ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

97 வயது மகிழ்ச்சி!

3 posters

Go down

97 வயது மகிழ்ச்சி! Empty 97 வயது மகிழ்ச்சி!

Post by selvak Sun Sep 06, 2009 5:39 pm


97 வயது மகிழ்ச்சி!


97 வயது மகிழ்ச்சி! DR.hinohara

97 வயது நான்கு மாதங்கள் ஆகிறது மேலே நீங்கள் படத்தில் பார்க்கும்
ஜப்பானிய டாக்டருக்கு.
உலகிலேயே நீண்ட வருடங்கள் மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களில் அவரும் ஒருவர்.மருத்துவக் கல்வி பயில்விக்கும் கல்வியாளராகவும் இருப்பவர்.
அவரது பெயர் Dr.Shigeagi Hinohara. தமிழில் அதை நான் அச்சிட்டால் இப்படி வருகிறது .டாக்டர்.ஷிகியேகி ஹிநொஹர.(அந்த அரும் பெரும் முதியவர் என்னை மன்னிப்பாராக)
டோக்கியோவில் இருக்கும் St.Luke அகில உலக மருத்துவமனையில் 1941 ம வருடத்தில் இருந்து அவரது மாயக் கரங்கள் பட்டுக் குணமானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இரண்டாம் உலகப் போரில் சிதிலமடைந்த டோக்கியோ நகரில் உலகத் தரம் வாய்ந்த ஒரு மருத்துவ மனையையும் ,மருத்துவக் கல்லூரியையும் நிறுவ வேண்டும் என்ற தனது கனவை கடின உழைப்பினால் அவரே நிறைவேற்றினார்.
இன்று அந்த இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் டாகடர் 150 புத்தகங்களுக்கும் மேலே எழுதி மற்றவர்களுக்கு ஒளிகாட்டி இருக்கிறார்.

பல லட்சம் பிரதிகள் விற்றிருக்கும் ''Living Long,Living Good'' என்ற டாக்டரின் புத்தகத்தில் இருந்து நாம் பயன் பெறச் சில வழிகாட்டல்கள்...

'நன்றாகஇருக்கிறோம்' என்றஉணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேறெங்கும் போக வேண்டாம்,நமது குழந்தைப் பருவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.
குதித்துக் களித்து விளையாடிய போது எத்தனை முறை உண்ணாமலேயே இருந்திருப்போம்.தூக்கத்தையே மறந்து ஆடித் திளைத்திருப்போம்.ஆனால் அப்போது குழந்தைகளாக இருந்த பொழுது பொங்கிய சக்தி இப்போது வேளா வேளைக்கு உண்டு,உறங்கும் நம்மிடம் இருக்கிறதா?நிச்சயம் இல்லை.
எனவே பெரியவர்களான பின்னும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் குழந்தை மனோபாவத்தை இழந்து விடாதீர்கள்.
நேரத்துக்கு மதிய உணவு,நேரத்துக்குத் தூக்கம் என்ற வெற்றுக் கட்டுப் பாடுகளால்தான் உடல் களைப்படைகிறது.உடல் நலம் என்பது வெறும் விதிகளால் பேணப் படுவதல்ல.

மதம்,மொழி,நாடு,இனம்எல்லாவற்றையும்கடந்தஒருஉண்மை என்னவென்றால் அதிக நாள் உயிர் வாழ்பவர்கள் எல்லாம் அதிக உடல் எடை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே.
எனது காலை உணவு காஃபி,ஒரு டம்ளர் பால், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து ஆரஞ்சுச் சாறு
ஆலிவ் ஆயில் ரத்தக் குழாய்களின் நலத்துக்காகவும்,தோலின் பொலிவுக்காகவும்.
மதியம் பாலும்,கொஞ்சம் பிஸ்கட்டுகள் மட்டுமே.அதுவும் வேலை மிகுதியாக இருந்தால் மதியச் சாப்பாடே நான் உண்ணுவதில்லை.வேலையில் முழுக் கவனமும் செலுத்தும் போது எனக்குப் பசியே எடுப்பதில்லை.
இரவு காய்கறிகள்,ஒரு துண்டு மீன், சாதம்.
வாரத்துக்கு இரண்டு முறை கொழுப்பற்ற நூறு கிராம் இறைச்சி.

அடுத்து,எதையுமேமுன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
2014 வரை எனது பணிகள் என்னவென்று என்னால் திட்டமிடப் பட்டு விட்டன.அதில் எனது கேளிக்கையும் அடங்கும்,2016ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ்தான் அது!

பணிஓய்வுஎன்பதற்கு அவசியமே இல்லை.அப்படிக் கண்டிப்பாகத் தேவை என்றால் 65வயது தாண்டிய பிறகு யோசிக்கலாம்.

உங்களுக்குத்தெரிந்ததைப்பகிர்ந்து கொள்ளுங்கள்.நான் வருடத்துக்கு 150 விரிவுரைகள் ஆற்றுகிறேன்.60 முதல் 90 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறேன்,உடல் பலத்தைப் பெருக்குவதற்காக நின்று கொண்டு!
selvak
selvak
பண்பாளர்


பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by selvak Sun Sep 06, 2009 5:41 pm




[b][b][b]உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பரிசோதனையையோ,அறுவைச் சிகிச்சையையோ பரிந்துரைத்தால் அவரிடம் நீங்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்.
'உங்கள் கணவருக்கோ,மனைவிக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ இதே சிகிச்சையைப் பரிந்துரைப்பீர்களா?' என்பதே அது.
பொதுவாக மக்கள் நம்பிக் கொண்டிருப்பதைப் போல எல்லோரையுமே டாக்டர்கள் குணப் படுத்தி விட முடியாது.
தேவை இல்லாமல் அறுவைச் சிகிச்சைகளுக்கும்,அவற்றின் வலிகளின் கொடுமைகளுக்கும் ஏன் ஆளாகிறீர்கள்? எனக்குத் தெரிந்து இசைக்கு நிறைய நோய்களைக் குணப் படுத்தும் ஆற்றல் இருக்கிறது,அதுவும் மற்ற மருத்துவர்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு.

உடல் நலத்துடன் இருக்க படிக்கட்டுக்களில் ஏறிச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் உங்கள் பொருட்களையும் நீங்களே சுமந்து செல்லுங்கள்.நான் என் தசைகள் வலுப் பெற எப்பொழுதும் இரண்டிரண்டு படிகளாகத்தான் ஏறிச் செல்கிறேன்.

எனக்கு உத்வேகம் அளிப்பது ராபர்ட் ப்ரௌனிங்கின் 'அப்ட் வொக்லர்' என்ற கவிதைதான்.எனது சிறுமைப் பிராயத்தில் எனது தந்தை எனக்கு வாசித்துக் காட்டியது.
சிறிய கிறுக்கல்களை விடப் பெரிய ஓவியங்களையே வரைய முயல வேண்டும் என்று அந்தக் கவிதை தூண்டுகிறது.
நாம் உயிரோடு இருக்கும் வரையிலும் போட்டு கொண்டே இருந்தாலும் முடிக்க முடியாத ஒரு மாபெரும் வட்டத்தை வரைய வேண்டும் என்கிறது அந்தக் கவிதை.நாம் பார்க்கப் போவதெல்லாம் அந்த வட்டத்தினுடைய ஒரு சிறிய வளைவையே.மீதி எல்லாம் நம் பார்வைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் தூரத்தில் அந்த வட்டம் பூர்த்தியாகத்தான் இருக்கிறது.

வலி என்பது ஒரு புரியாத புதிர்.வலியை மறப்பதற்கு ஒரே வழி நம் மனதை வேறு கேளிக்கைகளில் ஈடுபடச் செய்வதுதான்.பல்வலியால் வேதனைப் படும் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.அது வலியை மறந்து விட்டு உங்களுடன் விளையாட ஆரம்பித்து விடும்.எல்லா மருத்துவ மனைகளிலும் கேளிக்கை சாதனங்கள் இடம் பெற வேண்டும்.எங்கள் செயின்ட்.லியூக் மருத்துவ மனையில் இசை நிகழ்ச்சிகள்,விலங்குகள் மூலம் சிகிச்சை,ஓவிய வகுப்புக்கள் அனைத்தும் உண்டு.

பொருட்களைக் குவித்துக் கொண்டே போக வேண்டும் என்ற வெறியில் பைத்தியம் பிடித்து அலையாதீர்கள்.உங்கள் கணக்கு முடிந்து நீங்கள் போகப் போகும் அந்த இடத்திற்கு நீங்கள் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது.

மருத்துவ மனைகளின் அனைத்துப் பகுதிகளிலும் சிகிச்சை கொடுக்கும் வசதிகள் இருக்கும் படி அவை கட்டப் பட வேண்டும்.எங்கள் மருத்துவ மனையில் காரிடார்கள்,பேஸ்மென்ட்கள், சர்ச் ஹால் இப்படி எங்கு வேண்டுமானாலும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும்.அதனால்தான் தீவிர வாதிகளின் விஷ வாயுத் தாக்குதலில் பாதிக்கப் பட்டு ஒரே நேரத்தில் இங்கே அனுமதிக்கப் பட்ட 740 பேரில் 739 பேரை எங்களால் காப்பாற்ற முடிந்தது.

விஞ்ஞானத்தால் மக்கள் அனைவரையும் குணப்படுத்தவோ,மக்கள் அனைவருக்கும் உதவி புரியவோ முடியாது.அது மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகத்தான் பார்க்கும்,ஆனால் வியாதிகளோ தனித் தன்மைகள் கொண்டவை.ஒவ்வொரு மனிதனும் பிரத்தியேகமானவன்.அவனது நோய்கள் அவனது இதயத்தோடு தொடர்பு கொண்டவை.அதனால் ஒரு மனிதனின் நோய்களை அறிந்து கொள்ளவும்,அவற்றைக் குணப் படுத்தவும் வெறும் மருத்துவக் கலை மட்டும் போதாது.ஓவியம்,இசை போன்ற மற்ற கலைகளின் பங்களிப்பும் வேண்டும்.

வாழ்க்கை சம்பவங்களால் நிறைந்தது.நான் ஒரு முறை விமானத்தில் சென்ற போது அது தீவிர வாதிகளால் கடத்தப் பட்டு நான்கு நாட்கள் 40 டிகிரி வெப்பத்தில் கைகளில் விலங்குகள் மாட்டப் பட்டுப் பிணைக் கைதியாக இருக்க நேர்ந்தது.அந்தச் சூழ்நிலையிலும் ஒரு டாக்டராக எனது உடலில் நடைபெற்ற மாற்றங்களையே ஒரு பரிசோதனை போலக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எப்படி உடல் தனது இயக்கங்களையே மெதுவாக மாற்றிக் கொள்கிறது என்பதை உணர்ந்து வியந்து போனேன்.

நமக்கென்று ஒரு ரோல் மாடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவர்களை விடச் சிறப்பாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே நமது குறிக் கோளாக இருக்க வேண்டும்.பிரச்சினைகளைச் சந்திக்கும் போது அவற்றையே நமது ரோல் மாடல்கள் எப்படி அணுகுவார்கள் என்பதைச் சிந்தித்துச் செயலாற்றினால் எந்தப் பிரச்சினையுமே கையாள்வதற்கு எளிதாக இருக்கும்.

60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்.

நீண்ட நாட்கள் வாழ்வது ஒரு இனிமையான அனுபவம்.
இன்றும் ஒருநாளைக்கு 18 மணி நேரம் நான் உழைக்கிறேன்,அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசித்தபடியே.

- Dr.Shigeagi Hinohara
[/b][/b][/b]
selvak
selvak
பண்பாளர்


பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by மீனு Sun Sep 06, 2009 7:26 pm

மிக அருமையான தகவல் ..நன்றிகள்

நீண்ட நாட்கள் வாழ்வது ஒரு இனிமையான அனுபவம்.
இன்றும்ஒருநாளைக்கு 18 மணிநேரம்நான்உழைக்கிறேன்,அதன்ஒவ்வொரு நிமிடத்தையும்நேசித்தபடியே. மகிழ்ச்சி
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by VIJAY Wed Sep 09, 2009 12:35 pm

இது ஏன் இங்கு இருக்கிறது.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by மீனு Wed Sep 09, 2009 12:39 pm

அட பாவி.. படித்து பாருப்பா முதலில்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by VIJAY Wed Sep 09, 2009 12:41 pm

என் கேள்வி என்னன்னா இது ஏன் நகைச்சுவை பகுதியில் இருக்கிறது...???????


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by மீனு Wed Sep 09, 2009 1:04 pm

ஓஒ சாரி..அவரு கவனிக்காம போட்டு இருப்பார்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by VIJAY Wed Sep 09, 2009 1:07 pm

அது..... பாடகன்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by மீனு Wed Sep 09, 2009 1:19 pm

ரொம்ப தான் விஜய்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

97 வயது மகிழ்ச்சி! Empty Re: 97 வயது மகிழ்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» `60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள்
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது
» 4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum