ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

+2
ரபீக்
vikramsingh
6 posters

Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by vikramsingh Wed Apr 27, 2011 12:51 pm

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய
வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள்
மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி
துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.
தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப்
பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை
மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.
இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன்
அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும்
இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி
வரும் நிருபர்களிடம் பேசுகையில்,
நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73
டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள
நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள்
ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு
புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.
அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி
வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள்
ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட்
துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.
இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக
வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும்,
அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே
நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை
விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும்
காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை
எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.
தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம்
நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி
ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம்
சேர்த்துள்ளார்.
கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல்
அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை
வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து
அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.
அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர்.
வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள்
நடந்துள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.
இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா
பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக
ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.
இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன்
பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை
மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு
அதிர்ந்துள்ளனர்.
உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம்
என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது.
வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு
அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால்,
உலகம் தப்பும் என்கிறார்.
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by ரபீக் Wed Apr 27, 2011 12:52 pm

இதெல்லாம் உண்மையாவா இருக்கும் >


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by அசுரன் Wed Apr 27, 2011 12:54 pm

கடல் வற்றியதும் மீனெல்லாம் கருவாடு ஆயிரும் அப்புறமா நாம அதை எடுத்து வறுத்து சாப்பிடலாம்னு சொல்றீங்க! யாருங்க இந்த காலத்துல நல்லது சொன்னா கேக்குறாங்க... அப்புறம் இது உங்க செய்தியா? அல்லது இணையத்தில் படித்த செய்தியா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 12:56 pm

நான் 9 வருஷம் தான் உயிரோடு இருப்பேன்... எனக்கு பிரச்சனை இல்லை...ஆனா பாவம் மக்கள்... சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by முரளிராஜா Wed Apr 27, 2011 12:57 pm

நல்லா கிளப்புறாங்கப்பா பீதீய சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by ரபீக் Wed Apr 27, 2011 12:58 pm

மஞ்சுபாஷிணி wrote:நான் 9 வருஷம் தான் உயிரோடு இருப்பேன்... எனக்கு பிரச்சனை இல்லை...ஆனா பாவம் மக்கள்... சோகம்

என்ன சொல்றீங்க அக்கா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by தாமு Wed Apr 27, 2011 12:59 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:நான் 9 வருஷம் தான் உயிரோடு இருப்பேன்... எனக்கு பிரச்சனை இல்லை...ஆனா பாவம் மக்கள்... 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! 440806

என்ன சொல்றீங்க அக்கா ?


அக்கா இப்படி சொல்லாதீங்க் 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! 67637 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! 67637 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! 67637



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by vikramsingh Wed Apr 27, 2011 1:00 pm

அசுரன் wrote:கடல் வற்றியதும் மீனெல்லாம் கருவாடு ஆயிரும் அப்புறமா நாம அதை எடுத்து வறுத்து சாப்பிடலாம்னு சொல்றீங்க! யாருங்க இந்த காலத்துல நல்லது சொன்னா கேக்குறாங்க... அப்புறம் இது உங்க செய்தியா? அல்லது இணையத்தில் படித்த செய்தியா?
மெயில் இல் வந்தது
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்! Empty Re: 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum