புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
3 Posts - 6%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 5 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:35 pm

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.


avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:04 am

5. இந்தியப் பெண்களும் மேலைநாட்டு மகளிரும்



இந்த நாட்டுப் பெண்களைப்போல் வேறு எங்கும் நான் கண்டதில்லை. நம் நாட்டிலும் கற்ற்றிந்த ஆண்கள் பலர் உள்ளனர், ஆனால் இங்குள்ள பெண்களைப் போல் காண்பது அரிது. ‘யா ஸ்ரீ; ஸ்வயம் ஸூக்ருதி னாம் பவனேஷூ - எந்த தேவி நல்லவர்களின் வீடுகளில் திருமகளாக உறைகிறாளோ - இது முற்றிலும் உண்மை.

பனியின் வெண்மை போன்ற ஆயிரக்கணக்கான பெண்களை இங்கே காண்கிறேன். இவர்கள் எவ்வளவு சுதந்திரமாக உள்ளார்கள்! எல்லா வேலைகளையும் இவர்களே செய்கிறார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெண்கள்தான் நமது நாட்டிலோ பெண்கள் வெளியிலேயே நடமாட முடியாது. இங்குள்ள பெண்களிடம் தான் எவ்வளவு கருணை! நான் இங்கு வந்து சேர்ந்த நாள் முதல் அவர்களே தங்கள் வீடுகளில் எனக்குத் தங்க இடமளித்துள்ளனர். உணவு தந்து, சொற்பொழிவுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்கின்றனர்; கடைகளுக்கு என்னை உடன் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செய்யாத்து எதுவுமில்லை. அவற்றையெல்லாம் சொல்லித் தீர்க்க முடியாது. நூற்றுக்கணக்கான பிறவிகளில் சேவை செய்தாலும் இவர்களுக்கு நான் பட்டுள்ள கடனைத் தீர்க்க முடியாது.

நண்பா, சாக்தன் என்ற சொல்லின் பொருள் என்ன தெரியுமா? குடித்துக் கூத்தடிப்பவன் என்பதல்ல; இனைவனைப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள மகா சக்தியாக உணர்பவன், எல்லா பெண்களிலும் அந்த சக்தியே வெளிப்படுகிறாள் என்பதைக் காண்பவன், இவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். மனு சொல்கிறார்; ‘யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே த்தர தேவதா: எங்கே பெண்கள் சுகமாக இருக்கிறார்களோ, அந்தக் குடும்பத்தின் மீது இறைவன் பெருங்கருணை பொழிகிறான். இவர்கள் அதையே செய்கிறார்கள். அதனால்தான் சுகமாக, கற்றறிந்தவர்களாக, சுதந்திரர்களாக, ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். நாம் பெண்களை இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், வெறுக்கத்தக்கவர்கள், தூமையற்றவர்கள் என்றெல்லாம் வசைபாடுகிறோம். விளைவு? நாம் மிருகங்களாக, அடிமைகளாக, முயற்சியற்றவர்களகாக, ஏழைகளாக இருக்கிறோம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:04 am

இந்த நாட்டுப் பெண்கள்தான் எவ்வளவு தூயவர்கள்! இருபத்தைந்து முப்பது வயதாகுமுன் எதப்பெண்ணும் மணம் செய்துகொள்வதில்லை. வானத்துப் பறவைகள்போல் சுதந்திமாகத் திரிகிறார்கள், சந்தை, தெரு, கடை என்று போகிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள், கல்லூரியில் விரிவுரையாளர்களாக உள்ளார்கள்; எல்லா விதமான வேலைகளுய்மசெய்கிறார்கள், ஆனாலும் என்னதூய்மை! பணக்கார்ர்கள் இரவுபகலாக ஏழைகளுக்கு உதவுவதில் முனைந்துள்ளனர். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பெண்களுக்கு பதினொரு வயது ஆனதும் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கெட்டுப் போவார்களாம். நண்பா, நாம் என்ன மனிதர்களா? மனு என்ன சொல்கிறார்? ‘கன்யாப்யேவம் பாலனீயா சிஷணீயாதியத்னத. (-பெண்களையும் மிகுந்த முயற்சியுடன் வளர்க்க வேண்டும், கல்வியளிக்க வேண்டும்) ஆண்கள் எப்படி முப்பது வயது வரையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறார்களோ கல்வி பெறுகிறார்களோ, அதேபோல் பெண்களுக்கும் செய்விக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? உங்கள் பெண்களின் நிலையை உயர்த்த முடியுமா? அப்படியானால் நம்பிக்கை உண்டு. இல்லாவிட்டால் மிருக நிலையில் அப்படியேதான் இருப்பீர்கள்.

இப்போது எல்லாம் புரிகிறது. சகோதர, ‘யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே த்த்ர தேவதா: (- பெண்கள் மதிக்கப்படுகின்ற இடங்களில் தேவர்கள் இன்புறுகின்றனர்) என்பது மனு (3.56) வாக்கு, நாம் மகாபாவிகள்; பெண்களை, ‘வெறுக்கதக்க புழுபூச்சிகள், நரக வாசல்கள்’ என்றெல்லாம் சொல்லிச்சொல்லி தோ கதியை அடைந்துள்ளோம். ஆகா, அவர்களுக்கும் நமக்கு மிடையே ஆகாயத்திற்கும் பாதாளத்திற்குமான வேறு பாடல்லவா உள்ளது! ‘யாதாதத்யதோர்த்தான் வ்யத்தாத் (தகுதி தக்கவாறு இறைவன் பரிசை அளிக்கிறார் ) வெட்டிப் பேச்சினால் அவரை ஏமாற்ற முடியுமா! ‘த்வம் ஸ்த்ரீ த்வம் புமானஸி த்வம் குமார உத வாகுமா (நீயே பெண், நீயே ஆண், நீயே இளைஞன், நீயே இளம்பெண் ) என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால் நாமோ, ‘தூரம்பஸர ரே ச்டாள ( ச்டாளனே, எட்டிப் போ’ ) கேனைஷா நிர்மிதா நார் மோஹினீ’( - மோகிக்கச் செய்யும் இந்தப் பெண் யாரால் படைக்கபட்டாள்?) என்றெல்லாம் கூறுகிறோம்.

இந்த இந்தியாவின் புனித மண்ணில்தான். சீதை, சாவித்திரியின் நாட்டில்தான், இந்த நாட்டுப் பெண்களில் தான் அத்தகைய ஒழுக்கம், சேவை மனப்பான்மை, அன்பு, கருணை, அகமலர்ச்சி, பக்தி இவற்றைக் காண முடியும். உலகில் வேறு எங்குமே இப்படி நான் பார்க்கவில்லை. மேலை நாட்டுப் பெண்களைப் பார்த்தால் பல வேளைகளில் பெண்களாகவே தெரியவில்லை. அவர்கள் முழுக்க முழுக்க ஆண்களின் நகல்போலவே இருக்கிறார்கள். வண்டி ஓட்டுகிறார்கள். அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள், பள்ளி செல்கிறார்கள். ஆசிரியையாக வேலை பார்க்கிறார்கள். கண்களுக்கு இதம் தரும் நாணம், பணிவு போன்ற பெண்மைப் பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே காண முடியும். இவ்வளவு இருந்தும் இந்தப் பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை! அவர்களுள் அறிவொளி ஏற்ற நீங்கள் முயவில்லை. அவர் களுக்கு மட்டும் சரியான கல்வி கொடுக்கப்படுமானால் அவர்கள் லட்சியப் பெண்களாக உருவெடுப்பார்கள்.’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:05 am

‘எங்கள் நாட்டுப் பெண்கள் உங்களைப் போன்ற அறிவு பெற வேண்டும்; ஆனால் அதற்காகத் தூய வாழ்வை இழக்க வேண்டும் என்றால் அந்த அறிவு தேவையில்லை. உங்கள் அறிவையெல்லாம் மெச்சுகிறேன். ஆனால் தீமையை ரோஜாப்பூக்கால் மறைந்து, அதை நன்மை என்று நீங்கள் வற்புறுத்துவதை வெறுக்கிறேன். அறிவுதான் மிக உயர்ந்த நன்மை என்பதல்ல. ஒழுக்கம், ஆன்மீகம் இவற்றிற்காவே நாங்கள் முயல்கிறோம். எங்கள் பெண்கள் உங்களைப்போல் படித்தவர்கள் அல, ஆனால் அவர்கள் தூய்மையில் சிறந்தவர்கள்.

‘ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனைத் தவிர பிற ஆண்களைத் தன் பிள்ளைகளாகப் பார்க்க வேண்டும். ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தன் தாயாகக் காண வேண்டும். நீங்கள் பெண் களிடம் காட்டும் மரியாதை இருக்கிறதே, அதைக் காணும் போது எனக்கு வெறுப்பே மிகுகிறது. பால்வேற்றுமையை மறந்து, மனிதர்கள் என்னும் அடிப்படைமீது இருபாலரும் சந்தி க்கக் கற்றுக் கொள்ளும்போதுதான் இந்த நாட்டுப் பெண்கள் உண்மையாக முன்னேறுவார்கள். அதுவரை அவர்கள் விளையாட்டுப் பொருட்கள், அதற்குமேல் எதுவும் அல்ல. இவை எல்லாம்தான் விவாகரத்திற்குக் காரணமாகின்றன. ஆண்கள் குனிந்து பெண்களுக்கு நாற்காலி அளித்து உபசரிக்கின்றனர்; அவர்களின் அழகைப் புகழ்கின்றனர். ‘அப்பப்பா, உன் கண்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!’ இதற்கு அவர்களுக்கு உரிமை ஏது? ஆணுக்கு அவ்வளவு தைரியமா? உங்கள் பெண்கள் இதை அனுமதிக்கலாமா? இவை மனிதனின் மோசமான குணத்தை வளர்க்கின்றன, உயர்ந்த நோக்கங்களை அல்ல.

‘நான் ஆண், நான் பெண்’ என்னும் எண்ணங்களை விட்டு, நாம் மனிதர்கள், அன்பு காட்டவும் உதவி புரியவும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்க வேண்டும். ஒரு வாலிபனும் ஓர் இளம்பெண்ணும் தனியிடத்தில் இருக்க நேர்ந்தால், அவன் அவனது அழகை வர்ணிக்கிறான். அவன் மணமாகுமுன் இருநூறு பெண்களின் அழகையாவது புகழ்ந்திருப்பான். சீ! நான் திருமணம் செய்யும் வகுப்பைச் சேர்ந்தவனாக இருந்தால், இவ்வளவு தொல்லையில்லாமல் அன்பிற்குரிய மனைவி ஒருத்தியையே தேர்ந்தெடுத்திருப்பேன்!

‘நான் இந்தியாவில் இருந்தபோது இவற்றை மேலோட்டமாகவே பார்த்தேன்; இவை சரிதான், வெறும் வேடிக்கை என்று கூறப்பட்டதை நம்பினேன். இப்போது நேரில் பார்த்தபோது அவை சரியல்ல என்பது தெரிய வருகிறது. அவை தவறு, மேலை நாட்டினராகிய நீங்கள் கண்மூடித்தனமாக இதைச் சரி என்கிறீர்கள். மேலை நாடுகள் இளமையும், முட்டாள்தனமும், சலன புத்தியும், நிறைந்த செல்வமும் உடையவை. அவற்றின் பிரச்சினையும் இவைதான். இந்த விஷயங்களுள் ஒன்றுகூட எவ்வளவோ தீமை விளைவிக்கும்! மூன்று நான்கு சேரும்போதோ, மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:06 am

6. கல்வி


‘உங்கள் நாட்டில் பெண்களுக்குக் கல்வி தர யாரும் எந்த முயற்சியும் செய்யவிலை. ஆண்களாகிய நீங்கள் கல்வி பெறுகிறீர்கள்; மனிதர்கள் ஆகிறீர்கள். ஆனால் உங்கள் துன்ப துயரங்களில் பங்கு கொள்கின்ற, உயிரைத் தந்து உங்களுக்குச் சேவை செய்கின்ற பெண்களுக்குக் கல்வி தர நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’

சீடர்: ‘ஏன், இப்போது பெண்களுக்காக எத்தனையோ பள்ளிகளும் கல்லூரிகளும் தோன்றியிருக்கின்றன! எவ்வளவோ பெண்கள் எம்.ஏ., பி.ஏ., பட்டங்களும் பெற்றிருக்கிறாரகளே!’

சுவாமிஜி: ‘இந்த எம்.ஏ. எல்லாம் மேலை நாட்டுப் படிப்புகள். எத்தனை பள்ளிகள் உங்களுடைய தர்ம சாஸ்திரங்களின் வழியில், தேசிய நீரோட்டத்தின் வழியில் உள்ளன? பரிதாபம் அத்தகைய தேசியக் கல்வி ஆண்களுக்கே பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை, பெண்களைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? அரசின் புள்ளி விவரப்படி இந்தியாவில் பத்துப் பன்னிரண்டு சதவீதமே படித்தவர்ள் இருக்கிறார்கள்; அதில் ஒரு சதவீதம் கூடப் பெண்கள் இல்லையென்றே தோன்றுகிறது.

‘இல்லையெனில் நாடு இவ்வளவு கீழான நிலையை அடையுமா என்ன? கல்வி பரவாமல், அறிவு உதிக்காமல் நாட்டில் முன்னேற்றம் எப்படி ஏற்பட முடியும்? எதிர் காலத்தின் நம்பிக்கையாக விளங்குகின்ற, கல்வி பெற்ற வெகுசிலரான உங்களிடமும் நாட்டு மக்களுக்குக் கல்வியைப் பரப்புவதில் உண்மையான முயற்சியோ உழைப்போ இருப்பதாத் தெரியவில்லை. முதலில் சாதாரண மக்களிடமும் பெண்களிடமும் கல்வியைப் பரப்பாமல் இப்போதைய நிலைமையை முன்னேற்றவே முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:07 am

‘அதற்காகச் சில பிரம்மச்சாரிகள் மற்றும் பிரம்மச் சாரிணிகளுக்குப் பயிற்சி தரும் எண்ணம் எனக்கு உண்டு. பிரம்மச்சாரிகள் நாளடைவில் சன்னியாசம் பெற்று, நாடு முழுவதும் கிராம்ம் கிராம்மாகச் சென்று கல்வியைப் பரப்புவார்கள். பிரம்மச்சாரிணிகளும் பெண்களிடையே அந்தப் பணியை செய்வார்கள். இந்தப் பணி நம் தேசிய முறையில்தான் நடக்க வேண்டும். ஆண்களுக்குப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்துவது போலவே பெண்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். படிப்பும் ஒழுக்கமும் நிறைந்த பிரம்மச்சாரிணிகள் இந்த நிலையங்களில் கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். புராணங்கள், இதிகாசங்கள், வீட்டு வேலை, கலைகள், குடும்ப வாழ்வின் கடமைகள், சிறந்த ஒழுக்கத்தை வளர்க்கும் அடிப்படைக் குணங்கள் முதலியவற்றை நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் சொல்லித் தர வேண்டும். அத்துடன் தர்ம்ம், நீதி முதலியவற்றிலும் மாணவியருக்குப் பயிற்சி தர வேண்டும். எந்தப் பயிற்சியால், காலப்போக்கில் அவர்கள் சிறந்த இல்லத் தலைவிகளாக உருவாகுவார்களோ, அந்தப் பயிற்சியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இத்தகைய தாய்மார்களின் குழந்தைகள் நற்குணங்களில் சிறந்து விளங்குவார்கள். படித்த, நீதி வழுவாத தாய்மார்களின் வீட்டில்தான் மாமனிதர்கள் பிறப்பார்கள். நீங்களோ உங்கள் பெண்களைக் குழந்தை பெறும் எந்திரங்களாக ஆக்கிவிட்டீர்கள். ராம், ராம்! உங்கள் கல்வியின் பலன் இதுதானா? முதலில் பெண்களை முன்னேற்றியாக வேண்டும்! பாமர்ர்களை விழிப்புணர்த்தியாக வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டிற்கு நன்மை வர முடியும்.’

‘நம் பெண்களுக்கு இப்போது எந்த மாதிரியான கல்வி தேவை?’

சுவாமிஜி: ‘தர்ம்ம், கலைகள், விஞ்ஞானம், குடும்பக் கடமைகள், சமையல், தையல், சுகாதாரம் இப்படிப்பட்ட எளிமையான பாடங்ளைக் கற்பிப்பது நல்லது. நாவல்களையோ நாடகங்களையோ படிக்க அனுமதிப்பது நல்லதல்ல. மகாகாளி பாடசாலை பெரிதும் சரியான வழியில் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வழிபாட்டு முறை மட்டும் சொல்லித் தருவது போதாது. அவர்கள் முறை மட்டும் சொல்லித் தருவது போதாது. அவர்கள் பெறும் கல்வி எல்லா விஷயங்களிலும் கண்களைத் திறப்பதாக அமைய வேண்டும். லட்சியப் பெண்மையின் பண்புகளை எப்போதும் அவர்கள் முன் வைத்து, மிகவுயர்ந்த தியாகத்தில் அவர்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகுமாறு செய்ய வேண்டும். சீதை, சாவித்திரி, தமயந்தி, லீலாவதி, கனா, மீரா முதலிய உன்னதமானவர்களின் வாழ்க்கையை அவர்களுக்குச் சொல்லி, அவர்களும் தங்கள் வாழ்க்கையை அதேபோல் உருவாக்கிக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:08 am

‘பண்டைய இந்தியாவில் பெண்களுக்கான மடங்கள் இருந்ததாக வரலாறு கூறவில்லையே! புத்தர் ஆலத்தில் தான் அதுபற்றிக் கேள்விப்படுகிறோம். காலப்போக்கில் அதிலிருந்து சீர்கேடுகள் பல தோன்றி, நாடு முழுவதுமே வாமாச்சாரத்தில் மூழ்க நேர்ந்ததோ!’

சுவாமிஜி ‘எல்லா உயிர்களிலும் ஒரே ஆன்மாதான் உள்ளது என்று வேதாந்தம் கூறுகிறது. எனினும் இந்த
நாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் இவ்வளவு அதிகமான வேறுபாடுகள் ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. எப்போதும் பெண்களைக் குறைகூறுகிறீர்கள். அவர்களுடைய நன்மைக்காக ஏதாவத செய்திருக்கிறீர்களா? ஸ்மிருதி அது இது என்று சாஸ்திரங்களை எழுதியும் கடுமையான சட்டங்களின் மூலமும் அவர்களை அடக்கி வைத்து வெறும் பிள்ளை பெறும் எந்திரங்களாக ஆக்கிவிட்டீர்கள். ஆதிபராசக்தியின் தோற்றங்களான அவர்களை இப்போதேனும் உயர்வு பெறச் செய்யவில்லை என்றால், உங்களுக்கு வேறு எந்த வழிதான் உள்ளது!’

சீடர்: ‘பெண்கள் மாயையின் வடிவங்கள். ஆண்களைச் சீரழிப்பதற்காகவே அவர்கள் படைக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. தங்கள் மாயையால் அவர்கள் ஆண்களின் ஞானத்தையும் வைராக்கியத்தையும் அழித்துவிடுகிறார்கள். அதனால்தான் சாஸ்திரங்களை எழுதியவர்கள் பெண்களால் பக்தியும் ஞானமும் அடைவது கடினம் என்று எழுதினார்கள் என்று நினைக்கிறேன்.’

சுவாமிஜி: ‘பெண்கள் பக்தியும் ஞானமும் அடைவதற்குத் தகுதியில்லாதவர்கள் என்று நீ எந்தச் சாஸ்திரத்தில் படித்தாய்? இந்தியா நலிவுற்றிருந்த காலத்தில் புரோகிதர்கள் செய்த வேலை அது. மற்ற ஜாதியினருக்கு வேதங்களைப் படிக்கும் உரிமையை மறுத்த காலத்தில் பெண்களின் உரிமைகளையும் அவர்கள் பறித்துக் கொண்டார்கள். வேத, உபநிடத காலங்களில் மைத்ரேயி, கார்க்கி முதலான பெண்கள் பிரம்மஞானத்தைப்பற்றி விவாதிக்கும் தங்கள் திறமையின் காரணத்தால் ரிஷிகளுக்குரிய சிறந்த இடத்தைப் பெற்றிருந்ததை நாம் காண்கிறோம். இன்றும் அவர்களை அதிகாலையில் நாம் நினைவுகூர்கிறோம். வேதங்களில் ஆழ்ந்த புலமை உடைய ஆயிரம் பிராமணர்கள் கூடியிருந்த சபையில், பிரம்மத்பைப் பற்றிய விவாத்த்திற்காக யாஜ்ஞவல்கியரையே அழைக்கிறார் கார்க்கி!. அவர்கள் அந்தக் காலத்தில் ஆன்மீக வாழ்வில் அனுமதித்துப் போற்றப்பட்ட போது, இநக் காலத்தில் ஏன் அந்த உரிமையை மறுக்க வேண்டும்? ஒரு காலத்தில் நடந்தது மற்றொரு காலத்திலும் நிச்சயம் நடக்கும். அதையே வரலாறு காட்டுகிறது. பெண்களுக்குத் தர வேண்டிய முறையான மதிப்பைக் கொடுத்தாதாலேயே எல்லா இனங்களும் மகத்தான நிலையை அடைந்துள்ளன. எந்த நாடு, எந்த இனம், பெண்களை மதிக்கவில்லையோ அவை ஒருபோதும் சிறந்த நிலையை அடைந்ததில்லை; அடையவும் செய்யாது. உங்கள் இனம் இவ்வளவு இழிந்துள்ளதன் முக்கியக் காரணம், பராசக்தியின் வடிவங்களான பெண்களுக்கு நீங்கள் மரியாதை அளிக்காததுதான்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:09 am

‘யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே த்த்ர தேவதா: I
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்த்த்ரா பலா:
க்ரியா: II

-எங்குப் பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர். எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமாகின்றன” என்று மனு கூறுகிறார் (3.56) எந்த நாட்டில், எந்தக்குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ, அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை. எனவே அவர்கள் முதலில் உயர்த்த வேண்டும். அதற்காக மாதிரி - மடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.’

சீடர்:’நீங்கள் முதன்முறை அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் ஸ்டார் தியேட்டரில் செய்த சொற்பொழிவில் தாந்திரீக நெறியைத் தாக்கிப் பேசினீர்கள். இப்போது அதே தாந்திரீக நெறியைத் தாக்கிப் பேசினீர்கள். இப்போது அதே தாந்திரீ கூறும் பொன்வழிபாட்டை ஆதரித்துப் பேசுவதன்மூலம் முன்பு சொன்னதற்கு முரணாகச் சொல்கிறீர்களே!’

சுவாமிஜி: ‘தாந்திரீகத்தின் தற்போதைய சீரழிந்த நிலையான் வாமாச்சாரத்தைத்தான் நான் தாக்கிப் பேசினேன். பெண்களைத் தாயாக வழிபடுவதையோ உண்மையான வாமாச்சாரத்தையோ நான் எதிர்க்கவில்லை. தாந்திரீகத்தின் அடிப்படையே பெண்களைத் தேவியாக வழிபட வேண்டும் என்பதுதான். புத்த மதம் வீழ்ச்சி அடைந்தபோது வாமாச்சாரம் மிகவும் கெட்டுவிட்டது. அந்தக் கெட்டுப்போன முறை இப்போதும் நடைமுறையில் உள்ளது. இன்றும் தந்திர சாஸ்திரத்தில் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது. நான் அந்தக் கீழான பயிற்சிகளையே தாக்கினேன்; இப்போதும் தாக்குகிறேன்.

‘எந்த மகாமாயையின் புறத் தோற்றம் மனிதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அவனைப் பைத்தியமாக்குகிறதோ, எந்தத் தேவியின அக வெளிப்பாடுகளான ஞானம், பக்தி, விவேகம், வைராக்கியம் முதலியவை மனிதனை எல்லாம் அறிந்தவனாக, நினைப்பது நிறைவேறப் பெறுபவனாக, பிரம்மஞானியாக ஆக்குகிறதோ, அந்த அன்னையின் வடிவங்களான பெண்களை வழிபடுவதை நான் ஒருபோதும் எதிர்த்தில்லை. “ஸைஷா ப்ரஸன்னா வரதா ந்ருணாம் பவதி முக்தயே - அவள் மகிழும்போது நலம் செய்பவளாகிறாள்; மனிதனின் முக்திக்கும் காரணமாகிறாள். பூஜை முதலியவற்றால் அவளை மகிழ்விக்காமல் பிரம்மாவும் விஷ்ணுவும் கூட அவளது பிடியிலிருந்து விடுபட்டு முக்தி பெற முடியாது. எனவே வீட்டில் வாழும் இந்த லட்சுமிகளான பெண்களின் வழிபாட்டிற்காகவும், அவர்களிடம் பிரம்மஞானம் வெளிப்படுவதற்காகவும் பெண்களுக்காக மடம் அமைக்க விரும்புகிறேன்.’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:10 am

சீடர்: ‘இது நல்ல யோசனையாக இருக்கலாம். ஆனால் அதில் சேரப் பெண்கள் வருவார்களா? தற்காச் சமுதாயத்தின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு இடையில் பெண்கள் மடத்தில் சேர யார் அனுமதிப்பார்கள்?’

சுவாமிஜி: ‘ஏன், இன்றுகூட ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உதவியோடு மடத்தை ஆரம்பிப்பேன். அன்னை ஸ்ரீ சாரதா தேவி அதன் மையமாக விளங்குவார். ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களின் மனைவிகளும் மகள்களும் முதலில் அதில் வசிப்பார்கள். அவர்களால் மடத்தின் நோக்கத்தைச் சுலபமாப்புரிந்து கொள்ள முடியும். அவர்களைப் பார்த்து மற்ற இல்லத்தார்களும் இந்தப் புனிதமான பணிக்கு உதவி செய்வார்கள்.’

சீடர்: ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் இந்த வேலையில் நிச்சயம் சேருவார்கள். ஆனால் பொது மக்களிடமிருந்து உங்களுக்கு உதவி கிடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.’

சுவாமிஜி: ‘தியாகங்கள் இல்லாமல் இந்த உலகத்தில் எந்தப் பெரிய காரியமும் நடக்காது. ஆலமரத்தின் மிகச் சிறிய விதையைப் பார்க்கும்போது அதிலிருந்து இவ்வளவு பெரிய மரம் வளரப் போகிறது என்று யார் தான் கற்பனை செய்ய முடியும்? முதலில் இப்படி இந்த மடத்தை நான் ஆரம்பிக்கிறேன். ஓரிரு தலைமுறைகளுக்குப் பிறகு மக்கள் இந்த மடத்தின் பெருமையைப் பாராட்டுவதை நீ பார்க்கலாம். என் மேலைநாட்டு சிஷ்யைகள் இதற்காகத் தங்கள் உயிரையும் கொடுப்பார்கள். பயத்தையும் கோழைத்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நீங்களும் இந்த உன்னதமான காரியத்தில் உதவி செய்யுங்கள். இதன் உயர்ந்த லட்சியத்தை எல்லோரிடமும் சொல்லுங்கள். இந்த மடம் ஒரு காலத்தில் நாடு முழுவதற்குமே ஒளி வழங்கப்போவதைக் காண்பீர்கள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:10 am

சீடர்: ‘சுவாமிஜி, இந்த மடத்தைப்பற்றிய உங்கள் எண்ணங்களை எல்லாம் தயவு செய்து சொல்லுங்கள்.’

சுவாமிஜி: ‘கங்கையின் அந்தப் பக்கத்தில் ஒரு பெரிய இடம் வாங்கி மடம் கட்டப்படும். அதில் திருமணமாகாத பெண்களும், விதவைகளான பிரம்மச்சாரிகளும் வாழ்வார்கள். பக்தைகளான குடும்ப몮 பெகளும் அவ்வப்போது தங்குத் தங்க அனுமதிக்கப்படுவர். ஆண்களுக்கு அந்த மடத்துடன் எந்தத் தொடர்பும் இருக்காது. ஆண்களுக்கான மடத்தின் மூத்த சன்னியாசிகள் தொலைவில் இருந்தபடியே அந்த மடத்தின் காரியங்களைக் கவனிப்பார்கள். அங்கே பெண்களுக்கான ஒரு பள்ளி நடத்தப்படும். அதில் தர்ம சாஸ்திரம், இலக்கியம், சம்ஸ்கிருதம், இலக்கணம், அதோடு ஓரளவு ஆங்கிலமும் கற்பிக்கப்படும். அப்படி இருக்க முடியாதவர்கள், தினந்தோறும் இங்கு வந்து வீட்டிற்குத் திரும்பும் மாணவிகளாகச் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். அவர்களும் மடத்தினுடைய தலைவியின் அனுமதி பெற்று, வேண்டுமானால் ஓரிரு நாட்கள் தங்கலாம்; அப்படித் தங்கும்போது அவர்களுக்கு உணவை மடம் தரும். மாணவிகளுக்குப் பிரம்மச்சரியத்தில் பயிற்சிதரும் பொறுப்பை மூத்த பிரம்மச்சாரிணிகள் ஏற்றுக் கொள்வார்கள். ஐந்தாறு ஆண்டுள் இந்த மடத்தில் பயிற்சி பெற்ற பிறகு, பெற்றோர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம். தகுதி படைத்தவர்களாக இருந்து, பெற்றோர்களும் அனுமதித்தால் அவர்கள் மடத்திலேயே தங்கி பிரம்மச்சரிய விரதத்தை ஏற்கலாம். அப்படி விரதம் ஏற்ற பெண்கள் மட்டுமே மடத்தின் ஆசிரியையாகவும் மத போதனையாளராகவும் ஆவார்கள். அவர்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் மடத்தின் மையங்களைத் துவக்கி,பெண்கல்வியைப் பரப்புவார்கள். பண்பாடும் ஒழுக்கமும், மிக்க அத்தகையோரால் நாட்டில் பெண்கல்வி வளரும்.

‘ஆன்மிகம், தியாகம், புலனடக்கம், ஆகியவை மடத்து மாணவிகளில் லட்சியமாக விளங்க வேண்டும். சேவை அவர்களது வாழ்வின் விரதமாக இருக்க வேண்டும். இத்தகைய லட்சிய வாழ்க்கை வாழ்ந்தால் யாதான் அவர்களை மதிக்க மாட்டார்கள்? யார்தான் அவர்களிடம் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்? பெண்களின் வாழ்க்கை இந்த முறையில் அமைக்கப்பட்டால், அதன் பிறகுதான் சீதை, சாவித்திரி, கார்க்கயைப் போன்ற பெண்கள் மறுபடியும் தோன்ற முடியும். மூடப் பழக்க வழக்கங்களால் இந்த நாட்டுப் பெண்கள் எவ்வளவு தூரம் உயிரற்றவர்களாக, உணர்ச்சியற்றவர்களாக மாறிவிட்டார்கள் என்பதை நீ மேலை நாடுகளில் சென்று, அந்தப் பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அறிந்து கொள்வாய். நமது பெண்களின் இந்த இழிநிலைக்குக் காரணம் நீங்களே, அவர்களை மீண்டும் உயர்த்துவதும் உங்கள் கைகளிலேயே உள்ளது. அதனால் அவர்களுக்காக வேலை செய்யத் தொடங்கு என்று உன்னிடம் சொல்கிறேன். வேத, வேதாங்களை மனப்பாடம் செய்வதால் என்ன பலன்?’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:11 am

சீடர்: ‘மடத்தில் பயிற்சி பெற்றும் அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களிடம் லட்சிய வாழ்வை எப்படிக் காண முடியும்? மடத்தில் பயிற்சி பெறுபவர்கள் திருமணமே செய்துக்கொள்ளக்கூடாது என்று ஏன் விதி வகுக்கக் கூடாது?’

சுவாமிஜி: ‘உடனடியாக அதைச் செய்ய முடியுமா, என்ன? கல்வியளித்து அவர்களை விட்டுவிட வேண்டும். அவர்களே சிந்தித்து, தங்களுக்கு நன்மை அளிப்பதைச் சிறந்வர்களாக்குவார்கள்; வீரம் மிக்க பிள்ளகளுக்குத் தாயாக விளங்குவார்கள்; ஆனால் மடத்தில் படிக்கும் பெண்களுக்கு பதினைந்து வயதாகும்வரை, பெற்றோர் அவர்களில் திருமணம் பற்றி நினைக்கவும் கூடாது என்பது காட்டாய நியதியாக இருக்க வேண்டும்.’

சீடர்: ‘அப்படியென்றால் அந்தப் பெண்களுக்குச்சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. அவர்களை யாரும் திருமணம் செய்து கொள்ளவும் மாட்டார்கள்.’

சுவாமிஜி: ‘ஏன் மாட்டார்கள்? நீ இன்னும் நம் சமுதாயத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவில்லை. படித்த, நல்ல பண்புகளோடு கூடிய இந்தப் பெண்களுக்குக் கணவன் கிடைக்கவில்லை என்று ஒருபோதும் வராது. “தசமே கன்யகாப்ராப்தி:-பத்து வயதில் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்” என்றெல்லாம் சாஸ்திரங்கள் கூறுவதை இப்போதும் யாரும் பின்பற்றவில்லை. இனியும் பின்பற்ற மாட்டார்கள். நீ அதைப் பார்க்கவில்லையா?’

சீடர்: ‘நீங்கள் என்ன சொன்னாலும் ஆரம்பத்தில் இதற்கு நிச்சமாகப் பயங்கர எதிர்ப்பு இருக்கும்.’

சுவாமிஜி:’இருக்கட்டுமே! அதற்கு ஏன் பயப்பட வேண்டும்? உண்மையான துணிவோடு துவக்கப்படும் நல்ல - காரியங்களுக்கு ஏற்படும் எதிர்ப்புகள், அதை ஆரப்பிப்பவர்களின் ஆற்றலைத்தான் அதிகமாக்கும். தடைகளையோ எதிர்ப்புகளையோ சந்திக்காத காரியங்கள், மனிதர்களை மரணத்தின் பாதைக்கே அழைத்துச் செல்லும். போராட்டம்தான் வாழ்க்கையின் அடையாளம், புரிகிறதா?’

Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக