ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

+3
முரளிராஜா
கலைவேந்தன்
அன்பு தளபதி
7 posters

Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by அன்பு தளபதி Wed May 11, 2011 8:41 pm

மே13' நிகழ இருப்பது
ஆண்டவன் கட்டளை..
ஈழத்து வேதனையின்
ஏக்க விளைச்சல்.
கோபப்படாமல் ஐயா
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

வெளியில் நீங்கள் வேசமிட்டு
நாடகம் ஆடினாலும்
உங்கள் கள்ளமான
உள்ளுணர்வில்
இப்படித்தான் நடக்கும் என்று
கருக்கட்டி
ஊற்றெடுத்த உண்மை
உத்தியோக பூர்வமாக
பிரசவமாகப்போகும் பொழுது.

காலதேவன் உங்களுக்கு
கட்டை இறுக்கப்போகும்
கனிவான கடைசி நாள்.

சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள்
இப்போதே நீங்கள் தத்தளிப்பது
தெரிகிறது
இருந்தும்
இது சிறிய ஆரம்பம் மட்டுமே.
தொடர இருப்பது பெருங்கதை
.
நவீன நரசிம்மர் உங்களுக்கு
இனி நிரந்தர ஆட்சி விடுமுறை
ஆனாலும் நீங்கள்
தொடர்ந்து அரச விருந்தினர்
அதற்கான மூலங்கள்
உங்களை சுற்றி படர்ந்து விட்டன.



இதன் பின்னும்
நச்சு பாஷாணமான
உங்கள் நாக்கு
நிச்சியம் உறங்க மறுக்கலாம்
என்ன செய்ய
உங்கள் குடும்பத்தலைவிகள்
குஞ்சம்மா பொன்னம்மா தவிர
கேட்பதற்கு இனி எவரும் வரப்போவதில்லை.

எச்சில் சிதற நீங்கள் எடுத்துவிட்ட
பத்தடுக்கு பொய் எல்லாம்
திரும்பி நின்று கும்மியடிக்கப்போகும்
கோரப் பொழுது.
இப்பொழுதே பத்திரிகைகள்மேல்
நீங்கள் எரிந்து விழுவது
சிரிப்பூட்டுகிறது.

அரை நாள் உண்ணாவிரதம்
அபத்தம் என்று
நீங்களே உணர்ந்துகொண்டதால்
இனி காற்றாடக்கூட
கடற்கரைக்கு போகமுடியாது.
சில நேரம்
கம்பி எண்ணவேண்டிய காலம்.

வெட்கமாக இருக்கிறதா
உதவிக்கு ஒத்தூதிய குஞ்சாமணியும்
குதிப்பேன் நிமிர்வேன் என்று
கோசமிட்ட தருமர்களும்
செத்த மாட்டின் உண்ணிபோல
மெல்ல விட்டகலப்போகும்
விகாரப்பொழுது.

இதே மே மாதம்
இரண்டாயிரத்து ஒன்பது
பதின் மூன்றளவில்.
ஒரு அதிகாலைப் பொழுது
ஆறு நாட்கள் அன்ன ஆகாரம்
இல்லாமல் கிடந்த
என் அன்னையையும்
இரண்டு தங்கைகளையும்
உன் அன்னை சூனியாவின்
எரி குண்டுக்கு இரையாக்கிய தினம்.

திகதி என்னவென்று தெரியாத
திகிலடைந்த பொழுதுகள்.

குடிநீர் இல்லாத கோடை வெய்யில்.
நடுநிசியிலும் குண்டுமழை.
உப்புக்கடற்கரையில்
பதுங்கு குழிக்குள் பனித்த
உவர்ப்பு நீர்கூட
இரத்தமும் மலமும் கலந்த கலவையாக.

ஆறு பொழுதுகள்
அந்த உப்பு நீரே உணவாகி
கோரக்குண்டில் சிதறி
என் தாயும் சகோதரிகளும்
செத்து மடிந்ததை அறிவீரோ?

காலை ஒரு கண்மணியிடம்
கோப்பியும் இட்லியும்
மாலை ஒரு மங்கையிடம்
மணக்கும் புறியாணி
செமியாக்குணம் போக்க
சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும்
ஒரு செலுக் கூட்டம்.

நல்லெண்ணெய் தோசை
நாட்டுக்கோழி சூப்பு
பல்லிடுக்கில் தங்கிவிடா
மெல்லிய மீன் பொரியல்
சில்லென்று பருகிவிட
சிறப்பான மினரல் நீர்
பாலும் பழமும்
படுத்தவுடன் பெருத்த குசு.

இப்படியா ஐயா எங்கள் வாழ்வு
எரிகுண்டை எதிர்கொண்டு
இழவுகளை மடிதாங்கி
பட்டினியில் பாய்விரித்து
செத்து மடிந்த கதை
சத்தியமாய் அறியீரோ

நல்லதோர் வீணை செய்து-அதன்
நலன் கெடுத்து புழுதியில்
எறிந்தீர் கண்டோம்-நிச்சியம்
பதில் சொல்லுவாள் சிவசக்தி
சூத்திரம் என்னென்று
காண்பீர் என்பேன்,

பொல்லா எம் வாழ்வு-ஒரு
பொறியளவு புரிந்தீரோ-அதன்
வல்லமை காண்பீர் காண்
வரும் பொழுதுகளில்.

நல்லவை எல்லாம் போக
நடைப்பிணமாக நீர்-வண்டியில்
தள்ளிட ஆளில்லாமல்
தவித்திட நேரும் சொல்வேன்
சத்தியம் இதுவே யென்பேன்
சாவிலும் சபித்தே நிற்போம்.

உன் வாழ்வினில் குறுக்கே நாங்கள்
வந் திடர் செய்ததுண்டோ
ஏனென்று கேட்டு யாரும்
இன்னலை தந்ததுண்டோ
மூவிரு மணம் புரிந்தீர்
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர்
கோடியில் ஊழல் கண்டீர்
குடும்பமே கழகம் என்றீர்
மானுடம் காணா பொய்யும்
மலைபோல நஞ்சும் தாங்கி
போராடி களத்தில் நின்ற-என்
பிறப்பையே அழித்தாய் நேற்று.

எங்களை கொன்றொழித்தீர்
இனமானம் காக்க வெந்த-முத்து
குமரனையும் லூசன் என்றீர்
தீ சுட்ட வேதனையால்
சினங்கொண்ட சீமான் தன்னை
வல் வினை சாட்டி பொல்லா
செல்லினில் அடைத்தீர் கண்டோம்.

பதவியை விட்டுச்சென்று-நீ
பாடையில் போனாலும் காண்-என்
தாயவள் வயிற்றெரிவும்
தங்கையர் ஏம்பலிப்பும்
கூடவே எரிந்து மாண்ட
குழந்தைகள் விடலை பெண்கள்
காவலாய் நின்று காத்து
காவியமாகிப்போன
வீரரின் அழிவில் எல்லாம்
வினையாகிப் போனீர் ஐயா.

நாசமாய் போவீர் என்று
நான் மட்டும் சொல்லவில்லை.
ஊரெல்லாம் சொல்லக்கண்டேன்
உலகமே திட்ட கண்டேன்.

இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர்
உணர்ந்திடும் நாளை காண்பீர்.
நல்லவை எல்லாம் உன்னை
நாடிடா தென்பேன் கொள்வீர்.
புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்
நிச்சியம் நடக்கும் நாளை
நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்

நன்றி சவுக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty Re: ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 1:02 am

வக்கிருந்தும் வாய்ப்பிருந்தும்
திக்கிருந்தும் தீர்ப்பிருந்தும்
சொக்குப்பொடி போட்ட மைனர்
சிக்கெடுக்கும் பெண்ணைப்போல
செக்குமாடாய் சென்னைக்கும்
தில்லிக்கும் சென்றலைந்து
கொக்கினைப்போல் காத்திருந்து
கொடும்பதவி பெற்றவரே..


பணிகளைத் தான் மறந்தீர்
’மணி’ மொழியை நிதம் புரிந்தீர்..
கனிமொழியைக் காக்க எண்ணி
பிணிமொழியை பேசிநிதம்
வணிகரையும் தோற்கடிக்கும்
சனிமுனி போல் தமிழகத்தை
துணியவிழ்த்து ஓடவிட்டீர் ..


இக்காலம் பதில் சொல்லும்
முக்காலம் உமை வெல்லும்
எக்காளம் போட்டு நின்ற
சிக்காளா உமை விதியும்
சிக்காளி ஆக்கிவைத்து
சிதையேற்றும் காலம் வரும்
முக்காவே உமைஎமனும்
பிய்க்காமல் விடமாட்டான்..!


இந்த கவிதை கண்டு என் மனதில் சட்டென்று தோன்றிய கவிதை மணி..!



Last edited by கலைவேந்தன் on Thu May 12, 2011 8:55 am; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty Re: ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by முரளிராஜா Thu May 12, 2011 7:16 am

இரண்டு கவிதைகளும் அருமை சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty Re: ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by ரபீக் Thu May 12, 2011 10:24 am

ஐய்யா வந்தாலும் அம்மா வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் பண்ண போறது கிடையாது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty Re: ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 8:21 pm

அறம் பாடிக்கொல்வது என்பது இது தானோ...? இதில் என் பங்கும் கொஞ்சம் உண்டென்பதை பணிவுடன் உணர்கிறேன்..!


நன்றி முரளி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty Re: ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by kirikasan Fri May 13, 2011 10:26 pm

ரபீக் wrote:ஐய்யா வந்தாலும் அம்மா வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் பண்ண போறது கிடையாது


பெண்கள் சித்திரவதைக்குள்ளாகி கொலை செய்யப்படும் காட்சி கண்டு நெகிழாத இதயமில்லை. இவரின் இதயமும் நெகிழந்ததாக அறிகிறோம். அத்துடன் துணிச்சலான முடிவுகளை எடுப்பவர் என்றும், சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர் என்றும் அறிகிறோம்.
இங்கே தமிழர் மத்தியில் முழு நம்பிக்கை உள்ளது. அன்னை காப்பாள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty Re: ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by jeylakesengg Sat May 14, 2011 1:09 pm

இதுதாண்டா ஜனநாயகம் ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி 224747944 ,
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty Re: ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by dsudhanandan Sat May 14, 2011 1:51 pm

சூப்பருங்க சூப்பருங்க


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி Empty Re: ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum