புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
36 Posts - 47%
heezulia
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_m10கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 03, 2011 1:07 pm

First topic message reminder :

2ஜி விவகாரத்தில் சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி விரைந்து சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியது தொடர்பாக அந்தத் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வரும் 6ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந் நிலையில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் துரைமுருகன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சர் ஆ.ராசாவின் தனி செயலாளர் சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர் சித்தார்த் பெகுரியா மற்றும் 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Scaled.php?server=706&filename=purple11

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 06, 2011 5:59 pm

புதுடில்லி : 2ஜி இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என சி.பி.ஐ.,யால் வர்ணிக்கப்பட்ட கனி‌மொழி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் சம்மனுக்கு இணங்கி இன்று கோர்ட்டில் ஆஜரானார். காலை 10 மணியளவில் அவர் கோர்ட்டுக்கு வந்தார். கனி‌மொழி சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதிகள் சனிக்கிழமைக்கு ( நாளைக்கு) ஒத்திவைத்து உத்தரவிட்டனர். கனிமொழி கைது செய்யப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று அவர் கைது செய்யப்படவில்லை. கனி‌மொழியிடம் தொடர்ந்து நாளையும் விசாரணை நடைபெறுகிறது. கனிமொழியிடம் நடைபெறும் விசாரணை குறித்து தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன் அளித்த பேட்டியில் : தி.மு.க., எப்போதும் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கும் என்றார்
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 06, 2011 6:00 pm

புதுடில்லி : சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணைக்காக ஆஜரான கனிமொழி, கோர்ட்டில் இருந்து வெளியே வந்த போது பத்திரிகையாளர்கள், மீடியாவை தவிர்த்து விட்டு வேகமாக காரில் புறப்பட்டுச் சென்றார். கனி‌மொழியுடன் கோர்ட்டுக்கு அவரது கணவரும் வந்திருந்தார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
avatar
Guest
Guest

PostGuest Sat May 07, 2011 8:35 am

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Large_236888
ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில், தி.மு.க.,
எம்.பி.,க்கள் புடைசூழ கனிமொழி ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி
ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ஜெத்மலானி, ""கனிமொழிக்கு இந்த விஷயத்தில்
நேரடித் தொடர்பு இல்லை,'' என, வாதாடினார். நீதிபதி சைனி , ""இந்த வழக்கில்
உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதே நிலை நீடிக்கும்,'' என்றார். இன்றும்
வழக்கு விசாரணை நீடிப்பதால், கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது
இன்றுதான் தெரியவரும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கனிமொழி,
டில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டிற்கு நேற்று
வந்திருந்தார். அவருடன், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர்
டி.ஆர்.பாலு உட்பட 11 எம்.பி.,க்கள் வந்தனர். நீதிபதி சைனி முன்பாக வாதிட்ட
வக்கீல் ராம்ஜெத்மலானி கூறியதாவது: கனிமொழிக்கு சம்மன் அனுப்பியாகி
விட்டது. அவர் ரெகுலராக கோர்ட்டிற்கு வந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு
கொடுக்கிறரா என்பதைத்தான் பார்க்க வேண்டும். உத்தரவாதம் பெற்று அவரை
ஜாமினில் விடுக்க வேண்டும். ஜாமின் கேட்பது என்பது அவரது பிறப்புரிமை.
சுப்ரீம் கோர்ட்டும் சரி, அலகாபாத் ஐகோர்ட் உள்ளிட்ட பிற கோர்ட்டுகளும் இதை
ஏற்கனவே உறுதி செய்துள்ளன.
கலைஞர் "டிவி'யில், கனிமொழி வெறும் பங்குதாரர் மட்டுமே. அதுவும் பெரிய
அளவிலான பங்குதாரரும் இல்லை. வெறும் 20 சதவீத பங்குகளை மட்டுமே
வைத்துள்ளார். அதன்படி பார்த்தால், கலைஞர் "டிவி' சம்பந்தப்பட்ட எந்த ஒரு
ஆவணங்களிலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி'யில் ஆரம்ப
காலத்தில், கனிமொழி ஒரு இயக்குனராக இருந்தார். அதன்பின் அந்தப் பதவியில்
இருந்தும் விலகி விட்டார். அதன்பிறகு "டிவி' தொடர்பான நடவடிக்கைகளில் அவர்
பெரிதும் ஈடுபடவில்லை. கனிமொழி அப்பாவி. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும்,
கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கலைஞர் "டிவி' தொடர்பான எந்த போர்டு
மீட்டிங், ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை.
கலைஞர் "டிவி' உருவாவதற்கு அடித்தளமே கனிமொழி என்ற சி.பி.ஐ., யின்
குற்றச்சாட்டு தவறானது. மேலும், ராஜா மூலமாக கலைஞர் "டிவி'க்கு ரூ.200 கோடி
வந்தது என்று கருதப்பட்டாலும், அதில் கனிமொழிக்கு சம்பந்தம் என்ன
இருக்கிறது. அந்தப் பணவரவு குறித்து எந்த ஆவணத்திலும் கனிமொழி
கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி' பற்றி முடிவெடுத்தது சரத்குமார்
பொறுப்பாகும். மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகிய குற்றங்களில்
ஈடுபட்டவர்களுக்கு வேண்டுமானால், இந்த ஜாமின் மறுக்கப்படலாமே தவிர, மற்ற
வழக்குகளில் ஜாமின் வழங்குவது சாத்தியமானதே. அதிலும் கூட பெண்கள்,
நோயாளிகள், முதியவர்கள் போன்ற காரணங்களுக்காகவும் ஜாமின் வழங்க
கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதிட்டார். கோர்ட்
அறை முழுவதும் பெரும் கூட்டம் நிரம்பி இருந்தது. இவருக்கு பிறகு,
சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப், பல்வா வக்கீல் @பசினர். நேரம்
ஆகிவிடவே தன் வாதங்களை நாளை (இன்று) வைப்பதாக சி.பி.ஐ., வக்கீல் லலித்
கூறினார். அவரது வாதத்தை கேட்டபின் முடிவு எடுக்க வேண்டும் என்ற
அடிப்படையில், நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதி சைனி அறிவித்து
வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 8:46 am

ஒத்த செய்திகள் ஒருமித்த திரிகள் ஒருங்கிணைக்கப்ட்டுள்ளது. இது போன்ற ஒருங்கிணைப்பில் திரிகளின் எண்ணிககை குறைவது சாத்தியமென்று உணர்க மதன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Sat May 07, 2011 8:52 am

அடடா இதுக்கு ஒரு திரி செல்கிறதா...கவனிக்கவில்லை நன்றி கலை அண்ணே கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 224747944

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 11:26 am

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி மனு மீதான விசாரணை இன்றும் சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்கிறது. இன்று சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன. இதன் முடிவில்தான் கனிமொழி கைதாவாரா இல்லையா என்பது தெரிய வரும்.

அதேநேரம், அவர் எந்நேரமும் கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் திகார் மற்றும் ரேஹினி சிறைச்சாலைகளில் முன்னேற்பாடுகள் வேகமாக நடந்துவருகின்றன.

இந்த வழக்கு விசாரணை இன்றும் நடக்கவுள்ள நிலையில், 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்துவிட்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், நான் கைது செய்யப்படுவேனா இல்லையா என்று தெரியவில்லை என்றார்.

அவருடன் அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் நீதிமன்றம் வந்தார்.

முன்னதாக, நேற்று பட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழியும், கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் ஆஜராகினர். தாங்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க இந்திய குற்றவியல் சட்டம் (சி ஆர்.பி.சி) 88சி-யின் கீழ் அவர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஆனால், இந்த வழக்கில் நேற்று ஆஜராக வேண்டிய சினியுக் நிர்வாக இயக்குனர் கரீ்ம் மொரானி உடல் நிலையைக் காரணம் காட்டி வரவில்லை.

கனிமொழிக்காக ராம் ஜேத்மலானி வாதாடினார். இந்த வழக்கில் கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சரத்குமார் சார்பில் வழக்கறிஞர் அல்தாப் அகமது ஆஜரானார். விசாரணை தொடர்பாக ஆஜராகியுள்ள கனிமொழி உள்ளிட்டோரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பத் தேவையில்லை. அவர்கள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கனிமொழியின் சார்பாக ஆஜரான ராம் ஜெத்மலானி, "அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான எதுவாக இருந்தாலும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாதான் பொறுப்பு. கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி எந்தவித பெரிய பொறுப்பையும் வகிக்கவில்லை. அந் நிறுவனத்தில் அவர் ஒரு சிறிய பங்குதாரர். பொதுவாக பங்குதாரகளுக்கு நிர்வாகத்தில் அன்றாட நடவடிக்கைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டியதில்லை. நிர்வாக இயக்குநர்தான் தினம்தோறும் முடிவுகளை எடுப்பது வழக்கம்," என்றார்.

'லஞ்சம் வாங்கியவரை விட்டுவிட்டது ஏன்?'

ஆசிப் பல்வா சார்பில் விஜய் அகர்வால் ஆஜரானார். இந்த வழக்கில் சி.பி.ஐ. பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று அவர் புகார் கூறினார்.

"லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் ஆசிப் பல்வாவை கைது செய்த்துள்ள சிபிஐ, லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் கனிமொழியை விட்டுவிட்டது ஏன்?," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இதுதொடர்பான விசாரணை இன்று காலை மீண்டும் தொடர்கிறது. காலை 10 மணிக்கு சி.பி.ஐ சார்பாக வழக்கறிஞர் யு.யு. லலித் தனது வாதத்தை தொடங்க உள்ளார்.

இதன் முடிவில்தான் கனிமொழி கைதாவாரா இல்லையா என்பது தெரியவரும்.

தயாராகும் திகார் - ரோஹினி சிறைகள்...

இதற்கிடையே, கனிமொழி கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் டெல்லியில் உள்ள திகார் மற்றும் ரோஹின் சிறைச்சாலைகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருவேளை இன்றைய விசாரணை முடிவில் கனிமொழி கைது செய்யப்பட்டாரல் அவரை முதலில் திகாருக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் ரோஹினி சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு மாற்றுவார்களாம். இதற்காகவே இந்த இரு சிறைச்சாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, என திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனிமொழி கைது செய்யப்பட்டால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமேதும் இல்லை என்றும், அவரிடம் போதுமான அளவு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், நேரடியாக அவர் நீதிமன்றக் காவலில்தான் வைக்கப்படுவார் என்றும் சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

- தட்ஸ் தமிழ்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat May 07, 2011 1:41 pm

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் , சரத்குமார் கலைஞர் த‌ொலைக்காட்சியின் நிர்வாக மூளையாக இருந்தாலும் , கனிமொழி இந்த தொலைக்காட்சியின் அனைத்து விஷயங்களையும், தனது கட்டுக்குள் வைத்து பின்னணியில் இருந்து செயல்பட்டார் என்றும், இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் இன்றைய வாதத்தின் போது சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வக்கீல் யு.யு.,லலித்எடுத்துரைத்தார். இரு தரப்பு வாதங்கள் முடிந்து கனிமொழியை ஜாமினில் விடுவதா அல்லது கஸ்டடிக்கு அனுப்புவதா என்பது தொடர்பான விஷயத்தில் வரும் 14 ம் தேதிக்குள் தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி சைனி கூறியுள்ளார்.


அவர் மேலும் கூறுகையில்; கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக , கனிமொழி் இருந்தார். இதில் இருவரது பங்கும் இருந்தது , ராஜாவுடன் நெருங்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் இதில் இவருக்கும் பொறுப்பு உள்ளது. இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். டி.பி.,ரியாலிட்டி நிர்வாக இயக்குனரிடம் இருந்து பெறப்பட்ட 214 கோடி ரூபாய் ராசாவிடம் விசாரணை துவங்கிய பின்னர் திருப்பி செலுத்தப்பட்டது. மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.


பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பது நம்ப முடியாதது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார். கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், பாவ்லா , கோயங்காவுக்கும் இதில் பங்கு உண்டு இவ்வாறு சி.பி.ஐ.,வக்கீல் கூறினார்.நேற்று ஆஜராகி வாதாடிய பிரபல வக்கீல் ஜெத்மலானி வாதிடுகையில் இதற்கு நேர்மாறாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

--- தினமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 07, 2011 1:57 pm

கனிமொழியைக் காப்பாற்ற ராசாவைப் பலிகடாவாக்க திமுக முயற்சி-சு.சாமி


டெல்லி : தனக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்று கனிமொழி கூறுவது செல்லாத வாதம். அவருடைய குற்றத்திற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் கனிமொழியைக் காப்பாற்ற ராசாவைப் பலிகடாவாக்க திமுக முடிவு செய்து விட்டது என்று கூறியுள்ளார் ராசா சிறைக்குப் போக முக்கியக் காரணமாக இருந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.

இன்று டெல்லி சிபிஐ கோர்ட்டில் கனிமொழி தரப்பில் வைக்கப்பட்ட வாதம் குறித்து சுப்பிரமணியம் சாமி கூறுகையில்,

வழக்கில் தனக்குத் தொடர்பில்லை, தான் நீதித்துறையை மதிப்பவர், பெண், எம்.பி என்று கனிமொழித் தரப்பில் வைக்கப்பட்டுள்ள வாதம் செல்லாத வாதமாகும். கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்கு முக்கியத் தொடர்பு உள்ளது. இதற்கான ஆதாரங்களும் தெளிவாக உள்ளன.

கனிமொழிக்கு இந்த விவகாரத்தில் உரிய தொடர்பு இருப்பதை சிபிஐ ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஆனால் தற்போது கனிமொழியைக் காப்பாற்றுவதற்காக தற்போது ராசாவை பலிகடாவாக்க திமுக முடிவு செய்து விட்டது. ராசா எவ்வளவு நாளைக்கு சிறையில் இருக்கிறாரோ, அத்தனை நாட்களுக்கு திமுகவுக்கும், கனிமொழிக்கும் பாதுகாப்பு என்பதால் ராசாவை முழுமையாக சிறையிலேயே அடைத்து வைக்க திமுக முயற்சிக்கிறது என்றார் சாமி.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 07, 2011 2:09 pm

"ராசா தான் முழுப் பொறுப்பு" -ஜேத்மலானி



2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வரை ஜாமீன் கோர மாட்டேன் என்று கூறி வந்த திமுக எம்பி கனிமொழி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவருக்கு முன் ஜாமீன் கோரி வாதாடினார்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் அந்தத் தொலைக்காட்சிக்கு ரூ. 124 கோடியை ஸ்வான் டெலிகாம் தந்த வழக்கில் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவீதம் பங்குகள் தான் உள்ளன.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை கவனிப்பதில்லை. அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை.

நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத் குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

கனிமொழி கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்பதற்காகவே அவரை குற்றவாளி என்று கூறி விட முடியாது.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது எல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர் தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை.

கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித்துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

அதே போல சரத்குமாரும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்காக வழக்கறிஞர் அல்தாப் அகமத் வாதாடினார்.

ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம்:

ஆனால், இந்த இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் தொடர்ந்ததால் வழக்கு விசாரணையை நீதிபதி சைனி நாளைக்கு ஒத்தி வைத்தார்.

இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த கனிமொழி நிருபர்களை தவிர்த்து விட்டு தனது கணவருடன் வேகமாக காரில் புறப்பட்டுச் சென்றார்.

அங்கிருந்த திமுக செய்தி தொடர்பாளரும் எம்பியுமான இளங்கோவன் நிருபர்களிடம், திமுக எப்போதும் கனிமொழிக்கு ஆதரவாக துணை நிற்கும் என்றார்.

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த திமுக எம்பி:

முன்னதாக வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அங்கிருந்த இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 07, 2011 4:08 pm

டெல்லி: 2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

2ஜி முறைகேட்டில் முன்னாள் தொலைத் தொடர்புதுறை அமைச்சர் ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம்சாட்டிய சிபிஐ, கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் பெயர்களை இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

நேற்றும் இன்றும் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என வாதாடினார். சரத்குமார் தரப்பில் அப்துல் அஜீஸ் ஆஜராகி வாதாடினார்.

இன்றும் விசாரணை தொடர்ந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு. லலித், கலைஞர் டிவியி்ன் மூளையாக கனிமொழி செயல்பட்டார் என்றும், 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு கைமாறிய ரூ.214 கோடி உள்பட அனைத்து பண விவகாரங்களும் அவருக்குத் தெரியும் என்றும் கூறினார்.

2ஜி விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளதென்று அவர் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் மே 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதன் மூலம் கனிமொழி இப்போதைக்கு கைதாக மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு இது தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளது.

அதே நேரத்தில் 14ம் தேதி வரை கனிமொழியும் சரத்குமாரும் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் மே 13ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அடுத்த நாள் கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா இல்லையா என்ற சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

-- தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக