புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் ஆசைகள் டொயோட்டாவுக்கு எப்படித் தெரியும்?
Page 1 of 1 •
- sabesan37புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011
உங்கள் ஆசைகள் டொயோட்டாவுக்கு எப்படித் தெரியும்?
------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம்

அதிகாலை 9 மணி வெயிலில், அந்த ரம்மியமான இடத்தில், இடி-2ஐச் (யூரோப் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட்) சேர்ந்த ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைக்கிடையே சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்திக் கொண்டிருந்தனர். இந்த இடம் டொயோட்டா சிட்டியிலிருந்து பல மைல்கள் தள்ளி ஒரு தனி உலகமாக இருந்தது.
இங்குதான் உலகத்தின் எல்லா மூலைகளிலிலும் ஓடும் டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் கார்களின் புதிய பரிமாணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும், டொயோட்டா அலுவலகத்திலுள்ள அவசர, ஆர்ப்பாட்ட உலகிலிருந்து விலகியிருந்தால் நன்றாக வேலை செய்வார்கள் என்று, அவர்களுக்கென தனியே ஒதுக்கப்பட்ட இடம் இது.
ஏற்கனவே உலகளவில் மிகப்பெரிய மோட்டார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டொயோட்டா, அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு உலகிலேயே மிகப்பெரிய மோட்டார் தயாரிப்பு நிறுவனம் என்ற உச்சக்கட்டப் பெயரைப் பெற்றுக்கொள்ள விரும்புவது ஊர் அறிந்த ரகசியம். (அதற்கு அமெரிக்க அரசு அனுமதிக்க வேண்டுமே!)
டொயோட்டாவின் ரகசிய வியூகங்கள்
கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் கார்கள் தயாரிக்கப்படுவதில்லை. ஆனால் இங்குதான் டொயோட்டாவின் பிரபல்யத்துக்கு அஸ்திவாரம் இடப்படுகின்றது. வியாபாரத்துக்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
இன்னும் 10 தினங்களில் ஃப்ராங்பேர்ட்டில் நடக்கவுள்ள கண்காட்சியில் எந்த மொடல் காரை வைக்க வேண்டும் என்ற அவசர அவசரமான முடிவெடுத்தல்களில் இருந்து, இன்னமும் இரு வருடங்களின்பின் எந்த நாட்டில், எந்த நகரில் தமது கார் ஷோவை நடத்த வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டமிடல்வரை நடைபெறும் இடம் இதுவே.
இங்கு எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் வெளியிடுவதற்கான தலைமையக ஒப்புதல் வரும்வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் இதற்குள் ஊடுருவலாம் என்ற எச்சரிக்கையும் இங்கு எப்போதும் காணப்படும்.
கலிஃபோர்னியா மற்றும் டோக்கியோவிலுள்ள தனது பிரதான தொழிற்சாலைகளின் மூலம் மூலம் டயோட்டா தனது கவர்ச்சிகரமான, பளிச்சென்ற கார்களை முதலில் அறிமுகப்படுத்துகின்றது. அதைத் தொடர்ந்து அநேக நாடுகளிலுள்ள பிராந்தியத் தொழிற்சாலைகள் அவற்றைத் தயாரித்து உள்நாட்டுச் சந்தைகளுக்குக் கொண்டுவருகின்றன.
தனது 75 வருட வாழ்க்கையில் இந்த நிறுவனம் பல நல்ல மொடல்களையும், நம்பத்தகுந்த தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியிருந்தும், இன்னமும் அதன் கார்கள் மக்களை தங்களிடம் முழுவதுமாக ஈர்க்கும் சக்தியை பெறவில்லை. ஆனால் தனது போட்டியாளர்களைவிட ஒரு படி முன்பாகவே நிற்கின்றது டொயோட்டா.
இந்த டூலை வைத்துத்தான் வெல்கிறார்கள்!
டொயோட்டா புரொடக்ஷன் சிஸ்டம். இதுவே டொயோட்டா தனது தொழிற்சாலையில் பயன்படுத்தும் முறைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பெயர். சரியான நேரத்தில் டெலிவரி செய்தல், தொடர் முன்னேற்றம், அவ்வப்போது புதுப்பிக்கப்படும் தொழில்நுட்பம் என இந்த நிறுவனத்தின் தயாரிப்பு முறை அற்புதமானது. (போயிங் விமானத் தயாரிப்புகூட இந்த முறையிலேயே கையாளப்படுகிறது) உள்வீட்டுத் திட்டமிடல் டொயோட்டா பிஸினஸ் சிஸ்டம் என்ற டூல் மூலம் கையாளப்படுகிறது. இரண்டாவது மட்டத்தில் கையாளப்படும் டெக்னிக்குகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள டூலுக்குப் பெயர் பி.டி.ஏ. (Plan, Do, Action).
“எங்களுடைய வியாபார கலாச்சாரம்தான் எங்களை தனித்து காட்டுகிறது” என்பதுதான் டொயோட்டாவின் தலைவரிலிருந்து, அவர்களின் பிராந்திய மேலாளர்வரை தமது பேட்டிகளில் மறக்காமல் கூறும் பொதுவான வாக்கியம்.
இன்றைய தேதியில், டொயோட்டா மொத்தம் 26 நாடுகளில் கார் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது. “டொயோட்டாவை பல்நாட்டு நிறுவனம் எனக் கூறுவதைவிட, ஒரு உலக நிறுவனம் என்றே கூற வேண்டும்” என்பது டொயோட்டாவில் தலைவர் தனது பேட்டிகளில் கூறும் மற்றொரு வாக்கியம்.
இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.
அமெரிக்காவின் முக்கிய மோட்டார் நிறுவனங்களான ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டோர்ஸை விடவும் ஜப்பானியர்களே உலகின் முதன்மையான கார்களை விற்கின்றனர். டொயோட்டாவின் கொரோல்லா மொடலே இதுவரை உலகத்திலேயே அதிகம் விரும்பப்படும் காராக உள்ளது.
இந்த மொடலில் 40 வருடங்களாக உலகெங்கிலும் 11.5 மில்லியன் கார்கள் விற்பனையாகியுள்ளது.
பேட்டியா? ஆளை விடுங்க!
டொயோட்டாவின் அணுகுமுறையில் தற்பெருமையோ, அலட்டலோ ஏதும் இல்லை. இந்த நிறுவனத்தின் முன்னணி தலைவர்கள் யாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக வருவதில்லை. இந்த அணுகுமுறை அமெரிக்க நிறுவனங்களின் அணுகுமுறைக்குத் தலைகீழானது.
கார் தயாரிப்பு என்றாலே அதன் ஆரம்ப காலங்களில் சக்கரவர்த்தி போல ஆட்சி செய்த நாடு அமெரிக்காதான். ஆனால் இன்று அதே அமெரிக்காதான் டொயோட்டாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்து வருகிறது. வட அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 2.7 மில்லியன் டொயோட்டா கார்கள் விற்பனையாகின்றன. டொயோட்டாவின் காம்ரி சலோன்தான் அமெரிக்காவில் மிக அதிகம் விற்பனையாகும் கார்.
டொயோட்டா அமெரிக்க மக்களை மேலும் கவர வி--8 எஞ்சின் பொருத்திய தன்ட்ரா மொடலை டெக்ஸஸில் தயாரித்து வெளியிட்டது. வியாபாரம் வெற்றிகரமாகத் தொடங்கியபோதும் இந்தத் தயாரிப்பு சில எதிர்ப்பு அலைகளை எழுப்பியிருந்தது. காரணம், இந்த வியாபாரத்தில் மலிவான ஆனால், தாராளமயமான ஒரு ஒப்பந்தம் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் போடப்பட்டிருந்தது.
இந்தத் தொழிலாளர் ஒப்பந்தம் அமெரிக்காவிலுள்ள மற்றய கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தொழிலாளர் யூனியன்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியதில்தான் சிக்கல் தொடங்கியது.
இதைச் சும்மா விட்டுவிடலாமா?
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டோர்ஸின் தொழிலாளர்களின் (மருத்துவச் செலவு உட்பட்ட) சம்பளம் கிட்டத்தட்ட மணிக்கு 27 டொலர்கள். இந்தச் சம்பளம் டொயோட்டோ தொழிலாளர்களது சம்பளத்தைவிட அதிகமானது. ஆனால், டொயோட்டா நிறுவனம் ஒவ்வொரு கார் விற்பனையிலும் ஜெனரல் மோட்டோர்ஸை விட சராசரியாக 3800 டொலர்கள் அதிகம் லாபம் காண்கிறது.
குறைந்த ஓதியம் கொடுத்து அதிக லாபம் காணும் இந்த வியாபாரத்தைச் சும்மா விட்டுவிடுவார்களா அங்குள்ள போட்டி நிறுவனங்கள்.
மறைமுக அரசியல் அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கினார்கள். அத்துடன் அமெரிக்க நிறுவங்களின் தொழிலாளர் யூனியன்களும் கொடிபிடிக்கத் தொடங்கின. நாளைக்கே இந்தக் குறைந்த சம்பள வீதத்தைத் தமது நிறுவனங்களும் தம்மிடையே திணிக்கலாம் என்ற எச்சரிக்கைதான் அவர்களின் கொடிபிடித்தலுக்குக் காரணம்.
டொயோட்டாவின் கார்கள் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக விற்பனையானாலும், டொயோட்டாவின் கார்த் தயாரிப்புத் தொழிற்சாலை அமெரிக்காவில் தொடங்கப்பட்டது 1988ம் ஆண்டில்தான். டொயோட்டாவின் அமெரிக்கத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் யூனியன்கள் கிடையாது. அங்கு பென்ஷன்கூட ஒருசில தொழிலாளர்களுக்கே கொடுக்கப்படுகிறது. மிகுதி இருப்பவர்கள் கன்ட்ராக்ட் அடிப்படையில் வேலை செய்பவர்கள்.
அவர்களுடன் நாங்கள் ஏன் இணையவேண்டும்?
பொதுவாக, டொயோட்டா நிறுவனம், கூட்டு முயற்சிகளையோ, வேறு நிறுவனங்களை வாங்குவதையோ முடிந்தவரை தவிர்த்து வருகிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழியிட்ட முன்னாள் தலைவர் ஹிரோஷி ஒகூடாவிடம், BMW நிறுவனத்தை தங்கள் நிறுவனத்தோடு சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஒப்புக் கொள்வாரா என கேட்டபோது, “நாங்கள் எதற்காக அந்நிறுவனத்தை எங்களோடு இணைத்துக் கொள்ள வேண்டும்? எங்களுக்கு BMW போன்ற நிறுவனம் வேண்டுமென்றால் நாங்களே அதை உருவாக்குவோம்” என்று கூறியிருந்தார்.
BMW மற்றும் மெர்ஸிடிஸ் பென்ஸ் காருக்குப் போட்டியாக பல மில்லியன் டொலர்கள் ஆராட்சியில் செலவழித்து டொயோட்டா உருவாக்கிய ‘லெக்ஸஸ்’ அமெரிக்காவில் வெற்றி பெற்றபோதிலும், ஐரோப்பாவில் இதன் வளர்ச்சி மெதுவாகவே உள்ளது. 15 வருட போராட்டத்தில் வருடத்திற்கு 50,000 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
ஆனால் டொயோட்டாவின் சொந்த நாடான ஜப்பானில், இது மிகப்பெரிய ஹிட்.
வேறு வழியில்லை.. நாங்களும் வருகிறோம்!
லெக்ஸஸ் வியாபார விஷயத்தில் எதிர்பார்த்த வெற்றி கிட்டாமல் விட்டதாலோ என்னவோ, மற்றய நிறுவனங்களுடன் கூட்டுச்சேர்வது, அல்லது மற்றய நிறுவனங்களை வாங்கித் தங்களுடன் இணைப்பது என்ற பாதைக்கு டொயோட்டாவும் வரவேண்டியதாகி விட்டது.
ஜப்பானில் சிறிய கார்களைத் தயாரிக்கும் Daihatsuவும் ட்ரக்குகளை உருவாக்கி வந்த Hinoவும் டொயோட்டாவுடன் சில வருடங்களுக்கு முன் இணைந்தனர். சமீபத்தில், ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் தன்னிடம் இருந்த Fuji Heavy Industriesன் (Subaru கார் தயாரிப்பாளர்கள்) பங்குகளையும் Isuzuவின் பங்குகளையும் விற்றபோது அவற்றை டொயோட்டா நிறுவனம் வாங்கியது. (இண்டியானாவில் உள்ள Subaruவின் தொழிற்சாலையில் தங்களது Camry கார்களை டொயோட்டா தயாரித்து வருகிறது)
அட.. அப்படீங்களா?
பிரபலமான டொயோட்டா நிறுவனம்பற்றி அநேகருக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் என்றுமே தானாக புதிய விஷயங்களை கண்டுபிடித்ததில்லை.
டொயோட்டா எப்போதுமே புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மொடல்களை கொண்டு வருவதுபோல தோன்றினாலும், வேறு ஒரு நிறுவனம் அந்தத் தொழில்நுட்பத்தை நன்கு ஆராய்ந்து வெளியிடத் தயாராக இருக்கும்போது, டொயோட்டா அந்த தொழில்நுட்பத்தை சரியான நேரத்தில்(!) வெளியிடும்.
இதனால், டொயோட்டா நிறுவனம் மற்றவர்களை கொப்பி அடிப்பதாக புகார்கள் வந்துள்ளன. டொயோட்டா இந்தக் கூற்றைக் கடுமையாக மறுத்துள்ளது.
இந்தக் கொப்பியடித்தல் பல காலமாகவே நடந்துவருவதாகக் கூறுகின்றனர் டொயோட்டா எதிர்ப்பாளர்கள். உதாரணமாக மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனம், 1996ல் வெளியிட்ட SLK மொடல் ஸ்போர்ட்ஸ் காருக்கும், இது மார்க்கட்டுக்கு வந்து மூன்று வருடங்களுக்குப்பின் டொயோட்டா வெளியிட்ட லெக்ஸஸ் SC430 காருக்கும் உள்ள ஒற்றுமையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டொயோட்டாவின் ஜப்பானிய டிசைனர்கள் எ21 வடிவமைப்பையே 21ம் நூற்றாண்டுக்கான தமது உச்சக்கட்ட வடிவமைப்பாகத் தயாரித்திருந்தனர். அதை ஆராய்ந்த டொயோட்டாவின் தலைவர் ஒகூடோ, அதற்கு மேலும் சில hybrid powertrainகளை கொடுத்து தரமுயர்த்தும்படி சொன்னார். இந்த வடிவமைப்புதான் தற்போது சக்கைபோடு போடும் ஹைப்ரிட் கார்களின் அடிப்படை வடிவமைப்பு.
ஹைப்ரிட் கார்கள் வெளியிடப்பட்டபோது அப்போதைய டொயோட்டாவின் தலைவரான ஃப்யூசியோ சோ, தங்கள் நிறுவனம் 1 மில்லியன் ஹைப்ரிட் கார்களைக் குறைந்த விலையில் தயாரித்து வெளியிடும் என்று கூறினார். அந்த வாக்குறுதி மிக எளிதில் நிறைவேற்றப்பட்டது.
இங்கே கல்லெறிய அங்கே மாங்காய் விழும்!
அதேநேரத்தில் இது ஒரு தலைகீழ் வியாபார தந்திரமோ என்று சந்தேகிக்கும் வகையில் விலை குறைந்த கார்கள் பற்றிய இந்த வாக்குறுதி டொயோட்டாவின் விலையுயர்ந்த கார்களின் விற்பனையையும் எகிற வைத்துவிட்டது. காரணம் டொயோட்டா இனிமேல் விலை குறைந்த கார்களில் மாத்திரமே கவனம் செலுத்தப்போகின்றது என்பதுபோல ஏற்படுத்தப்பட்ட ஒரு தோற்றம்.
உதாரணமாக டொயோட்டாவில் 1 மில்லியன் ஹைப்ரிட் மலிவுவிலை கார் வாக்குறுதி லெக்ஸஸின் நான்கு மொடல்களில் மூன்றின் விற்பனையையும் எகிறவைத்து விட்டது. இதில் LS-600H saloon மொடலும் அடங்கும். LS-600H saloon டொயோட்டாவின் தயாரிப்பில் மிகவும் விலையுயர்ந்த கார். (ஆரம்ப விலையே 116,400 யூரோ)
நிலைமை டொயோட்டாவுக்குச் சாதகமாக மாறத் தொடங்கவே, ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்கள், தங்கள் எஞ்ஜினும், ஹைப்ரிட் எஞ்ஜின் அளவிற்கு ஆற்றலை உடையது எனக் கூறி போட்டியிட்டனர். இதற்கு பதில் தாக்குதலாக டொயோட்டா தனது D4D D-Cat டீஸல் எஞ்ஜினை அறிமுகப்படுத்தியது. Auris, Avensis, Corolla Verso, Rav-4 Lexus என தனது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் இந்த எஞ்ஜின் உலகத்திலேயே சிறந்த டீஸல் எஞ்ஜின் என டொயோட்டா சவால்விட்டது.
இது வேறுவிதமான விளையாட்டு
எனினும், எவ்வளவு விலையானாலும் பெட்ரோல் கார்களையே விரும்பும் அமெரிக்காவில் இந்த டீஸல் எஞ்ஜின் மொடல் எடுபடவில்லை. இதனால், அமெரிக்க மார்க்கட்டில் டொயோட்டா தனது ஹைப்ரிட் கார்களை வைத்தே முதன்மையாக இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது.
Renault மற்றும் வேறு சில நிறுவனங்கள் தமது குறைந்த விலைக் கார்களுக்கு அமெரிக்கா போன்ற பிரமாண்டமான மார்க்கட்டைப் பல வருடங்களாகவே கனவு கண்டுவந்தன. அவர்களுக்கு லாட்டரி அடித்ததுபோல வந்து சேர்ந்தது அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவு.
இதுதான் சரியான சமயம் என்று அங்கு தமது புஜபராக்கிரமத்தைக் காட்டத் தொடங்கியதில், விலை குறைந்த கார்கள், வளரும் நாடுகளில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் விரும்பப்படும் என நிரூபித்துள்ளன. டொயோட்டா தானும் இதுபோன்ற விலை குறைந்த ஒரு காரை தயாரிக்க முயற்சித்து வருவதாகவும், ஆனால் இன்னும் அது முடிவடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
லாபத்தை அள்ள மூன்று இடங்கள்
தற்போது, அனைத்து கார் நிறுவனங்களுமே BRIC Nations எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவில் வியாபாரம் செய்வதிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றன. டொயோட்டா இந்த இடங்களில் இன்னமும் முதலிடத்துக்கு வரவில்லை. ஆயினும், தற்போது ரஷ்யா மற்றும் சீனாவில் வேகமாக முதலீடுகளைச் செய்து வருகிறது.
தொழில்நுட்பம் மற்றும் தரத்தில் முதன்மையாக இருந்தாலும், உலகம் முழுவதும் வளர வேண்டும் என்ற வேகத்தில் டொயோட்டாவின் ஸ்திரத்தன்மை குறைந்து வருவதாக மற்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. கடந்த வருடம், அமெரிக்காவில், 500,000 டொயோட்டா பாகங்கள் குறைபாடு உள்ளதாக திரும்பப் பெறப்பட்டன.
டொயோட்டா எல்லாருக்கும் ஏற்ற கார்களை தயாரித்தாலும், இளைஞர்களுக்கு பிடித்தமான மாடல்கள் இல்லையென கூறப்படுவது டொயோட்டாவின் மற்றொரு மைனஸ் பாயின்ட்.
“மிகவும் மங்கலான கார்களை அறிமுகப்படுத்தியதே ஜெனரல் மோட்டேர்ஸின் வீழ்ச்சிக்குக் காரணம்” என்று கூறுவார்கள். ஆனால், அது போன்று டொயோட்டாவில் நடக்காது என்றே கூறலாம்.
http://viruvirupu.com/2011/05/05/263/

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1