புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
85 Posts - 79%
heezulia
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
250 Posts - 77%
heezulia
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_m10கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri May 06, 2011 10:30 am


- நெல்லைகண்ணன்

கேடில் விழுச்செல்வம் கல்வி என்றார் வள்ளுவப் பெருந்தகை.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளவாக் கேடின்றால்

எம்மர் உலகத்தும் யாமறியோம் கல்வி போல்

மம்மர் அறுக்கும் மருந்து,

என்கிறது நாலடியார்.

ஆமாம், இந்த ஜென்மத்தைச் சிறக்கச் செய்யும். எடுத்து, எடுத்து யார் யாருக்குத் தந்தாலும் பெருகுமே தவிர, குறையாது. நம்மை அடுத்தவருக்கு உணர்த்த உதவும். எல்லா அறியாமையையும் அறுத்து எறியும் சிறந்த மருந்து கல்வி என்கிறது இந்தச் செய்யுள்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் அழகிரியும், ஸ்டாலினும், மகள் கனிமொழியும் கற்றவர்கள்தானே?
ஆனால், நாலடியார் சொன்ன கல்வி அவர்களுக்கு வழங்கப்படவில்லையா? இல்லை, அவர்கள் தந்தையாரால் கோட்டம், சிலைகள் என்று போற்றப்பட்ட வள்ளுவரின் கல்வி குறித்து இவர்களுக்குச் சொல்லித் தரப்படவில்லையா? புரியவில்லை.

ஒரு பெரிய அரசியல் இயக்கத்தில் அந்த இயக்கத்துக்காக தங்களையே அழித்துக்கொண்ட பலபேரும், சொத்து சுகங்களை இழந்த பலபேரும் இருந்தும் இவர்கள் இந்த அரசியல் பொறுப்புகளை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? இன்று பெண் கவிதாயினியாக, பெண்ணியக்கப் போராளியாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிற கனிமொழிக்கு எப்படி, ஏன் இது புரியவில்லை?

அவர் கற்ற கல்வி, வள்ளுவப் பேராசான் குறிப்பிட்ட கல்வியாக இருந்திருந்தால் அவர் தன் தந்தையிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ""அப்பா இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி வழிநடத்திய அண்ணாவின் குடும்பத்திலே படித்தவர்கள் இருக்கிறார்கள். கழக முன்னோடிகள் பலரது வாரிசுகள் படித்தவர்கள். கட்சித் தொண்டாற்றுபவர்கள். உங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு தொண்டர்களாகவே தங்களைத் தேய்த்துக் கொள்பவர்கள். அவர்களிலே ஒருவருக்கு இந்தப் பதவியைத் தந்தால் அண்ணாவின் இதயம் உங்களிடம்தான் இருக்கிறது என்று நாம் தமிழர்களிடம் சொல்வது நிஜம் என்று மக்கள் மன்றத்தை நம்ப வைக்க முடியும். அண்ணாவின் ஒரு மகன் உங்கள் ஆட்சியிலேயே தற்கொலை செய்துவிட்டாரே. அந்தப் பழியைத் துடைத்திருக்க முடியும்'' என்று சொல்லியிருக்க வேண்டாமா?

அவர் கற்ற கல்வி, அவர் கற்ற கவிதைகள் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டக் கூடாது என்று அவரைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டாமா?

அப்படி அந்தப் பதவியைப் பெற்றதற்குப் பிறகு அந்த இயக்கத்துக்கும் அதன் தலைவரான தனது தந்தைக்கும் உண்மையாகவாவது இருந்திருக்க வேண்டாமா? இருந்திருந்தால் ராசாவுக்குத் தொலைத்தொடர்புத் துறையைக் கட்டாயம் பெற்றுத்தர வேண்டி தந்தைக்குத் தெரியாமல் நீரா ராடியாவிடம் கேட்டிருப்பாரா?

அவரால் அமைச்சரான ராசா அவராலேயே நாற்பது தினங்களுக்கு மேல் சிறையிலிருக்கிறாரே. இன்று கனிமொழியைக் கூட்டுச் சதிகாரர் என்று மத்தியப் புலனாய்வுத் துறை சொல்கிறதே. அதுமட்டுமல்ல, அவரது பண விளையாட்டுகளில் எந்தச் சம்பந்தமுமில்லாத தயாளு அம்மாள் அசிங்கப்படுகிறாரே, சரியா? இதுதான் அவர் கற்ற கல்வி கற்றுக்கொடுத்த பாடமா?

ஸ்டாலினை ஓரளவு ஒத்துக்கொள்ள முடியும். ஆனால், அவரது மகன்கள் கற்றவர்கள்தானே? தன்னைத் தவிர, யாரையுமே தொழில் செய்யவிடாமல் திரைப்படத்துறையை ஆட்டிப் படைக்க ஆசைப்படலாமா? அவர்களும் கற்ற கல்வி அவர்களுக்கு உதவவில்லையே?

கோட் சூட்டோடு தாத்தாவின் பக்கத்திலேயே நிற்கிறாரே தயாநிதி மாறன். அவரும் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் தாத்தா கருணாநிதிக்குத் தெரியாமல் நீரா ராடியாவிடம், அழகிரி ரெற்டி, படிக்காதவர், முரடன் அவரை அமைச்சராக்க விட்டுவிடக் கூடாது என்று சொல்லிவிட்டு, பின்னர் அழகிரியோடு அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத், பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி வீட்டுக்கு எப்படி ஒன்றாகப் போக முடிந்தது. என்ன கல்வி இவர்கள் கற்ற கல்வி?

ஏற்கெனவே மதுரையில் இவர்களின் போட்டியினாலே மூன்று உயிர்கள் பலியாயினவே. கலைஞர் தொலைகாட்சி அன்றுதானே உதயமாயிற்று. இன்று அதனால்தானே தயாளு அம்மையார் அசிங்கப்படுத்தப்படுகிறார். என்ன கற்றார்கள்?

இன்று இளைஞர்கள் பரவலாகப் படித்ததாகச் சொல்ல மறுக்கிறார்கள். இன்ன படிப்பில் சேர்த்திருக்கிறேன் என்று சொல்வதில்லை. என்ன வாங்கியிருக்கே என்றுதான் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். காரணம், படிப்பதற்கு அவர்கள் அள்ளிக் கொடுக்கும் நன்கொடைப் பணம். அளவுக்கு மீறிய கல்விக் கட்டணம்.

அழகிரியாவது மத்திய அமைச்சர் பதவியை அண்ணா குடும்பத்தில் ஒருவருக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்திருக்கலாமே. இல்லையென்றால், பாரதீய ஜனதா கட்சி இவர் பதில் சொல்ல சங்கடப்படுகிறார் என்று இவரைக் கேலிப் பொருளாக்கியிருக்குமா. என்ன கற்றார்கள் இவர்கள்?

ராகுல் காந்தியைச் செய்தியாளர்கள் கேட்கின்றனர். நீங்கள் பிரதமர் ஆவீர்களா என்று. ஆங்கிலத்தில் "ரிடிக்குலஸ்' (சிரிப்புத்தான் வருகிறது) என்கிறார். அமைச்சராவீர்களா என்கின்றனர். மூன்று, நான்குமுறை எம்.பி.யாக இருந்த பிறகு யோசிக்கலாம் என்கிறார்.

ராகுலையும், பிரியங்காவையும் வைத்து மக்களிடம் வாக்கு வாங்கிக் கொள்ளையடிக்கப் பார்க்கும் போலி காங்கிரஸ்காரர்கள் அவரிடம் கெஞ்சிப் பார்த்தனர். அவர் மிகத் தெளிவாக இருந்துவிட்டார். ராகுலும், பிரியங்காவும் கற்ற கல்வி சரியாக இருப்பதுபோல் தெரிகிறதே! ராசா ஒரு தலித் என்பதால் பழி வாங்கப்படுகிறார் என்றார் முதல்வர் கருணாநிதி. இன்னும் ராசா சிறையில்தான் இருக்கிறார். என்ன செய்ய முடிந்தது கருணாநிதியால்? உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு தப்பும் செய்யாமலா, எந்தவித ஆதாரமும் இல்லாமலா ராசா சிறையிலிருக்கிறார்?

கலைஞர் தொலைக்காட்சி பற்றிய கேள்வி எழுந்தபோது முதல்வர் கருணாநிதி என்ன சொன்னார் என்பது அவருக்கு மறந்திருக்கலாம். நமக்கு மறக்கவில்லை.

""கலைஞர் என்கிற பெயரைத் தவிர, எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. அதில் எனது மனைவியும் மகளும் பங்குதாரர்கள், நான் சம்பந்தப்படவில்லை'' என்பதுதான் அவரது பதிலின் சாராம்சம்.

முதல்வரின் மனைவியும், மகளும் சம்பந்தப்பட்ட ஒரு வியாபார நிறுவனம் முறைகேடுகளில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், அதற்கும் கட்சிக்கும் முடிச்சுப் போடவா முடியும்?

பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் உருவான கழகம் என்கிறார்கள். அண்ணா தொடங்கிய கட்சி என்கிறார்கள். அந்தக் கட்சி, இப்போது தலைவரின் குடும்பத்தினரைப் பாதுகாக்க உயர்நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்டி விவாதிக்கிறது.

கட்சிக்கு அரணாக இருக்க வேண்டிய தலைவரின் குடும்பம், இப்போது கட்சி என்கிற கேடயத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தங்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

சுயமரியாதை, சுயமரியாதை என்று பேசுகிறார்களே, கழகத்தில் யாருக்கும் அது இல்லையா? அமைச்சர்கள் அனைவரும் அநேகமாகக் கற்றவர்கள். வாயே திறக்க மாட்டேன் என்கிறார்களே. அவர்கள் கல்வி அவர்களுக்கு ஒன்றுமே தரவில்லையா?

- - தினமணி -


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri May 06, 2011 10:44 am

கலைஞரின் சந்தர்ப்பவாதக் கவிதை……

தோழமை தோள் கொடுக்கும் என்றெண்ணி கை கோர்த்தால் தேள் போல் கொட்டுகிறார் !

கல்லுடைத்து கள் குடித்தால் அவர் கவுரவம் குறையுமே என்றெண்ணி, மேற்கத்திய மதுவை மலிவாகத் தர மதுக் கடைகளைத் நான் திறந்தால்.

தேள் கொட்டியது, மருத்துவரை நான் அழைத்தேன் சிகிச்சைக்கு. மதுக்கடைகளை மூடினால் மருந்தளிக்க நான் மறுப்பேனா? – என்கிறார்.

நாடென்ன ஆனாலென்ன? என் மக்கள்
நலம்தன்னை கருத்தில் கொண்டு
ஆட்சியைப் பகிர்ந்தளித்தேன் சொந்தங்களுக்கு !

சொந்தங்களோ,
அரியணையை பிடிக்க சதிசெய்தது தெரியவர,
அவருடன் பகைமை பாராட்டி, போதுமடா உன்பாசம் !
நேசித்தேன் நான் உன்னை! மோசம் செய்தாய் நீ என்னை !
கலைந்ததடா உன் வேஷம் !

கழகத்தின் தோழர்களை நான் அழைத்து அவனது கரை சேவை போதுமென்று கட்சியிலிருந்தும், ஆட்சி கட்டிலிலிருந்தும் துரத்தினால்…..

அவனோ பகைமையை பழிதீர்க்க நாள் குறித்து, நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக அவனென்னை தோலுரிக்க,

”போதுமடா நம் பகைமை ! மக்கள் விழிக்கும் முன் சேர்ந்தெழுவோம்” நேசகரம் நான் நீட்ட, அவனும் கைக்கோர்த்தான்!

நாடென்ன ஆனாலென்ன ! நம் நலந்தானே முக்கியம் !

தெளிந்துவிடும் போதை மக்களுக்கு மதுக்கடைகளை மூடினால்,
மருத்துவருக்கோ கொண்டாட்டம், நம் பாடு திண்டாட்டம் !

யார் என்ன ஆனால் என்ன? எவர் குடும்பம் அழிந்தாலென்ன !
நம் குடும்ப நலந்தானே மிக முக்கியம் !

மூடுவேனா மதுக்கடைகளை, நான் மூடுவேனா !...
தமிழ்ப்ரியன் விஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்ப்ரியன் விஜி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 11:25 am

அடபாவி
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 06, 2011 1:43 pm

அவர்கள் கற்ற கல்வி எவ்வாறு மக்களை(நம்மை) ஏமாற்றலாம் என்பதில் டாக்டர் பட்டம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 2:03 pm

கல்வி அறிவு.....அவர்கள் செய்யும் திருட்டை மக்களிடம் இருந்து மறைபதற்கும்.......அப்படி தெரிந்தாலும்.....லாவகமாக அதில் இருந்து மீள்வதற்குமே அவர்கள் கற்றிருபார்கள்.......

என்று ஒரு திருடனை........அவன் திருடிய விதத்தை வைத்து.....ச்சே என்னே அவன் மதி நுட்பம் என்று பாராட்ட ஆரம்பித்தோமோ.... அன்றே.....
மக்கள் திருட்டுக்கு அதாவது மதி நுட்பம் மிகுந்த திருட்டுக்கு பச்சை கொடி காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.....என்று தானே அற்தம்.......

என்பது என் தனி பட்ட கருத்து.......

நன்றி கண்ணன் பகிர்ந்தமைக்கு...... கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?  224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக