ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

+2
பிஜிராமன்
தாமு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty சாய்பாபா உடலுக்கு நெய் அபிஷேகம்

Post by தாமு Thu Apr 28, 2011 7:02 am

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  48eb3a14-6cea-413c-bbaa-109af4a5918a_S_secvpf


சாய்பாபா இறுதிச் சடங்கை 18 வேத பண்டிதர்கள் செய்தனர். அவர்கள் சாய்பாபா உடலை கங்கை, காவிரி, சரஸ்வதி உள்ளிட்ட 7 புனித நதிகளின் நீரை கொண்டு குளிப்பாட்டினர்.

பின்னர் அவரது உடலுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து வேத மந்திரங்கள் ஓதினர். இதையடுத்து “டின்” நிறைய நெய் கொண்டு வரப்பட்டது. அதனை பூஜை செய்து பின்னர் சாய்பாபா உடலுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது உடலில் ஏராளமான வாசனை திரவியங்கள் பூசப்பட்டன. சாய்பாபா உடலை அடக்கம் செய்தபோது அங்கு கூடி இருந்தவர்கள் கை நிறைய விபூதியை அள்ளி சாய்ராம் என்று கூறியபடியே குழிக்குள் போட்டனர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

Post by தாமு Thu Apr 28, 2011 7:04 am

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  4ff941fb-0342-419c-8cc6-3af466b8a740_S_secvpf சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  VideoLogo அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் அடக்கம்: பக்தர்கள் இறுதி அஞ்சலி


நகரி, ஏப்.27-


உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பக்தர்களைக் கொண்ட சாய்பாபா (85) கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். கடந்த 3 நாட்களாக அவரது உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் குல்வந்த் ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று காலை முதல் நள்ளிரவு வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சாய்பாபாவின் உடலுக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி அம்பிகாசோனி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலை சாய்பாபா வின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அவர் போதனை செய்யும் இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி அங்கு 4 அடி அகலம், 7 அடி நீள அளவில் 9 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் பஸ்பம் என்ற விபூதி, சுகந்த திரவியங்கள் போடப்பட்டன. சர்வமத குருக்கள் சர்வமத உடல் அடக்க பிரார்த்தனை நடத்தினர்.

பின்னர் சாய்பாபாவுக்கு வேத பண்டிதர்கள் தோஷ நிவாரண பூஜை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் நவரத்தினங்கள் வைக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டது. அவரது உடல் மீது கங்கை, நர்மதா, சரஸ்வதி போன்ற புனித நதிகளின் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன. தெற்கு திசையில் சாய்பாபா தலையை வைத்தபடி உடல் குழிக்குள் இறக்கப்பட்டது.

பின்னர் குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் காலை 9.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. குழி புனித மண் கொண்டு மூடப்பட்டது. அப்போது புட்டபர்த்தி நகரம் முழுவதிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பல பக்தர்கள் கதறி அழுதனர்.

இந்த உடல் அடக்க நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர் அத்வானி, ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் சாய்பாபாவின் நெருங்கிய உறவினர்கள் 300 பேரும் கலந்து கொண்டனர்.

அடக்கம் நடந்த ஹாலில் இன்று 1500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி முழுவதும் புட்டபர்த்தி நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த ராட்சத டிஜிட்டல் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அடக்க நிகழ்ச்சியை கண்கலங்கியபடி பார்த்து அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

இன்று நேற்றை விட கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டன. உடல் அடக்கம் நடந்த பிரசாந்தி நிலையத்திற்கு அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆசிரமத்தை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

புட்டபர்த்தி நகர மக்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். அரசு அதிகாரிகளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுத்தனர். புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டன. வாகனங்கள் அனைத்தும் புட்டபர்த்தியில் இருந்து 5 கி.மீ. துரத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் அனைவரும் நடந்தே ஆசிரம பகுதிக்கு வந்தனர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Post by தாமு Thu Apr 28, 2011 7:07 am

சமாதியின் மேல் பகுதியில் சாய்பாபாவுக்கு தங்க சிலை; சமாதி தரிசனத்திற்கு அலைமோதிய கூட்டம்




உலக மக்களின் உள்ளம் கவர்ந்த சாய்பாபாவின் உடல் அடக்கம் இன்று புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது. பண் டிதர்கள் வேதங்கள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு இருந்த அனைவரும் “பாபா” என்ற படி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சாய்பாபா உடலை அடக்கம் செய்வதை பெண்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக சுற்றிலும் பெரிய திரை போட்டு மூடி இருந்தனர். அடக்கத்திற்கு பிறகு திரை விலக்கப்பட்டது. சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் தங்கசிலை வைக்க வேண்டும் என்று ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஏற்று அவரது சமாதியின் மேல் பகுதியில் சாய்பாபாவின் தங்க சிலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு நிதி தர ஏராளமான தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு சமாதி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் விடிய விடிய வரிசையில் காத்திருந்தனர். அவர்களும் இன்று சமாதி தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது.

சில இடங்களில் பக்தர்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற அதிரடி படையினர் லேசான தடியடி நடத்தி பக்தர்கள் வரிசையாக செல்ல வழிவகை செய்தனர். பக்தர்கள் 2 நாட்கள் சாய் பாபா சமாதியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Post by தாமு Thu Apr 28, 2011 7:09 am

சாய்பாபாவுக்கு அஞ்சலி; நித்யானந்தா பாதுகாவலர்களுடன் வந்ததால் பரபரப்பு



சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  1068a41a-78cc-4123-ab49-f64d2394af3c_S_secvpf


நகரி, ஏப். 27-


சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்று முக்கிய அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், பீடாதிபதிகள் உள்பட பலர் வந்தனர். அவர் களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வரிசையில் செல்வோர் சாய்பாபா உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்தலாம்.

சாதாரண பொதுமக்கள் பல தூரம் தள்ளி நின்று தான் உடலை பார்க்க முடியும். இந்நிலையில் பெங்களூர் புறநகரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப் போது அவருடன் 4 பாதுகாவலர்களும் வந்தனர்.

பாதுகாவலர்கள் புடைசூழ அவர் அஞ்சலி செலுத்த சென்றார். இதற்கு ஆசிரம ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருடன் சென்ற பாதுகாவலர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் சாய்பாபா உடல் அருகே அஞ்சலி செலுத்திய நித்யானந்தா, வேகமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.

சாய்பாபா பக்தர் ஒருவர் கூறும் போது, “சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்த மிகப் பெரிய தலைவர்கள் வந்தனர். அவர்கள் யாரும் தங்களுடன் பாதுகாவலர்களை பாபா உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லவில்லை. ஆனால் நித்யானந்தா மட்டும் பாதுகாவலர்களுடன் உள்ளே சென்றது சரியானதல்ல. அவர் தன்னை மிகவும் பெரிய மனிதராக நினைத்துக் கொள்கிறார்.

இது நல்ல தல்ல” என்றார்.

சாமியார் நித்யானந்தா சமீபகாலமாக எங்கு சென்றாலும் பரபரப்பை மட்டும் அல்ல, பொதுமக்களிடம் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறார்.


மாலை மலர் சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty பலமுறை மரித்துப்போன சாய்பாபா! -குட்டி ரேவதி

Post by தாமு Tue May 03, 2011 5:51 am

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Sat_1879692c


ஒரு வழியாக சத்ய சாய் பாபா இறந்த செய்தி இன்று எல்லோருக்கும் உறுதி செய்யப்பட்டது. கடவுளின் அவதாரமான ஒருவர் இறப்பது எனக்கும் வேதனையும் கவலையும் தரும் செய்தியாகத் தான் இருக்கிறது. அதற்குக் காரணம், என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தோழியான ஸ்ரீதேவி தனது அடுத்த கடவுளை, தன் மெலிந்த உடலுக்கு உறுதுணையாக இருக்கும் இன்னொரு கடவுள் அவதாரத்தை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதே. அனுதினமும் விரதங்களும் சாய்பாபாவின் நாமத்தை பல இலட்சம் முறைகள் உச்சரிப்பதுமே போதுமானவை, தனது கவலைகள் தீர என்ற நம்பிக்கை உடைய அந்தப் பெண், பெண்களின் நவீனப் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்!


பகுத்தறிவுச் சிந்தனை மரபில் ஊறிய நம் மனத்தில் ஏன் இம்மாதிரியான நம்பிக்கைகள் உறைந்திருக்கின்றன என்ற கேள்விக்குப் பதிலை, இது போன்ற உதாரணங்களால் மட்டுமே முழுமையாக நாம் புரிந்து கொள்ள முடியாது. சாய்பாபா, நோய்வாய்ப்பாட்டு படுக்கையில் கிடந்த நொடி முதல் அவரது பக்தர்கள் தொடர்ந்து அவர் நலனுக்காகப் பிரார்த்தித்தனர். யாரிடம்? கடவுளிடம் எனில் எந்தக் கடவுளிடம்? எனில், சாய்பாபா கடவுளா, இல்லையா? கடவுளின் அவதாரம் என்றால், அவருக்குத் தன்னை நோய்வாய்ப்படாமல் காத்துக் கொள்ளும் ஞானம் வாய்க்கவில்லையா? மானிடப் பிறப்பில் வந்த கடவுளின் அவதாரம் என்றால், மற்ற மனிதரைப்போல நோய்வாய்ப்பட்டு மரித்துத்தானே ஆகவேண்டும்? லிங்கத்தை வரவழைக்கும் மந்திர தந்திரங்கள் மனித உடலைக் காப்பாற்ற உதவவில்லையா? தன் உடலுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை என்ற கூறியவரின் உடலுக்கு இன்று என்னவாயிற்று? பொய்யும் புரட்டும் பொதிந்த தனிமனிதப் பிரசங்க வாழ்க்கையும் அதை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நிறுவனக்கட்டிடங்களும் அடுக்கடுக்கான கேள்விகளைக் கிளப்புகின்றன.


சாய்பாபா நல்லவேளை இறந்துவிட்டார். என் கவலையெல்லாம், அவரை நம்பித் தம் பொழுதுகளையும் சொத்துகளையும் ஆற்றல்களையும் விரயம் செய்யும் கோடானு கோடி மூடர்கள் இனி, எந்த மந்தையாக மாறுவார்கள் என்பதே. அதற்குள், எங்கேயோ அடுத்த அவதாரம் பிறக்கவில்லையா, என்ன? அவர் ஸ்படிக லிங்கத்தைப் போல, வேறு உருவப்படிமங்களை தன் தொண்டையிலிருந்தோ வேறு பள்ளங்களிலிருந்தோ எடுத்துக் கொடுத்தால், இம்மந்தை தலையாட்டி, கைகளைக் கொட்டி, அங்கே திசை திரும்பிவிடும்தானே?


அரசியலும் மதமும் ஒருங்கிணையும் போதெல்லாம், ஒன்றோடொன்று கைகோர்த்துக் கொண்டு குடிமக்கள் நலனைப் புறக்கணிக்கிறது. எல்லா மாநில முதல்வர்களும் குடியாட்சி புரியத் தேவையான அருளாட்சி செய்த சாய்பாபா இன்று இல்லாமல் போனதை ஓர் அரசியல் விவகாரமாகவும் நாம் நோக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில், அரசியல் மதக் கூட்டணிகள், மக்களை மந்தையாக்கித் தன் ஆதாயங்களை நிதியாகவும் அதிகாரமாகவும் திரட்டியிருக்கிறது. காலந்தோறும், பகுத்தறிவுக்கெதிரான பாதைகள் கிளைப்பதும், அதைக் களையெடுக்கத் தீவிர பகுத்தறிவு இயக்கங்கள் முளைப்பதும், அரசு என்ற பெயரால் மதத்தின் போர்வையைப் போர்த்திக்கொண்டு, அவ்வியக்கங்கள் முறிக்கப்படுவதும் எனத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது இந்த நூற்றாண்டில் மட்டுமே நிகழும் அவலம் அன்று. வரலாறு, சாய்பாபா இறந்ததை எழுதிவைத்துக் கொள்ளும். இயங்கும், பகுத்தறிவு விவாதங்களைக் கருத்திலோ, கணக்கிலோ அதன் பக்கங்கள் எழுதிக்கொள்ளாது. ஏனெனில், அரசின் கைகளில் தான் வரலாற்றை எழுதும் விரல்கள் இருக்கின்றன.


பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற சொற்களின் பொருட்களும் அர்த்தங்களும் அவற்றிற்கான நடைமுறைப்பழக்கங்களும் இன்றைய தலைமுறையிடையே சமூக வடிவங்களில் மீண்டும் புணரமைக்கப்பட வேண்டும் அவசியத்தைத் தான் இம்மாதிரியான நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. நம் சிந்தனை மரபைச் செழுமையாக்க மேற்குறிப்பிட்ட, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற இரண்டு வார்த்தைகளை மையமாக்கிய அர்த்த விவாதமே போதுமானவை. தமிழ்ச் சிந்தனையென்று ஒன்றை வடிவமைக்க வேண்டுமென்றால், இவ்விரண்டு வார்த்தைகளை மட்டுமே மூலங்களாகவும் அளவுகோல்களாகவும் கொள்ளலாம். இந்தியப் புவியியல் பரப்பிலும், இந்தியத் தத்துவச்சிந்தனை என்ற கட்டமைப்பு இவ்விரண்டு வார்த்தைகளுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுத் தான் பொது மக்களுக்கு ஆன்மீகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் சத்ய சாய்பாபாவும்! எனக்கென்னவோ, இம்மாதிரியான மனிதர்கள் தன் மரணம் உறுதியாக்கப்படும் முன்னே பலமுறை செத்துப்போனவர்கள் தான். பகுத்தறிவும், சுயமரியாதை உணர்வும் அற்ற ஒரு தனிமனிதன் வாழ்ந்தாலும் செத்துப் பிழைப்பவன் தான். அத்தகைய ஒருவனின் வேடம், முடிவுக்கு வந்தது. இனி, அதன் தொடர்ச்சியான அரசியல், நிறுவனக்காட்சிகளின் வேடங்கள் அரங்கேறுவதை வேறு வடிவில் பொதுமக்கள் தரிசிக்கலாம்.


குட்டி ரேவதி சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Post by தாமு Tue May 03, 2011 5:57 am


















புட்டபர்த்தியில் சாய் பாபாவின் மகா சமாதி அருகே கட்டப்படவுள்ள மண்டபத்தில் வைப்பதற்காக பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட சிலையை நன்கொடையாக அளிக்க கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்வந்துள்ளார். இச்சிலையை செய்வதற்கு ரூ. 30 லட்சம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சச்சினின் நன்கொடையை ஏற்றுக்கொள்வது குறித்து சத்ய சாய் அறக்கட்டளை தனது முடிவை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இதுகுறித்து, மே 8 அல்லது 9-ம் தேதி நடைபெறும் அறக்கட்டளையின் அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. சச்சின், சத்ய சாயின் தீவிரப் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் தனது குடும்பத்தினருடன் புட்டபர்த்தி வந்திருந்தார்





மூன்றாம் கண் சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  678642






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Post by பிஜிராமன் Tue May 03, 2011 9:58 am

பாபாவின் கிருபை சச்சினுக்கு என்றும் உண்டு.
அப்டினா 200 அடிசதெல்லாம் சச்சின் இல்லயா...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Post by தாமு Tue May 03, 2011 10:46 am

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Post by ரேவதி Tue May 03, 2011 12:16 pm

உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Post by உதயசுதா Tue May 03, 2011 1:39 pm

பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Uசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Dசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Aசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Yசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Aசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Sசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Uசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Dசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Hசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  Empty Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum