ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:32 am

.

ராகு கேது பலன்
மேஷம் - (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)


மேஷ ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த ராகு இப்போது 8-ஆம் இடத்துக்கும்; 3-ல் இருந்த கேது இப்போது 2-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள்.


எட்டாம் இடம் என்பது கெட்ட ஸ்தானம். சஞ்சலம், ஏமாற்றம், விபத்து, பீடை, கௌரவ பங்கம், விசனம், கவலை, இழப்பு ஆகிய வற்றைக் குறிக்கும் இடம். இயற்கையில் பாப கிரகமாகிய ராகு மேற்கண்ட பாப ஸ்தானத்தில் வருவதால் அந்த பாபத் தன்மைகளை விரட்டியடிப்பார் அல்லது அழித்துவிடுவார் என்று சொல்லலாம். டபுள் மைனஸ் ஒரு பிளஸ் என்பதுபோல கெட்ட இடத்தில் வந்திருக்கும் கெட்ட கிரகம் கெட்ட பலனைக் கெடுப்பதால் நன்மை உண்டாகும். குளத்திலே உள்ள மீன்கள் தங்கள் உணவுக்காக அழுக்குகளைச் சாப்பிடுவதால் குளம் சுத்தப்படுவதுபோல!


கேதுவுக்கு ஏற்கெனவே இருந்த மூன்றாம் இடம் அற்புதமான இடம்- யோகமான இடம்தான்! இப்போது மாறியுள்ள இரண்டாம் இடம் சுமாரான இடம்தான். என்றாலும் தன ஸ்தானத்தில் உள்ள கேது பணப் பஞ்சத்தைப் போக்கித் தாராளமான வரவு- செலவு, பணப் புழக்கத்தைத் தரலாம். 2-க்குடைய சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சியாக வந்தபிறகு எதிர்பார்க்கலாம். (வைகாசி 22-ல் ரிஷபத்தில் சுக்கிரன் மாறுவார்.)


தன காரகன் குரு தனாதிபதியான சுக்கிரன் சாரத்தில் (பரணியில்) சஞ்சரிக்கும் காலத்திலும் கேது தன ஸ்தான பலனை நிறைவாகச் செய்வார். (21-7-2011 முதல் 10-10-2011 முடிய).


மேலும் 2-ஆம் இடம் என்பது வாக்கு, தனம், வித்தை, கல்வி, குடும்பம், நேத்ரம் ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம். கேது மிருக சீரிட நட்சத்திரத்தில்- ராசிநாதன் செவ்வாயின் சாரத்தில் (16-5-2011 முதல் 18-9-2011) சஞ்சரிக்கும் காலம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும், லாபத்தையும் வாக்கு, நாணயத்தைக் காப்பாற்றும் தன்மையையும், செல்வாக்கு யோகத்தையும் செய்வார். செய் முயற்சிகளில் வெற்றியும் தொழில் மேன்மையும் முன்னேற்றமும் உண்டாகும்.


அதேநேரம் மேஷ ராசிக்கு 8-ல் இருக்கும் ராகு 3, 6-க்குடைய புதன் சாரத்தில் சஞ்சரிக்கும் வரை (16-5-2011 முதல் 22-1-2012) சோதனை, பணத் தட்டுப்பாடு, வாக்கு நாணயம் தவறிவிடுமோ என்ற கவலை, குடும்பத்தில் குழப்பம், பார்வைக் கோளாறு, கண் ஆபரேஷன், கடன் போன்ற பலனையும் அனுபவிக்க நேரலாம். ஜாதக தசா புக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். அத்துடன் மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சக்தியும் மன தைரியமும் உண்டாகும்.


குளத்திலே நீர் நிறைய இருந்தால் தாமரைப்பூ நீரின் மேல் மட்டத்திலேயே மிதக்கும். குளத்தில் நீர் வற்றிவிட்டாலும் அதே நீர் அளவுக்குத்தான் தாமரை மிதக்குமே தவிர மூழ்கி விடாது. "நீரளவே ஆகுமாம் நீராம்பல்'. அதுபோல குரு ஜென்மத்தில் நிற்பது "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே' என்ற மாதிரி உங்கள் கௌரவம் காப்பாற்றப்படும். மதிப்பு, மரியாதை குறையாது. நிலையிலும் தாழ்வு ஏற்படாது.


விருச்சிக ராசியில் இருக்கும் ராகு மேஷ ராசிக்கு 6-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ரிஷபத்தில் இருக்கும் கேது மேஷ ராசிக்கு 12-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ராகுவுக்கும் கேதுவுக்கும் தான் நின்ற இடத்தில் இருந்து 3, 7, 11-ஆம் இடங்களுக்கு பார்வை உண்டு.


6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம். ராகு அதைப் பார்ப்பதால் 6-ஆம் இடத்துப் பலன்களைக் கெடுப்பார். அதனால் உங்களுக்கு நன்மைதான்! எதிரிகள் ஒழிந்து போகலாம். அல்லது உங்களோடு சமாதானமாகலாம். போட்டியாளர்களும் பொறாமைக்காரர்களும் புகைந்து போய் விடுவார்கள். விரோதிகள் விலகியோடி விடுவார்கள். எதிர்ப்பும் இடையூறும் இல்லாது ஒழிந்துவிடும். தடையும், தாமதமும் தரைமட்டமாகிவிடும். 6-ல் பாப கிரகம் இருந்தாலும் 6-ஆம் இடத்தைப் பார்த்தாலும் ஆறாம் இடத்துப் பலன் வேறாகிவிடும். அதேபோல நோயும் விலகிவிடும்.


நோய் என்பது மூன்று வகையில் வரலாம். ஒன்று, இயற்கை மாற்றத்தால் ஏற்படலாம். இதுதான் கண்வலி, ஆஸ்துமா, புளு காய்ச்சல், சிக்குன் குன்யா போன்றவை. அடுத்து உணவு, பழக்க வழக்கத்தால் வரக்கூடியது. குடி, புகை, நேரம் கெட்ட நேரம் சாப்பாடு, தூக்கமின்மை போன்றவற்றால் வருவது. மூன்றாவது கர்மவினையால்- செய்வினைக் கோளாறால்- ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்படக்கூடியது.

சில நோய், வைத்திய சிகிச்சையால் தீரும். அல்லது பிரார்த்தனை பலத்தாலும் பரிகாரத்தாலும் மாறும். ஜாதகத்தில் ஆயுள் தீர்க்கமாக இருந்தால் காப்பாற்றப்படலாம். ஜாதக வலு இல்லையென்றால் நோய்க்குப் பலி ஆகலாம். இதயக் கோளாறு, கிட்னி பாதிப்பு, கேன்சர் போன்ற வியாதிகள் உயிர்க் கொல்லியாகும். மூளை நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் இல்லையென்றால் "கோமா ஸ்டேஜ்' ஏற்படும். பழைய திரைப்பட நடிகை சாவித்திரி இப்படி "கோமா'வால் அன்ன ஆகாரம் இன்றி மாதக்கணக்கில் படுக்கையில் கிடந்து அவதிப்பட்டு காலமானார்.


கூடியவரை 6-ஆம் இடத்துக்கு லக்னாதிபதி அல்லது ராசியதிபதி அல்லது சுப ஆதிபத்தியம் பெற்ற குரு சம்பந்தம் கிடைத்தால், குருவருளும் திருவருளும் நோயின் பிடியில் இருந்து காப்பாற்றும்.


கல்விக்கு சரசுவதி- செல்வத்துக்கு லட்சுமி- வீரத்துக்கு பார்வதி என்பதுபோல ஆரோக்கியத்துக்கு தன்வந்திரி பகவான்! நோயுள்ள வர்கள் ஸ்ரீ தன்வந்திரி பகவானை வழிபட்டாலும் அவர் மந்திரத்தை தினசரி எழுதினாலும் ஜெபித்தாலும் நோய் குணமாகும். ஆரோக் கியத்துடன் உலக மக்கள் வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளு டன் வாலாஜாபேட்டை அருகில் யாக புருஷர் ஸ்ரீ முரளீதர சுவாமிகள் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தை நிறுவி ஏழு அடி உயரத்தில் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து தினசரி ஹோமம், ஜெபம் செய்து வருகிறார். சுமார் 50 கோடி மந்திரங்களை ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமயத்தாரும் எழுதியனுப்ப- அதையே மூலஸ்தான சிலையின் பீடத்தின் அடியில் மந்திரப் பிரதிஷ் டையாக அமைத்திருக்கிறார். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.'


"ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்ய லெட்சுமி ஸமேத ஸ்ரீமகாவிஷ்ணவே நமஹா' என்பதுதான் தன்வந்திரி மூலமந்திரம். இந்த மந்திரத்தை முடிந்த அளவு எழுதி தன்வந்திரி ஆரோக்கிய பீடத்துக்கு அனுப்பலாம். தினசரி ஜெப பாராயணம் செய்யலாம். சாப்பிடுகிற மருந்து உடம்பில் கலந்து ஆரோக்கியத்தைக் கொடுக்கும். நோய் வராமலே தடுக்கும். ஸ்ரீமுரளீதர சுவாமிகள்- தன்வந்திரி ஆரோக்கிய பீடம், கீழ்ப்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 512- வேலூர் மாவட்டம். தொலைபேசி 04172-230033.


6-ஆம் இடம் என்பது கடனையும் குறிக்கும். "கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வார்த்தைகள். "யானைபோல் கடன் பட்டால் பூனைபோல ஒல்கிப் போவார்' என்பது பாடல். கடன் வாங்கிக் கடனைக் கொடுப்பவனும் மரமேறிக் கைவிட்டவனும் ஒன்று என்பது அனுபவம். அதற்காக கடன் வாங்காமல் இருக்க முடியாது. அத்தியாவசிய தேவைக்கும் அவசரத்துக்கும் கடன் வாங்கு வது தவறல்ல- ஆனால் தரமறிந்து கடன் வாங்க வேண்டும். பத்து வட்டிக்கும் இருபது வட்டிக்கும் ரன் வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போட்டு கடன் வாங்கக்கூடாது. தரம் கெட்டவர்களிடம் கடன் வாங்குவதும் தப்பு.

திருப்பிக் கொடுக்க வழி வகை இல்லாதவர்கள் கடன் வாங்குவதும் தப்பு 6-க்குடைய தசா புக்தி நடக்கும்போது நிச்சயம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். அப்படிக் கடன் வாங்கவில்லையென்றால் நோய், வைத்தியச் செலவு, மேஜர் ட்ரீட்மெண்டு, அல்லது கோர்ட் கேஸ், போலீஸ் விவகாரம், எதிரி தொல்லை என்று படுகுழியில் தள்ளி விட்டுவிடும். கல்விக்கடன், கல்யாணக் கடன், வீட்டுக் கடன், வெளிநாட்டு வேலைக் கடன், வாகனக் கடன் என்று சுபக் கடனை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மாதிரி சூழ்நிலையில் கடன் காரர்களால் கேவலப்படாமல் இருக்கவும் கடன் சீக்கிரம் அடை படவும் "கடன் நிவர்த்தீஸ்வரர்' என்ற சாரபரமேசுவரரை வழிபட வேண்டும். வசிஷ்ட மகரிஷி "தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்ரம்' என்று பதினோரு பாடல்கள் இயற்றியுள்ளார். இதை தினசரி பாராயணம் பண்ணலாம். கும்பகோணம் அருகில் திருச்சேறை என்ற ஊரில் சாரபரமேசுவரர் கோவில் இருக்கிறது. அங்கு 11 திங்கட்கிழமைகள் மேற்கண்ட ஸ்தோத்திரங்களைப் படித்து அவரவர் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. நேரில் போக முடியாதவர்கள் சுந்தரமூர்த்தி குருக்களை, செல்: 94437 37759-ல் தொடர்பு கொள்ளலாம்.


இதேபோல திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள சாரபரமேஸ்வரர் சந்நிதியிலும் 11 திங்கட்கிழமை அவரவர் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இதைச் செய்வதால் கடன் அடைபட வழிவகை அமையும். அல்லது கடன்காரர்களின் விரட்டுதலும் கெடுபிடியும் தணியும்.


விருச்சிக ராகு 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஏற்கெனவே அங்கு கேதுவும் மாறியிருக்கிறார். 2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம், வித்தை, கண் பார்வை முதலியவற்றைக் குறிக்கும் இடம். ராகுவும் கேதுவும் 2-ஆம் பாவத்தில் சம்பந்தப்படுவதால் வித்தை, ஞானம், வாக்குப்பலிதம் உண்டாகும். படிப்பு மேன்மையாகும். காசு பணப் புழக்கம் தாராளமாக அமையும். ஜாதகத்தில் 6, 8, 12-க்குடைய தசா புக்திகள் நடந்தாலும், சம ராகு- சம கேது தசா புக்திகள் நடந்தாலும் படிப்பு, வித்தையில் தடைகளும் குடும்பத்தில் குழப்பமும் பிரச்சினைகளும் உண்டாகலாம். கண் பார்வை சிகிச்சையும் ஏற்படலாம்.


அடுத்து ராகு மேஷ ராசிக்கு 10-ஆம் இடத்தை- தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்- தொழில் துறையிலும் வேலையிலும் நல்ல திருப்பம் உண்டாகும். 10-க்குடைய சனி ராசிக்கு 6-ல் மறைந்து 8-ல் உள்ள ராகுவைப் பார்ப்பதால் தொழில் துறையில் நல்ல திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் ராகு 10-ஆம் இடத்துக்கு 12-ல்- ராசிக்கு 9-ல் நின்ற சமயம்- ராகுவுக்கு வீடு கொடுத்த குருவும் ராசிக்கு 12-ல் மறைந்த காரணத் தால் பலருக்கு தொழில் பாதிப்பு இருந்தது. சிலருக்கு உடல்நலக் குறைவால் தனது கடமையை நேரடியாகக் கவனிக்க முடியாதபடி அவல நிலையும் ஏற்பட்டது. அதனால் நஷ்டம், விரயம், ஏமாற்றம், நம்பிக்கைத் துரோகம் போன்ற சங்கடங்களையும் சந்தித்தி ருக்கலாம். இந்த ராகு- கேது பெயர்ச்சி இவற்றுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தும்.


கேது மேஷ ராசிக்கு 2-ல் நின்று 12-ஆம் இடம், 8-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்ப்பதால் சில சமயம் சுப விரயமும் உண்டாகும். நினைத்தோம் முடித்தோம் என்று இல்லாமல் தடை களையும் இடையூறுகளையும் சந்தித்து கவலைப்பட்டு விடா முயற்சியினால் நினைத்ததை நிறைவேற்றலாம். மொத்தத்தில் "கேதுவைப்போல் கெடுப்பாரில்லை. ராகுவைப்போல் கை கொடுப்பாரில்லை' என்பது பழமொழி. ஆனால், கேது கெடுத்துக் கொடுப்பார்; ராகு கொடுத்துக் கெடுப்பார். எனவே ராகுவும் கேதுவும் அடிக்கிற கை அணைக்கும் என்பதுபோல உங்களுக்கு கண்டிப்பான வாத்தியாராக இருந்து வழி நடத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அசுவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி பிரபல யோகமாக இல்லாவிட்டாலும்கூட பாதிப்பான பலனைச் செய்ய மாட்டார்கள். ஸ்டார் ஹோட்டலில் போய் பந்தாவாக சாப்பிட முடியாவிட்டாலும் ரோட்டுக் கடையில் வாய்க்கு ருசியாகவும் சிக்கனமாகவும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். சூரியனார் கோவில் சென்று வழிபடவும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி வாழ்க்கையில் புதுப்புது பிரச்சினை களையும் போராட்டங்களையும் சந்தித்தாலும் மன தைரியத்தோடு அவற்றை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு, சாதனை புரிய துணை நிற்கும். பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து விடலாம். காள ஹஸ்தி சென்று ருத்ராபிஷேக பூஜை செய்தால் தடைகள் விலகும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் பரிகாரமாக நல்லது செய்து சாதனை புரியச் செய்யும். வழக்கு, விவகாரம், பூர்வீகச் சொத்துப் பிரச்சினை, அரசு சம்பந்தப்பட்ட காரியங்களால் நீங்கள் அனுபவித்த துன்பங்களையும் துயரங்களையும் துடைத்து, புண்ணுக்கு மருந்து போடுவதுபோல ஆறுதலும் தேறுதலுமாக அமையும். இழப்புகளையும் நஷ்டங்களையும் ஈடுசெய்துவிடலாம். திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி போகும் பாதையில் மயிலம் தாண்டி திருவக்கரைக்குப் பாதை பிரியும். அங்கு வக்ரகாளி, சந்திரமௌலீஸ்வரர், அம்பாள், பெருமாள் சந்நிதிகளோடு குண்டனி முனிவர் ஜீவசமாதியும் சிறப்பாக விளங்குகிறது. பிறந்த ஜாதகத்தில் சனி வக்ரமாக இருக்கும் ஜாதகர்கள் இங்குள்ள வக்ர சனியை வழிபட வேண்டும். உங்கள் குறைகளை முறையிட்டு வழிபட்டால் வேண்டுவது நிறைவேறும்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:33 am

ரிஷபம்(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)


ரிஷப ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடகாலமாக ரிஷப ராசிக்கு 8-ல் இருந்த ராகு இப்போது 7-ஆம் இடத்துக்கும்; 2-ல் இருந்த கேது ஜென்ம ராசிக்கும் மாறியிருக்கிறார்கள்.


கடந்த காலத்தில் ராகு- கேது இருந்த இடங்கள் அவ்வளவு சிறப்பான இடங்களாகச் சொல்ல முடியாவிட்டாலும் சிலருக்கு சில நன்மைகளும் நடந்தன என்பது மறுக்க முடியாத உண்மை! ஆனால் பொதுவாக பலருக்கும் பல கெடுதல்களே நடந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் நன்மைகளை அனுபவித்தவர்களில் கெடுதல்களையும் சந்தித்தவர்கள் உண்டு. கெடுதல்களைச் சந்தித்த வர்களில் நன்மைகளை அனுபவித்தவர்களும் உண்டு.


பதவி உயர்வு, பண வருமானம், சம்பாத்தியம், சைடு பிஸினஸ், ஆதாயம், கட்டட சீர்திருத்தம், மாடி கட்டியது, வீடு வாங்கியது, புதிய வாகனம் வாங்கியது, புதிய தொழிலை ஆரம்பித்தது போன்ற நன்மைகளைச் சந்தித்தவர்கள் மனைவிக்கு கருச்சிதைவு, தாய் அல்லது தந்தைக்கு உடல்நலக் குறைவு, வைத்தியச் செலவு, கண்டம், கர்மச் செலவு, உடன்பிறந்தவர்கள் வகையில் பகை, வருத்தம், பூர்வீகச் சொத்து விவகாரம், கௌரவப் போராட்டம், விபத்து, அரசு ரெய்டு, சோதனை, விசாரணை போன்ற சங்கடங்களையும் சந்தித்தது உண்டு.


தனுசு ராசியில் இருந்த ராகு ரிஷப ராசிக்கு 6-ஆம் இடம், 10-ஆம் இடம், 2-ஆம் இடங்களையும்; மிதுனத்தில் இருந்த கேது ரிஷப ராசிக்கு 12-ஆம் இடம், 8-ஆம் இடம், 4-ஆம் இடங்களையும் பார்த்தார்கள். எனவே, தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் ஏமாற்றம், நஷ்டம், விரயம், கௌரவப் போராட்டம், இட மாற்றம், பதவி இறக்கம், பதவியில் சஸ்பெண்ட் போன்ற அவலங்களைக் கொடுத்தது எனலாம். ஆரோக்கியத்தையும் பாதித்தது எனலாம். சிலர் மனைவி பேரில்- மக்கள் பேரில் புதுத் தொழில்களை ஆரம்பித்தும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாதபடி பல பிரச்சினைகளைச் சந்தித்தார்கள்.


ரிஷப ராசிக்கு 5-ல் சனி நல்ல இடத்தில் இருந்தும் ராகு- கேதுவால் அந்த நன்மைகளை முழுமையாக அனுபவிக்க முடியாத சோதனைகளும் வேதனைகளும் உண்டானது என்றால் அது பொய் யில்லை. பசியோடு ஹோட்டலுக்கு சாப்பிடப் போய் டேபிளில் உட்கார்ந்து, இலையில் பரிமாறப்பட்டுச் சாப்பிடப் போகும்போது பக்கத்திலிருந்த டம்ளரைத் தட்டிவிட்டு தண்ணீர் சாப்பாட்டிலும் உடம்பிலும் கொட்டினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் கடந்த கால ராகு- கேது பெயர்ச்சி அமைந்துவிட்டது. இதற்கெல்லாம் பரிகாரமாக இப்போது ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்லதொரு திருப்பத்தையும் மாற்றத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.


ராகு- கேதுவுக்கு சொந்த வீடு இல்லை என்றாலும், அவர்கள் யார் வீட்டில் இருக்கிறார்களோ- எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ- யாரால் பார்க்கப்படுகிறார்களோ அவர்களின் பலனை வாங்கிச் செய்வார்கள் என்பது ஜோதிட விதி!


அதன்படி இப்போது ரிஷப ராசிக்கு 7-ல் நிற்கும் ராகு சனியின் பார்வையைப் பெறுவதாலும்; ரிஷப ராசிக்கு குரு 12-ல் (மேஷத்தில்) இருப்பதோடு ராகுவுக்கு 6-ல் மறைவதாலும் திருமணத் தடை ஏற்படும். திருமணமானவர்களுக்குள் பிரச்சினைகளும் குழப்பங்களும் உண்டாகும். ஜாதக தசா புக்திகள் பாதகமாக இருந்தால் பிரிவு, பிளவு, விவாகரத்துகூட ஏற்படும். அந்த மாதிரி இருந்தால் குடும்பம் ஒன்று சேரவும், பிரிந்திருக்கும் கணவன்- மனைவி சேர்ந்து வாழவும் பார்வதி சுயம்வரகலா ஹோமத்தில் பதிகமன ஹோம மந்திரம் சொல்லி கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அல்லது விழுப்புரம் வட்டம் திருவாமத்தூரில் உள்ள முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் திருக்கோவிலில் அபிஷேக பூஜை செய்யலாம்.


கேது ஜென்ம ராசியில் இருப்பதால் உங்களுடைய செல்வாக்கு உயரும். மதிப்பு, மரியாதை அற்புதமாக இருக்கும். ஆன்மிகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜோதிடம், வைத்தியம், தியானம், யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். ராகு- கேது தசா புக்தி நடந்தால்- அவர்களுடன் குரு, சுக்கிரன், சனி சம்பந்தம் கிடைத்தால் சிலர் மாந்திரீகம், வசியம், ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் போன்ற பயிற்சிகளில் ஈடுபாடு கொண்டு அருள்வாக்கு சொல்ல ஆசைப்படலாம்.


அருள்வாக்கு சொல்ல விரும்புவது தவறு அல்ல. அதற்காக அசைவ பூஜை செய்வதும், மயான பூஜை செய்வதும்தான் மிகமிகத் தவறு. யட்சினி, மாடன் போன்ற சில துஷ்ட தேவதைகளிடம் அசைவ வழியில் சித்தி பெறுவது என்றாவது ஒருநாள் ஆபத்தில் முடியும். சத்தியமும் சுத்தபூஜையும்தான் என்றைக்கும் சாகாமல் உண்மையாக நிலைத்து நிற்கும். மற்றபடி அசைவ பூஜை, சுடுகாட்டுப் பூஜை, மை, மாந்திரீகம், யட்சினி உபாசனை போன்றவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம்தான் ஓடும். அப்புறம் தலைகீழாக மாறிவிடும். அதனால் நேர்மையான- நியாயமான- சத்தியமான பூஜைகளையும் கலைகளையும் கற்று மேன்மையடைய முயற்சி செய்யுங்கள். "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?' என்று கவியரசர் பாடினார். நல்ல மார்க்கத்தில் உள்ள மடாதிபதிகள்கூட சபலத்துக்கு அடிமையாகி தவறுகள் பண்ணி தண்டனைக்கு ஆளாகிவிடுவார் கள். மடியில் கனமிருப்பவன்தான் வழியில் பயப்பட வேண்டும். மற்றவருக்குப் பயம் இல்லை.


ரிஷப ராசிக்கு 9-க்குடைய சனி கன்னியில் இருந்து விருச்சிக ராகுவைப் பார்க்கிறார். அக்காலம் உங்களுடைய ஒழுக்கத்தால் 9-க்குடைய சனியின் பார்வையும் உங்களுக்கு அப்பழுக்கற்ற புகழையும் பெருமையையும் பாராட்டையும் தந்து, மாசற்றவராக்கி வணங்கத்தக்க அந்தஸ்தையும் உண்டாக்கும். உங்களுடைய சபலத்தாலும் பேராசையாலும் உங்களைத் தவறான வழிக்குத் திசை திருப்பிவிட்டால், சனியின் பார்வைப் பலனாகவும் 8-ஐப் பார்க்கும் குருவின் பார்வைப் பலனாகவும் கேவலத்தையும் அபகீர்த்தியையும் உண்டாக்கும்.


ஆக நல்லது- கெட்டது என்ற இரண்டும் உங்கள் எண்ணம், செயலைப் பொறுத்தே அமைகிறது. ஒன்பது கிரகங்களும் நல்லவர்கள்தான். ஒன்பது கிரகங்களும் கெட்டவர்கள்தான். கிரகங்களின் பலன் நல்லதாக அமைவதும் கெட்டதாக அமைவதும் உங்கள் எண்ணம், செயலைப் பொறுத்த சமாச்சாரம்தான்! "புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது மாதிரி வைராக்கியமும் சாதனையும் இருந்தால் போதும்! காமவெறியனான அருணகிரியும், இரக்கமற்ற கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகியும், பணத் தாசை பிடித்த பட்டினத்தாரும் பேரும் பெருமையும் பெற்று வணங்கத்தக்கவர்களாக மாறியதற்குக் காரணம் கெட்டவர்கள் நல்லவர்களாக மாறியதுதான்! ஆக, ராகு- கேது பெயர்ச்சியால் புகழைத் தேடப் போகிறீர்களா? பொருளுக்கு ஆசைப்பட்டு அழி வைத் தேடப் போகிறீர்களா என்பது நீங்கள் எடுக்கும் முடிவுதான்.


இனி பார்வைப் பலனைப் பார்ப்போம். ராகு ரிஷப ராசிக்கு 5-ஆம் இடத்தையும், ஜென்ம ராசியையும், 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ஜென்ம கேது ரிஷப ராசிக்கு 11-ஆம் இடத்தையும், 7-ஆம் இடத்தையும், 3-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.


ஜென்ம ராசியில் கேது நிற்பதும் அதை ராகு பார்ப்பதும் விசேஷம்தான்! யோகம்தான்! உங்கள் தொழில், முயற்சிகளில் முன்னேற்றமும் கீர்த்தியும் செல்வாக்கும் பாராட்டும் உண்டாகும். (உங்கள் நல்ல செயல்களைப் பொறுத்து!) கௌரவப் பதவிகளும் சமுதாய- சமூக சேவைப் பணிகளும் அரசியல் தொடர்பும் ஆன்மிக ஈடுபாடும் ஏற்படும். வி.ஐ.பிக்களின் அறிமுகமும் நட்பும் ஆதரவும் கிடைக்கும். லயன்ஸ் கிளப் உறுப்பினர், தர்மகர்த்தா பதவி, ஆலயத் திருப்பணி கமிட்டிப் பதவி போன்ற செல்வாக்கும் உண்டாகும். பிரிந்து கிடந்தது ஒன்று சேரும். வெட்டிப்போன உறவு ஒட்டி உறவாடும். மற்றவர்களால் முயன்று முடியாமல் போன காரியங்களை உங்கள் கெட்டிக்காரத்தனத்தால் முடித்து பேர் வாங்கலாம்; பெருமை அடையலாம்.


விருச்சிக ராகு 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியைப் பார்ப்பதும்; ஜென்ம கேது 7-ஆம் பார்வையாக கணவன் அல்லது மனைவி ஸ்தானத்தைப் பார்ப்பதும்- உங்கள் செல்வாக்கு, பெருமையில் உங்கள் மனைவிக்கும் அல்லது கணவருக்கும் பங்கு கிடைக்கும். ஜோதிடத்தில் எனக்குள்ள பெருமையால் என் வாழ்க்கைத் துணைவிக்கும் மற்றவர் பெருமை அளிக்கிறார்கள். விழாக்களில் அல்லது அவரவர் குடும்ப விசேஷங்களில் எங்கள் இருவரையும் அழைத்து மரியாதை செய்கிறார்கள். அதேபோல மனைவி எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அல்லது மந்திரி அல்லது அரசு பெரிய அதிகாரியாக இருந்தால் அவரால் கணவருக்கும் வரவேற்பும் மரியாதையும் உபசரிப்பும் கிடைக்குமல்லவா- பூவோடு சேர்ந்த நாரும் மணப்பதுபோல! மனைவி பேரிலும் கணவர் தொழில் ஆரம்பிக்கலாம். பங்குதாரராகச் சேர்ந்து செயல்படலாம்.


ரிஷப ராசிக்கு 5-ஆம் இடத்தை ராகு பார்க்கிறார். பொதுவாக 5-ல், 7-ல், 8-ல் ராகு- கேது, சனி போன்ற கிரகங்கள் இருந்தால் புத்திர தோஷம், களஸ்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஏற்படும். அதேபோல 5, 7, 8-ஆம் இடங்களை ராகு- கேது, சனி பார்த்தாலும் தோஷம் ஏற்படும். இங்கு 5-ஆம் இடத்தை ராகு பார்ப்பது தோஷம். அதை புத்திர தோஷம் என்பதா? புத்திர சோகம் என்பதா? புத்திர பாக்கியமே இல்லை என்றால் புத்திர தோஷம்- பிள்ளைகள் பிறந்து பிறந்து இறப்பது புத்திர சோகம்! தகப்பனுக்கு அந்திமக் காலத்தில் கர்மா செய்வதற்கு- கொள்ளி வைப்பதற்கு ஆண் பிள்ளை அவசியம்! ஆனால் தகப்பன் உயிரோடு இருக்கும்போது பிள்ளை சாக, பிள்ளைக்கு தகப்பன் கொள்ளி வைத்தால் புத்திர சோகம்! ஒரு நிகழ்ச்சி- நல்ல இளமைப் பருவத்தில் படித்துப் பட்டம் பெறப் போகும் தருணத்தில் திருமணமாகாமல்- எதிர்பாராமல் மகன் இறந்துவிட்டான். அவன் தந்தையே அவனுக்கு அந்திமக் கருமக் கிரியைகள் செய்யும்படி ஆயிற்று. இதுதான் புத்திர சோகம்.


ஐந்தாம் இடத்தைப் பார்க்கும் ராகு 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 9-ஆம் இடம் என்பது தகப்பனார், பூர்வ புண்ணிய ஸ்தானம். 5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம். அது மட்டுமல்ல; 5-ஆம் இடத்தையும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள். 5-ஆம் இடம் என்பது அடுத்த ஜென்மம். 9-ஆம் இடம் என்பது போன ஜென்மம். 10-ஆம் இடம் என்பது கர்ம ஸ்தானம். அதற்கு 12-ஆம் இடம்தான் 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானம். முன்ஜென்மாவில் செய்த கர்ம வினையின் காரணமாக இந்த ஜென்மாவில் அடையும் பாக்கியம்தான் பூர்வ புண்ணியம் ஆகும். இந்த ஜென்மாவில் நாம் செய்யும் நல்லது- கெட்டதுகளுக்கு 6-ஆம் இடத்துப் பலன் தொடர்புடையது. (10-க்கு பாக்கிய ஸ்தானம்). அதற்கு 12-ஆம் இடம் அடுத்த ஜென்மாவில் அடையக்கூடிய நன்மைகள், வாரிசு- புத்திர ஸ்தானம். அதாவது அடுத்த ஜென்மாவில் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால்- ஆவி அலைபாயாமல் நிலை நிறுத்தப்பட வேண்டுமானால் உங்கள் வாரிசுகள் உங்களுக்குப் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதற்காகவே வாரிசு அமைய வேண்டு மென்று எதிர்பார்க்கிறோம்.


"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'


என்பது குறள். இதன் அர்த்தம் தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகை இடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். தென்புலத்தார் என்பது முன்னோர்- மூதாதைகள் ஆவார்கள் (பித்ருக்கள்). அதற்குப் பிறகுதான் தெய்வம். எப்படி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லப்படுகிறதோ அதேபோல நமது முன்னோர்கள்தான் நமக்கு முதல் தெய்வம்! அதற்குப் பிறகுதான் பிள்ளையார், முருகன், பெருமாள், அம்பாள் போன்ற குலதெய் வமும் இஷ்டதெய்வமும்.


ஆகவே வரும் ஜென்மா என்பது உங்கள் வாரிசுகளைக் குறிக்கும். அதனால்தான் 5-ஆம் இடத்தை புத்திர ஸ்தானம் என்றார்கள். பெண்கள் ஜாதகத்தில் 5-ஆம் இடம் என்பது கர்ப்ப ஸ்தானம். 9-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம். அதனால்தான் 5, 9-ல் ராகு- கேது, சனி நிற்பது தோஷமாகக் கருதப்படுகிறது. 7-ல் உள்ள ராகு மனைவி ஸ்தானத்தில் இருந்து (கணவன் ஸ்தானத்தில்) 1, 5, 9 என்ற மூன்று பாவங்களுக்கும் ஒரு பாலம் அமைக்கிறார். அதே போல ரிஷப கேதுவும் ரிஷப ராசிக்கு 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்துக்கு 7-ஆம் இடத்தையும் (3-ஆம் இடம்), 5-ஆம் இடத்துக்கு 7-ஆம் இடத்தையும் (11-ஆம் இடம்) பார்க்கிறார்.


ஏற்கெனவே எழுதிய விளக்கத்தின்படி ஒரு பாவத்தின் பலனை நிர்ணயிக்கும்போது அதனுடைய 7-ஆம் பாவத்தை இணைத்துப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் கேது பார்க்கும் 11-ஆம் இடமும், 3-ஆம் இடமும், 5-ஆம் இடத்திற்கும் 9-ஆம் இடத்திற்கும் தொடர்புடையதாக அமைகிறது.


அதேபோல அந்த பாவத்திற்கு பாவோத் பாவம் என்று அந்த பாவத்தின் எண்ணிக்கைப்படியும் பார்க்க வேண்டும். 9-ஆம் பாவம் என்றால் 9-க்கு 9-ஆம் பாவம்: 5-ஆம் பாவம் என்றால் 5-க்கு 5-ஆம் பாவம்; 7-ஆம் பாவம் என்றால் 7-க்கு 7-ஆம் பாவம்; 10-ஆம் பாவம் என்றால் 10-க்கு 10-ஆம் பாவம் ஆகியவற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இது பலதீபிகை விதி. இப்படிப் பார்க்கும் போது 9-க்கு 9-ஆம் இடம் 5-ஆம் பாவமாக மாறும். 5-க்கு 5-ஆம் இடம் 9-ஆம் பாவமாக வரும். 7-க்கு 7-ஆம் இடம் ஜென்ம ராசி அல்லது ஜென்ம லக்னமாக வரும். இவற்றில் ராகு- கேது சம்பந்தம் வருவதால் இவற்றைப் பொறுத்தவரையில் யோகமான பலன்கள் நடைபெறும் என்பது ஒரு முடிவு. இந்த யோகப் பலன் என்பது குரு ரிஷப ராசிக்கு மாறிய பிறகு எதிர்பார்க்கலாம்.


இதேபோல ராகுவும் கேதுவும் கொடிய கிரகங்கள்- குரூர கிரகங்கள்- பாவகிரகங்கள் என்றாலும், அவர்கள் எப்போதும் கெட்ட பலனையே செய்வார்கள் என்று சொல்லக்கூடாது; சொல்ல முடியாது. இடத்துக்குத் தக்கபடி ராகு- கேது நற்பலனையோ துர்பலனையோ மாற்றிச் செய்வார்கள். இதுதான் அனுபவ ஜோதிடம். அவர்களை மொத்தமாக அழிக்கும் கிரகங்கள் என்றால் ஏன் அவர்களை ஞானகாரகன் என்றும் மோட்சகாரகன் என்றும் சிறப்பாகக் கூற வேண்டும்? பல பேரைத் தூக்கிலிட்டுச் சாகடிக்கும் தூக்கு மேடைத் தொழிலாளி தன் கடமையைச் செய்வதால் அவன் கல் நெஞ்சக்காரனா? அவன் மனதில் ஈவு இரக்கம், பந்தபாசம் இருக்காதா? தினசரி பல ஆடுகளை வெட்டிக் கூறுபோடும் கசாப்புக் கடைக்காரன் மனிதநேயம் இல்லாதவனா? அப்படித்தான் ராகு- கேதுவையும் முற்றிலும் கொடிய கிரகங்களாக ஒதுக்கிவிடக் கூடாது. கல்லுக்குள் ஈரம். எனவே ரிஷப ராசிக்கு ராகு- கேது பெயர்ச்சி பெரும்பாலும் நல்ல பலன்களையே செய்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தப் போவது நிச்சயம்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
ரிஷப ராசிக்கு சூரியன் 4-க்குடையவர். ராகுவும் கேதுவும் சூரியனுக்குப் பகைவர்கள். எனவே ராகு- கேது பெயர்ச்சி ஆரோக்கியத்தைக் கெடுக்கும். கடனைத் தரும். விரயத்தையும் தரும். யோகத்தையும் தரும். லாபத்தையும் தரும். சில காரியங்களில் நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும். திண்டிவனம் அருகில் புதுச்சேரி போகும் பாதையில் திருவக் கரைக்குப் பாதை பிரியும். அங்கு சென்று வழிபடவும். குண்டலினி மாமுனிவர் ஜீவசமாதியில் வேண்டிக்கொண்டால் வேண்டுவது நிறைவேறும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:
ரோகிணி சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் ராகுவுக்கும் கேதுவுக்கும் பகை கிரகம்! எனவே சரீரம்- மனது இரண்டும் உங்களுக்கு எதிர்மறையாக இயங்கும். சிலருக்கு தாயாருக்கு சங்க டமும் சிலருக்கு சரீர உபாதை, குடும்பப் பிரச்சினை உண்டாகும். சிதம்பரம் தில்லை காளியம்மனை ராகு காலத்தில் வழிபடவும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாயின் வீட்டில்தான் ராகு நிற்கிறார். முற்கூறில் சிரமங்களையும் சிக்கல்களையும் கொடுத் தாலும் பிற்கூறில் அதற்கு நிவர்த்தி தேடும் வகையில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பூம்புகார் அருகில் கீழ்பெரும்பள்ளம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள். நன்மை உண்டாகும்.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:34 am

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)


மிதுன ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த ராகு இப்போது 6-ஆம் இடத்துக்கும்; ஜென்ம ராசியிலிருந்த கேது இப்போது 12-ஆம் இடத்துக்கும் மாறி இருக்கிறார்கள்.


ஏற்கெனவே ராகுவும் கேதுவும் இருந்த இடங்கள் சாதகமும் இல்லை; பாதகமும் இல்லை என்று சொன்னாலும், பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்களுக்கு கெடுதல் ஏதும் நடைபெற்றதாகச் சொல்ல முடியாது. மிதுன ராசிக்கு 4-ஆம் இடத்துச் சனி நடந்த காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. அதனால் ராகு- கேது பெயர்ச்சியினால்தான் கெடுதல் ஏற்பட்டது என்று நிர்ணயிக்க முடியாது. ஒருசிலருக்கு சில வகையில் சாதகத்தைச் செய்தாலும் பலவகையில் பாதகத்தையும் செய்தது எனலாம்.


தொழில் துறையில் எதிர்பாராத சிரமங்களும் சிக்கல்களும் ஏற்பட்டு, அதை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கேட்ட இடத்திலும் கை நீட்டிய இடத்திலும் கடன் கிடைத்த காரணத்தால், தயங்காமல் சிந்திக்காமல் யோசிக்காமல் பயப்படாமல் சக்திக்கு மீறிய வகையில் கடன்களை வாங்கிக் குவித்து வியாபாரத்தில் கொட்டி இருக்கலாம். எதிர்பார்த்த அளவு பலனும் லாபமும் கிடைக்காமல் ஏமாற்றமாகி, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதபடி திகைப்பு ஏற்பட்டு அசலுக்கு மேல் வட்டி கூடி விட்டது. இப்போது இதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் விழி பிதுங்க மலைக்கிறவர்கள் பலர்! ராகு- கேது பெயர்ச்சி இதற்குத் தீர்வு ஏற்படுத்தும்.


6-ஆம் இடத்திற்கு வந்திருக்கும் ராகுவும் 12-ஆம் இடத்திற்கு வந்திருக்கிற கேதுவும் அப்படியென்ன பெரிதாக சாதிக்கப் போகிறார்கள் என்று தோன்றும். ராகுவும் கேதுவும் பாவ கிரகங்கள். அவர்களுக்கு 3, 6, 11-ஆம் இடங்கள்தான் யோகம் தரும் இடங்கள். 6-ல் வந்துள்ள ராகு யோகம் செய்வார் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 12-ல் உள்ள கேது எப்படி நன்மை செய்வார் என்ற சந்தேகம் வரலாம்.


12-ஆம் இடம் என்பது கெட்ட இடம்- விரய ஸ்தானம். அதில் பாப கிரகம் எனப்படும் கேது வந்திருப்பதால் அந்த பலனைக் கெடுக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மை உண்டாகும். கெட்ட கிரகம் கெட்ட இடத்தில் வந்தால், மைனஸ் ஷ் மைனஸ் = பிளஸ் என்கிற நியதிப்படி கெடுதல் மறைந்து நல்லது உண்டாகும்.


மிதுன ராசிக்கு 6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம். எதிரி, கடன், நோய் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அதனால் அங்கு அமர்ந்துள்ள ராகு இவற்றை எல்லாம் அழிப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். எதிரி அழிவார்; கடன் அழியும்; நோய் அழியும். அதாவது சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி ஏற்படும்.. அதேபோல 12-ஆம் இடத்துக் கேது இது சம்பந்தமான விரயச் செலவுகளை எல்லாம் விரட்டி அடிப்பார். நோய் இருந்தால்தானே வைத்தியச் செலவு? கடன் இருந்தால்தானே வட்டிச் செலவு? விரோதியும் வில்லங்கமும் இருந்தால்தானே கோர்ட் செலவு? இந்த மூன்றும் இல்லாவிட்டால் விரயச் செலவுக்கு இடம் எது?


மிதுன ராசிக்கு 6-ல் வந்திருக்கும் ராகு 4-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும் 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதேபோல மிதுன ராசிக்கு 12-ல் வந்திருக்கும் கேது 10-ஆம் இடம், 6-ஆம் இடம், 2-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 4-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும் ராகு பார்ப்பதன் பலன் விரயமும் செலவும் ஏற்படும் என்றாலும், பூமி, வீடு, வாகனம், சுகம் சம்பந்தப்பட்ட செலவுகளாக எடுத்துக் கொள்ளலாம். 12-ஆம் இடம் என்பது அயன சயன சுக போக ஸ்தானமாகும். அங்கு கேது இருப்பதால் அந்த வகையிலும் செலவுகள் உண்டாகலாம்.


எந்த சுக போகத்தையும் செலவு செய்யாமல் அனுபவிக்க முடியாது. வடிகட்டின கஞ்சன் எந்த சுகபோக சௌக்கியத்தையும் அனுபவிக்க முடியாது. நல்ல சாப்பாடு வேண்டுமானாலும் ஏ.சி. காரிலோ, ரயிலிலோ போக வேண்டுமானாலும் அதிகமான செலவுகள் செய்துதான் ஆக வேண்டும். சொகுசுப் பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமானால் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். இவை எல்லாமே ஆடம்பரத் தேவைகள் என்றும் அனாவசியச் செலவுகள் என்றும் நினைத்து ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டால் சுகபோகத்தை அனுபவிக்க முடியாது. ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு வாங்கி சமைத்தால் ருசி இருக்காது. பொன்னி அரிசி நாற்பது ரூபாய்க்கு வாங்கினால் ருசி இருக்கும்.


இருப்பவன் சாப்பிடாமல் இருந்தால் விரதம். இல்லாதவன் சாப்பிடாமல் இருந்தால் பட்டினி. சுகபோகங்களைத் தியாகம் செய்தால் மனப்பக்குவம். சுகபோகங்களை அனுபவிக்க வசதி யில்லாதவன் ஆசைப்பட்டால் கடன் வாங்க வேண்டும். அல்லது தப்பு செய்ய வேண்டும். தப்பு செய்தால் பாவம்! பாவத்தின் சம்பளம் தண்டனை! மனப்பக்குவம் இருந்தாலும் மனக் கட்டுபாடு வந்தாலும் ஞானம்! ஞானம் பெற்றவர்களுக்கு மறுபிறவி இல்லை. 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பது ஜோதிட விதி என்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஞானம் பெற்றவர் களுக்குத்தான் மறுபிறவி இல்லை. ஆயிரக்கணக்கான பேராசை களையும், சாகப் போகும் காலத்திலும் பந்தம், பாசம், சொந்தம் என்று சபலப்பட்டு, சாகப் போகிறோமே என்று பயந்து பயந்து சாக மனமில்லாதவர்களுக்கு 12-ல் கேது இருப்பதால் மறுபிறவி இல்லாமல் போகுமா? பிறவிக்குக் காரணம் ஆசை என்றுதானே புத்தர் போன்ற எல்லா மகான்களும் போதிக்கிறார்கள். எனவே, 12-ல் கேதுவும் 12-ஐ ராகு பார்ப்பதும்- அறவழி தர்மச் செலவுகளை பண்ணினால் புண்ணியம் கிடைக்கும். மது, மாது, சூது போன்ற வகையில் அதர்மச் செலவுகளைச் செய்தால் பாவம் வரும் என்பதையே காட்டுகிறது.


8-ஆம் இடத்தை ராகு பார்க்கிறார். 8-ம் இடம் என்பது விபத்து,, வேதனை, இழப்பு, ஏமாற்றம், நஷ்டம், எதிர்பாராத சங்கடம், கௌரவப் பிரச்சினை, ஆயுள், மாரகம் ஆகியவற்றைக் குறிக்குமிடம். அந்த வீட்டை ராகு பார்ப்பதால் அவற்றை அழிப்பார்; ஒழிப்பார். அந்த வீட்டுக்குரிய சனி அதற்கு 9-ல் நின்று ராகுவைப் பார்ப்பதால் மாரக பலனும் செயலற்றுப் போகும் என்பது பலன்! எனவே ராகுவின் பார்வையால் மிதுன ராசியின் 8-ஆம் இடமும், 12-ஆம் இடமும், அந்த இடங்களின் கெடுதல்களும் கெட்டுப் போகும். அதேசமயம் மிதுன ராசிக்கு 4-ஆம் இடத்தை ராகு பார்ப்பதால் சிலருக்கு உடல்நலக் குறைவு, தாய்க்குப் பீடை, வாகனம், வீடு, பூமி சம்பந்தமான இடங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.


ரிஷப கேது மிதுன ராசிக்கு 10-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 10-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தானம். அதற்கு சகாய ஸ்தானத்தில் கேதுவும் பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் இருப்பதால் இந்த ராகு- கேது பெயர்ச்சி தொழில் துறையில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அனுகூலமான பலன்களையும் தரும் என்று நம்பலாம். 10-ஆம் இடமான மீனத்துக்கு 9-ல் ராகுவும், அந்த 10-க்கு 11-ஆம் வீட்டதிபதியான சனி ராகுவைப் பார்ப்பதால், புதிய முயற்சிகள் கை கூடும். படித்துப் பட்டம் பெற்றும் வேலையில்லாமல் தடுமாறியவர்களுக்கு உடனடியாக வேலை யோகம் உண்டாகும். வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டு வேலை அமையவும் இடமுண்டு.

10-க்கு 10-க்குடைய குரு 10-க்கு 2-ல் நின்று 10-க்கு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பொதுவாக தொழில் துறையிலும் உத்தியோகத் துறையிலும் பிரச்சினைகளும் கவலைகளும் ஒருபுறம் இருந்தாலும், சைலன்ஸர் புகையைக் கக்கினாலும் கடாமுடா சத்தம் எழுப்பினாலும் பிரேக் டவுண் ஆகாமல் ஓடும் வாகனம்போல் உங்களுடைய தொழில் தேக்கமில்லாமல் ஓடும். ஆடை, அலங்காரம், ஜவுளி, டெக்ஸ்டைல், பவர்லூம் மில், வேஸ்ட் காட்டன், பைனான்ஸ், ரப்பர், தோல், பிளாஸ்டிக், வாசனைப் பொருட்கள், கேபிள் டிவி, டெலிபோன் பூத், புத்தக வெளியீடு, நர்சரி பள்ளி, டிராவல்ஸ் போன்ற தொழில்களில் ஈடுபாடு உடையவர்களுக்கு மேன்மையும் லாபமும் உண்டாகும். அதாவது, மிதுன ராசிக்கு 10-ஆம் இடமான மீனத்துக்கு 9-ல் ராகுவும், 3-ல் கேதுவும் நிற்பதால் தொழில் வகையில் பாக்கியமும் முன்னேற்றமும் சகாயமும் உதவியும் உண்டாகும்.


ரிஷபத்தில் இருக்கும் கேது மிதுன ராசிக்கு 6-ஆம் இடத்தைப் பார்க்கும் பலனாக மேற்படி தொழில் சம்பந்தமான காரியங்களுக்காகப் புதுக்கடன் வாங்கலாம். நீண்ட காலத் தவணைக் கடன்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு. போட்டி, பொறாமைகளையும் எதிர்ப்பு, இடையூறுகளையும் ஜெயிக்கலாம். அடுத்து ரிஷப கேது மிதுன ராசிக்கு 2-ஆம் இடமான கடக ராசியைப் பார்ப்பதால், பணப்புழக்கும் வரவு செலவும் தாராளமாக அமையும். அதாவது 2-ஆம் இடத்துக்கு 11-ல் கேது இருப்பதால் தன லாபமும் தன வரவும் இருக்கும். ராசிக்கு 12-ல் இருப்பதால் விரயமும் செலவும் இருக்கும். அந்த விரயம் சுப விரயமாக அமையும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டினாலும் அசலைக் கொடுத்தாலும் விரயச் செலவுதான் என்றாலும் அது சுப விரயம் ஆகும்.


சிலர் ஆன்மிகப் பயணம், தீர்த்த யாத்திரை, காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ், ஹரித்துவார், பத்ரிநாத், கேதார்நாத், கைலாயம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய் வருவதும் சுபச் செலவுதான்!


ஒரு பெரிய தொழிலதிபர் கடன் வாங்கி ஒரு மில்லை ஆரம்பித் தார். தொழில் நடத்தி லாபம் அடைந்து அசலையும் வட்டியையும் தவறாமல் செலுத்திக் கடனை அடைத்தார். மறுபடியும் கடன் வாங்கி இன்னொரு மில்லை ஆரம்பித்தார். அந்தக் கடனையும் அடைத்துப் புதிய கடனை வாங்கி வாங்கி வெவ்வேறு புதுப்புது மில்களை ஆரம்பித்தார். இப்படி கடனை வாங்கித் தொழிலைப் பெருக்கி லாபம் பார்த்து எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டார். கடன் வாங்கியதே அவருக்கு யோகம். கடன் வாங்கி சொத்து சுகங்களைப் பெருக்கினார். இப்படி சிலருக்கு கடன் வாங்கித் தொழில் செய்வதும் யோகமாக அமையும்.


இன்னொரு பெரியவர் கடன் வாங்கி ஒரு பஸ் வாங்கினார். அவர் யோகம் ஒரு பஸ் பத்து பஸ்களாகப் பெருகி தினசரி லாபம் சேர்ந்தது. தவணையும் ஓடியடைந்து விட்டது. பஸ் வொர்க் ஷாப், குடியிருப்பு, பங்களா, காலியிடம் வாடகை வருமானம் வரும் அளவு கட்டட யோகம் எல்லாம் வந்து சேர்ந்தது. அவர் காலம் முடியும் வரை தொழிலும் யோகமாக நடந்தது. கடனும் இருந்தது; வட்டியும் ஓடியடைந்தது. திடீரென்று அவர் காலமானதும் பிள்ளைகள் நிர்வாகத்தில் பஸ் கம்பெனி வந்தது. தொழில் "டல்'- வருமானம் "டல்'. கடனை அடைக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பஸ் கம்பெனி மற்றும் சொத்துகளையெல்லாம் விற்றுக் கடன்களை அடைத்துவிட்டு பிள்ளைகள் சம்பளத்துக்கு வேலைக்குப் போய்விட்டார்கள். தகப்பனாருக்கு அமைந்த கடன் யோகம் பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விட்டது. இதுதான் கிரக அமைப்பு!


மிதுன ராசிக்காரர்களுக்கு 4-ல் சனி இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத ஏமாற்றங்களையும் தோல்விகளையும் விரயங்களையும் தந்துவிட்டது. ஒருசிலருக்கு மட்டும் தொழில் மாற்றம், இட மாற்றம், ஊர்மாற்றங்களைத் தந்து புதிய தொழில் முயற்சிகளை ஏற்படுத்தி லாபத்தையும் சேமிப்பையும் கொடுத்த போதிலும், வில்லங்கம், விவகாரம், வழக்கு ஆகியவற்றை சந்திக்க வைத்தது. ஒருசிலருக்கு சம்பாத்தியம், சேமிப்பு இடம், பொருள், கட்டட யோகங்களைக் கொடுத்தாலும், கஷ்டமான காலத்தில் தோளோடு தோளாக இருந்து துணை நின்ற நண்பர்களையும் நல்லவர்களையும் பகையாக்கிப் பிரித்து விட்டது. போலிஸில் புகார் செய்யும் அளவு நட்பு முறிந்து விட்டது. ஒரு சிலரை கூட்டு முயற்சி தொழில் ஸ்தாபனத்தில் இறங்க வைத்து, கூட்டாளிகளுக்குள் பிரிவையும் பிளவையும் ஏற்படுத்திப் பகையாக்கி விட்டது.


குருவும் ராகுவும் கடந்த காலத்தில் நல்ல இடத்தில் சஞ்சரித்தும் எந்த நன்மையும் அனுபவிக்க முடியாமல் அவல நிலைக்கு ஆளாக்கிவிட்டது. இந்த அவல நிலைக்கு ஒரு பரிகாரமாக இந்த ராகு- கேதுப் பெயர்ச்சி உங்களுக்கு இனிய திருப்பத்தை உண்டு பண்ணுவது நிச்சயம். குறிப்பாக ராகு தசையும் கேது தசையும் அல்லது ராகு புக்தியோ, கேது புக்தியோ நடப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் அமையும்.


4-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகுவும் 4-ஆம் இடத்துக்கு திரிகோணத்தில் நிற்கும் கேதுவும் மிதுன ராசிக்காரர்களுக்கு பூமி, வீடு, வாகன யோகங்களையும் திருமணம், வாரிசு, பதவி உயர்வு, புதிய தொழில், சம்பாத்தியம் ஆகியவற்றையும் தருவது உறுதி. 4-ஆம் இடத்து சனியால் பிணி, பீடையால் உடல் நலிவுற்றவர்களுக்கும் இனி ராகு- கேது பெயர்ச்சியினாலும் பூரண சுகமும் வளமும் நலமும் உண்டாகும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
மிருசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய்க்கு ராகு- கேது நட்புகிரகங்கள். பெயர்ச்சியின்போது செவ்வாய் ஆட்சிபெற்று ராகுவைப் பார்க்கிறார். கேதுவுக்கு 12-ல் செவ்வாயும் குருவும் மறைவதோடு ராகுவுக்கும் 6-ல் செவ்வாய் மறைகிறார். கடன்கள், வைத்தியச்செலவு, நோய்க் கவலை, போட்டி பொறாமைகளை ராகு- கேது பெயர்ச்சி உருவாக்கினாலும், குரு சம்பந்தம் பெறுவதால் அவற்றை எதிர்கொண்டு சமாளித்து எதிர்நீச்சல் போடலாம். போட்டி என்பது இல்லாவிட்டால் நீங்கள் சாதாரணமான வராகவோ சாமான்யராகவோ ஆகிவிடுவீர்கள். கரிக்கட்டைக்கு பட்டை தீட்டமாட்டார்கள். வைரத்துக்குத்தான் பட்டை தீட்டுவார்கள். பட்டை தீட்டத் தீட்டத்தான் பளபளப்பு ஏற்பட்டு ஜொலிக்கும். அதுபோல ராகுவும் கேதுவும் உங்கள் ஆற்றலைப் பிரகாசிக்கச் செய்ய ஆரம்பத்தில் சிறுசிறு சோதனைகளைத் தந்தாலும் உங்களை சாதனையாளராக மாற்றிவிடுவார்கள். பூம்புகார் அருகில் கீழ்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்) சென்று பிரார்த்தனை செய்யவும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:
திருவாதிரை- ராகுவின் நட்சத்திரம். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கை, தொழில், பொருளாதாரம் எல்லாவற்றிலும் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். கடன் நிவர்த்தி, சத்ரு ஜெயம், புதியதொழில் முயற்சி, சுபவிரயம், ஆன்மிகப் பயணம், மங்களச் செலவுகள் ஆகிய பலன்களைச் செய்வார்கள். நல்ல காரியங்களுக்காக திருமணம், வீடு, மனை வாங்க, நகை வாங்க, சுபக்கடன் வாங்கும் யோகமும் அமையும். திருநெல்வேலி அருகில் வள்ளியூரில் இருந்து ராதாபுரம் வழி விஜயாபதிக்குப் போகவும்- அங்கு விசுவாமித்திரர் கோவில் இருக்கிறது. விசுவாமித்திரர் தவம் செய்த இடம். கடற்கரையோரம் தில்லைக் காளியம்மன் கோவிலும் சிவன் கோவிலும் இருக்கிறது. ஒவ்வொரு மாதம் பூச நட்சத்திரத் தன்று சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கும் அங்கு வழிபடவும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் நல்ல பலன்களையே செய்யும். ராகுவுக்கு குரு 6 ஷ் 8 ஆகவும், கேதுவுக்கு 2, 12- ஆகவும் இருப்பதால் நல்ல காரியங்களுக்காக கடனும் வாங்க லாம். சுபக்கடன்- சுபச்செலவு. சிலர் வீடு மனை மாறவும் அல்லது தொழில் மாற்றம் ஏற்படவும் அல்லது வேலை உத்தியோகத்ததில் இடப்பெயர்ச்சி ஏற்படவும் இடமுண்டு. எந்த மாற்றமாக இருந்தாலும் அது முன்னேற்றமான மாற்றமாக அமையும். நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்குச் சென்று வழிபடவும்.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:34 am

கடகம்
(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)


கடக ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த ராகு இப்போது 5-ஆம் இடத்திலும்; 12-ல் இருந்த கேது இப்போது 11-ஆம் இடத்திலும் மாறியிருக்கிறார்கள். பொதுவாக ராகு- கேது ஏற்கெனவே இருந்த இடங்கள் யோகமான இடங்கள்தான். அதற்காக இப்போது மாறியுள்ள இடங்கள் யோகமான இடமில்லை என்று அர்த்தமல்ல! இவையும் நல்ல இடங்கள்தான். குறிப்பாக ராகு மாறியுள்ள இடத்தைவிட கேது மாறியுள்ள இடம் மிகமிக யோகமுள்ள இடம்!


ராகு - கேதுவுக்கு 3, 6, 11-ஆம் இடங்களும், 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களும் யோகம் தரும் இடங்கள். இதில் ராகு ஏற்கெனவே இருந்த 6-ஆம் இடத்தைவிட இப்போது மாறியுள்ள 5-ஆம் இடம் மிகச் சிறப்புடைய இடம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பாதகம் பண்ணாது. அதுபோல கேது ஏற்கெனவே இருந்த 12-ஆம் இடத்தைவிட இப்போது மாறியுள்ள 11-ஆம் இடம் அற்புதமான இடம்! எனவே கடந்த காலத்தில் நடந்த யோகமும் நன்மையும் இந்தப் பெயர்ச்சிக்குப் பின்னும் தொடர்ந்து நடக்கும் என்று நிம்மதி அடையலாம். அதைவிட அதியோக மாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்!


5-ஆம் இடம் என்பது மக்கள், திட்டம், மனது, உபதேசம், தாய்மாமன், பாட்டனார், பூர்வ புண்ணியம் முதலியவற்றைக் குறிக்கும் இடம். அதில் ராகு வந்திருக்கிறார். 10-ல் உள்ள குரு கடக ராசிக்கு 2-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும் பார்ப்பார். ஆகவே பிள்ளைகள் வகையில் நல்ல காரியங்களுக்காக சுபச் செலவுகள் உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், வாரிசு போன்ற பிள்ளைகள் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்காக செலவு செய்யும் யோகமும், பணப் பற்றாக் குறையை சமாளிக்க வெளியில் கடன் வாங்கும் யோகமும் உண்டாகும்.

டிசம்பர் மாதம் சனி துலா ராசிக்கு மாறுவார். அப்போது சனியின் பார்வை ஜென்ம ராசிக்கும் 10-ஆம் இடத்துக்கும் கிடைக்கும். அதனால் பிள்ளைகள், மனைவி வகையில் ஆதரவும் உதவியும் சகாயமும் எதிர்பார்க்கலாம். தனவருவாய் சரளமாகக் காணப்படும். அதனால் உங்கள் திட்டங்கள் நிறைவேறும்; காரியங்கள் கைகூடும். ராகு விருச்சிகத்தில் இருக்கும் இக்காலத்திலேயே 2012-ல் குரு ரிஷப ராசிக்கு மாறுவார். அப்போது 5-ஆம் இடமாகிய புத்திர ஸ்தானத்திற்கும், 3-ஆம் இடத்துக்கும், 7-ஆம் இடத்துக்கும் குரு பார்வை கிடைப்பதால் உங்கள் பிள்ளைகளின் தொழில் உயர்வும் சம்பாத்திய பெருக்கமும் உங்களுக்கு தன வருமானமும் பெருகி கை கொடுக்கும்.


ராகு 5-லும் கேது 11-லும் சஞ்சரிப்பது கடக ராசிக்கும் புத்திர ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் அனுகூலமான இடங்களாக அமைவதால் ராகு - கேதுப் பெயர்ச்சி 5-ஆம் இடத்துப் பலன்களை- மக்கள், திட்டம், மனசு, உபதேசம், தாய்மாமன், பாட்டனார், பூர்வ புண்ணியம் ஆகிய பலன்களைக் குறைவில்லாமல் நிறைவாகச் செய்யும் என்பது முடிவு. கடக ராசிக்கு 3-ஆம் இடத்துச் சனியின் கடைசிக் கட்டம் என்றாலும் ராகுவுக்கு லாப ஸ்தானம் பெற்று சனி ராகுவைப் பார்ப்பதால் நற்பலன்களைத் தருவார். பாக்கிசாக்கிகள் வசூலாகி, கொடுக்கல் - வாங்கல், நாணயம் கெடாதபடி சரிக்கட்டி விடலாம். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். ஏற்கெனவே இழந்த இழப்புகளை ஈடுசெய்யலாம்.


ராகுவுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் தொழில் பாதிப்பு அடையாமல் காப்பாற்றிக் கைகொடுத்து 11-ஆம் இடத்துக் கேது துணை நிற்பார். 11-ஆம் இடம் கேதுவுக்கு பலமான இடம்; லாபம் தரும் இடம். ராகுவும் கேதுவும் எப்போதும் சம சப்தமமாகவே இருப்பார்கள். ஒருவரையொருவர் உரிமையோடு பார்த்துக் கொள்வார்கள். அதனால் இருவரில் யாராவது ஒருவர் பலம் பெற்றால்கூட மற்றவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பலக்குறைவு பெற்ற கிரகத்தின் தாக்கத்தைப் போக்கி ஊக்கத்தைக் கொடுத்து விடுவார்.


பொதுவாக 5-ல் ராகு - கேது இருப்பதால் நாக தோஷம் என்றும் புத்திர தோஷம் என்றும் சொல்லப்படும். அது பொது விதிதான். அனுபவரீதியாக ராகு 5-ல் இருப்பவர்களுக்கு ஆண் குழந்தையே பிறந்திருக்கிறது. இது அனுபவப்பூர்வமான உண்மை! சற்று காலதாமதமாக வேண்டுமானால் பிறக்கலாமே தவிர, புத்திர தோஷம் கடுமையாக இருக்காது. புத்திர காரன் குரு ரிஷபத்திற்கு வரும்போது தோஷ நிவர்த்தி! ஜாதகரீதியாக தோஷம் கடுமையாக இருந்தால் வாஞ்சாகல்ப கணபதி ஹோமத்தில் புத்திரப்ராப்தி யோகமும் சந்தான பரமேஸ்வர ஹோமமும் சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும் செய்து தம்பதிகளுக்கு கலச அபிஷேகம் செய்தால் வாரிசு உண்டாகிவிடும்.


11-ல் இருக்கும் கேதுவும் உங்களுடைய தொழில் தொய்வடை யாமலும் தேக்கமாக நின்றுவிடாமலும் காப்பாற்றுவார். தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு தன ஸ்தானத்தில்- 10-க்கு 2-ல் கேது இருப்பதால் தொழில், லாபம், வரவு- செலவு, பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். ஒருசிலருக்கு கடன் அதிகமாகி மாதா மாதம் வட்டிச் செலவே இருபதாயிரம், முப்பதாயிரம் என்று கொடுக்கும் படி இருக்கும். 365 நாட்களும் தொழில் ஓடி வருமானம் வந்து கொண்டிருந்தால்தான் வட்டி வாசியைத் தவறாமல் கட்டி கடனை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இந்தச் சமயத்தில் மின்சார வெட்டு வேறு உங்கள் தொழில் தயாரிப்புகளை திட்டமிட்டபடி நிறைவேற்ற முடியாமல் சோதிக்கலாம். ஆனால் ராகு - கேது பெயர்ச்சி அதற்கு நல்ல தீர்வு ஏற்படுத்தும். அடுத்து மேஷ குரு நல்ல முன்னேற்றமான வகையில் தயாரிப்பும் விற்பனையும் ஏற்படுத்தி வரவு- செலவும் மேன்மையடையும். கடன்களையும் வட்டியையும் அடைத்து நாணயத்தைக் காப்பாற்ற வழி பிறக்கும்.


தொழில் மந்தம்- சிப்பந்திகள் பிரச்சினைகளைச் சந்திக்கிறவர்கள், கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயர் கோவிலில் தத்தாத்ரேயருக்கும் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்துக்கும் அபிஷேகம், பூஜை செய்யலாம். தென்னிந்தியாவில் இந்த ஒரு இடத்தில்தான் கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் இருக்கிறது. அந்தக் கோவில் டிரஸ்டி நாககிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் (04366- 260819) தொடர்பு கொண்டு பூஜை ஏற்பாடுகளைச் செய்யலாம். அடுத்து வாலாஜாப்பேட்டையிலிருந்து சோளிங்கர் போகும் பாதையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கீழ்ப் புதுப்பேட்டையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம் கோவில் இருக்கிறது. அங்கு கார்த்தவீர்யார்ஜுனருக்குக்கென்று தனி உருவச்சிலை இருக்கிறது. உலகிலேயே கார்த்தவீர்யார்ஜுனருக்கு இங்கு மட்டுமே சந்நிதி, சிலை அமைந்திருக்கிறது. அவரை வழிபட்டால் காணாமல்போன பொருட்களைக் கண்டுபிடிக்கலாம். காணாமல் போன மனிதர்களும் திரும்பக் கிடைப்பார்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில், தொழில் நிறுவனத்தில் திருடு போகாது. முரளீதர சுவாமிகள், தொலைபேசி: 04172- 230033- ல் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். நல்ல வேலையாட்களும் அமைவார்கள்!


11-ஆம் இடத்தில் கேது வருவதால் கடல் கடந்து வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு வர்த்தகத் தொடர்பால் வியாபாரிகள் அதிக லாபம் அடையலாம். 11-ஆம் இடம் உபய களஸ்திர யோகத்தையும் குறிக்கும். தாரம் இழந்தவர்களுக்கும் அல்லது தாரம் உள்ளவர்களுக்கும் மறுமணம் ஏற்படலாம். தசா புக்திகள் சாதகமாக அமைந்தால் விதவை களினால் தன லாபம் அல்லது லாட்டரி, ரேஸ், ஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட்டில் எதிர்பாராத லாபம் உண்டாகலாம். சிலருக்கு வெளிநாட்டு லாட்டரிகளிலும் பரிசு கிடைக்கலாம்.


விருச்சிக ராகு கடக ராசிக்கு 3-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும், 7-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ராகு 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சகோதர- சகோதரி வகையில் சகாயங் களையும் உதவிகளையும் நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். ஜாதக ரீதியாக கோளாறு இருந்தால் உடன்பிறந்தோர் வகையில் பிரச்சினைகளையும் சஞ்சலங்களையும் சந்திக்கக் கூடும். தசா புக்திக்கு ஏற்ற பரிகாரங்களைத் தேடிக் கொள்ளவும். ராகு முஸ்லிம் இனத்தவரையும் கேது கிறிஸ்துவரையும் குறிப்பிடும் கிரகங்கள் என்பதால், முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நண்பர்களின் ஆதரவும் உதவியும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம்.


11-ஆம் இடத்தை ராகு பார்ப்பதாலும் அங்கு கேது இருப்பதாலும் ஏற்கெனவே குறிப்பிட்டபடி லாபம், மறுமணம், விதவைத் திருமணம், தொழில் லாபம் உண்டாகும். 7-க்குடைய சனி 7-க்கு 9-ல் இருப்பதால் ஜாதக யோகம் இருந்தால் நல்லபடியாக திருமணம் கைகூடும். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலருக்கு திருமணத் தடை ஏற்படலாம். சிக்கலின்றி சிறப்பாகத் திருமணம் அமைய கந்தர்வராஜ ஹோமமும், மறுமணத்துக்கு புனர்விவாக மந்திரம் சொல்லி ஹோமமும் செய்யலாம்.


ராகு கடக ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணத் தடை ஏற்படும். 7-ல் ராகு இருந்தால் நாக தோஷம். 7-ஐ ராகு பார்த்தால் தாமதத் திருமணம். அதிக வயதாகியும் திருமணம் ஆகாமல் வருந்தும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு ராகு- கேது பெயர்ச்சி திருமணத்தை நடத்தி வைக்கும்! ஜாதகத்தில் 2, 7, 8, 12-ல் சனி, ராகு- கேது இருந்தால் ஆண்களுக்கு 30, 35, 40 வயதில் கூட திருமணமாகாது. அதேபோல பெண்களுக்கும் 30, 35, 40 வயது வரை தள்ளும். இதில் செவ்வாய், சனி சேர்க்கை, சம்பந்தம் ஏற்பட்டுவிட்டால் கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் என்பது விதி! அப்படிப்பட்டவர்களுக்கு ஆண்களாக இருந்தால் கந்தர்வராஜ ஹோமமும், பெண்களாக இருந்தால் பார்வதி சுயம் வரகலா ஹோமமும் செய்ய வேண்டும். சிலர் ஜாதி, சமய சம்பிரதா யங்களுக்கு அப்பாற்பட்ட வகையில்- முறையற்ற வகையில்- மோக வலையில்- காதல் வலையில் சிக்கலாம்! அவர்களுக்கு காமோ கர்ஷண ஹோமம் நடத்தி அபிஷேகம் செய்தால் அதிலிருந்து விடுபடலாம். இவை எல்லாம் எனது குருநாதர் பள்ளத்தூர் குருக்கள் அய்யா சாஸ்திரங்களில் இருந்து கண்டறிந்து, பல ஹோமங்கள் நடத்தி பலன் கண்டு எங்களுக்கு உபதேசித்திருக்கிறார். அதைப் பின்பற்றி காரைக்குடி செஞ்சை நாகநாத சுவாமி கோவிலிலும் பள்ளத்தூர் அருள்நந்தி ஆசிரமத்திலும் ஹோமங்களைச் செய்து வருகிறார்கள்.


ரிஷபத்தில் இருக்கும் கேது 9-ஆம் இடத்தையும், 5-ஆம் இடத்தையும், ஜென்ம ராசியையும் பார்ப்பதால் உங்களுக்கு செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உண்டாகும். ஆன்மிகம், ஆலயத் திருப்பணி, அறக்கட்டளை போன்ற வகையில் பொறுப்புகளும் பதவிகளும் கௌரவமும் உண்டாகும். 5-ஆம் இடமும் 9-ஆம் இடமும் பூர்வ புண்ணிய ஸ்தானம், பக்தி ஸ்தானம், உபதேச ஸ்தானம். சிலருக்கு தீட்சை உபதேசம் கிடைக்கலாம். நித்ய அனுஷ்டான உபதேசம் பெற்று கடைப்பிடிக்கலாம்.


5-ஆம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். அது சம்பந்தமான பலனை முன்னாலேயே தெளிவுபடுத்தி உள்ளோம். குரு ரிஷபத்தில் மாறும்போது வாரிசு இல்லாதவர்கள் ஜாதகரீதியாக அல்லது உடல் ரீதியாக இனி வாரிசுக்கு இடம் இல்லையென்றால் ஸ்வீகாரமாகவோ அல்லது அபிமான புத்திர பாக்கியத்தையோ அடையலாம்.


மொத்தத்தில் ராகு- கேது பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக அமையும்; ஆதரவுமும் ஆதாயமும் கிட்டும். அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும், அப்பா கண்டித்தால் அம்மா அடைக்கலம் தருவதும் மாதிரி ராகுவால் வரும் துன்பங்களைக் கேது துடைப்பார்; கேதுவால் ஏற்படும் கெடுதல்களை ராகு போக்குவார். கடக ராசிக்கு 3-ஆம் இடத்துச் சனியின் கடைசிக் கட்டம். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி, சந்தோஷம், பொருளாதார முன்னேற்றம், தன லாபம், வில்லங்கம், விவகாரங்களில் வெற்றி, செல்வாக்கு, பட்டம், பதவி போன்ற அனுகூலப் பலன்களைக் கொடுத்து, "சனி கொடியவரல்ல; இனியவர்' என்ற பெருமையை நிரூபிப்பார்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி அதி அற்புதமான பலன்களையும் அபரிமிதமான யோகங்களையும் தருவது உறுதி! புனர்பூசம் குருவின் நட்சத்திரம். குரு 9-க்குடையவர் 10-ல் இருப்பதால் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றித் தருவதோடு, இழந்த பதவி, செல்வம், யோகங்களையும் மீட்டுக் கொடுப்பார். இந்தப் பெயர்ச்சி தளர்ச்சியடைந்த தொழிலை வளர்ச்சி அடையச் செய்யும் பெயர்ச்சி. புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையில் பேரையூர் கிராமம் சென்று நாகநாதரை வழிபடவும்.


பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
பூசம் சனியின் நட்சத்திரம். ராகு- கேதுவுக்கு நட்புக் கிரகம். உங்கள் ராசிக்கு 3-ல் சனி இருப்பதால் தைரியம், சகாயம், தன்னம் பிக்கை, சகோதரம், தொழில், வாழ்க்கை, ஜீவித ஸ்தானங்களுக்கு நன்மை செய்வார். எனவே, ராகு- கேது பெயர்ச்சி இவற்றுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து பசுமையும் செழுமையும் ஆக்கும். கும்ப கோணம் அருகில் திருநாகேஸ்வரம் சென்று நாகநாத சுவாமியையும் ராகு பகவானையும் பிரார்த்தனை செய்யவும்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:
ஆயில்யம் புதனுடைய நட்சத்திரம். புதன் 3, 12-க்குடையவர். எனவே, ராகு- கேது பெயர்ச்சி பெரிய அளவில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாவிட்டாலும் சுப விரயங்களை செய்வார்கள். 5, 11-ல் ராகு- கேது அமர்வதாலும் தடைப்பட்டு வந்த திருமணம், வாரிசு, தொழில், சம்பாத்தியம், லாபம் போன்ற கனவுகளை நனவுகளாக்கிக் காப்பாற்றும். நடுக்கடலில் தடுமாறியவருக்கு பிடித்துக் கொள்ள ஆதாரமாக மிதக்கும் ரப்பர் வளையம் கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஆறுதலை ஏற்படுத்தும். சீர்காழியில் உள்ள ராகு- கேது கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடவும்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:35 am




சிம்மம்(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


சிம்ம ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடமாக சிம்ம ராசிக்கு 5-ல் இருந்த ராகு இப்போது 4-ஆம் இடத்துக்கும்; 11-ல் இருந்த கேது இப்போது 10-ஆம் இடத்துக்கும் மாறியிருக்கிறார்கள். ஏற்கெனவே ராகு இருந்த இடம் நல்ல இடம்தான். அதைவிட கேது இருந்த இடம் மிகமிக நல்ல இடம்! இருந்தாலும் மேற்கண்ட நல்ல இடங்களில் இருந்த ராகுவும் கேதுவும் நீங்கள் எதிர்பார்த்த அளவு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தந்தார்களா என்பது கேள்விக்குரிய சமாச்சாரம்தான்!


மிகமிகத் திருப்தியாக பரீட்சை எழுதிய மாணவன்- "நூற்றுக்கு தொண்ணூறு மார்க் வாங்கி தேர்வு பெறுவேன்' என்று மார் தட்டியவனுக்கு நூற்றுக்கு அறுபது மார்க் கிடைத்தால் எப்படியிருக்கும்? பாஸ் செய்து விட்டாலும் மெரிட் இல்லாமல் போயிற்றே என்ற ஏக்கம் இருக்குமல்லவா? இதற்கு என்ன காரணம்? பரீட்சைத் தாள்களைத் திருத்திய வாத்தியார் கவனக் குறைவாகவோ அல்லது மனைவி, குடும்பத்தின் மேலிருந்த கோப தாபத்தாலோ மார்க்கை குறைத்துப் போட்டுவிட்டாரா? அல்லது எழுதிய பேப்பர்களில் இரண்டொரு பக்கம் காணாமல் போய்விட்டதா? அல்லது அவசர அவசரமாக விடை எழுதினதால் எழுத்துகள் வாத்தியாருக்கு விளங்காமல் போய்விட்டதா என்றெல்லாம் ஐயப்பாடு எழுவது மாதிரிதான்- நல்ல இடத்து ராகு- கேது உங்களை சந்தேகத்துக்கு ஆளாக்கி விட்டது. அதற்காக வருத்தப்பட வேண்டாம். மறுபடியும் "ரீ கவுன்டிங்' செய்ய பணம் கட்டி பரீட்சைத் தாள்களை மறுபரிசீலனை செய்ய வைத்து எதிர்பார்த்த மாதிரி தொண்ணூறுக்குமேல் வாங்கி "மெரிட்' அடைவதுபோல- கேந்திர ஸ்தானங்களில் வந்துள்ள ராகுவும் கேதுவும் அன்று செய்யத் தவறிய யோகங்களையும் சேர்த்து இனிமேல் செய்துவிடும். உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நெகிழ்ச்சி அடையச் செய்யும்.


ஏற்கெனவே நல்ல இடத்தில் இருந்த ராகுவும் கேதுவும் அந்த நல்ல பலனைச் செய்யத் தவறியதற்குக் காரணம் சிம்ம ராசிக்கு நடந்த ஏழரைச் சனிதான். அதுமட்டுமல்ல; ராகுவுக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 8-ல் மறைந்ததோடு, சனி கேதுவைப் பார்த்ததும் மற்றொரு காரணம். இப்பொழுது பாதச் சனியானாலும் ராகுவுக்கு 11-ல் சனி நின்று ராகுவைப் பார்ப்பதால், ராகுவும் கேதுவும் தங்கள் யோக பலனைத் தவறாமல் செய்வார்கள்.


4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம், சுகம், தாய், கல்வி ஆகியவற்றைக் குறிக்கும் இடம்! அங்கு ராகு நிற்கிறார். அந்த வீட்டுக்குரிய செவ்வாய் ராசிக்கு 9-ல் திரிகோணத்தில் இருக்கிறார். இது மட்டுமல்ல; குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் திரிகோணத்தில் நின்று ராகுவைப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான சுபச் செலவு உண்டாகும். கல்வித் தடை நீங்கும். மேற்படிப்பு யோகம் அமையும். 4-ல் உள்ள ராகு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். உத்தியோக உயர்வும், ஊர் மாற்றமும், இட மாற்றமும் விரும்பிய மாதிரி அமையும். அலங்கார மனை அமையும். அதற்கான நீண்டகாலத் தவணைக் கடனும் கிடைக்கும். சிம்ம ராசிக்கு 6, 7-க்குடைய சனி 2-ல் நின்று 4-ஐப் பார்க்கிறார். பூமி சம்பந்தமாகக் கடன் கிடைக்கும். மனைவி பேரில் தொழில் செய்யவும் உதவி கிடைக்கும். திருமண யோகமும் கூடும். பிள்ளைகள் வகையிலும் அல்லது குடும்பத்துக்காகவும் சுபச் செலவுகள் ஏற்படும். அதற்காகவும் கடன் வாங்கலாம்.


சிம்ம ராசிக்கு 10-ல் கேது இருப்பதால் தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான நல்ல பலன்களும் திட்டங்களும் தொடர்ந்து செயல்படும். குரு மேஷத்தில் இருக்கும் வரை ராகுவுக்கு 6-ல் இருப்பதால் சிற்சில குறுக்கீடுகளும் தடை, தாமதங்களும் ஏற்பட்டாலும், அவை நிரந்தர பாதிப்பாக இருக்காது. குரு ரிஷப ராசிக்கு மாறியதும் சிம்ம ராசியின் 10-ஆம் இடத்திலும் அங்குள்ள கேது சம்பந்தப்படுவதால் தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான தொய்வுகளும் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். அப்போது சிம்ம ராசிக்கு 3-ல் சனி உச்சம் பெறுவதால் போட்டி, பொறாமை ஏற்பட்டாலும் அவை உங்களுக்கு அனுகூலமாக அமைந்துவிடும். மேலும் 6-க்குடைய சனி உச்சம் பெற, குரு 10-ல் அமர்வதால் மனைவி வகையில் அல்லது மனைவி பேரில் கடன்கள் ஏற்படும். வங்கிக் கடன் அல்லது எல்.ஐ.சி. கடன் வாங்கி மனைவி பேரில் சொத்துகள் அல்லது தொழில்களை ஏற்படுத்தலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் சுகமும் ஏற்படுவதோடு, மனைவிபேரில் உள்ள தொழிலில் லாபமும் சேமிப்பும் நன்மையும் அடைந்து கடன்களை அடைக்க வழி வகை ஏற்படும்.


விருச்சிக ராசியில் இருக்கும் ராகு சிம்ம ராசிக்கு 2-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும்; ரிஷப கேது 4-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார்கள்.


அதனால் கடல் கடந்து வெளிநாட்டுக்குப் போகலாம். வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு ஏற்படலாம். உள்ளூரில் பிரபல மானவர்கள் அல்லது லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளில் பதவி பெறும் பிரமுகர்கள், வெளிநாட்டு பாராட்டு விழாவில் கலந்து கொள்ளப் பயணம் போகலாம். ஜாலி டூர் போகலாம். ஆன்மிகப் பயணமும் ஏற்படலாம். இந்துக்கள் பத்ராசலம், பத்ரிநாத், கேதார்நாத், காசி யாத்திரை, மவுண்ட் கைலாஷ் போகலாம். இஸ்லாமியர்கள் ஹஜ் மதினா யாத்திரை போகலாம். கிறிஸ்துவர்கள் போப்பாண்டவர் தரிசனத்திற்குப் போகலாம்.


இப்படிப்பட்ட நிறைவைத் தரும் மங்களதரமான பலன்கள் ஜாதகரீதியாக யோகமான தசா புக்திகள் நடப்பவர்களுக்கு உடனடி யாக நடந்தேறும். எந்த தசையானாலும் சுயபுக்தி நடப்பவர்களுக்கு சில சங்கடங்களும் சஞ்சலங்களும் நடந்து பிறகு நற்பலன் நடக்கும்.


ஆப்பிள் பழத்தை அப்படியே கடித்துச் சாப்பிடலாம். வாழைப் பழத்தை தோலை உரித்துச் சாப்பிட வேண்டும். ஆனால் பலாப் பழத்தை சிரமப்பட்டு கையில் எண்ணெய்யைத் தடவிக் கொண்டு வெளித் தோலை நறுக்கி சுளையைப் பிரித்து கொட்டையை நீக்கி சாப்பிட வேண்டும். அது மாதிரிதான் ராகு- கேது பெயர்ச்சியும் அவரவர் ஜாதக அமைப்பின்படி வேகமாகவோ தாமதமாகவோ பலன் செய்யும்.


6-ஆம் இடத்தை ராகு பார்ப்பதால் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகளை அழிக்கும். ஜாதக தசா புக்திகள் சரியில்லையென்றால் 6-ஆம் பாவம் சிரமம், சிக்கலைத் தரும். நஷ்டம், எதிரி, கடன் ஆகியவற்றால் சஞ்சலப்படவும் நேரும். ஆக, நல்லதும் கெட்டதும் ஒரே இடத்தில் அமைகிறது. கடல் நீர் உப்புக் கரித்தாலும் அதன் கரையில் தோண்டிய ஊற்று நீர் சுவையுடைய தாக மாறுவதுபோல, ராகு- கேது எந்த இடத்துக்கு கெடுதல்களைச் செய்கிறார்களோ அந்த இடத்துக்கு நல்லதையும் செய்வார்கள். நல்ல குணமும் கெட்ட குணமும் ஒரே மனிதனிடம்தான் குடி கொண்டுள்ளது. மனிதன் மிருகமாகவும் மாறலாம்; தெய்வமாகவும் மாறலாம். இந்த மாற்றத்திற்கு கிரகங்களே காரணம்! உதாரணமாக ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும் பொதுவாக கெடுக்கும் என்றாலும் எல்லாரையும் கெடுக்காது. ஒருசிலரைத் தாழ்வாக் கினாலும் பலரை வாழ்விக்கும்.


ரிஷப கேது சிம்ம ராசிக்கு 8-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார். இந்த மூன்று இடங்களுமே கெடுபலன்களை நடத்தும் இடம். ராகு கடன் ஸ்தானத்தைப் பார்ப்பதால் கடன் உருவாகும். அந்தக் கடனை ஒழுங் காக அடைத்து விடமுடியுமா? வாக்கு நாணயத்தைக் காப்பாற்றிவிட முடியுமா என்றெல்லாம் கடனைப் பற்றிய கவலையையும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையையும் 8-ஆம் இடத்தைப் பார்க்கும் கேது உண்டாக்குவார்.


கடன் கொடுத்தவர்கள் கல்யாணப் பத்திரிகை கொடுக்க உங்களைத் தேடி வந்தாலும் கடனைக் கேட்கத்தான் வருகிறார் களோ என்று மனதுக்குள் பயம் உண்டாகும். ஆனால் வந்தவரோ கடனைக் கேட்டு எந்தப் பேச்சையும் கிளப்பாமல் கல்யாணத்துக்கு அவசியம் வரவேண்டும் என்று அழைத்துவிட்டுப் போய்விடுவார். கடன் வாங்கிவிட்ட பாவத்துக்காக அந்தக் கல்யாணத்தை தவிர்க்க முடியாமல் பெரிய தொகையை "மொய்' எழுதி வந்தால் அது விரயம். (12-ஆம் இடத்தையும் கேது பார்த்த பலன்.)


4-ஆம் இடத்தைப் பார்த்த கேது தாய்க்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். அல்லது தாயாரின் உடல்நலத்தைப் பாதிக்கலாம். மாணவர்களாக இருந்தால் கல்வியில் தடையை உருவாக்கலாம். வாகன சம்பந்தமாக செலவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் அங்கு ராகு நின்று கேதுவைப் பார்ப்பதால் கேதுவின் வேகத்தையும் கெடுதலையையும் மட்டுப்படுத்தலாம். அப்போதும் 5-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதால் மேற்கண்ட கெடு பலன்களின் வேகம் தணியும்.


பொதுவாக 4-ல் ராகுவோ கேதுவோ இருந்தால் எவ்வளவு உண்மையாகவும் விசுவாசமாகவும் கவனித்தாலும் பெற்ற தாயிடம் சர்டிபிகேட் வாங்க முடியாது. தாயாரைத் திருப்திப்படுத்தவும் முடியாது. அதிலும் அந்த அம்மாவுக்கு பெண் குழந்தைகள் இருந்து விட்டால் போதும்; மகனைவிட மகள்கள் மீதுதான் பாசம் அதிகம் வரும். சமயத்தில் மகனிடம் பணத்தை வாங்கி மகளுக்கு ரகசியமாக கொடுப்பார். அதை நீங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் "கூடப் பிறந்தவர்கள்தானே அனுபவிக்கிறார்கள்; போகட்டும்' என்று பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

சிம்ம ராசிக்கு 3-ஆம் இடமும், 11-ஆம் இடமும் சகோதர ஸ்தானம். 3-ஆம் இடம் இளைய பிறப்புகள்; 11-ஆம் இடம் மூத்த பிறப்புகள். 3-க்கு குரு பார்வையும் 11-க்கு சனி பார்வையும் இருப்பதால் உடன் பிறப்புகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி ஏற்படாது. எரிகிற வீட்டில் பிடுங்கினதே ஆதாயம் என்றுதான் நினைப்பார்கள். அதையும் நீங்கள் பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளுங்கள். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. இனியொரு பிறப்பு இவர்களோடு பிறக்கப் போகிறீர்களா? எனது அனுபவத்தில் பங்காளித் துரோகம் செய்து சண்டைபோட்டு சொத்து சுகத்தோடு போனவர்கள் யாருமே கடைசி வரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்ததில்லை. அதேபோல பங்காளிகளுக்கு விட்டுக் கொடுத்தவர்கள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பிற்காலத்தில் அதைவிட உயர்ந்த நிலையில் மனைவி, மக்கள், மருமகன், மருமகள், பேரன், பேத்திமாரோடு சந்தோஷமாக இருக்கிறார்கள். இதைத்தான் முன்னோர்கள் "விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுப்பதில்லை' என்று சொன்னார்கள்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு:
மகம் கேதுவின் நட்சத்திரம். கேது 10-ல் இருப்பதால் தொழில் மேன்மை, பதவி உயர்வு, கல்வி மேன்மை, பூமி, வீடு, வாகன யோகம், தேக சுகம், பங்காளி- தாயாதி உறவு ஆகிய நன்மைகளைத் தருவார். ராகு- கேது பெயர்ச்சி அற்புத பலன்களைச் செய்யும். சீர்காழியில் கடை வீதியில் உள்ள ராகு- கேது கோவிலுக்குச் சென்று வழிபடவும்.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு:
பூரம் சுக்கிரனுடைய நட்சத்திரம். ராகுவுக்கும் கேதுவுக்கும் சுக்கிரன் நட்பு கிரகம். உங்கள் ராசிக்கு 3, 10-க்குடையவர். எனவே ராகு- கேது பெயர்ச்சி ஆரம்பத்தில் சில சங்கடங்களையும் சஞ்சலங் களையும் தந்தாலும் முடிவில் லாபத்தையும் வெற்றியையும் தரும். திண்டுக்கல்லில் அபிராமி கோவிலிலும் அகஸ்திய விநாயகர் கோவிலிலும் வழிபாடு செய்வதால் ராகு- கேதுவால் ஏற்படும் கெடுதல்கள் விலகும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
உத்திரம் சூரியனின் நட்சத்திரம். சூரியனுக்கு ராகு- கேது பகை கிரகம். அத்துடன் சிம்ம ராசிக்கு 4, 10-ல் உள்ள ராகு- கேது நல்லதாகவும் இருக்கும்; கெடுதலாகவும் இருக்கும். ஆனால் கெடுதல் 40 சதவிகிதம்; நல்லது 60 சதவிகிதம் எனப் பலன் செய்யும். தஞ்சை அருகில் பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வர சுவாமியை வழிபடவும். ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபட்டால் சிறப்பு.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:35 am

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், சித்திரை 2-ஆம் பாதம் வரை)


கன்னி ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு 4-ல் இருந்த ராகு இப்போது 3-ஆம் இடத்துக்கும்; 10-ல் இருந்த கேது இப்போது 9-ஆம் இடத்துக்கும் மாறி இருக்கிறார்கள். ஏற்கெனவே ராகுவும் கேதுவும் மாறி இருந்த இடங்கள்- கேந்திர ஸ்தானங்கள் நல்ல இடங்கள்தான்! இப்போது மாறியிருக்கும் இடங்களும் நல்ல இடங்கள்தான். அதிலும் கேதுவைவிட ராகு மாறியுள்ள 3-ஆம் இடம் சூப்பரோ சூப்பரான இடம். 3, 6, 11-ஆம் இடங்கள்தான் ராகு- கேது, சனி ஆகியோருக்கு யோகமான இடங்கள். அதேபோல கேதுவும் திரிகோண ஸ்தானத்தில் மாறியிருப்பது பரவாயில்லை.


"மூன்று ஆறு பதினொன்றில் ராகு- கேது முகம் மலர்ந்து இருக்கு மானால் ஆன்றோர்கள் சகாயம் உண்டாம்; அதிகார உத்தியோகம் உண்டாம்; சான்றோரும் சிநேகமாவர். சகல சம்பத்து செல்வம் தோன்றியே மன மகிழ்ந்து சுகமுடன் ஜீவிப்பாரே' என்பது பாடல்.


இதன்படி ராகு மூன்றில் அமர்ந்து உங்களுக்கு நன்மை செய்வார் என்பது உண்மைதான்! ஆனால் கேது 9-ல் பாக்கிய ஸ்தானத்தில் வந்திருப்பவர் எப்படி நன்மை செய்வார் என்று சந்தேகம் வரலாம்! கேது ஞானகாரகன். 9-ஆம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். பாக்கிய ஸ்தானம். தெய்வீகம், ஆன்மிகம், வழிபாடு, தியானம், மந்திர உபதேசம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு ஞானகாரகனும் ஆன்மிக காரகனுமான கேது நிற்கும்போது தெய்வ அனுகூலம் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதில் என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும்? குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருந்தால் என்ன குறை ஏற்படும்? "குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' என்று பாடிய மாதிரி குறையே வராதே! மேலும் அந்த 9-ஆம் இடத்தையும் மோட்ச காரகன் ராகுவும் பார்க்கிறாரே! எல்லாம் நிறைதான்.


3-ஆம் இடம் சகோதர, தைரிய, சகாய ஸ்தானம். அதனால் உங்கள் கூடப்பிறந்தவர்களும் உற்றார்- உறவினர்களும் ரத்த பந்த சொந்தக்காரர்களும் உங்களைப் புறக்கணித்து ஒதுக்கிய நிலை மாறும்! உங்களை ஓசிச் சோறு என்றும் தண்டச் சோறு என்றும் ஏசியவர்களும் பேசியவர்களும் உங்களைப் போற்றி உபசரிக்கு மளவுக்கு உங்கள் அந்தஸ்து உயரும். மதிப்பு, மரியாதை கூடும். "நமக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறது' என்ற நம்பிக்கை வளரும். மனித வாழ்க்கைக்கு காசும் பணமும் முக்கியம்தான். அதை விட’தன்னம்பிக்கையும் தைரியமும்தான் ரொம்ப ரொம்ப முக்கியம். 2007-ல் எப்போது ஏழரைச் சனி வந்ததோ அப்போது முதல் கடந்த நான்காண்டு காலம் உங்கள் வாழ்க்கையில் அடிமேல் அடி வாங்கி சூடு கண்ட பூனைபோல நம்பிக்கை, தைரியம் எல்லாம் போய் விட்டது. இந்த ராகு- கேது பெயர்ச்சி முதல் மீண்டும் தெம்பும் திடமும் தைரியமும் வந்துவிடும்.


தைரியம் புருஷ லட்சணம் என்பதற்கு ஒரு சிறு உதாரணக் கதை! போஜ மகாராஜன் சமஸ்கிருதத்திலும், கலை, கவித்திறன் எல்லா வற்றிலும் மிகச் சிறந்தவன். காளிதாசருக்கு நெருக்கமான நண்பன். அவன் தினசரி அஷ்டலட்சுமி பூஜையை ஆசாரமாக அனுஷ்டித் தவன். ஒரு காலகட்டத்தில் அவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிக் கிறது. ஏழரைச் சனி பிடிக்கப் போகிறது. அதனால் அவனை விட்டு செல்வம், யோகம் எல்லாம் விலகப் போகும் சூழ்நிலை. அதனால் போஜன் பூஜை செய்யும்போது ஆதிலட்சுமி தோன்றி, "உன்னைவிட்டு நாங்கள் வெளியேறி விலகிப்போகும் நேரம் வந்துவிட்டது. ஆனாலும் பல காலமாக ஆத்மார்த்தமாக எங்களைப் பூஜை செய்து மகிழ்வித்த காரணத்தால், எங்கள் எட்டு லட்சுமிகளில் ஒரு லட்சுமியை மட்டும் உன்னிடம் விட்டுச் செல்ல விரும்புகிறோம். எந்த லட்சுமி வேண்டுமோ கேள்' என்று லட்சுமி சொல்ல, அதற்கு, "எந்த லட்சுமி போனாலும் பரவாயில்லை. தைரிய லட்சுமி மட்டும் என்னைவிட்டு நீங்காமல் இருந்தால் போதும்' என்று கேட்டுக் கொண்டான்.

மறுநாள் போஜன் பூஜைக்குப் போனபோது அங்கே எட்டு லட்சுமிகளும் இருந்தார்கள். போஜனுக்கு புதிராகிவிட்டது. அப்போது ஆதிலட்சுமி தோன்றி, "எங்கள் எட்டு லட்சுமிகளுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. தைரிய லட்சுமி எங்கே இருக்கிறாளோ அங்கே மற்ற ஏழு பேரும் அவளுக்குத் துணையாக இருப்பதாக ஒரு உடன்பாடு! நீ அந்த தைரிய லட்சுமியை இருக்க வேண்டும் என்று கேட்டு விட்டதால் மற்றவர்களும் அவளுக்குத் துணையாக உன்னிடத்தே வாசம் செய்வோம்!' என்று விளக்கினாள். தைரிய லட்சுமி இருந்தால் போதும்- தனலட்சுமி, தான்யலட்சுமி, விஜய லட்சுமி, சந்தானலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி போன்ற அஷ்ட லட்சுமிகளும் நித்யவாசமாக நீங்காமல் நிலைபெற்று விடுவார்கள். எனவே தைரியம்தான் உங்களின் முதலீடு. அதை ராகு பகவான் தருவார்.


பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் கேதுவும் உங்களை பக்தி மார்க்கத்தில்- ஆன்மிகப் பாதையில் நெறி தவறாமல் வழி நடத்தி குருவருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்படி செய்வார். விருச்சிக ராசியில் இருக்கும் ராகு கன்னி ராசியையும் (ஜென்ம ராசியையும்), 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்தையும், 5-ஆம் இடம் புத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். அதேபோல ரிஷபத்தில் இருக்கும் கேதுவும் கன்னி ராசிக்கு 7-ஆம் இடம் மனைவி ஸ்தானத்தையும், 3-ஆம் இடம் தைரிய ஸ்தானத்தையும், 11-ஆம் இடம் லாப ஸ்தானத்தையும் பார்க்கக்கூடும்.


ராகு 9-ஆம் இடத்தைப் பார்க்கும் பலனையும் 9-ல் கேது நிற்கும் பலனையும் முதலிலேயே விளக்கினோம். 5-ஆம் இடம் புத்திர ஸ்தானத்தை ராகு பார்க்கிறார். அந்த இடத்துக்குரிய சனி ராகுவுக்கு 11-ல் இருக்கிறார்; ராகுவைப் பார்க்கிறார். பிள்ளைகள் வகையில் பிரச்சினைகளையும் சஞ்சலங்களையும் விரயச் செலவுகளையும் சந்திக்க நேரும். பிள்ளைகளுக்கு இன்னும் கல்யாணம் காட்சி செய்ய முடியவில்லையே என்ற கவலை! கட்டிக் கொடுத்த பிள்ளைகள் வகையில் குடும்பத்தில் தொல்லைகளும் மகிழ்ச்சிக் குறைவான நிகழ்ச்சிகளும் நடப்பதால் கவலை! ஒருசிலருக்கு தன் இஷ்டத்துக்கு மாற்று இனத்துப் பையனோடு மகள் ஓடிப் போய்விட்ட துக்கம் அல்லது வேற்று ஜாதிப் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற பிடிவாதம்- அதனால் கௌரவப் பிரச்சினை! இன்னும் சிலருக்கு மகனோ மருமகனோ குடும்பப் பொறுப்பு கொஞ்சமும் இல்லாமல் ஆபீஸ் பணத்தை சூதாடித் தோற்றுத் தலைமறைவாக ஓடிப்போனதால் பிரச்சினை! இப்படிப் பல சங்கடங்களை குரு 8-ல் இருக்கும் வரை சந்திக்கலாம்.


அதன்பிறகு குரு 9-ல் மாறி ஜென்ம ராசியைப் பார்க்கும் காலம் குருவையும் ராகு பார்க்கத் தொடங்குவதால், பிள்ளைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். சகாயம், உதவி, சௌபாக் கியம் உண்டாகும். ஜாதக தசா புக்திகள் மோசமாக இருந்தால் வாக்குவாதமும் பகையும் உருவாகலாம். 5-க்குடைய சனி 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் இந்தப் பலன். அதற்காக பிள்ளையை விட்டுக் கொடுத்துவிட முடியுமா? நீரடித்து நீர் விலகாது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமல்லவா?


புத்திர காரகன் குரு 8-ல் இருக்கும் காலம் புத்திர ஸ்தானாதிபதி சனியும் 6-8-ஆக இருப்பார்கள். அதனால் பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு சஞ்சலம், சங்கடம், பகையைக் கொடுத்தாலும் சனி துலாத்துக்கு மாறும் காலம், குருவும் சனியும் பார்த்துக் கொள் வதால் அந்த வருத்தமும் பகையும் மாறிவிடும்.


ஒரு பெண் வேற்றுச் சாதிப் பையனை விரும்பினாள். பெற்றோ ருக்கு அது கௌரவப் பிரச்சினை. கண்டிப்பாக அவனை நினைக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டார்கள். அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறி அவனையே திருமணம் செய்து கொண்டாள். மகள் இறந்துவிட்டாள் என்று பெற்றோரும் தலைமுழுகி விட்டார்கள். மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஒருநாள் அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக பிறந்த வீட்டுக்கு வந்து, "மாமனாரும் மாமியாரும் ஒதுக்கி விட்டார்கள். நீங்களும் ஒதுக்கி விட்டீர்கள். ஒரு அனாதைப் பெண்ணுக்கு ஆதரவு கொடுப்பதாக நினைத்து பிரசவத்தை மட்டுமாவது கூடஇருந்து கவனித்துக் கொள்ளுங்கள்' என்று தாயிடம் மன்றாடினாள். பெத்த மனம் பித்து- தாயின் மனம் இரங்கிவிட்டது.

தந்தை மட்டும் போகாமல்- பார்க்காமல் வீராப்பாக இருந்துவிட்டார். அழகான பேரன் பிறந்ததும் அவர் மனமும் மாறிவிட்டது. பகையும் மாறிவிட்டது. ஏற்றுக்கொண்டார்கள். இதுதான் 5, 8-க்குடையவர்கள் பார்வையின் பலன்! ஜென்ம ராசியை ராகு பார்ப்பதாலும் அடுத்து ரிஷப குருவும் பார்க்கப் போவதால் கடந்த காலத்தில் உங்களைத் தவறாகவும் ஏளனமாகவும் பேசியவர்களும் விமர்சனம் செய்தவர்களும் இனிமேல் உங்கள் பெருந்தன்மையை நினைத்துப் போற்றிப் புகழுமளவுக்கு உங்கள் செல்வாக்கு சீரோங்கி விடும். கௌரவப் பதவிகளும் சமுதாயத்தில் வி.ஐ.பி. அந்தஸ்தும் உண்டாகிவிடும்.


ரிஷப ராசியில் நிற்கும் கேது கன்னி ராசிக்கு 7-ஆம் இடத்தையும், 3-ஆம் இடத்தையும். 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 3-ஆம் இடத்துப் பலனை ஏற்கெனவே விவரித்தோம். 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணத் தடை விலகும். ஆண்கள் அல்லது பெண் களுக்கு கல்யாணம் கூடும். பிரிந்து வாழ்ந்த கணவன்- மனைவி இனிமேல் இணைந்து வாழலாம். 7-ஆம் இடத்தை பஞ்சமாதிபதி சனி பார்ப்பதால் மனைவிக்கு வேலை வாய்ப்பும் உத்தியோக வாய்ப்பும் சம்பாத்திய யோகமும் உண்டாகும். ஒருசிலர் மனைவி பேரில் புதிய தொழில் தொடங்கலாம். அல்லது பார்ட்னர்ஷிப்பாக சேர்த்துக் கொள்ளலாம். தொழில் வகைக்காக கடன் வாங்கலாம்.


கன்னி ராசிக்கு 11-ஆம் இடத்தை கேது பார்ப்பதால் லாபகரமான தொழிலில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட்டிங், கேபிடல் இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாம். சகோதர வகையிலும் மனைவி வகையிலும் கூட்டுச் சேர்ந்து தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். அல்லது சகலபாடிகளோடும் மைத்துனர்களோடும் சேர்ந்து புதிய பிஸினஸில் முதலீடு செய்யலாம்.


ஆக, ராகு- கேது பெயர்ச்சி எல்லா வகையிலும் உங்களுக்கு யோகத்தையும் நன்மைகளையும் தரப்போவது உண்மை. உங்களு டைய நீண்டகாலக் கனவுகளையும் திட்டங்களையும் ராகுவும் கேதுவும் நிறைவேற்றித் தருவார்கள் என்பதும் நிச்சயம்! கன்னி ராசிக்கு இப்போது ஏழரைச் சனி நடக்கிறது. இது ஜென்மச் சனி என்றாலும் பொங்கு சனிதான். ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் என்று இந்திர விகாஸ் திட்டத்தில் டெபாசிட் செய்வது மாதிரி கட்டிய பணத்தை வட்டியும் முதலுமாக- இரட்டிப்பு மடங்காகத் திரும்பப் பெறுவதுபோல- விரயச் சனியில் நீங்கள் செய்த முதலீடு போகப்போக பொங்கு சனிக் காலத்தில் வளர்ச்சியடைந்து பல மடங்கு ஆதாயமும் லாபமும் தரும். மீனத்தில் குரு இருந்த காலம் முதலீட்டுக் காலம்! இப்போது குரு மேஷத்துக்கு மாறியதும் தன ஸ்தானத்தைப் பார்க்கும் காலம்; லாபத்தை அனுபவிக்கும் காலம்!

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
உத்திரம் சூரியனுடைய நட்சத்திரம். சூரியனும் ராகு- கேதுவும் பகை கிரகங்கள். ஆனாலும் கன்னி ராசிக்கு விரயாதிபத்தியம் பெற்றவர். எனவே, ராகு- கேது பெயர்ச்சி சில சோதனைகளைத் தந்துதான் பிறகு அனுகூலமான பலன்களைச் செய்வார்கள். சோத னைகளை முறியடிக்க சாதனை அவசியம். உங்கள் விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். அதற்கு உதாரணம் விசுவாமித்திரர்தான். மன்னார்குடி அருகில் பாமினி என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபடவும். ஆதிசேஷன் வந்து வழிபட்ட தலம்!

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:
அஸ்தம் சந்திரனின் நட்சத்திரம். ராகு- கேது பகைவர்கள். ராகு- கேது பெயர்ச்சி தொடர்ந்து உங்களுக்கு சோதனையைத் தந்தாலும், வனவாச காலத்தில் பாண்டவர்களின் பத்தினி பாஞ்சாலி அட்சய பாத்திரத்தை வைத்து எல்லாருக்கும் அன்னம் பரிபாலிப்பு செய்த மாதிரி ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகம் செய்யும். பரமக்குடி அருகில் நயினார் கோவில் சென்று நாகநாத சுவாமியை வழிபடவும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேதுவுக்கு செவ்வாய் நட்பு கிரகம் என்றாலும், செவ்வாய் வீட்டில் ராகு நிற்பதும் கேது பார்ப்பதும் அனுகூலம் என்பதால் ராகு- கேது பெயர்ச்சி சில அவசியமான கடன்களை உருவாக்கி னாலும் தொழில் வளர்ச்சி, சுப முதலீடு போன்ற யோகங்களையும் செய்யும். சுப காரியங்களையும் நடத்தி வைக்கும். மயிலாடுதுறை- பேரளம் அருகில் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலுக்குச் சென்று பன்னிரண்டு நாகர்களுக்கும் பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:36 am

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)


துலா ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த ராகு இப்போது 2-ஆம் இடத்துக்கும்; 9-ல் இருந்த கேது இப்போது 8-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள். ராகுவும் கேதுவும் கடந்த காலத்தில் இருந்த இடங்களைவிட இப்போது மாறுகிற இடங்கள் அவ்வளவு சிறப்பானது என்று கூறமுடியாது.


கடந்த காலத்தில் ராகு நின்ற 3-ஆம் இடம் மிக அற்புதமான ஸ்தானம். கேது நின்ற 9-ஆம் இடம் பரவாயில்லை; கெடுதல் பண்ணாத இடம்தான். துலா ராசிக்கு 12-ல் இருந்த சனிக்கு ராகு- கேது கேந்திரம் பெற்ற காரணத்தால், துலா ராசிக்கு ராகு- கேது கடந்த காலத்தில் மிகப்பெரிய நன்மைகளைச் செய்தார் என்று கூற முடியாது.


ராகு துலா ராசிக்கு 3-ல் நின்று ராசியைப் பார்த்தார்; 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்த்தார்; 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்த்தார்.


கேதுவும் துலா ராசிக்கு 7-ஆம் இடத்தையும், 3-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்த்தார்.


இதில் ராகு நின்ற வீட்டதிபன் குரு ஆட்சி பெற்றும் 6-ல் மறைந்ததால் மனைவி, மக்கள், குடும்பம் எல்லாம் இருந்தும் அவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியையும் உறவையும் பங்குபோட்டுக் கொள்ள முடியாத ஒரு அவல நிலைக்கு ஆளாக்கி விட்டது. குடும்பம் இருந்தும் சிலர் சாமியார் வாழ்க்கையாக தானே சமைத்துச் சாப்பிடும் நிலை. சிலர் பெற்றவர்கள், உடன்பிறப்புகள் இருந்தும் சம்பாத்தியம் இல்லாமையால் மனைவி, மக்களை மாமனார் வீட்டிலேயே வைத்து, அவ்வப்போது கிடைத்த சம்பாத்தியத்தை அங்கு கொண்டுபோய் கொடுத்துவிட்டு பெண்டு பிள்ளைகளைப் பார்த்துவிட்டு வந்தனர். இன்னும் சிலர் குடும்பத்தினர் சமைத்தார்களா? சாப்பிட்டார்களா? நல்லது பொல்லாததை அனுபவித்தார்களா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல்- கவலைப்படாமல் தன் வயிறு நிறைந்தால் போதும் என்று சோறு கண்ட இடம் சொர்க்கம், திண்ணை கண்ட இடம் தூக்கம் என்று நாடோடிகளாக வாழ்ந்தார்கள்.

வேறு சிலர் மொத்தமாகச் சம்பாதிக்க வேண்டும், சம்பாதித்து குடும்பத்துக்குக் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்று பெரிய பெரிய திட்டங்கள் போட்டு- சமயத்தில் முறைகேடான வருமானத்துக்கும் ஆசைப்பட்டு, நல்லவர்களா? கெட்டவர்களா? நாணயமானவர்களா என்றெல்லாம் ஆராயாமல், 24 மணி நேரமும் பிஸியாக “"லோ.... லோ...' என்று கண்டவர்கள் பின்னால் சுற்றி, ஏ.சி. காரில் போவதும், ஸ்டார் ஹோட்டலில் ஓசிச் சாப்பாடு சாப்பிடுவதும், தினசரி ஒரு டிரஸ் மாற்றி வெள்ளையும் சொள்ளையுமாக நாளைக் கடத்தியவர்கள் உண்டு; பொழுதைப் போக்கியவர்கள் உண்டு.


இப்பொழுது ராகுவும் கேதுவும் மாறியுள்ள இடங்கள் சுமாரான இடங்கள்தான். என்றாலும் மற்ற கிரக அமைப்புகளினால் ஓரளவுக்கு உங்களுக்கு நல்லதைச் செய்யும் என்று நம்பலாம். பாப கிரகமான ராகு துலா ராசிக்கு 2-ஆம் இடத்தில் நின்று 8-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, 8-ல் கேது மறைந்து 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். பொதுவாக ராகு - கேதுவுக்கு சொந்த வீடு இல்லை; அவர்கள் நின்ற இடத்துப் பலனைச் செய்வார்கள் என்பது விதி. அவர்களைப் பார்த்த கிரகங்களின் பலனைச் செய்வார்கள் என்பதும் விதி!


ராகுவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 7-ல் நின்று ராகுவைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடம் ஏற்படாது. வாக்கு, தனம், குடும்பம் போன்ற 2-ஆம் பாவத்துக்கும் கேடு கெடுதி வராது. அதேசமயம் சனி 12-ல் நின்று ராகுவைப் பார்ப்பதால் சில வேகத் தடையும் காணப்படலாம்.


8-ஆம் இடம் விபத்து, மாரகம் ஆகியவற்றைக் குறிக்கும் என்பது தெரிந்த சமாச்சாரம். அது 2, 9, 11-க்குரிய சம்பந்தம் பெறும்போது அதிர்ஷ்ட ஸ்தானம் ஆகிவிடும். அ- திருஷ்டம் என்றால் கண் ணுக்குத் தெரியாதது என்று அர்த்தம். விபத்தும் மாரகமும் கண் ணுக்குப் புலப்படாமல் நொடிப் பொழுதில் ஏற்படும் ஒரு சம்பவம். அதேபோல் அதிர்ஷ்டமும் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து விடும். லாட்டரி குலுக்கலில் ஆறு வரிசை எண்கள் இருக்கும். ஐந்து வரிசை எண்கள் கையில் வைத்திருக்கும் லாட்டரி டிக்கெட் எண்கள்போல அமைந்து விடும். கடைசி எண்ணும் அந்த டிக்கெட் எண்ணாக வந்துவிட்டால் முதல் பரிசு ஜாக்பாட் பரிசுதான். அது வேறு எண்ணாகிவிட்டால் ஏமாற்றம்தான். ஆக, கடைசி எண்தான் உங்கள் அதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கும் எண். அது ஒரு செகண்டு தான்.


ஆகவே அட்டம ஸ்தானத்தில் உள்ள கேது உங்கள் அதிர்ஷ் டத்தை நிர்ணயிக்கும். 3, 6-க்குரிய குரு மேஷத்தில் மாறி ராசியைப் பார்க்கும் காலமும் 12-ல் உள்ள சனி ராகுவைப் பார்க்கும் காலமும் அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும் காலம். படிக்கும் மாணவர்களுக்கு மந்தப் போக்கும், மறதியும், ஆர்வக்குறைவும் காணப்பட்டாலும், அடுத்து படித்தவை அனைத்தும் மனதில் நிலைத்து பரீட்சையில் முதலிடம் பெறலாம்.


துலா ராசிக்கு 9-ஆம் இடம் மிதுனம். அதற்கு 6-ல் ராகு மறைவதாலும் 12-ல் கேது மறைவதாலும், ராகு- கேது பெயர்ச்சி தகப்பனார் அல்லது பிதுரார்ஜித சொத்துக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும். விரயம், செலவு அல்லது மாற்றம் ஏற்படலாம். மூன்று தலைமுறைகளாக பாகம் பிரிக்காமல் செயல்பட்டு வந்த கூட்டுக் குடும்பத்தில் இக்காலம் பாகப்பிரிவினைகள் நடந்துவிடும். சனி கன்னியில் இருந்து 9-ஆம் இடத்தைப் பார்க்கும் காலத்திலேயே (2011- டிசம்பருக்குள்) நடந்தேறும் வாய்ப்புகள் உருவாகும்.


ஒரு ஜாதகர் இரண்டு தலைமுறைகளாக பாகம் பிரிக்காத கூட்டுக் குடும்பத்தில் இருந்து, பிசினஸ், விவசாயம், தோட்டம், தோப்பு எல்லாவற்றையும் பாடுபட்டு பரிபாலனம் செய்து, அண்ணன்- தம்பி பிள்ளைகளையெல்லாம் பொதுச் செலவில் படிக்க வைத்து, அக்கா- தங்கைகளையும் லட்சக்கணக்கில் செலவழித்துக் கட்டிக் கொடுத்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே! அவர்களுக்கு கல்யாணம் செய்ய எண்ணும் போது உடன்பிறப்புகள் எல்லாம் சொத்தைப் பிரிக்கும்படி தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பாகம் பிரிக்கும்போது குடும்பத்தில் ஏற்கெனவே செய்த கல்யாணம் போன்ற செலவு களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பங்கு பிரிக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. குடும்பத்துக்காக உழைத்த அந்த ஜாதகருக்கு பங்குப் பணம் மிகக் குறைவாகிவிட்டது. பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்ய வசதியில்லாமல் போய்விட்டது. அதாவது முந்தின கைக்கு பணியாரம் என்பதுபோல நிலைமை ஆகிவிட்டது.


ராகுவும் கேதுவும் 9-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு 6, 12-ல் இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினை களைக் குறிப்பிட்டேன். அதேபோல துலா ராசிக்கு 3-ஆம் இடமான தனுசுவுக்கு ராகு 12-லும் கேது 6-லும் மறைகிறார்கள். ஆகவே உங்களுடைய சகோதர வகையிலும் பிரச்சினைகளைச் சந்திக்க கூடும்.


தகப்பனாரும் அவரது இரண்டு மகன்களும் சேர்ந்து ஒரு தொழிலை சிறிதாக ஆரம்பித்துப் பெரிதாக வளர்ந்துவிட்டது. வீடு, வாகனம் போன்ற வசதிகளை எல்லாம் பெருக்கிக் கொண்டார்கள். வாடகைக்கு இருந்த தொழில் ஸ்தாபன இடத்தையும் சொந்த மாக்கிக் கொண்டார்கள். ஒருநாள் அப்பா காலமாகிவிட்டார். அண்ணனும் தம்பியும் சேர்ந்து தொழில் நடத்தினார்கள். தம்பி, "உடனே பாகத்தைப் பிரித்துவிடுவோம்' என்றார். அண்ணன், "அப்பா இறந்து வருஷம் திரும்புவதற்குள் கடையைப் பிரித்தால் ஊர் உலகம் தப்பாகப் பேசும். வருஷ திதி சாமி கும்பிட்டுப் பிரித்துக் கொள்வோம்' என்று அணை போட்டார். வருஷம் திரும்பியதும் தம்பி மனைவியின் தூண்டுதலால் பிரிவினைப் பேச்சு வளர்ந்து, கடை இடத்தை தம்பியும் டிரேட்மார்க் பெயர் விலாசத்தை அண்ணனும் பிரித்துக் கொண்டார்கள்.


இதுவரை ராகு- கேது நின்ற இடத்துப் பலனைப் பார்த்தோம். இனி பார்வைப் பலனைப் பார்க்கலாம்.
விருச்சிக ராசியில் நிற்கும் ராகு துலா ராசிக்கு 12-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும் பார்க் கிறார். ரிஷப ராசியில் நிற்கும் கேது துலா ராசிக்கு 6-ஆம் இடத்தை யும், 2-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.


12-ஆம் இடத்தை ராகு பார்க்க, 10-ஆம் இடத்தை கேதுவும் பார்ப்பதால் தொழில், புது முயற்சி சம்பந்தமான முதலீட்டு செலவுகளும் அல்லது புது வேலைக்காகவும் அரசு வேலைக்காகவும் செலவுகள் ஏற்படலாம். பூமி, வீடு, வாகன சம்பந்தமான செலவுகளும் வரலாம். சிலருக்கு மனைவி வகையில்- சகோதரி வகையில் ஏற்பட்ட கடன் பாக்கிகளை நீங்கள் பொறுப்பேற்றுக் கட்ட வேண்டிய கட்டாயச் சூழ்நிலையும் உருவாகலாம்.


அதேசமயம் அந்நிய நண்பர்கள், முஸ்லிம் நண்பர்கள் அல்லது கிறிஸ்துவ நண்பர்கள் தொடர்புகளினால் நன்மைகளும் ஆதாயங்களும் சகாயங்களும் பண உதவிகளும் எதிர்பார்க்கலாம்.


ஒரு அன்பருக்கு வியாபாரத்தில் லட்சக்கணக்கில் நஷ்டமடைந்து சிரமப்பட்ட நேரத்தில் ஒரு விதவைப்பெண்ணின் தொடர்பு ஏற்பட்டது. அந்த அம்மாள் தன் தங்க நகை, ரொக்கம் எல்லாவற்றையும் கொடுத்துப் புதிதாகத் தொழிலைச் செய்யுங்கள் என்று தைரியமூட்டினார். அவர் அந்த அம்மாள் பெயரிலேயே ஒரு மிலிட்டரி ஹோட்டல் ஆரம்பித்து, வியாபாரம் ஓஹோ என்று நடந்து இழந்த லட்சங்களைத் திரும்பப் பெற்று வீடு, பங்களா, கார் என்று டாப் வசதி ஆகிவிட்டார்.


பூர்வீகச் சொத்து, கட்டட சம்பந்தமான விவகாரங்களும் ஏற்படலாம். பதட்டப்படாமலும் ஆத்திரப்படாமலும் அடிக்கடி மோதல்களில் இறங்கிவிடாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். ஒரு சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போக நேரலாம். ஜாதக தசா புக்திப் பலன்களையும் அனுசரித்துப் பலனை நிர்ணயிக்க வேண்டும்.


பொதுவாக ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை- பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை- முப்பது வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு திருப்பம் ஏற்படும். எவ்வளவு மோசமான ஜாதகமாக இருந்தாலும் முப்பது வருடங் களுக்குமேல் அந்தக் கஷ்டம் கண்டிப்பாக மாறும். அதனால்தான், "முப்பது வருடங்களுக்கு மேல் சேர்ந்தாற்போல் துன்பப்பட்டவரும் இல்லை; இன்பத்திலேயே திளைத்தவரும் இல்லை' என்பார்கள். ஜென்மாந்திர தரித்திரராக இருந்தாலும் முப்பது வருடங்களுக்கு மேல் எப்படியோ ஒரு யோகம் வரும். புரோ நோட்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும். குடியிருப்பவனுக்கு பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு அனுபோக பாத்தியதை உண்டாகிவிடும். அதுபோல மனிதன் வாழ்க்கையில் முப்பது வருடங்களுக்குப் பிறகு மாற்றம் ஏற்படும். முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாட்டின் நிலை மாறிவிடும். இது காலத்தின் கணிப்பு!


அதுபோல ஸ்திரீ சாபமோ குடும்ப சாபமோ தெய்வக் குற்றமோ -இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் "சாண் ஏற முழம் சறுக்க' என்று ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து போராடிக் கொண்டி ருப்பவர்களுக்கு பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு விமோசனம் உண்டாகும். அதற்கு இந்த ராகு- கேது பெயர்ச்சி உதவும்.


மொத்தத்தில் இந்த ராகு- கேது பெயர்ச்சி துலா ராசிக் காரர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டு குணப்படுத்துமளவு நல்ல திருப்பத்தையும் யோகத்தையும் தரும். "சட்டி சுட்டதடா கை விட்டதடா' என்று கஷ்டங்களையும் கவலைகளையும் விட்டு விலகிவிடலாம்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி தன வருமானம், மன மகிழ்ச்சி, திருமண யோகம், புத்திர யோகம், வாழ்க்கை முன்னேற்றம், குடும்ப சந்தோஷம் ஆகிய பலன்களைச் செய்யும். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் பாதையில் பேரளம் இருக்கிறது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் என்ற கிராமத்தில் லலிதாம்பிகை கோவில் இருக்கிறது. பிராகாரத்தில் பன்னிரண்டு நாகர் சிலைகள் வரிசையாக அமைந்துள்ளன. அதற்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி பரமபத விளையாட்டில் ஏணியில் ஏறுவதும் பிறகு பாம்பு கொத்தி வேகமாகக் கீழே இறங்குவதும் மறுபடியும் உயரத்தில் காயை நகர்த்துவதும்போல தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் எல்லாவற்றிலும் ஏற்ற- தாழ்வுப் பலனைக் கொடுக்கும். பேரளம்- திருமீயச்சூர் அருகில் திருப்பாம் புரம் சென்று சிவனை வழிபடவும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சிப் பலன் அவ்வளவு சிறப்பாக அமையாது. பண வருமானத்திலும் சரி; குடும்ப அமைப்பிலும் சரி- தொட்டது எல்லாம் பிரச்சினைகளாகத்தான் காணப்படும். இருந்தாலும் சமாளித்துவிடலாம். நித்திய கண்டம் பூரண ஆயுசு. வாலாஜா பேட்டை அருகில் சோளிங்கர் போகும் பாதையில் கீழ்ப்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்கியப் பீடம் உள்ளது. ஒரே கல்லில் ராகு- கேது விக்ரகம் அமைந்துள்ளது. அதற்குப் பூஜை செய்து வழிபடலாம்.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:36 am

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)


விருச்சிக ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த ராகு இப்போது ஜென்மத்தில் மாறியிருக்கிறார். 8-ல் நின்ற கேது இப்போது 7-ஆம் இடத்திற்கு மாறியிருக்கிறார்.


கடந்த காலத்தில் தனுசு ராகுவும் மிதுன கேதுவும் உங்களுக்கு மாறாத யோகத்தைச் செய்து இருக்கலாம். அது இப்போதும் தொடருமா என்று சந்தேகம் ஏற்படலாம்!


விருச்சிக ராசி ஜென்ம ராசி! அங்கு ராகு வருகிறார். ரிஷபம் 7-ஆம் இடம். அங்கு கேது வருகிறார். ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்த வீடுகள் இல்லை. சிலர் ராகுவுக்கும் கேதுவுக்கும் ஆட்சி வீடு, உச்ச வீடு, நீச வீடு உண்டு என்று சொல்லுவார்கள். ராகு- கேது நிழல் கிரகம்- சாயா கிரகம். அதற்கு எப்படி சொந்த வீடு அமையும்? நிழல் நிஜமாகுமா? முற்பகலில் கிழக்கே சூரியனைப் பார்த்து நிற்கும்போது நமது நிழல் மேற்கு திசையில் விழும். பிற்பகலில் மேற்கே சூரியனைப் பார்த்து நிற்கும்போது நமது நிழல் கிழக்கு திசையில் விழும். நாம் நிஜம்; நிழல்- பொய் (மாயை); நிலையற்றது. அப்படியிருக்கும்போது ராகு- கேதுவுக்கு சொந்த வீடு, நீச வீடு கற்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத சமாச்சாரம். ஆனால் ராகு- கேதுவுக்கு பகை கிரகம், பகை வீடு உண்டென சொல்லலாம். அவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டுப் பலனை நல்லதாகவும் செய்யலாம்; கெட்டதாகவும் பலன் தரலாம்.


ஜென்ம ராசி என்பது லக்னம் மாதிரி! கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு, புகழ், பெருமை, ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். ஆகவே, அங்கு நிற்கும் ராகு இவற்றை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார் எனலாம். அதேசமயம் ராகுவுக்கு குரு 6, 8 சஷ்டாஷ்டகம் பெறுகிறார். அதனால் வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்த பிறகுதான் சாதனைகளைப் படைக்கும் நிலை உண்டாகும். விருச்சிக ராகு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதுபோல, 7-ஆம் இடம் ரிஷபத்தில் உள்ள கேது ஜென்ம ராசியாகிய விருச்சிக ராசியைப் பார்க்கிறார். பொதுவாக ஜென்ம ராசியிலோ 7-ஆம் இடத்திலோ ராகு- கேது நின்றால் அல்லது பார்த்தால் திருமணத் தடை ஏற்படும் என்பது விதி. அதை நாக தோஷம் என்றும் சொல்லலாம்.

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமைக் குறைவு, உடல்நலக் குறைவு, பிரிவு, பிளவு ஆகிய துர்பலன்கள் ஏற்படும் என்பது விதி. ஆனால் ராகு விருச்சிக ராசிநாதன் செவ்வாயின் உச்ச ராசியாதிபதியான சனியின் பார்வையைப் பெறுவதோடு, சனி, கேது திரிகோணம் என்பதால் பிரச்சினைகளின் முடிவு சுமூகமாகத் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்து குரு ரிஷபத்திற்குப் போகும்போது 7-ஆம் இடத்துக்கும் கேதுவுக்கும் தொடர்பு ஏற்படும். அப்போதும் கேதுவும் சனியும் 6, 8-ஆக இருந்தாலும் சனி உச்சம் என்பதால் பிரச்சினைகள் இருந்தாலும் பிரிவு, பிளவு என்ற அளவிற்குப் பாதகம் வராது. குரு பார்க்கக் கோடி தோஷம் விலகும் என்பதால் ராகுவைப் பார்ப்பதால் நாக தோஷம் விலகும். திருமணத் தடை விலகும். பிரிந்து வாழ்ந்த தம்பதியரும் இணைந்து வாழலாம்.


கேதுவின் பார்வை ஜென்ம ராசிக்கு கிடைப்பதால் எல்லாரும் வணங்கத்தக்க அளவு மதிப்பும் மரியாதையும் கூடும். ஒருசிலரைப் பார்த்தாலே வணங்கத் தோன்றும்; பழகத் தோன்றும். ஒருசிலரைப் பார்த்தால் சம்பந்தம் இல்லாமலே ஆத்திரம் வரும்; எரிச்சல் வரும். ஒருசிலரைப் பார்த்தாலே பயந்து ஒதுங்கிப் போகத்தோன்றும். ஒரு சிலரைப் பார்த்தாலே அனுதாபம் ஏற்படும்; இரக்கம் உண்டாகும். ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். இவை எல்லாம் கிரகங்களின் ஜாலங்கள்.


விருச்சிக ராகு ஜென்ம ராசிக்கு 11-ஆம் இடம் கன்னியையும், 7-ஆம் இடம் ரிஷபத்தையும், 3-ஆம் இடம் மகரத்தையும் பார்க்கிறார். ரிஷப கேது 5-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.


ராகு 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் (அது சகோதர ஸ்தானம்) சகோதர வகையில் சகாயமும் நன்மையும் உண்டாகும். அந்த சகோதர ஸ்தானாதிபதி சனி ராகுவுக்கு 11-ல் நின்று 2011- டிசம்பர் வரை ராகுவைப் பார்ப்பார். அதனால் சகோதர வகையில் நட்பும் நல்லுறவும் உண்டாகும். சிலருக்கு சகோதரர் வகையில் கூட்டுத் தொழில் யோகமும் ஏற்படும். நண்பர்களின் சகாயமும் ஆதரவும் ஏற்படும். குருவும் சனியும் 6, 8-ஆக இருக்கும் காலம் சகோதரர்கள் வகையிலும் நண்பர்கள் வகையிலும் பிரச்சினைகள் ஏற்படலாம். அதைத் தவிர்க்க சத்ரு சம்ஹார ஹோமம் நடத்துவது நல்லது. சிலருக்கு சுபச் செலவாகவும் சிலருக்கு வீண் விரயச் செலவாகவும் அமையும். விருச்சிக ராசிக்கு 11-ஆம் இடமான கன்னிக்கு குரு 6-ல் மறைவதால் உடன்பிறந்தவர்கள் வகையில் கல்வி அல்லது தொழில் அல்லது வேலை சம்பந்தமான விரயச் செலவுகளையும் நீங்கள் சுமக்க நேரலாம்.


நீண்ட நாட்களாக இரண்டு நண்பர்கள் கூட்டுத் தொழில் செய்து வந்தார்கள். ஒரு கூட்டாளியின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அந்தப் பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள். வந்தவர்களுக்கு அந்தப் பெண்ணின் நிறம் குறைவு என்று பிடிக்கவில்லை. அவர்கள் காபிகூட சாப்பிடாமல் வருத்தத்துடன் புறப்பட்டதால், அவர்களை சமாதானப்படுத்த அவருடைய கூட்டாளி தன் வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுவிட்டுப் போகும்படி அழைத்தார். அவருடைய பெண் நல்ல சிவப்பு நிறம். வந்த மாப்பிள்ளை வீட்டார் உங்கள் பெண்ணைக் கொடுங்கள் என்று பூ வைத்துவிட்டார்கள். அதுதான் பிரச்சினை. பெண் பிடிக்காத முதல் கூட்டாளி- பூ வைத்த கூட்டாளியிடம் உடனே பங்கைப் பிரிக்கச் சொல்லி சண்டை போட்டு விட்டார். கூட்டு பிரிந்தது. ஜாதகத்தில் ராசி நாதனும், சகாய, சகோதர ஸ்தானாதி பதியும் ராசிக்கு 10-ல் 6, 8-ஆக அமைந்தால் இப்படி சில பிரச்சினை களினால் தொழில் முடிவு ஏற்படலாம்.


விருச்சிக ராசிக்கு 3-ஆம் இடத்தை ராகு பார்ப்பதால்- அது சகோதர ஸ்தானம் என்பதால் சகோதர வகையில் சகாயமும் நன்மையும் உண்டாகும். அதேசமயம் அந்த வீட்டுக்குரிய சனி சகோதர ஸ்தானத்துக்கு 9-ல் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் விரயங்களும் வரும். சிலசமயம் சுபச் செலவுகளாகவும் சிலசமயம் வீண் விரயச் செலவாகவும் அமையும். சகோதர ஸ்தானமான மகரத்துக்கு 12-ஐ குரு பார்ப்பதால் உடன் பிறந்தவர்கள் வகையில் கல்வி அல்லது தொழில், வேலை சம்பந்தமான விரயச் செலவுகளும் உங்கள் தலையில் விழலாம்.


ராகு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணம் கைகூடும். கணவன்- மனைவிக்குள் தாம்பத்திய உறவு வலுப்படும். மனைவி பெயரில் தொழில் அமையலாம். அல்லது நண்பர்களோடு கூட்டுச் சேர்ந்து புதிய தொழில் தொடங்கலாம். மனைவி வகை உற்றார்- உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். அல்லது அவர்கள் பட்ட கடன்களை நீங்கள் அடைக்க நேரலாம். சிலர் மனைவி வகையில் சொத்துப் பிரச்சினைகள், பாகப் பிரிவினைகள் உருவாகி அதில் நீங்கள் தலையிட்டு காரியங்களைச் செயல்படுத்தலாம்.


ராகு 11-ஆம் இடத்தைப் பார்க்கும் பலனாக லாபம், காரிய ஜெயம், வில்லங்கம் விவகாரத்தில் வெற்றி, அனுகூலம், உபய களஸ்திர யோகம் ஆகிய பலன்களை அனுபவிக்கலாம்.


கேது விருச்சிக ராசிக்கு 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். மனது, திட்டம் ஆகியவற்றைக் குறிக்கும். குரு கேதுவுக்கு 12-லும் 5-ஆம் இடத்திற்கு 2-லும் இருப்பதால் பிள்ளைகள் வகையில் தொல்லைகளும் காரிய தாமதம், கவலை, செலவு போன்ற பலன்களும், குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பிள்ளைகளினால் பெருமையும் பூரிப்பும் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி மேன்மையும் வேலைவாய்ப்பு, முன்னேற்றம் ஆகிய நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். பிள்ளைகளுக்கு நல்ல காரியம் நடக்கும். திருமணம், வாரிசு யோகம் போன்ற நற்பலன்களும் நடக்கும்.


கேது ராசிக்கு 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அது பூர்வ புண்ணிய பாக்கிய ஸ்தானம். ஆன்மிக, தெய்வீக ஸ்தானம். கேது ஆன்மிக ஞான காரகன். 5, 9 என்ற திரிகோண ஸ்தானங்களைப் பார்க்கிறார். எனவே, ஆன்மிகத் தொடர்பு உருவாகும். ஆலய வழிபாடு, தியானப் பயிற்சி, மந்திர உபதேசம், தெய்வ ஸ்தல யாத்திரை, புனிதப் பயணம் ஆகிய பலன்களும் நடக்கும். ஜாதக தசா புக்திகள் யோகமாக அமைந்தால் கோவில் திருப்பணி கமிட்டிப் பொறுப்பு, தக்கார் பதவி, கௌரவப் பதவி, சமூக நலப்பணி ஈடுபாடு, நற்பணி மன்றச் செயல்களில் ஈடுபாடு உண்டாகும். சிலர் ஊனமுற்றோர் நல மறுவாழ்வு அல்லது மூத்த குடிமக்கள் பேரவை, முதியோர் காப்பகம், ஆதரவற்றோர் இல்ல பொறுப்புகளிலும் ஈடுபட்டுச் செயல்படலாம்.


2-ஆம் இடம் தனுசு ராசிநாதன் குரு தன் ராசிக்கு 5-ல் நின்று 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். 10-க்கு 2-ல் சனியும் இருக்கிறார். எனவே தொழில் முயற்சிகள் வெற்றியடையும். பதவி உயர்வும் ஏற்படும். நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் உங்கள் நடவடிக்கை, செயல்திறனால் மேலிடத்தாரின் பாராட்டுக்குப் பாத்திரதாரியாகலாம். மற்றவர்களால் சாதிக்க முடியாத காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உயர்பதவி, ஊதிய உயர்வுடன் விரும்பிய இடப்பெயர்ச்சியும் உருவாகலாம். சிலருக்கு போட்டி, பொறாமைகள் ஏற்பட்டாலும் குரு பார்வை கிடைப்பதால் அவற்றைச் சமாளித்து விடலாம்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
விசாகம் குருவின் நட்சத்திரம். குரு 2, 5-க்குடையவர். அதனால் ராகு- கேது பெயர்ச்சி எதிர்பாராத தன வருமானம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வெளிநாட்டுச் சம்பாத்தியம், தேக ஆரோக்கியம் ஆகிய நன்மைகளைச் செய்யும். சிம்மத்தில் சனி இருந்தபோது மேற்படிப்புக்கான திட்டங்களும் முயற்சிகளும் ஏற்பட்டும் நிறைவேறாமல் போயிருக்கலாம். இப்போது கன்னி ராசியில் இருக்கும் சனி ராகுவைப் பார்ப்பதால் மேற்படிப்பு எண்ணங்கள் கைகூடும். அது பதவி உயர்வுக்கும், ஊதிய உயர்வுக்கும் பயன்படும். திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று ஜோதி நிர்வாண சுவாமியின் ஜீவசமாதியை வழிபடவும். அமாவாசை வழிபாடு சிறப்பு தரும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி இதுவரை உங்களை வாட்டி வதைத்த நோய்த் தொல்லைகளையும் கடன் தொல்லைகளையும் விரட்டியடித்து முழு ஆரோக்கியத்தையும் தாராளமான பண வரவு, செலவுகளையும் உண்டு பண்ணும். புதிய வீடு கிரகப் பிரவேசம் அல்லது மனை யோகம், வாகன யோகம் ஏற்படுத்தும். கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலுக்குச் சென்று கல் கருடனுக்கு ஏழு வாரங்களுக்கு அர்ச்சனை ஏற்பாடு செய்யலாம். மதுரையில் மேலமாசி வீதி இம்மையில் நன்மை தருவார் கோவில் அருகில் உள்ள குபேர பத்ரகாளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் வழிபாடு செய்தால் வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த ராகு- கேது பெயர்ச்சி இதுவரை குடும்பத் தலைவர் என்ற முறையில் சொந்த குடும்பத்திற்கு எந்த கடமை, காரியத்தையும் செய்யாமல் வெந்து நொந்து போனவர்களுக்கு நல்ல வழியமைத்துக் கொடுத்து, மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரின் தேவை களையும் நிறைவேற்றி நிம்மதியடையச் செய்யும். எல்லாரின் பாராட்டையும் பெற கோவை அவினாசி சாலையில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலுக்குச் சென்று வழிபடவும்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:37 am

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)


தனுசு ராசி அன்பர்களே!


இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்த ராகு இப்போது 12-ஆம் இடத்துக்கும்; 7-ஆம் இடத்தில் இருந்த கேது இப்போது 6-ஆம் இடத்துக்கும் மாறியிருக்கிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் நல்ல இடமா? கெட்ட இடமா என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லாத வகையில் 10-ஆம் இடத்து சனி உங்களுக்குப் பிரச்சினைகளையே தந்து கிறங்கடித்துவிட்டது. அதாவது நல்ல இருட்டில் கைவிளக்கு பிரகாசமாகத் தெரியும். பேட்டரி லைட்டும் பளிச்சென்று ஒளிபரப்பும். ஆனால் உச்சிப்பொழுது சூரிய வெளிச்சத்தில் கை விளக்கும் சரி; பேட்டரி லைட் வெளிச்சமும் சரி- எடுபடாது. அது மாதிரி தனுசு ராசிக்கு 2009 முதல் கர்மச் சனி. ராகு- கேது நல்ல இடத்தில் இருந்தும் எந்த நன்மையான பலனும் செய்யாமல் ஏமாற்றி விட்டது.

மிசா சட்டம் அமுலில் இருக்கும்போது மற்ற சாதாரண சட்ட திட்டங்கள் எல்லாம் எடுபடாத மாதிரி- செயல்படாத மாதிரி. ராகு- கேது பாப கிரகங்கள். அவர்கள் பாப ஸ்தானங்களாகிய 12, 6-ஆம் இடங்களில் வந்திருப்பதால் கெட்ட இடத்தில் கெட்ட கிரகங்கள் நன்மையான பலன்களைச் செய்யும் என்ற அடிப்படையில், தனுசு ராசிக்கு ராகு- கேது பெயர்ச்சி நல்ல யோகத்தைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.


தனுசு ராசிக்கு 12-ஆம் இடம் விருச்சிகம் செவ்வாயின் வீடு. அங்கு ராகு வந்திருக்கிறார். அந்த வீட்டுக்குடைய செவ்வாய் ஆட்சியாக குருவுடன் சேர்க்கை!


12-ஆம் இடம் விரய ஸ்தானம் என்பதோடு வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வேலை, வெளியூர் வாசம், இடம் மாற்றம் ஆகியவற்றையும் குறிக்கும். எனவே ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்க்கலாம். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். சிலர் பிறந்த ஊரை விட்டு வேறு ஊர் சென்று புதுத் தொழில் தொடங்கலாம் அல்லது உள்ளூரில் இடம் மாறித் தொழில் செய்யலாம். அல்லது குடியிருப்பு மாறலாம்.


ராகுவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் ராசிநாதன் குருவுடன் சேர்ந்து, குரு தன் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் சுப மங்களச் செலவுகள் உண்டாகும். சடங்கு, திருமணம், புத்திர பாக்கியம், வளைகாப்பு, சீமந்தம், கிரகப் பிரவேசம், வீடு, மனை, வாகனம் வாங்குவது போன்ற வகையில் சுபச் செலவுகள் ஏற்படலாம்.


ஜாதக தசாபுக்திகளில் 6, 8, 12-க்குடைய சம்பந்தம் பெற்ற தசாபுக்திகள் நடந்தால் வீண் விரயம், ஏமாற்றம், குழப்பம், நஷ்டம், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காமல் போவது, தண்டத் தீர்வையான விரயங்கள் உண்டாகும். விரயம் என்பது இரண்டு வகை. ஒன்று விருத்தியடையும் விரயம். அது சுப விரயம். இன்னொன்று திரும்பப் பெற முடியாத விரயம். அது வீண் விரயம். ஒரு இடம் வாங்குகிறோம். பின்னாளில் அதன் "வேல்யூ'- விலை மதிப்பு அதிகமாகிறது என்றால் அதற்காகச் செய்யும் செலவு சுபச் செலவு. ஒரு வியாபாரம் செய்கிறோம். அதனால் லாபம் வருவது சுப விரயம். நஷ்டம் வந்தால் அசுப விரயம்- வீண் விரயம்! கல்யாணம் காட்சியென்று செலவு ஆகிறது. அதனால் தம்பதிகளுக்கு வாரிசு உதயமாகிறது. அதுவும் சுப விரயம். அது இனப் பெருக்கம்! இனப் பெருக்கம், பணப் பெருக்கம் நிகழும் சம்பவங்கள் எல்லாம் சுப விரயங்கள்தான்!


அதேபோல தனுசு ராசிக்கு 6-ல் கேது வந்திருக்கிறார். 6-ஆம் இடம் என்பது எதிரி, கடன், நோய், வைத்தியச் செலவு ஆகியவற்றைக் குறிக்கும் இடம். இந்த இடத்தைச் சுப கிரகம் பார்த்தால் அதை அதிகரிக்கும்; விருத்தி பண்ணும். பாப கிரகம் பார்த்தால் அதை அழிக்கும்; கெடுக்கும்; நாசம் பண்ணும். 6-ஆம் இடத்தில் கேது மட்டுமல்ல; 12-ல் உள்ள ராகுவும் பார்க்கிறார். ராகுவை சனியும் பார்க்கிறார். ஒன்றுக்கு மூன்று பாவ கிரகங்கள் பார்ப்பதால் நிச்சயம் தனுசு ராசிக்காரர்களுக்கு எதிரி, கடன், போட்டி, பொறாமை, நோய், வைத்தியச் செலவு ஆகிய 6-ஆம் இடத்துத் தொல்லைகள் எல்லாம் இல்லாமல் அழிந்துவிடும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம்.


இதில் ராகுவும் கேதுவும் முழு பாப கிரகங்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். சனி பாப கிரகமா? சுப கிரகமா? சனி இயற்கையில் பாப கிரகம்தான் என்றாலும், அவர் 2-க்குடையவர் என்பதால் சுப கிரகமாகவே எடுத்துக்கொள்ளலாம். ராசிநாதனோ அல்லது லக்னநாதனோ பாப கிரகம் ஆனாலும் நீச கிரகம் ஆனாலும் மறைவு பெற்றவராக இருந்தாலும் அவர் நல்லவர்தான்; சுபர்தான்; கெடுக்க மாட்டார். பொதுவாக 3, 6, 11-ஆம் இடங்கள் சனிக்கு நல்ல இடங்கள். யோகம் பண்ணும் இடங்கள். அந்த வகையில் சனி 10-ல் இருந்தாலும் ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதால் உங்களைக் கெடுக்காத வகையில்- பாதிக்காத வகையில் புல்லட் புரூப் கவசம் போலிருந்து காப்பாற்றும் என்று அர்த்தம். மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும். ஆனால் கிளவுஸ் (ரப்பர் கையுறை) போட்டு "எர்த்' பாதுகாப்போடு மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்காது. அது மாதிரி ராசிநாதன் அல்லது லக்னநாதன் நல்ல இடத்தில் இருந்தால், பார்த்தால் அந்த இடத்துப் பலனை வெகு அழுத்தமாக- ஸ்ட்ராங்காகச் செய்யும். கெட்ட இடத்தில் இருந்தால் அந்தக் கெடுதல் அந்த ஜாதகரைப் பாதிக்காமல் காத்து நிற்கும். அதுதான் லக்னாதிபதி அல்லது ராசியாதிபதியின் சிறப்பு!


இன்னும் தெளிவாகச் சொன்னால்- ஒருவழிப் பாதையில் (நோ என்ட்ரியில்) போகும் வண்டிகளை போலீஸ் சார்ஜ் செய்து அபராதம் விதிக்கும். ஆனால் அந்தப் பாதையில் பெரிய போலீஸ் அதிகாரி- ஏ.ஸி., டி.ஸி, கமிஷனர் வண்டி போனால் தண்டிப் பார்களா? கண்டிப்பார்களா? அது மாதிரிதான் லக்னாதிபதியோ ராசியாதிபதியோ எந்த இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும் விதிவிலக்கு! குரு 5-ல் நிற்பதும்- ராசியைப் பார்ப்பதும் சிறப்பு!


இப்போது 2011- டிசம்பர் வரை சனி 10-ல் இருக்கிறார். அதன்பிறகு சனி துலா ராசிக்கு மாறி உச்சம் பெறுவார். இராமாயணத்தில் இராவணன் கூட்டத்தாருக்கும் இராமருக்கும் யுத்தம் நடந்தது. அப்போது இராவணனுக்குத் தம்பி முறை மயில் இராவணன் என்ற அசுரன் ஒரு வரம் வாங்கியிருந்தான். அவன் சிந்தும் ரத்தத் துளியிலிருந்து பல மயில் இராவணன்கள் தோன்றுவார்கள்.


இதனால் அவனைக் கொல்ல முடியவில்லை. பிறகு அவன் உயிரின் சூட்சுமம் தெரிந்து அவனைப் பலி வாங்கியதும் இறந்து போவான். அதுமாதிரி சுப கிரக பார்வையால் பாப கிரகங்களின் கெடுதல்கள் குறையும்.


12-ல் ராகு, 6-ல் கேது நின்ற பலனை இதுவரை பார்த்தோம். இனி அவர்கள் பார்வையின் பலனைக் கவனிப்போம்.


விருச்சிக ராகு தனுசு ராசிக்கு 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்தையும், 6-ஆம் இடம் கடன் ஸ்தானத்தையும், 2-ஆம் இடம் தன ஸ்தானத்தையும் பார்க்கிறார். ரிஷப கேது தனுசு ராசிக்கு 4-ஆம் இடம் சுக ஸ்தானத்தையும், 12-ஆம் இடம் விரய ஸ்தானத்தையும், 8-ஆம் இடம் ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


ராகுவும் கேதுவும் 6-ஆம் இடத்துக்கும் சம்பந்தப்படுவதால் (ராகு 6-ஆம் இடத்தைப் பார்க்கிறார். கேது 6-ல் இருக்கிறார்.) பழைய கடன்கள் அடைபடும்; புதிய கடன்கள் உருவாகும். ஒருவர் வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டைக் கட்டினார். வாங்கிய கடனில் பாதியை அடைத்துவிட்டார். மறுபடியும் புதுலோன் போட்டு மாடியிலும் வீடு கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தை வங்கித் தவணைக்குச் செலுத்தி வந்தார்.


அடுத்து போட்டி, பொறாமைகளையும் அழித்து எதிரிகளே இல்லாமல் போய்விடும். அதேபோல் நோய் நொடிகளும் விலகி வைத்தியச் செலவுகளை வழியனுப்பிவிடலாம். நேற்றுவரை எதிரணிக் கட்சியில் இருந்த எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. இன்று ஆளும் கட்சிக் கூட்டணியில் வந்து ஐக்கியம் ஆவதுபோல உங்களுடைய எதிராளிகளும் தானாகவே வீடு தேடி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். இப்படித்தான் ஒரு அன்பரிடம் அவர் தம்பி காரணம் இல்லாமல் சண்டை போட்டுக்கொண்டு போய்விட்டார். வழியில் எதிர்பட்டாலும் வேறு பாதையில் மாறிப் போய்விடுவார். பத்து வருடங்களுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் அவர் பெண்ணுக்குத் திருமண முயற்சிகளைச் செய்வதற்கு அண்ணனைத் தேடி வந்துவிட்டார். அண்ணனும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு தம்பிப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விட்டார்.


ராகு தனுசு ராசிக்கு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், வாழ்க்கை, வேலை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றமும் யோகமும் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளுக்காக கடன் வாங்கலாம். அது சுபக் கடன். ராகு இருக்கும் இடமும் பார்க்கும் இடமும் கெட்டுப்போகும் என்பதுதானே விதி! அப்படியிருக்க, தொழில், வாழ்க்கை, வேலை எனப்படும் 10-ஆம் இடம் முன்னேற்றம் அடையும் என்று சொல்லுகிறீர்களே என்று கேட்கத் தோன்று கிறதா? 10-ஆம் இடத்துக்கு 3-ல் ராகு நின்று பார்க்கிறார்.

10-ஆம் இடத்தை லக்னமாக வைத்துப் பார்த்தால் அதற்கு 3-ல் உள்ள ராகு நல்லதுதானே செய்ய வேண்டும். 3, 6, 11 ராகுவுக்கு யோகமான இடங்கள்தானே! தனுசுக்கு 12-ல் ராகு இருப்பதால் மாற்றம். அந்த மாற்றம் முன்னேற்றமாக அமையும். இருபது வருடங்களாக ஒருவர் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தார். பிறகு அதில் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு ஒரு ஈவினிங் மட்டன் ஸ்டால் ஆரம்பித்தார். அவர் யோகத்துக்கு நல்ல மாஸ்டரும் அமைந்தார். ரொம்ப ரொம்ப சிறப்பாக வியாபாரமாகி, கண்டக்டர் வேலையில் சம்பாதித்ததை எல்லாம் மட்டன் ஸ்டாலில் சம்பாதித்தார். கடன் வாங்கி வீட்டை வாங்கினார். தவணையை ஒழுங்காகக் கட்டிவிட்டார்.


இன்னொரு அன்பர் ஒரு செய்தித்தாள் நிறுவனத்தில் மேனேஜராக இருந்தார். அங்கு இருந்து கொண்டே சிறு அளவில் மூன்று வட்டிக்கு பணம் கொடுக்கல்- வாங்கல் பண்ணினார். முதலாளிக்கும் மேனேஜருக்கும் கருத்து வேறுபாடு வந்தது. மேனேஜரோ ராஜினாமா பண்ணிவிட்டு கையில் இருந்த பணத்தைக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிவிட்டார். அவர் நல்ல நேரம் தொட்டதெல்லாம் துலங்கி, மண்ணும் பொன்னா யிற்று. இரண்டே வருடங்களில் கோடீஸ்வரர் ஆகிவிட்டார். 10-ஆம் இடம், 2-ஆம் இடம் ஆகியவற்றை ராகு பார்ப்பதால் இப்படி ஒரு அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டாகும்.


ரிஷப கேது- தனுசு ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு 12-ஆம் இடம், 8-ஆம் இடங்களைப் பார்ப்பதால் பூமி, வீடு, மனை, வாகனம் சம்பந்தமான விவகாரங்களும் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப் புண்டு. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் உங்களுக்கும் இடத்துத் தகராறு ஏற்படலாம். போலீஸ் விவகாரம், கோர்ட், கேஸ் என்று அலைச்சல் அதிகமாகலாம். குருவும் கேதுவும் 2, 12-ஆக இருக்கும் வரை இந்தப் பிரச்சினை நீங்காத தலைவலியாக நிம்மதியைக் கெடுக் கலாம். குரு ரிஷபத்துக்கு மாறியதும் இந்த விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.


மேஷ குருவும் கன்னிச் சனியும் 6, 8-ஆக இருந்தாலும் சுபசஷ் டாஷ்டகம் என்பதால் விபரீத ராஜயோகமாகவும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டாகிவிடும். ஆக, ராகு- கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அதி அற்புதமான யோகத்தைச் செய்யும். கடந்த காலத்தில் ஏற்பட்ட அவலங்களையும் துன்பங்களையும் போக்கி ராகு- கேது பெயர்ச்சி உங்கள் கண்ணீரைத் துடைத்துவிட்டு பன்னீர் தெளித்து சந்தனம் பூசி குளிரச் செய்யும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:
மூலம் கேதுவின் நட்சத்திரம். எனவே ராகு- கேது பெயர்ச்சி யோகமான பலன்களையே தரும். சிலசமயம் அனுதாபப்பட்டு நல்லதைச் செய்தாலும் இன்னும் அதிகமாக நல்லது நடந்திருக் கலாம் என்று எண்ணுமளவு மனநிலை இருக்கும். கோவையிலிருந்து அவினாசி போகும் பாதையில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் சென்று வழிபடவும். ஞாயிற்றுக் கிழமை மாலை ராகு கால பூஜை சிறப்பு.

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி எதிர்பார்க்கும் காரியங்களை நடத்தி வைத்து உங்களை சந்தோஷப்படுத்தும். திருமணத் தடை விலகும். ஆண், பெண்களுக்கு மணவாழ்வு கூடும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருச்செந்தூர் போகும் பாதையில் தொலைவில்லி மங்கலம் என்னும் தலம் உள்ளது. அது ராகு- கேது ஸ்தலம். அங்கு சென்று வழிபடவும்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் ராகு- கேதுவுக்கு பகை கிரகம் என்றாலும், இங்கு தற்காலிக நட்புக் கிரகங்களாக மாறிவிடுவதால் ராகு- கேது பெயர்ச்சி யோகப் பெயர்ச்சியாகவே அமையும். திருச்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் பழூர் ரயில்வே கேட் அருகிலுள்ள சிவன் கோவிலில் நவகிரகங்களும் தம்பதி சகிதமாகக் காட்சியளிக்கிறார்கள். அங்கு சென்று வழிபடவும்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by தாமு Mon May 16, 2011 8:38 am

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)


மகர ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த ராகு இப்போது 11-ஆம் இடத்திற்கும்; 6-ல் இருந்த கேது இப்போது 5-ஆம் இடத்திற்கும் மாறியிருக்கிறார்கள்.


கடந்த காலத்தில் 6-ஆம் இடத்தில் இருந்த கேது நல்ல இடத்துப் பலன்களைத் தந்தார் என்பது ஏற்றுக்கொண்ட உண்மை. 12-ஆம் இடத்து ராகு சிலாக்கியம் இல்லை. என்றாலும் 6, 12-க்கு தொடர்புடைய ராகு- கேதுக்கள் ஓரளவு நற்பலனையே செய்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளலாம். கடந்த கால அனுபவத்தில் தொட்டதெல்லாம் செலவு, விட்டதெல்லாம் விரயம் என்ற முறையில் எதைத் தொட்டாலும் செலவுதான். சுண்டைக்காய் கால் பணம் சுமைக் கூலி முக்கால் பணம் என்று வீண் விரயமும் வெட்டிச் செலவும் ஏராளம். சொந்தம், சுற்றம் என்றும் நண்பர் நட்பு என்றும் கைமாற்றுக் கடன் வாங்கிப் போனவர்கள் எல்லாம் திருப்பித் தராத வகையிலும் விரயம், ஏமாற்றம். அதுமட்டுமல்ல; முதலாளிகளை நம்பி சம்பளத்தை மொத்தமாகச் சேர்த்து வைத்து- மொத்தமாக வாங்க ஆசைப்பட்டு, உண்மையாக மாடாய் உழைத்துவிட்டு கடைசியில் முதலாளி மோசம் செய்ய ஏமாளியாய் வெளியேறிய வகையிலும் நஷ்டம், இழப்பு! பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று பேராசைப்பட்டு, தகுதிக்கு மீறிய பள்ளிகளில் சேர்த்து சக்திக்கு மீறிய செலவுகள் செய்துவிட்டு, முடிவில் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்காமல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு குப்பை வேலைக்குப் போன வகையிலும் விரயம்.

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கடன் உடன்பட்டு லஞ்சம் கொடுத்து முடிவில் அரசும் மாறியது; ஆளும் மாறியது. வேலையும் இல்லை; பணமும் இல்லை என்று போனதால் வெளியே சொல்ல வெட்கப்பட்டவர்களும் உண்டு. அதேபோல வெளிநாட்டு வேலைக்குப் போய் ஒரு வாரத்திலேயே திரும்பி வந்தவர்களும் உண்டு. இதெல்லாம் கடந்த கால அனுபவமாக இருந்தாலும், ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும். லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம், உபஜெய ஸ்தானம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் 11-ஆம் இடம் ராகுவுக்கு நற்பலன் தரக்கூடிய இடம். இதை விளக்கும் பாடல்: "ராகு பன்னொன்று மூன்று ஆறாம் இடத்திற் சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாம்; ஆகும் காரியங்களுண்டாம். அன்னதானமுண்டாம். வாகுமறு மணமுண்டாம்; வரத்து மேல் வரத்துண்டாமே' என்றபடி சௌபாக்கியங்களும் உண்டாகும். அதிலும் ராகு தசையோ ராகு புக்தியோ நடந்தால் தவறாமல் யோகம் உண்டு.


5-ஆம் இடத்தில் கேது நிற்பது சுமாரான இடமானாலும் அதுவும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். மகர ராசிக்கு விருச்சிகம் 11-ஆம் இடம்- லாப ஸ்தானம். அதில் ராகு நிற்க, கேது அவரைப் பார்க்கிறார். ராகுவும் கேதுவும் பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு மறுபடி அதே இடத்தில் வந்திருக்கிறார்கள்- பார்த்துக் கொள்கிறார்கள்.


இந்தக் கணக்குப்படி, ஸ்திரீ சாபத்தின் காரணமாகவோ குடும்ப சாப தோஷத்தின் காரணமாகவோ பதினெட்டு வருடங்களாக வாழ்க்கையில் படாதபாடுபட்டு சாண் ஏற முழம் சறுக்க, ஒரு படி முன்னே கால் வைத்து நாலு படி பின்னே இறக்கம் ஏற்பட, எந்த சுகபோகமும் அனுபவிக்க மாட்டாமல் போராடியவர்களுக்கு இந்த ராகு- கேது மிகப்பெரிய திருப்பத்தைக் கொடுக்கும்.


விருச்சிக ராசியில் வந்திருக்கும் ராகு உங்கள் ஜென்ம ராசியைப் பார்க்கிறார்; 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 1, 5, 9 திரிகோண ஸ்தானங்கள். அதேபோல ரிஷப ராசியில் வந்திருக்கும் கேது மகர ராசிக்கு 3-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும், 7-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.


பூர்வ புண்ணியத்தில்- முன்ஜென்மாவில் செய்த பாவங்கள் எல்லாம் விலகி பாப விமோசனமும் சாப விமோசனமும் உண்டாகும். முன்னோர்கள், தாத்தா, பாட்டனார் வகையில் சொத்துகள் கிடைக்கும். பிதுரார்ஜித சொத்துகள் ஏதும் கைக்கு வர அமைப்பில்லையென்றால்- அதற்குச் சமமான அளவு சுயமுயற்சி யால் தேடிப் பெறலாம். ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், தெய்வீகம் போன்ற மார்க்கங்களில் ஈடுபாடும் பெருமையும் உண்டாகும். சிலர் அருள் நிலை பெற்று அருள்வாக்குச் சொல்லலாம்.


செல்வாக்குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். பாராட்டும் கிடைக்கும். வீடு கட்டுவது, ஆசிரமம் அமைப்பது, அறச்சாலை நிறுவுவது, டிரஸ்ட் அமைப்பது, ஆலயத் திருப்பணி செய்வது, குலதெய்வத்துக்குக் கோவில் எழுப்புவது போன்ற புண்ணிய காரியங்களில் இறங்கி பெருமை சேர்க்கலாம். உங்களின் நீண்ட காலக் கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறும்.


ருதுவாகி பதினெட்டு ஆண்டுகளாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கும் 36 வயதுக்கும் மேலான ஆண்களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி திருமணத் தடைகளையும் தோஷங்களையும் போக்கி மணவாழ்க்கையைத் தரும். திருமணம் ஆவதற்காகத் தனி பரிகாரம் எதுவும் தேவைப்படாது. ஏலச் சீட்டு மாதக்குலுக்கலில் எடுக்காமலேயே இருந்துவிட்டால் கடைசிச் சீட்டு (வட்டியும் முதலுமாக) கட்டிய பணத்தைவிட அதிகமாகவே கிடைப்பதுபோல, ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு மணவாழ்வை- மகிழ்ச்சி வாழ்வைத் தரும். அதேபோல திருமணம் ஆகி பதினெட்டு ஆண்டுகளாக புத்திர பாக்கியம் இல்லாமலே ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி யோகத்தை வழங்கும்.


கேது 5-ல் இருப்பதாலும், 7, 11-ஆம் இடங்களைப் பார்ப்பதாலும் ராகுவுக்கு ஆதரவாக திருமணத் தடைகளைப் போக்கி, புத்திர தோஷத்தையும் போக்கி, திருமணம், மக்கட்பேறு ஆகிய பாக்கியங்களைத் தருவார். சகோதர வகையிலும் சஞ்சலத்தை நீக்கி சந்தோஷத்தைத் தருவார்.


ராகுவுக்கு 6-ல், கேதுவுக்கு 12-ல் குரு இருக்கும் வரை ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள் மிகமிக நிதானமாகவும் நல்லது கெட்டதை நிர்ணயிக்காத வகையிலும் அமையும். குரு ரிஷபத்துக்கு மாறியதும் குருவின் சம்பந்தம் கேதுவுக்குக் கிடைப்பதோடு ராகுவுக்கும் கிடைக்கும். அக்காலம் ராகு- கேதுவின் நற்பலன்களைத் திருப்திகரமாக நடத்த தூண்டுகோலாக அமையும்.


திருமணம், புத்திர பாக்கியம், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அற்புதப் பலன்கள் மிக அருமையாகச் செயல்படும். என்றாலும் மகர ராசிநாதன் சனி 2011- டிசம்பர் வரை 9-ல் இருப்பதால் நல்லது நடந்தாலும் முழு மகிழ்ச்சியாக- பூரண திருப்தியாக இருக்காது. அதற்குரிய காரணமும் உங்களுக்கே புரியாது. மிகமிக வேண்டியவரின் கல்யாண வீட்டிற்குப் போனதும், கல்யாண வீட்டுக்காரர் "வாங்க' என்று சொல்லிவிட்டு மற்ற காரியங்களைக் கவனிக்கப் போய்விட்டால் போனவருக்கு என்னவோ மாதிரிதான் இருக்கும். காரில் வந்து இறங்கும் வி.ஐ.பி.க்களை வரவேற்று அழைத்துப்போய் பந்தியில் உட்கார வைத்து உபசரித்தால் மனம் இன்னும் வேதனையடையும்; விரக்தியடையும். கல்யாணத்துக்கு ஏன் வந்தோம் என்றுகூட எண்ணத் தோன்றும். தானாகவே போய் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, வாசலில் மொய் எழுதுகிற வரிடம் மொய்க்கவரை கொடுத்துவிட்டு, போட்டோ எடுப்பதிலும் கலந்துகொள்ளாமல்- "போய் வருகிறேன்' என்று சொல்லிக் கொள்ளாமல் வந்துவிடுவதில்லையா? அப்படி ஒரு விரக்தி!


இதெல்லாம் சனி துலா ராசிக்கு மாறியதும் விலகிவிடும். ராகு பெயர்ச்சியிலிருந்தே தனது நற்பலனை உங்களுக்குச் செய்யலாம். ஆனால் குரு மாறிய பிறகு- குருவின் சம்பந்தம் பெற்ற பிறகே கேது தனது நற்பலனைக் குறைவறக் கொடுத்து குஷிப்படுத்துவார்.


2012-ல் சனி சஷ்டாஷ்டகப் பலனாக சிலருக்கு ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். பெரும்பாலும் அந்த மாற்றம் ஏற்றம் தரும் முன்னேற்றமான மாற்றமாகத்தான் இருக்கும். வாடகை வீட்டில் இருந்து ஒத்தி வீட்டுக்குப் போவதும் மாற்றம்தான். ஒத்தி வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்குப் போவதும் மாற்றம்தான். இது முன்னேற்றமான மாற்றம்! ஆனால் சொந்த வீட்டைக் கடனுக்காக விற்றுவிட்டு வாடகை வீட்டுக்குப் போனால்தான் இறக்கமான மாற்றம்- ஏமாற்றமான மாற்றம்.


மகர ராசிக்கு 5-ஆம் இடத்துக்கும் 9-ஆம் இடத்துக்கும் ராகு பார்வை கிடைப்பதால் பிள்ளைகளின் திருமண வைபவம், சடங்கு, காதணி விழா போன்ற சுபகாரியங்களை முன்னிட்டு இதுவரை நிலவிய பங்காளிப்பகை, மைத்துனர் வருத்தம், சம்பந்திகள் சண்டை எல்லாம் விலகி ஒன்று சேரும் அமைப்பு உருவாகும். உங்கள் தரப்பிலும் எதிர்தரப்பிலும் "ஈகோ' உணர்வு பெரிதாக இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை ஒன்று சேர ஒரு காரணத்தை உருவாக்கிவிடும். பிரிவோம்- சந்திப்போம் என்ற முறையில் பெருந்தன்மையோடு நடந்துகொண்டால் எல்லாம் நல்லதாகிவிடும். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்ற கருத்துபடி எல்லாம் நல்லதாகிவிடும். பங்காளிச் சண்டையால் பல வருடங்களாகப் பூட்டிக் கிடந்த குலதெய்வக் கோவிலும் திறக்கப்பட்டு பூஜை விழாக்களை நடத்தலாம்; தெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றலாம்.


மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராகு- கேது பெயர்ச்சி யோகமான பெயர்ச்சியாகவும் லாபகரமான பெயர்ச்சியாகவும் அமையும். எண்ணங்களை ஈடேற்றும். ஆசைகளைப் பூர்த்தியடையச் செய்யும். வருத்தங்களைப் போக்கி மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் உங்கள் ராசிக்கு 8-க்குடையவர் என்பதால் ராகு- கேது பெயர்ச்சி உங்களது மனத்துணிவையும் தைரியத்தையும் பாதிக்கும். தொழில் யோகத்தையும் தனயோகத்தையும் கெடுக்கும். "எட்டணா இருந்தா எட்டூருக்கு எம் பாட்டு கேட்கும், என்ற மாதிரி தொழில், தனம் குறைவில்லாமல் இருந்தால்தான் எல்லாச் சவால்களையும் சமாளிக்கலாம். திருச்சி அருகில்- பழூர் ரயில்வே கேட் அருகில் உள்ள சிவன் கோவிலில் நவகிரகங்களும் தம்பதி சகிதமாக இருக்கிறார்கள். அங்கு சென்று வழிபடலாம்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு:
திருவோணம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் பகை கிரகம்; 7-க்குடையவன். எனவே இந்த ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமான பலனைத் தந்து ஆசீர்வதித்து இன்பமான எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும். நீண்ட காலக் கனவுகளும் நிறைவேறும். உங்கள் ஜாதக அமைப்பு எப்படி இருந்தாலும் சரி; அல்லது தசாபுக்திகள் எப்படி இருந்தாலும் சரி- ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு அதி அற்புதமான பலன்களைச் செய்யும். தேனி- உத்தமபாளையத்தில் தென்காளஹஸ்தி எனப்படும் காளத்திநாதர் கோவிலுக்குச் சென்று வழிபடவும்; வழிவிடும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். மகர ராசிக்கு செவ்வாய் உச்சநாதன். ராகு- கேது பெயர்ச்சி எல்லா வகையிலும் தனலாபம், வெற்றி, ஜெயம், அனுகூலம், ஆதாயம் ஆகிய நற்பலன்களைத் தரும். கும்பகோணம் அருகில் சுவாமிமலை போகும் பாதையில் திருவலஞ்சுழியில் ஸ்வேத விநாயகரையும், பட்டீஸ்வரத்தில் துர்க்கையம்மனையும் வழிபடவும். கேதுவுக்கு விநாயகரும் ராகுவுக்கு துர்க்கையும் அதிதேவதைகள் ஆவார்கள்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்  Empty Re: ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum