ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_c10160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_m10160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_c10 
Barushree
160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_c10160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_m10160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_c10 
kavithasankar
160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_c10160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_m10160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_c10 
mohamed nizamudeen
160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_c10160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_m10160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க.

Go down

160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Empty 160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க.

Post by சிவா Sat May 14, 2011 7:33 am

160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது
தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது
அ.தி.மு.க. அமோக வெற்றி
ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர்: நாளை பதவி ஏற்கிறார்

160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Jj

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 147 தொகுதிகளை கைப்பற்றியது.


ஓட்டுப்போட்டு விட்டு ஒரு மாதமாக காத்து இருந்த தமிழக மக்களுக்கு நேற்று விடை தெரிந்தது.

தமிழக மக்களின் எழுச்சி

தமிழ்நாட்டில், எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் 13-ந் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு அலை அலையாக சென்று எழுச்சியுடன் வாக்கு அளித்தார்கள்.

இந்த தேர்தலில் புதிதாக ஓட்டுப்போட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஓட்டுப்போடுவதில் அதிக ஆர்வம் காட்டாத மேட்டுக்குடியினர், முதியவர்கள் கூட உற்சாகத்துடன் வந்து வாக்கு அளித்தனர்.

அதிக வாக்குப்பதிவால் குழப்பம்

இதனால் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இவ்வளவு அதிகமாக வாக்குகள் பதிவானது அரசியல் கட்சிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்தாலும், அதிக வாக்குகள் பதிவானது யாருக்கு சாதமாக இருக்கும்? என்ற குழப்பம் நிலவியது.

எனவே, இந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்காவது தனி `மெஜாரிட்டி' கிடைக்குமா? அல்லது கூட்டணி ஆட்சி ஏற்படுமா? என்ற சந்தேகமும் கட்சியினரிடையே ஏற்பட்டது.

அ.தி.மு.க. அமோக வெற்றி


ஆனால், "யாருக்கு எந்த குழப்பம் ஏற்பட்டால் என்ன? நாங்கள் தெளிவாக இருக்கிறோம்'' என்பதை பறைசாற்றும் வகையில் இந்த தேர்தலில் தமிழக வாக்காளர்கள் உறுதியான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 91 மையங்களில் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி முன்னணியில் இருந்தது. அந்த முன்னணி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நீடித்து, அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

தனி மெஜாரிட்டி

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியது. தனிப்பட்ட முறையில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 150 தொகுதிகளை கைப்பற்றி சட்டசபையில் தனி மெஜாரிட்டி பெற்றது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41 ஆயிரத்து 848 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அ.தி.மு.க. கூட்டணியில் 12 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 9 தொகுதிகளிலும், 10 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு 8 தொகுதிகளிலும், 3 தொகுதிகளில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தலா 2 தொகுதிகளில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றன.

தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதே போல் ஒரு தொகுதியில் போட்டியிட்ட மூவேந்தர் முன்னணி கழகம் தோல்வி அடைந்தது.

ஜெயலலிதா முதல்வர் ஆகிறார்

அ.தி.மு.க. வெற்றி பெற்றதன் மூலம் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்-அமைச்சர் ஆகிறார்.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

தி.மு.க.வுக்கு சரிவு

இந்த தேர்தலில் ஆளும் தி.மு.க. பெரும் சரிவை சந்தித்து. 234 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு 30 தொகுதிகளே கிடைத்தன. இந்த கூட்டணியில் 119 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னை மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தோல்வி அடைந்தார்.

30 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

10 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 7 தொகுதிகளில் போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்ற கழகம், 3 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

பாரதீய ஜனதா


பாரதீய ஜனதா கூட்டணியில் 193 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதீய ஜனதா, 10 தொகுதிகளில் போட்டியிட்ட ஜனதா, 5 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல் 142 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி, 25 தொகுதிகளில் போட்டியிட்ட புரட்சி பாரதம், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தினதந்தி


160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum