ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

+22
அன்பு தளபதி
krishnaamma
சரவணன்
அருண்
அசுரன்
Tamilzhan
ஹாசிம்
murugesan
varsha
றிமாஸ்
கே. பாலா
அப்துல்லாஹ்
பது
ந.கார்த்தி
பூஜிதா
முரளிராஜா
உதயசுதா
பாலாஜி
ரபீக்
கலைவேந்தன்
தாமு
மகா பிரபு
26 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty பயங்கரவாதி ஒசாமா பின்‌லேடன் பலி : பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

Post by மகா பிரபு Mon May 02, 2011 9:09 am

First topic message reminder :

பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவர் ஒசாமாபின்லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பின்லேடனின் உடலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, விரைவில் அறிக்கை வெளியிட இருக்கிறார்.

பாகிஸ்தானில் கொலை : அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., பாகிஸ்தானில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது , தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு தங்கும் விடுதியில் சுற்றி வளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அண்மையில் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒசாமா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்ட பயங்கரவாதி. அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர் ஒசாமா தேடுதல் வேட்டையை அமெரிக்கா முடுக்கி விட்டது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக ஒசாமா செயல்பட்டது அமெரிக்க புலனாய்வில் தெரியவந்தது. ஒசாமாவின் இருப்பிடம் ரகசியமாகவே இருந்து வந்தது. அவ்வப்போது ஒசாமா தோன்றும் வீடியோ காட்சிகள் மட்டும் ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா தற்போது பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்குவைதா எச்சிக்கை : அண்மையில் அல்குவைதா பயங்கரவாத இயக்கம் வெளியிட்ட சி.டி., யில்., தங்கள் தலைவர் ஒசாமாவை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நன்றி தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by முரளிராஜா Mon May 02, 2011 2:31 pm

ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தப் போகும் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அரசுக்கு ஒரு தகவல் கூடத் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துள்ளது அமெரிக்கா என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அரசுக்குத் தகவல் தெரிவித்தால், அது எந்த ரூபத்திலாவது பின்லேடனுக்குப் போய் அவர் தப்பி விடலாம் என்ற அச்சத்தால், பாகிஸ்தான் அரசுக்கு கடைசி வரை தகவலே தெரிவிக்காமல் ரகசியம் காத்துள்ளது அமெரிக்கா.

லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டு அது உறுதியாகும் வரை அதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்கவே இல்லையாம் அமெரிக்கா.

இதுகுறித்து அமெரிக்க அரசுத் தரப்பில் கூறுகையில், பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டுடனும், பின்லேடன் வேட்டை குறித்த தகவலை அமெரிக்கா பகிர்ந்து கொள்ளவில்லை. தகவல் லீக் ஆகி விடும் என்பதால்தான் ரகசியம் காத்தோம்.

இதுபோன்ற நடவடிக்கைகளின்போது மிக மிக சிலருக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம். எனவே இது இயல்புக்கு மாறானதல்ல.

40 நிமிடங்களே இந்த தாக்குதல் நீடித்தது. இதில் 2 அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. தாக்குதலில் பின்லேடன் தவிர 3 ஆண்களும், ஒரு பெண்ணும் கொல்லப்பட்டனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக ஒரு ஹெலிகாப்டர் பழுதடைந்து சேதமடைந்தது. இருப்பினும் இந்த நடவடிக்கையில் எந்த அமெரிக்க வீரரும் காயமடையவில்லை, உயிரிழக்கவில்லை.

ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் பாகிஸ்தானில் கைது?

இதற்கிடையே, பாகிஸ்தானில், தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகே நடந்த ஒரு தேடுதல் வேட்டையின்போது பின்லேடனின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் மற்றும் 4 நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் வைத்து அவர்களை பாகிஸ்தானியப் படைகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty பின்லேடன் மரணம்-பெருத்த அமைதி காக்கும் பாக். அரசு, மீடியா

Post by முரளிராஜா Mon May 02, 2011 2:34 pm

உலகையே நடுங்க வைத்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ஊடகங்களும் பெருத்த அமைதி காக்கின்றன.

பின்லேடனின் மரணம் குறித்த செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தவுடன் அமெரிக்காவில் பெருத்த கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. ஆனால் அதற்கு நேர் மாறாக பாகிஸ்தானில் பெருத்த அமைதி நிலவுகிறது. குறிப்பாக அரசுத் தரப்பும், ஊடகங்களும் இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை.

பாகிஸ்தான் அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலோ, கருத்தோ வெளியாகவில்லை. பாகிஸ்தான் மீடியாக்களும் இந்த சம்பவம் குறித்து முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிடவில்லை.

பாகிஸ்தானின் புகழ் பெற்ற தி டான் செய்தித்தாளின் இணையம் செயல்படவே இல்லை. தொழில்நுட்பக் கோளாறு என்று அதற்கு காரணம் கூறியுள்ளது டான். அதேபோல தி நேஷன்.காம், தி டெய்லி டைம்ஸ் இணையதள்களும் கூட பின்லேடன் குறித்த செய்திகளை விரிவாகத் தரவில்லை.

பின்லேடன் குறித்த செய்தியை இவர்கள் நம்பவில்லையா அல்லது பாகிஸ்தானின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டதே என்ற தர்மசங்கடம் காரணமாக அமைதி காக்கிறார்களா என்பது புரியவில்லை.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by பூஜிதா Mon May 02, 2011 2:52 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா

Post by முரளிராஜா Mon May 02, 2011 2:54 pm

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.

பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல் கடலில் வீசியுள்ளது அமெரிக்கா.

அப்போத்தாபாத்தில் நடந்த சண்டையில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், உடலை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்றது. அந்த இடம் ஆப்கானிஸ்தான் என்று கூறப்படுகிறது.

பின்னர் அவரது முகம் மற்றும் உடல் பாகங்களை வைத்து பின்லேடனை அடையாளம் காண்பதற்கான டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து பின்லேடனின் உடலை கடலில் புதைத்து விட்டனர், அதாவது வீசி விட்டனர்.
Read: In English
இஸ்லாமிய முறைப்படி உடல் அடக்கம் நடந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு அவர்கள் விளக்கவில்லை.

உடலை ஏதாவது ஒரு இடத்தில் புதைத்தால் அது நினைவிடமாக மாறி விடலாம் என்பதால் அதைத் தவிர்க்கவே கடலில் உடலை வீசியதாக தெரிகிறது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by தாமு Mon May 02, 2011 2:58 pm

அதிர்ச்சி ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by முரளிராஜா Mon May 02, 2011 3:05 pm

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்தி:

ஒசாமா பின்லேடனைக் கொன்ற நடவடிக்ககளை அமெரிக்க படைகளை முழுமையாக செய்து முடித்துள்ளன. அமெரிக்க கொள்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அப்போத்தாபாத் நகரில், திங்கள்கிழமை காலை பின்லேடன் கொல்லப்பட்டார். உளவுப் பிரிவு தகவல்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் எங்கு பின்லேடனைப் பார்த்தாலும் அமெரிக்கப் படைகள் அவரை நேரடியாக கொல்லும் என்று அமெரிக்க அரசு எடுத்துள்ள கொள்கையின் அடிப்படையில் இது நடந்துள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின்லேடன் வெற்றிகரமாக கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பாகி்ஸ்தான் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கோ, புகலிடமாகவோ செயல்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

பின்லேடன் அப்போத்தாபாத்திற்கு எப்படி வந்தார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து எங்களுக்குத் தெரியாது. அதுகுறித்த புலனாய்வுத் தகவல்களை அமெரிக்கா எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by பூஜிதா Mon May 02, 2011 3:09 pm

எப்படியோ ஒரு லேடன் கொல்லப்பட்டு விட்டான் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty ஒசாமாவை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தது எப்படி?

Post by முரளிராஜா Mon May 02, 2011 3:17 pm

ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒபாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒபாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒபாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிபிஐ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிபிஐவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்த கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில்ன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 3:24 pm

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் அபாட்டாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இந்த பங்களா மேல் பறந்தபடி தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இவருடன் இருந்த சிலரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் பாகிஸ்தான் உதவியை அமெரிக்கா நாடவில்லை. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty நீண்ட கால திட்டம் நிறைவேறியது : ஒசாமா பலி பற்றி ஒபாமா அறிவிப்பு

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 3:25 pm

வாஷிங்டன் : அல்குவைதா பயங்கரவாத கும்பல் தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்க அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசிய ஒபாமா : ஒசாமா பின் லேடன் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு தீவிரமாக தேடப்பட்டு வந்தததாகவும், அமெரிக்காவின் நீண்ட கால திட்டம் தற்போது நிறை‌வேறியுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறினார். இந்த நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

சுற்றிவளைப்பு : ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்க படைகள் ஒசாமா இருப்பிடத்தை நெருங்கியது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ., அதிகாரிகள் கொண்‌ட சிறிய குழு, இந்த ஆபரேஷனை தைரியமாக கையாண்டது. ஒரு கட்டத்தில் ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த காம்புவண்டை சுற்ற வளைத்த படைகள் லாவகமாக செயல்பட்டு ஒசாமாவை கொன்றது. தற்போது ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க ராணுவத்தினாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.

அல்குவைதா அச்சுறுத்தல் : ஒசாமா கொல்லப்பட்டு விட்டதால் மட்டும் அல்குவைதா தாக்குதல் நின்று விடாது என்று முடிவுக்கு வந்து விட முடியாது . தொடர்ந்து அல்குவைதா எங்களை குறி வைத்து தாக்குதல்கள‌ை நடத்த திட்டமிடும். ஆனால் அவை முறியடிக்கப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும்.

வீரர்களுக்கு பாராட்டு : 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்க மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். இவ்வாறு ஒபாமா பேசினார்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 2 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum