புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 21:25

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
60 Posts - 80%
heezulia
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
396 Posts - 79%
heezulia
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
8 Posts - 2%
prajai
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
துட்டு வரலே சாமி  Poll_c10துட்டு வரலே சாமி  Poll_m10துட்டு வரலே சாமி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துட்டு வரலே சாமி


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed 4 May 2011 - 15:30


எங்களை அவமானப்படுத்தாதீங்க!
-மானமிகு தமிழ் மக்களின் கடிதம்!

""அரசியல் கட்சிகளோட தலைவர்- தலைவியருக்கு, வணக்கமுங்க.

அரண்மனை வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அந்தப்புரத்து வப்பாட்டியா அடிமை வாழ்க்கை வாழுறதைவிட, சொந்தக் காணியில பாடுபடுற மனுசனுக்கு வாக்கப்பட்டு அரை வயித்துக் கஞ்சிய அமுதமா நினைச்சுக் குடிச்சி சுயமரியாதை யோடு வாழ நினைக்கிற மனுசங்க நாங்க. மானத்தைவிட வருமானத்தை பெருசா நினைக்கிறதே அவமானம்னு மன சுக்குள்ள நாங்க எழுதி வச்சிருக்கோம். எங்க சுயமரியாதைக்கு உங்க தேர்தல் நேரத்துலதான் சோதனை வருது. ஒவ்வொரு கட்சிக்கும் என்ன கொள்கை, யார்-யாரோடு கூட்டணிங் கிறதெல்லாம் கடைசி நேரம் வரைக்கும் எங்களுக்குப் புரியமாட்டேங்குது. ஆனா உங்க எல்லோருக்கும் பணத்தோடு கூட்டணி இருக்கு. ஓட்டுக்கு காசுங்கிறது உங்க எல்லா ருக்குமே கொள்கையா இருக்குது.

இந்த மண்ணுல எப்போதிருந்து எல்லாக் குடிமகனுக் கும் ஓட்டுன்னு சட்டம் வந்ததோ, அப்போதிருந்தே ஓட்டுக்கு நோட்டுங்கிற கலாச்சாரமும் சேர்ந்தே வந்திடிச்சி. முதல் எலெக்ஷன் நடந்த 1952-ல் பல கிராமங்களில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுத்து ஆட்சியைப் பிடிச்சாங்க. கவுன்சிலர் எலக்ஷனில்கூட நோட்டுத்தான் ஓட்டுகளைத் தீர்மானிச்சுது. மக்களுக்கு பணம் கொடுத்து ஜெயித்த கவுன்சிலர்களெல்லாம் சேர்மன் தேர்தலில், தங்களோட ஓட்டுக்கு ஒரு பவுன்னு விலை போன கதையெல்லாம் நிறையவே இருக்கு. அப்படி இப்படின்னு அரசல் புரசலா இருந்த இந்த நோட்டுக் கலாச் சாரத்தை, திட்டம் போட்டு வெளிப்படையா செய்யும் தேர் தல் கலாச்சாரம் சாத்தான்குளம் இடைத்தேர்தலில் பல கோடி பட்ஜெட்டில் தொடங்கி திருவள்ளூர்- கும்மிடிப் பூண்டி இடைத்தேர்தலில் வளர்ந்தது. திருமங்கலம் இடைத் தேர்தல் மூலமா இந்தத் தமிழகத் தேர்தல் கலாச்சாரம் உலகப் பிரபலமாகிவிட்டது. அதற்கப்புறம், ஒவ்வொரு தொகுதி வாக் காளரும் தங்களோட தொகுதிக்கு எப்போது இடைத்தேர் தல் வரும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சுயமரி யாதைக்கான சோதனை இங்கிருந்துதான் தீவிரமடைஞ் சது. இடைத்தேர்தல் கலாச்சாரத்தை அப்படியே பொதுத்தேர்தலுக்கும் பயன்படுத்தலாம்ங்கிறதை 2009 எம்.பி. தேர்தல் நிரூபிச்சது. இப்ப நடந்த சட்டமன்றத் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே கரன்சிக்கூட்டணியைத்தான் நம்பியது.

வாங்குன பணத்துக்கு நாங்க விசுவாசமா இருப்போம்னு நீங்க நினைக்கிறீங்க. ஒரு கட்சி மட் டும் பணம் கொடுத்தால் விசுவாசத்தைக் காட்டலாம். ஒவ்வொரு கட்சியும் பணம் கொடுத்தா எங்க விசுவாசத்தை யாருக்கு காட்டுறது? தேர்தல் கமிஷன் கெடுபிடியால கட்சிப்பணத்தையும் சொந்தப் பணத்தையும் வெளியே எடுக்கமுடியாம, நடுராத்திரி திருடனுங்க மாதிரியும் வேறு எதுக்கோ போற மைனருங்க மாதிரியும் ஜாமத்துல கதவைத் தட்டி, கவருல போட்டு பணத்தைக் கொடுக்குறீங்க. இப்படிக் கொடுத்தா ஜெயிச்சிடலாம்னு ஒவ்வொரு கட்சியும் கணக்குப் போட்டா, ஒரு தொகுதிக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களைத் தேர்ந்தெடுக்கிறது? சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்கால் பணம்ங்கிற கதையா, மக்களுக்கு கொடுக்கச் சொல்லி கட்சியிலிருந்து வந்த பணத்தை, விநியோகம் பண்றதா சொல்லி கட்சிக்காரங்க ஆட்டையப் போட்டதை என்னன்னு சொல்றது?

ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள்ள அண்ணன்-தம்பிங்கன்னு நாலைந்து குடும்பம் இருக்குது. அதில் ஒருத்தர் மட்டும் அந்தக் கட்சிக்காரர்னு சொல்லி, இந்தக் கட்சிக்காரங்க கவர் கொடுக்காம போயிட்டாங்க. அன்னைக்கு ராத்திரி, அந்த ஆள் வீட்டுக்கு வந்தப்ப அவரோட சம்சாரம் பத்ரகாளியாயிடிச்சி. “"உன்னோட அண்ணன் தம்பிங்களுக்கெல்லாம் ஒழுங்கா பணம் வந்திருக்கு. அவங்க பொண்டாட்டிகளுக்கும் வந்திருக்கு. ஆனா உனக்கும் எனக்கும் வரலை. நீ என்னய்யா மனுசன்.. துப்புக்கெட்ட ஆம்பளையா இருக் கியே'ன்னு ஒரே சண்டை. தனக்குப் பணம் கொடுக்காததை அவமானமா நினைச்சி அந்தம்மா வேற யார்கிட்டேயும் பேசுறதில்லை. குதூகலமா இருந்த கூட்டுக் குடும்பத்துக்குள்ள வந்து கும்மியடிச்சிட்டுப் போயிடிச்சி உங்க ளோட பணம். உங்க காசு, நாட்டையும் கெடுத் திடுது. வீட்டையும் கெடுத்திடுது.

அரசியல் புண்ணியவான்களே.. போதும் நீங்க நடத்துற பணத்தாசை விளையாட்டு. எலெக்ஷன் கமிஷன்கிட்டேயிருந்தும் உங்க ளுக்கு நெருக்கடி. மக்களுக்கும் முழுசா போய் சேருவதில்லை. உங்க கட்சிக்காரங்களே உங்க கட்சிப் பணத்தை வீட்டுப் பீரோவில் வச்சுப் பூட்டிக்கிறாங்க. இதற்கு மேலேயும் ஓட்டுக்கு நோட்டுன்னு மக்களை விலை பேசணுமா? நீங்க ஜெயிச்சீங்கன்னா, ஆளுங்கட்சியாகி வருமானம் பார்த்திடுவீங்க. தோத்தாலும் ஏற்கனவே சேர்த்து வச்ச வெகுமானம் பத்திரமா இருக் கும். உங்க வருமானத்தையும் வெகுமானத்தை யும் தேர்தல் மூலதனமாக்கி எங்களை அவ மானப்படுத்தாதீங்க. தமிழ்நாட்டு ஜனங்க நோட்டுக்கு விலை போறவங்கன்னு இந்தியா முழுக்க பரப்பிக்கிட்டிருக்கீங்க. ஜெயிக்கிறது உங்களுக்குப் பெருமையா இருக்கலாம். இவங்க ஜெயிக்கிறதுக்கு நாம விலை போகணுமான்னு நாங்க வெட்கப்படுறோம். போட்டிருக்கிற துணி அவிழ்ந்து விழுந்த மாதிரி கூச்சப்படுறோம். உங்க பணத்தைத் தொடுறதையே பாவம்னு நினைக்கிறோம். அடுத்த தேர்தலுக்காவது அந் தப் பாவத்தை செய்யாம இருங்க. இனியாவது எங்களை மானத்தோடு வாழவிடுங்க.''

இப்படிக்கு

(அவ)மானமிகு தமிழ்மக்கள்
நக்கீரன் செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக