Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின் லேடன் - கடைசி நிமிடங்கள்
2 posters
Page 1 of 1
பின் லேடன் - கடைசி நிமிடங்கள்
அமெரிக்காவை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது ஒசாமா மரணச் செய்தி.
மே 2 -ந் தேதி பலத்த பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமா ‘""ஒரு வரலாற்றுத் திருப்புமுனைச்சம்பவம் அரங்கேறி யிருக்கிறது. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டார். அவர் பதுங்கியிருந்த இடம் குறித்து எனக்குத் தகவல் வந்தது. தாக்குதல் தொ டுத்து அவரைக் கொன்றழிக்குமாறு உத்தரவிட்டேன். அதன்படி ஒசாமா கொல்லப்பட்டிருக்கிறார்'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்து... சந்தோ ஷப் பரபரப்பை பரவலாகப் பற்ற வைத்தார்.
""பூமியின் எதிரி அழிக்கப்பட்டிருக்கிறான். பூமியில் இருந்த ஒரு அபாயம் துடைத்தெறியப்பட்டிருக்கிறது'' என பூரித்தார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு இயக்கத் தலைவர் கைருல் அக்பர்.
அமெரிக்கா விழாக் கோலம் பூண்டது. பின்லேடனால் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலின்... தாக்கத்தில் இருந்து விடுபடாத அமெரிக்க மக்கள்.. அந்தப் பகுதியில் பெருந்திரளாகக் கூடி... தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு ‘ஒசாமாவின் கதையை முடித்த ஒபாமாவை வாழ்த்தத்தொடங்கினர். அமெரிக்க வெள்ளை மாளிகை முகப்பிலும் மக்கள் உற்சாகமாய்த் திரண்டு... வாழ்த்துக்களைப் பரிமாறியபடி ஆடிப்பாடினர். பல நாடுகளிலும் ஒசாமாவின் மரணம் கொண்டாடப் பட்டுக்கொண்டிருக்கிறது.
2001 செப்டம்பர் 11-ல்... நியூயார்க்கின் மிகப்பெரிய வணிகவளாகமான இரட்டை கோபுரத்தை.. வான்வெளித் தாக்குதல் மூலம் தகர்த்து.. உலகையே மிரளவைத்தான். "எங்கள் அனுமதி இல்லாமல் ஒரு ஈ, காக்காய்க்கூட அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது' என்று நெஞ்சு நிமிர்த்திவந்த அமெரிக்காவில்... இப்படி ஒரு தாக்குதலை நடத்தி ஏறத்தாழ 3 ஆயிரம் பேரை பின்லேடன் கொன்றதால்... உலக நாடுகள் திகைத்தன.
அப்போதிருந்த அமெ ரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்...’"பின்லேடனைப் பிடித்து நாங்கள் தண்ட னை கொடுக்காமல் ஓயமாட்டோம்'’ என சூளுரைவிடுத்தார். அன்றிலிருந்து தீவிர தேடுதல் வேட்டையில் அமெரிக்கா குதித்தது. ஏறத்தாழ 10 வருடங்களாக பின்லேடனுக்கு வலை வீசிக்கொண்டிருந்த நிலையில்...
அமெரிக்க சி.ஐ.ஏ. உளவுப்பிரிவினர்... பின்லேடன் பாகிஸ்தானில்.. அதிலும் அதன் தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு 50 கி.மீ. தூரத்தில் இருக்கும் அப்போதாபாத் பிலால் நகரில்.... ஒரு நவீனக் கட்டிடத்தில் குடும்பத்தோடு வசித்துவந்ததை ஒருவாரத்துக்கு முன் ஸ்மெல் செய்தனர்.
அவன் தங்கியிருந்த கட்டிடத்துக்கு அருகில் பாகிஸ் தான் ராணுவ பயிற்சி அகாடமி இருக்கிறது. ஆயுதத் தொழிற்சாலைகள் அதிகமுள்ள ஏரியா அது. இதையெல்லாம் ஸ்கெட்ச் போட்டு மெக்லின் வர்ஜீனியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தலைமையகத்துக்கு தகவல் அனுப்பினர் அமெரிக்க உளவு அமைப்பினர். தகவல் ஒபாமா வுக்குப் போக... அவர் சீக்ரெட் டாகவே ஆபரேஷன் நடக்கட்டும் என்றபடி க்ரீன் சிக்னல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து...
மே 1-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வர்ஜீனியாவில் இருக்கும் சி.ஐ.ஏ.வின் தலைமையகத்தில் இருந்தபடியே ராணுவத் தளபதி பனீட்டா ஆர்டர் போட... அடுத்த சில நொடிகளில் தகவலுக்குக் காத்திருந்த அமெரிக்க கப்பற்படை கமாண்டோக்கள் தங்கள் அதிரடி ஆபரேசனைத் தொடங்கினர்.
மூன்று ஹெலிகாப்டர்களில் ஸ்பாட்டுக்கு அவர்கள் வந்தனர். 18 அடி உயரமுள்ள கோட்டைச்சுவர்களுக்குள் பதுங்கி யிருந்த அந்தக் கட்டிடத்திற்குள்.. அதிரடியாக நுழைந்த அமெரிக்க படையினர்... அட்டாக்கில் இறங்கினர். படபடவென துப் பாக்கிக்குண்டுகள் வெடித்துச் சிதறின. கையெறி குண்டுகளும் பலத்த சத்தத்துடன் வெடித்தது. மதில் சுவர்கள் மீது போடப் பட்டிருந்த முள்கம்பிச் சுருளையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க வீரர்கள்.. ஏறி நின்றும் தாக்குதல் தொடுத்தனர்.
இந்த சண்டையில் பின்லேடனின் இரண்டு மகன்களும் கடைசி ஆயுதமாக, அங்கிருந்த ஒரு பெண்ணை தனக்குக் கேடயமாக நிறுத்திக் கொண்டான் பின்லேடன். அமெரிக்க வீரர்களோ ஒரு சேர அந்தப் பெண்ணையும் அவனையும் நெற்றிப்பொட்டில் சுட்டு வீழ்த்தினர். மிருதுவான குரலால் உலகை அச்சுறுத்தி வந்த அவனது உயிர்த்துடிப்பு அங்கேயே அடங்கியது. சண்டை நடந்த கட்டிடத்துக்குள் பதுங்கி யிருந்த அவனது மனைவிகள் உட்பட சிலரைக் கைதுசெய்த வீரர்கள் பின்லேடனின் உட லைக் கைப்பற்றிக்கொண்டனர். ஆப்கனில் இருக்கும் பார்கிரம் ஏர்போர்ட்டில் வைத்து மீடியாக்களிடம் பின்லேடனின் உடலைக் காட்ட திட்டமிட்டது அமெரிக்கா.
""அந்த வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். குப்பையைக் கூட வீட்டிற்குள்ளேயே எரித்து விடுவார்கள். டெலிபோன், கம்ப்யூட்டர் போன்ற எலக்ட் ரானிக் பொருட்கள் எதையும் அந்த வீட்டில் வைத்திருக்க மாட்டார்களாம். இரண்டு செக்யூரிட்டி கேட்டுகளைக் கடந்து தான் உள்ளே போகமுடியும்.
2005-ல் இந்த இடத்தை வாங்கி பெரிய காம்பவுண்ட் சுவரோடு இந்த பங்களா வீட்டை சிலர் கட்டியபோது யாரோ பெரிய அரசியல்வாதி குடிவரப்போறாங்கன்னு நினைச் சோம். கடைசிவரை.. யார் குடிவந்தான்னே தெரியலை. இப்ப தான் பின்லேடன் இங்க தங்கி யிருந்தான்ங்கிறதே தெரியவந்தது. ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு'' என்கிறார்கள் அந்த வீட்டின் அருகே வசிக்கும் பிலால்நகர் வாசிகள்.
உலகின் பெரும்பாலான நாடுகள் ஒசாமாவின் மரணத்தைக் கொண்டாடிவரும் நிலையில்...
ஒசாமாவை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுத்தது.. இத்தனைநாள் பாதுகாப்பு கொடுத்த பாகிஸ்தான் தான் என்ற சர்ச்சையும் தற்போது வெடித்துக்கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு கொடுத்த பாகிஸ் தானே ஒசாமாவை காட்டிக்கொடுக்க முகாந்திரம் உண்டா? என்று கேட்டால் உண்டு என்று அடித்துச் சொல்கிறார்... அல்கொய்தா நட வடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துவரும் லீவ் பெரால் என்கிற ஆஸ்திரேலிய நிபுணர்.
இதற்கு இவர் சொல்லும் விளக்கம் இதுதான்.... ‘""ஆப்கனில் நடக்கும் போரால் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததா அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். எனவே.. ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப்படைகளை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்காவில் வலுத்துக் கொண்டிருக்கிறது. அல்கொய்தாவின் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துவருவதால்... அமெரிக்காவால் படைகளை திரும்பப் பெறமுடியாத சூழல். பாகிஸ்தானில் இருக்கும் வசீரிஸ்தான் மலைப்பகுதியில்தான் 300-க்கும் மேற்பட்ட அல்கொய்தா ஆட் கள் இருக்காங்க. ஒசாமா அல்கொய்தாவின் முகம் மட்டும் தான். இந்த முன்னூறு பேரையும் வைத்து அழிவுக்கான ஆபரேஷன்களை ஆப்பரேட் பண்ணிக்கிட்டு இருப்பவர் அல்-ஜவாஹிரிதான்.
இந்த நிலையில் அமெரிக்க மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைக் குறைக்க... ஒபாமா... ஒசாமா பதுங்கியிருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுக்குமாறு பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தார். பாகிஸ்தான் காவல்துறையில் பாதிபேருக்கு சம்பளம் கொடுப்பது அமெரிக்காதான். அதனால் தான் சம்பளம் கொடுக்கும் காவல்துறை அதிகாரிகள் மூலமே அவருக்கு ஒசாமா தங்கியிருந்த இடம் பற்றிய தகவல் போய்ச்சேர்ந்தது. இப்போ ஒசாமாவை அழித்ததன் மூலம்... சரிய ஆரம்பித்திருந்த தன் செல்வாக்கை தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஒபாமா.
ஆக... ஒசாமாவைக் காட்டிக்கொடுத்தது பாகிஸ்தான்தான். அதே நேரம் இந்த அழிப்பில் தனக்கு விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் முகமாக... பாகிஸ்தான் பிரதமரான அப்துல் ரசாக் கிலானி ‘தீவிரவாதிகளை அமெரிக்கா கொன்றழிப்பதை ஏற்கமுடியாது’ என கடந்தவாரம் பேசியிருக்கிறார்''’ என்று தனது வாதத்தை வைக்கிறார் லீவ் பெரால்.
புனிதப்போர் என்ற பெயரில் அப்பாவிகளையும் கொன்றழித்த ஒசாமாவுக்கு... முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை அமைதி விரும்பிகள் ஆதரிக்கிறார்கள்.
-பிரகாஷ்
நக்கீரன்

Re: பின் லேடன் - கடைசி நிமிடங்கள்
எனக்கு ஒரு சந்தேகம் ; 3000 அமெரிக்கர்களை கொன்றதாற்க்காக இவ்வளவு செலவழித்து இத்தனை நாள் கழித்து சாதித்துள்ளார்கள் (!?)அமெரிக்கர்கள். ஆனால் லட்சக்கணக்கில் அப்பாவிகளை கொன்ற அவர்களுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் என் ஒன்றா க சேர்ந்து சண்டை போடல? (என் கேள்வி தப்பானால் தயவு செய்து யாராவது இந்த போஸ்ட் ஐ எடிட் செய்யவும் ) சௌதில எண்ணை எடுக்க உதவுவதாலா ? அதுவும் நிறைய சுரண்டுறார்களே அமெரிக்கர்கள்? சௌதி ல இருந்த தாள் சொல்கிறேன், நாம் அனைவரும் அங்கு "புர்கா " போடணும். ஆனால் அமெரிக்க ( அமெரிக்கர்கள் அல்ல அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தால் போறும் பெண்கள் பாண்ட் ஷர்ட் கூட போடலாம் . அப்படி ஒரு சலுகை அவர்களுக்கு அது என்ன அவர்களுக்கு ஸ்பெஷல்?) அவர்கள் உய்ருக்கு அவ்வளவு மதிப்பா ? நமக்கெல்லாம் இல்லயா? நான் பின்லேடனுக்கு பரிந்து பேசலா. நம் மக்கள் என் அமெரிக்கர்களுக்கு தோன்றுவது மற்ற நாடுகளுக்கு ஏன் தோன்றவில்லை ?தயவுசெய்து யாராவது பதில் சொல்லவும், எனக்கு புரிய வைக்கவும். நோ கிண்டல் பதில் பிளீஸ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» ஒசாமா புண்ணியத்தால் அமெரிக்கர்களிடையே ஒபாமா செல்வாக்கு உயர்வு
» கடைசி நிமிடங்கள்
» கடைசி நிமிடங்கள்!
» கடைசி நிமிடங்கள் 2

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|