ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

+38
பிஜிராமன்
சரவணன்
Jiffriya
kitcha
தாமு
ரிபாஸ்
varsha
T.N.Balasubramanian
மனோஜ்
Aathira
கோவை ராம்
puthuvaipraba
பாலாஜி
positivekarthick
Tamilzhan
ஹாசிம்
அசுரன்
ந.கார்த்தி
md.thamim
அப்துல்
ஷர்மிஅஷாம்
nareshs
முரளிராஜா
jaya2kumar
உமா
பிளேடு பக்கிரி
Manik
ரபீக்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அன்பு தளபதி
anbulakshmi.vijayakumar
கலைவேந்தன்
உதயசுதா
அருண்
balakarthik
பூஜிதா
கார்த்திநடராஜன்
42 posters

Page 18 of 43 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 30 ... 43  Next

Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty திருமண வரவேற்பு: பிருதிவிராஜ் அழைப்பு

Post by ந.கார்த்தி Sat Apr 30, 2011 8:06 pm

நடிகர் பிருதிவிராஜ்- சுப்ரியாமேனன் திருமணம் நேற்று பாலக்காடு அருகே உள்ள ரிசார்ட்டில் நடந்தது. திரையுலகினர் அழைக்கப்படவில்லை. ரகசியமாக நடந்த இத்திருமணத்தால் சக நடிகர், நடிகைகள் அதிருப்தி அடைந்தனர்.

பிருதிவிராஜ் தமிழில் மொழி, அபியும் நானும், வெள்ளித்திரை, ராவணன், நினைத்தாலே இனிக்கும், பாரிஜாதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகராக உள்ளார்.

இரு மொழிகளிலும் நெருக்கமான நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். இயக்குனர்களும் உள்ளார்கள். அவர்களுக்கு திருமணம் பற்றி தெரிவிக்கவில்லை.

சுப்ரியாமேனன் மும்பையில் வர்த்தக செய்தி பிரிவு டி.வி. நிருபராக பணியாற்றுகிறார். சொந்த ஊர் பாலக்காடு அருகே உள்ள சந்திரநகர். பிருதிவிராஜூம் சுப்ரியாமேனனும் நான்கு வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் பற்றி பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வந்தன. அதை பிருதிவிராஜ் மறுத்தார். கிசு கிசுக்களில் உண்மை இல்லை என்று கூறினார். இப்போது நிரூபணமாகி உள்ளது.

திருமணத்துக்காக ஒருநாள் முன்னதாகவே இரு கார்களில் பெண், மாப்பிள்ளை வீட்டார் பாலக்காடு ரிசார்ட்டில் வந்து தங்கினர். பிருதிவிராஜூடன் அவரது தாய் மல்லிகா சுகுமாரன், சகோதரர் இந்திரஜித், அண்ணி பூர்ணிமா ஆகியோர் வந்திருந்தனர்.

திருமணத்தின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சக நடிகர், நடிகைகள் கோபத்தில் இருப்பதால் எல்லோரையும் அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த பிருதிவிராஜ் முடிவு செய்துள்ளார்.

மே 1-ந்தேதி கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடக்கிறது. தமிழ், நடிகர், நடிகைகளுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty ஈழத் தமிழர்களுக்காக இணையுங்கள் – தங்கர் பச்சான்

Post by ந.கார்த்தி Sat Apr 30, 2011 8:08 pm

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

சாதியாகவும், மதமாகவும், பல அரசியல் கட்சிகளாகவும் பிரிந்து கிடந்து ஒற்றுமையை இழந்ததால் ஒவ்வொரு நாளும் தமிழன் இழந்து கொண்டிருப்பதும், இழந்ததும், இழக்க போவதும் ஏராளம். இந்தியாவில் மட்டுமே 7 கோடி தமிழர்கள் இருந்தும் நாம் தேர்ந்தெடுத்த தமிழர்களின் அரசாலும், இந்திய அரசாலும் இலங்கை சிங்கள அரசால் அழித்து ஒழிக்கப்பட்ட நம் தமிழினத்தை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, வாழ்ந்த மண்ணை இழந்து, பிய்த்து எரியப்பட்ட தலையணை பஞ்சு மாதிரி உலகமெங்கும் அகதிகளாய் சிதறி போன நம் சொந்தங்களுக்கு உதவ முடியாமல் இருந்து விட்டோம்.

ஓரணில் நின்று போராட்டம்:

வெற்றிக் களிப்பில் எக்காளமிட்ட கொடுங்கோலன் ராஜபக்சே உலகத்தின் முன்னே குற்றவாளியாக நிறுத்தி வைக்க ஐ.நா. மன்றம் அதன் விசாரணையை தொடங்க இருக்கிறது. எம் மக்களை அழித்து ஒழிக்க தமிழக அரசியல் கட்சிகள் நேரத்திற்கேற்ப வேடமிட்டு நடத்தி முடித்தது எல்லாம் போதும். தங்களின் ஆதாயத்திற்காக ஈழத் தமிழர் அரசியல் பேசி பிழைப்பு நடத்தியது எல்லாம் போதும்.

அரசியல் ஆதாயத்தை மறந்து தமிழர்களுக்காக ஓரணியில் நின்று போராட்டத்தை நடத்தி எதனையும் சாதிக்க விரும்பாதவர்கள் நாம். நீ பெரிய ஆள் இல்லை. நான் தான் பெரிய ஆள் என்பதை காண்பிப்பதற்காகவும், எங்களுக்கும் ஆள் எண்ணிக்கை இருக்கிறது என்பதற்காக தனித்தனியாக குரல் கொடுக்கும் போராட்டத்தையும் நடத்தி கணக்கு காட்டியதெல்லாம் போதும்.

தமிழ் மக்களுக்கு பாதுகாவலனாகிய அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தமிழ் இன உணர்வாளர்களும் உடனே செய்ய வேண்டியது இவைகள்தான். சொந்த அரசியல் லாபங்களுக்காக அறிக்கை என்ற பெயரில் மக்களை மேலும் திசை திருப்பி இன உணர்வை சிதைக்காதீர்கள்.

தங்களின் பலத்தை காண்பிப்பதற்காக நாளுக்கொரு கட்சியாக, நாளுக்கொரு இயக்கமாக போராட்டங்களை நடத்தியும், அறிக்கைகளை வெளியிட்டும் காலம் தாழ்த்தாதீர்கள். இப்படிப்பட்ட போராட்டங்களாலும், அறிக்கைகளாலும் எந்த பயனும் இல்லை.

ஒன்றிணைந்து…

இதன்பிறகு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நாம் குரலை ஐ.நா. மன்றத்திடமும், இலங்கை அரசுக்கும் உயர்த்தி, குற்றத்திற்கான தண்டனைகளையும், ஈழ மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டும். தமிழர்கள் இதை தான் எதிர்பார்க்கிறார்கள். இதனை செய்யாமல் போனால் ஈழத்தமிழர்களின் எதிரி ராஜபக்சே அல்ல. சுய லாபத்திற்காக ஈழத்தமிழர் அரசியல் பேசி, அரசியல் நடத்தும் கட்சிகளும், இயக்கங்களும் தான் என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி ஐ.நா. மன்றத்தை பாராட்டி, ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர கோருங்கள். அத்துடன் இலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள பொருளாதார, ராணுவ உறவினை முற்றிலுமாக விலக்கிக்கொள்ள குரல் கொடுங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் நழுவவிட்டால் உங்களை அனுப்பி வைத்த தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் துரோகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அதை போல் அடுத்த மாதத்தில் புதியதாக அமைய இருக்கும் புதிய தமிழக அரசு முதல் சட்டமன்ற கூட்டத்திலே இது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்புங்கள்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty ரசிகர்களை திரட்டி மரக்கன்று நடும் திட்டம்:– விக்ரம்

Post by ந.கார்த்தி Sat Apr 30, 2011 8:08 pm

நடிகர் விக்ரம் ஐ.நா.சபையின் மனித குடியேற்ற பிரிவின் இளைஞர் பிரிவு தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றார்.

அவர் விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூகசேவை பணிகள் செய்து வருவதாகவும், மேலும் இவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு இருப்பதாகவும் விக்ரம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

மரக்கன்றுகள் நடுவதற்காக பச்சைப்புரட்சி என்ற அமைப்பை துவங்கி உள்ளேன். குடிசைப் பகுதி மக்களுக்கு கல்வி அறிவூட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படும். நில உரிமையாளர்கள் தாமாக முன்வந்து தரும் காலி நிலங்கள், மற்றும் சாலை விரிவாக்கத்தில் சிக்காத பகுதிகளில் மரக்கன்று நடுவோம்.

இந்த திட்டத்தில் என் ரசிகர்களோடு வேறு நடிகர்களின் ரசிகர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்காக அஜீத், விஜய், சூர்யா போன்றோரிடம் இதுகுறித்து பேசுவேன். அவர்களையும் எனது பணியில் இணைத்துக் கொண்டு செயல்படுவேன். பிற மாநிலங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty எஸ்கேப் ஹீரோ

Post by ந.கார்த்தி Sat Apr 30, 2011 8:10 pm

நடிக்கிற பெண்களுடன் எல்லாம் கிசுகிசுக்கப்பட்ட ஏவுகணையின் பெயர் கொண்ட ரா‌ஜ் நடிகர் திடீரென திருமணம் செய்திருக்கிறார். கடைசி நிமிடம் வரை இவர் தனது திருமணத்தை மீடியாவுக்கு அறிவிக்கவில்லை.
சிம்பிளா திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காகதான் யா‌ரிடமும் சொல்லலை என்று நடிகர் தரப்பில் சமாதானம் கூறப்பட்டாலும், முன்பு பழகிய நடிகைகளில் யாரேனும் விழாவுக்கு வந்து கண்ணைக் கசக்கினால் அமங்கலமாகிவிடுமே என்றுதான் கடைசி வரை ரகசியம் காத்தார்களாம்.

எப்படியோ மன்மதனுக்கு கால்கட்டு விழுந்ததில் பல நடிகைகளின் மம்மிகள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Guest Sat Apr 30, 2011 8:15 pm

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 514396 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 514396 தேர்தல் முடிவு நேரத்துல பயபுள்ள புலம்புது ..
avatar
Guest
Guest


Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by அருண் Sat Apr 30, 2011 8:18 pm

அப்ப படம் ஒடுனா எங்களுக்கும் புதுமையாக இருக்கும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by T.N.Balasubramanian Sat Apr 30, 2011 8:24 pm

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

மேற்கூறியவர்களின் வாரிசுகள் ,தாங்கள் முன்னேறும் போது, தங்கள் முன்னேற்றத்திற்காக மற்றவர்களை நசுக்கவில்லை என்று தமிழ் சினிமா உலகம் மறைமுகமாக கூறுகிறதே. வெளிப்படையாக கூற பயம். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by varsha Sat Apr 30, 2011 8:55 pm

இனி நீங்க காமடி பண்ணி யார் பார்க்கிறது ..டைம் டூ ரிடயர்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 30, 2011 10:12 pm

திறமையினால் முன்னுக்கு வந்த சாவித்திரி அம்மா, ரேவதி போல அஞ்சலியும் புகழ் பெற என் அன்பு வாழ்த்துக்கள்... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 30, 2011 10:13 pm

செய்தி தகவலுக்கு அன்பு நன்றிகள் ரோஜா கார்த்தி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 18 Empty Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 43 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 30 ... 43  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum