புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_lcapஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_voting_barஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தாலாட்ட வருவாளா?


   
   

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 6:24 am

First topic message reminder :

இது ஒரு காதல் கதை!


அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..


தொடரும்...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jun 26, 2011 3:10 pm

அப்பூறோம் என்னாச்சு ?

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Jun 26, 2011 3:17 pm

muthu86 wrote:அப்பூறோம் என்னாச்சு ?

இன்று தொடர்கிறேன் நண்பா...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Jun 26, 2011 8:22 pm

தொடர்ச்சி....4


இருவரும் கூடிரிங்க்ஸ் சாப்பிட சென்றோம்... எல்லோரும் எங்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தனர்!

எதிர் எதிரில் அமர்ந்து கொண்டோம்...

ஏனோ தெரியவில்லை அவள் முகத்தில் ஒருவித துள்ளல் தெரிந்தது...

எனக்கும் அப்படித்தான்...

பேச நினைத்தது ஒன்று, ஆனால் பேசியது வேறு ஒன்று...

நிறைய யோசித்து.... கொஞ்சமாகப் பேசினோம்...

இருவர் குடும்பங்களைப் பற்றியும் பரிமாறிக் கொண்டோம்....

அவளுக்கு அம்மா இல்லையாம், ஒரு தங்கையும் தம்பியும் மட்டும். அப்பாவுக்கு விவசாயம், அவள் குடும்பச் சூழ்நிலையைக் கேட்ட போது எனக்கு

மிகவும் வருத்தமாக இருந்தது. அவளுடைய அப்பா, யாரோ ஒருவருக்கு ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்தாராம், ஆனால் அவன் சரியாகக் கடனைக் கட்டாமல்

மேலும் பல இடங்களில் கடனை வாங்கி, சுமை தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டானாம். இப்போது அந்தக் கடன் மொத்தமும் அவளுடைய அப்பாவின்

பெயருக்கு மாறி விட்டதாம். அவள் அப்பா சம்பாதிக்கும் அனைத்தும் வட்டி கட்டுவதற்கே போதவில்லையாம்.

"எங்க அப்பாவோட வருமானம் வட்டி கட்டவே பத்தாது, ஆனால் அந்த வருமானத்துக்குள்ள தான் எங்கள் குடும்பமே நடக்குது...!" என்று அவள் சொல்லும் போது எனக்கே கண்

கலங்கியது.. ஆனால் அவள் அலட்சியமாக சிரித்துக் கொண்டாள்... வேதனையை இப்படிக் கூட மறைக்கலாம் என்று அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்...

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், நானும் புன்னகைத்தேன்.

இன்னொரு விஷயம்! கேட்டால் உங்களுக்கே அவள் மீது பரிதாபம் வரும்... அதாவது, கல்லூரி முடிந்ததும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, சென்ட்ரல் ரயில்

நிலையத்தில் இருக்கும் ஒரு STD BOOTH-ல் வேலை பார்க்கிறாளாம்! அதில் கிடக்கும் வருமானத்தில் தான் அவள் படித்துக் கொண்டிருப்பதாகவும், அதனாலதான், அவள்

ஹாஸ்டல்ல இருந்து விலகி, தன் தோழிகளோடு ஷேர் பண்ணி வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் கூறினாள்... அப்போது நான் அவளிடம்...

"இந்த விஷயம், உங்க அப்பாவுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.

"தெரியும்! ஆனா, பாவம் அவர் என்ன செய்வார், அவரது இயலாமையால் தடுக்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல் தடுமாறினார். நான் அதைக் கண்டுக்காம

தொடர்ந்து வேலை பார்த்து கிட்டு இருக்கேன். சில நேரத்துல இந்தப் பணத்தையும் கூட வட்டிக்காக அனுப்பி வைப்பேன். அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார்!.." என்றாள்,

அப்போது மீண்டும் அவளது அலட்சிய சிரிப்பை நான் பார்த்தேன்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும், அவளுக்கு பலவாறு ஆறுதல் கூறினேன். அவளும் கொஞ்சம் சமாதானமாக நிம்மதியடைந்தாள்.

"அய்யய்யோ! என்னோட கஷ்டத்தை சொல்லி உங்களை மூட் அவுட் பண்ணிட்டேன் சாரி! ஆமா உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க..." என்று மீண்டும் இயல்புக்கு

வர முயற்சி செய்தாள்...

"நான் ஒரே பையன், எனக்கு அம்மா மட்டும் தான்..." என்று நானும் என் குடும்பத்தைப் பற்றி கொஞ்சமாகக் கூறினேன்... அதைக் கேட்ட அவள்,

"உங்களுக்கெல்லாம்... கஷ்டம்ன்னா என்னன்னே தெரியாதுல்ல...? ரொம்ப கொடுத்து வச்சவங்க..." - மீண்டும் அதே அலட்சிய சிரிப்பு...

அவள் அப்படி சிரிக்கும் போது கூட அழகாகத்தான் இருந்தாள்! அவளுடைய கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அவள் பேசும் தோரணையும்... அந்த அலட்சிய சிரிப்பும்....

அவளுடைய அழகான முக அசைவுகளும்... எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. "ஒரு பொண்ணு தன்னோட கஷ்டத்தை சொல்லி வேதனைப் படும் போது, உனக்கு ரசனை

தேவையா..?" என்று உங்களைப் போன்று, என் அடி மனமும் கூறிக் கொண்டிருந்தாலும், நான் அதையே ரசித்துக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொன்னா,

அவள் அப்படிப் பேசும் போது எனக்கு ரொம்பப் பிடிக்கும்! என்னென்றால், அந்த நேரத்தில் அவளுடைய முகம் பலவிதமான உணர்வுகளை மறைக்க முயற்சி செய்யும்!

மேலும் அப்போதுதான் அவள் என்னை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பாள்! எங்கே நான் அவளது உணர்வுகளைக் கவனித்து விட்டேனோ என்று!

சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பினோம்.... பில் கூட அவள் தான் கொடுத்தாள். நானும் அதைத் தடுக்க வில்லை. அவள் சந்தோசம் அடைந்தாள் போதும்

என்று இருந்து விட்டேன். இருவரும் கை கொடுத்து விடை பெற்றோம்...

அவளை சந்தித்த போது இருந்த அந்தக் அழகிய கணங்களை விட, இப்போது என் மனம் மிகவும் கனத்தது....

அவளுக்கு எதாவது செய்ய வேண்டும்!

நாங்கள் சந்தித்துப் பரிமாறிக் கொண்ட எத்தனையோ அழகிய நிகழ்வுகள் இருந்தாலும், இந்த சந்திப்பை மட்டும் என்னால் மறக்கவே முடியாது!

காலம் செல்லச் செல்ல, ஒரு நாள் உங்களுக்கும் இந்த நிகழ்வு நினைவுக்கு வரும்!!

இந்த சந்திப்பிற்குப் பிறகு அவள் என்னை எங்கோ அழைத்துச் செல்வது போல் உணர்ந்தேன்...

Spoiler:

தொடரும்...




என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jul 01, 2011 4:24 am

தொடர்ச்சி...5

அன்று முதல் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். உள்ளங்களைப் பரிமாறிக் கொண்டோம். அந்தப் பரிமாற்றம் இதுவரை, ஒரு அழகான நட்பின்

வடிவமாகவே இருந்தது...!

எனக்கு அவள் STD BOOTH-ல் வேலை பார்ப்பது கொஞ்சமும் பிடிக்க வில்லை. எனவே அவளை அந்த வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினேன்...

"ஆமா..., நீங்க அந்த STD BOOTH வேலைக்கு போயிதான் ஆகணுமா?"

"ஆமா! இல்லன்னா நான் எப்படி படிக்கிறது? அது மட்டும் இல்லாம எங்க அப்பாவோட கடனுக்கும் நான் வட்டிப்பணம் அனுப்பனுமே..." என்றாள் வேதனையுடன்.

"வேணும்னா, அந்தப் பணத்தை நான் தரேன். தயவு செஞ்சி நீங்க அந்த வேலைக்கு போக வேண்டாம்" என்று நான் கூறினேன்.

"வேண்டாங்க! உங்களுக்கு ஏன் சிரமம், அதுமட்டும் இல்லாம எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னைத் திட்டுவாரு. வேண்டாம் என் கஷ்டம் என்னோடே போகட்டும்!"

"நீங்க ஏன் உங்க அப்பா கிட்ட சொல்லுறீங்க? சொல்லாதீங்க! இது நமக்குள்ளேயே இருக்கட்டும். நீங்க வேலைக்கு போறதாகவே சொல்லி உங்க வீட்டுக்கு பணம் அனுப்புங்க"

என்று நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சம்மதிக்கவே இல்லை. வேண்டாம் என்று உறுதியாகக் கூறி விட்டாள்.

ஆனால், அதன் பிறகு இரண்டு நாட்கள் நான் அவளோடு பேசவே இல்லை! எனவே, அதை அவளால் தங்கிக் கொள்ள முடியாமல் போக எனது விருப்பத்திற்கு அவள்

சம்மதித்து அந்த வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டாள். அதன் பிறகு என்னால் முடிந்த உதவிகளை அவளுக்கு செய்தேன். அவளுக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும்

எனக்காக அவள் அதை ஏற்றுக் கொண்டாள். நாளடைவில் அது பழகிப் போக, அவளும் இயல்பாகவே என்னிடம் உதவிகள் கேட்கத் தொடங்கினாள்...

சில நாட்களுக்குப் பிறகு...

நான் அவளை வாங்க, போங்க என்று மரியாதையாக கூப்பிடுவது அவளுக்குப் பிடிக்க வில்லையாம். எனவே அவளது பெயரை சொல்லியே

அழைக்குமாறு என்னிடம் கூறினாள்! அதை சொல்லும் போது அவள் உதடுகள் பட்ட பாடும்..! அவளது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களும்..! அவளது விழிகளில் இருந்த

ஏக்கங்களும்... (மன்னிக்கவும் அதை எல்லாம் என்னால் மொழி பெயர்த்து சொல்லத் தெரியவில்லை! சில நேரங்களில் எனது கற்பனைக்குள் அவளது நளினங்கள் அடங்குவதும்

இல்லை! இப்படித்தான் நான் அவளிடம் பல முறை தோற்றுப் போயிருக்கின்றேன்)

சில நாட்களில் எங்கள் நட்பு, அந்த வட்டத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதை நான் உணர்ந்தேன்! ஆம், ஒரு நாள் கூட என்னால் அவளைப் பார்க்காமல் இருக்க முடிய

வில்லை! அவளோடு பேசாமல் இருக்க முடியவில்லை! எந்தப் பெண் குரலைக் கேட்டாலும் அவள் பேசுவது போலவே இருந்தது! எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளைப்

போலவே தெரிந்தது!

எனக்குள், நான் அவளைக் காதலிக்கத் தொடங்கினேன்...

ஆனால், ரொம்ப நாட்கள் என்னால் அதை மனதிற்குள்ளேயே வைத்திருக்கவும் முடியவில்லை! எனவே ஒரு நாள், என் மனதில் உருவாகிய காதலை அவளிடம்

சொல்லலாம் என்று முடிவெடுத்து அவளுக்கு போன் செய்தேன். அப்போது அவளும் ஏதோ ஒன்று என்னிடம் சொல்ல வேண்டும் என்று கூறினாள்!

பக்கத்தில் இருக்கும் ஒரு காஃபி ஷாப்பிற்கு வரச் சொன்னாள்...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருவரும் ஒரே நேரத்தில் காதலை சொல்ல நினைத்ததை பெருமையாக நினைத்துக் கொண்டேன்.

அவள் வரச்சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே நான் அங்கு சென்றேன். ஆனால், எனக்கு முன்னதாகவே அவள் அங்கு காத்திருந்தாள்!

எனக்கு அதிக சந்தோஷம்! என்னைப் போலவே அவளும் தனது காதலை சொல்ல தவித்திருக்கிறாள் என்றே மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்..

அவள் எதிரில் சென்று அமர்ந்தேன்... அவளிடம் இருந்து எந்த வரவேற்பும் இல்லை. ஆனால் அவளது முகத்தில் வெட்க ரேகைகள் பல வண்ணங்களில் சிதறி ஓடியது.

அதை ரசித்துக் கொண்டே நான் கூல்டிரிங்க்ஸ்-கு ஆர்டர் கொடுத்தேன். அவள் தனக்கே உரிய அந்த சிறப்பான ஓரக் கண்களில் என்னை விழுங்கிக் கொண்டிருந்தாள்...

பெண்கள், நேருக்கு நேர் பார்ப்பதை விட, அந்த ஓரப் பார்வைக்குத் தான் 'கிக்' அதிகம் என்பதை நான் உணர்ந்தேன்.! எனக்கு அது பிடித்திருந்தது.!

எனவே நானும் மௌனமானேன். ஆனால், பாவம்! அவளது துப்பட்டா அவள் கை விரல்களில் சிக்கிக் கொண்டு தவித்தது...

எதையோ சொல்ல முயற்சித்து அடிக்கடி என்னை நிமிர்ந்து பார்த்து, மீண்டும் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்! அவள் செய்யும் அந்த 'அலுச்சாட்டியத்தைப்' பார்த்த

போது, எனக்கும் என் காதலை எப்படி சொல்வது என்று தெரியாமல் நானும் தடுமாறிப் போனேன்...

காதலிப்பதை விட அந்தக் காதலை சொல்வது தான் மிகவும் மோசமான வேதனை என்பதையும் நான் அப்போது தெரிந்து கொண்டேன்.

அந்த நேரத்தில், "காதலை யாரடி முதலில் சொல்வது.... நீயா? இல்லை நானா?..." என்ற பாடல் எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்தது...

இந்த வரிகளைக் கேட்டதும் அவள் உதடுகள் துடித்தன... பட்டாம்பூச்சியின் இறக்கைகளைப் போல அவளது இமைகள் மூடித்திறந்தன...

அவள் சொல்வாள் என்று நான் எதிர் பார்க்க.... நான் சொல்வேன் என்று அவள் எதிர் பார்க்க...

உதடுகளும், உள்ளமும் எதிரிகளாகி உள்ளம் நினைத்ததை உதடுகள் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தன...

ஒரு அழகிய மௌனப் போராட்டமே அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது!

என்னதான் ஆண் தைரியம் மிக்கவனாக இருந்தாலும், காதலை சொல்லும் போது மட்டும் அவனுக்குள்ளும் பெண்மை குடியேறுகிறது என்பது என்னவோ உண்மைதான்!

யார் முதலில் சொல்வது என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தோமே தவிர ஆனால், கடைசி வரை இருவருமே பேசிக் கொள்ளாமல் விடை பெற்று சென்றோம்..!


தொடரும்...




என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jul 02, 2011 1:30 am

தொடர்ச்சி...6

எதற்காக பேசாமல் சென்று விட்டாள்? என்ற கேள்வி எனக்குள் பலவிதமான சந்தேகங்களையும், இன்னும் பல கேள்விகளையும் உருவாக்கி விடைகான முடியாமல்

நான் தவித்துக் கொண்டிருந்த போது எனது டெலிபோன் ஒலித்தது!

அவள்தான் செய்திருந்தாள்!

நான் ஆவலுடன் எடுத்துப் பேசினேன்...

"என்ன லதிபா, ஏதோ பேசணும்னு வரச்சொல்லிட்டு எதுவுமே பேசாம போய் விட்டாயே? என்றேன்.

அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை!

ஒருவேளை... ஏதாவது பிரச்சினையில் இருக்கிறாளா என்று நான் குழம்பினேன்...

"என்ன லதீபா? ஏன் பேசமாட்டேன் என்கிறாய்?" என்று நான் மீண்டும் கேட்டபோது....

மிகவும் மெல்லிய குரலில்...
Spoiler:
எனது ரத்த நாளங்கள் அனைத்தும் உறைந்து போனது! இப்போது என்னாலும் பேச முடியவில்லை!

இது நான் எதிர் பார்த்தது தான், ஆனாலும் அவள் சொன்ன விதத்தில் கொஞ்சம் தடுமாறிப் போனேன். என்றாலும் உடனே சுதாரித்துக் கொண்டு...

"என்ன திடீர்னு?" என்று கேட்டேன்.

"இல்லை, ரொம்ப நாளாவே என் மனசுக்குள்ள இந்த விஷயம் அரிச்சிக்கிட்டு இருந்தது... ஆனா எப்படி சொல்லுறதுன்னு தான் தெரியாம...."

"..................." இப்போது நான் மௌனமானேன்.

"என்னை ஏத்துப்பீங்களா?" என்று அவள் மீண்டும் கேட்க,

"அடிப்பாவி! இதை சொல்லத்தானே நானும் இத்தனை நாள் தவிச்சிக்கிட்டு இருந்தேன்!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு...

"என்ன கேள்வி இது? உன்னை யாருக்காவது பிடிக்காம இருக்குமா? நானும் இதை உன்கிட்ட சொல்லணும்னுதான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்"

"......................." அவள் மௌனமானாள்.

"ஆனா, நான் கொஞ்சம் யோசிக்கணும்..." என்றேன் நான். அப்போது அவள்...

"பொதுவா, நீங்க காதலை சொல்லி, நான் தான் யோசிக்கணும்னு சொல்லணும். ஆனா, ஒரு அழகான பொண்ணு நானே வெட்கத்தை விட்டு சொல்லியிருக்கேன்,

நீங்க என்னமோ யோசிக்கணும்னு சொல்றீங்க...?" என்று குறும்பாகக் கேட்டாள்.

"நான் யோசிக்கிறதே நீ அழகா இருக்கிறதால தான்!" என்று நானும் குறும்பாக கூறினேன்.

"ஏன், நீங்க கூடத்தான் அழகா இருக்கீங்க."

"நெஜமாவா?"

"ஆமா! நீங்க அழகா இருந்ததாலதானே நானும் உங்களை லவ் பண்னினேன்!" என்றாள்.

"அப்படின்னா.... நீ என்னை லவ் பன்னதுக்கு அழகுதான் காரணமா?" என்று நான் கேட்க,

"ப்ச்! ஹலோ...! நான் உங்க கிட்ட "ஐ லவ் யூ" ன்னு சொல்லியிருக்கேன்... அது முதல்ல புரிஞ்சுதா?... இப்ப போயி பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருக்கீங்க...?

உடனே கிளம்பி பீச்சிக்கு வாங்க. நான் வெயிட் பன்றேன்!" என்று சொல்லி விட்டு எனது பதிலை எதிர் பார்க்காமல் போனை துண்டித்துக் கொண்டாள்!

உடனே, நானும் மனதிற்கு புன்னகைத்துக் கொண்டு, பலவிதமான கற்பனைகளோடு சென்னை கடற்கரைக்கு விரைந்தேன்...


நண்பர்களே....!

இவ்வளவு சாதாரணமாக எங்கள் காதல் வெளிப்படும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்க வில்லை. அதுவும் அவளே முதலில் சொல்வாள் என்றும் நான்

நினைக்க வில்லை!

இது மட்டுமல்ல... என் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நான் எதிர் பார்க்காமலேயே நடந்து முடிந்திருக்கிறது! எங்கள் காதலும் கூட ஒருநாள், நான் எதிர்

பார்க்காமலேயே நிறைவேறாமல் முடிந்து போனது!!

ஆம்! இந்தக் கதையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவள் எனது காதலி அல்ல!

அதே நேரத்தில், நீங்கள் இந்தக் கதையை படித்து முடிக்கும் போது, நானும் இந்த உலகத்தில் இருக்கப் போவதில்லை!

இன்னும் சில மணித்துளிகளில் என் வாழ்நாள் முடிந்து விடும்! மரணத்தோடு போராடிக் கொண்டே... நான் இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கின்றேன்...

இப்போது உங்களுக்கு இந்தக் கதையின் தலைப்பின் அர்த்தம் புரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆம் நான் காத்திருப்பது, அவளது ஒப்பாரித் தாலாட்டிற்காக!

எனது இறுதி ஊர்வலத்தில், அவளது ஒப்பாரித் தாலாட்டைக் கேட்டால் என் ஆன்மா சாந்தியடையும்!

அவள் என்னைத் தாலாட்ட வருவாளா?.....


தொடரும்...





என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 02, 2011 12:40 pm

சோகமும் சுகமுமாய் விறுவிறுப்பானத் தொடர்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jul 02, 2011 2:22 pm

மகா பிரபு wrote:சோகமும் சுகமுமாய் விறுவிறுப்பானத் தொடர்.

உங்கள் கருத்திற்கு நன்றி நண்பா! என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 1772578765

(என்ன இன்னும் வரலையே என்று ஏக்கத்தோடு காத்திருந்தேன்... இப்போது நீங்கள் காதலை சொன்னதால்... மன்னிக்கவும் உங்கள் கருத்தை சொன்னதால் ஏக்கம் தீர்ந்தது!)



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 02, 2011 2:29 pm

வேலை பளுவால் வர இயலவில்லை நண்பா

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jul 02, 2011 2:32 pm

மகா பிரபு wrote:வேலை பளுவால் வர இயலவில்லை நண்பா

பரவாயில்லை நண்பா...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Jul 03, 2011 1:04 pm

தொடர்ச்சி...7

பல கனவுகளோடு கடற்கரைக்கு சென்ற போது. அங்கே எனக்கு பல ஏமாற்றங்கள் காத்திருந்தது!

இதுவரை தோழியாக மட்டுமே இருந்து பழகிய என் லதீபா, இந்த நேரம் முதல் எனது காதலியானாள்.

காதல் உணர்வுகள் ததும்ப நான் அவளை சென்று சந்தித்தேன்...

இந்த முதல் சந்திப்பில் அவள் என்னைப் பார்த்ததும், ஓடோடி வந்து இருக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டு, எனக்குப் பல முத்தங்களை கொடுக்க, நானும் அவளை

ஆசையோடு அள்ளி ஸ்லோமோஷனில் ஒரு சுற்று சுற்றலாம் என்று நினைத்துக் கொண்டு சென்ற எனக்கு, அது முதல் ஏமாற்றம்!

என்னைப் பார்த்ததும் ஒரு சிறிய புன்முறுவலுடன் என்னை அவள் வரவேற்றாள்.

ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் நானும் புன்னகைத்து அவளருகில் சென்றேன்...

என்னைப் பார்க்க கொஞ்சம் வெட்கப் பட்டாள்... கடற்கரைக் காற்றில் அசைந்த அவளது கூந்தலை சரி செய்து கொள்வது போல என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து கடல்

அலைகளைப் பார்த்தாள்...

கடற்கரை ஓரத்தில் நடந்து செல்வதில் அவளுக்கு ஒரு அலாதி இன்பமாம்... இதை அவள் சொன்னதும், நானும் அவள் கையைப் பிடித்து, இருவரும் கை கோர்த்துக் கொண்டு

நடக்கத் துவங்கலாம் என்று கற்பனை செய்து அதிலும் ஏமாந்தேன்!

சிறிது தூரம் மௌனமாக நடந்தாள்... நானும் அவளோடு நடந்தேன்...

அந்தக் கடற்கரையில், பல காதலர்கள் பல கோணங்களில் காட்சியளித்துக் கொண்டிருந்தனர். ஒரு காதல் ஜோடி கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்...

அந்தப் பெண், கடல் அலைகள் வரும் போதெல்லாம் தடுமாறி விழுந்து விடுவதும்... அந்தக் காதலன் அவளைக் காப்பாறுவது போல கட்டியணைப்பதும்... நாம் செய்வது

யாருக்குமே புரியாது என்பது போல இருவரும் உல்லாசமாகக் குளித்துக் கொண்டிருந்ததை ஆசையோடு நான் பார்த்து ரசித்துக் கொண்டு வரும் போது...

லதீபா என்னை ஒரு மாதரியாகப் பார்த்தாள்... நான் அவளைப் பார்த்து புன்னகை செய்தேன்...

உடனே அவள், ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு படகைக் காட்டி அங்கு சென்று அமரலாமா என்று கேட்டாள்!

அவள் சுட்டிக் காட்டிய படகு... மக்கள் நடமாட்டத்திற்கு அப்பாற்பட்டது. அந்தப் படகு மறைவில் நான் பல காதல் ஜோடிகளைப் பார்த்திருக்கின்றேன். அந்த காட்சியெல்லாம்

எனக்குள் ஒரு முன்னோட்டம் காட்ட, ஒரு உந்துதலோடு... நானும் ஆசையோடு சம்மதித்து இருவரும் அந்தப் படகை நோக்கி சென்றோம்!

படகு மறைவில் சென்றதும் முதலில் நான் அமர்ந்தேன். லதீபா என்னருகில் வந்தாள்...

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஒருவித தயக்கத்தோடு... என்னை உரசிக்கொண்டு... எனக்குப் பக்கத்தில் அமர்வாள் என்று எதிர் பார்த்து காத்திருக்க...

அவளோ, எந்தவித சலனமும் இல்லாமல், எனக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள் !

என்னடா காதல் இது! இதற்காகவா என்னை அவசரமாக கடற் கரைக்கு வரச்சொன்னாள்... இதற்காகவா இந்த மறைவான இடத்திற்கு அழைத்து வந்தாள்...

என்று நான் வெறுப்படைந்த போது....

"என்ன கீதன்? எதுவுமே பேசாம இருக்கீங்க?" என்று கேட்டாள் லதீபா.

"ஆமா, பேசுறதுக்குத் தான் இந்த மறைவான இடத்திற்கு அழைத்து வந்தாயா?... இதை பஸ் ஸ்டாப்பிலேயே பேசியிருக்கலாமே... இந்த இடத்தை வேறு காதலர்கள்

யாராவது பயன் படுத்தி இருப்பார்களே..." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு...

"லதீபா, நாம கொஞ்சம் முன்னாடி போயி உட்காரலாமா?" என்று கேட்டுவிட்டு எழுந்தேன்.

உடனே அவள், என் கையைப் பிடித்து தடுத்தாள்!

"உட்காருங்க கீதன்! நான் இங்க உங்களை அழைச்சி கிட்டு வந்ததுக்கு காரணம் இருக்கு!" என்றாள்.

உடனே எனக்குள், "இனிமேல் தான் ஆரம்பிப்பாளோ..." என்ற சபலம் தோன்ற, நானும் அமர்ந்தேன்.

அவள் தொடங்கினாள்...

"கீதன், நான் முதன் முதல்ல இந்த பீச்சுக்கு வந்தப்போ, இதே மாதரி பல இடத்துல நிறைய காதலர்களை பார்த்திருக்கேன்! அப்போ அவங்க இருந்த நிலைமையை என்னால

சொல்ல முடியாது. ஆனா அவங்களைப் பார்த்து மத்தவங்க எண்ணலாம் பேசினாங்கன்னு சொல்ல முடியும்! காதல்ங்கறது மனசு சம்மந்தப் பட்டது தானே..?

மனசால இணைஞ்சதுக்கு அப்பறம், எப்படி அவங்களால இப்படியெல்லாம் நடந்துக்க முடியுது?"

"சுத்தம்! அப்படின்னா எதுவுமே செய்யக் கூடாதுன்னு சொல்லாம சொல்லுறே... ம்‌ம்... சொல்லு சொல்லு! " என்று மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

"நான் அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் கீதன்! நானும் காதலிச்சா இதே இடத்துக்கு வந்து... நல்ல முறையில நடந்துக்கணும்னு."

"ஏன் லதீபா, உனக்கு யாராவது அவார்டு தறேன்னு சொன்னாங்களா?" என்று அவளிடம் கேட்டேன்.

"என்ன கீதன், நீங்களும் இப்படி பேசுறீங்க. இதெல்லாம் அசிங்கம் இல்லையா?"

"உஷாரா தப்பிச்சிக்கணும்னு பாக்குறியா? இது முதல் சந்திப்பு தானே.. அதனால என்னோட வேலையைக் காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன். அடுத்து அடுத்து நீ இந்தப்

பீச்சுக்கு வராமலா போகப் போரே அப்பப் பார்த்துக்கரேன் !" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு...

"அப்படி சொல்ல முடியாது லதீபா, எல்லாருக்குமே மனசுக்குள்ள ஒரு சின்ன சின்ன ஆசைகள் இருக்கும். அதை இந்தமாதரி சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலமா

தீர்த்துக்கறது தப்பில்லையே... இதெல்லாம் இல்லைன்னா அப்பறம் எதுக்குக் காதலிக்கணும்?" என்று சொல்லி என் ஆதங்கத்தையும் மறைவாகக் காட்டினேன்.

"அப்படின்னா உங்க மனசுல அப்படி எண்ணங்கள் இருக்கா? சும்மா சதையைப் புடிச்சிப் பாக்குறதுல என்ன ஆசை தீர்ந்திடப் போகுது கீதன்? அதுக்கெல்லாம் நேரம் காலம்

இல்லையா?!" என்று அவள் கேட்ட தோரணையைப் பார்க்கும் போது நான் எரிந்து விடுவேன் போலிருந்தது!

அதுமட்டுமல்லாமல், "சும்மா சதையைப் பிடிச்சிப் பாக்குறதுல..." இந்த வார்த்தைகள் 'செருப்பால்' அடித்தது போல எனக்குப் பல விஷயங்களை உணர்த்தியது!

அந்த வார்த்தையில் இருந்த ஆழமான அர்த்தங்களும் எனக்குப் புரிந்தது...

உடம்பைக் காட்டி ஆண்களை வசியப் படுத்தும் சில பெண்கள் மத்தியில், அந்த உடம்பு வெறும் சதைதான் என்று அலட்சியப் படித்திய என் லதீபா எனக்கு புதுமையாகத்

தோன்றினாள்! அவள் உடம்பையும் மீறி அவளது உள்ளம் எனக்குப் புரியத் தொடங்கியது!

"உண்மையான காதல் இருந்ததுன்னா, இந்த மாதரி நாலு பேருக்கு முன்னாடி கேவலமா நடந்துக்கணும் னு தோனாது கீதன் !" என்று மீண்டும் கூறினாள்.

"................................" நான் பேச வார்த்தைகள் இன்றி மௌனமானேன்.

"நான் உங்களை இப்படித்தான் எதிர் பார்க்கிறேன் கீதன். உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லையே..?"

"இல்லை லதீபா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை." தெளிவாகவே கூறினேன். உடனே அவள்,

"சத்தியம் பண்ணுங்க!" என்று தனது கையை நீட்டி கேட்டாள்.

எனக்கு அது கொஞ்சம் அனாவசியமாகத் தோன்றியது,

"சத்தியமெல்லாம் எதுக்கு? நான் எதுவும் தப்பா நடந்துக்க மாட்டேன். என்ன நம்பு, ப்ளீஸ்!"

"இல்ல, நீங்க சத்தியம் பண்ணுங்க!" என்று அவள் பிடிவாதமாக கேட்க, நானும் சத்தியம் செய்து கொடுத்தேன்.

அவள் முகத்தில் எதையோ சாதித்து விட்ட நிம்மதி தோன்றியது.

இன்னும் அவள் பேசிய பல விஷயங்களில் இருந்து, அவள் என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டாள் என்பது புரிந்தது.

நானும் அவளை "என் லதீபா" என்று முழுமையாக ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு, அவளைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று என் மனதில் இருந்த எண்ணம்,

தலை தெறிக்க ஓடிவிட்டது என்பது உண்மைதான் !

சிறிது நேரத்திற்குப் பிறகு, இருவரும் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது...

"அதுக்குள்ள எழுந்துட்டா எப்படி....? சுண்டல் சாப்பிட்டுப் போறது...!"

என்ற கரடு முரடான குரலுடன், நாங்கள் அமர்ந்திருந்த படகுக்குப் பின்னாலிருந்து ஒருவன் வந்தான் !

அவன் பேசும் தோரணையும், அவனது உருவமும் சினிமாவில் வரும் வில்லனைப் போல் இருந்தது...

அவனைப் பார்த்ததும், லதீபா பயந்து என் அருகில் ஒதுங்கினாள்...

என் லதீபாவை ஒரு மாதரியாகப் பார்த்துக் கொண்டே... அவன் பேசிய இரட்டை அர்த்த வசனங்கள் எனக்குள் ஆத்திரத்தைத் தூண்டியது...!

Spoiler:

தொடரும்...





என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 7 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக