ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

+3
மாணிக்கம் நடேசன்
கலைவேந்தன்
kirikasan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by kirikasan Tue May 03, 2011 4:17 pm

பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்
பட்டு மேனி தொட்டு ஓடும்
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும்
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி
ஈழமென்னும் தமிழ்த் தேசம்

மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு
மேனியில் முத்துக்கள் தோன்ற
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்
ஓர மடுக்கிடும் பெண்கள்
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட
மையலுறு இள மைந்தர்
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி
இன்பங்கொளும் ஈழதேசம்

கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு
கால்கள் தாளமிட ஓடும்
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்
விட்டுத் துரத்திடக் காணும்
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்
பெற்றவர் கைபிடித் தேகும்
எட்ட இருந்திடும் கோவில் குளமென
ஈழதேசம் எழில்காணும்

நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும்
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்
தொங்கு மணிநாதம் கேட்கும்
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
வண்ண மலர் தலையாட்டும்
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்
பூச்சிகள் தேனுண்ண நாடும்

எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்
ஏந்திழை கண்ணென மீனும்
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்
தென்னைகளில் இளநீரும்
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்
சூழல்கொள் ஈழ மெம்நாடு

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும்
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்
மூடிவைத்த குவை தேறும்
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்
தோணிகள் ஓட்டிடும் தேசம்

வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை
தாவி மரந்தனில் ஏறும்
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும்

பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை
புல்விரிந்த பசும்தேசம்
தேவரின் வானுல கானது தோற்றிடும்
தீந்தமி ழீழம் எம்தேசம்
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்
சிங்களமே பழியாகும்
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்
காலை பகல் என்றுஆகும்
கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும்
சீலமுடன் நம்ம தேசமமைந்திட
சேரும் வளங்களோ மீளும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 9:22 pm

இயற்கை வளமும் மண்வளமும் அருமையாய்க் கூறி தாய்மன்ணின் மகத்துவங்களைப்பகிர்ந்த அழகான கவிதை... பாராட்டுகள் கிரி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by kirikasan Wed May 04, 2011 1:26 am

கலைவேந்தன் wrote:இயற்கை வளமும் மண்வளமும் அருமையாய்க் கூறி தாய்மன்ணின் மகத்துவங்களைப்பகிர்ந்த அழகான கவிதை... பாராட்டுகள் கிரி..!


நன்றி! கலையண்ணா! தங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by மாணிக்கம் நடேசன் Wed May 04, 2011 7:20 am

நல்ல கவிதையை நலமே படைத்திட்டமைக்கு எனது நன்றியும் பாராட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by puthuvaipraba Wed May 04, 2011 7:28 am

"காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்"
மனதில் நம்பிக்கை நடவு செய்யும் வரிகள் . . . பாராட்டுக்கள் கவிஞ்ர் கிரி அவர்களே
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed May 04, 2011 9:23 am

கலைவேந்தன் wrote:இயற்கை வளமும் மண்வளமும் அருமையாய்க் கூறி தாய்மன்ணின் மகத்துவங்களைப்பகிர்ந்த அழகான கவிதை... பாராட்டுகள் ..!


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by யாதுமானவள் Wed May 04, 2011 11:21 am

kirikasan wrote:
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும் - அழகான ஆரம்பம். ஆலோலாம் பாடும் குருவிகள் வெட்கத்தால் குனிந்திருக்கும் நெற்கதிர்களை கிண்டல் செய்வதாய் அழகான கற்பனை.


நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும் -
நிற்கும் பனைமரத்தின் பின்னே ஓடும் முகில்...புன்னகை

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும் -
கடலைப் போல ஆழமானது பெண்களின் மனதென்று கூறுவர். இங்கோ, தாங்கள் பெண்களின் மனதைப்போல் ஆழ்மனதினில் மறைத்துவைத்த கடல் என அருமையான மாற்றுவமை கையாண்டுள்ளீர்.

வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும் - அழகான இயற்கை காட்சிகள் கண்முன்னே விரிந்தாடி .... உதட்டில் புன்னகையாய் குடியேறிவிடுகிறது... வாழ்த்துக்கள் கிரி!

போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் ---
இந்த வரிகளை எதை மனதில் கொண்டு எழுதினீரென விளக்குவீரா?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by kirikasan Wed May 04, 2011 1:55 pm

[quote="யாதுமானவள்"]
kirikasan wrote:


போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்

கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும் ---
இந்த வரிகளை எதை மனதில் கொண்டு எழுதினீரென விளக்குவீரா?


அதாவது இலங்கையின் வடபகுதியில் நடந்தவிதியின் விளையாட்டு இனி தென்பகுதிக்குசென்று விளையாட்டை நடத்தப் போகிறது. இன்பமும் துன்பமும் வண்டிச்சக்கரம் போன்றது என்பார்கள். சக்கரம் உருளும்போது மேலே உள்ல பகுதி கீழேயும் கீழ் பகுதி மேலுக்கும் வருவதுபோல் துன்பத்தின் இடம் மாறிவிடும். போர்க்குற்ற அறிக்கை யோடு தொடரப்போகும் நடவடிக்கைகள் அவர்களுக்கு துயரத்தை கொடுக்கும் என்ற ரீதியில்தான் எழுதினேன்.
அன்புடன் கிரிகாசன்


Last edited by kirikasan on Wed May 04, 2011 5:36 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by Jiffriya Wed May 04, 2011 2:03 pm

அருமையான கவிதை.. சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by kirikasan Wed May 04, 2011 5:37 pm

வாழ்த்துகளோடு பாராட்டுக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை) Empty Re: எங்கள் இனிய தேசம் ஈழம் (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum