ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_c10 
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_c10 
E KUMARAN
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_c10 
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தாலாட்ட வருவாளா?

+19
பாரதி பாலமுருகன்
SK
Aathira
சிவா
உதயசுதா
சிவசங்கர்
மஞ்சுபாஷிணி
வினுப்ரியா
உமா
சின்றெல்லா
பூஜிதா
திவ்யா
தாமு
Jiffriya
ந.கார்த்தி
puthuvaipraba
மகா பிரபு
முரளிராஜா
ANTHAPPAARVAI
23 posters

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Thu May 12, 2011 6:24 am

First topic message reminder :

இது ஒரு காதல் கதை!


அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..


தொடரும்...


Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 1:47 pm; edited 1 time in total (Reason for editing : Delete my Name)


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by T.PUSHPA Wed Aug 31, 2011 12:55 pm


அன்புள்ள அந்தப்பார்வை நண்பர் அவர்களுக்கு வணக்கம்.
அழகான நளினமான காதல் கதை. ஒவ்வொரு வரிகளும் படிக்கப் படிக்க ரசனையைத் தூண்டுகிறது.
நல்ல கதை நடை. அதை சொல்லிக்கொண்டு போகும் விதமும் அருமையாக இருக்கிறது. மனக்கண் முன் காட்சிகள் தெரிகிறது.
அனுபவித்த கதை போல அத்தனை கோர்வையாக சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

ஆனால், இந்தக்கதையின் நாயகன் "நீங்கள் இந்தக் கதையை படித்து முடிக்கும் போது, நானும் உயிருடன் இருக்கப் போவதில்லை...."
என்று சொல்லியிருக்கின்றார். காதல் தோல்வியால் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்வது சரியாகுமா?
நீங்கள் முன்பு ஒரு கட்டுரையில் தற்கொலை செய்வது தவறு என்றும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்றும் கூறியிருந்தீர்கள். அப்படியிருக்கும் போது உங்கள் கதையில் அப்படி சொல்வது நியாயமாகுமா?

கதைக்காக சோகமான முடிவு என்றாலும் கூட, வெறும் சோகம் மட்டும் கதைக்கு வலிமை சேர்க்குமா?
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். திறமையான புதிய கருத்துக்கள் சொல்லும் நீங்கள் இது போல் கதை அமைப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது...

அன்புடன்.
T.புஷ்பா.
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by T.PUSHPA Wed Sep 28, 2011 8:55 am

நீண்ட நாட்களாகியும் உங்களிடம் இருந்து பதில் வரவில்லை. பதிலை எதிர் பார்ப்பதோடு, கதையையும் தொடர்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்...

அன்புடன்,
T.PUSHPA
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Sat Nov 12, 2011 11:40 am

T.PUSHPA wrote:
அன்புள்ள அந்தப்பார்வை நண்பர் அவர்களுக்கு வணக்கம்.
அழகான நளினமான காதல் கதை. ஒவ்வொரு வரிகளும் படிக்கப் படிக்க ரசனையைத் தூண்டுகிறது.
நல்ல கதை நடை. அதை சொல்லிக்கொண்டு போகும் விதமும் அருமையாக இருக்கிறது. மனக்கண் முன் காட்சிகள் தெரிகிறது.
அனுபவித்த கதை போல அத்தனை கோர்வையாக சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

ஆனால், இந்தக்கதையின் நாயகன் "நீங்கள் இந்தக் கதையை படித்து முடிக்கும் போது, நானும் உயிருடன் இருக்கப் போவதில்லை...."
என்று சொல்லியிருக்கின்றார். காதல் தோல்வியால் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்வது சரியாகுமா?
நீங்கள் முன்பு ஒரு கட்டுரையில் தற்கொலை செய்வது தவறு என்றும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்றும் கூறியிருந்தீர்கள். அப்படியிருக்கும் போது உங்கள் கதையில் அப்படி சொல்வது நியாயமாகுமா?

கதைக்காக சோகமான முடிவு என்றாலும் கூட, வெறும் சோகம் மட்டும் கதைக்கு வலிமை சேர்க்குமா?
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். திறமையான புதிய கருத்துக்கள் சொல்லும் நீங்கள் இது போல் கதை அமைப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது...

அன்புடன்.
T.புஷ்பா.

ரொம்ப ஆழமா கவனிச்சிருக்கீங்கணு தெரியுது. ஆனா அவசரப் பட்டுட்டீங்களே....
உங்கள் கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. கதையின் முடிவில் அவனது மரணம் நியாயமானதுதான் என்பது உங்களுக்கே புரியும்!

விரைவில் தொடர்வேன்...

உங்கள் கருத்துக்கும், கவனத்திற்கும் நன்றி!


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Thu Nov 24, 2011 11:53 pm

தொடர்ச்சி-8

"அதுக்குள்ள எழுந்துட்டா எப்படி?... சுண்டல் சாப்டுட்டுப் போறது!"

என்ற குரலைக் கேட்டதும் நாங்கள் இருவருமே அதிர்ந்து போனோம்! லதீபா, ரொம்பவே பயந்து நடுங்கினாள்.

எனக்கோ அவனைப் பார்ப்பதற்கே ஆத்திரம் போட்டுக்கொண்டு வந்தது. அப்படியே ஓங்கி மூஞ்சியில ஒரு குத்து விடலாமா என்று இருந்தது!

"கோச்சிக்காதீங்க தலைவா! நான் இப்ப தான் வந்தேன்! அதுக்குள்ள இப்படி வேர்த்துப் போயிட்டீங்க? பீச்சுக்குப் புதுசா?"- என்று கேட்டுக்கொண்டே லதீபாவை ஒரு மாதரியாகப் பார்த்தான்.

"ஹலோ! உனக்கு என்ன வேணும் இப்போ? ஏன் தேவை இல்லாம இப்படி பேசிக்கிட்டு இருக்கே?" என்று ஆத்திரத்தோடு நான் கேட்க,

"ஐயயோ... நான் அப்படி என்ன பெருசா கேட்டுடப் போறேன்... கேட்டாலும் குடுத்துடவாப் போறீங்க.... சுண்டல் சாப்ட்டீங்கன்னா போதும்!" என்று பேசிக்கொண்டே இரண்டு சுண்டல் பொட்டணங்களை எடுத்து இருவர் கையிலும் வலுக்கட்டாயமாக திணித்தான்.

"ஏம்பா... இப்படி அநாகரீகமா நடந்துக்கரியே, இது உனக்கே அநியாயமாத் தெரியலையா?"

"என்னது அநியாயமா? நான் பண்ணுறதா?... சார் காமெடி பண்ணாதீங்க சார்! சும்மா பைசாவா எடுங்க சார்." என்று கேலியாக சிரித்துக் கொண்டே கேட்டான்.

"அதெல்லாம் எங்களுக்கு சுண்டல் ஒண்ணும் வேண்டாம். நாங்க கெளம்புறோம்." என்றேன் நான்.

""அப்படியெல்லாம் சுண்டல் சாப்பிடாம நீங்க போக முடியாது சார்!"

"என்னது போக முடியாதா? என்னடா பண்ணுவே...?" என்று நான் ஆத்திரத்தோடு கேட்டதும்,

"கீதன், பேசாம காசை குடுத்துட்டு வாங்க. பிரச்சினை வேண்டாம்" என்று லதீபா என்னைத் தடுத்தாள்,

"ஐயாயோ... சார், நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிக் கிட்டீங்க சார். நான் போக முடியாதுன்னு சொல்லல சார்.
இவ்வளவு நேரம் 'கடலை போட்டீங்கள்ள... இப்ப, கடலை சாப்பிடுங்க! இதைத் தான் சொல்ல வந்தேன் சார். அதுக்குப் போயி இப்படிக் கோவப்படுறீங்களே.... அக்கா சொல்லுக்கா! என்று லதீபாவையும் பஞ்சாயத்துக்கு அழைத்தான்.

"போனாப் போகுது குடுத்துட்டு வாங்க" என்று லதீபா சொன்னவுடன், அவனுக்கு காசைக் கொடுத்து விட்டு இருவரும் அங்கிருந்து வெளியேறினோம்.!!

வரும் போது, "எனக்கு அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கு கீதன்!. இந்தமாதரி ஆளுங்க கிட்ட எல்லாம் பிரச்சினை வச்சிக்காதீங்க. நாளைக்கு பசங்களை சேர்த்து கிட்டு ஏதாவது பன்னாலும் பண்ணுவாங்க!" என்று லதீபா எனக்கு எச்சரிக்கைக் கொடுத்தாள். நான் அப்போது அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் நாளடைவில்... அவள் கூறியது போலவே, அவனும் எங்களை பின் தொடரத் தொடங்கினான்...!!

தொடரும்...


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Sun Nov 27, 2011 11:05 pm

தொடர்ச்சி-9

சினிமா, பீச், பார்க் என்றெல்லாம் நாங்கள் சுற்றித் திரிந்தாலும் எங்கள் காதல் எல்லை மீறாமலேயே தொடர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் ஒவ்வொரு முறை மெரினா பீச்சுக்கு செல்லும் போதும், எப்படியாவது.... எங்கிருந்தாவது அந்த சுண்டல்காரன் எங்களை கவனிப்பதும், சுண்டல் வாங்கச் சொல்லி வற்புறுத்துவதும் தொடர்ந்து கொண்டிருந்தது!

அதனால்...

"இனிமேல் மெரீனாவுக்கு செல்ல வேண்டாம் 'கோவளம்' செல்லலாம், "அங்குதான் யாரும் இருக்க மாட்டார்கள்" எந்தத் தொந்தரவும் இருக்காது" என்று கூறி லதீபா என்னை கோவலத்திற்கு அழைத்துச் சென்றாள்.

கடற்கரை மணலில் நீண்ட நேரம் இருவரும் நடந்தோம்.... ஏதேதோ கற்பனைகளை என்னோடு பகிர்ந்து கொண்டாள். இந்த சந்திப்பின் போது அந்தரங்கமான விஷயங்களை கூட, மறை முகமாக அவள் பேசத்துவங்கியதை நான் உணர்ந்தேன். எங்கள் காதல் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகிக் கொண்டிருந்தது!

என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடீரென்று...

"கடலில் குளித்து விளையாடலாமா கீதன்?" என்று கேட்டாள். எனக்கோ ஆச்சிரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. பிறகு இருவரும் கடலுக்குள் இறங்கினோம். லதீபா கடலுக்குள் நீண்ட தூரம் வரை சாதாரணமாக சென்று வந்தாள். பெரிய அலைகள் வரும் போது பயந்து அடித்துக் கொண்டு ஓடி வந்து விடுவாள். அவளது குழந்தைத் தனமான விளையாட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டு, நானும் ஆவலோடு விளையாடத் தொடங்கினேன். ஆனாலும் அவளைத் தொட்டுவிடக் கூடாதே என்பதிலும் கவனமாக இருந்தேன்.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவள், திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டு கீழே விழுந்து விட்டாள்!

நானோ ஓடிச்சென்று அவளைத் தூக்கினேன். சத்தியமாக இரண்டு விரலால் தான் அவளைப் பிடித்து தூக்கினேன்.

ஆனால், அவள் முகம் கோபத்தில் சிவந்தது!

நான் அவளைப் பிடித்திருந்த கையையும், என்னையும் மாறி மாறிப் பார்த்தவள்,

"கையை எடுங்க முதல்ல!" என்றாள்.

"சாரி, லதீபா! நீ கீழே விழுந்துட்டே... அதான்..."

"கையை எடுங்கன்னு சொல்லுறேன்-ல..!" அவள் கோபத்தோடு கூறவும் நான் எனது கையை எடுத்துக் கொண்டேன்.

அவள் எழுந்து தனது உடைகளை சரி செய்து கொண்டு...

"கெளம்பலாம்... டைம் ஆகிடுச்சி!" என்றாள்.

"என்ன லதீபா, இப்ப தானே வந்தோம். நீதானே விளையாடனும்-னு சொன்னே... கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாமே.."

"ஆமா, பெரிசா விளையாண்டதெல்லாம் போதும்.! இப்ப நீங்க வறீங்களா? இல்லை நான் கெளம்பட்டுமா?"

இதற்குமேல் அவள் பிடிவாதத்தை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த நான், எதுவும் பேச முடியாமல் அவளோடு கிளம்பினேன்.

"என் புத்தியை செருப்பாலயே அடிச்சிக்கணும்! அவள் தான் ஆரம்பத்திலேயே இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்று கட்டளை போட்டிருந்தாலே. பிறகு ஏன் நான் அவளைத் தொட்டிருக்க வேண்டும்" என்று என்னை நானே கடிந்து கொண்டேன்.

அவள் கோபமாக அங்கிருந்து கிளம்பினாளே தவிர, வரும் போதெல்லாம்... எப்போதும் போல, இயல்பாகவே என்னிடம் நடந்து கொண்டாள். எனக்குத்தான் கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.

ஆனால், இந்த நிகழ்வைப் பற்றி, பின்பு ஒரு நாள் அவள் என்னிடம் குறிப்பிட்டுக் காட்டிய போது, எனக்கு அழுகையும் ஆத்திரமும் பொங்கியது!!

என்னை மன்னித்துவிடு லத்..தீ..ப்பா!!

தொடரும்...


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Mon Nov 28, 2011 3:25 pm

தொடர்ச்சி-10


ஒரு நாள்...
தொலைபேசியில் அவள் தங்கையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
நான் அவளுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன். என்னை புகைப்படத்தில் பார்த்திருப்பதாகவும், லதீபாவுக்கு நான் பொருத்தமானவனாக இருப்பதாகவும் என்னிடம் அவள் தெரிவித்தாள். எங்கள் காதல் விவகாரம் அவளுக்கு எப்படி தெரியும் என்ற குழப்பத்துடன் நான் லதீபாவைப் பார்த்த போது..,

"அவளுக்கு நம்மளோட விஷயம் எல்லாம் தெரியும்!" என்று புன்முறுவலோடு கூறினாள் லதீபா. அப்போது அவளது முகம் வெட்கத்தில் சிவந்து மறைந்தது!

"சரி உன் தங்கச்சி கிட்ட சொல்லிட்டே... எப்போ உங்க அப்பாகிட்ட சொல்லப் போறே?" என்று நான் கேட்ட போது,

"அதான் பயமா இருக்கு! அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார்.... இருந்தாலும் எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தயக்கமாவே இருக்கு.."

"என்கிட்டயே சொல்லிட்டே... உங்க அப்பாகிட்ட சொல்லுறதுக்கென்ன?"

"நீங்க உங்க அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா?"

"நாங்கல்லாம் சிங்கம்-ல... பர்மிசன்-லாம் கேக்க மாட்டோம். நேரா இழுத்து கிட்டு போயி இவதான் என் பொண்டாட்டின்னு சொல்லுவோம்!"

"எல்லாம் பேச்சில் தான் சிங்கமா?... பாக்கலாம்... பாக்கலாம்... சிங்கம் என்ன பண்ணுதுன்னு பாக்கத்தானே போறேன்!"

"நீ வேணும்-னா இப்ப வரியா? கூட்டிட்டு போயி தாலி கட்டிக் காட்டுறேன்!"

"அய்யய்யோ..! இப்பவேவா?... நான் வரலப்பா...!"

இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து பேசிக் கொண்டோம்...

திடீரென்று பேச்சி நிறுத்தியவள்,

"நிஜமாவே என்னை உங்க அம்மாகிட்ட கூட்டிட்டு போய், இவதான் நான் கட்டிக்கப் போறவள்-னு சொல்லுவீ ங்களா?"

"ஏன் அப்படிக் கேக்குறே?"

"இல்லை... கொஞ்ச நாளாவே, என மனசுக்குள்ள ஒரு பட படப்பு இருக்கு கீதன். ஒருவேளை... நம்ம காதலை என் அப்பாகிட்ட எப்படி சொல்லுறதுன்னு நெனச்சதுனாலா? இல்லை வேற மாதரி எதுவும் நடந்திடுமான்னு ஒரே பதட்டமா இருக்கு கீதன்!"

"அதெல்லாம் நீ எதுக்கும் கவலைப் படாதே லதீபா, என்ன நடந்தாலும் நான் உன்னைக் கைவிட மாட்டேன்."

"சத்தியம் பண்ணுங்க!"

"என்ன லதீபா... எதுக்கெடுத்தாலும் சத்தியம் சத்தியம்-னு... என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? நீ பேசுறதைப் பார்த்தால் நீதான் என்னை விட்டுட்டு போய்டுவே-னு நினைக்கிறேன்!"

"என்ன கீதன் அப்படி சொல்லிட்டீங்க, உங்க கையில்தான் என் வாழ்க்கையே இருக்கு. நான் உங்களை நம்பித்தான் இருக்கேன். நான் உங்களை விட்டுட்டு போய்டுவேனா கீதன் யென் இப்படி பேசிறீங்க?"

"............................"

"நான் உங்க மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கேன்னு, என்னால இப்ப நிரூபிக்க முடியாது கீதன். ஆனா, எப்பவும் நான் உங்க வார்த்தைக்கு தான் கட்டுப்படுவேன். இது சத்தியம்!"

"இப்ப ஏன் தேவை இல்லாம இப்படி எல்லாம் பேசிக் கிட்டு இருக்கே? நீ என்னமோ பெரிய கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணு மாதரியும், உங்க அப்பா உன்னை எனக்கு தர மாட்டேன்னு சொல்லுரமாதரியும் இல்ல இருக்கு நீ சொல்லுறது.! அதெல்லாம் ஒன்னும் நடக்காது. நம்ம காதலுக்கு யாருமே எதிரிகள் கிடையாது. நம்மை யாராலும் பிரிக்கவும் முடியாது! நீ சும்மா மனசைப் போட்டுக் குழப்பிக்காம தைரியமா இரு!"

என்று நான் சொன்ன போது, லதீபா ஒரு திசையை சுட்டிக் காட்டினாள்! அவள் பார்க்கும் திசையை நோக்கிய போது, அங்கு... எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த சுண்டல்காரன்!!

எனக்கு சிரிப்பு தான் வந்தது,..

"என்ன லதீபா, இவனுக்கா பயப்படுறே...? இவனெல்லாம், சந்தர்பத்தைப் பயன்படுத்தி வியாபாரம் பண்ணிக்கற ஒரு சாதாரண ஆளு. இவனைப் போயி பெரிசா எடுத்துகிட்டு....."

"இல்லை கீதன், அவன் ஏன் நம்மளையே கவனிச்சிக்கிட்டு இருக்கான்?"

"இத பாரு லதீபா, இந்த சென்னையில நம்மளை யாரும் சீண்டக்கூட முடியாது. உனக்கு தெரியுமா? மேல ஆகாயத்துல நான் ஒரு சாட்டிலைட் வச்சிருக்கேன், அந்த சாட்டிலைட் 'கூகுல் மேப்' மாதரி! 24 HOURS நம்மளை வாட்ச் பண்ணிகிட்டே இருக்குது. அதுல நான் ஒரு புரோகிராம் பண்ணி வச்சிருக்கேன். அதாவது 100அடி தூரத்துல இருந்து யாராவது நம்மள தாக்க வந்தாங்கன்னா, அந்த சாட்டிலைட் என்னோட மொபைலுக்கு ஒரு எச்சரிக்கை மணி கொடுக்கும்.! அது மட்டுமில்ல.... இங்க நடக்குற எல்லாத்தையும் வீடியோவா, என்னோட வெப்சைட்டுல பதிஞ்சு வச்சிடும். இதுக்கு மேல உனக்கு என்ன பாதுகாப்பு வேணும்?"
Spoiler:
"உங்களுக்கு எல்லாத்துலயுமே விளையாட்டு தான் கீதன்!"

"பின்ன என்ன....? ஒரு சுண்டல் காரனைப் பார்த்து பயந்தா என்ன பண்ண சொல்லுறே...?" என்று நான் அவளை கிண்டல் செய்து கொண்டிருக்க, அவளது மொபைலுக்கு அழைப்பு வந்தது....

"கீதன், எங்க அப்பாதான் பண்ணுறார்! என்னவா இருக்கும்?"

"ஆரம்பிச்சிட்டியா? எதுக்கெடுத்தாலும் உனக்கு பயம் தானா? முதல்ல போனை எடுத்து என்னன்னு கேளு."

"..........................."(பேசிவிட்டு...)

"கீதன், அப்பா என்னை ஊருக்கு வரசொல்லுறார்...!"

"என்னவாம்?"

"தெரியல, வாம்மா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்-னு சொன்னாரு..."

"அப்பறம் என்ன? ஊருக்கு போயி முதல்ல நம்ம விசயத்தைப் பத்தி பேசிடு."

"நானு அப்படித்தான் நினைச்சி கிட்டு இருக்கேன் கீதன்."

"கவலைப் படாம போயிட்டு வா." என்று சொன்னதும், அவளும் 'சரி' என்று கூறினாள்.சிறிது நேரம் கழித்து....

"லதீபா!"

"என்ன கீதன்?"

"ஊருல உனக்கு யாராவது முறைப்பையன் இருக்கானா?"

"இல்லையே... ஏன் கேக்குறீங்க?"

"ப்ச்! ஒன்னும் இல்லை!"

"பார்த்தீங்களா... நீங்களே பயப்படுறீங்க..?"

"இது பயம் இல்ல.... ச்சும்மா!"

(அவள் ஊருக்கு சென்று வந்ததும், எங்கள் வாழ்க்கை திசை மறந்து போய்விடும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை!!)



தொடரும்...!


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Mon Nov 28, 2011 7:15 pm

தொடர்ச்சி-11

பின் குறிப்பு: இது வெறும் கதை மட்டும் தான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஊரிலிருந்து வந்து சேர்ந்த லதீபாவை சைதாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அழைத்து வந்தேன். (அப்போதெல்லாம் கோயம்பேடு டெப்போ இல்லை!)

ஏனோ தெரியவில்லை, லதீபா என்னை வைத்த கண் வாங்காமல் வெறித்துப் பார்த்தாள்! பிரிந்து விடுவோமோ என்ற பயத்தினால் தான் "அந்தப்பார்வை" என்பது எனக்கு அப்போது தெரியவில்லை!!

ஒரு வாரம் பிரிந்து இருந்ததனால் தான் நம்மை அப்படிப் பார்க்கின்றாள் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் 'அந்தப்பார்வை'யின் ஏக்கங்களும், தவிப்புகளும் பின்பு தான் எனக்குப் புரியத் தொடங்கியது!

"எங்கள் காதலை அவள் அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்க வேண்டும்" என்று ஊருக்கு சென்றவளுக்கு, அங்கே என்ன அதிர்ச்சி காத்திருந்தது(?) என்பதும் எனக்குப் பின்பு தான் புரிந்தது!

என்னோடு வாழவேண்டும் என்பதில் அவளுக்குத்தான் எவ்வளவு ஆசை இருந்திருக்கிறது....

காலம் சென்ற பின்புதான் எனக்கும் அது புரிந்தது.!!

ஒருவேளை....

நான் தான் அவளை தொலைத்து விட்டேனோ?...

ஆரம்பம் முதல் அவள் பயந்து கொண்டே இருந்தாளே....

நான் தான் அவளை அலட்சியப் படுத்தி விட்டேனோ?...

எனக்குத் தெரியவில்லை!!


இதோ! எனக்குள் பலவித மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது!

எனது விரல்கள், முறையாக எழுது கோலைப் பிடிக்க மறுக்கின்றன!...

என்ன எழுதுகிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. என் கண்கள் பார்வையை இழக்கத் தொடங்கி விட்டன!

மரணம் என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது!!

ஆம்! இன்னும் சில மணித்துளிகளில் நான் இறந்து விடுவேன்!!

இது வரை நான் வாழ்ந்தது அவளுக்காகவே!
என் வாழ்க்கையை, அவளது நினைவுகளுக்காகவே அர்ப்பணித்து விட்டேன்!
நான் இறக்கும் இந்தக் கடைசி நிமிடத்திலும் அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்!

இது தான், நான் அவளுக்கு செய்த துரோகத்திற்கான(?) தண்டனை!!

இந்தக் கதையை சொல்லி முடிக்கும் வரை என் மரணம் தள்ளிப்போகுமானால் அது எனக்கு நிம்மதியைத் தரும்!

காலம் பதில் சொல்லட்டும்!!


பேருந்தை விட்டு இறங்கியதும், என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த லதீபாவிடம்...

"என்ன லதீபா, அப்படிப் பாக்குறே?" என்றேன்.

"ஒன்னும் இல்லை. சும்மாதான்! ஏன் பார்க்கக் கூடாதா?" என்று குறும்பாகக் கேட்டாள்.

"ம்ம்.. பாக்கலாமே... சரி, ஊருக்குப் போனியே.. எல்லாரும் நல்லா இருக்காங்களா?"

"ம்ம்... இருக்காங்க."

"உங்க அப்பாகிட்ட நம்ம விசயத்தைப் பத்தி சொல்லிட்டியா?

"ம்ம்... சொல்லிட்டேன்."

"என்ன சொன்னாரு? என் மாமனார்!"

இப்போது லதீபா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்...

"சொல்லு லதீபா... என்ன சொன்னாரு?" நான் மீண்டும் கேட்டேன்.

உடனே அவள் என்னைப் பார்ப்பதை தடை செய்து கொண்டு...

"உங்க மேல.... எங்க அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை கீதன்!" என்றாள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,

"என்ன சொல்லுறே லதீபா? ஏன் அவருக்கு என் மேல நம்பிக்கை இல்லை?"

"சென்னையில இருக்குற பசங்க எல்லாம், காதலிச்சு ஊரு சுத்ததான் நினைப்பாங்கலாம். கல்யாணம்-னு சொன்னா ஒதுங்கிடுவாங்கலாம். அதனால..."

"ஏய்! யாருகிட்டப் பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?"

"........................."

"நான் உன்கிட்ட அப்படி என்னடி தப்பா நடந்து கிட்டேன்?"

லதீபா மீண்டும் என்னைப் பார்ப்பதை தவிர்த்து, வேறு பக்கம் திரும்பிக்கொண்டு...

"நீங்க தப்பா நடந்துக்கலைன்னு எனக்குத் தெரியும். ஆனா இதையெல்லாம் நான் எங்க அப்பாகிட்ட எப்படி சொல்லி புரிய வைக்கிறது? அதனால...."

"அதனால?"

".................."

"அதனால... என்ன சொல்லப் போறே....?

".........................."

"ஏய்! முதல்ல என்னைப் பார்த்துப் பேசு..." என்று நான் அவளை என் பக்கம் திருப்பினேன். ஆனால் அவள் என்னைப் பார்க்க மறுத்து விட்டாள்,

"சாரி கீதன்! என்னால உங்களைப் பார்க்க முடியல!"

"பார்க்க முடியலையா? இல்ல பார்க்கப் பிடிக்கலையா?"

"ப்ளீஸ் கீதன் ! என்னை அப்படியெல்லாம் கேக்காதீங்க. நான் அழுதுடுவேன் கீதன்!"

"அழுடி!... எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தானே ஏமாத்துறீங்க? நல்லா அழு!"

இப்போது லதீபா ஆத்திரப்பட்டாள்,

"என்ன சொல்ல வரேன்னு முழுசா கேக்காம, ஏன் கீதன் இப்படி தப்பு தப்பா பேசுறீங்க?" என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். அதுவரை தேக்கி வைத்திருந்த அவளது கண்ணீர் இப்போது கரை தேடியது!

ஏன் அழுகிறாள் என்பது புரியாமல்,
"சரி சொல்லு! என்ன சொல்ல வரே?" என்றேன் அதே கோபத்தோடு.

லதீபா, மீண்டும் பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அழுத்தமாகக் கூறினாள்...

"அதனால..., நீங்க அன்னைக்கு சொன்ன மாதரி.... என்னை உங்க அம்மா கிட்ட அழைசிகிட்டு போயி, எனக்குத் தாலி கட்டுங்க!!"



தொடரும்!...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Thu Dec 01, 2011 2:36 pm

தொடர்ச்சி-12

"நீங்க அன்னைக்கு சொன்ன மாதரி , என்னை உங்க வீட்டுக்கு அழைசிகிட்டு போயி எனக்கு தாலி கட்டுங்க!"

லதீபா இப்படி கூறுவாள் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை!

"என்ன லதீபா சொல்லுறே?"

"ஆமா! நெஜமாத்தான் சொல்லுறேன்!"

"இப்ப ஏன் இப்படி அவசரப்படுறே? நான் வேனும்ன உங்க அப்பா கிட்ட பேசி புரிய வைக்கிறேன் லதீபா."

"இல்ல கீதன், இப்ப அதுக்கெல்லாம் நேரம் இல்லை! நீங்க உடனே எனக்கு தாலி கட்டுங்க.!" என்று மிகவும் அழுத்தமாகக் கூறினாள்.

"ஏன் லதீபா? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?"

"ஐயோ கீதன்...! உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே..."

"இல்ல லதீபா, உங்க அப்பா இல்லாம நாம எப்படி கல்யாணம் பண்ணிக்கறது? அது தப்பில்லையா?"

"இல்லை கீதன்! எங்க அப்பா உங்களைப் பத்தி தப்பா நினைசிகிட்டு இருக்காங்கல்ல, அதானால, நான் தப்பான ஒரு பையன் கூட பழகலன்னு அவங்களுக்கு நிரூபிக்கணும்.! அதான், அவங்களுக்கு தெரியாமலே தாலி கட்டிக்கிட்டு அவங்க முன்னாடி போயி நிக்கணும்!!"

"............................."

"என்ன கீதன் யோசிக்கிறீங்க?"

"ஒன்னும் இல்ல லதீபா! நீ இவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்பறம் நானும் என்னை நிரூபிச்சிக் காட்டனும்! எங்க வீட்டுக்கு போகலாம் வா!" -என்று நான் சொன்னதும் லதீபாவின் முகத்தில் ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை! எதையோ சாதித்துவிட்ட நிம்மதி அவள் முகத்தில் தெரிந்தது.

அதே சந்தோசத்தோடு, அன்று இரவே இருவரும் எங்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம்!

வீட்டிற்கு சென்றதும், என் அம்மாவிடம், லதீபாவை என் தோழி என்று தான் அறிமுகம் செய்து வைத்தேன்.

என் அம்மாவும் அதை நம்பி மிகவும் அன்போடு உபசரித்து, பாசத்தோடு பழகினார்.

"பாத்தியாம்மா என் பையனை... யாருகிட்டயும் பேசவே கூச்சப் படுவான். ஆனா இன்னைக்கு, தோழின்னு ஒரு பொண்ணையே வீட்டுக்கு அழைசிக் கிட்டு வந்திருக்கான்."

"அதுவும் மகாலட்சுமி மாதரி நல்லா லட்சணமா இருக்கேம்மா"

"வெள்ளிக் கிழமையும் அதுவுமா வந்திருக்கே. ஒரு 10 நாளைக்கு தங்கிட்டு தான் போகணும்!"

ஏனோ தெரியவில்லை என் அம்மாவுக்கு லதீபாவைப் பார்த்தவுடனே பிடித்துப் போய் விட்டது.

..ம்கும்..! யாருக்குத்தான் பிடிக்காது அந்த அழகு முகத்தை!!

அன்று இரவு லதீபா என் அம்மாவுடனேயே படுத்துக் கொண்டாள்!
நீண்ட நேரம் இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்...

என் அம்மாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று நானும் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் எப்படியோ தூக்கிப் போனேன், அடுத்தடுத்த நாட்களில் ஏற்படப் போகும் அபாயம் தெரியாமல்!!

விடிந்ததும் லதீபா வந்து என்னை எழுப்பினாள்.

"கீதன்! எழுந்திரிங்க...."

"சோம்பல் முறித்து... எழுந்து லதீபாவைப் பார்த்தேன். அதற்குள் அவள் குளித்துவிட்டு, நெற்றியில் விபூதி வைத்து ஈரத்தலையில் ஒரு துண்டைக் கட்டுக் கொண்டு என் அருகில் அமர்ந்திருந்தாள்!

பெண்கள் குளித்து முடித்து ஈரத்தலையுடன், சொட்டு சொட்டாக வடியும் தண்ணீருடன் பார்க்கும் போது இருக்கும் அழகே தனிதான்!

"என்ன லதீபா, இன்னைக்கு ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கே!"

"ம்ம்... இருக்கும் இருக்கும்.!... முதல்ல எழுந்திரிச்சி குளிங்க"

"சாரி லதீபா, அம்மாகிட்ட உன்னை பிரண்டுன்னு சொல்லிட்டேன். கொஞ்சம் பொறுத்துக்கோ ரெண்டு நாள்ல சொல்லிடுறேன்..."

"என்னமோ சிங்கம்... அப்படி இப்படின்னு ஏதேதோ சொன்னீங்க..?"

"சொன்னேன்... ஆனா...." என்று நான் இழுக்கும் போது... அங்கே அன் அம்மா வந்து விட்டார்...

கோபத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டார்...

"யாருடா அந்தப் பொண்ணு?"


தொடரும்...


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI Mon Dec 05, 2011 2:32 pm

தொடர்ச்சி-13

"யாருடா அந்தப் பொண்ணு?" என்று அம்மா கேட்டதும் நான் ஒரு நிமிடம் ஆடிப் போனேன்!

"அம்மா... அது... வந்து..." லதீபாவையும் என் அம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

"என்னடா வந்து... போயின்னு இழுக்குரே...? அதான் அழைச்சிக்கிட்டு வந்துட்டியே, அதை சொல்ல வேண்டியது தானே!?"

"அம்மா!.."

"ஆமாண்டா, எனக்கு ராத்திரியே எல்லாம் தெரியும். பாவம் அந்த பொண்ணுக்கு இருக்குற துணிச்சல் கூட உனக்கு இல்லையே. நீயெல்லாம் ஏண்டா லவ் பண்ணுரே?"

"அம்மா... அப்படின்னா உனக்கு சம்மதமா?"

"உன் கூட சேர்ந்து, அவளும் பிரண்டுன்னு சொல்லாம, ராத்திரியே உண்மையை சொன்னாலே... அப்பவே முடிவு பண்ணிட்டேன் அவதான் என் மருமகள்-னு"

"அம்மான்னா... அம்மாதான்!" என்று என் அம்மாவை நான் கொஞ்சப் போக..,

"டேய்! டேய்! இருடா... நான் தான் சம்மதம் கொடுத்துட்டேனே.. அப்பறம் ஏன் இப்படி ஐஸ் வைக்கிறே?.."

"போம்மா... எனக்கு வெக்கமா இருக்கு" என்று நான் உள்ளே சென்று விட்டேன்.

"என் புள்ளைக்கு வெக்கத்தைப் பாருடியம்மா...?" என்று லதீபாவிடம் கிண்டல் செய்ய,

"போங்க அத்தை, எனக்கும் வெக்கமா இருக்கு" என்று அவளும் உள்ளே சென்று விட்டாள்.

"போச்சுடா! உனக்கும் வெக்கம் வந்துடுச்சா? சரி.. சரி.. ரெண்டு பேரும் வெக்கப் பட்டது போதும்... சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்புங்க. பக்கத்துல இருக்குற கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்" என்று சொல்ல, நாங்கள் கோவிலுக்கு செல்லத் தயாரானோம்.

என் அம்மா, கோவில் பூசாரியிடம் விஷயத்தை கூறி திருமணத்தேதி குறித்தார்.
பூசாரி நேரம் குறிப்பதற்குள் லதீபா ரொம்பவே அவசரப்பட்டாள்! எனவே மறு நாளே பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்!

"என் மீது லதீபாவுக்கு சந்தேகம் இருக்கிறது! அதை தான், அவள் தனது அப்பாவுக்கு என் மீது சந்தேகம் என்று பொய் சொல்லி இப்படி நாடகம் நடத்துகிறாள்." என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவள் நடத்திய அந்த நாடகம்(?) எதற்காக என்று நினைக்கும் போது, எனக்கு தொண்டைக்குழி அடைக்கிறது! அவளுக்குத்தான் என்னோடு வாழவேண்டும் என்பதில் எவ்வளவு ஆசைகள்!

பாவம்! அவளுக்காக இனிமேல் என்னால் கண்ணீர் வடிக்கக்கூட முடியாது என்று நினைக்கும் போது வேதனையாகவே இருக்கிறது!


மறுநாள் காலை, நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். லதீபா என்னை வந்து எழுப்பினாள்,

"கீதன்! எழுந்திரிங்க 7 மணியாகுது!"

நான் கண் விழித்துப் பார்த்தபோது, முதல் நாள் பார்த்தது போல,அதே ஈரத்தலையுடன்... ஆனால் இன்று, அளவுக்கு அதிகமான சந்தோஷம் அவள் முகத்தில் தெரிந்தது!

"ஹலோ! எழுந்திரிங்க... இன்னைக்கு நமக்கு கல்யாணம்! இணைக்கும் இப்படி தூக்கமா? தூங்கு மூஞ்சி!"

நான் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்,

அவள் "என்ன அப்படிப் பாக்குறீங்க" என்பது போல, தனது புருவத்தை உயர்த்தி சிறிய புன்னகையுடன் ஜாடை செய்தாள்.

எங்கிருந்தோ வந்த தைரியத்தினாலோ அல்லது அவள் முக வசீகரத்தினாலோ தெரியவில்லை, அவள் எதிர்பார்க்காத வண்ணம் நான் அவளை கட்டிப்பிடித்தேன். ஆனால் அவள் விசும்பியதனால் அவள் கைகள் மட்டுமே என்னிடம் மாட்டிக் கொண்டன...

"என்ன கீதன் இது! அத்தை இருக்காங்க... கையை விடுங்க!" என்று கூறிக்கொண்டு, கட்டிலுக்குக் கீழே உட்கார்ந்து கொண்டாள், அவள் முகமும் என் முகமும் அருகருகே இருந்தது....

"இப்ப கையைப் பிடிக்காதீங்கணு சொல்லுரியா? இல்ல அம்மா இருக்குறதால பிடிக்க வேண்டாம்னு சொல்லுரியா?"
என்று நான் அவளைக் கிண்டல் செய்ய,

"அதான் நமக்கு கல்யாணம் ஆகப்போகுதுள்ள.. அதுக்குள்ள என்ன அவசரம்? கையை விடுங்க கீதன்."

"அதான் நமக்கு கல்யாணம் ஆகப்போகுதே... அப்பறம் ஏன் இப்படி பிகு பண்ணுரே? கொஞ்சம் கிட்ட வாயேன்...?"

"ஆமா, ஆமா, ஐயாவுக்கு இப்பதான் எல்லாம் தோணுதோ....? எல்லா பசங்களுக்கும் லவ் பண்ணும் போதுதான் இதெல்லாம் பண்ணனும்-னு தோணும்...." என்று அவள் சொன்னது எனக்கு கோபம் வந்தது...

"ஏய்... என்ன விளையாடுரியா? நீதானே தொடக்கூடாது, அப்படி இப்படின்னு ஏதேதோ கண்டிஷன் எல்லாம் போட்டே."

"நாங்க அப்படித்தான் சொல்லுவோம். ஆனா, நீங்கதான் அப்படி இப்படின்னு ஏதாவது காரணத்தை வச்சி கிட்டு வரணும்..." என்று குறும்பாக என்னைப் பார்த்து சிரித்தாள்.

"ரொம்ப மோசமானவளுங்கடி நீங்க எல்லாம்."

"என்ன மோசமானவளுங்க?.. நான் என்ன சொன்னேன்... நாலு பேருக்கு முன்னாடி அப்படி நடந்துக்கறது அநாகரீகம்-னு தானே சொன்னேன். அதுக்காக இப்படி சாமியாரு மாதரியா இருக்க சொன்னேன்?"

"ம்‌ம்... அப்ப..ற..ம்....?"

"உங்க கூட தனியா இருக்கும் போதெல்லாம், இப்படிக் கட்டிப் பிடிக்க மாட்டீங்களா? கிஸ் பண்ண மாட்டீங்களா-னு எத்தனை நாள் நான் தவிச்சிருப்பேன் தெரியுமா? அது கூடவா ஒரு ஆம்பளைக்குத் தெரியாது?" என்று ரொம்ப ஏக்கத்தோடு கூறினாள்.

"சரி... இவ்வளவு தவிப்பெல்லாம் சொல்லுரியே.... அன்னைக்கு "கோவளம்" பீச்சுல நாம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம். அப்ப என்னவோ நான் உன் கையை பிடிச்சதுக்காக, நீ எவ்வளவு கோவப்பட்டே? உடனே அங்க இருந்து கிளம்பி வரல நீ? அது ஏன் அப்படி நடந்து கிட்ட?"

"பின்னே கோவம் வராதா? நானே எவ்வளவு ஆசையோட அங்க உங்களைக் கூட்டிக்கிட்டு போனேன் தெரியுமா?... நான் ஒண்ணும் அப்ப தடுமாறி கீழே விழல, வேணும்-னு தான் விழுந்தேன்... நான் விழுந்ததே நீங்க என்னை வந்து தூக்கணும்-னு தான் தெரியுமா?..."

"இவ்வளவும் பண்ணிட்டு அப்பறம் ஏன் கோபமா எழுந்து வந்தே... நான் உன்னை ரெண்டு விரலாளதானே தொட்டேன்?"

Spoiler:



தொடரும்...


என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by மகா பிரபு Sat Dec 10, 2011 5:23 pm

தொடருங்கள் நண்பா . ஆவலுடன் காத்து இருக்கிறேன் நான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 8 Empty Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum