புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_m10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_m10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_m10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_m10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_m10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_m10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_m10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_m10குழந்தைத் தொழிலாளர்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைத் தொழிலாளர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 3:35 am

குழந்தைத் தொழிலாளர்கள்

குழந்தைத் தொழிலாளர்கள் Child-worker1

தாய் வணக்கமும்
தமிழ் வணக்கமும்
தள்ளி வைக்கப்பட்டது.. ..
ஆம்!..

துக்கம் கூறும் போது
வணக்க சம்பிரதாயங்களை
என் வாய் உச்சரிக்க மறுக்கிறது!

இது கண்ணீர்!
கானல் நீரல்ல.. ..
மழலைகளின் கண்ணீரை
எழுதிப் பிழைக்கும்
எழுத்து வியாபாரியல்ல நான்!
மழலைகளின் விசுவாசி
மனித நேயச் சிறைவாசி !

தெருவெல்லாம் தீபாவளி
வீதியெல்லாம் வெளிச்ச வெள்ளம்
இதோ!-

இந்த இருட்டிலுள்ள
மழலைகளின் முகத்தில்
இரசாயன மாற்றமாய்
முதுமையின் முகவரிகள்!
இல்லையில்லை-
தலைவிதியை
தவறாய் எழுதியவனின்
புரியாத வரி வடிவங்கள்!..

இவர்களை நினைத்தால்.. ..
இதயம் வலிக்கிறது !

வாடிய பயிர்களுக்கு
வாடிய வள்ளலாரின்
கொள்கைகளை-
வடலூர் அடுப்பிலேயே
எரிய விட்டு விட்டோம்!

அஹிம்சையை போதித்த
உத்தமர் காந்தியின்
உடலைத் தானே துப்பாக்கி துளைத்தது?
அஹிம்சையைக் கூடவா
சுட்டுப் பொசுக்கி விட்டோம்?..

அன்பை போதித்த
இயேசுவைத் தானே
சிலுவையிலறைந்து மரிக்கச் செய்தோம்?
அன்புமா மரித்துப் போனது?..

இவைகளை நினைத்தாலும்
இதயம் வலிக்கிறது !..

குழந்தைத் தொழிலாளர்கள் Cambodia_child_labour_25



குழந்தைத் தொழிலாளர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 3:38 am

குழந்தைத் தொழிலாளர்கள் 388181_jpg_72415t


மழலைகளின் புன்னகையை,
பூரித்துப் பார்த்திருக்கிறாயா?..
போதி மரம் தெரிகிறதா?..
யாராலும் மொழிபெயர்க்க முடியாத
ஒரு இலக்கியத்தைக் கண்டாயா?..
உன்னைப் பார்த்தும்
ஒரு ஓவியம் சிரித்ததா?..
அந்த
மழலை நந்தவனத்தையா
மயான பூமியாக்கத் துடிக்கிறாய்?..

மனிதனே!
வாழ்க்கைப் புயல்வீச்சில்
வறுமைப் பஞ்சுகள் உன்
காதுகளை அடைத்து விட்டதா?..
இந்த மழலைச் சங்கீதங்களை
மரண வாசலிலா
அபஸ்வரம் மீட்டச் சொல்கிறாய்?..

மரணத்திற்குத் தானே
கண்ணில்லை?..
மனிதனே!.. உனக்கென்ன?..

உலகில் சிறந்த
ஓவியங்களைத் தீட்டும்
இந்த-
தூரிகைகளை ஏன்
துடப்பங்களாக்கத் துடிக்கிறாய்?..

சரித்திரத்தின் பக்கங்களை
ஒப்பற்ற சிற்பங்களாய்
உருமாற்றம் செய்யும்
உளிகளையா ஊனமாக்கத் துடிக்கிறாய்?..

வெட்கப் படுங்கள் வேர்களே!
உங்கள்
விழுதுகளை அழுக விட்டதற்கு!

துக்கப்படுங்கள் தோழர்களே!
இவர்கள்
எதிர்காலம் தொலைத்து விட்டதற்கு!

கடற்கரை யோரத்தில்
காதலியின் கதகதப்பில்
சுண்டல் விற்கும் சிறுவனின்
சோகத்தை என்றாவது
சுண்டலுடன் அசை போட்டதுண்டா?
அந்த சுண்டல் விற்பவனின்
கண்ணீர்.. ..
கடல் நீரை விட உப்புக் கரிப்பதை
என்றேனும் உணர்ந்ததுண்டா?..

பூ விற்கும் சிறுமியை
"ஏய்.. பூ!" என்றழைத்து
நீ பூ வாங்கிக் கொடுக்க,
புன்னகைப்பாளே உன் பூவை-
அந்த நிமிடத்திலாவது
பூக்கார சிறுமியின்
வாட்டத்தை என்றாவது
கேட்டதுண்டா?

குழந்தைத் தொழிலாளர்கள் IndiaChildLabor450



குழந்தைத் தொழிலாளர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 3:40 am

குழந்தைத் தொழிலாளர்கள் 2979512240_485773cf58



உன் நண்பனின் திருமண நாளுக்கு
பரிசுப் பொருள் வாங்க
காதலியோடு கை கோர்த்து
கடைவீதியெங்கும் நடை போட்டு
பளபளக்கும் பாத்திரங்களைப்
பார்த்தபடி வருவாயே-
அப்போது, அதைப் பளபளக்கச் செய்த
கைகளைப் பார்த்ததுண்டா நீ?..
அப்படி பளபளக்கச் செய்துவிட்டு
பொலிவிழந்து போய்
நாய்கள் கூட
மனிதனென்று ஒப்புக் கொள்ளாமல்
துரத்திய கதை கேட்டதுண்டா?..

சுற்றித் திரிந்த களைப்பு நீங்க
சூடாகக் காப்பி சாப்பிட
ஓட்டலுக்குள் நுழைந்து
இட்லியும் சாம்பாரும் மனம் பரப்ப
இட்லியின் நடுவில்
வேகாத பகுதியைத்
தொட்டுக் காட்டும் காதலிக்காய்
மனமுடைந்து போனவரே!-
என்றேனும்
தண்ணீர் தந்த சிறுவனையும்
எச்சில் எடுக்கும் சிறுவனையும்
நினைத்ததுண்டா?..
அவர்களின் வெந்த மனங்களைத்தான்
படித்ததுண்டா?..

இவையெல்லாம் முடிந்து
வீட்டில் நுழையுமுன்னே-
"அம்மா!-
மளிகைச் சீட்டு காலையில் கொடுத்தேனே
வந்து விட்டதா?" எனக் கேட்பீரே-
அங்கு-

"மூச்சிரைக்கத் தூக்கி வந்த சிறுவனுக்கு
மோர் கொடுத்தாயா?.." அட-
"நீராவது கொடுத்தாயா?" எனக்
கேட்டதுதான் உண்டா?

இப்படி
சுண்டல் காரனாய், பூக்காரியாய்,
பாலீஷ் போடுபவராய்
எச்சில் எடுப்பவனாய்
குப்பை பொறுக்குபவனாய்
இன்னும் எத்தனை எத்தனை முகமூடிகள்!?..

சுதந்திர இந்தியாவில்
இவர்கள் மட்டுமென்ன
நிரந்தர அடிமைகள்?..
இந்தப் பாவிகளை யார் இரட்சிப்பது?

குழந்தைத் தொழிலாளர்கள் Child_labour_indian_child_labourers_4d



குழந்தைத் தொழிலாளர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 3:42 am

குழந்தைத் தொழிலாளர்கள் 1223629822842



அறியாமையால் கல்லாதிருந்தால்
இவர்கள் குற்றவாளிகள்!
அடித்தும் திருத்தலாம்!
ஆனால்-
இவர்களை, வறுமைக்கும் பட்டினிக்கும்
பெற்றெடுத்த குற்றவாளிகள்
நீங்கள்!

எனவே-
துக்கப் படுங்கள் தோழர்களே!
இவர்கள் எதிர்காலம்
தொலைத்து விட்டதற்கு!

இந்த விஞ்ஞான யுகத்திலும்
அக்னிக் குஞ்சுகள்
அஞ்ஞாத வாசம் செய்வதா?
சோதனைக் குழாய்கள்
குஞ்சு பொரித்தாலும்,
இன்குபேட்டர் கள்
அடை காத்தாலும்,
மழலை அடிமைகள்
என்பது மட்டும்
மறுமொழியில்லாத நிரந்தரமா?

வயதுக்கு மீறிய வருமான மென
வாய் பிளக்காதீர்! அது
கொழுத்த யானைகள்
ருசிக்கு தின்ற போது
சிதறிய கவளங்கள்!

இந்த எரிமலை நெருப்பு
நான் நத்தையாய்
சுமந்து வரும் நீர்க்குடங்களால்
அணையாது!
கறுப்படிந்து கிடக்கும்
மழலை அடிமைகளின்
வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தத்
தோள் கொடுங்கள்!

அந்த
மெல்லினக் கூட்டத்தைக்
குத்தகை கொண்டோரின்
குறுமதி அறுக்க
வாள் எடுங்கள்!..

- ப. சத்திய நாராயணன்.

குழந்தைத் தொழிலாளர்கள் 6900zk



குழந்தைத் தொழிலாளர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Sep 10, 2009 6:46 am


[b]இக் குழந்தைகலேய் பாக்கவே மனது பொறுக்குதில்லை நமக்கு
அனால் நமது தாய் நாட்டிலோ யாரும் கேப்பார் இல்லாமல் நம் தமிழ் மக்களெய் சிங்களவன் கொன்னு குவிக்குறான் அதுக்காவது ஊர் உலக நாடு சிங்களவனை வன்மெயா கண்டிக்கவாவது வேண்டாமா?

இந்த கொடுமையை எங்கே போய் குழந்தைத் தொழிலாளர்கள் 56667
[/b]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக