ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷங்கர் - சிறு குறிப்புகள்

+4
அருண்
ரபீக்
jesudoss
ந.கார்த்தி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஷங்கர் - சிறு குறிப்புகள்  - Page 2 Empty ஷங்கர் - சிறு குறிப்புகள்

Post by ந.கார்த்தி Tue Apr 26, 2011 8:12 pm

First topic message reminder :

தமிழ் சினிமா வர்த்தகத்தைக் கோடிகளில் ஹிட்டடிக்கவைத்த காஸ்ட்லி மாஸ்டர். கனவுக்கு கலரும் கோபத்துக்கு கிரஃபிக்ஸீமாக வெரைட்டி காட்டும் இயக்குநர் ஷங்கரின் பெர்சனல் பக்கங்கள்....

“குங்குமம்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் ஷங்கர் . அப் படத்தைப் பார்த்த ஷங்கரின் அம்மா. ‘தனக்கு ஒரு மகன் பிறந்தால் ஷங்கர் என்று பெயர் வைப்பேன்!” என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். சொல்லிவைத்து போல அவருக்குப் பிறந்த மகன் ‘ஷங்கர்’ ஆனார்.


· நடிகராகும் ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர், சின்னச்சின்ன வேடங்களில் காமெடி பண்ணியதோடு சரி ஷங்கர் கடைசியாகத் தலை காட்டிய படம் ‘சிவாஜி’. ‘


· ஷங்கர் டி.எம்.எஸ். குரலில் பாடுவதை வீட்டிலும் அலுவலகத்திலும் கேட்கலாம். ரஹ்மானுக்குப் பாடிக் காட்டினாரா எனத் தகவல் இல்லை!.


· வீட்டில் டிரெட்மில் வைத்திருக்கும் ஷங்கர்,’எனக்குத் தொப்பை விழுந்திருக்கா?’ என அடிக்கடி இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்பார். தன்னைத்தான் கிண்டலடிக்கிறாரோ எனக் கலவரமாவது பாலாஜி பழக்கம்!.


· சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் வளரும் ஷங்கரின் குழந்தைகள் ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் படிப்பது லேடி ஆண்டாள் பள்ளியில்!.


· தினமும் ஒரு மணி நேரமாவது ஷட்டில்காக் விளையாடுவார் ஷங்கர். விளையாட்டில் அவரது உதவி இயக்குநர்கள்தான் பார்ட்னர்கள்.


· மீன் உணவுகள் ஷங்கரின் ஃபேவரைட் மதுரை கோனார் மெஸ், அம்மா மெஸ்களின் சிறப்பு அசைவ உணவுகள் ரொம்பவும் பிடிக்கும்!.


· நகைகள் மீது ஈர்ப்பு இல்லாதவர். ஆனால், இப்போது மனைவி கொடுத்த ஒரு வைரக் கல் பதித்த பிளாட்டினம் மோதிரம் விரலில் மின்னுகிறது!.


· சினிமாவில் கால் பதிக்குமுன் சென்னை ‘ஹால்டா’ கம்பெனியில் பணிபுரிந்தவர். அப்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார் ஷங்கர்!.


· இந்தியாவிலேயே ஷங்கரைவிட நிதானமாக கார் ஓட்டுபவர் வேறு எவரும் கிடையாது. க்ரீன் சிக்னல் விழாமல் கியர் தொடவே மாட்டார். ஒரு ரிவர்ஸ் எடுக்க 15 நிமிடங்களாவது ஆகும் இவருக்கு!.


· தொடர்ந்து சிகரெட் புகைத்து வந்தவர் ‘பாய்ஸ்’ படத்தோடு அந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டார். ‘எப்படி சார் சிகரெட்டை விட்டீங்க?’ என்று இன்றும் ரஜினிகாந்த் ஷங்கரிடம் பொறாமையாக விசாரிப்பாராம்!


· எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் தரையிறங்கியவுடன் தன் மனைவி ஈஸ்வரிக்குத் தன் இருப்பிடம் குறித்த தகவல் சொல்லிவிடுவார் ஷங்கர்!


· ஷங்கரின் காஸ்ட்யூமர் அவரது மனைவிதான். ஷங்கர் எப்போதும் கடைகளுக்குச் சென்று உடைகள் வாங்கியது கிடையாது. விழாக்களுக்கு பிளாக் பேண்ட், பிளாக் சூட் அணிந்துகொள்ள விரும்புவார்!.


· ஷங்கர் மிகவும் ஆசைப்பட்டு ஸ்க்ரிப்ட் செய்த படம் ‘அழகிய குயிலே’. ஆனால், அதைப் படமாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் இன்னொரு பிரமாண்ட வாய்ப்பு வாசல் கதவைத் தட்டும்!.


· குடும்பத்தினருக்காக மட்டுமே அவர்களுடன் கோயிலுக்குப் போவார். மற்றபடி நல்ல நாள். கெட்ட நேரம் போன்றவை குறித்து அலட்டிக்கொள்வது இல்லை!.


· பக்கத்து வீட்டிலேயே சூர்யா வசித்தாலும், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேருடன் 14 படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தாலும் இன்னும் அந்த இரு ஹீரோக்களை வைத்துப் படம் இயக்கவில்லை ஷங்கர்!.


· ஷங்கர் பக்கா பங்ச்சுவல். ‘டைரக்டர் லேட்டாத்தானே வருவார்’ என்று யாரும் அசட்டையாகச் சென்றால், செட்டில் பரபரப்பாக் இயங்கிக்கொண்டு இருப்பார் இயக்குநர் ஷங்கர்!


· 1993-ல் ஜெண்டில்மேன் துவங்கி காதலன், இந்தியன்,ஜீன்ஸ், முதல்வன்,நாயக்,பாய்ஸ், அந்நியன்,சிவாஜி .. பத்தாவது படம் ‘எந்திரன்’!


· முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறார் ஷங்கர். ‘அந்நியன்’ பட வேலைகளின் போது கிளைவிட்ட ஆர்வம் இது!.


· ஷீட்டிங் ஸ்பாட்டில் அரட்டை, சிரிப்பெல்லாம் கிடையாது. ஸ்பாட்டில் ஏதேனும் கோபமூட்டுவது போல நடந்தால், கொஞ்ச நேரம் அங்கிருந்து மறைந்து விடுவார்!.


· உதவி இயக்குநர்களுக்கு நிலையில்லாத மினிமம் சம்பளம், குறைந்தபட்ச வசதி என்று இருந்ததை, மாதச் சம்பளம், டூ வீலர் வசதி என நிலைநிறுத்தியவர் ஷங்கர்!


· ஷங்கரை மிகவும் பாதித்த படம், ‘சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’ பல முறை பார்த்திருந்தாலும் இன்னும் இன்னும் என்று நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்தப் படத்தைப் பார்ப்பார் ஷங்கர்!.


· கைக்கடிகாரங்களின் காதலன் ஷங்கர். விதவிதமான் கடிகாரங்களைச் சேகரித்திருக்கும் ஷங்கர். கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தைக் கழற்றி மேஜையில் வைக்கும் போது, அதற்கு வலிக்குமே என்பது போல பதமாக இருத்துவார்!.


· ஆகஸ்ட் 17 ம் தேதி பிறந்த நாளுக்கு வீடுதான் ஸ்பாட் குழந்தைகள்தான் அவரது உடனிருக்கும் தோழர்கள்!


· நீங்களே தனியாக ஒரு பாடல் பாடுங்களேன்!. என்று ஏ.ஆர்.ரஹ்மான் கேடட்தற்கு வெட்கப்பட்டு மறுத்த ஷங்கர் ‘காதலன்’ படத்தின் பேட்டைராப் பாடலில் ‘பேட்டைராப்’ என்று மட்டும் குரல் கொடுத்திருக்கிறார்!
TMT ஷங்கர் - சிறு குறிப்புகள்  - Page 2 678642 ஷங்கர் - சிறு குறிப்புகள்  - Page 2 678642 ஷங்கர் - சிறு குறிப்புகள்  - Page 2 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஷங்கர் - சிறு குறிப்புகள்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


ஷங்கர் - சிறு குறிப்புகள்  - Page 2 Empty Re: ஷங்கர் - சிறு குறிப்புகள்

Post by அதி Sun Jul 24, 2011 7:19 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:அடசாமி இந்த அலம்பலுக்கு ஒரு முடிவே இல்லையா

முடிவு என்பது முடியாமல் வருவது முடியும் பொழுது முடியாமல் வந்தால் எப்படி முடியாதோ அதுபோல முடியாத பொழுது முடிவு வந்தால் முடியாது சூப்பருங்க

கொக்க மக்கா அய்யோ, நான் இல்லை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum