Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters
Page 20 of 43
Page 20 of 43 • 1 ... 11 ... 19, 20, 21 ... 31 ... 43
சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
இதையெல்லாம் யார் கேட்க போகிறார்கள்?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அஜீத் 40 - அவரை பற்றிய 40 துளிகள் -
தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் நாளை தனது 40 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 40 துளிகள் இங்கே...
தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு ( வருஷம் ) அறிமுகம் ஆனார்.
தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.
தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.
அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.
1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.
தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண். அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜீத்.
அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.
வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.
மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.
இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.
கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.
சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.
'நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.
அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்து வருகிறார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் வில்லனாக மட்டுமே நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.
அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!
வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக் காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!
வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!
உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!
சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!
ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!
ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!
தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!
'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!
பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!
அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!
உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!
படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!
மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!
மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!
தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!
tmt

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
விஜய் பாட்டுக்கு 2 கோடி ..!
https://2img.net/r/ihimizer/i/63472268457817187306.jpg/
விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடித்து வரும் வேலாயுதம். ஜெயம் ராஜா இயக்க ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா கூறியுள்ளது " வேலாயுதம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது. 85 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக பல கோடிகள் செலவழித்துள்ளார்.
படத்தின் ஒரு பாடலுக்காக இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாம்.
வேலாயுதம் படத்தில் 15 வில்லன்கள் நடித்து இருக்கிறாகள். 6 சண்டை காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
படம் குறித்து, இயக்குனர் ஜெயம் ராஜா " வேலாயுதம் படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் இருக்கும். தன் தங்கை மீது விஜய் கொண்டிருக்கும் பாசத்தை மையமாகக் கொண்டு கதை நகரும். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடித்துள்ளார்.
விஜய், சந்தானம் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சம்பந்தபட்ட காமெடி காட்சிகள் எடுக்கும்போது, படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நிச்சயம் அந்த காட்சிகளுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு இருக்கும்..
விஜய் ஆண்டனி இப்படத்திற்காக சிறப்பாக பாடல்களை அமைத்து கொடுத்து இருக்கிறார். மொத்தம் உள்ள 5 பாடல்களில் 3 பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டன. மீதம் உள்ள 2 பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
விஜய் இதுவரை நடித்த படங்களிலே வேலாயுதம் படம் தான் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாம்.

Last edited by ரோஜாகார்த்தி on Sun May 01, 2011 9:18 am; edited 1 time in total
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
'மன்மதன் அம்பு' படத்தை அடுத்து கமல் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தை செல்வராகவன் இயக்க இருக்கிறார்.
படத்தின் முதல் நாயகியாக ஒப்பந்தம் ஆனார் சோனாக்ஷி சின்கா. படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் அமெரிக்கன் விசா மறுக்கப்படவே படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னொரு நாயகிக்கு ஸ்ரீதேவியிடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமலும் ஸ்ரீதேவியும் ஏற்கனவே 1970 - 1980 காலகட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்படங்கள் பெரிய வெற்றி பெற்று, ராசியான ஜோடி என தயாரிப்பாளர்களால் பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
பின்னர் ஸ்ரீதேவி ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்பால், தமிழ் படங்களில் நடிப்பதை குறைந்துக் கொண்டார். ஸ்ரீதேவி கடைசியாக ரஜினிகாந்துடன் 1986-ல் 'நான் அடிமை இல்லை' படத்தில் நடித்தார்.
இந்தி திரையுலகில் பல வருடங்கள் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, அனில் கபூரின் அண்ணன், தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் பெரிய திரையில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஸ்ரீதேவி.
மாப்பிள்ளை படத்தில் மனிஷா கொய்ராலா நடித்த மாமியார் வேடத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியை தான் அணுகினார்கள். ஆனால் அப்படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகி இருக்கிறார்கள். மீண்டும் நிகழுமா கமல்-ஸ்ரீதேவி மேஜிக்..?

குடும்பத்துடன் இத்தாலி சென்றார் விஜயகாந்த்!
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் இத்தாலி புறப்பட்டு சென்றார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் இறுதிகட்டத்தில் தொண்டை வலி ஏற்பட்டு சரியாக பேச முடியாமல் அவதிப்பட்டார்.
இந்நிலையில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட களைப்பை போக்குவதற்காகவும், கோடை விடுமுறையை குதூகலமாக கழிப்பதற்காகவும் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல முடிவு செய்த விஜயகாந்த், இன்று விமானத்தில் இத்தாலி புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் ஹாங்காங் சென்ற விஜயகாந்த், இப்போது இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு சென்றுள்ளார்.
விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் பிரபகாரன், சண்முக பாண்டியன், மைத்துனர் சுதீஷ், அவரது மனைவி ஜோதி மற்றும் இரண்டு குழந்தைகளும் உடன் சென்றனர். இத்தாலில் உள்ள ரோம் நகரில் முக்கியமான இடங்களை சுற்றிப் பார்க்கும் விஜயகாந்த் பின்னர் அங்கிருந்து பிரான்ஸ் நாட்டிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் உள்ள சில சுற்றுலா இடங்களுக்கும் விஜயகாந்த் குடும்பத்துடன் செல்கிறார்.
விஜயகாந்தின் இன்ப சுற்றுலா 13 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாம். 13 நாட்கள் இத்தாலி மற்றும் பிரான்சை சுற்றிப் பார்த்து விட்டு தேர்தல் முடிவு வெளியாகும் நாளான மே 13ம்தேதிக்கு முந்தைய நாள் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
அஜித் பற்றிய விசயங்களை தந்தமைக்கு நன்றி நண்பரே
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
வெற்றி பெற வாழ்த்துகள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
ஜோடி சேர்ந்தால் நல்லாத்தான் இருக்கும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 20 of 43 • 1 ... 11 ... 19, 20, 21 ... 31 ... 43
Similar topics
» கார்த்தியின் மகிழ்ச்சி …(சினி செய்திகள்)
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» சினிமா செய்திகள் ..............
» சினிமா செய்திகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum