ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை)

Go down

 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Empty கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை)

Post by kirikasan Fri May 13, 2011 10:12 pm

கப்பல் கவிழ்ந்த தென்ன? காணாமல் போனதென்ன?
எப்போது மேல்மிதந்து ஏறிக்கரை சேருமய்யா
தப்பும் நடந்ததென்ன தலை மேலே வெள்ளமென்ன
தெப்பம் நடுவிற்புனல் சேர்ந்தே கவிழ்த்ததென்ன

கண்ணீர் கரைக்கவில்லை காற்றோலம் கேட்கவில்லை
மண்ணின் அவலங்களோ மாளிகையுள் எட்டவில்லை
எண்ணும் இதயமது ஏழைகளை எண்ணவில்லை
பொன்னை மணிகளெண்ணி பொழுதோடி மிஞ்சவில்லை

அழுதுஉயிர் போகையிலே அன்புமனம் நோகவில்லை
எழுத்தாணி விட்டுக்கரம் ஏழைக்களைக் காக்கவில்லை
விழிகூசும் சாவுகளை வட்டகுறுந் தட்டிலிட்டால்
பொழுதோடும் சித்திரமாய் பார்த்தும்மனத் துக்கமில்லை

மானாட மயிலாட மகிழுமனம் மீளவுமோர்
ஊனாடி உயிரோட ஏங்கித்துயர் கொள்ளலையோ
கோனோடி கொள்கையிலே கொப்பேறி குதித்தவரை
தேனோடும் தீந்தமிழை தேர்ந்தவர்கள் மன்னிப்பரோ

அன்னைத் தமிழுரைப்போர் அத்தனையும் ஒன்று என
பொன்னார் உறவுகளோ பொங்கிஎழுந்துவிட்டார்
அன்னையே வெற்றிகொண்டு ஆளவந்த பொன்மகளே
உன்னையே நம்பிநின்றோம் உள்ளம் மகிழ்வாக நின்றோம்

வெல்லட்டும் வீரத்தமிழ் விளையட்டும் பேரரசு
செல்லட்டும் பொய்புரட்சி சேரட்டும் இன்பங்களே
நல்லோர் கரம் ஓங்கி நாட்டில் நீதி உய்யட்டும்
வல்லோர் புதுவாழ்வு வந்துவிட செய்வீரம்மா!


Last edited by kirikasan on Sat May 14, 2011 2:54 am; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Empty நீ கொல்லவோ பெற்றாள்

Post by kirikasan Sat May 14, 2011 2:52 am

மெல்ல நடந்தன்னை மேனி கனத்துடல்
மிக்கவலிந் துழன்று -மிக
சொல்லவொணா வலிகொண்டு உடல்நொந்து
சுந்தர ரூபமுடன் -அருஞ்
செல்லமென வொரு பிள்ளையை பெற்றுமே
சீராட்டித் தான்வளர்ந்து -ஒரு
வல்லவனாய் வெகுநல்லவ னாக்கினாள்
கொல்லவோ சிங்களனே!

வெள்ளைமனம் கொண்டு வீட்டில்விளையாடி
வேடிக்கை தான்புரிந்து -தினம்
அள்ளியணைத்துப் பாலூற்றி அமுதுடன்
அன்பையும் ஊட்டிவிட்டு -நல்ல
தெள்ளுத் தமிழ்க்கதை சொல்லி வளர்த்தவன்
தூங்கும் அழகினையே -அவள்
அள்ளிப்பருகிய அன்னை வளர்த்தது
கொல்லவோ நீ பதரே

தத்திநடந்திடும் தங்கமகன் நடை
தள்ளாடும் காலிரண்டை- அள்ளி
ஒத்தி இருகண்ணில் உள்ளம்மகிழ்ந்திட
எட்டி உதைத்தவனை -பின்னும்
முத்தமிட்டே அன்பில் மூழ்கிகளித்திட
முன்னே இருத்தி கண்ணாய் -தினம்
பொத்தி வளர்த்தனள் அன்னை புதல்வனை
கொல்லவோ நீ பதரே

பள்ளிக்குப் போகுநற் சின்னபருவத்தில்
பாசமுட னணைத்து -நல்ல
வெள்ளைஉடையிட்டு வாரித் தலைசீவி
வாசல்வரைநடந்து -எண்ணி
உள்ளம்கனத்திட என்னசெய்வானென
உள்ளே மனமழுது -பின்னே
துள்ளி வீடுவர புன்னகைத்தாள் நீயும்
கொன்றிடவோ வளர்த்தாள்?

கண்கள் கலங்கிடும் அன்னையே ஈதொரு
காலத்தின் மாதவறு -மனம்
எண்ணிட உள்ளமும் ஏங்கிஅழும் இது
இல்லை உலகிலொன்று -ஒரு
மண்ணின் சரித்திரம் மாறியது இது
மானிட சக்தியன்று - அந்த
விண்ணுறை தெய்வமும் பேய்களும் போரிடும்
வல்லமை மோதல் ஒன்று

கொன்றவன் உள்ளத்தைப் பேய்கள் நின்றாளுது
பேரோ மகிந்தவென்று அதை
நின்று எதிர்த்திடும் ஆண்டவன் சக்தியோ
நல்லவர் நெஞ்சிலுண்டு -இதில்
வென்றுவிடுவது யாரென்பது எங்கள்
வல்லமை தன்னிலுண்டு -நீயோ
என்றும் இறைவனைவேண்டி பக்கம்நின்று
போரிடு வென்றுவிடு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum