புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
96 Posts - 69%
heezulia
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
5 Posts - 4%
viyasan
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
273 Posts - 45%
heezulia
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
18 Posts - 3%
prajai
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
7 Posts - 1%
mruthun
எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_m10எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun May 01, 2011 11:58 am

01.05.2011

என். ராமதுரை

புதன் ஒரு தொல்லை பிடித்த கிரகம். அதை வெறும் கண்ணால் பார்க்க இயலும் என்றாலும், அது எளிதில் தென்படாது. சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகம் சிலசமயம் கிழக்கு வானில் சூரிய உதயத்துக்கு முன்னர் சிறிது நேரம் தெரியும்; அல்லது மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சிறிதுநேரம் தெரியும். புதன் கிரகம் ஒருவேளை உங்கள் கண்ணில் தென்பட்டாலும் அது வடிவில் சிறியது என்பதால் மங்கலான சிறிய ஒளிப்புள்ளியாகக் காட்சி அளிக்கும்.

எந்த ஊராக இருந்தாலும் அடிவானம் பெரும்பாலும் மேகம் சூழ்ந்ததாக இருக்கும் என்பதால் எப்போதாவதுதான் அடிவானில் புதன் கிரகத்தைக் காண இயலும். ஆகவேதான், "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்ற பழமொழி தோன்றியது.

பிரபல வானவியல் விஞ்ஞானியான கோப்பர்னிக்கஸ் மரணப்படுக்கையில் கிடந்தபோது கடைசிவரை என்னால் புதன் கிரகத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தத்துடன் கூறினாராம்.

ஒருவகையில் பார்த்தால் புதன் சீந்தப்படாத கிரகம். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி வரும் போதெல்லாம் விலாவாரியாகப் பலன்களை வெளியிடும் பத்திரிகைகள் புதன் பெயர்ச்சி பற்றிச் சீந்துவதில்லை. ஜோசியர்களும் சரி, புதன் பெயர்ச்சிப் பலன்கள் பற்றிய புத்தகங்களை வெளியிடுவதில்லை. புதன் கிரகம் மாதாமாதம் ராசி மாறுவதே இதற்குக் காரணம். இது கிடக்கட்டும்.

ஆளில்லா விண்கலங்களை அனுப்பி செவ்வாய், வியாழன் முதலான கிரகங்களை ஆராய்ந்துள்ள அமெரிக்க, ரஷிய விஞ்ஞானிகள்கூட புதன் பக்கம் திரும்பியது இல்லை. செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை பல ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்போதும் ஓரிரு விண்கலங்கள் செவ்வாயைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

வியாழன் கிரகத்தை கலிலியோ விண்கலம் 1995 முதல் 14 ஆண்டுகள் ஆராய்ந்தது. 2004-ம் ஆண்டில் போய்ச் சேர்ந்த காசினி விண்கலம் இன்னமும் சனி கிரகத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளி (சுக்கிரன்) கிரகமும் நன்கு ஆராயப்பட்டுள்ளது. ஆனால், புதன் கிரகத்தை 1973-ம் ஆண்டில் மாரினர் 10 விண்கலம் எட்டிப்பார்த்ததோடு சரி. அதன் பிறகு புதன் கிரகத்தை நோக்கி விண்கலம் அனுப்பப் பெரிய முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மற்ற கிரகங்களுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்புவதில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், புதன் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதில் பல பிரச்னைகள் உண்டு.

பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் புதன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய மண்டலத்திலேயே புதன் கிரகம்தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, புதன் கிரகத்தை நோக்கி ஒரு விண்கலம் செலுத்தப்படுமானால் அது சூரியனை நோக்கிச் செல்வதாக இருக்கும்.

இதில் இரண்டு பிரச்னைகள் உள்ளன. முதலாவதாக, புதன் கிரகத்தை(சூரியனை) மேலும் மேலும் நெருங்கும்போது விண்கலத்தைக் கடும் வெப்பம் தாக்கும். இரண்டாவது பிரச்னை நாம் அனுப்பும் ஆளில்லா விண்கலத்தின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கும். இது திருப்பதி அல்லது ஏற்காடு மலை உச்சியிலிருந்து ஒரு லாரி அல்லது பஸ் கீழே இறங்குவதற்கு ஒப்பானது.

புதனை நோக்கிச் செல்கிற விண்கலத்தின் வேகம் அதிகமாக இருந்தால் அதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம். வேகமாக வருகிற எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி ரயில் நிலையத்தை நெருங்கும்போது அதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அது ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நிற்காமல் வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்.

புதன் கிரகத்தை நெருங்கி புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்குகிற அளவுக்கு விண்கலத்தின் வேகம் குறைந்தால்தான் விண்கலம் புதன் கிரகத்தைச் சுற்ற ஆரம்பிக்கும். விண்கலத்தின் வேகத்தை எப்படிக் குறைப்பது?

ஒரு ராக்கெட் உயரே கிளம்புகையில் நெருப்பும் சூடான வாயுவும் பின்னோக்கிப் பீச்சிடுவதன் விளைவாகவே ராக்கெட் முன்னோக்கி அதாவது உயரே பாய்கிறது. அதே ராக்கெட்டில் (அல்லது விண்கலத்தில்) முன்னோக்கிப் பீச்சிடும் வகையில் ராக்கெட் எஞ்சின் பொருத்தப்பட்டு குறிப்பிட்ட கட்டத்தில் அது முன்னோக்கிப் பீச்சினால் ராக்கெட்டின் வேகம் குறையும்.

சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் அனைத்திலும் இவ்வித ஏற்பாடு உண்டு. அதன் பலனாகத்தான் சந்திரனை நெருங்கும் விண்கலங்களின் வேகம் குறைந்து அந்த விண்கலங்கள் சந்திரனால் ஈர்க்கப்பட்டு சந்திரனைச் சுற்ற முற்பட்டன. புதனுக்கு அனுப்பப்படும் விண்கலத்தில் இவ்வித ஏற்பாடு செய்வது என்றால் நிறைய எரிபொருளை வைத்தாக வேண்டும்.

இதன் விளைவாக, ராக்கெட் மற்றும் விண்கலத்தின் எடை கூடும். புதனை ஆராய்வதற்கான எல்லாக் கருவிகளையும் விண்கலத்தில் வைத்து அனுப்ப இயலாது என்ற நிலை ஏற்படும். ஆகவே, புதன் கிரகத்தை ஆராய 2004-ம் ஆண்டு ஆகஸ்டில் மெசஞ்சர் என்னும் சுருக்கமான பெயர் கொண்ட விண்கலம் செலுத்தப்பட்டபோது அதன் வேகத்தைப் படிப்படியாகக் குறைக்க வேறு வழி கையாளப்பட்டது.

இத் திட்டப்படி மெசஞ்சர் விண்கலம் சூரியனை ரவுண்டு அடித்துவிட்டு மறு ஆண்டு ஆகஸ்டில் பூமியை நெருங்கியது. அப்போது அதன் வேகம் சற்று மட்டுப்பட்டது. அதாவது பூமியின் ஈர்ப்பு சக்தியானது அந்த விண்கலத்தின் வேகத்தை ஓரளவு குறைத்தது.

ஒரு விண்கலம் ஒரு கிரகத்தைக் கடந்து செல்லும்படி செய்ய முடியும். அக் கட்டத்தில் அது அக் கிரகத்தை எந்தப் பக்கமாகக் கடந்து செல்கிறது என்பதைப் பொறுத்து விண்கலத்தின் வேகம் குறையும் அல்லது அதிகரிக்கும். மெசஞ்சர் விண்கலம் பூமியை மாற்றுப் பக்கமாகக் கடந்து சென்றதால் அதன் வேகம் குறைந்தது. பின்னர் மெசஞ்சர் விண்கலம் மேலும் சில தடவை சூரியனைச் சுற்றி விட்டு சுக்கிரன் (வெள்ளி) கிரகத்தை 2006-ம் ஆண்டிலும், பின்னர் 2007-ம் ஆண்டிலும் கடந்து சென்றது.

இதன் பலனாக வேகம் மேலும் குறைந்தது. பின்னர், அந்த விண்கலம் சூரியனைச் சிலதடவை சுற்றிவிட்டு புதன் கிரகத்தை மூன்று முறை கடந்து சென்றது. இதற்குள்ளாக அதன் வேகம் நன்கு குறைந்துவிட்டதால் இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி அந்த விண்கலம் புதனின் பிடியில் சிக்கி அக் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்தது.

அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பைச் சேர்ந்த சென் வான் யென் என்ற நிபுணர் தான் மெசஞ்சர் விண்கலம் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் கொடுத்தார். இதன் விளைவாக, அந்த விண்கலம் சூரியனை மொத்தம் 15 தடவை சுற்ற வேண்டியதாகி கடைசியில் புதன் கிரகத்தை அடைந்தது.

2004-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட மெசஞ்சர் விண்கலம் சுமார் ஆறரை ஆண்டுக்காலம் விண்வெளியில் அங்குமிங்குமாக வட்டமடித்து புதனை அடையும்போது அது பயணம் செய்த மொத்த தூரம் சுமார் 790 கோடி கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் பூமியிலிருந்து புதன் கிரகத்துக்கு உள்ள அதிகபட்ச தூரம் சுமார் 22 கோடி கிலோ மீட்டர்.

பூமிக்குள் 18 புதன் கிரகங்களைப் போட்டு நிரப்பிவிடலாம். அந்த அளவுக்குப் புதன் கிரகம் சிறியது என்பதால் அதற்கு ஈர்ப்பு சக்தி குறைவு. ஆகவே, மெசஞ்சர் விண்கலத்தைப் புதனின் பிடியில் சிக்க வைப்பதில் மேலும் பிரச்னை இருந்தது.

நல்லவேளையாக எல்லாம் திட்டமிட்டபடி நடந்து மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தைச் சுற்றுகிறது. வருகிற மாதங்களில் மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகம் பற்றி ஏராளமான தகவல்களையும் படங்களையும் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தை வட்ட வடிவப் பாதையில் சுற்றாமல் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அந்த அளவில் அது ஒருசமயம் புதன் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 200 கிலோ மீட்டர் உயரத்திலும் இன்னொரு சமயம் புதன் கிரகத்திலிருந்து 15 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திலும் அமைந்தவாறு புதன் கிரகத்தைச் சுற்றி வருகிறது.

ராஜ சகவாசம் ஆபத்து என்பார்கள். அந்த மாதிரி சூரியனின் பார்வையால் புதன் கிரகத்தில் பகலாக உள்ள பகுதியில் வெப்பம் சுமார் 450 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இரவாக உள்ள பகுதியில் கடும் குளிர். மைனஸ் 200 டிகிரி செல்சியஸ்.

புதனில் பகலாக உள்ள பகுதியிலிருந்து மேலே கிளம்பும் வெப்பம் மெசஞ்சர் விண்கலத்தைத் தாக்குகிற ஆபத்து உண்டு என்பதால்தான் புதனை மெசஞ்சர் விண்கலம் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது.

மெசஞ்சர் விண்கலத்தை சூரியனின் வெப்பமும் புதன் கிரகத்திலிருந்து மேல்நோக்கி வரும் வெப்பமும் தாக்காதபடி ஒருவகையான காப்புக் கேடயம் காப்பாற்றுகிறது. இந்தக் காப்புக் கேடயத்தையும் இதைத் தயாரிப்பதற்கான பொருளையும் உருவாக்குவதற்கு மட்டுமே ஏழு ஆண்டுகள் பிடித்தன.

மெசஞ்சர் விண்கலத்தை உருவாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அதைச் செய்து முடிக்கவும் அதன் பாதையை நிர்ணயிக்கவும் தகுந்த உத்திகளை உருவாக்குவதற்கும் மொத்தம் 20 ஆண்டுகள் ஆனது. புதனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதில் உள்ள விசேஷ பிரச்னைகளே அதற்குக் காரணம். விண்வெளி விஞ்ஞானிகளும் புதனை நீண்ட காலம் சீந்தாததற்கு இதுவே காரணம்.

- தினமணி -

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக