ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டமின்கள்

Go down

விட்டமின்கள் Empty விட்டமின்கள்

Post by சிவா Wed Nov 05, 2008 10:43 pm

சில வருடங்கள் முன்பு வரை மல்டி விட்டமின் மாத்திரைகள் கொஞ்சம் அபூர்வம். இப்போது நிறைய புதுப்புது மாத்திரைகள், டானிக்குகள் வந்து விட்டன. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் இருபாலருக்கும் வெவ்வேறு வயதில் தினமும் பெற வேண்டிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களின் அளவை பட்டியலிட்டிருக்கிறது.

ஆனால் பத்தில் ஒருவர் தான் சரியான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களை உணவு மூலமாக பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவை உட்கொள்வதே இல்லை. இதனாலேயே தற்போது மருத்துவர்கள் அதிக அளவில் மல்டி விட்டமின்களைப் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது.

நீங்கள் விட்டமின் மாத்திரை அல்லது தாது புஷ்டி டானிக் உட்கொள்ள நினைத்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விட்டமின்கள் Empty Re: விட்டமின்கள்

Post by சிவா Wed Nov 05, 2008 10:43 pm

விட்டமின் E:

தினசரி அளவு: 15mg (சிந்தெடிக் Eயில் 33 IU அளவு)

அபாய அளவு: 1000 IU அளவு

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக் கூடியது. கண்ணில் காட்ராக்ட் ஏற்படுவதைத் தவிர்க்கும். அல்ஜைமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும். பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'ஜெப்ரி ப்ளும்பெர்க்' என்பவர் ஒரு நாளைக்கு 100 முதல் 400 IU அளவு இந்த விட்டமினைப் பெறுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறார். அபாய அளவு தாண்டி உட்கொண்டால் மூளை உறைந்து போக வாய்ப்புண்டு (Haemorrhage). மேலும் ரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதால் காயம் பட்டால் சிரமமும் ஏற்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விட்டமின்கள் Empty Re: விட்டமின்கள்

Post by சிவா Wed Nov 05, 2008 10:44 pm

விட்டமின் C:


தினசரி அளவு: பெண்களுக்கு 75mg, ஆண்களுக்கு 90mg

அபாய அளவு: தொடர்ந்து 2000mgக்கு மேல்

விட்டமின் Cயால் சளி தடுக்கப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சளி பிடிக்கும் ஆரம்பகட்டங்களில் அதிக அளவு விட்டமின் Cயை தினமும் உட்கொள்பவர்களுக்கு சளியின் தாக்கம் குறைவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளுக்குத் தேவையான அளவு சராசரியாக ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றில் கிடைக்கிறது. புகைப் பிடிப்பவர்கள் மேலும் ஒரு 35mg அளவு உட்கொள்ள வேண்டும்.

அபாய அளவு மீறினால் வயிற்றுப் பிடிப்பு, மூச்சடைப்பு, கழிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளில் 200mg அளவைத் தாண்டினாலே குடலின் உறிஞ்சும் தன்மை குறையும், குடலில் வருகின்ற கழிவுப் பொருட்களில் நீர் உறிஞ்சப்படாவிட்டால் மலம் கழிச்சலாகப் போகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விட்டமின்கள் Empty Re: விட்டமின்கள்

Post by சிவா Wed Nov 05, 2008 10:45 pm

B விட்டமின்கள்:

தினசரி அளவு: 50 வயதிற்குள் 1.3mg; 50 வயதிற்கு மேல் ஆண்கள் 1.7mg பெண்கள் 1.5mg

அபாய அளவு: 1000 mg க்கு அதிகமான போலிக் அமிலம். B6 - 100mg.

போலிக் அமிலம் (Folic Acid) (B12 மற்றும் B6) இதயத்தைப் பாதுகாக்கும், பிறப்பில் ஏற்பட்ட குறைகளை நீக்கும், வயோதிகத்திலும் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ரத்ததில் உள்ள ஹோமோசிஸ்டீன் (homocysteine) எனும் பொருளின் அளவைச் சீராக வைத்திருக்கும். இந்த அளவு உயர்ந்தால் இதய நோய், சுவாசக் கோளாறுகள் முதலியவைகளுக்கு வழி வகுக்கக் கூடியது.

கொஞ்ச நாளாகவே மூளை வழக்கமான சுறுசுறுப்போடு இல்லையே என்று தோன்றினால் உங்களுக்கு விட்டமின் B12 குறைபாடு இருக்கலாம். இதன் அளவு மிகக் குறைந்தால் தளர்வு, நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும். வயோதிகர்களுக்கு உணவிலிருந்து B12ஐப் பெறும் தன்மை குறைவதால் அவர்களுக்கு B12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அபாய அளவைத் தாண்டினால் போலிக் அமிலம் B12 குறைபாட்டை நிறைவு செய்வதற்கு பதிலாக நரம்புச் சிதைவில் முடியும். தொடர்ந்து அதிக அளவு உட்கொண்டால் நிலை தடுமாற்றம், மரத்துப் போதல், தசை பலவீனம், நரம்புச் சிதைவு ஆகியவை ஏற்படக் கூடும். ஆனால் தேவையான அளவை மிஞ்சும் ஆபத்து சாதாரணமாக ஏற்படுவதில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விட்டமின்கள் Empty Re: விட்டமின்கள்

Post by சிவா Wed Nov 05, 2008 10:46 pm

கால்சியம்:

தினசரி அளவு: 50 வயது வரை 1000mg, 50 வயதுக்கு மேல் 1200mg

அபாய அளவு: 2500mg

வலுவான பற்களுக்கும், வலுவான எலும்புகளுக்கும் கால்சியம் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோயைத் தவிர்க்கவும் கால்சியம் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி தேவைப்படும் அளவை சமீபத்தில் கூட்டி அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக மூன்று அல்லது நான்கு டம்ளர் ஸ்கிம்டு பாலில் ஒரு நாளின் தேவை கிடைக்கும்.

அபாய அளவைத் தாண்டினால் மலச்சிக்கலும், சிறுநீரகக் கோளாறுகளும் உருவாகலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விட்டமின்கள் Empty Re: விட்டமின்கள்

Post by சிவா Wed Nov 05, 2008 10:48 pm

விட்டமின் D:

தினசரி அளவு: 50 வயதிற்குள் - 200 IU, 50 முதல் 70 வரை - 400 IU, 70 வயதிற்கு மேல் - 600 IU

அபாய அளவு: தொடர்ந்து 1000 - 2000 IU

கால்சியம் மட்டும் தனியே உடலுக்கு பயனளிக்காது. அத்துடன் இந்த 'சூரிய ஒளி' விட்டமினும் கிடைக்கபெற வேண்டும். கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்களை நமது உடல் ஏற்றுக் கொள்வதற்கு விட்டமின் D உதவி செய்கிறது. இது பால், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற மிகச் சில உணவுப் பொருள்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் சூரிய ஒளி உடலில் படும்போது தோலின் அடியில் இது உற்பத்தியாகிறது.

ஆகையால் நீங்கள் வெயிலே படாதவராகவோ, மொடாப் பால்குடியராகவோ இல்லாவிட்டால் உங்களுக்குத் தேவையான அளவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அபாய அளவைத் தாண்டி தொடர்ந்து உட்கொண்டால் மூச்சடைப்பு, தளர்ச்சி, இதயத் துடிப்பு வேறுபாடு ஆகியவை ஏற்படக்கூடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விட்டமின்கள் Empty Re: விட்டமின்கள்

Post by சிவா Wed Nov 05, 2008 10:49 pm

மக்னீசியம்:

தினசரி அளவு: ஆண் - 420mg, பெண் - 320mg

அபாய அளவு: 320mg

பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. ஒரு சராசரி மல்டிவிட்டமின் மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது.

350mgக்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும் ஏற்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விட்டமின்கள் Empty Re: விட்டமின்கள்

Post by சிவா Wed Nov 05, 2008 10:50 pm

இரும்பு:

தினசரி அளவு: பெண் 50 வயதிற்குள் - 15mg

அபாய அளவு: 75mg

குழந்தைகள், விடலைகள் (Teenagers), குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை.

அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.


நன்றி களஞ்சியம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விட்டமின்கள் Empty Re: விட்டமின்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum