ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம்

+6
positivekarthick
அருண்
முரளிராஜா
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
கண்ணன்3536
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் - Page 2 Empty பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம்

Post by கண்ணன்3536 Sat May 14, 2011 9:43 am

First topic message reminder :

கலைஞர்: குப்புற வீழ்த்திய 3 குதிரைச் சவாரி!

Viruvirupu,

கலைஞர் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், இம்முறை அவருக்குக் கிடைத்திருப்பதுதான் வித்தியாசமான தோல்வி. காரணம், இந்தத் தோல்வியை அவரே சொந்த முயற்சியில் பெற்றிருக்கிறார்.

முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருமுறை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வே துடைத்தெறியப்பட்டிருக்கிறது (அந்தத் தேர்தலில் கலைஞர் மாத்திரம் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தார்) அப்போதெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம், எதிராளியான எம்.ஜி.ஆர்.

அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியைக் கொடுக்க, தி.மு.க. படுதோல்வியடைந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை.

அதேபோல ராஜிவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டபோதும், அனுதாப அலையில் அ.தி.மு.க. வெற்றியடைய, தி.மு.க. தோல்வியடைய நேர்ந்தது.

ஆனால் இம்முறை அப்படியல்ல. கலைஞரே மிகுந்த பிரயாசைப்பட்டு தோல்வியைச் சம்பாதித்திருக்கிறார்! அந்தளவுக்குக் கெட்ட பெயர்! அந்தக் கெட்ட பெயர், பாரஸ்ட் பயராக மாறி தி.மு.க.வைப் பொசுக்கியிருக்கின்றது.

“கலைஞர்தான் தி.மு.க.; தி.மு.க.தான் கலைஞர்” என்று தி.மு.க. தொண்டர்கள் பெருமையாகக் கூறுவார்கள். அந்த அளவுக்கு தி.மு.க. போன்ற ஒரு இயக்கத்தை ஒரு தனிப்பட்ட நபரால் பல வருடங்களாகத் தாங்க முடிந்திருக்கிறது. இம்முறை அதே தனிப்பட்ட நபரால் (அவருடைய குடும்பத்தின் துணையுடன்) பாதாளத்தில் விழவைக்கவும் முடிந்திருக்கிறது.

கடந்த 5 வருடங்களில் ஆட்சியிலிருந்து இதை எப்படிச் சாதித்தார் கலைஞர்?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், “தனது குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாத இயலாமை” என்று கூறலாம்.

சென்னையில் இரண்டு குடும்பங்கள். இரண்டும் இரண்டு பவர் சென்டர்கள். இலவச இணைப்பாக மதுரையில் சுயாதீனமான மற்றொரு பிராந்திய பவர் சென்டர். இந்த மூன்று குதிரைகளிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்வது அவ்வளவு சுலபமல்ல. அதைச் செய்ய முயற்சித்தார் கலைஞர்.

குதிரைகள் இப்போது குப்புற வீழ்த்திவிட்டன.

அதுவும் இந்த மூன்று தரப்புக்கும் இடையில் ஒற்றுமை இருந்தாலாவது பரவாயில்லை. இவர்களது இழுபறிகள் ஊடகங்களில் சோப் ஒப்பேரா போல வாராவாரம் ஓடிக்கொண்டிருந்தன. இவர்களின் மூன்றாவது தலைமுறையினரின் சினிமா வியாபார இழுபறிகள்கூட மக்களிடையே பிரசித்தம்!

மக்கள் இதையெல்லாம் ஒருவித கையாலாகாத் தனத்துடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். சரியான தருணம் வந்தபோது கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

கலைஞரின் குடும்பத்தினரின் அரசியல் மற்றும் வியாபார விளையாட்டுகள் தி.மு.க.வை கடந்த 5 வருடங்களாக ஸ்லோ பாய்ஸன் போல கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருந்ததை கலைஞர் உணர்ந்திருப்பாரா தெரியவில்லை. இறுதியில் தேர்தலுக்கு நெருக்கமாக, கனிமொழி விவகாரம் தி.மு.க.வைப் பெட்டியில் மூடி, கடைசி ஆணியை அடித்தது.


தி.மு.க.வின் பெட்டிக்குக் கடைசியாக அடிக்கப்பட்ட ஆணி!

அந்தக் கட்டத்திலாவது கலைஞர் அலேர்ட் ஆகியிருக்கலாம். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று இரண்டுக்கும் இடையே ஒரு கோடு போட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் அப்படிச் செய்திருந்தால் தோல்வியிலிருந்து தப்பியிருக்க முடியாதுதான்.

ஆனால், அவமானத்துக்குரிய “படுதோல்வி” அடையாமல் தப்பியிருக்கலாம். ஓரளவு “கௌரவமான” தோல்வியைத் தழுவியிருக்கலாம்.

கனிமொழியைக் காப்பாற்ற தனது கௌரவம், மதிப்பு எல்லாவற்றையும் பறக்கவிட்டு டில்லியின் காலடியிலும் விழத் தயாராக இருந்தார். அதை அவரது பாசம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு தனிப்பட்ட கனிமொழியைக் காப்பாற்ற அவர் கட்சியையே பணயமாக வைத்து விளையாடத் தொடங்கியபோதுதான் விதி அவரைப் பார்த்துச் சிரித்தது. சிரித்தது விதி மாத்திரமல்ல, தமிழக வாக்காளர்களும்தான் என்பது இப்போது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிகின்றது.

கனிமொழியுடன் தொடர்புடைய ராசாவைக் காப்பாற்ற கடைசிவரை தனது கட்சிக்கு இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்து மிரட்டிப் பார்த்தார். அது சரிப்பட்டு வரவில்லை. ராசா திகாரின் சப்பாத்தி சாப்பிட வேண்டியதாயிற்று.

பிடித்திருப்பது புலிவால் என்பதைப் புரிந்துகொண்டு அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவரால் நிறுத்த முடியவில்லை. ராசாவின் சங்கிலித் தொடர் கனிமொழிவரை வந்தது (ராசாத்தி அம்மாளையும் லேசாகத் தொட்டது)

கைதுப்படலம் வீட்டுவாசல்வரை வந்தபோது, பலவருட அரசியல் அனுபவசாலியான கலைஞருக்கு, டில்லி இரண்டிலொன்று பார்த்துவிடுவது என்று பிடிவாதமாக இருக்கின்றது என்பது எப்படிப் புரியவில்லை என்பது ஆச்சரியம்தான். மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் மசியாத பிடிவாதம்!

கலைஞருக்குப் புரியவில்லை. அல்லது, புரிந்தும்வேறு வழியில்லாத நிலைமை. மீண்டும் ஒரு மிரட்டல். ஒரு கனிமொழியைக் காப்பாற்ற, தனது கட்சி மத்தியில் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவேன் என்று மிரட்டினார். டில்லி கண்டுகொள்ளவில்லை.

ஒருவேளை மிரட்டியபடி செய்திருந்தாலாவது, தைரியசாலி என்ற பெயராவது கிடைத்திருக்கும். ஆனால் வீரவசனங்களைச் செயலில் காட்டவில்லை. பதுங்கினார். கடைசியில் கெஞ்சவும் தொடங்கிவிட்டார்.

நடப்பவையெல்லாம் குக்கிராமத்திலுள்ள வாக்காளன்வரை சென்றடைந்து கொண்டிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பம் அப்படி! என்ன நடக்கின்றது என்று அனைவருக்கும் விலாவாரியாகவே தெரிந்திருந்தது. அதன் பின்னரும் மக்களிடம் வாக்குக் கேட்டுப் போனால் என்னவாகும்?

அதுதான் மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞரின் வயதுக்கு, அவரால் மீண்டுமொருமுறை முதல்வராவது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியாது. ஒருவேளை இன்று ராஜினாமா செய்திருப்பதுதான் அவரது கடைசி முதல்வர் பதவியாக இருந்துவிட்டால்-

அரசியலில் தனது சுய முயற்சியில் பூச்சியத்திலிருந்து ராட்சியம்வரை சென்ற ஒருவர், மீண்டும் தனது சுய முயற்சியாலேயே பூச்சியத்துக்குப் போனதாக வரலாறு எழுதப்படும்.

விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down


பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் - Page 2 Empty Re: பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம்

Post by முரளிராஜா Mon May 16, 2011 3:48 pm

ஏற்கனவே உள்ள பதிவோடு இனைக்கபட்டது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum