ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters

Page 22 of 43 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 32 ... 43  Next

Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by தாமு Mon May 02, 2011 5:36 am

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 224747944 தல போல வருமா ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 677196 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 677196 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 677196 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty சினிமா கிசுகிசுன்னா கசக்சக்குமா?

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 7:43 am

பெரும்பாலான கதாநாயகிகள் படப்பிடிப்புக்கு வரும்போது, துணைக்கு அம்மாவைத்தான் அழைத்து வருகிறார்கள். அப்பாவை அழைத்து வருபவர்கள் அபூர்வம்!
`அப்பா' என்ற வார்த்தையை கேட்டாலே இரண்டு கதாநாயகிகளின் முகம் பயங்கரமாக மாறுகிறது. அவர்களில் ஒருவர், காதல் படத்தில் நடித்த `சரண்' நடிகை! இன்னொருவர், தாமிரபரணி நடிகை! இவர்கள் இருவருமே அப்பாக்களினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாம்!

நடிகரை காதல் செய்யும் நயன நடிகை குழப்பத்தில் இருக்கிறாராம், படங்களை குறைத்து திருமணத்துக்கு தயாராகி வந்த அவர் திடீரென தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்கிறார்.
காதலருடன் ஏற்பட்டுள்ள கருத்த வேறுபாடுகளே இந்த முரண்பாடுக்கு காரணம் என கிசு கிசுக்கின்றனர்.


ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.தமிழில் முன்னணி இடத்தில் இருந்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் தமன நடிகை, தமிழ் சினிமா வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக ஆரம்பத்தில் தகவல் கசிந்தது. அதனை மறுத்து வந்த நிலையில் அம்மணியின் பார்வை ஆந்திரதேசம் பக்கம் வீசியிருக்கிறது.ஆந்திராவின் பிரபல நடிகரும், அரசியல் கட்சி ஆரம்பித்து, அதனை சமீபத்தில் ஆளும் மத்திய கட்சியுடன் இணைத்துக் கொண்டிருக்கும் சீவி நடிகரின் மகன்தான் தமனத்தின் வலையில் விழுந்தது.இப்போது இரண்டு பேரும் போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆந்திர பத்திரிகைகளின் கிசுகிசு பகுதி.
தனது காட்ரெஜ் பீரோ உடம்பை வைத்துக் கொண்டு கல்லா கட்ட முடியாது என்பதை நன்றாகவே உணர்ந்துவிட்டார் நமீதா. யோகா, எக்சர்சைஸ், டயட் என்று நாலாபுறத்திலிருந்தும் உடம்புக்கு வேலை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். முயற்சி திருவினையாகட்டும்...


கேட்டால் இந்தியில் நடிக்கிறேன். தெலுங்கில் நடிக்கிறேன் கன்னடத்தில் நடிக்கிறேன் என்று பெரிய லிஸ்ட் கொடுக்கிறார் லட்சுமி ராய். ஆனால் ஒரு லாங்குவேஜூம் அழைக்கவில்லை அவரை. என்றாலும் உலக டூர்களுக்கு குறைவில்லை. எப்படிதான் நடக்கிறதோ?

இதுவரை தான் இயக்கிய படங்களெல்லாம் ஹிட் என்ற தலைக்கனத்தாலோ என்னவோ… ஹீரோ – ஹீரோயின் – காமெடியன் என யாருக்குமே… ஏன் தன்னிடம் பணியாற்றும் அஸிஸ்டெண்ட் டைரக்டரிடம் கூட கதை சொல்ல மறுப்பவர்தான் அந்த ஹரியான டைரக்டர்.சூட்டிங் ஸ்பாட்டில் பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் போல ஸ்டிரிக்ட்டாக இருக்கும் அவர்ர், அடுத்து இயக்கி வரும் புதிய படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். நான் சொன்னதை மட்டும் கேட்டு நடிச்சா போதும்; கதையை கேட்கக் கூடாது என்பது இவரது ராஜ்ஜியத்தில் எழுதப்படாத சட்டம். அவரிடம் கதை கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபற்றி அவரிடமே கேட்டால், ஒரு டைரக்டர் தன்னோட ஹீரோவுக்கு கதை சொல்ல மாட்டாரா என்ன? சொல்கிற வரைக்கும் பொறுமையா இருக்க வேண்டியதுதானே என்பதுதான் அவரது தத்துவம்.இப்படியெல்லாம் கதை சொல்கிற விஷயத்தில் கறார் காட்டிவரும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர், தனது அடுத்தப்பட நாயகியான தமன்னாவுக்கு சலுகை காட்டியிருக்கிறார். ஒரு மணி நேரம்… இரண்டு மணிநேரமல்ல… மூன் மணி நேரம் தமன்னாவுக்கு கதை சொல்லி திருப்தி படுத்தியிருக்கிறாராம். கறார் டைரக்டர் தமன்னாவுக்கு மட்டும் சலுகை காட்டியிருக்கும் செய்திதான் காட்டுத்தீ போல கோடம்பாக்கம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
ஹ்ம்ம்ம்… தமன்னான்னா சும்மாவா?


தமிழ் படத்தில், கற்பழிப்பு காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரியமான `பெல்' நடிகை, ஒரு தெலுங்கு படத்தில் உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
தொடர்ந்து இதுபோன்ற `கிளுகிளு' காட்சிகளில் நடித்து, இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதே அந்த நடிகையின் லட்சியமாம்!

காதல் சொல்ல வந்தேன் பட நாயகி மேக்னாவை, "நயன்தாரா போல் இருக்கிறாய். அதனால், அவரை போல் நடித்தால், நீயும் பெரிய நடிகையாகி விடலாம்...' என்று சிலர் கவர்ச்சியாக நடிக்க ஆசை காட்டினர். ஆனால், மேக்னாவோ, "நான் நயன்தாரா மாதிரி இருந்தாலும், அவர் அளவுக்கு கவர்ச்சி எனக்கு, "செட்' ஆகாது. தற்போது நடித்து வரும், கள்ளச் சிரிப்பழகா, காதல் வேதம், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்கள், தமிழில் எனக்கு திருப்புமுனையாக அமையும்...' என்றும் கூறுகிறார்



நல்ல கேரக்டர் என்றால் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த ஸ்வீட் கடை நடிகை தனது கொள்கையை கை கழுவிவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஆகாயம் படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம்தான் இப்படியொரு ஐயத்தை இன்டஸ்ட்***ரியில் ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகையின் மறுபக்கத்தை சொல்றேன் பேர்வழி என்று அரைவேக்காட்டு செக்ஸ் நிகழ்வுகளை தொகுத்தளித்த தொடர் ஒன்றை ராங் என்ற படத்தை இயக்கியவர் எடுக்கிறார். இதில்தான் ஸ்வீட் கடை நடிகை நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தப்பான கதை, தப்பான கேரக்டர்… எப்படி இத்தனை தப்புகளை ச***ரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று ஆச்ச***ரியப்படுகிறார்கள்.
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty கமலின் முத்தத்திற்கு தமன்னா கேட்ட ரூ.1.25கோடி

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 7:45 am

கமலை வைத்து அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து கமலை வைத்து ஒரு ***காமெடி படம் ***ஒன்றை இயக்க போகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக தமன்ன***ாவை நடிக்க வைக்க எண்ணினார் கே.எஸ்.ரவிக்குமார். இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமன்னாவும் நடிக்க ஓ.கே., சொல்லிவிட்டாராம்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் கமல் படம் என்றால் முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது. இந்தபடத்தில் அதுபோன்ற காட்சிகள் ஏதும் உள்ளதாக என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வர, சற்று தயங்கிய தமன்னா பிறகு ஓ.கே., சொன்னாராம். கூடவே ஒரு கண்டிஷனும் போட்டாராம். படத்தில் முத்தக்காட்சி இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை ரூ.1.25கோடியாக கேட்டாராம். தமன்னாவின் இந்த கண்டிசனை கேட்டதும் அதிர்ந்து போய் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பும், இயக்குநர் தரப்பும்.
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty எல்லை மீறும் அனுஷ்கா!

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 8:42 am

ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலைந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல்லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பலரும் புலம்பி வருகின்றனர்.

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவருக்கு வெற்றியை தராவிட்டாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் அருந்ததீ படத்தின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட ஆரம்பித்து, இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் அம்மணியை படபூஜை, ஆடியோ ரிலீஸ் போன்ற விழாக்களுக்கு சென்னை வரும்போது, சம்பிரதாயத்திற்காகவாது பத்ரிகையாளர்களை பார்த்து ஹாய்...ஹலோ என்றாவது சொல்லுங்கள் என்று கூறிவருகின்றனர். ஆனால் அம்மணியோ அதெல்லாம் முடியாது. ரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன், பதிரிகையாளர்கள் முன் தோன்ற வேண்டும் என்றால் கூடுதல் பைசா ஆகும் பரவாயில்லையா? என்று அங்கும் கரன்சி பேசுகிறாராம். இதனால் அவரது மேனேஜர் உட்பட பலர், அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக புலம்புகின்றனர்.

இருந்தாலும் அனுஷ்காவின் அலட்டல் கொஞ்சம் ஓவர் தான்!
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by பூஜிதா Mon May 02, 2011 11:03 am

முத்தம் முத்தம் முத்தம் முத்தம் உலக நாயகன் இனி முத்தநாயகன் என்று பெருமையுடன் அழைக்கபடுவார் முத்தம் முத்தம் முத்தம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty 17ம் நூற்றாண்டு தமிழ்ப் பெண்!

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 2:13 pm

‘ராணா’ படத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறேன் என்று தீபிகா படுகோன் கூறினார். ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் ‘ராணா’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார், இந்தி நடிகை தீபிகா படுகோன். இதில் நடிப்பது பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரஜினியுடன் நடிப்பதால், என் கனவு நனவாகிவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கூட கண்டதில்லை. இது அதையும் தாண்டிய விஷயம். இதில், 17-ம் நூற்றாண்டு தென்னிந்திய பெண்ணாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் எனது லுக் எப்படியிருக்கும் என்கிறார்கள். அந்த காலத்தில் எப்படி இருப்பார்களோ அதே போன்ற உடை, அணிகலன்களுடன் நடிக்கிறேன். ‘தேவதாஸ்’ இந்தி படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய நீதா லுல்லா இதில் பணியாற்றுகிறார். இப்போது பாடல் காட்சியில் நடித்து வருகிறேன். ரஜினியுடன் நடிக்கப் போகும் நாட்களுக்காக காத்திருக்கிறேன். அவர் தலைசிறந்த நடிகர். இது போலான மிகப்பெரிய வாய்ப்பு இனி எனக்கு கிடைக்கப்போவதில்லை. நான், தென்னிந்தியாவை சேர்ந்தவள் என்றாலும் நல்ல படம் மூலமாக தமிழில் அறிமுகமாக காத்திருந்தேன். இதற்காக கதைகளை கேட்டு வந்தேன். ‘ராணா’ வாய்ப்பு வந்தபோது இது எனக்காகவே வந்ததாக நினைத்துக்கொண்டேன். இதற்கு முன் ரஜினி படங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். ஒரே ஒரு படம்தான் பார்த்திருக்கிறேன். அது, ‘எந்திரன்’. இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார். பேட்டியின் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், சவுந்தர்யா ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உடனிருந்தனர்.'
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty தமிழ் சினிமாவில் பீரியட் மோகம்

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 2:15 pm

தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது பீரியட் படங்களின் பக்கம் இயக்குனர்களின் பார்வை திரும்பியுள்ளது. தமிழ் சினிமாவில் சரித்திரப் படங்கள் கோலோச்சிய காலம் உண்டு. சரித்திரப் படங்களுக்கு மினிமம் கியாரண்டி கூட இருந்தது. ஒரு காலகட்டத்தில் அதுவே மக்களுக்கு திகட்ட, பெரிய ஹீரோக்கள் நடித்த சரித்திரப் படங்கள் கூட தோல்வியைத் தழுவியது. பிறகு சரித்திரப் படங்களின் மவுசு குறைந்தது. தமிழ் சினிமா கிராமத்தை நோக்கி நகர்ந்ததும், சரித்திரப் படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. அபூர்வமாக சில படங்கள் வந்தபோதும் அது பெரும் வரவேற்பை பெறவில்லை. பக்தி படங்களைப்போலவே சரித்திரப் படங்களும் ‘அவுட் ஆஃப் பேஷன்’ ஆனது. ஆனால் இப்போது சரித்திரப் படங்கள் மற்றும் சரித்திர காலத்தில் நடந்த கதைகளாகச் சொல்லப்படும் படங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியிருக்கிறது. இவற்றை பீரியட் பிலிம் என்று அழைக்கிறார்கள்.

இதை துவக்கி வைத்தது நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த பீரியட் படமான ‘உளியின் ஓசை’. பிறகு ‘ஆயிரத்தில் ஒருவன்’. நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட சோழர்கள், எங்கோ கண்காணாத தேசத்தில் தங்களைத் தேடி தூதுவன் வருவார் என்று காட்டுமிராண்டிகளாக வாழ்வதாக, கற்பனையாக சொன்ன படம். சமீபத்தில் வெளிவந்த ‘பொன்னர் சங்கர்’ படம் இரட்டை சகோதரர்களின் கதையைச் சொன்னது. இதுதவிர தற்போது ரஜினி நடித்து வரும், ‘ராணா’ 17ம் நூற்றாண்டு பின்னணியிலான பீரியட் படம்தான். இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் ‘அரவான்’ 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்களின் கதையை சொல்கிறது. ‘காமராஜ்’ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ என்ற படத்தை தயாரிக்க உள்ளார். இது சங்க காலத்தில் நடப்பது மாதிரியான கதை. ராமாயணக் கதையை இக் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி ‘ராவணன்’ படத்தை இயக்கிய மணிரத்னம், அடுத்து கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்குகிறார்.

இதற்கிடையில் சென்ற நூற்றாண்டின் துவக்கம், நடுப்பகுதி 1980ம் ஆண்டுவாக்கில் நடந்த கதை என சமீப கால பீரியட் படங்களும் அவ்வப்போது வெளிவந்துள்ளது. ‘மதராச பட்டினம்’ 1940களில் நடந்த கதையாகச் சொல்லப்பட்டது. சசிகுமார் இயக்கிய ‘சுப்ரமணிபுரம்’, சேரன் இயக்கிய ‘பொக்கிஷம்’ 80 களில் நடந்த கதையாக உருவாக்கப்பட்டது. இப்போது செல்வா இயக்கியுள்ள ‘நாங்க’ உட்பட சில படங்கள் பீரியட் படங்களாக உருவாகி வருகிறது. திடீரென பீரியட் பட மோகம் வர காரணம் என்ன என்று ‘அரவான்’ படத்தை இயக்கி வரும் வசந்தபாலனிடம் கேட்டபோது, ‘சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலை படித்துக்கொண்டிருக்கும்போது அதில் ஒரு பகுதியை படமாக்கலாம் என்று தோன்றியது. இதை தயாரிப்பாளரிடம் சொன்னதும் சரி என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் அரவான். வேறு எந்த திட்டமும் வைத்துக்கொண்டு சரித்திரப் படத்தை இயக்கவில்லை’ என்றார்.

‘தமிழ் சினிமாவில் அவ்வப்போது இப்படி சில, கதை சீசன்கள் வருவதுண்டு. அதுபோல இதுவும் ஒரு சீசன். புராண படங்கள், சரித்திர படங்கள், சமூக படங்கள், கிராமத்துப் படங்கள், கேன்சர் நோய் படங்கள், காதல் படங்கள், கடத்தல் படங்கள், ரீமேக் படங்கள், மாயாஜால படங்கள், பக்தி படங்கள் இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சீசன் இருக்கும். இப்போது பீரியட் சீசன். தொடர்ந்து படங்கள் வெற்றி பெற்றால் இந்த சீசன் கொஞ்ச நாளைக்கு தொடரும். இல்லாவிட்டால் சீக்கிரமே அடுத்த கதை சீசன் தொடங்கிவிடும்’ என்கிறார் அனுபவம் வாய்ந்த இயக்குனர் ஒருவர்.
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty தெய்வத்திருமகளாக மாறிய விக்ரம்!

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 2:18 pm

தேவர் அமைப்புகளின் கடும் எதிர்ப்பால் விக்ரமின், "தெய்வத்திருமகன்" படத்தின் தலைப்பு மூன்றாவது முறையாக மாற்றப்பட்டது. டைரக்டர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியிருக்கும் படம் தெய்வத்திருமகன். ஆரம்பத்தில் இந்தபடத்திற்கு தெய்வமகன் என்று பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அப்படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்ததால் பிதா என்று மாற்றப்பட்டது. பின்னர் பிதா படத்தின் தலைப்பும் யாரோ பதிவு செய்திருக்க அந்த தலைப்பையும் மாற்றி இறுதியாக தெய்தவத்திருமகன் என்று சூட்டி ஆடியோ ரிலீஸ் மற்றும் படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் தெய்வத்திருமகன் பட தலைப்புக்கு தேவர் இன அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் வீட்டை முற்றுகையிட்டு அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இதனிடையே மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று படத்தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து படத்தின் தலைப்பு மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் திரு.மோகன் நடராஜன் அவர்கள் தமது ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ் நிறுவனம் சார்பில் விக்ரம் நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "தெய்வத்திருமகன்" படத்தலைப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்கள் நேரிலும், கடிதம் வாயிலாகவும், மற்ற அமைப்பினரும் தங்கள் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளனர். அதில் மக்கள் பசும்***பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை*** தெய்வத்திருமகன் என்று போற்றப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி, படத்தின் தலைப்பை மாற்றிக்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மோகன் நடராஜன் அவர்கள், "தெய்வத்திருகமன்" படத்தலைப்பை "தெய்வத்திருமகள்" என்று மாற்றிக்கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். எனவே இப்படத்தின் தலைப்பை "தெய்வத்திருமகள்" என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரிப்பாளர் திரு.மோகன் நடராஜன் அவர்களது ஒப்புதலோடு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிடுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty ஆட்டோகிராப் மல்லிகா மீண்டும் வருகிறார்

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 2:18 pm

ஆட்டோகிராப் படத்தில் கம்மாபட்டி கமலாவாக அறிமுகமானவர் நடிகை மல்லிகா. அதன்பிறகு மகாநடிகன், திருப்பாச்சி, குண்டக்க மண்டக்க, உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைய சின்னத்திரையில் தலைகாட்டி வந்தார். பின்னர் சினிமாவை விட்டு காணாமல் போனார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். முன்பை விட அழகாகவும், புதுபொலிவுடனும் காணப்படும் மல்லிகா, தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கூடவே தமிழ்படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். நல்ல கேரக்டர் அமைந்தால் நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார்.
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 2:30 pm

தனது வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.


எம் ராஜா இயக்கத்தில் விஜய் தற்போது வேலாயுதம், படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 22-ம் தேதி, விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர்.


வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளில் படம் வெளியாவதால், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இதனை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.


ஆனால் வீண் செலவுகள் செய்யாமல், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த விழா அமைய வேண்டும் என விஜய் கூறிவிட்டதால், அன்று ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் இலவச உணவு வழங்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யே இந்த உதவிகளை நேரில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.


இவை தவிர, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாளில் அறிவிக்க உள்ளார்களாம்.
tamilhappy


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 22 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 43 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 32 ... 43  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum