புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
6 Posts - 46%
heezulia
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
372 Posts - 49%
heezulia
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_m10கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 16, 2010 3:34 am

கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும்

1.பெண்ணின் சோகம்!

பட்ட மரம்ஒன்று பாதிக்கிளை தானுடைந்து
கட்டியவன் மாளக் களையிழந்த மாதொருத்தி
பொட்டின்றி பூவின்றி புன்னகைக்கும் இதழின்றி
நிற்பதுபோல் நெடிதுயர்ந்து நிற்கஅதன் பக்கத்தே

சுட்ட சுடலைஒன்றின் சூழலதை அச்சமிடும்
நட்டதொருபேயாய் நடந்தருகே போவோரை
சட்டென்று பீதியெழச் செய்வதென ஆகுமரக்
கெட்டழிந்த கிளைநோக்கி கிளிஒன்று வந்ததுவே

வட்டவெயில்தான்மறையும் வானச்சிவப்புநிறம்
கொட்டியதோர் குங்குமமோ குடல்கிழித்த உதிரமதோ
வெட்கமுற்ற கன்னியவள் விளைகன்னசெஞ்சிவப்போ
திட்டமிட்டு இனமழிக்கும் தமிழீழப் பூமியதோ

என்னும் வகைதெரியா இயற்புற்ற மாலையிலே
சின்னக் கிளைநோக்கி சேர்ந்ததாம் பசுங்கிளியும்
தன்னை இருத்தியதன் தலைதிருப்ப மறுகிளையில்
கன்னங்கருவண்ண குயிலொன்று தனியிருந்து

வீசுமெழிற் காற்றினிலே வீணையெனும் குரலழிய்
மாசுடைய காதலெண்ணி மனம்விட்டுபாட்டிசைக்க
நேசமுடன் தானிருந்து நெஞ்சம் உருகிவரும்
பாசம் இழந்தகுயிற் பாட்டைக்கிளி கேட்டதடா

(குயில் பாடுகிறது)

”வாச மலரெனவே வாழ்க்கையிலே நானிருந்தேன்
பேசி எனைமயக்கி பேதைமனம் கொண்டவரே
ஆசைமுடிந்ததுவோ அன்புமனம் விட்டதுவோ
தேசம்கடந்துமேநீர் திசைகாணாச் சென்றதென்ன

பூவை எறிந்தனைஏன்? புயலடித்துவீழ்ந்தனனே
சாவை அணைத்துவிடும் சஞ்சலமும் கொண்டேனே
தேவை முடிந்தவுடன் தேடவிட்டுப் போனவரே
பாவை இவளொருத்தி பாடுதுயர் கேளாயோ

பேதை உனைநம்பிப் பெண்மைதனை ஈந்தேனே
போதை முடிந்தவுடன் போன இடம் கூறாயோ?
பாதை மறந்து எனைப் பார்க்க மனம் கூடலையோ
மாதைபிரிந்ததென்ன? மாறிமனம்வந்திலைலேல்

நாவை அறுதெறிந்து நான்சாக மாட்டேனோ?
நோவை எடுத்த உடல் நஞ்சாகி மாளாதோ?
காவிஉடல் எடுத்து கட்டையில போட்டெவரும்
மேவித் தீ மூட்டாரோ? மின்னல்வந்து வீழாதோ?

காதல் கனிந்ததென கற்பனையில் நானிருக்க
போதல் இனிதெனவே போனவரே எங்கு சென்றீர்
மோதல் இருந்திடலாம் மோகம் கலைந்திடலாம்
கூதல் கலைத்துஎன்னை கூடியபின் பிரிவதுவோ"

பக்கமிருந்தழுது பாடுங்குயில் பார்த்துமன
துக்கமெடுத்தே, தன் தோல்விதனை எண்ணிக்குரல்
விக்கித்திணறிஒரு வேதனையில் தான்துடித்து
சிக்கித் திரிந்தகுயில் சொல்லுமொழி தான்கேட்டு

திக்கற் றபேடுதனை திரும்பி மனதிரங்கி,
”மிக்க துயரெடுத்து மேதினியில் வாழ்பவளே
எக்கதியு மில்லையென இளைத்து அழுபவளே
ஏக்கம் எடுத்தகதை ஏதெனவே சொல்லாயோ?”

2. துயரின்முடிவு!

மாலை யிருள்மயக்கம் மாந்தர்வயல் தோட்டமதில்
வேலை முடித்தலைந்து வீடேகும் காட்சியுடன்
தோலை எலும்புந்தத் தோன்றும் சிலமாடுகளும்
காலை எடுத்தபசி கண்டபுல்லோ போதாமல்

நொண்டி நடந்தசைய, நோயெடுத்தோர் முதியவரும்
வண்டியி ருந்தபடி வாய்திறந்து தானிருமி
தொண்டை கனைத்தவொரு தோற்றமதும் கண்டேயக்
கெண்டை மீன் நீர்வெளியே கிடந்து துடித்ததென

வெண்ணை என உருகி வேதனையை கொட்டியதாய்,
கண்ணின் துளி உதிர்த்த கருங்குயிலோ கூறியது
”பெண்ணின் நலமறியாப் பித்தர்கள் வாழும்வரை
மண்ணில் கரைவதுவோ மாதர்விழி நீராகும்

அன்னைதிருவயிற்றில் அழகுமணிக் கருவுயிர்த்து
பின்னர் உதிக்கையிலே பிறந்தவொரு அழுகையவர்
கன்னதிருந் தொழிந்து காய்வதுதான் எப்போது?
சின்னக் குழந்தையெனில் சீராட்டிப் பாட்டிசைப்பர்

கன்னி வயதென்றால் கதைநூறு பேசிடுவார்
பின்னைவீட்டிலிவள் பேசியது பார்த்ததென்பர்
கன்னத்தொரு முத்தம் கண்டதெனப் பொய்யுரைப்பர்
சின்ன மனதெடுத்து சேதிபல கூறிடுவர்

உண்மைக் காதலுடன் ஒருவன்தனை நேசிப்பின்
பெண்மைச் சுகமறிந்து பேசாமல் போயிடுவான்
மண்ணில் எறிந்ததொரு மாதுளையின் முத்தெனவே
கண்ணீர் சுரப்பதன்றி காப்பதற்கு யாருமில்லை

எண்ணத் திருத்திமன துள்ளே குமுறியொரு
கிண்ணப்பசும்பாலில் கொட்டியதோர் துளிவிசமாய்
உண்ணவும் முடியா உமிழ்ந்திடவும் மாட்டாது
மண்ணில் கிடந்துழலும் மங்கையரில் ஒன்றானேன்

என்றிடப் பைங்கிளியோ இன்னலே இல்லாத
ஒன்றில்லை வாழ்வில் உரைதிட நீகேளாய்
தென்றல் புயலாகும் திரைகடலும் பொங்கிவரும்
கொன்றை மலர்தானும் கொழுந்துவிட்டுத் தீஎரியும்

பெண்ணே உலகமதில் பெருஞ்சக்தி கொண்டவளாம்
கண்ணீர்க் கிரையாகி காலமெலாம் துஞ்சுகிறாள்
எண்ணி வெகுண்டெழுந்தால் எரியும்,ஒருமதுரையென
கண்ணை விழிக்க ஒரு காற்றும் புயலாய் தோன்றும்

மாவுலகு சுற்றும்விசை மேலெழுந்த சூரியனாம்
காவுமிந்த அண்டவெளி காற்றில்லா சூனியமும்
ஏவி ஒரு சக்தியதன் இழுவைக்கு ஆடுதெனில்
தூவிநிலம் வீழ்சக்தி தோற்றங்களே பெண்ணவர்கள்

பெண்ணில் மறைந்துள்ள பெரும்சக்தி தானெழவே
அண்டம்சிலுசிலுத்து ஆகாயம் ஒடியாதோ
விண்ணில் சுழலுபவை விசையெடுத்துஓடாதோ
அன்னைசக்தியவள் அருங்குழந்தை நீவிர்காள்

என்றாலும் இன்னல்தனை இதயத் தடக்கியொரு
மென்மை கொழித்தவராய் மௌனஉருவெடுத்து
புன்னகை கொண்டேநற் பொறுமைதனைக் காத்திடுவீர்
மண்ணில் பெருவாழ்வும் மகிமையும் பொங்கி வரும்

சொல்லிச் சிறுகிளியும் சிறகடித்து வான்பறக்க
மெல்லத்திரும்பிதன் மீளாத் துயரடக்கி
கல்லாய் மனதெடுத்து கண்ணை துடைத்தகுயில்
இல்லத் திசைநோக்கி எழுந்து பறந்ததுவே !

குறிப்பு:
இதுவும் ஏற்கனவே இங்குள்ளதை எனது மின்நூலுக்காய் சிறிது மெருகூட்டினேன்
புதிதாக யாரும் பார்க்காதவர்களுக்காக ..ஏன் பார்த்தவர்கள் கூட இன்னொருமுறை பாருங்களேன்!!!
அன்புடன் கிரிகாசன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 11:55 am

நெல்லாடும் வயலைப் போல்
சொல்லாடல் சுகம் சுகம்.

வாழ்த்துக்கள்
அன்பு மலர்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 08, 2011 10:07 pm

இதுவும் ஏற்கனவே இங்குள்ளதை எனது மின்நூலுக்காய் சிறிது மெருகூட்டினேன்
புதிதாக்கினேன். அப்படியே இதை புதிதாக யாரும் பார்க்காதவர்கள் பார்க்கட்டுமே!..ஏன் பார்த்தவர்கள் கூட இன்னொருமுறை பாருங்களேன்!!!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 10:09 pm

நான் இப்பொழுதான் பார்க்கிறேன் வார்த்தைகளை கொண்டு மாயாஜாலம் நிகழ்த்தும் மந்திரவாதி நீங்கள் அருமையாக இருக்கிறது

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 08, 2011 10:18 pm

maniajith007 wrote:நான் இப்பொழுதான் பார்க்கிறேன் வார்த்தைகளை கொண்டு மாயாஜாலம் நிகழ்த்தும் மந்திரவாதி நீங்கள் அருமையாக இருக்கிறது

மணிஅஜித் இந்த வேளையில் ஒன்று கூறவேண்டும்போல் இருக்கிறது. இது இன்னொரு இணையத்தளத்தில் ஒரு கவிதை நண்பி காதல் சோகத்தில்
இறந்து போவதாக எப்போதும் கவிதை எழுதுவதைகண்டு அவரின் மனநிலை சோகம் நிறைந்ததாக இருக்கவே அவருக்காக இதை எழுதினேன்.
இதன்பின்பு எவ்வளவு உற்சாகத்தோடு இருக்கிறார் தெரியுமா? புதிதாக பிறந்துவிட்டேன் என்று கூறினார் இது எனக்குப் பெருமையே!
அவருக்காகவே தங்கைக்காக என சில கவிதைக்ள் செய்தேன்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:22 pm

சொல்லாடல் அருமை ஐயா....
கவிதை ஒருவரின் மனதை நெகிழவைக்கும் என்றால் உங்க கவிதையை உதாரணமாக சொல்லலாம்.... வாழ்க்கை வெறுத்தவரை உலகம் அற்புதமானது என்று உணரவைத்தீர்களே.... இறையாசி என்றும் கிடைக்கட்டும் உங்களுக்கு.

அன்பு நன்றிகள் ஐயா அருமையான ஊக்கம் தரும் கவிதைக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 08, 2011 10:31 pm

மஞ்சுபாஷிணி wrote:சொல்லாடல் அருமை ஐயா....
கவிதை ஒருவரின் மனதை நெகிழவைக்கும் என்றால் உங்க கவிதையை உதாரணமாக சொல்லலாம்.... வாழ்க்கை வெறுத்தவரை உலகம் அற்புதமானது என்று உணரவைத்தீர்களே.... இறையாசி என்றும் கிடைக்கட்டும் உங்களுக்கு.

அன்பு நன்றிகள் ஐயா அருமையான ஊக்கம் தரும் கவிதைக்கு.

நன்றிகள் சகோதரி! அவருக்கு மட்டுமல்ல. அந்த நிலையிலுள்ள எவராவது இருந்தால் இதையும் அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்

அன்பு தங்கைக்காக...
http://www.eegarai.net/t44803-topic#423076

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக