ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு!

Go down

தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Empty தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு!

Post by sabesan37 Wed 18 May 2011 - 10:40

அண்ணன் தம்பி போட்டியில், ‘மச்சானை’ உள்ளே கொண்டுவருகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
------------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 03:15 GMT
------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பு, ஸ்ரீலங்கா: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு, பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ.தே.க. தலைவர்களின் சந்திப்பின்போதே, இப்படிக் கூறப்பட்டதாகக் கூறுகிறது கூட்டமைப்பு.

ஐ.தே.க.வின் ரணில் விக்ரமசிங்க, தங்களிடம் இதைக் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார், கூட்டமைப்பின் நியமன எம்.பி. சுமந்திரன்.

இதை, ஒரு தந்திரமான அரசியல் நகர்வாகவே எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பேச்சுக்களுக்குச் சமாந்தரமாக, ஸ்ரீலங்காவிலுள்ள மற்றய தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது ஸ்ரீலங்கா அரசு.

தமது கட்சியின் சார்பில், தாமும் சில பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இவருடைய கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஸ்ரீலங்காவில் தமிழ் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் இருக்கின்றது.

ஸ்ரீலங்கா அரசு, ஈ.பி.டி.பி.யுடனும் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.

தமது கட்சிதான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசின் எந்தப் பேச்சுக்களும் தமது கட்சியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்கவோ, மறுக்கவோ, தமது கட்சிக்கே தமிழ் மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றது அக்கட்சி.

ஸ்ரீலங்கா அரசு இதை மறுக்கின்றது.

“ஸ்ரீலங்காவில் வசிக்கும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் த.தே.கூ. அல்ல” என்று கூறியுள்ள ஸ்ரீலங்கா அரசு, “ஈ.பி.டி.பி. உட்பட மற்றய கட்சிகளுடனும் கலந்தாலோசித்தே தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும்” என்கிறது.

இதற்கிடையே ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, “இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட 13வது சட்டத்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று அறிவித்துள்ளார்.

“உடனடித் தீர்வாக, 13வது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படட்டும். முதலில் ஏதாவது ஒன்று கிடைக்கட்டும். அதன்பின், மேலதிக அதிகாரங்களைக் கோரலாம்” என்றும் அவர் கூறுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வாக எதைக் கேட்கின்றது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களது கட்சி ஒரு ‘அருமையான’ தீர்வுத் திட்டத்தை வைத்திருப்பதாக நீண்ட காலமாக (ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே) கூறிவருகின்றது. ஆனால், அவர்களது தீர்வுத் திட்டம், சிதம்பர ரகசியம் போன்றது.

அதில் என்ன இருக்கின்றது என்று வெளியே சொல்லப்படவில்லை. (அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கேகூட தெரியாது என்கிறார்கள்!)

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கொடுக்கும் பேட்டிகளில்கூட, “எதை மையமாக வைத்து உங்களது தீர்வுத் திட்டம் இருக்கின்றது?” என்ற கேள்விக்கு அவர்கள் நேரடியாகப் பதிலளிப்பதில்லை.

“தேசியம்.. சுயநிர்ணயம்.. சுபீட்சம்..” என்று சில கலைச் சொற்களை வைத்து, வார்த்தை விளையாட்டு விளையாடி, பதில் கூறுவார்கள்.

அதுவும் ஒரு திறமைதான். முதலில் பார்த்தால், இவர் ஏதோ பதில் கூறுவது போலத்தான் இருக்கும்.

பின்பு, இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான் சிக்கல் வரும். ஆனால், அநேகர் அப்படி யோசிப்பதில்லை.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா அரசு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முதலில் செனட் சபை ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஸ்ரீலங்கா அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திய பேச்சுக்களிலேயே, செனட் சபை பற்றிய இந்த யோசனையை அவர்களிடம் கொடுத்திருந்தது அரசு.

செனட் சபை பற்றிக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று கூறியிருந்தார். ஆனால், “செனட் சபை பற்றிய அரசின் யோசனைகளை வாங்கி வந்திருக்கிறோம். அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்றும் அதே பிரமுகர் கூறியிருக்கிறார்.

செனட் சபையை வரவேற்பதாக, ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார்.

இப்போது உங்களுக்கு நிலைமை புரிந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு பவர் பாலிட்டிக்ஸ்.

அரசாங்கம் ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொடுத்தால், அது எங்கள் கட்சி சொல்லும் தீர்வுத் திட்டமாக இருந்தால் நல்லது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்!

அதை வேறுவிதமாகவும் இப்படிக் கூறலாம்-

அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை (அது சிறியதோ, பெரியதோ) கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தபின், “இதை நாங்கள்தானே கேட்டு உங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமை கொண்டாடும் அளவில் இருக்க வேண்டும்!

இனப்பிரச்சினைககுத் தீர்வு என்ற மைதானத்தில் ஈ.பி.டி.பி. இறங்குவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு கெடுதல் என்று அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? மைதாதனத்தில் தனக்கு மற்றொரு கூட்டாளியையும் கொண்டுவந்து இறக்க வேண்டும்.

கூட்டமைப்பு அப்படிக் கொண்டுவந்து இறக்க முயலும் கூட்டாளிதான், ஐக்கிய தேசியக் கட்சி.

“இதோ… ஸ்ரீலங்காவின் பிரதான எதிர் கட்சியே கூறிவிட்டது எங்களுடன் (கூட்டமைப்புடன்) பேசித்தான் ஒரு தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க.வை மைதானத்துக்குள் இழுத்துவிட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. (ஸ்ரீலங்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்ற போதெல்லாம் இந்த ஐ.தே.க.தான் ஆட்சியில் இருந்தது!)

இக்கட்டுரை எழுதப்படும் நேரம்வரை, ஐ.தே.க.வாய் திறக்கவில்லை. என்ன சொல்லப் போகிறார்களோ!

கூட்டமைப்பைப் பொறுத்தவரை-

கூட்டமைப்புச் சொல்வதையே ஐ.தே.க.வும் சொல்லிவிட்டால், அதி விசேஷம்.

எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால், விசேஷம்.

ஒருவேளை, “சகல தமிழ் கட்சிகளுமாகச் சேர்ந்து ஒற்றுமையாக அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க. சொல்லித் தொலைத்துவிட்டால்தான், கதை கந்தலாகிவிடும்!

கூட்டமைப்பினரே… Please cross your fingers!

http://viruvirupu.com/2011/05/18/1980/
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum