ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

+10
பாலாஜி
முரளிராஜா
உதயசுதா
ரபீக்
அப்துல்
அசுரன்
பிஜிராமன்
ரா.ரமேஷ்குமார்
Aathira
balakarthik
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by balakarthik Mon May 02, 2011 5:02 pm

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith 30ajith2

இன்றய நிலமையில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் பெரிய குற்றசாட்டு மன்றங்கள் என்ற பெயரில் பல இளைங்கர்களின் வாழ்க்கையை தங்கள் சுய லாபதிர்க்காய் அழிக்கிறார்கள் என்பதுதான் ... அது உண்மையும் கூட .... எம்‌ஜி‌ஆர் காலம் தொடங்கி இன்று இருக்கும் நண்டு சுண்டு நடிகர்கள் வரை , ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்களை தொடங்கி வைத்து கொண்டு , அவர்களை தங்கள் சொந்த லாபத்திர்க்கு பயன்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள் .... எம்‌ஜி‌ஆர் , சிவாஜி , விஜயகாந்த் என்று சில பெரிய நடிகர்கள் அவர்கள் ரசிகர்களை பயன்படுத்தி அரசியலில் இறங்கி தனக்கும் தன் குடும்பத்திர்க்கும் லாபம் தேடி கொண்டார்கள் ... ஆனால் அவர்களை நம்பிய ரசிகர்கள் இன்னமும் மூட்டை தூக்கி கொண்டும் , கந்து வட்டிக்கு கடன் வாங்கியும்தான் பிழைப்பை ஒட்டி கொண்டு இருக்கிறார்கள் ..

நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் வைத்திருப்பதான் பின்னணி என்ன? முதல் காரணம் தங்கள் படத்திர்க்கு அதிக வசூல் கிடைக்க வேண்டும் , தான் கோடிகளில் புரள வேண்டும் என்பதுதான் ... இன்று கோடிகளில் புரளும் பெரிய நடிகர்களின் முதுகெலும்பே இந்த ரசிகர்கள்தான்... அவர்கள்தான் எவ்வளவு பணம் கொடுத்தேனும் தன் தலைவனின் படத்தை பார்க்க தயாராக இருப்பார்கள் ... சொல்ல போனால் ஒரு நடிகனின் உயிர் நாடியே இந்த ரசிகர்கள்தான்.... படங்களில் கதாநாயகர்கள் பன்ச் வசனம் பேசுவது , பறந்து பறந்து சண்டை போடுவது ,எல்லாமே இந்த மாதிரியான ரசிகர்களை தனக்கென்று உருவாக்க வேண்டும் என்பதர்க்காகவே....

அடுத்தது அவர்களை வைத்து அரசியலில் காய் நகர்த்தி கோடிகோடியாய் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசை ... சமீபத்தில் ஒரு நடிகர் கூட இப்படி அரசியலுக்கு வர ஆசைபட்டு நாகபட்டினத்தில் ஒரு மீட்டிங் நடத்தியது ஞாபகத்தில் இருக்கலாம் ... அவர் ஒன்றும் பெரிய சமூக சேவகர் கிடையாது , இல்லை அவர் பரம்பரையிலும் யாரும் சமூக சேவை செய்தது கிடையாது .. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் ஊருக்கு நூறு ஒட்டாவது விழும் .. காரணம் இந்த ரசிகர் மன்றங்கள் ... இவர்களை பயன்படுத்தி அரசியல் பேரத்தில் பெரிய தொகையை உருவிவிடலாம் ...

ஆரம்ப காலகட்டதில் வெறும் ரசிகர் மன்றங்களாக உருவாகும் இவை , போக போக நற்பணி இயக்கமாக மாறும் .... அடுத்து கட்சியாக உருவெடுக்கும் .... மன்றாமாக இருக்கும் பொது ஐந்து கோடி சம்பளம் வாங்கிய அந்த நடிகர் நற்பணி இயக்கமாக மாறும் பொது பத்து கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வளந்திருப்பார்... பின்னர் கட்சிக்கு தலைவனானவுடன் அவர் டீலிங் 500 கோடி 1000 கோடி என்ற அளவில்தான் இருக்கும் ... ஆனால் அவர்களின் பின்னால் கொடி பிடித்து கொண்டு அழைந்த ரசிகர்கள் நிலை? எங்கள் தெருவிலேயே ஒரு பெரிய நடிகருக்கு ரசிகராக இருந்து , அவருக்காகவே வாழ்ந்து இன்று தன்னுடய வாழ்க்கையை தொலைத்து சாப்பாட்டிற்க்கே பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் ஒருவரை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்....

ரசிகர்மன்றங்கள் ஆரம்பிக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருப்பார்கள் .. அவர்களின் அறியாமையை கிறுக்குதனத்தை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்... நான் அரசியலுக்கு நாளைக்கு வருவேன் நாளன்னைக்கு வருவேன் என்று அவர்களை உசுப்பி விட்டு கொண்டே இருப்பதும் , தடாலடியாக அரசியலுக்கு வந்து ரசிகனாக இருந்த அவனை தொண்டனாக பதவி உயர்வு அளிப்பதும் , கொடி பிடித்து மீனவர்களுக்காக உண்ணா விரதம் இருப்பதும் அவர்களின் இந்த கிறுக்குதனத்தை மேலும் அதிகரிப்பதர்க்காகவே ... தேள் கடித்த குரங்குகளுக்கு சாராயம் கொடுக்கும் வேலையைத்தான் இன்று வரை எல்லா நடிகர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...

ஆனால் இன்று முதன் முறையாக ஒரு நடிகன் யாரும் செய்ய துணியாத செய்வதற்க்கு அஞ்சிய ஒரு செயலை செய்துள்ளான் .... எனக்கு ரசிகர்மன்றமே வேண்டாம் என்று தடாலடியாக தெரிவித்துள்ளார் ... அதற்க்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இவரின் இந்த செயல் கண்டிப்பாக பாராட்டுக்குரியது... அவர் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடும் அஜீத் குமார்... தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்மன்றங்களை கொண்டிருக்கும் நடிகர் அவர்... தன் ரசிகர்களை இதுவரை தன் சுயநலதிர்க்காக பயன்படுத்த தயங்கும் ரஜினி கூட செய்ய அஞ்சிய ஒரு செயலை சர்வ சாதாரணமாக செய்து விட்டார் தல... இதன் மூலம் தமிழ் சினிமாவில் நான் என்றுமே ஜென்டில்மென் தான் என்பதை அழுத்தமாக பதியவைத்து விட்டார்...

இப்படி செய்வதன் மூலம் அவருக்கு கிடைக்க போகும் லாபத்தை விட நஷ்டம்தான் அதிகமாக இருக்கும் .. காரணம் அவர் ரசிகர்களின் நடிகர் ... அவருக்கு இருக்கும் பெரிய பலமே அவர் ரசிகர்கள்தான்... இதன் மூலம் பல ரசிகர்கள் அவருக்கு எதிராக போக வாய்ப்பு உண்டு , அவரின் படங்களின் வசூலில் ஆப்பு வைக்க நிறைய வாய்ப்பு உண்டு .... மற்ற நடிகர்கள் எல்லாம் அஞ்சியது இதற்காக மட்டுமே ..

இன்று மற்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவையும் தாண்டி அவர்களை தன் முதல்வர் நாற்காலி ஆசைக்கு பலிகொடுத்து கொண்டு இருக்கும் போது அவர்களை எல்லாம் விட அதிகமான ரசிகர்களை தன் பின்னால் வைத்திருக்கும் தல , அவர்களை பயன்படுத்தி ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுக்கிறேன் லேப்டாப் கொடுக்கிறேன் என்று அரசியலுக்கு அடி போடாமல் , உங்கள் வேலையை பாருங்கள் என்று அவர்களை கட்டவிழ்த்து விட்டு இதுவரைக்கும் அவர்களை ரசிகர் மன்றங்களில் அடைத்து வைத்து தான் செய்த பாவத்தை போக்கி கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும் ...

குடும்பத்தை முதலில் கவனியுங்கள் மத்தத அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று மற்ற நடிகர்கள் எல்லாம் வாய்மொழியாக மட்டும் சொல்லி கொண்டு இருந்ததை இன்று தல செயலில் காட்டி விட்டார் ... தன் ரசிகர் மன்றங்களை கலைத்து இருந்தாலும் , மற்ற எந்த நடிகணும் தன் ரசிகனுக்கு கொடுக்க முடியாத சந்தோஷத்தை தல எங்களுக்கு தந்திருக்கிறார்.. ஆம் பெருமையாக சொல்லி கொள்ளுவோம் நாங்கள் இவரின் ரசிகர்கள் என்று ... மற்றவர்களை போல பன்ச் வசனம் கேட்டு ரசிகனானவர்கள் இல்லை நாங்கள் , அவரின் தைரியமான நடவடிக்கைகளுக்காக ரசிகர்கள் ஆனவர்கள் ...

எங்களுக்கு மன்றங்கள் தேவை இல்லை , தல எப்பொழுதும் இதே போல வெளிப்படையாக , நேர்மையாக இருந்தால் போதும் ...

நன்றி :- ஏ‌பி‌கே ராஜா
இணயம் :- http://apkraja.blogspot.com/2011/04/hats-off-ajith.html


ஈகரை தமிழ் களஞ்சியம் ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by Guest Mon May 02, 2011 5:11 pm

அது ...
avatar
Guest
Guest


Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by balakarthik Mon May 02, 2011 7:25 pm

மதன் wrote:அது ...

எது புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by Guest Mon May 02, 2011 7:56 pm

அதன் தெர்ல... நான் பேஸ்மாட்டேன் ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith 68516
avatar
Guest
Guest


Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by Aathira Mon May 02, 2011 8:02 pm

நான் இன்று முதல் தலயின் ரசிகை...வாழ்க தல... வாழ்க தல...வாழ்க தல...வாழ்க தல...வாழ்க தல...வாழ்க தல...வாழ்க தல...ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith 325286 ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith 325286


ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Aரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Aரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Tரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Hரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Iரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Rரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Aரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 02, 2011 8:56 pm

தல எப்பவுமே தல தான்... 🐰


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by பிஜிராமன் Mon May 02, 2011 9:16 pm

சிறந்த முடிவு......இதனால் ரசிகர்கள் குறைய வாய்புகள் குறைவு தான்......வேண்டுமானால் ரசிகர்கள் அதிகரிக்கலாம்........

தனக்கு சரி என்று பட்டதை தயங்காமல் செய்ய துணிபவன் தான் சிறந்த தலைவன்......அந்த விஷயத்தில் அஜீத்........தல தான்.....
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by அசுரன் Mon May 02, 2011 10:47 pm

Aathira wrote:நான் இன்று முதல் தலயின் ரசிகை...வாழ்க தல... வாழ்க தல...வாழ்க தல...வாழ்க தல...வாழ்க தல...வாழ்க தல...வாழ்க தல...ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith 325286 ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith 325286
அப்ப நீங்க நம்ம செட்டு சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by அப்துல் Mon May 02, 2011 11:05 pm

தல போல வருமா
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by ரபீக் Tue May 03, 2011 10:06 am

தல போல வருமா!! தல போல வருமா!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith Empty Re: ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum