ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும்

2 posters

Go down

ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Empty ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும்

Post by சிவா Fri May 13, 2011 8:21 am

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. எனவே, ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று மதியம் தெரிந்து விடும்.


234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு 78.80 சதவீத வாக்குகள் பதிவாயின.

தி.மு.க. கூட்டணி

இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி என இரு முக்கிய அணிகள் போட்டியிட்டன.

தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 119 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 30 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும், கொங்கு நாடு முன்னேற்ற கழகம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இது தவிர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகளிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அ.தி.மு.க. கூட்டணி

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க. 160 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 41 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 12 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 10 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி -3, புதிய தமிழகம்-2, ச.ம.க -2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதுதவிர மூவேந்தர் முன்னணி கழகம், கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி, பார்வர்டு பிளாக் ஆகியவை தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.

இதுதவிர பாரதீய ஜனதா தலைமையிலான ஒரு அணியில் பாரதீய ஜனதா 193 தொகுதிகளிலும், ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மேலும் இந்திய ஜனநாயக கட்சி 142 தொகுதிகளிலும், புரட்சி பாரதம் 25 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 230 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

இன்று ஓட்டு எண்ணிக்கை

வாக்குப்பதிவு முடிந்து ஒரு மாதத்துக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 91 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணும் பணியில் 16,966 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் மாநில போலீசாருடன் 45 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

குலுக்கல் முறையில் தேர்வு

ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களில், எந்த வேலையை யார் செய்வது? என்பது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரி, கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று காலை 5 மணிக்கு இந்த தேர்வு பணி நடைபெறுகிறது.

தேர்தல் ஏஜெண்டுகள் காலை 6 மணிக்குள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்துவிட வேண்டும். அனைவரும் அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு, ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை கதவின் சீல், அனைவரது முன்னிலையிலும் உடைக்கப்படும்.

அதன்பின்னர், தொகுதிவாரியாக வைக்கப்பட்டுள்ள ஓட்டு எந்திரங்கள், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அரங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு தொகுதி ஓட்டு எண்ணும் இடத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

4 மணிக்குள் முடிவு தெரிந்து விடும்

காலை 8 மணிக்கு, முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். காலை 8.30 மணி முதல் எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு சுற்றுவாரியாக ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். அதன்பிறகு, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள், ஒவ்வொரு சுற்று வாரியாக தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

காலை 8.30 மணி முதல் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். மாலை 4 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சியை பிடிப்பது யார்?

எனவே தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சியை பிடிக் குமா? அல்லது அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது முதன் முறையாக கூட்டணி ஆட்சி ஏற்படுமா? என்பது இன்று தெரிந்து விடும்.

தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினதந்தி


ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Empty Re: ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும்

Post by Aathira Fri May 13, 2011 10:47 am

ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் 440806 ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் 440806


ஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Aஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Aஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Tஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Hஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Iஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Rஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Aஆட்சி அமைப்பது யார்? முடிவு விவரம் மதியம் தெரிந்துவிடும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது
» கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்? லிஸ்ட் வெளியிட சுவிஸ் அரசு முடிவு
» அமைகிறது காங்கிரஸ் ஆட்சி..!! அலறுகிறது பாஜக..!!! சித்தராமையா அதிரடி முடிவு..!!!
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது யார்? டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum