ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

+11
மஞ்சுபாஷிணி
kirikasan
ரா.ரமேஷ்குமார்
றினா
பிஜிராமன்
அருண்
கே. பாலா
ரபீக்
positivekarthick
உதயசுதா
kitcha
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by kitcha Sun May 15, 2011 9:27 am

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!





அதிமுகவும் ஒரு பெரிய கட்சிதான்; மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன், என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் ஒரு தொகுதி விடாமல் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தவர் நடிகர் வடிவேலு. செல்லும் இடங்களில் இல்லாம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து வடிவேலுவின் பேச்சை கேட்டு ஆர்ப்பரித்தனர். வடிவேலுவும் சொந்த பகை காரணமாக ‌தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன், டம்மி பீசு, குடிச்சிட்டு உளறுகிறான்... என்பன போன்ற வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அதையும் ரசிகப்பெருமக்கள் ரசித்து கேட்டனர். பிரபலமான நடிகர் என்பதால்தான் இப்படி கூட்டம் கூடியிருக்கிறது என்பதை உணராத வடி‌வேலுவும், தி.மு.க.வும் எல்லாம் ஓட்டுக்களாக மாறும் என கணித்தனர். ஆனால் அவர்களது கணிப்பு பொய்த்துப் போய், தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. (இப்படியெல்லாம் நடக்கும் என முன்கூட்டியே தெரிந்ததாலோ என்னவோ தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி ஒரு வார்த்தைகூட பேசவில்லை வடிவேலு)
தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வரும் என்பதை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே கணித்த நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து அவசரம் அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் தோல்வி குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார். இதற்கிடையில் சென்னையில் அவரது வீட்டை தாக்க தேமுதிகவினர் முயற்சி செய்ததால், சென்னைக்கு வர வேண்டாம் என்று போலீசார் வடிவேலுவை கேட்டுக் கெண்டனர். இதனால் மதுரையிலேயே பதுங்கியிருக்கும் வடிவேலு, தேர்தல் தோல்வி பற்றி அந்தர் பல்டியடித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை. எனக்கும், விஜயகாந்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது, ஒரு படப்பிடிப்பில்தான். அவரை, வருங்கால முதல்-அமைச்சர் என்று வசனம் பேச சொன்னார்கள். நான், அப்படி பேச மறுத்து விட்டேன். ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன்.
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள். தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்? இது, நல்லாயில்லை. அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.
ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... என்று வசனம் பேசுவார். அரசியல்ல மட்டுமல்ல... சினிமாவுலயும் இதெல்லாம் சாதாரணம்தான். ஆளும்கட்சிகளுக்கு ஜால்ரா அடித்து காக்கா பிடித்தே பழகிவிட்ட திரையுலக காக்கா கூட்டம் இனி அதிமுக பக்கம் ‌போகும்; கருணாநிதியை புகழ்பாடியவர்கள் எல்லாம் இனி முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடிக் கொண்டிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

தினமலர்.cinema
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by உதயசுதா Sun May 15, 2011 10:02 am

து து து வடிவேலு.இனி தான் இருக்கு உனக்கு பெரிய ஆப்பு.
உன் நிலை இனி ஆப்பு அசைத்த குரங்கு கதைதான்


அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Uஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Dஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Aஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Yஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Aஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Sஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Uஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Dஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Hஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by positivekarthick Sun May 15, 2011 11:11 am

ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... என்று வசனம் பேசுவார். அரசியல்ல மட்டுமல்ல... சினிமாவுலயும் இதெல்லாம் சாதாரணம்தான். ஆளும்கட்சிகளுக்கு ஜால்ரா அடித்து காக்கா பிடித்தே பழகிவிட்ட திரையுலக காக்கா கூட்டம் இனி அதிமுக பக்கம் ‌போகும்; கருணாநிதியை புகழ்பாடியவர்கள் எல்லாம் இனி முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடிக் கொண்டிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?


அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Pஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Oஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Sஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Iஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Tஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Iஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Vஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Eஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Emptyஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Kஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Aஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Rஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Tஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Hஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Iஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Cஅதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by ரபீக் Sun May 15, 2011 11:14 am

கைப்புள்ள பராக் ! பராக் ! பராக் !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by கே. பாலா Sun May 15, 2011 11:26 am

வடிவேலு: அவங்கே விட்டாலும் ! இவங்கே (ஈகரை ஆளுங்க) விடமாட்டாங்க போல்ருக்கே..ஹோய்ங்க் ...



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by அருண் Sun May 15, 2011 11:39 am

தனியா வந்து மாட்டிக்கிட்ட இனி உனக்கு ஆப்பு நிரந்தரம்.....

உனக்கு ஒரு பரிகாரம் உண்டு அது செய்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்..

பேசாம தேமுதிக கட்சியில் உறுப்பினராக சேர்ந்து கேப்டனுக்கு கோஷம் போடவேண்டும்... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by ரபீக் Sun May 15, 2011 11:51 am

படத்தில் காமெடி பண்ணியவர் நிஜ வாழ்க்கையிலும் காமெடியானக மாறியது வேதனை தரும் விஷயம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by பிஜிராமன் Sun May 15, 2011 11:56 am

சிங்கமுத்து: நா தா அப்பவே சொன்னேன்ல நீலாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட சரி பட்டு வர மாட்டேனு இப்ப தெரிஞ்சுதா அது எதுணு..

வடிவேல் : அவ்வ்வ்வ்வ்வ்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by றினா Sun May 15, 2011 12:00 pm

ஐயோ,ஐயோ


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 15, 2011 12:18 pm

kitcha wrote:
தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.
திருந்தவே மாட்டார் இவரை கேப்டன் தான் திருத்தனும்...மண்டையில் அடி
வடி வச்சுட்டாங்களா வெடி...ஜாலி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!! Empty Re: அதிமுக பெரிய கட்சி! வடிவேலு அந்தர்பல்டி; பரபர பேட்டி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum