புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
56 Posts - 73%
heezulia
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
221 Posts - 75%
heezulia
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
8 Posts - 3%
prajai
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_m10வாலியின் நினைவு நாடாக்கள் - Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலியின் நினைவு நாடாக்கள் -


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 12, 2011 12:14 pm

பிறையும் வில்லும்!

1931 - அக்டோபர் மாதம் 29 - ஆம் தேதி - வியாழக் கிழமை, இரவு எட்டு மணியளவில்-

ரோகிணி நட்சத்திரத்தில், ரிஷப ராசியில் -

திருச்சி மாவட்டத்தில் உள்ள, 'திருப்பராய்த் துறை’ என்னும் - பாடல் பெற்ற ஒரு

சிவஸ்தலத்தில் -

பிரஜோற்பத்தி வருடத்தில், பிறந்தவன் நான்.

தந்தையார் பெயர் வாங்கல் திரு. ஸ்ரீனிவாச அய்யங்கார். தாயார் பெயர் திருமதி.பொன்னம்மாள்.

வடகலை; அஹோபில மடத்தைச் சார்ந்த சிஷ்ய பரம்பரை; அருள்மிகு அழகிய சிங்கர் அவர்கள்தான், எங்கள் ஆசாரியர்.

எங்கள் குல தெய்வம் - கரூருக்கு அருகே உள்ள -

தான்தோன்றிமலை - அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி.

என் தந்தையார் - வெள்ளைக்காரன் காலத்தில் -

CUSTOMS AND EXCISE - இலாகாவில் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அந்த உத்தியோகத்தை SALT INSPECTOR என்றும் சொல்வதுண்டு.

கள்ளிறக்கும் மரங்களுக்கு SEAL வைப்பதும்; கடல் மீன்களுக்கு உப்படைப்பதும் - ஒழுங்காக நடக்கிறதா என்பதைக் கண்டறிந்து -

தவறிய ஒப்பந்தக்காரர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவதுதான் என் தந்தையார் வேலை.

பஞ்சக்கச்சம்; பன்னிரு திருமண்; முப்புரி நூல்; முடித்த குடுமி;

- இப்படிப் பரம ஆசார சீலராக வைதிகம் வழுவா வேதியராக வாழ்ந்த என் தந்தை -

காக்கி UNIFORM அணிந்து - CAMP PEON சகிதம் CASE பிடிக்கப் போவார்.

அப்படி - அற்றை நாளில் என் அப்பாவிடம் பணிபுரிந்த ஒரு CAMP PEON பற்றிச் சொல்லத்தான் -

என் - BIO DATAவை விரித்துரைக்கும்படி ஆகிவிட்டது.

ஒரு பிராமணருக்கு - மிக மிகப் பிடித்தமான ஊழியராகவும்; ஓர் உற்றுழியில் உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிய உத்தம புருஷனாகவும் விளங்கிய -

அந்த CAMP PEON-ன் பெயர் திரு. இப்ராஹிம்!

என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே -

என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் - நினைவழிக்கும் கொடிய நோய் அது!

அந்தக் காலத்தில் அதற்கான வைத்தியமே - விறகுகளை அடுக்கித் தணல் மூட்டி, அதன் மீது சிறிது நேரம் நிற்கவைப்பார்கள் -

உடல் சீதளம் குறைந்து உஷ்ணம் பெற!

இந்த அசுர வைத்தியமெல்லாம், என் அம்மாவுக்கும் நடந்தது. இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்?

அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம், புழக்கத்திற்கு வரவில்லை. ஆவின் பாலால் மட்டும் - சின்ன சிசுவைக் காப்பாற்றிவிட முடியாது; அது சீவிக்க - தாய்ப்பால் MUST!

CAMP PEON இப்ராஹிமின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்துஇருந்தார்.

அந்த இஸ்லாமிய மாது தான் - ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி -

இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்கள்.

இது - இந்துவென்றும்; இது - இஸ்லாமென்றும் -

முலைப் பாலைக்கொண்டு மூதலிப்பாருண்டோ? இன்று நான் - முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்!

இளமைப் பருவம் வந்தது. நான் திருச்சி வானொலியில் தற்காலிகப் பணியில் சேர்ந்தேன்.

'உனக்குக் கதை எழுத வருகிறது; எழுதய்யா!’

- என்று, ஊக்கமும் உள்வலியும் தந்து என்னை உற்சாகப்படுத்திய பெருமகனார் -

திரு.A.A.ஹகீம் அவர்கள். உடன் பிறந்த இளவலாய் என்னை வளர்த்தெடுத்தார். பின்னாளில் -

திரு.ஹகீம் அவர்கள் சென்னை வானொலியில் பெரிய அதிகாரியாகப் பணிபுரிந்தார்கள். திரு.ஜெய காந்தனுக்கும் நெருங்கிய நண்பராயிருந்தவர்.

வாயில் PIPE வைத்துப் புகைப்பார்; வெற்றிலைக் காவி வீற்றிருக்கும் பல் வரிசை தெரிய நகைப்பார். இன்னொரு சீதக்காதி அளவு சிந்தை விசாலமானவர்.

அதே - திருச்சி வானொலியில் இன்னொரு இஸ்லாமியப் பெருமகனார் இருந்து -

'ஓய்! நீர் பெரிய கவிஞனாக வருவீரய்யா!’ என்று, என் ஆரம்ப காலக் கவிதைகளைக் கண்டு, என்னை ஆசீர்வதித்தவர்.

அவரே பெரும் கவிஞர்; அவர்தான் 'செந்தாமரை’ எனும் புனைபெயரில் யாப்பொடியாப் பனுவல்களை யாத்த -

திரு.ஹமீது அவர்கள். சதாவதானி திரு.செய்குதம்பிப் பாவலரின் திருமகனார் இந்த ஹமீது!

சென்னைக்கு வந்தேன், சினிமா வாய்ப்புகள் தேடி.

அவ்வப்போது - கடனுக்கு சார்மினார் சிகரெட்டும், வெற்றிலை பாக்குப் புகையிலையும் தந்து -

'வாலி! நீ பெரிய ஆளானப்புறம் - இதுக்கான காசை, உங்கிட்ட வசூல் பண்ணிக்கிறேன்!’ என்று -

சளைக்காமல் கடன் தந்து, என்னை ஆதரித்தது - 'வெற்றிலை பாக்குக் கடை’

திரு.சுல்தான் அவர்கள்!

நாங்கள் - பின்னாளில் பிரபலமான பெரிய ஆளாக வருவோம் என்று கணித்துக் கடன் தந்தார் திரு.சுல்தான்.

அப்படியே வந்தோம், நானும் நாகேஷ§ம்!

படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு, இந்தப் பிறவியில் கிட்டாது என்று -

இதயம் ஒடிந்திருந்த வேளையில் - 'வாடா! கண்ணா! - உனக்கொரு வாய்ப்புத் தர்றேன்; கே.வி.மகாதேவன் மியூசிக்ல என் படத்துல எழுது!’ என்று -

பரிவோடு அழைத்து - நைந்து, நசிக்க இருந்த என் நம்பிகை வேரில் -

நாலு சொட்டு நீர் வார்த்து, அதற்கு உயிரூட்டியவர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் திரு.சுலைமான் அவர்கள்!

திரு.சுலைமான்தான், மாடர்ன் தியேட்டர்ஸில் 'பாசவலை’ படத்தில் பாட்டெழுத -

'பட்டுக்கோட்டை’க்கு வாய்ப்பு வாங்கித் தந்தவர். அவர்தான், சென்னைக்கு வந்து இரு பாகஸ்தர் களுடன், 'பத்மா ஃபிலிம்ஸ்’ என்று ஆரம்பித்து -

சிவாஜி; எம்.ஜி.ஆர்; மற்றும் ஷி.ஷி.ஸி. போன்றவர்களை வைத்துப் படம் எடுத்தவர்.

திரு. S.S.R; விஜயகுமாரி நடித்து, திரு. தாதாமிராசி இயக்கத்தில் தான் தயாரித்த 'நீங்காத நினைவு’ என்னும் படத்தில் -

எழுத்தாளர் திரு. ம.ரா-வின் சிபாரிசை ஏற்று உடனே எனக்கு வாய்ப்பளித்து, புகழேணியின் முதல் படியில் ஏற்றிவிட்டார்!

பிறகு -

திரு.டி.எம்.இப்ராஹிம் எனும் இசையமைப்பாளர், எனக்கு ஓரிரு படங்களில் பாட்டு வாங்கிக் கொடுத்து -

'கவலைப்படாதே! உன் ROOM வாசல்லேயும் ஏகப்பட்ட கார் நிற்கும் காலம் ஒண்ணு வரும்!’ என்று -

தாயினும் சாலப் பரிந்து பேசிய தயாபரன் அந்த இப்ராஹிம் பெருமகன்!

பன்னிரண்டு ஆண்டு காலம் - நான் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் குடியிருந்தேன் - மனைவி, மகனோடு.

சினிமா வருமானம்தானே! முன்பின் வரும்; இருப்பினும், வாடகையை நான் கொடுக்கும்போது வாங்கிக்கொண்டு உதவியவர் -

அந்த வீட்டின் உரிமையாளர் திருமதி.ஸுனைதா பேகம் அவர்கள்.

இப்படி - என் வாழ்வு வடிவு பெற -

உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் -

முகமதியர் குலத்தில் முளைத்தவைதான் -

திரைப்படத்தைத் தாண்டி - இலக்கிய உலகிலும் எனக் கோர் இடத்தைத் தந்து அங்கீகரித்த பெருமகனார் -

அமரராகிவிட்ட நீதியரசர் திரு.இஸ்மாயில் அவர்கள். அவர், தலைமை ஏற்றிருந்த சென்னைக் கம்பன் கழகத்தில்-

பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர்.

என்னுடைய 'அவதார புருஷ’னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர். திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி - என்னைப் பெருமைப்படுத்தியவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்!

இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரு நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

அதுதான் - கவிஞர் பெருந்தகை - என் இனிய இளவல் - திரு.மு.மேத்தா அவர்கள் வசன கவிதையாகப் புனைந்திருந்த நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு!

அதை - ஒரே இரவில் வாசித்து முடித்தேன். அற்புதமோ அற்புதம்! அதைப் படித்த பாதிப்பில்தான் - நான் 'அவதார புருஷ’னை - எழுதப் புகுந்தேன். திரு.மேத்தா, ஓர் இஸ்லாமியப் பெருமகன்.

ஆக - ஓர் இஸ்லாமிய விளக்குதான், இன்னோர் இந்து விளக்கை ஏற்றிவைத்தது எனலாம்!

என் மனைவி இறந்தபோது

மின் மயானம் வரை வந்து எனக்கு ஆறுதலைச் சொன்னவர்கள், இரு இஸ்லாமியப் பெருமக்கள்.

ஒருவர் - புகழ்சால் எலும்பு சிகிச்சை நிபுணர் (ORTHOPAEDIC SURGEON) திரு. டாக்டர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள்; மற்றொருவர் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர் திரு. ஆயிரம்விளக்கு உசேன் அவர்கள்.

திரு.உசேன் அவர்கள் உடல் நலம் சரி இல்லாத நிலையிலும் - 'WALKER’ வைத்துக்கொண்டு வந்து என் வருத்தத்தில் பங்குகொண்டவர்.

வளர்ந்து வரும் திரைப்பட இளைய இயக்குநர் திரு.இப்ராஹிம் அவர்கள் -

இரவு முழுக்க என் வீட்டு வாசலில் விழித்தபடி அமர்ந்து - என் மனைவி மறைவுக்குத் துக்கம் காத்தவர்!

'பத்மஸ்ரீ’ விருதை என் சட்டையில் மாட்டும்போது - மேதகு திரு. அப்துல் கலாம் அவர்கள் சொன்னார்கள்.

'இது - உங்ககிட்ட இருக்கிறதுதான், பொருத்தம்!’

நான் -

கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற கோதண்டம்!

விகடன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 3:21 pm

அண்ணா நினைவு நாடாக்கள் அல்ல....வரலாறு...அவ்வளவு நேரம் ஆகீற்று படிக்க...பகிர்வுக்கு நன்றி....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக