புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
65 Posts - 64%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
1 Post - 1%
viyasan
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
257 Posts - 44%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
16 Posts - 3%
prajai
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:35 pm

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.


avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:24 am

4. சாவித்திரி

அசுவபதி என்னும் ஓர் அரசர் இருந்தார். அவருக்கு ஒரு மகள். அழகிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய அவளுக்கு, இந்துக்களின் மிகப் புனிதமான பிரார்த்தனையான சாவித்திரி என்ற பெயர் வைக்கப்பட்டது. அவளுக்கு வயது வந்ததும் கணவனைத் தேர்ந்தெடுக்கும்படி அவளது தந்தை சொன்னார். பண்டைக்காலத்தில் அரசகுமாரிகள் மிகச் சுதந்திரமா வாழ்ந்தார்கள். தங்கள் கணவனைத் தாங்களே தேர்ந்தெடுத்தார்கள்.

சாவித்திரி தங்கத் தேரில் அமர்ந்து, தன் தந்தை நியமித்திருந்த மெய்க்காப்பாளரும் அரசவைப் பரிவார முதியோரும் புடைசூழத் தொலைதூர நாடுகளுக்குப் பயணம் செய்தாள். பல இளவரசர்களைக் கண்டும் யாரும் சாவித்திரியின் உள்ளத்தைக் கவரவில்லை.

இறுதியாக, இந்தியாவில் அந்த நாளில் மிருகங்களுக்குக் கென்று ஒதுக்கப்பட்டதும், மிருகங்களைக் கொல்லக் காட்டிலிருந்த ஆசிரமத்தை அடைந்தாள். அங்குள்ள மிருகங்கள் மனிதரைக் கண்டு பயப்படுவதில்லை., ஏரியில் உள்ள மீன்கள் மனிதர்களின் கையிலிருந்து உணவுப் பொருளை வந்து உண்டது. ஆயிரக்கணக்கான வருடங்களாக அங்கிருந்து எதையும் யாரும் கொன்றதில்லை. முனிவர்களும் வயோதிகர்களும் அங்கே சென்று மான்கள், பறவைகள் ஆகியவற்றுடன் வசித்தார்கள். குற்றவாளிகள் கூட அங்கே பாதுகாப்பாக இருந்தார்கள். வாழ்க்கையில் அலுப்புத் தட்டம்போது மனிதன் காட்டிற்குச் சென்று முனிவர்களுடன் வசிப்பான். எஞ்சிய காலத்தை முனிவர்களோடு ஆன்மீகத்தப் பற்றிப் பேசுவதிலும் தியானத்திலும் கழிப்பான்.

துயுமத்சேன்ன் என்னும் ஓர் அரசர் இருந்தார். அவர் தம் வயதான காலத்தில் கண்பார்வையை இழந்திருந்தபோது எதிரிகள் அவரைத் தோற்கடித்து, அவருடைய அரசைக் கைப்பற்றிக்கொண்டார்கள். பாவம், அந்த முதிய குருட்டு மன்னர் மனைவியுடனும் மகனுடனும் அந்தக்காட்டிற்கு வந்து தவம் செய்வதில் காலத்தைக் கழித்தார். அவருடைய மகன் பெயர் சத்தியவான்.

பல அரசவைகளையும் பார்த்த பிறகு, சாவித்திரி இறுதியாக இந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள். ஆசிரமத்தில் இருந்த முனிவரைக் கண்டு வணக்கம் செலுத்தாமல், எவ்வளவு பெரிய மன்னரும் ஆசிரமதைக் கடந்து செல்லக் கூடாது. அவ்வளவு மரியாதை இந்த முனிவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பெரிய சக்ரவர்த்திக்கூட, கந்தைகளை உடுத்திக்கொண்டு, காய்கனிகளைத் தின்று வாழ்ந்த ஒரு முனிவரின் வம்சத்தில் தோன்றியவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைவான். நாங்கள் அனைவரும் முனிவர் பரம்பரையில் வந்தவர்கள். ஆகவே ஆசிரமங்களின் பகமாகச் செல்லும் அரசர்கள்கூட ஆசிரமத்திற்குள் நுழைந்து முனிவருக்கு வணக்கம் செலுத்துவதை ஒரு பெருமையாக்க் கருதினார்கள். அவர்கள் குதிரைமீது வந்து கொண்டிருந்தால் கீழே இறங்கி நடப்பார்கள். தேர்களில் வந்தால், அவற்றை நிறுத்திவிட்டு, கவசங்களை அகற்றி வைத்துவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். எந்தப் படை வீரனும் ஒரு பக்தனைப்போல் அமைதியுடனும் அடக்கத்துடனும்தான் உள்ளே நுழைய வேண்டும்.

இந்த ஆசிரமத்திற்கு வந்த சாவித்திரி சத்தியவானைக் கண்டதும் இதயத்தை அவனிடம் பறிகொடுத்தாள். அரண்மனைகளில் கண்ட அரசகுமார்ர்களைவிட ஆசிரமத்தில் இருந்த துயுமத்சேன்னின் மகனான சத்திவான் அவளது இதயத்தைக் கவர்ந்தாள்.

சாவித்திரி திரும்பி வந்ததும் தந்தை அவளைப் பார்த்து, ‘அருமை மகளே சாவித்திரி, நீ மணம் செய்துகொள்ள விரும்பும் யாரையாவது கண்டாயா சொல்’ என்று கேட்டார். சாவித்திரியும் நாணத்துடன், ஆம், அப்பா’ என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

‘அந்த அரசகுமாரன் அல்ல, அரசை இழந்துவிட்ட துயுமத்சேன்னின் மகன். அவருக்குத்தந்தைவழிச் சொத்து எதுவும் இல்லை. ஒரு குடிசையில் துறவி போன்று வாழ்க்கை நடத்துகிறார். கிழங்குகளையும் இலைகளையும் சேகரித்து, வயதான் பெற்றோர்களைக் காப்பாற்றுகிறார்.’ என்று சொன்னாள்.

இதைக் கேட்ட அரசன் அந்த வேளையில் அங்கிருந்த நாரதரிடம் இதுபற்றக் கலந்து பேசினார்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:27 am

ஆனால் நாரதர் இதனை ஒரு பெரிய அபசகுனம் என்று கூறிவிட்டார். அதை விளக்க வேண்டும் என்று மன்னன் கேட்டதற்கு நாரதர், ‘இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப்போகிறான்’ என்று கூறினார். இதைக் கேட்டு அரசன் நடுங்கினான். ‘சாவித்திரி, அந்த இளைஞன் இன்னும் பன்னிரண்டு மாதங்களில் இறக்கப்போகிறான். நீ விதவையாகி விடுவாய். அதை நினைத்துப்பார். இந்த இளைஞன் வேண்டாம். அற்ப ஆயுளுள்ள இந்த இளைஞனை நீ மணக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.’ என்றான். ‘அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் அப்பா! வேறு யாரையாவது மணம்புரிந்துகொள்ளச் சொல்லி என் கற்புக்கு மாசு தேடாதீர்கள். ஏனெனில் நான் அந்த வீர சத்தியவானைத் தான் காதலிக்கிறேன். அவரை என் மனத்தில் கணவனாக வரித்துவிட்டேன். பெண் ஒரு முறைதான் கணவனைத் தேர்ந்தெடுப்பாள், பிறகு அதிலிருந்து மாறவே மாட்டாள்.’ என்று சொன்னாள்.

சாவித்திரியின் மன உறுதியை கண்டு அரசன் திருமணத்திற்குச் சம்மதித்தான். சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடந்தது. அவள் தன் அரண்மனையைவிட்டுக் காட்டிற்கு சென்று, கணவனுடன் வாழ்ந்தாள்; அவனுடைய பெற்றோர்களுக்குத் தொண்டு செய்தாள்.

சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று சாவித்திரிக்குத் தெரிந்தபோதிலும், அதை அவள் அவனிடம் சொல்லவில்லை. தினமும் அவன் காட்டிற்குச் சென்று, பழங்களும், மலர்களும் விறகும் சேகரித்துக்கொண்டு திரும்புவான் சாவித்திரி சமையல் செய்வாள். அந்த முதியவர்களுக்குத் தொண்டு செய்வாள்.

வாழ்க்கை இப்படியே சென்றது. இறுதி நாளுக்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அந்த மூன்று நாட்களும் உறக்கமும் இன்றி விரதம் மேற்கொண்டாள் சாவித்திரி. இறுதியாள் இரவு. இரவெல்லாம் உறங்காமல், கண்ணீர் வெளியே தெரியாமல் மனத்திற்குள் அழுதுகொண்டே பிரார்த்தனைகள் செய்தாள். அந்த இறுதி நாள் பொழுது விடிந்தது. அன்று ஒரு கணம் கூடக் கணவனைவிட்டுப் பிரியக்கூடாது என்று தீர்மானித்தாள் அவள். விறகு வெட்டச் செல்லும் கணவனுடன் செல்லத் தன்னையும் அனுமதிக்கும்படி அவனுடைய பெற்றோர்களிடம் அனுமதிப்பெற்று உடன் சென்றாள்.

காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சத்தியவான் தனக்கு மயக்கமாக இருப்பதாக்க் கூறினான். ‘ என் கண்ணே சாவித்திரி தலை சுற்றுகிறது. என் புலன்கள் தடுமாறுகின்றன. எனக்குத் தூக்கம் வருகிறது. நான் உன் பக்கத்தில் சற்று இளைப்பாறுகிறேன்’ என்று தழுதழுத்த குரலில் சொன்னான். சாவித்திரி பயந்து நடுங்கிக் கொண்டே, ‘என் ஆருயிரே, தலையை என் மடியின்மீது வைத்துக்கொண்டு படுங்கள்’ என்று சொன்னாள். மனைவியின் மடியில் தலைவைத்துப் படுத்த சத்தியவான் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு உயிர் துறந்தான். அந்தத் தனிக்காட்டில் கண்களில் நீர மல்க, தன் கணவனைக் கட்டிப்பிடித்தப்படியே இருந்தாள் அவள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:30 am

அப்போது அவனது உயிரை அழைத்துச் செல்ல எமதூதர்கள் அங்கு வந்தார்கள். ஆனால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை அவர்களால் நெருங்க முடியவில்லை. அவளை அக்கினி வட்டம் ஒன்று சூழ்ந்திருந்தது. எனவே எமதூதர்கள் எமனிடம் திரும்பிச் சென்று சத்தியவானின் உயிரைக் கவர முடியவில்லை என்று சொன்னார்கள்.

இறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளுமான எமனே அங்கு வந்தான். பூமயில் இறந்த முதல் மனிதன் அவன். அவன்தான் மரணக் கடவுள் ஆனான். இறந்த பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா, வெகுமதி அளிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன் எமன். அவனே அங்கு வந்தான். அவன் தேவன், ஆதலால் அந்த அக்கினி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.

அவன் சாவித்திரியைப் பார்த்து, ‘மகளே, இந்த உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி. முதன் முதலில் மரணமடைந்த மனிதன் நான். அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும். மரணமே மனிதனின் விதி’ என்றான். இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தான். பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன் வழியே செல்ல ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின் மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சட்டம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி எனமைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள்.

‘என் மகளே, சாவித்திரி! ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்? எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்’ என்றான் எமன்.

சாவித்திரி சொன்னாள்: ‘தந்தையே, நான் தங்களைப் பின் தொடரவில்லை. ஒரு பெண்ணின் விதி இதுதானே! அன்பர் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆகவேண்டும்! ஒரு அன்புக் கணவனையும், அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கவில்லையே’ என்றாள்.

‘உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதாவது ஒரு வரம் கேள்.’

‘தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அருள் புரியுங்கள், மரணதேவா!’

‘கடமை தவறா மகளே, உன் விருப்பப்படியே ஆகுக’ என்று கூறிவிட்டு மரண தேவன் சத்தியவானின் உயிரை அழைத்துக்கொண்டு தொடர்ந்து சென்றான். திரும்பவும் காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். சாவித்திரி தொடர்ந்து கொண்டிருந்தாள்.

‘என் மகளே சாவித்திரி, இன்னும் ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்?’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:30 am

‘தந்தையே, நான் என்ன செய்வேன். நான் திரும்பிப் போகவேண்டுமென்றுதான் பார்க்கிறேன். ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனத்தைத் தொடர்கிறது. என் உயிர் முன்னாலேயே போய்விட்டது. ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது. உயிர் சென்றால் உடம்புக் கூடச்செல்லத்தானே வேண்டும்’?

‘சாவித்திரி உன் வார்த்தைகளை கேட்டு மகிழ்தேன். இன்னும் ஒரு வரம் கேள், ஆனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது.’

‘தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் மீண்டும் பெற அருள்புரியுங்கள்.’

‘அன்பு மகளே, நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன். வீடு திரும்பு. ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது.’

எமன் தொடர்ந்து செல்ல்லானான், பணிவும் அன்பும் நிறைந்த சாவித்திரி மறைந்த கணவனைப் பின்தொடர்ந்தாள்.

எமன் திரும்பிப் பார்த்து, ‘நற்குணம் வாய்ந்த சாவித்திரி, நம்பிக்கையிழந்து துயரத்தில் வாடியவாறு என்னைத் தொடராதே.’

‘என் ஆருயிர்க் கணவனைத் தாங்கள் எங்கு எடுத்துச் செல்கிறீர்களோ, அங்கு செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.’

‘உன் கணவன் ஒரு பாவி என்று வைத்துக்கொள். அவன் நரகத்திற்குச் செல்ல நேர்ந்தால் சாவித்திரி அங்கும் செல்வாளா?’

‘வாழ்விலோ சாவிலோ, நரகமோ சொர்க்கமோ அவரைப் பின்தொடர்வதுதான் எனக்கு மகிழ்ச்சி’

‘என் குழந்தாய், உன் வார்த்தைகள் மேலானவை. உன்னைக் கண்டு நான் மகிழ்கிறேன். இன்னொரு வரம் கேள். ஆனால் செத்தவர்கள் உயிர்பிழைக்க மாட்டார்கள். ஞாபகம் வைத்துக்கொள்’

‘அப்படியானால் என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கட்டும். அவருடைய அரசு சத்தியவானின் மைந்தர்களுக்குச் செல்லட்டும்.’

இதைக்கேட்ட எம தர்மன் புன்முறுவல் பூத்தான். ‘என் மகளே, உன் விருப்பப்படியே ஆகுக. இதோ உன் கணவனின் உயிர். அவன் உயிர் பெற்றுத் திரும்புவான். உன் குழந்தைகள் அரசாள்வார்கள். வீடு திரும்பு. அன்பு மரணத்தை வென்று விட்டது. உன்னைப்போல் எந்தப் பெண்ணும் கணவனைக் காதலிக்கவல்லை. உண்மையான அன்பிற்கு முன்னால் மரணதேவனான நான்கூட ஆற்றல் அற்றவன் என்பதறகு நீ சான்று’ என்றான்.

இதுதான் சாவித்திரியின் கதை. இந்தியப் பெண்கள் எல்லோரும் சாவித்திரியைப்போல் விளங்க முயற்சிக்க வேண்டும். அவளது அன்பை மரணத்ததால் கூட வெற்றி கொள்ள முடியவில்லை. ஆற்றல் மிக்க அன்பினால் அவள் தன் கணவனின் உயிரையே எமனிடமிருந்து மீட்டாள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:31 am

5. சீதை

ராமனும் சீதையும்தான் இந்திய நாட்டின் லட்சியங்கள், எல்லா குழந்தைகளும், முக்கியமாக, எல்லா சிறுமிகளும் சீதையை வழிபடுகின்றனர். தூயவளும், தன்னையே அர்ப்பணம் செய்தவளும், எல்லா துன்பங்களையும் சகித்தவளுமான சீதையைப்போல் வாழ்வது தான் ஒரு பெண்ணின் மிக உயர்ந்த ஆசை ஆகும். இவர்களைப்பற்றியெல்லாம் படிக்கும்போது மேலைநாட்டு லட்சியம் இந்திய லட்சியத்திலிருந்து எவ்வளவு வேறு பட்டது என்பதை நீங்கள் உடனே உணர முடியும்.

மக்களினத்திற்கு பொறுமை லட்சியத்தின் வடிவமாகத் திகழ்கிறாள் சீதை. ‘செய், செயலால் உன் சக்தியைக் காட்டு’ என்று மேலைநாடு சொல்கிறது. ‘பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு’ என்கிறது இந்தியா. ஒரு மனிதன் எவ்வளவு அதிகம் வைத்துக்கொள்ள முடியும் என்னும் பிரச்சினைக்கு மேலைநாடு தீர்வு கண்டுள்ளது. அவன் எவ்வளவு அதிகம் வைத்துக்கொள்ள முடியும் என்னும் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு கண்டுள்ளது. இரண்டும் இரண்டு எல்லைகள் அல்லவா! லட்சிய இந்தியாவின் லட்சிய சான்று சீதை. அவள் உண்மையிலேயே வாழ்ந்திருந்தாளா, இந்தக் கதையில் வரலாற்று உண்மை உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி. லடசியம் இங்கே உள்ளது - அதுதான் நாம் பார்க்க வேண்டியது.

ஒரு நாடு முழுவதும் ஊடுருவிப் பாய்ந்து, மக்களின் வாழ்க்கையில் புகுந்து, மக்களினத்தின் ரத்தத்துளி ஒவ்வொன்றிலும் நுழைந்து கிளர்ச்சியூட்டும் சீதை - லட்சியத்தை, வேறு எந்தப் புராணக் கதையும் சித்தரிக்கவில்லை.

நல்லது என்று கருதக்கூடிய எதற்கும், தூய்மை என்று எண்ணக்கூடிய எதற்கும், புனிதம் என்று போற்ற்கூடிய எதற்கும், உயர் பெண் தகைமை என்று பாராட்டக்கூடிய எதற்கும் சீதையின் பெயர் சான்றாகத் திகழ்கிறது. ஒரு பெண்ணை வாழ்த்தும் புரோகிதர், ‘சீதையைப் போல் இருப்பாயாக!’ என்றே வாழ்த்துவார். ஒரு குழந்தைக்கு ஆசி கூறினால் அவர், சீதையைப் போல் விளங்குவாயாக! என்று சொல்வார். அவர்கள் அனைவரும் சீதையின் குழந்தைகள்; சீதையைப் போல் திகழ்வதற்கு முயல்கிறார்கள்; பொறுமைக்கு எல்லையாக, துயரே உருவாக, கற்புக்கரசியாக,மாசிலா இல்லற மங்கையாகச்சீதை காட்சி அளிக்கிறாள். அவள் எவ்வளவோ துயருற்றாலும் ராமனைக் கடிந்து ஒரு சொல்லும் கூறவில்லை. எல்லாம் தன் கடமை என்று ஏற்று, எல்லாவற்றையும் செய்தாள். அவள் காட்டில் வாழ நேர்ந்த அநீதியை எண்ணிப் பாருங்கள்! ஆனால், அவள் உள்ளம் ஒரு கசப்பையும் உணரவில்லை.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:32 am

மீண்டும் கூறுகிறேன், இதுதான் இந்தியர் கண்ட லட்சியம்: ‘ஒருவன் உன்னைத் துன்புறுத்தும்போது, நீ பதிலுக்குப் பதில் செய்தால், அது அந்த துன்பத்தைத் துடைத்துவிடாது; இன்னும் ஒரு கொடிய செயலைத் தான் அதுபடைக்கும்’ என்று புத்தர் கூறுகிறார். இயல்பாகவே சீதை இந்தியப் பெண்மணியாகத் திகழ்கின்றாள்; தீங்கு செய்தவரை வெறுக்கும் இயல்பு அவளிடம் இல்லை.

உலகம் முழுவதும் உள்ள கடந்தகால இலக்கியங்கள் முழுவதையும் அலசிப்பாருங்கள், அதுபோலவே எதிர்கால இலக்கியங்களையும் முடிந்தால் ஆராயுங்கள்; இன்னொரு சீதையை நீங்கள் காண முடியாது. இது உறுதி. சீதை இணையற்றவள். இனி அதைப்போல் ஒரு பாத்திரத்தைப் படைக்க முடியாது என்னும்படி அவள் படைக்கப்பட்டுள்ளாள். ஒருவேளை ராமர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இரண்டாவதாக ஒரு சீதை இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையான இந்தியப் பெண்மை வார்க்கப்பட வேண்டிய அச்சு அவள். ஏனெனில் பூரணப் பெண்மை என்பதன் இந்திய லட்சியங்கள் அனைத்து அந்த ஒரு சீதையின் வாழ்க்கையிலிருந்தே தோன்றியிருக்கின்றன. கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் ஆண்,பெண், குழந்தைகள் அனைவரின் வழிபாட்டைப்பெற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள். பெருமைக்குரிய இந்தச்சீதை தூய்மையிலும் தூய்மையானவள். பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தவள். துன்ப வாழ்வை ஒரு சிறு முணுமுணுப்பும் இல்லாமல் தாங்கித் துயரப்பட்டவள். அவள் கற்பின் திருவுரு, தூய்மையின் உறைவிடம். அவள் மக்களின் லட்சியம், தேவர்களின் லட்சியம். அந்தமகத்தன சீதை நம் தேசிய தேவியாக எப்போதும் நிலைத்து வாழ்வாள். சீதையைப்பற்றி அறியாத யாரும் இருக்கமாட்டார்கள். எனவே இங்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நமது புராணங்கள் எல்லாம்மறையலாம். வேதங்கள் கூட அழிந்து போகலாம். நமது சமஸ்கிருத மொழி ஒரேயடியாக அழிந்து போகலாம். ஆனால் இந்த நாட்டில் ஐந்து இந்துக்கள் உயிர்வாழ்ந்தால்கூட, அவர்கள் கொச்சை மொழி பேசினால்கூட, அங்கு சீதையின் கதை இருக்கவே செய்யும். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். அவள் நம் இனத்தின் உயிரோட்டத்தில் ஊடுருவி இருக்கிறாள், இந்துக்களான ஆண், பெண் ஒவ்வொருவரின் இரத்தத்திலும் கலந்திருக்கிறாள். நாமெல்லாம் சீதையின் குழந்தைகள், பெண்களின் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை சீதை லட்சிய்திலிருந்து விலகச் செய்தால் அந்த முயற்சிகள் தோல்வியையே தழுவும். அதையே நாம் அனுதினமும் கண்டு வருகிறோம். சீதையின் அடியொற்றியே நம் பெண்கள் வளர வேண்டும். முன்னேற வேண்டும் அது ஒன்றே வழி

சீதை தூயவள் என்று சொல்வது அபத்தம், தூய்மையே அவள் என்று கூற வேண்டும். அவளைப் போன்ற மற்றொருவர் உலகில் கிடையாது.

சீதை ராமனிடம் இருந்தது போல் ஒரு பக்தன் இருக்க வேண்டும். எத்தனைய ஓதுன்பங்களுக்கு அவன் ஆளாக நேரிடலாம். சீதை தனது எந்தத் துன்பத்தையும் பொருட்படுத்தவில்லை. அவள் ராமனிலேயே நிலை பெற்றிருந்தாள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:32 am

ராமன் அறுதிப் பரம்பொருளின் பிரதிநிதி, சீதை சக்தியின் பிரதிநிதி. அவளது முழு வாழ்க்கையும் சிந்திக்க இப்போது நேரம் இல்லை. எனினும் அவளது வாழ்க்கையில் இந்த நாட்டுப் பெண்களுக்குப் பொருத்தமான சில பகுதிகளைக் கூற விரும்புகிறேன்.

ராமனும் சீதையும் காட்டில் இருக்கிறார்கள். இருவரும் தபஸ்வினி ஒருத்தியைக் காணச்செல்கின்றனர். கடுமையான விரதங்கள் மற்றும் தவத்தின் காரணமாக அந்தத் தபஸ்வினியின் உடல் வாடி வதங்கியதாக இருந்தது.

சீதை சென்று அவளைப் பணிந்தாள். அப்போது அந்தத் தபஸ்வினி சீதையின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்துக் கூறினாள்; ‘அழகிய உடல் கிடைப்பது பெரும்பேறு, அது உனக்குக் கிடைத்திருக்கிறது. நல்ல கணவன் கிடைப்பது அதைவிடப் பேறு, அதுவும் உனக்குக் கிடைத்திருக்கிறது. அத்தகைய கணவனுக்கு முற்றிலும் பணிந்து நடப்பது மாபெரும் பேறு, நீ அவ்வாறு நடக்கிறாய். எனவே நீ இன்பம் நிறையப் பெற்றவளாகத்தான் இருக்க வேண்டும்.

அதற்கு சீதை சொன்னாள்: ‘அம்மா, கடவுள் எனக்கு அழகிய உருவத்தைத் தந்திருக்கிறார், ஒரு சிறந்த கணவனை அளித்திருக்கிறார்; இவற்றிற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால் நீங்கள் மூன்றாவது பேறாக ஒன்றைச்சொன்னீர்களே, அதைப் பொறுத்தவரை, நான் அவருக்குப் பணிந்து நடக்கிறேனா, அல்லது, அவர் எனக்குப் பணிந்து நடக்கிறாரா என்பது தெரியவில்லை. ஒன்றுமட்டும் எனக்கு நன்றாக நினைவுள்ளது. அவர் எனது கையைப் பற்றிக்கொண்டு அக்கினியை வலம் வந்தாரே, அப்போது, அவர் என்னுடையவர், நான் அவருடையவள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. இது அந்த அக்கினியின் பிரதிபலிப்போ அல்லது கடவுளே எனக்கு அப்படிக் காட்டினாரோ தெரியாது. அன்றிலிருந்து எனக்குத் தெரிவதெல்லாம், நான் அவரது வாழ்க்கையின் நிறைவு,அவர் என் வாழ்க்கையின் நிறைவு என்பது மட்டுமே.’

இந்தக் காவியத்தின் சில பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியப் பெண்மையின் லட்சியம் சீதை. அவள் தேவியின் அவதாராமாக வழிபடப்படுகிறாள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:34 am

6. அன்னை ஸ்ரீசாரதா தேவி

யார்தான் எனக்கு மனமிரங்குவார்கள்? யாரும் இல்லை- ஒரே ஒருவருடைய இரக்கவுணர்ச்சி ஆசிகளையும் நம்பிக்கையைஉம் ஊட்டியது. அவர் ஒருபெண். பெருந்துறவியாகிய எங்கள் குருதேவருடைய மைவி அவர். இளைஞனாக இருந்த போதே அவர் இவரை மண்து கொண்டார். அப்போது இவர் ருசிறு குழந்தை. இளைஞனாக வளர்ந்து, குருதேவரிடம் ஆன்மீகப் பேருணர்வு தீவிரமாகிய காலத்தில் இவர் கணவரைக் காண வந்தார். திருமணமாகி நீண்ட கலமாகியிருந்தும், வளர்ந்தபின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. வர் தன் மனைவியிடம், ‘இதோ பார், நான் உன் கணவன். இந்த உடலின் மீது உனக்கு முழு உரிமை உண்டு. உன்னை நான் மணந்து கொண்டு வாழ முடியாது. அதை உன் முடிவிற்கே விடுகிறேன்.’ என்றார். இதனைக்கேட்ட அநப் பெண்மி அழுது, ‘இறைவன் தங்களுக்கு அருள்வானாக அனைத்து ஆசிகளைஉம் வழங்குவானாக! உங்களைக் கீழ்மைப்படுத்துகின்றவளா நான்? இல்லவே இல்லை. முடியுமானால் உங்களுக்கு உதவவே விரும்புகிறேன். தாங்கள் மேற்கொண்ட செயலைத் தொடர்ந்து செய்யுங்கள்’ என்று மறுமொழி கூறினார்.

அத்தகையவர் அந்தப் பெண்மணி. கணவர் தம் பாதையிலேயே சென்று மாபெரும் துறவியாகத் திகழ்ந்தார். மனைவி எட்ட இருந்தபடியே தம்மால் முடிந்த அளவிற்கு உதவினார். குருதேவர் ஓர் ஆன்மீக குருவாகத்திகழ்ந்த போது, அவரிடம் வந்த இந்தப் பெண் அவருடைய சிஷ்யை ஆனால். உண்மையில் இவரே அவருடைமுதல் சிஷ்யை. கணவரது உடல்நலத்தைப் பேணுவதில் இவர் தமது வாழ்நாட்களைக் கழித்தார். அந்த மகானோ, தாம் வாழ்கிறோமா இல்லையா என்பது கூட அறியாதவராக இருந்தார். சிலசமயம், பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு கனன்று எரிகின்ற தணலின் மீது அமர்ந்து விடுவார். நெருப்பு என்பதையே அறிய மாட்டார். எரிந்து கொண்டிருக்கும் தணல்! அத்தனை நேரமும் உடல்நினைப்பே அற்றவராக இருப்பார்!

எங்கள் குருதேவரின் மனைவியான இந்தப் பெண்மணி மட்டுமே இளைஞர்களாகிய எங்களுக்கு எங்கள் கருத்துக்களுக்கு ஆதரவு காட்டியவர்; அனுதாபப் பட்டவர். ஆனால் அவரோ ஆதரவு அற்றவராக இருந்தார்.

அன்னை சாரதா தேவி என்பவர் யார், அவரது வாழ்க்கையின் உட்பொருள் என்ன என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை; உங்களுள் யாருமே புரிந்துகொள்ளவில்லை. படிப்படியாகத் தெரிந்துகொள்வீர்கள். சகோதரா, சக்தி இல்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது. நமது நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலமிழந்துகிடபது ஏன்? நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவதுதான் காரணம். இந்தியாயில் அந்த மகா சகதியை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வதற்கே அன்னை தோன்றியுள்ளார்; அவரை ஆதாரமாகக் கொண்டு மீண்டும் கார்க்கிகளும் மைத்ரேயிகளும் உலகில் தோன்றுவார்கள். சகோதரா, தெரிகிறதா? படிப்படியாக எல்லாம் தெரிந்துகொள்வீர்கள். எனவே தான் முதன் முதலாக அன்னையின் மடத்தை அமைக்க விரும்புகிறேன். சக்தியின் அருள் இல்லாமல் என்ன சாதிக்க முடியும்? அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் என்ன காண்கிறேன்? சக்தி வழிபாடு, சக்தி வழிபாடு. ஆனால் இவர்கள் தெரியாமல் வழிபடுகின்றனர். அதாது காமத்தின் மூலம் அதைச்செய்கின்றனர். தூய உணர்வுடன், சாத்வீக முறையில், தாய்மை எண்ணத்துடன் வழிபடுபவர்களுக்கு எந்த நன்மைதான் உண்டாகாது? என் கண்கள் திறக்கின்றன, நாளுக்கு நாள் எல்லாம் தெளிவாகின்றன. எனவே முதலில் அன்னைக்காக மடம் கட்டியாக வேண்டும். முதலில் தாய்மை எண்ணத்துடன் வழிபடுபவர்களுக்கு எந்த நன்மைதான் உண்டாகாது? என் கண்கள் திறக்கின்றன, நாளுக்குநாள் எல்லாம் தெளிவாகின்றன. எனவே முதலில் அன்னையும் அன்னையின் மகள்களுமே, பிறகுதான் தந்தையும் தந்தையின் பிள்ளைகளும். புரிகிறதா?

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:35 am

எல்லோரும் நல்லவர்களே, எல்லோரையும் ஆசீர்வதியுங்கள். அன்னையின் இடத்தைத் தவிர உலகில் வேறு எல்லா இடங்களிலும் உணர்வு வீட்டில் திருட்டு தான். சகோதரா, கோபம் கொள்ளாதீர்கள் - நீங்கள் யாரும் இப்போது அன்னையைப் புரிந்துகொள்ளவில்லை. எனக்கு அன்னையின் அருள் தந்தையின் அருளைவிட பல லட்சம் மடங்கு பெரியது. அன்னையின் அருள்தான், ஆசிதான் எனக்கு மிகமிகப் பெரியது. அன்னையின் விஷயத்தில் நான் சற்று வெறிகொண்டவன்; மன்னித்துவிடுங்கள். அன்னை மட்டும் கட்டளை இடுவாரானால் வீரபத்திரரும் பூதகணங்களும் எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுவார்கள். சகோதரா, நான் அமெரிக்கா வருமுன் அன்னையின் ஆசியை நாடிக் கடிதமெழுதினேன், அன்னையும் ஆசி தந்தார், ஒரே மூச்சில் கடலைத் தாண்டிவிட்டேன், பார்த்தீர்களா! இந்தக் கடுமையான குளிரில் ஊர்ஊராகச் சென்று சொற்பொழிவு செய்கிறேன், எத்தனையோ துன்பங்களை உடன் போராடி பணம் சேர்க்கிறேன் - அன்னையின் மடம் வந்தே தீரும். வாழும் துர்க்கையை விட்டுவிட்டு மண்ணால் செய்த துர்க்கையை வழிபடுகின்ற பாபுராமின் அன்னைக்கு இந்த வயதான காலத்தில் மூளைதான் குழம்பியிருக்க வேண்டும். சகோதரா, நம்பிக்கை ஒரு பெரும்பசெலவம். வாழும் துர்க்கையை வழிபடுவது எப்படி என்பதைக்காட்டிய பின்னர்தான்நான் என் பெயருக்குத் தகுதியுடையவன் ஆவேன். ஓர் இடம் வாங்கி, வாழும் துர்க்கையை அங்கே எழுந்தருளச்செய்கின்ற அன்றுதான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுவேன். அதற்கு முன்பு நான் இந்தியாவிற்கு வரவில்லை. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அதைச் செய்யுங்கள். பணம் அனுப்ப முடியுமானால் நான் சுமை தீர்ந்ததவனாவேன். இந்த எனது துர்க்கா பூஜையை நடத்திக் காட்டுங்கள் பார்க்கலாம். அன்னையின் வழிபாட்டிற்கு கிரீஷ் ஏராளமாக செலவு செய்கிறார். அவர் புண்ணியம் செய்தவர், அவரது குலம் பேறுபெற்றது. சகோதரா, அன்னையின் பெருவாழ்வு என் நினைவில் வரும் போதெல்லாம், ‘ஆமாம், ராமன் யார்?’ என்று எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். சகோதரா, அந்த விஷயத்தில் நான் சற்று வெறிகொண்டவன் என்று அதனால்தான் சொல்கிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சரைக் கடவுள் என்றோ மனிதன் என்றோ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், சகோதரா, யாருக்கு அன்னையிடம் பக்தி இல்லையோ, அவனது வாழ்க்கை வீண் என்று சொல்கிறேன்.





நன்றி: தமிழ் தேசம்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:24 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக