புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி Poll_c10என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி Poll_m10என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி Poll_c10என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி Poll_m10என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 30, 2011 10:29 pm

என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் எனது மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவருமான "சோலை'' எதை எழுதினாலும் அதை விருப்பு வெறுப்பின்றி ஒரே சீரான மனநிலையில் நான் படிப்பது வழக்கம். பாலும் நீரும் கலந்த கலவையில், தனக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை போன்ற நிலையினின்று என்றைக்கும் தடுமாறாதவன் நான்.

ஆதலால், தமிழகத் திரைப்படத் துறை குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை வார இதழ் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்டாற்றியும் தொடர்ந்து தியாகங்கள் செய்தும் இயக்கத்தின் தருக்களாக வளர்ந்துள்ள என் பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும், அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகிலும் பொருளீட்டி புகழ் ஈட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி பகுத்தாய்ந்து; தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

எனது அருமை நண்பர்கள்

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன். நான் திரைக்கதை வசனம் எழுதிய முதல் படங்களான அபிமன்யூ, ராஜகுமாரி ஆகியவற்றில் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக தோன்றி இருக்கிறார்.

அவரை அடுத்து எனது அன்பு நண்பர் சிவாஜி "பராசக்தி'' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இப்படி எனக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகை தெளிவாக புரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

சினிமா துறைக்கு விடிவு காலம்

எழுத்து நடையின் வேகத்தில் சோலை, யாரோ ஒருவர், பெரியதோர் தயாரிப்பாளர் கோபத்தின் உச்சத்தில், இந்த ஆட்சி மாறினால்தான் சினிமா துறைக்கு விடிவு காலம் என்று ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அவர் பெயரையும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லவும் சோலை தவறவில்லை.

என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர் கிடைக்கவில்லை

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார்.

மற்றவர்களையும் பாருங்கள்

பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

ஓட்டாண்டிகள்

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? ஆட்சி மாற வேண்டுமென்று துர்வாச முனிவரை போல கோபப்பட்ட தயாரிப்பாளருக்கு நான் நினைவூட்ட விரும்புவது, ஏன் அவரே பல முறை கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பல மேடைகளில் சொல்லியதுதான். அவை வருமாறு:

சினிமா துறைக்கு அளித்த சலுகைகள்

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தகுதி வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு அவை வெளியிடப்பட்டது முதல் 4 வாரங்கள் வரை கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் முதன் முதலாக 12.12.1996 அன்று தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டுத்தான் வந்தது.

புதிய படங்களுக்குக் கேளிக்கை வரியை 54 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக 1989-ம் ஆண்டில் குறைத்த தி.மு.க. அரசு, 1.8.1998 முதல் அதை 30 சதவீதமாகவும், 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தது. 10 ஆண்டுகளுக்கு முன்வந்த திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக 1.8.1998 அன்று குறைத்ததுடன்; மொழி மாற்றுப் படங்களுக்கான கேளிக்கை வரியையும் பிற தமிழ்ப்படங்களுக்குக் குறைக்கப்பட்டது போல் குறைத்தது தி.மு.க. அரசு. இதே போல, இணக்க வரி விதிப்புகளும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டன.

கேளிக்கை வரி ரத்து

இந்த வரிக்குறைப்புகளின் மூலம் ஆண்டிற்கு ரூ.60 கோடி அளவிற்கான வரிச் சலுகைகளை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் 1998-ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசு வழங்கியது. விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி செய்தது.

அத்துடன் உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999 முதல் 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 1.4.2000 முதல் திரைப்படங்கள் குத்தகை மீதான 4 சதவீத விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி முழுமையும் ரத்து செய்யப்பட்டிருப்பதும் இந்த ஆட்சியிலேதான்.

படப்பிடிப்பு க் கட்டணம் குறைப்பு

தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள மற்றும் கலைச்சின்னங்கள் உள்ள இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓரிடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 என்பதை ஆயிரம் ரூபாய் எனவும், ஏனைய இடங்களுக்கு ரூ.2,500 என்பதை ரூ.500 எனவும் 1996-ல் குறைத்தது தி.மு.க. அரசு. ராஜாஜி மண்டப படப்பிடிப்பு வாடகை தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2003-ல் ஒரு லட்சமாக உயர்த்தியது ஜெயலலிதா அரசு.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்குப்பின் அது ரூ.25 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அது, 25.6.2006 அன்று தி.மு.க. அரசினால் ரூ.10 ஆயிரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களில் வகை-1 என்ற பிரிவில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.10 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், வகை-2-ன் கீழ்வரும் இடங்களுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ரூ.5 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.3,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு

சின்னத் திரைக்கான படப்பிடிப்புக் கட்டணங்கள் பெரிய திரைக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும் எனவும் 25.6.2006 அன்று ஆணையிட்டது தி.மு.க. அரசு. தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் சண்டைப் பயிற்சியாளர்கள் சண்டைக் காட்சியின்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், செயல்பட முடியாத அளவிற்குக் காயம்பட்டு ஊனமடைய நேர்ந்தால் ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கும் திட்டம் 1996-ல் அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படக் கலைத்துறை, சின்னத்திரை சார்ந்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூருக்கு அருகில் பையனூரில் 96 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் உழைப்பாளிகள் நலன்களைக் காத்திட திரைப்படத் துறையினர் நல வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 9.7.2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த கதை வசனத்துக்கான ஊதியம் ரூ.25 லட்சத்தில் வருமானவரி போக ரூ.18 லட்சம் திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

போர்க் கருவிகள்

நண்பர் சோலை, திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலரின் எண்ணத்தை, தன் கட்டுரையின் வாயிலாக தெரிவித்திருப்பதையொட்டி இந்த விளக்கத்தை அவர்களுக்கு தெரிவித்திட உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டு திரையுலகத்திற்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

இதை எல்லாம் செய்த குற்றத்திற்காகத்தான் இந்த ஆட்சி மாற வேண்டு மென்று திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலர் எண்ணுவார்களானால், அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு நண்பர் சோலைக்குத்தான் உண்டு.

கலைத் துறை, இலக்கியத் துறை இரண்டையும் என் அரசியல் இலட்சியப் போராட்டத்திற்குத் தேவையான போர்க்கருவிகளாக நான் கருதுகிறேன். சில பேர் லட்சிய போரின் பக்கம் அடியெடுத்து வைக்காமல், தலைவைத்துப் படுக்காமல் கலைத்துறை, இலக்கியத் துறைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். காரணமின்றி அவர்களில் சிலருக்கு என் மீது அழுக்காறும், அசூயையும் ஏற்படுவது இயல்புதான். அதற்காக நான் என்னுடைய லட்சியத்தை புதைத்து விட்டு, லட்சங்களைத் தேடி அலைய மாட்டேன்.

-இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 30, 2011 10:30 pm

செய்றதெல்லாம் செய்துட்டு இப்ப நியாயத்தை பேசுறதை பாரேன் ஜாலி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 11:22 pm

உங்கள் குடும்பம் திரைத்துறையில் ஈடுபடுவது தவறு இல்லை. உங்கள்
குடும்பம் மட்டும்தான் திரைபடதுறையில் ஈடுபடவேண்டும் என்று நினைப்பதுதான் தவறு...

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 30, 2011 11:28 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 01, 2011 5:39 am

உங்கள் ஆட்சி சாதனைக்கு வாழ்த்துக்கள் தலைவரே!

அதே சமயம் மற்ற தயாரிப்பாளர்களை படம எடுக்கவிடாமல் மிரட்டுவதாக சொல்கிறார்களே, அது மட்டும் வேண்டாம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 8:32 am

வை.பாலாஜி wrote:உங்கள் குடும்பம் திரைத்துறையில் ஈடுபடுவது தவறு இல்லை. உங்கள்
குடும்பம் மட்டும்தான் திரைபடதுறையில் ஈடுபடவேண்டும் என்று நினைப்பதுதான் தவறு...

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சியர்ஸ்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 01, 2011 8:40 am

மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி Scaled.php?server=706&filename=purple11
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 11:56 am

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சினிமா எடுத்தால் தவறில்லை. ஆனால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே எடுக்கவேண்டும் என்பது தான் தவறு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:14 pm

என்னுடைய வாரிசுகளின் வளர்ச்சியில் மட்டும் அர்த்தம் கற்பிப்பது ஏன்? என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தொண்டாற்றியும், தொடர்ந்து தியாகங்கள் செய்தும் கட்சியின் தருக்களாக என்னுடைய
பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் வளர்ந்துள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகில் பொருளீட்டி புகழ் ஈட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக் கணைகள் பாய்ச்சுவதால் உரிய
விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.
1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறேன். இதில் அபிமன்யூ, ராஜகுமாரி, பராசக்தி உள்ளிட்ட ஏராளமான படங்களும் அடக்கம். எனக்கும், திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் அனைவருடனும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகத்தினர் தெளிவாகப் புரிந்தவர்கள் என்பதை மறந்திருக்க முடியாது.
"கருணாநிதியின் பேரன், பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?' எனக் கேள்வி எழுப்பி ஒரு புத்தகத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து, பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம். முருகன்,
ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம், ஏ.வி.எம்.சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும்-நடிகர் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், நடிகர் ரஜினி, அவருடைய மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும், நடிகர் கமல், அவருடைய சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டு இருப்பதும், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அவருடைய பிள்ளைகள், ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவக்குமார், அவருடைய பிள்ளைகள் சூர்யா, கார்த்தி ஆகியோர் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கை. அதுமாத்திரம் அல்ல; கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதனை முடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள்; எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாகி தெருவிலே நின்றார்கள் என்பதையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் புத்தகமாக எழுதியுள்ளார்.
என் குடும்பத்தில்...: என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும்-திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி Scaled.php?server=706&filename=purple11
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 08, 2011 5:19 pm

உங்கள் வாரிசுகள் சினிமா துறையில் ஈடுபடுவது தவறில்லை..
ஆனால் உங்கள் வாரிசுகள் மட்டுமே சினிமா துறையில் ஈடுபடவேண்டும் என்று நினைப்பதுதான் தவறு....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக