புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10ஆனால் நம்மால் முடியும்.   Poll_m10ஆனால் நம்மால் முடியும்.   Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனால் நம்மால் முடியும்.

Page 1 of 2 1, 2  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 30, 2011 11:57 am

ஆனால் நம்மால் முடியும்.   Images?q=tbn:ANd9GcR2C3TXBGGYD1jQr91PwbHgqhZMdozoqJ4euDoSnwDMEtYhVk2wGw

உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்திருந்த நேரம். இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான இளைஞர்கள் ஏதோ இந்தியா தனது பிறவிப் பயனை அடைந்துவிட்டதாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் என்று சொல்லி அவர்களை மட்டும் தனிமைப் படுத்திவிடவும் முடியாது. ஆறிலிருந்து அறுபது வரைக்கும் என்றும்கூட சொல்லிவிட முடியாது. எண்பதைக் கடந்துவிட்ட, கிரிக்கெட்டை அதிகமாய் நக்கலடிக்கிற, எனது தந்தைகூட ”என்னடா ஜெயிச்சுட்டாய்ங்களா?” என்று கேட்டு இந்தியாவின் வெற்றியயைத் தனது பேரனோடு கொண்டாடுகிறார். டோனி அடித்தப் பந்து காற்றிலே பறந்து ஒன்று, இரண்டு, மூன்று,... ஆறாக எல்லைக் கோட்டையும் காற்றிலேயேக் கடந்ததுதான் தாமதம் என் பையன் எனக்கு மிட்டாய்த் தருகிறான். எவ்வளவு முன்னேற்பாடு பாருங்கள். கடந்த தீபாவளி அன்றுகூட எங்கள் ஊரில் இவ்வளவு பட்டாசுகளும் வான வேடிக்கைகளும் இல்லை. இரண்டு மணி நேரத்துக்கு வானத்தை வண்ண வண்ணமாய் கலங்கடித்து விட்டார்கள்.

“ ஒரு வருஷம் ரெண்டு வருஷமா. இருபத்தியெட்டு வருஷக் கனவாச்சே?” கலங்கக் கலங்க அவனது நண்பனிடம் உருகுகிறான் பதினேழே வயதான கிஷோர்.

எனது தந்தை வைத்தக் கண்ணை எடுக்காமல் தொலைக் காட்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. “ பதினோரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிற விளையாட்டுன்னு ஷா சரியா சொன்னாண்டா“என்று கிரிக்கெட்டை கேவலமாகப் பேசும் என் அப்பா அரை இறுதி ஆட்டத்தையும் இறுதி ஆட்டத்தையும் பந்து வீணாகாமல் ரசித்துப் பார்க்கிறார். என்ன ரசாயன மாற்றம் நடந்தது. செய்தியைத் தவிர வேறு எதையும் தொலைக் காட்சியில் பார்க்காத அப்பா எப்படி இப்படி ஆனார்?

ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே இதற்கு விடை கிடைத்தது.

“ இந்த தோனிப் பயலுக்கு ஒரு மெயில் அனுப்பனுண்டா” என்று உற்சாகமாய் சொல்லிக் கொண்டே என்னிடம் வந்தார். அடக்க முடியாமல் கேட்டே விட்டேன், “ ஏம்ப்பா, என்ன ஆச்சு உங்களுக்கு?”

“ இது விளையாட்டில்லடா, போர். ஜெயிச்சிருக்கோம். சும்மா இல்ல, அரை இறுதியில பாகிஸ்தான. அதக்கூட விடு, அது அந்த நாட்டுக்கு நாம கொடுத்த செய்தி. பைனல் நமக்கும் அவனுக்குமான யுத்தம். ஒண்ணர லட்சம் பேத்தக் கொன்னு நம்ம இனத்தையே அழிச்சவன ஜெயிச்சிருக்கோம்” கொஞ்சம் மிரண்டே போனேன். இவ்வளவு நீளமாய் விடாமல் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. உணர்ச்சிப் பிழம்பாய் மாறிப் போயிருந்தார்.

" நம்ம அப்பாவா இது?.” வீட்டிலிருந்த அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. யாரும் அப்பாவை இந்த நிலையில் பார்த்ததில்லை. கொத்து கொத்தாக் கொன்னு குவுச்சுட்டானுங்களே” என்பது மாதிரி அவ்வப்போது புலம்பிக் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, நமது இனத்தை அழித்தவனை நம்மால் ஒன்னும் செய்ய இயலவில்லையே என்ற அவரது ஏமாற்றத்தை, ஆற்றாமையை ஆதங்கத்தை ஏறத்தாழ லட்சம் பேர் நேரடியாகவும் , பல கோடி பேர் மறை முகமாகவும் பார்த்துக் கொண்டிருக்கும் போது தோனி துவைத்துத் துவைத்துத் தோற்கடித்ததைப் பார்க்கப் பார்க்க ஏதோ தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கை ராணுவத்தையே நமது பிள்ளைகள் மட்டையும் பந்தும் கொண்டு சின்னா பின்னப் படுத்தியதாய் ஒரு மகிழ்ச்சி.

” லட்சம் துப்பாக்கிய வச்சிருக்கிற ராணுவம் செய்யாதத ரெண்டு பேட்டையும் ஒரு பந்தையும் வச்சு தோனி சாதிச்சுட்டான்ல தாத்தா,” உணர்ச்சி வசப்பட்டு அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நானே பயந்து கொண்டிருந்தால் கிஷோர் குறுக்கேப் புகுந்து அவரை உசுப்பி விடுகிறான். இதைக் கேட்டதும் பேரனோடு கை குலுக்கி ஆமோதிக்கிறார்.

“அப்பா இது விளையாட்டுப்பா. இதுக்குப் போயி இப்படி டென்ஷனாகுறீங்களே,” என்று முடிக்கக் கூட இல்லை,” இந்தக் கம்யூனிஸ்டுகளே இப்படித்தாண்டா கிஷோர். அதனாலதான் அவங்களுக்கு தேச பக்தியப் பத்தி அத்வானியெல்லாம் வகுபெடுக்கிறான் ,” என்று சீறவே ஆரம்பித்துவிட்டார். அவ்வளவுதான் வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு என்னையோ நான் எனது சொந்தக் கட்சியாய் மதித்து ஏறத்தாழ சார்ந்து வாழ்கிற கட்சியையோ யார் கிண்டலடித்தாலும் சிரிப்பு வரும். விடுங்கள் நாடே சிரிப்பாய் சிரித்துக் கிடக்கிறபோது நம்ம வீட்டில் நம்மை வைத்து கொஞ்சம் சிரித்தால் குறைந்தா போய்விடும்.

கொஞ்சம் வெப்பம் தனிந்தவராய் என்னிடம் வந்து அமர்ந்தார். எப்படி அவரிடம் தொடங்குவது என்று தெரியவில்லை.

“ அப்பா, மேச்ச முழுசாப் பார்த்தீங்களாப்பா?”

“ அந்தப் புள்ளையாண்டான் தோனி கடேசியா அடிச்ச ஆறு வரைக்கும் பார்த்தேன். அதுக்கு என்ன?”

“யார் யாரெல்லாம் மேச்சப் பார்த்தாங்கப்பா?”

“ இந்தச் சின்னப் புள்ள ராகுல் , அவன் எப்படி குதூகலமா இந்த வெற்றியக் கொண்டாடினான் தெரியுமா?”

”அப்புறம்?”

“ஏன், சோனியா, நின்னுக்கிட்டே கூட பார்த்துச்சே. எந்த வித்தியாசமும் இல்லாம எல்லோருக்கும் கையக் கொடுத்து மகிழ்ச்சியப் பகிர்ந்துகிச்சே”

வளர்க்க விரும்பாமல் நேரடியாய்க் கேட்டேன்,” ராஜ பக்‌ஷே உக்காந்திருந்தாரே பார்த்தீங்களாப்பா?”

“ ‘உக்காந்திருந்தாரே’ என்னடா?, உக்காந்திருந்தான். அவனுக்கெல்லாம் மரியாதைக் கொடுத்துக்கிட்டு”

”சரிப்பா, உக்கார்ந்திருந்தானே ,பார்த்தீங்களா?”

“ம்.. , பார்த்தேன்”

ஆனால் நம்மால் முடியும்.   Sss

“ அப்புறம் எங்கப்பா நீங்க ஜெயிச்சீங்க?”

ரொம்பவும் உணர்ச்சி வசப் பட்டுவிடுவாரோ என்று பயந்து கொண்டேதான் சொன்னேன். நல்ல வேலையாக அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. எதையும் காது கொடுத்து அமைதியாக, உணர்ச்சி வசப்படாது விவாதிக்கும் பழைய அப்பாவாக மாறிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்த்தது. ஆனாலும் விட்டுக் கொடுக்காமல்தான் பேசினார்.

“அதுக்கென்ன இப்ப அவுனுங்க கிழ்ந்து சின்னா பின்னமான கண்றாவிய அவன் நேர்ல பார்த்ததே ஒரு தண்டனைதானேடா?”

“இல்லப்பா, இதே இறுதி ஆட்டம் லண்டன்ல நடந்திருந்தா ராஜ பக்‌ஷே அங்கப் போய் உட்கார்ந்து இந்த ஆட்டத்தப் பார்த்திருக்க முடியாது தெரியுமா?”

”அதெப்படி?”

" அங்கிருக்கும் தமிழர்கள் அனுமத்திருக்க மாட்டார்கள்”

”அவங்களால என்ன செய்ய முடியும்?”

“செஞ்சாங்களே, இதே ராஜபக்‌ஷேவை லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்று உரையாற்ற அழைத்திருந்தது. இவரும் போனார். ஆனால் கடும் பனியையும் பொறுத்துக் கொண்டு ஒன்று திரண்டு, ஒரு போர்க் குற்றவாளியை, ஒரு லட்சத்திற்குமதிகமான மக்களைக் கொன்று குவித்த கொலைக் குற்றவாளியை இந்த மண்ணில் பேச அனுமதிகக்கூடாது என்று போராடவே நியாயம் உணர்ந்த இங்கிலாந்து அரசு அவரை உடனே வெளியேறச் சொன்னது. அவரும் உயிருக்கு பயந்து பேசாமலே ஓடிப் போனார்”

“ஆஹா”

“ செத்துப் போன பார்வதியம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போன, இழவுக்குப் போன திருமாவளவனையே அனுமதிக்காம திருப்பி அனுப்பின ராஜ பக்‌ஷேவ நாம நாற்காலி போட்டு கௌரவமா உக்கார வச்சு ஆட்டத்தப் பார்க்க அனுமதித்து இருக்கோம். இப்ப சொல்லுங்க”

எதுவும் பேசவில்லை அவர்.சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் எழுந்து தூங்கப் போய்விட்டார். நானும் வலைகளை மேயப் புறப்பட்டேன்.

ஆனால் நம்மால் முடியும்.   Tnf

யார் வலை என்று சரியாய் ஞாபகமில்லை அநேகமாக ஹேமாவின் வலையாக இருக்கவேண்டும். ஒரு செய்திப் பார்த்து அதிர்ந்தேன். ஒருக்கால் உலகக் கோப்பையை இலங்கை வென்றிருந்தால் அந்த வெற்றியை போரில் தமிழர்களைக் கொன்று குவித்த ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க இருந்தார்களாம். என்னக் கொடுமை இது. அந்நிய நாட்டை அல்லது எதிரிகளை விரட்டி அடித்து வெற்றி கொண்ட ராணுவ வீரர்களுக்கு என்றால் நாமும் வணங்கி வரவேற்கலாம். சொந்த மண்ணில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சொந்த மக்களை கொன்று குவித்து அட்டூழியம் செய்த ஒரு கும்பலுக்கு அர்ப்பணம் செய்ய இருந்த்த ஒரு தலைவனை
அலங்கார நாற்காலி போட்டு அமரவைத்து ஆட்டத்தைப் பார்க்க அனுமதித்திருக்கிறோம்.

மட்டுமல்ல, உலகக் கோப்பையை இலங்கை தோற்றதை அல்லது இந்தியா வெற்றி பெற்றதை தாங்க முடியாமல் கொதிப்படைந்து நான்கு தமிழக மீனவர்களைக் கொன்று போட்டிருக்கிறார்கள் என்றால் அந்தக் கோப்பை என்ன எங்கள் நான்கு மீனவர்களின் உயிர்களை விடப்பெரிதா? சரியா, தவறா என்றெல்லாம் தெரியாது. அது பற்றியெல்லாம் எனக்கு கவலையுமில்லை.ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது மண்ணின் நான்கு மீனவர்களின் உயிரென்பது எந்தக் கோப்பையையும் விடப் பெரியது.

அதைவிடக் கொடுமை இந்த நான்கு பேரின் கொலை பற்றி உடனே தெரிய வந்திருந்தும் தேர்தல் முடியும் வரைஇந்த செய்தியைக் கசியவிடாமல் பார்த்துக் கொண்டார்கள் என்பது மட்டும் உண்மையாக இருப்பின் அதை அந்த நான்கு கொலைகளைவிடவும் பெரியக் குற்றமாய்தான் என்னால் பார்க்க முடியும்.

ஆனால் நம்மால் முடியும்.   Mul

முள் வேளியில் விலங்குகளைவிடக் கேவலமாய் நடத்த்ப் படும் மக்களை, தேவைப் படும் போதெல்லாம் அவர்களைக் கேவலமாக நடத்தி அதைப் பார்த்து மகிழ்ந்து களிகூறும் கயவர்களை, நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாதா?

தமில் இனமே இல்லாது போகவேண்டும் என்பதை எழுதாத இலக்காகக் கொண்டுள்ளனர் என்று வருகிற செய்தியும், அதற்காக தமிழ் உவதிகளை சிங்கள ஆண்களைக் கொண்டு வன்புணரச்செய்து, அவர்களைக் கர்ப்பமாக்கும் அட்டூழியம் தொடர்கிறது என்றும் வருகிற செய்திகள் உண்மையாய் இருப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. நானும், சுத்தத்தை கட்டுடைத்து கலப்புகளை எதிபார்க்கும் பெரியாரை நேசிப்பவன் தான். ஆனால் இந்தக் கலப்பு அசிங்கமானதும், அயோக்கியத் தனமானதும் ஆகும். நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதா?

இப்போது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. உறுப்பு நாடுகள் கோரிக்கை வைத்தால் ராஜ பக்‌ஷேவை சர்வதேசக் குற்றவாளியாக நிறுத்தி விசாரிக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கிமூன் சொல்கிறார். ரஷ்யா, சீனா, பொன்ற நாடுகள் கூட இது விஷயத்தில் நேர்மையாக நடந்துகொள்ளும் என்று எதிர் பார்க்கமுடியாது. காரணம் இந்தப் பாவத்தில் நிச்சயம் அவர்களுக்கும் பங்கு உண்டு.

இந்தியாவின் நிலையும் அதுதான்.பாவத்தில் பெரும் பங்கு இந்தியாவினுடையது. எனவே இந்தியாவும் இந்தக் கோரிக்கையை முன்னெடுக்காது.

எனில் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதா?

ஐ.னா சபையின் அறிக்கையை குப்பைக் கூடையில் போடுவேன் என்று ஒரு இலங்கை அமைச்சர் கொக்கரிக்கிறார்.

நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா?

நாமென்ன செய்வது?

வேறென்ன, முதலில் ஒன்று சேர்வது.

ஒன்று சேர்ந்து?

இந்திய அரசை கோரிக்கையை முன்னெடுக்க வைப்பது.

“அது என்ன அவ்வளவு சுலபமா?”

”சுலபமல்லதான்”

”அப்புறம்?”

ஆனால் நம்மால் முடியும்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஆனால் நம்மால் முடியும்.   38691590

இரா.எட்வின்

ஆனால் நம்மால் முடியும்.   9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 30, 2011 2:18 pm

இரா.எட்வின் wrote:

சேர்த்துக் கொள்கிறமாதிரி சரியான தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் சேர்த்து செழுமைப் படுத்திக் கொள்ளலாம்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஆனால் நம்மால் முடியும்.   38691590

இரா.எட்வின்

ஆனால் நம்மால் முடியும்.   9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 30, 2011 8:13 pm

அவசியம் பார்க்கப் படவேண்டும் என்பதால் படங்களோடு மீண்டும் இணைத்துள்ளேன்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஆனால் நம்மால் முடியும்.   38691590

இரா.எட்வின்

ஆனால் நம்மால் முடியும்.   9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:56 pm

நூறாவது பார்வையாளனாக நானே. ஆனாலும் நூறு பார்வையாளர்களைக் கடந்தும் ஒருவரும் கருத்து சொல்லவில்லை.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஆனால் நம்மால் முடியும்.   38691590

இரா.எட்வின்

ஆனால் நம்மால் முடியும்.   9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 7:57 pm

நூறாவது பார்வையாளனாக நானே. ஆனாலும் நூறு பார்வையாளர்களைக் கடந்தும் ஒருவரும் கருத்து சொல்லவில்லை.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஆனால் நம்மால் முடியும்.   38691590

இரா.எட்வின்

ஆனால் நம்மால் முடியும்.   9892-41
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 03, 2011 8:31 pm

இலங்கை அணியின் வீழ்ச்சியை நேரில் கண்டுவிட்டு சொல்லிக் கொள்ளாமல் அதிபர் ஓடியதே போதும்.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 8:33 pm

மகா பிரபு wrote:இலங்கை அணியின் வீழ்ச்சியை நேரில் கண்டுவிட்டு சொல்லிக் கொள்ளாமல் அதிபர் ஓடியதே போதும்.

பார்க்க விட்டுருக்கிறோமே

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஆனால் நம்மால் முடியும்.   38691590

இரா.எட்வின்

ஆனால் நம்மால் முடியும்.   9892-41
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 03, 2011 8:42 pm

மகா பிரபு wrote:இலங்கை அணியின் வீழ்ச்சியை நேரில் கண்டுவிட்டு சொல்லிக் கொள்ளாமல் அதிபர் ஓடியதே போதும்.
இது போதுமா மகா பிரபு சோகம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 8:52 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:இலங்கை அணியின் வீழ்ச்சியை நேரில் கண்டுவிட்டு சொல்லிக் கொள்ளாமல் அதிபர் ஓடியதே போதும்.
இது போதுமா மகா பிரபு சோகம்

புரியவில்லை தோழா

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஆனால் நம்மால் முடியும்.   38691590

இரா.எட்வின்

ஆனால் நம்மால் முடியும்.   9892-41
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 03, 2011 8:58 pm

என்ன செய்வது,
இராவணனை புனிதமானவனாக மதிக்கும் தமிழகம். அவனை அரக்கணாக பார்க்கும் வட இந்தியா. இராமனை விட இராவணன் சூழ்ச்சி, வஞ்சனை இல்லாதவன் என்பதை இராவணக் காவியம் காட்டுகிறது.
இதைப் போலத் தான்..........

தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக