புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
336 Posts - 79%
heezulia
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
8 Posts - 2%
prajai
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் முறை சரியில்லை - சோலை


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Apr 30, 2011 11:52 am


காஞ்சி மாநகரம்.

அண்ணாவைப் பெற்றெடுத்த பூமி.

இனவுணர்வுத் திருத்தலம்.

அந்தக் காஞ்சிப் பெருநகரம்... தேர்தல் என்று வந்தால் பறிபோய்விடுகிறது. ஆமாம்... முன்னரும் பா.ம.க.விற்குத்தான் தாரை வார்த்தனர். இப்போதும் அந்த புனித பூமி அந்தக் கட்சிக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது.

அந்தத் தொகுதியைக் கழகம் விட்டுக்கொடுக்க விரும்பவில்லைதான். ஆனால் அந்தத் தொகுதியில்லையேல் கூட்டணி இல்லை என்று பா.ம.க. தலைவர் படபடத்தார் என்று கேள்விப்பட்டோம்.

காரணம்... அந்தத் தொகுதி அவருடைய உறவினர் உலக ரட்சகனுக்குத் தேவை என்று. தேர்தலுக்கு முன்னர் இதே உலக ரட்சகனை அவர் செய்யாறு தொகுதி வேட்பாளராக்கி னார். அவரும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் செய்யாறு, செய்வது அறியாது திகைத்துப் போனது.

காரணம்... வெற்றி பெற்றவரை அதன்பின்னர் தொகுதி மக்கள் அத்தி பூத்தாற்போல்தான் கண்டுகளித்தனர்.

செய்யாறு -புலவர் கோவிந்தன் கட்டிக் காத்த கழகக் கோட்டை.

ஆனால் அதன்பின்னர் கூட்டணி என்ற பெயரால் பறிபோய்க்கொண்டே இருக்கிறது. சென்ற தேர்தலில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நின்றார். கழகத் தொண்டர்கள் உயிர் கொடுத்து அவரை வெற்றிபெற வைத்தனர்.

அதன்பின்னர் அந்த சட்டமன்ற உறுப்பினர் அரிதாகக் காணப்பட்டார். ஆனால் பஞ்சாயத்து யூனியன் பி.டி.ஓ.க் களை அவர் தவறாது சந்தித்து வந்தார். ஒருவேளை மாதம் ஒருமுறை தொகுதி நிலவரம் அறியத் துடித்துப் போயிருக்க லாம்.

அந்தத் தொகுதியின் மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு. அவர்தான் உணவு அமைச்சர். அவரும் அந்த காங்கிரஸ் வேட் பாளர் வெற்றிக்காக அரும்பாடுபட்டார்.

ஆனால் வெற்றிபெற்று சட்டமன்றம் வந்த அந்த வேட்பாளர் எப்படி முழங்கி னார் தெரியுமா? தி.மு.க. ஆட்சியில் அரிசிக் கடத்தல் அபரிமிதம் என்றார். இந்தக் குற்றச்சாட்டை அவர் இன்னும் விரிவாக வே கூறினார். திருவண்ணாமலை மாவட் டமே திகைத்துப் போய்விட்டது. அவர் நன்றிக்குச் சந்நியாசம் கொடுத்தார்.

ஆனால் அதனைவிடக் கொடுமை என்ன தெரியுமா? அவரே தான் நடந்து முடிந்த தேர்தலிலும் செய்யாறு தொகுதி வேட்பாளர். கழகத் தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். ஆனாலும் அவரும் வெற்றி பெற வேண்டும் என்று அறிவாலயம் சவுக்கைச் சுழற்றியது

எதற்காக இதனைக் கூறுகிறோம்? கூட்டணி என்றால் கழகக் கோட்டைகளைக் காலி செய்து தரவேண்டுமா? நன்றிக்கு இலக்கணம் தெரியாதவர்களைத் தொண்டர்கள் தூக்கிச் சுமக்க வேண்டுமா?



காஞ்சி - கழகக் கோட்டை. பறிபோய்விட்டது.

செய்யாறு - கழகத்தின் அரண். பறிபோய்விட்டது.

மொடக்குறிச்சி என்றால் சுப்புலட்சுமி ஜெகதீசன் நினைவிற்கு வருவார். அந்தத் தொகுதியும் பறிபோய்க் கொண்டே வருகிறது.

தேர்தலுக்குத் தேர்தல் இதேநிலை என்றால் கழகம் மெலிந்துபோகும். இதுவரை பா.ம.க.விற்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளை உற்றுப்பாருங்கள். தொண்டர்கள் துவண்டுவிட்டனர். கழகமும் வளரவில்லை. அரசியல் ரீதியாகப் பா.ம.க.வும் வளரவில்லை. பொறுப்புக்கு வந்த பலர் வளர்ந்திருக்கிறார்கள்.

இரும்பைக் காய்ச்சிக் காதுகளில் ஊற்றியதுபோல் எரிச்சல்தரும் பிரச்சாரம். கருணாநிதிக்கு ஆளவே தெரியவில்லை என்றார்கள். அவருடைய ஆட்சிக்குப் பூஜ்யம் மார்க் என்றார்கள். இனி விலாசத்தைக் காத்துக்கொள்ள கோபாலபுரம் போயே ஆகவேண்டும் என்ற நிலை வருகிறது. கருணாநிதியைப் போல் இன்னொருவர் ஆள முடியுமா என்கிறார்கள். அவருடைய ஆட்சிக்கு மக்கள் 100 மார்க் போடுகிறார்கள் என்கிறார்கள். இதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? காற்றடிக்கும் திசை பார்த்துப் பயணம் போகிறவர்கள் நல்ல அரசியல் வியாபாரிகள்தானே? ஆனால் அதுதான் இன்றைக்கு கூட்டணிக் கோட்பாடு என்ற அவல நிலை உருவாகி வருகிறது.

தொகுதியும் கேட்கிறார்கள். திருவிழாச் செலவிற்குக் கவனிக்கச் சொல்கிறார்கள். வாகனத்தையும் கொடுத்து பெட்ரோலும் போடவேண்டியிருக்கிறது. அவர்கள் என்ன அன்னக்காவடிகளா? டெல்லியில் பத்தாண்டுகள் வளமான இலாகாக்களோடு பரிபாலனம் செய்தவர்கள் தான். கூட்டணி என்பது எரிகிற வீட்டில் அள்ளிக் கொள்வது ஆதாயம் என்று இலக்கணம் வகுக்கிறார்கள்.

சென்னையை அடுத்த வண்டலூர் ஒரு மைனர் பஞ்சாயத்து. ஊராட்சித் தேர்தலில் பா.ம.க. போட்டியிட்டது. எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் ஆராவமுதன் வெற்றி பெற்றார். பா.ம.க.விற்கு டெபாசிட் போனது. ஆனால் இன்றைக்கு அதே வேட்பாளர்தான் செங்கல்பட்டு தொகுதி பா.ம.க.வேட்பாளர். தி.மு.க. தூக்கிச் சுமந்தது.

அநியாயமாக 63 தொகுதிகளைக் காங்கிரஸ் கட்சிக்குத் தி.மு.கழகம் ஒதுக்கித் தந்தது. அதன் வெற்றிக்குக் கழகத் தொண் டர்கள் வியர்வை சிந்தி வேலை செய்தனர். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடிக்க காங்கிரஸ்காரர்களே வேலை செய்தார்கள். ஒளிவு மறைவு இல்லை. பலப்பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள்.

சென்னையில் ஒரு காட்சி. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். ஆனால் கைச் சின்னத்தில் அந்தக் காங்கிரஸ் வேட்பாளருக்கு மட்டும் ஓட்டுப் போட்டுவிடாதீர்கள் என்று வீடு வீடாகப் பிரசாதம் வழங்கினார்கள். அன்பளிப்பு வீட்டிற்கு ஆயிரம் ரூபாய். அப்படிக் கொடுத்த வர்கள் அசல் காங்கிரஸ்காரர்கள்தான். கட்சி வெற்றி பெறவேண்டும் என்ற சிந்தனை எந்தக் காங்கிரஸ்காரருக்கும் இல்லை.



தேர்தல் முடிந்தாலும் தங்கபாலு உருவ பொம்மை எரிப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என்றைக்கு முடியும் என்று தெரியவில்லை. கூட்டணி என்றால் இத்தகைய கட்சிகளுடனும் கை குலுக்க வேண்டும்.

இந்த முறை தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்துகொண்டது. வரவேற் கிறோம். ஆனால் அதற்காக ஆயிரமாயிரம் வட இந்திய காவலர்களையும், துணை ராணுவத்தினரையும் இறக்குமதி செய்து எமர்ஜென்ஸி சூழ்நிலையை உருவாக்கியிருக்க வேண்டியதில்லை.

தமிழகத்தில் இதுவரை வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதில்லை. துப்பாக்கிச் சூடு, தடியடி நடை பெறும் அளவிற்கு வன்முறைகள் நடந்ததில்லை. ஆனாலும் கெடு பிடிகள் அனந்தம். வாக்குப்பதிவு முடிந்ததும் அ.தி.மு.க. பிரதிநிதி நேரில் சென்று தேர்தல் ஆணையருக்கு நன்றி சொன்னார்.

அறத்தின் வலிமை வலுவிழந்துவிடக்கூடாது. எவரும் தர்மத்தின் கோடுகளைத் தாண்டக்கூடாது என்று கண்டிப்புச் செய்வது நியாயம்தான். ஆனால் அந்த நியாயம் அனைவருக்கும் பொருந்தும்படியாக இருக்கவேண்டும்.

அமருகின்ற நீதிபதிகளில் இரண்டொருவர் வேறுபட்டாலும் நீதியா கிடைக்கும்? கறுப்பு ஆடுகள் எங்கும் நுழையவே செய்கின்றன.

எனவே இன்றைய தேர்தல் முறையில் மாற்றம் தேவை. அத்தகைய மாற்றம் வரும்போது கூட்டணி வியாபாரத்திற்கு வழி இருக்காது. ஆணையங்களின் தர்பாருக்கும் அவசியம் இருக்காது. வாக்குச் சீட்டுகளை விலை பேசமாட் டார்கள்.

ஆனால் தமிழகத்தில் அந்தக் கலைக்கு அடித்தளம் அமைத்ததே அ.தி.மு.கழகம்தான். அதன் ஆட்சியின்போது காஞ்சியிலும், கும்மிடிப்பூண்டியிலும் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில்தான் வாக்குச் சீட்டுக்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டன.

அதன் பின்னர் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பின் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலிலும் முதன்முதலாக வாக்குச் சீட்டுகளை விலை பேசியது அ.தி.மு.க.தான். முதலில் யாரிடம் கிராமவாசிகள் பணம் வாங்குகிறார்களோ அவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பார்கள் என்று வியாபாரத்தை முன்னதாக ஆரம்பித்ததே அந்தக் கழகம்.

தேர்தலை எப்படி சந்திப்பது என்று திகைத்துப் போயிருந்த தி.மு.க.விற்கு வழி தெரிந்தது அ.தி.மு.க. காட்டிய வழிதான்.

இந்தத் தொற்றுநோய் வங்கத்திலும் பரவிவிட்டது. அங்கு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காகப் பணம் கொடுத்ததாகவும், அதில் அந்தக் கட்சி எம்.பி. ஒருவர் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டதாகவும் எல்லா ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறது. வாக்குச் சீட்டு வியாபாரச் சூறாவளியிலிருந்து எவரும் தப்ப முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறாரோ அதே ஆயுதத்தை நாமும் எடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கட்சி உட்பட எல்லா கட்சிகளும் கருதுவது இயல்புதான். போர்க்களத்தில் ஆயுதங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

இங்கே தமிழகத்திலும் தி.மு.க. பாசறையில் தான் பணம் விளையாடியது என்று கூறமுடி யாது. பத்து விரல்களும் தேயும் அளவிற்கு அ.தி.மு.க.வினரும்தான் காந்தி நோட்டுகளை எண்ணி எண்ணிக் கொடுத்தனர். எனவே பணம் விளையாடுவதைத் தடுக்க வேண்டுமானால் தேர்தல் முறையில் மாற்றம் தேவை.

அந்த மாற்றம் விகிதாச்சார தேர்தல் முறையாகும். அமெரிக்கா, ஜெர்மனி, போர்ச்சுக் கல், ஆஸ்திரேலியா, ரஷ்யா, டென்மார்க், இலங்கை... இன்னும் 80 நாடுகளில் இந்த முறை உண்டு.

அண்மையில் மன்னராட்சியை ஒழித்து நாடாளுமன்றத் தேர்தல் முறை கண்ட நேபா ளத்திலும் விகிதாச்சார தேர்தல் முறைதான்.

ஒவ்வொரு கட்சியும் எத்தனை சதவிகித வாக்குகள் பெறுகிறதோ, அதற்கு ஏற்ப சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் அத்தனை இடங்கள் பெறும். இந்த முறையில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள்.

மன்றத்தில் அமர வேண்டிய உறுப்பினர்களின் பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் அளித்திட வேண்டும்.

இப்போது கூட்டணி என்ற பெயரால் ஜனநாயகம் சோதனைக்கு உள்ளாகிறது. ஜாதி கள் கூத்தாடுகின்றன. பண பலம் தேர்தலைத் தீர்மானிக்கிறது. இத்தகைய எல்லாத் தீமைகளையும் ஒழிக்க விகிதாச்சாரத் தேர்தல் முறைதான் நமக்குப் பொருத்தமாக இருக்கும். அண்ணாவின் காஞ்சியும் பறிபோயிருக் காது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக