ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அட்சய திரிதியை ஸ்பெஷல்

Post by krishnaamma Fri May 06, 2011 1:28 pm

First topic message reminder :

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Large236454

வாழப்பிறந்தவனுக்கு வடக்கு: செல்வம், பொன், பொருள், வியாபாரம்,
தொழில் அபிவிருத்தி ஆகியவற்றை அருள் பவர் லட்சுமி குபேரர். "குபேரன்'
என்றால் "செல்வத்தைப் பெருக்குபவன்' . இலங்கையை ஆண்ட ராவணனின் தம்பி
குபேரன். இவர்களின் தந்தை விச்ராவசு. குபேரன் மிகச் சிறந்த சிவபக்தன்.
சிவபெருமானைத் தியானித்து பலகாலம் தவம் செய்து வந்தான். சிவபெருமான் அவனை
வடதிசைக்கு அதிபதியாக நியமித்து ஆளச் செய்தார். அன்று முதல் வடதிசைக்கு
ஏற்றம் உண்டானது. "வாழப் பிறந்தவனுக்கு வடக்கு' என்ற சொல்வழக்கு உண்டானது
இதனால் தான்.நவக்கிரகங்களில் பொன்மனம் படைத்தவர் குரு. இவருக்குரிய திசை
வடக்கு. குருவின் பார்வை பட்டால் கோடி நன்மை என்று குறிப்பிடுவர்.
குபேரனுக்குரிய விமானம் குபேரவிமானம். இவ்விமானம் எங்கு பறந்து சென்றாலும்
பொன்,முத்து, நவமணிகளைச் சிந்திக் கொண்டே செல்லும். அந்த விமானத்தை
குபேரனிடம் இருந்து ராவணன் பெற்றுக் கொண்டதாக ராமாயணம் கூறுகிறது.
குபேரன் சிவந்தநிறமும், குள்ளமான உருவமும், புஷ்டியான செல்வச்செழிப்பும்
கொண்டவராக இருக்கிறார். குபேர பட்டினத்திற்கு அழகாபுரி என்று பெயர்.
அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மீது மீனாசனத்தில் மெத்தையின் மீது குபேரன்
அமர்ந்திருப்பார். முத்துக்குடை அவர் மீது சுழன்று கொண்டிருக்கும்.
திருப்பதி வெங்கடாஜலபதி- பத்மாவதி திருமணத்திற்குப் பணம் தேவைப்பட்டது.
பெருமாள் குபேரனை அழைத்து உதவும்படிவேண்டிக் கொண்டார். ""என்னிடம் உள்ள
செல்வத்திற்கு எல்லாம் அதிபதி திருமகளே. அவளோ உம் மார்பில்
குடியிருக்கிறாள். அதனால், என்னிடம் செல்வம் கேட்டுப் பெற வேண்டியதில்லை,''
என்று லட்சுமி குபேரர் மறுத்துவிட்டார்.
திருமால் கலியுக தர்மத்தை தான் கடைபிடித்துத் தான் ஆகவேண்டும். அதனால்,
114 லட்சம் பொற்காசுகளைக் கடனாகத் தரும்படி வேண்டிக் கொண்டார். அதற்கு
ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்துவதாகவும், கலியுகத்தின் முடிவில் அசலை
மீண்டும் லட்சுமி குபேரருக்கு தந்துவிடுவதாகவும் சொல்லி கடன்பத்திரத்தில்
கையெழுத்து இட்டார். அந்தப் பத்திரத்தில் பிரம்மாவும், சிவ பெருமானும்
சாட்சி கையொப்பம் இட்டனர். வெங்கடேசப்பெருமாள் வட்டிக் கட்டுவதற்காக நாம்
உண்டியலில் பணம் போடுகிறோம். அதற்கு ஈடாக பலமடங்கு அருளை நமக்குத் திருப்பி
அருள்கிறார். அட்சய திரிதியை அன்று செல்வ வளம் தரும் லட்சுமி குபேரரை
வழிபட்டால் வீட்டில் செல்வத்திருமகளின் அருள் பெருகும்.
செல்வம் பெருக்கும் லட்சுமி ஸ்தோத்திரம்
செல்வ வாழ்வருளும் திருமகள் லட்சுமி இல்லம் தேடி வரும் நல்ல நாள்
அட்சயதிரிதியை. இந்நாளில் அவள் திருவடிகளைப் போற்றி வழிபடும்
ஸ்தோத்திரத்தைப் படித்து செல்வவளம் பெறுவோம்.
* சுவர்ணமயமானவளே! பொன், நவமணி ஆபரணங்களைச் சூடியிருப்பவளே!
மகிழ்ச்சியைத் தந்தருள்பவளே! எல்லோராலும் விரும்பப்படுபவளே! பாவத்தைப்
போக்கி நல்லருள் செய்பவளே! லட்சுமி தாயே! உன் அருளைப் பொழிவாயாக.
* பொன், பொருளைத் தருபவளே! பசுவின் உடம்பில் குடியிருப்பவளே!
வாகன சுகத்தைக் கொடுப்பவளே! வள்ளல் போல் அள்ளித் தருபவளே! என்றும் என்
இல்லத்தில் நீங்காது அருளாட்சி செய்ய வந்தருள வேண்டும்.
* குதிரை, யானை, தேர் என அனைத்து வாகனத்திலும் பவனி வருபவளே!
அனைவருக்கும் புகலிடமாய்த் திகழ்பவளே! மந்தகாசப் புன்னகையுடன் பொன்மயமாய்
ஜொலிப்பவளே! யானையால் பூஜிக்கப்படுபவளே! திருமகளே! உன் கடாட்சப்பார்வையை
என் மீது காட்டுவாயாக.
* பக்தர்களை மகிழ்விப்பவளே! இருக்குமிடத்தை ஒளியால் பிரகாசிக்கச்
செய்பவளே! தாமரைப் பூவில் வாழ்பவளே! ஸ்ரீ என்னும் திருநாமம் பெற்றவளே!
அஷ்டதிக்கும் ஒளிவீசும் மலர்ந்த முகத்தைக் கொண்டவளே! உன் அருளை என்மீது
பொழிவாயாக.
* தாமரை மலர் போன்ற இதயம் கொண்டவளே! அமிர்தத்தால் திருமஞ்சனம்
செய்யப்படுபவளே! மகாவிஷ்ணுவின் மனதில் இடம்பிடித்தவளே! மலர் போன்ற
மென்மையான திருவடிகளை எம் தலை மீது எப்போதும் வைத்து அருள்புரிவாயாக.
அட்சய திரிதியை அன்று நடவேண்டிய மரம்
நெல்லிமரத்தில் திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம். விஷ்ணுவின் அம்சமாக
நெல்லிமரம் திகழ்கிறது. நெல்லிக்கனிக்கு "ஹரிபலம்' என்ற பெயரும் உண்டு.
லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகத் திகழ்வது நெல்லி. ஆதிசங்கரர்
சந்நியாசியாக பிச்சை தேடிக் கிளம்பினார். ஒருவீட்டில் நின்று"பவதி
பிக்ஷõம்தேஹி' என்று மூன்றுமுறை சப்தமிட்டார். அவ்வீட்டுப் பெண்ணான
தர்மசீலையிடம் தர்மம் கொடுப்பதற்கு உணவில்லை. வீட்டில் இருந்த ஒரு
நெல்லிக்கனியை அவருடைய பிக்ஷõபாத்திரத்தில் இட்டாள். வறுமையிலும் தானம்
செய்த அவள் மீது சங்கரருக்கு இரக்கம் உண்டானது. அவ்வீட்டில்
லட்சுமிகடாட்சம் பெருக "கனகதாராஸ்தவம்' என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.
திருமகளின் அருளால் பொன்மழை பொழிந்தது. வீட்டில் நெல்லிமரம் இருந்தால்
அட்சயதிரிதியை அன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் மஞ்சள், குங்குமம் இட்டு
வழிபாடு செய்யலாம். நெல்லிக்கனி குளிர்ச்சியும், புளிப்புச் சுவையும்
கொண்டது. இதைச்சாப்பிட்டால் பார்வைக்குறைவு, நரைமுடி ஆகிய குறைகள் வராது.
துவாதசி திதியில் (அமாவாசை அல்லது பவுர்ணமி கழித்த பத்தாம் நாள்) உணவில்
நெல்லிக்கனியைச் சேர்த்துக் கொள்வது சிறப்பு. முதுமையான வடிவம் கொண்டிருந்த
சியவன முனிவர், நெல்லிக்கனியை சாப்பிட்டு இளமையைப் பெற்றதாகக் கூறுவர்.
இதனால் தான் இவரது பெயரால், நெல்லிக்கனி லேகியத்திற்கு "சியவனப் பிராஸ்'
என்ற பெயருண்டு. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் திருமகள் நித்யவாசம்
புரிவாள். தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும்
அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல்
இருக்கும். குறைவில்லா செல்வம் வீட்டில் பெருக அட்சய திரிதியை நாளில்
நெல்லிமரத்தை வீட்டில் நடுவது சிறப்பு.
அடசய திரிதியையில் என்ன பொருள் வாங்கலாம்?
"அட்சயம்' என்றால் "குறைவில்லாதது' என்று பொருள். இந்த நாளில் எப்பொருளை
வாங்கினாலும் அப்பொருள் நம் வீட்டில் குறைவில்லாமல் பெருகிவிடும். தர்மர்
சூதாடித் தோற்ற நிலையில், கவுரவர்கள் திரவுபதியை சபையில் மானபங்கப்படுத்த
முயன்றனர். அவள் கண்ணனை நினைத்து இருகரங்களையும் குவித்து நின்றாள்.
கண்ணனும் "அக்ஷய' என்று அருள்பாலித்தார். இதனால், திரவுபதியின் புடவையை
இழுத்து மலைபோல குவித்தும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. தங்கம்,
உப்பு, மஞ்சள், கண்ணாடி, குடை, மளிகை சாமான்கள், ஆடை, ஆபரணங்கள்,
பாத்திரங்கள், பர்னிச்சர், கட்டுமானப்பொருட்கள், வாகனங்கள், அழகுசாதனப்
பொருட்கள், புத்தகங்கள், பைக், கார், புத்தகம், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள் உட்பட எந்தப் பொருள்களையும் இந்நாளில் வாங்குவதால், எப்போதும்
குறைவில்லாமல் நிறைந்திருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by DERAR BABU Fri Apr 26, 2013 6:49 pm

யினியவன் wrote:
DERAR BABU wrote:காசும் இல்லை ........ நடனம் நடனம் நடனம்
ஒரு குந்துமணி தங்கம் வாங்கிக் குடுக்க காசு இல்லைன்னு ஜாலிய திரியற உங்களுக்கு யாரு பொண்ணு கொடுத்தது - அவர கண்டிப்பா பார்க்கணும் நாங்க சிரிப்பு

எட்டயபுரம் வாங்க ,அந்த அப்புரானி மனிதர காட்டுறேன் ...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by யினியவன் Fri Apr 26, 2013 6:53 pm

DERAR BABU wrote:எட்டயபுரம் வாங்க ,அந்த அப்புரானி மனிதர காட்டுறேன் ...
பெண் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்த பாரதி பிறந்த ஊரிலே பெண்ணெடுத்து அந்தப் பெண்ணுக்கு குந்துமணி தங்கம் வாங்கிக் குடுக்காம இருக்கறத பார்த்து அவங்க பொங்கலியா உங்கள? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by DERAR BABU Fri Apr 26, 2013 6:54 pm

krishnaamma wrote:
DERAR BABU wrote:இருக்குற இம்சைல இது வேற .. அய்யோ, நான் இல்லை தோதா விலை வேற குறைஞ்சு இருக்கு . தொல்லை தாங்க முடியலே .

பாவம் பாபு நீங்க சோகம் ஜாலி ஜாலி ஜாலி

என்ன பண்றது க்ரிஷ்ணாம்மா , நேற்று நீங்க சொன்னது போல சந்திரகிரகனத்தப்ப எல்லா மந்திரமும் சொல்லிருக்கேன் . நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by DERAR BABU Fri Apr 26, 2013 6:59 pm

யினியவன் wrote:
DERAR BABU wrote:எட்டயபுரம் வாங்க ,அந்த அப்புரானி மனிதர காட்டுறேன் ...
பெண் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்த பாரதி பிறந்த ஊரிலே பெண்ணெடுத்து அந்தப் பெண்ணுக்கு குந்துமணி தங்கம் வாங்கிக் குடுக்காம இருக்கறத பார்த்து அவங்க பொங்கலியா உங்கள? புன்னகை

ஆண் விடுதலைக்கு எந்த ஊர் கவிஞர் பொங்கினார்ன்னு சொன்னீங்கன்ன அங்க ஒரு கோவில கட்டிருவோம் ..


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by krishnaamma Fri Apr 26, 2013 7:00 pm

DERAR BABU wrote:
krishnaamma wrote:
DERAR BABU wrote:இருக்குற இம்சைல இது வேற .. அய்யோ, நான் இல்லை தோதா விலை வேற குறைஞ்சு இருக்கு . தொல்லை தாங்க முடியலே .

பாவம் பாபு நீங்க சோகம் ஜாலி ஜாலி ஜாலி

என்ன பண்றது க்ரிஷ்ணாம்மா , நேற்று நீங்க சொன்னது போல சந்திரகிரகனத்தப்ப எல்லா மந்திரமும் சொல்லிருக்கேன் . நன்றி

நல்லது , நல்லது.... கவலைப்படதிங்க எல்லாம் நல்லாவே நடக்கும் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by யினியவன் Fri Apr 26, 2013 7:04 pm

DERAR BABU wrote:ஆண் விடுதலைக்கு எந்த ஊர் கவிஞர் பொங்கினார்ன்னு சொன்னீங்கன்ன அங்க ஒரு கோவில கட்டிருவோம் ..
அந்த பொங்கல் அன்னிக்கு தான் உலகத்தின் கடைசி நாள் - நாம பொங்கினா உலகம் அழிஞ்சிடும் பாபு - அதான் வேண்டாம்ன்னு பொறுமையா, மக்கா, லூசா, கழுதையா நாம அலைஞ்சிட்டு இருக்கோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by DERAR BABU Fri Apr 26, 2013 7:10 pm

சிப்பு வருது அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 745155 சிரிப்பு :afro:


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by ராஜா Fri Apr 26, 2013 7:17 pm

இறங்கின தங்க விலையை ஏற்றுவதற்கு கடைக்காரர்களுக்கு நல்ல வாய்ப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அட்சய திரிதியை13-5-2013 வருகிறது - Page 3 Empty Re: அட்சய திரிதியை13-5-2013 வருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum