ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் வாழ்த்து

5 posters

Go down

மனைவியின் வாழ்த்து  Empty மனைவியின் வாழ்த்து

Post by யாதுமானவள் Sun May 01, 2011 8:26 pm

9 மணியாச்சு எழுந்திருங்க . கையில் காபியுடன் மனைவி.
இருடி ... இன்னும் ஒரு 5 நிமிஷம் தூங்கிக்கறேன் ...

சுடுதண்ணி பிடிசுவச்சாசுங்க... ஆறிப்போய்டும் சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க சூடா இட்டிலி வார்த்து வச்சிருக்கேன்

காலங்கார்தால இவ ஒருத்தி மனுஷன தூங்கக்கூட விடாம ... முணுமுணுத்துக்கொண்டே மனைவி கொடுத்த காபியை உறிஞ்சிவிட்டு குளியலறை நுழைந்தேன். பிரஷில் பேஸ்ட் எடுத்து தயாராக வைத்திருந்தாள் மனைவி.

பல்தேய்த்துக் குளித்துவிட்டு நேராக சாப்பாட்டு மேஜைக்குச் சென்றால் ஆவிபறக்க மல்லிகைப்பூ இட்டிலியும் கமகமக்கும் சாம்பாரும் ஒரு பிடி பிடிக்க வைத்தது என்னை.

எப்போதும் காலை சிற்றுண்டிக்குப் பின் இன்னொரு காபி குடிப்பதும் வழக்கம் .

காபிஎடுத்துட்டு வறேன் சீக்கிரம் போய் டிரஸ் பண்ணுங்க ஜரிகை வேட்டியும் போன வாரம் தைச்ச வெள்ளை சட்டையும் அயர்ன் பண்ணி அலமாரியின் கைப்பிடில -ஹாங்கர்ல மாட்டி வச்சிருக்கேன் பாருங்க ... மனைவி சொல்லிக்கொண்டிருக்கையிலே ..

ரூமுக்குள் நுழைந்து அவள் எடுத்து வைத்திருந்த சட்டையும் வேட்டியையும் மாற்றிக்கொண்டு நான் வெளியே வரவும் தர்ம பத்தினி ஆற்றி வைத்து மிதமான சூட்டில் இருந்த காபியைக் கொடுக்க அதையும் குடித்து விட்டு புறப்படுகிறேன்.

வாசல் கதவு திறந்துதான் இருக்கிறது .

கருப்பு , வெள்ளை, அடர்ந்த பிரவுன் ,மிதமான பிரவுன் நிறம் என எல்லாக் காலணிகளும் பாலிஷ்
போட்டு பளப்பளவென மின்னிக்கொண்டிருக்கிறது எனக்காக . நான் எந்த நிறக் காலணியை இட்டுச் செல்வேன் என என் மனைவியால் இன்றுவரை அனுமானிக்க முடியாது . காரணம் ... ஒருநாள் கறுப்பு நிற காலணி மட்டும் தயாராக இருந்தால் அன்று பிரவுன் காலணி எங்கே எனச் சத்தமிடுவேன் . பிரவுன் காலணி மட்டுமிருந்தால் கறுப்புநிற காலணிக்காகக் கூப்பாடு போடுவேன் .

எதற்கு வம்பென்று அத்தனை காலணிகளையும் அழகாகப் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிருக்குமாறு பார்த்துக்கொண்டிருக்கிறாள் இன்று . அதிலொன்றை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து இறங்க .... காத்திருந்த காரோட்டி கார் கதவைத் திறந்து விடுகிறான் . ஏறி அமர்ந்துகொண்டு மனைவியிடம் விடை பெறுகிறேன்.

மனைவி வேகமாகச் சொல்கிறாள் ...

நல்லா பேசனுங்க. இன்னைக்கு உங்க பேச்சு ரொம்ப சிறப்பா இருக்கணுங்க என வாழ்த்துகிறாள் ... "உழைப்பாளர் தினம் " பற்றி சிறப்புரையாற்றப் போய்க்கொண்டிருக்கிறேன் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ வான நான்.


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

மனைவியின் வாழ்த்து  Empty Re: மனைவியின் வாழ்த்து

Post by Manik Sun May 01, 2011 9:47 pm

இவர் தனது மனைவியை பற்றி பேசினாலே போதும் மிக சிறப்பாக அமையும் அந்த விழா

சூப்பர் அக்கா அருமையான கதை அழகான நடை நல்லா எழுதியிருக்கீங்க மனைவியின் வாழ்த்து  677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனைவியின் வாழ்த்து  Empty Re: மனைவியின் வாழ்த்து

Post by முரளிராஜா Mon May 02, 2011 8:49 am

அருமையான கதை
பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியின் வாழ்த்து  Empty Re: மனைவியின் வாழ்த்து

Post by மகா பிரபு Mon May 02, 2011 10:46 am

அருமையான கதை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனைவியின் வாழ்த்து  Empty Re: மனைவியின் வாழ்த்து

Post by பூஜிதா Mon May 02, 2011 11:00 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மனைவியின் வாழ்த்து  Empty Re: மனைவியின் வாழ்த்து

Post by Guest Mon May 02, 2011 11:55 am

தன் சொந்த வேலையைக்கூட செய்யமுடியாத இவன் உழைப்பாளா தினம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? நல்ல கதை. இங்கு பகிர்ந்ததற்கு நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

மனைவியின் வாழ்த்து  Empty Re: மனைவியின் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum