ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி

+2
மஞ்சுபாஷிணி
சிவா
6 posters

Go down

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Empty தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி

Post by சிவா Sat May 14, 2011 7:38 am


காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க. தலைவர்கள் தோற்றனர்


தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள், மற்றும் காங்கிரஸ், பா.ம.க., பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்கள்.

தோல்வி அடைந்த அமைச்சர்கள் விவரம் வருமாறு-

அமைச்சர் அன்பழகன்

1. க.அன்பழகன் (வில்லிவாக்கம்). அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரிடம், 10 ஆயிரத்து 782 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

2. வீரபாண்டி ஆறுமுகம் (சங்ககிரி). சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில், தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய அண்ணன் மகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சருமான விஜயலட்சுமி பழனிச்சாமியிடம் 35 ஆயிரத்து 328 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

பொன்முடி

3. பொன்முடி (விழுப்புரம்). அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகத்திடம் தோல்வி அடைந்தார்.

4. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை). அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வனிடம் 10 ஆயிரத்து 638 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

5. பொங்கலூர் பழனிச்சாமி (கோவை தெற்கு). இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சேலஞ்சர் துரை என்கிற துரைசாமியிடம் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தா.மோ.அன்பரசன்


6. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி). அ.தி.மு.க. வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

7. தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்). இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ப.தன்சிங் 17 ஆயிரத்து 374 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கே.பி.பி.சாமி

8. கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்). இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் வெற்றி பெற்றார்.

9. சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி). அ.தி.மு.க. வேட்பாளர் பச்சைமாலிடம் 15 ஆயிரத்து 804 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

10. தமிழரசி (மானாமதுரை-தனி). அ.தி.மு.க. வேட்பாளர் ம.குணசேகரன் வெற்றி பெற்றார்.

11. கீதாஜீவன் (தூத்துக்குடி). அ.தி.மு.க. வேட்பாளர் சித.செல்லப்பாண்டியன் வெற்றி பெற்றார்.

12. வெள்ளக்கோவில் சாமிநாதன் (மடத்துக்குளம்). அ.தி.மு.க. வேட்பாளர் சி.சண்முகவேலு அவரை தோற்கடித்தார்.

கே.என்.நேரு

13. கே.என்.நேரு (திருச்சி மேற்கு). அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் பிச்சையிடம், 6 ஆயிரத்து 892 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

14. எஸ்.என்.எம். உபயதுல்லா (தஞ்சாவூர்). அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார்.

15. என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்). இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.பி.பூனாட்சி 19 ஆயிரத்து 190 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பூங்கோதை

16. உ.மதிவாணன் (கீழ்வேளூர்-தனி). நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வி.பி.மகாலிங்கம், 724 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

17. பரிதி இளம் வழுதி (எழும்பூர்). தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் 202 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

18. பூங்கோதை (ஆலங்குளம்). இவரை அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஜி.ராஜேந்திரன் 279 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சபாநாயகர் ஆவுடையப்பன்

தி.மு.க. தலைவர்களில் ஒருவரும், சட்டசபை சபாநாயகருமான ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையாவிடம் 24 ஆயிரத்து 609 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தி.மு.க.வை சேர்ந்த துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, சேலம் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனபாலிடம் 24 ஆயிரத்து 717 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தங்கபாலு தோல்வி


காங்கிரஸ், பா.ம.க. மற்றும் பா.ஜனதா மாநில தலைவர்களும் தோல்வியை தழுவினார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை மைலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமி 29 ஆயிரத்து 204 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மேட்டூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனிடம் தோல்வி அடைந்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் 58819 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

தி.மு.க. வேட்பாளர் மகேஷ் 52092 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்தையும், பொன் ராதாகிருஷ்ணன், 33623 ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

திருநாவுக்கரசர்

மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார்.

கொங்கு நாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் சூலூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பனப்பட்டி தினகரனிடம் தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், அறந்தாங்கி தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜநாயகத்திடம் 16 ஆயிரத்து 56 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கருணாநிதி-ஜெயலலிதா வெற்றி


சட்டசபை தேர்தலில், தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் பல்வேறு அமைச்சர்களும் வெற்றி பெற்றனர்.

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனை 50 ஆயிரத்து 249 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆனந்த்தை தோற்கடித்தார்.

துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு என்கிற ராதாகிருஷ்ணனை விட 2,973 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பாளையங்கோட்டை தொகுதியில், அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் 608 ஓட்டு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வி.பழனியை தோற்கடித்தார்.

தங்கம் தென்னரசு


திருச்சுழி தொகுதியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரை எதிர்த்து போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் இசக்கிமுத்துவை 19 ஆயிரத்து 952 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருவாடானை தொகுதியில் அமைச்சர் சுப தங்கவேலன், 927 ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர் ரகுமானை தோற்கடித்தார்.

53 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தே.மு.தி.க. வேட்பாளர் பாலசுப்பிரமணியை 53 ஆயிரத்து 932 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

குன்னூர் தொகுதியில், அமைச்சர் கா.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.பெள்ளியை 9,292 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கே.வி.குப்பம் தொகுதியிலும், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பரமத்தி வேலூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

தினதந்தி


தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Empty Re: தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:37 am

தேர்தல் செய்திகள் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Empty Re: தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி

Post by கலைவேந்தன் Sat May 14, 2011 11:52 am

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Empty Re: தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி

Post by ரபீக் Sat May 14, 2011 11:53 am

கே என் நேரு வும் அவருடைய தம்பியும் ஆடிய ஆட்டத்துக்கு மக்கள் வச்சாங்க பெரிய ஆப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Empty Re: தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி

Post by உதயசுதா Sat May 14, 2011 11:57 am

ஒட்டு மொத்தமா மக்கள் இந்த தடவை ஓட்டு போட்டப்பவே எல்லாரும் சொன்னாங்க.தலைவருக்கு ஆப்புதான்னு.
எங்களுக்கும் ஆப்பு வைக்க தெரியுமில்லன்னு நாங்களும் காட்டிட்டோம்


தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Uதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Dதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Aதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Yதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Aதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Sதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Uதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Dதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Hதமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Empty Re: தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி

Post by பிளேடு பக்கிரி Sat May 14, 2011 12:25 pm

உதயசுதா wrote:ஒட்டு மொத்தமா மக்கள் இந்த தடவை ஓட்டு போட்டப்பவே எல்லாரும் சொன்னாங்க.தலைவருக்கு ஆப்புதான்னு.
எங்களுக்கும் ஆப்பு வைக்க தெரியுமில்லன்னு நாங்களும் காட்டிட்டோம்
சிரி சிரி சிரி



தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி Empty Re: தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum