புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_m10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10 
30 Posts - 50%
heezulia
LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_m10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_m10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_m10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10 
72 Posts - 57%
heezulia
LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_m10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_m10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_m10LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே


   
   
avatar
karthi_hn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 06/07/2009

Postkarthi_hn Thu May 12, 2011 1:33 pm

LIPOMA பற்றி சொல்லுங்கள் அதை சரி செய்ய மெடிசின் பற்றி சொல்லுங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 12, 2011 1:48 pm

கொழுப்புத் திசுக்கட்டி (Lipoma) என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும். அவை மிகவும் பொதுவான வடிவமாக மென்மையான திசுக் கட்டியினைக் கொண்டிருக்கும்.கொழுப்புத் திசுக்கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக நகரக்கூடியதாக இருக்கும். மேலும் அது பொதுவாக வலியற்றவையாக இருக்கும். பல கொழுப்புத் திசுக்கட்டிகள் சிறியவையாக இருக்கும் (ஒரு சென்டிமீட்டர் விட்டத்திற்கும் கீழ்), ஆனால் அவை ஆறு சென்டிமீட்டர்கள் வரை அளவில் விரிவடையலாம். கொழுப்புத் திசுக்கட்டிகள் பொதுவாக 40 முதல் 60 வயதுடையவர்களிடையே காணப்படுகிறது. ஆனால் அவை குழந்தைகளிடமும் காணப்படலாம். சில ஆதாரங்கள் புற்றுத்திசுப் பரிமாற்றம் ஏற்படக்கூடும் எனக் கூறுகின்றன,அதே சமயம் மற்றவர்கள் அது இன்னும் மெய்ப்பித்து ஆவணப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறுகின்றனர்.

வகைகள்

மனித உடற்பகுதியில் இருந்து நீக்கப்பட்ட கொழுப்புத் திசுக்கட்டி
கொழுப்புத் திசுக்கட்டிகளில் பல்வேறு உபவகைகள் இருக்கின்றன
ஆன்ஜியோலிப்போலெயோமையோமா (Angiolipoleiomyoma) என்பது இயல்பற்ற தனித்த அறிகுறியில்லாத புறமுனை முடிச்சு ஆகும். இது மென்மையான தசைச் செல்கள், இரத்த நாளங்கள், இணைப்புத் திசு மற்றும் கொழுப்பு ஆகியவற்றினால் உருவாகி நன்கு சுற்றி வளைந்த தோலடிக் கட்டிகளாக நெடுங்காலமாக இருக்கிறது.

ஆன்ஜியோ லிப்போமா (Angiolipoma) என்பது ஒரு வலி நிறைந்த தோலடி முடிச்சு ஆகும். இது ஒரு பொதுவான கொழுப்புத் திசுக்கட்டியின் அனைத்து கூறுகளையும் கொண்டிருக்கிறது.[4]:624[5]
சோண்ட்ராய்ட் கொழுப்புத் திசுக்கட்டிகள் (Chondroid lipomas) என்பது பொதுவாக பெண்களின் கால்களில் ஆழமாக ஏற்படும் உறுதியான மஞ்சள் கட்டிகள் ஆகும்.

இணைப்பு மெய்ய கொழுப்புத் திசுக்கட்டி (Corpus callosum lipoma) என்பது பிறவியில் அரிதாக ஏற்படுவதாக இருக்கிறது. இது அறிகுறிகளுடன் தோன்றலாம் அல்லது அறிகுறிகள் ஏதுமில்லாமலும் இருக்கலாம்.
கொழுப்புத் திசுக்கட்டிகள் பொதுவாக 1–3 செமீட்டர் விட்டத்துடன் ஒப்பீட்டளவில் மிகவும் சிறியவையாக இருக்கும், ஆனால் சில அரிதான நிகழ்வுகளில் அவை பல ஆண்டுகளாக வளர்ந்து 10-20 செமீட்டரிலும் 4-5 கிகி எடையுடனும் "மாபெரும் கொழுப்புத் திசுக்கட்டிகளாக" இருக்கலாம்.

ஹைபர்னோமா (Hibernoma) என்பது செங்கொழுப்பின் கொழுப்புத் திசுக்கட்டி ஆகும்.
சருமத்துள் கதிர் செல் கொழுப்புத் திசுக்கட்டி (Intradermal spindle cell lipoma) என்பது மிகவும் பொதுவாக பெண்களைப் பாதிக்கக்கூடியதாககும். இவை தலை, கழுத்து, உடற்பகுதி, மேல் மற்றும் கீழ் முனைப்புள்ளிகள் போன்ற பகுதிகளிலிலிருந்து உருவாகி, ஒரே சீராகப் பரவுகின்றன.

நரம்பிய மிகை கொழுப்புத் திசுக்கட்டி (Neural fibrolipoma) என்பது நரம்புத் தண்டுடன் இணைந்து நிணநீர்க் கொழுப்பின் மிகை வளர்ச்சியால் ஏற்படுகிறது. இது பொதுவாக நரம்பு நெரித்தலுக்கு வழிவகுக்கிறது.

பல்லுறுமாற்ற கொழுப்புத் திசுக்கட்டிகள் (Pleomorphic lipomas) என்பவை கதிர்-செல் கொழுப்புத் திசுக்கட்டிகள் போன்று முதிய ஆண்களுக்கு முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஏற்படுவது ஆகும்.மேலும் அவை மேற்படிவு உட்கருக்களுடன் ஃப்ளோரட் பெரும் செல்களின் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

கதிர்-செல் கொழுப்புத் திசுக்கட்டி (Spindle-cell lipoma) என்பது வயதான ஆண்களின் பின்முதுகு,கழுத்து மற்றும் தோள்கள் போன்ற இடங்களில் ஏற்படும் அறிகுறியில்லா மெதுவாக வளரும் தோலடிக் கட்டி ஆகும்.

மேலோட்டாமான தோலடி கொழுப்புத் திசுக்கட்டி (Superficial subcutaneous lipoma) என்பது மிகவும் பொதுவான வகை கொழுப்புத் திசுக்கட்டி ஆகும்.இது தோலின் புறப்பரப்பின் அடியில் ஏற்படும்.பெரும்பாலும் உடற்பகுதி,தொடைகள் மற்றும் முன்கைகள் போன்ற இடங்களில் ஏற்படுகின்றன.எனினும் அவை உடலில் வேறு பகுதிகளில் கொழுப்பு இருக்கும் இடங்களிலும் ஏற்படலாம்.

நோய்ப்பரவுதல்

தோராயமாக ஒரு சதவீத மக்கள் கொழுப்புத் திசுக்கட்டியுடன் இருக்கின்றனர்.
இந்தக் கட்டிகள் எந்த வயதிலும் ஏற்படலாம்,ஆனால் பொதுவாக 40 முதல் 60 வயதுடையவர்களிடையே காணப்படுகிறது.தோல்தசை கொழுப்புத் திசுக்கட்டிகள் குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படுகின்றன.ஆனால் இந்தக் கட்டிகள் பிறப்புவழி நோயான பன்னாயன்-ஜோனானா நோய்க்குறியின் ஒரு பகுதியாக ஏற்படலாம்.

காரணங்கள்

கொழுப்புத் திசுக்கட்டி உருவாவதற்கான நோக்கம் மரபுவழி சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் குடும்பவழி பன்மடங்கு லிப்போமடோசிஸ் (familial multiple lipomatosis) மரபுவழி நிலை கொழுப்புத் திசுக்கட்டி உருவாக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கலாம். சாண்டா ஜெ. ஒனொ (Santa J. Ono) பரிசோதனைக்கூடத்தில் எலியில் மேற்கொள்ளப்பட்ட மரபுவழிச் சோதனைகளில் HMG I-C ஜீன் (முன்பு உடற் பருமனுடன் தொடர்புடைய ஜீனாகக் கண்டறியப்பட்டது) மற்றும் கொழுப்புத் திசுக்கட்டி உருவாக்கம் ஆகியவற்றுக்கு இடையில் இயைபுபடுத்தல் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சோதனைகள் இதற்கு முன்பு HMG I-C மற்றும் இடைநுழைத் திசுக் கட்டிகள் ஆகியவற்றுக்கு இடையில் இயைபுபடுத்தலைக் காட்டிய மனிதர்களில் நடத்தப்பட்ட நோய்ப்பரவியல் தரவிற்கு இசைவதாக இருக்கிறது.

"காயத்திற்குப் பிறகான கொழுப்புத் திசுக்கட்டிகள்" (post-traumatic lipomas) என்று அழைக்கப்படும் கொழுப்புத் திசுக்கட்டியின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு சிறு காயங்கள் காரணமாக இருப்பதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் உடற்காயதிற்கும் கொழுப்புத் திசுக்கட்டிகளின் உருவாக்கத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

சிகிச்சை

பொதுவாக கட்டி வலி நிறைந்ததாகவோ அல்லது இயக்கத்தைத் தடை செய்வதாகவோ மாறும் வரை கொழுப்புத் திசுக்கட்டிகளுக்கான சிகிச்சை அவசியமில்லை. அவை, அழகு காரணங்களுக்காகவே நீக்கப்படுகின்றன. பொதுவாக பெரிதாகவோ அல்லது நிணநீர் குழாய்க் கட்டி (liposarcoma) போன்ற மிகவும் அபாயமில்லாத வகைக் கட்டிகள் திசுநோய் கூறுஇயல் சோதனைக்காக நீக்கப்படுகின்றன.

கொழுப்புத் திசுக்கட்டிகள் எளிமையாக வெட்டியெடுத்தல் மூலமாக நீக்கப்படுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகளில் இவை குணமடைந்து விடுகின்றன. சுமார் 1-2% கொழுப்புத் திசுக்கட்டிகள் வெட்டி நீக்கப்பட்ட பிறகும் மீண்டும் ஏற்படுகின்றன.கொழுப்புத் திசுக்கட்டி மென்மையாகவும் சிறிய இணைப்புத் திசுப் பொருளையும் கொண்டிருந்தால் லிப்போசக்சன் (Liposuction) என்ற மற்றொரு முறையைப் பயன்படுத்தலாம். லிப்போசக்சன் பொதுவாக குறைவான வடுக்களை ஏற்படுத்தும்; எனினும் பெரிய கொழுப்புத் திசுக்கட்டிகளுக்கு இதனைப் பயன்படுத்தும் போது முழுமையான கட்டிகளை நீக்க முடியாமல் போகலாம். அது மீண்டும் வளர்ச்சியடைவதற்கு ஏதுவாகிவிடும்.

வடுக்கள் ஏதுமில்லாமல் கொழுப்புத் திசுக்கட்டிகளை நீக்கும் புதிய முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று பொருட்களை இன்ஜெக்சனில் செலுத்தி நீக்குவது ஆகும். அவை ஸ்டெராய்டுகள் அல்லது போஸ்பாடிடில்கோலின் (phosphatidylcholine) போன்று கொழுப்புச் சிதைப்பைத் தூண்டுகின்றன.

நோய்முன்கணிப்பு

கொழுப்புத் திசுக்கட்டிகள் அரிதாக ஆயுள் அச்சுறுத்துபவையாக உள்ளன. மேலும் பொதுவான தோலடி கொழுப்புத் திசுக்கட்டிகள் தீவிர நிலையை உருவாக்காது. உள்ளுறுப்புக்களில் வளரும் கொழுப்புத் திசுக்கட்டிகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக இரையகக் குடலியப் பாதை கொழுப்புத் திசுக்கட்டிகள், இரத்தப்போக்கு, புண் ஏற்படல் மற்றும் வலி நிறைந்த அடைப்புகள் போன்றவற்றுக்குக் காரணமாகலாம்.

நிணநீர் குழாய்க் கட்டிகளினுள் கொழுப்புத் திசுக்கட்டிகளின் வீரியம் மிக்க பரிமாற்றம் மிகவும் அரிதானதாகும். பெரும்பாலான நிணநீர் குழாய்க் கட்டிகள் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் நோயில்லாக் கட்டிகளின் உறுப்புக் கோளாறுகளினால் ஏற்படுவது இல்லை.எனினும் சில நிகழ்வின் வீரியம் மிக்க பரிமாற்றங்கள் எலும்பு மற்றும் சிறுநீரக கொழுப்புத் திசுக்கட்டிகளுடன் வரையறுக்கப்படுகின்றன.
இந்தச் சில நிகழ்வுகள் நன்கு வேறுபட்ட நிணநீர் குழாய்க் கட்டிகளாக இருப்பதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. அவற்றில் கட்டிகளை முதலில் சோதனை மேற்கொண்ட போது நுட்பமான வீரியம் மிக்க பண்புக்கூறுகள் இல்லாமல் இருந்தன.ஆழ்ந்த கொழுப்புத் திசுக்கட்டிகளில் மேலோட்டமான கொழுப்புத் திசுக்கட்டிகளைக் காட்டிலும் மீண்டும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் ஆழ்ந்த கொழுப்புத் திசுக்கட்டிகளை முழுமையாக அறுவைசிகிச்சைச் செய்து நீக்குவது சாத்தியமில்லாத ஒன்று.

கால்நடை மருத்துவத்தில்

கொழுப்புத் திசுக்கட்டிகள் பல விலங்குகளில் ஏற்படுகின்றன.பொதுவாக அவை வயதான நாய்களில் ஏற்படுகின்றன. குறிப்பாக வயதான லேப்ராடார் ரீட்ரீவர்ஸ், டாபர்மேன் பின்ஸ்சர்ஸ் மற்றும் மினியேச்சர் ஸ்க்னாசர்ஸ் போன்ற இனங்களில் அதிகம் காணப்படுகின்றன. பருமனான பெண் நாய்கள் இந்தக் கட்டிகள் உருவாக்கத்தினால் புரள்கின்றன. மேலும் வயதான மற்றும் அதிக எடையுள்ள நாய்கள் குறைந்த பட்சம் ஒரு கொழுப்புத் திசுக்கட்டியையாவது கொண்டிருக்கின்றன.நாய்களில், கொழுப்புத் திசுக்கட்டிகள் பொதுவாக உடற்பகுதிகள் அல்லது மேல் மூட்டுகளில் ஏற்படுகின்றன.கொழுப்புத் திசுக்கட்டிகள் கால்நடைகள், குதிரைகள் போன்றவற்றில் குறைவாகவே காணப்படுகின்றன,மிகவும் அரிதாக பூனைகள் மற்றும் பன்றிகளில் ஏற்படுகின்றன.

கொழுப்புத் திசுக்கட்டியுடன் தொடர்புடைய மற்ற நிலைகள்

லிப்போமடோசிஸ் என்பது மரபுவழி நிலையாக இருக்கும்போது பல கொழுப்புத் திசுக்கட்டிகள் உடலில் தோன்றும்.
கொழுப்பு மிகைப்பு டொலொரோசா (Adiposis dolorosa) (டெர்கம் நோய்) என்பது பல வலி நிறைந்த கொழுப்புத் திசுக்கட்டிகள், வீக்கம் மற்றும் சோர்வு போன்றவை தொடர்புடைய அரிதான நிலை ஆகும். இது பொதுவாக பருமனான மாதவிடாய் நின்ற பெண்களில் காணப்படுகிறது.

வலியற்ற சமச்சீரான லிப்போமடோசிஸ் (மாடலங் நோய்) என்பது லிப்போமடோசிஸுடன் தொடர்புடைய மற்றொரு நிலை ஆகும். இது பல ஆண்டுகளாக மதுப்பழக்கமுடைய மத்திம வயது ஆண்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் ஏற்படுகிறது. எனினும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் மற்றும் பெண்களும் கூட பாதிக்கப்படலாம்.

நன்றி :- வெப்துனியா













[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
karthi_hn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 06/07/2009

Postkarthi_hn Thu May 12, 2011 2:15 pm

நன்றி
கொழுப்புத் திசுக்கட்டி umbilical area உள்ளதாக ரெபோர்டெல் உள்ளது வலி நிறைந்ததாக உள்ளது இதெற்கான சிகிச்சை பற்றி சொல்லுங்கள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 12, 2011 2:22 pm

லிபோமா கட்டிகளுக்கு மருந்துகள் இல்லை! அறுவைச் சிகிச்சையே தீர்வு!

லிம்போமா கட்டிகள்தான் புற்று நோயாக மாறும், ஆனால் லிபோமா கட்டிகள் 99% புற்று நோயாக மாறாது. சிறியதாக இருந்தால் அப்படியே விட்டுவிடுங்கள். பெரியதாக இருந்தால் அறுவைச் சிகிச்சை செய்யலாம்.

இந்த வகைக் கட்டிகள் வலிக்காது, ஆனால் அடிக்கடி அந்த இடத்தை தொட்டாலோ, அழுத்தினாலோ வலி ஆரம்பித்துவிடும்.

உடனடியாக சிறந்த விளக்கத்தை அளித்த பாலாவிற்கு நன்றி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
karthi_hn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 06/07/2009

Postkarthi_hn Thu May 12, 2011 2:24 pm

நன்றி[You must be registered and logged in to see this link.]

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 13, 2014 12:52 pm

LIPOMA பற்றி சொல்லுங்கள் நண்பர்களே  103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக