் ராமச்சந்திரன்!
சாத்தூரைத் தவிர்த்துவிட்டு, அருப்புக்கோட்டையில் போட்டியிட்டார். கட்சிக்காரர்களுக்குப் பெரிதாக ஏதும் செய்யாததும், உறவினர்களைக் கட்சிக்குள் வளரவிட்டதும், சாத்தூராரின் சக்தியைக் குறைத்துவிட்டன!
வீழ்த்தப்பட்ட 'வெள்ளக்கோவில்’!
''சொல்லிக்கொள்ளும்படி என்ன செய்தார்?'' எனத் தொகுதிக்குள் பட்டிமன்றமே நடத்தலாம். தொகுதி மாறியதால், தொல்லை இருக்காது என நினைத்தார். பண இறைப்பை நிகழ்த்தினார். ஆனாலும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சண்முகவேலு கையே ஓங்கியதால் வீழ்ந்தார்!
தடுமாறிய தமிழரசி!
'உன்னைப்பற்றிய ரிப்போர்ட் சரி இல்லையே... அதனால், அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்!’ என கருணாநிதி பகிரங்கமாகச் சொன்னபோதே, தலைவரின் வார்த்தைகளை தமிழரசி ஏற்று இருக்கலாம். 'எப்படி இருந்த தமிழரசி இப்படி ஆயிடிச்சு?’ எனத் தென் மாவட்டமே திகைத்தது. அழகிரி பெயரை அதிகமாகப் பயன்படுத்தி தொகுதியைக் கவனிக்காததன் விளைவு இது!
சாமியை வீழ்த்திய தாட்பூட்!
கே.பி.பி.சாமி அமைச்சரான பிறகும், அவருடைய தடாலடி முகம் மாறாததுதான் ஆச்சர்யம். சாமியின் பேரைச் சொல்லி திருவொற்றியூர் தொகுதி முழுக்கக் கட்டப் பஞ்சாயத்து, வெட்டுக் குத்து என மிரட்டல்கள். சாமி தடுக்கவும் இல்லை; தட்டிக் கேட்கவும் இல்லை. இந்த நிலைகுலைவுக்கு அதுதான் காரணம்!
புஸ்ஸான பூங்கோதை!
'என்னதான் சிரமப்பட்டாலும் தேறுவது கடினம்!’ என்றே இவருடைய நிலவரம் குறித்து எழுதி இருந்தோம். அதன்படியே நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்து இருக்கிறார் பூங்கோதை. கட்சிக்காரர்கள் மத்தியிலான வெறுப்பு, தொகுதிக்குப் பெரிதாக ஏதும் செய்யாதது என மைனஸ் பட்டியலின் நீளம் அதிகம்!
'கிர்’ கீதா ஜீவன்!
முரட்டு பக்தர் பெரியசாமியின் மகள். தந்தையின் தலையீடுகளே கீதா ஜீவனைக் கிறுகிறுக்கவைத்தன. 'தொகுதிக்கு இன்னும் செய்திருக்கலாம்’ என்கிற ஏக்கமும் மீனவர்கள் விவகாரமும், கீதாவுக்குப் பின்னடைவைக் கொடுத்தன. தனிப்பட்ட புகார்கள் ஏதும் இல்லை என்றாலும், தாளித்து எடுத்த புயலுக்கு இவர் தப்பவில்லை
விகடன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1