ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி

Go down

இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Empty இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி

Post by கண்ணன்3536 Mon May 09, 2011 9:45 am



அருண் நேரு

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவும் பிற உலக நாடுகளும் ஒசாமா பின்லேடனை வலைவீசித் தேடி வந்தன. மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட அந்தச் சம்பவம் அமெரிக்காவுக்கு ஆறாத ரணமாகவே இருந்துவந்தது. இப்போது இஸ்லாமாபாத் அருகிலேயே பின்லேடனைக் கொன்றிருப்பதன் மூலம் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பழி வாங்கிவிட்டது.

ஒசாமாவுக்கு எதிரான அமெரிக்கா கமாண்டோக்களின் தாக்குதல் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்திருக்கிறது. அமெரிக்காவுக்கும் அதன் உளவுத்துறைக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே இதைக் கூறலாம்.

மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற பிராந்தியங்களில் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்லேடனே காரணம் என்று கூறப்பட்டாலும், பல ஆண்டுகளாகவே பயங்கரவாத இயக்கங்களின் தலைவராக அவர் இல்லை. அவரது சொற்படி தாக்குதல்கள் நடந்தன என்றும் கூற முடியாது.

ஒசாமா கொல்லப்பட்ட வீட்டில் தொலைபேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தவிதமான தகவல் தொடர்பு இணைப்பும் இல்லை. தகவல் கூறுவதற்கான ஒரு சில ஆள்கள் மட்டுமே வந்துபோய் இருந்திருக்கின்றனர். அவர்களை மட்டுமே கொண்டு மிகப்பெரிய பயங்கரவாத இயக்கத்தை வழிநடத்துவதோ, தாக்குதல்களைத் திட்டமிடுவதோ சாத்தியமில்லை.

அவர் வசித்த வீடு 2005-ம் ஆண்டிலேயே பிரத்யேகமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்கிற தகவல் தெரியவந்திருக்கிறது. ஏதோ ஓர் ஆதாயத்துக்காக பாகிஸ்தான் அரசே, அவருக்குப் புகலிடம் வழங்கியிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

எத்தனையோ அப்பாவிகளை ஈவிரக்கமே இல்லாமல் கொன்று குவித்தவர் ஒசாமா. அவர் பயங்கரவாதத்தின் சின்னமாக இருந்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும் ஒசாமா மீது தாக்குதல் நடத்தும்போது, அவரது மனைவியும் குழந்தைகளும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்காகவே அமெரிக்காவும், அமெரிக்கக் கமாண்டோ படைகளும் பாராட்டப்பட வேண்டும்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை ஒரு போருடன் ஒப்பிடலாம். போருக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகள் இதற்கும் பொருந்தும். பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் துணை போக மாட்டோம்; எங்கள் மண்ணைப் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம்; பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தரமாட்டோம் என்றெல்லாம் பாகிஸ்தான் கூறிவந்தது. இது பின்லேடன் கொல்லப்படுவதற்கு முந்தைய நிலை. பாகிஸ்தானின் ராணுவ மையத்துக்கு அருகிலேயே பின்லேடன் சகல பாதுகாப்புடன் வசித்து வந்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கும் நிலையில், இனிமேலும் பாகிஸ்தானின் பேச்சை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.

பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில் எவ்வளவு பரம ரகசியமாக இருந்தாலும், ஒருநாள் அம்பலமாகியே தீரும். இது தெரிந்திருந்தும், பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருப்பதோ அல்லது யாருக்கேனும் பயந்து கொண்டிருப்பதோ பாகிஸ்தானுக்கு நல்லதல்ல.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30 முதல் 40 ஆயிரம் அப்பாவிகள் வரை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அரசு நிர்வாகத்திலேயே பயங்கரவாத ஆதரவு சக்திகள் இருப்பதால்தான் இப்படி நாளுக்கொரு தாக்குதல்களை நடத்த முடிகிறது. இதெல்லாம் தெரியவந்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் இருந்த தூதரகத்தை அமெரிக்கா மூடிவிட்டது. விசா வழங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்துவிட்டது. குட்டு வெளிப்பட்டுவிட்ட நிலையில், பாகிஸ்தான் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பயங்கரவாத நாடு என்று பாகிஸ்தான் மீது முத்திரை குத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அந்த நாட்டுக்கு ஆதரவாக யாரும் நிற்கவும் மாட்டார்கள்.

ஒவ்வொரு மதத்திலும் தீவிரவாத எண்ணம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பொதுநலமும் கிடையாது. அவர்கள் யாருடைய பிரதிநிதிகளும் அல்லர். சுயலாபம் மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருக்கும். இத்தகையவர்கள்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர்களையும் அவர்களது கருத்துகளையும் புறக்கணித்து விடுவதே நமக்கு நல்லது.

பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும். சரிந்து கிடந்த செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்கு அவருக்கு இது ஒரு வாய்ப்பு. ஒருவகையில் இது அவரது அதிருஷ்டம்தான். எப்படியோ, பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருக்கிறது என்று ஆண்டாண்டு காலமாக நாம் கூறிவந்தது இன்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகியிருக்கிறது.

ஜனநாயகத்தில் வாக்குவங்கி அரசியல் தவிர்க்க முடியாதது. அது இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி. ஒபாமாவின் பதவிக்காலத்தில் அவர் மீது எத்தனையோ எதிர்மறையான விமர்சனங்கள் வீசப்பட்டன. உங்களது பிறந்தநாள் சான்றிதழை வெளியிடுங்கள் என்றுகூட சில நாள்களுக்கு முன்பு அவரை நிர்பந்தித்தார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஒசாமா பின்லேடன் மீதான கமாண்டோ நடவடிக்கை மூலம் எதிரிகளை வாயடைக்கச் செய்திருக்கிறார் ஒபாமா. அவரது அரசியல் பிரசாரத்துக்கு இது பயன்படும். எதிர்காலத்தை இப்போதே கணிக்க முடியாது என்றாலும், மீண்டும் ஒருமுறை ஒபாமா அதிபராவதற்கு ஒசாமா வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று பலர் கூறுவதையும் நாம் மறுக்க முடியாது.

உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. நமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் அம்சம் இதுதான். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வெகு சிறப்பாக எப்போதும் இருந்ததில்லை.

நமது நாட்டின் மக்களாட்சிக்கு ஏற்பவும் சட்டத்துக்கு உட்பட்டும்தான் நாம் நடக்க வேண்டியிருக்கிறது. அதனால் பெரிய நாடுகள் கூறுவதை அப்படியே ஏற்று நடக்கும் போக்கு நம்மிடம் இல்லை. இருந்தாலும் பனிப்போர் காலத்துக் கொள்கைகளையே இன்னமும் நாம் பின்பற்றி வருவதில் அர்த்தமில்லை. மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இந்தக் கொள்கைகள் நிராகரிக்கப்படுவதை நாம் விரைவில் காணப்போகிறோம். பின்னர் திரிபுராவிலும் இதைக் காணமுடியும்.

கடந்த இருபது ஆண்டுகளாகவே நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எத்தனை பிரச்னைகள் நமக்கு முட்டுக்கட்டைகளாக வந்தாலும் 2011-ம் ஆண்டிலும் நமது வளர்ச்சி சிறப்பாகவே இருந்து வருகிறது. உள்நாட்டுப் பாதுகாப்பும், எல்லைப் பாதுகாப்பும்தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத் தடைகளாகும். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பின்லேடன் மறைவாலும், மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் முழு அளவிலான போராலும் உலக நாடுகள் அனைத்தும் உஷாராக இருக்கின்றன. நாம் எந்த அளவுக்குப் பயங்கரவாதத்தை முறியடிக்கத் தயாராக இருக்கிறோம் என்பது சோதனைக்கு உள்ளாக்கப்படும் காலம் இது.

துனீஷியாவிலும் எகிப்திலும் உள்ள நிலைமைக்கும் ஏமன், அல்ஜீரியா, மொராக்கோ, சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உள்ள நிலைமைக்கும் அடிப்படையிலேயே பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கும் தனித்தன்மைகள் இருக்கின்றன.

பஹ்ரைனிலும் சவூதி அரேபியாவிலும்கூட ஆட்சியாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் நமது நாட்டின் வர்த்தகத் தொடர்புகள் ஏராளம். பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்றும், வல்லரசாக வேண்டும் என்றும் ஆசைப்படும் நாம், இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பொறுப்பானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒசாமா கொல்லப்பட்டதன் மூலம் செப்டம்பர் 11 அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் நவம்பர் 26 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் கணக்குத் தீர்க்கப்படவில்லை. பாகிஸ்தானே இதற்குப் பதில் சொல்லக் கடைமைப்பட்டுள்ளது. நாம் அமெரிக்கா அல்ல. நாம் 15 ஆயிரம் கோடி ரூபாய் உதவி கொடுக்கவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி ஆயுத சப்ளை செய்யவில்லை.

அதனால்தானோ என்னவோ நமது நாட்டில் நடந்த பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்துத் தருவதற்கு பாகிஸ்தான் முயற்சி எடுக்கவில்லை. ஹபீஸ் சயீத் முதற்கொண்ட நீண்ட பட்டியல் நம்மிடம் இருக்கிறது. அமெரிக்காபோல நம்மாலும் நடவடிக்கை எடுக்க முடியும்.

பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்பதை அமெரிக்கா ஒப்புக்கொள்ளுமானால், பயங்கரவாதிகளைப் பிடிப்பதில் அவர்களுக்கு ஒரு நீதி, நமக்கு ஒரு நீதி கிடையாது என்பதையும் ஏற்க வேண்டும்.

- தினமணி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum