ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபயம் கேட்டதை அறிந்தோமா?

4 posters

Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by யாதுமானவள் Tue Apr 26, 2011 4:27 pm



(முதல் முதலாய் ஈகரையில் இலங்கைத் தமிழர்களுக்காக என் கவிதையைப் பதிகிறேன்)


அழித்திட முழுதாய் முதற்குடி
இனமதற் காவன செய்கின்றார்
இழிசெயலி தற்குத்துணை செய்யும்
ஈனப்பிறவி களிங்கே இருக்கின்றார்
பழிகொள்ளும் பாவச் செயலினை
மூச்சாய்க் கொண்டவக் காடையரைச்
சுழித்திடும் அந்தப் பொன்னாள்
இங்குச் சடுதியில் வாராதோ

வெஞ்சினப் படைகொண்டு வேட்டை
நாயென எதிர்வந்து இழிஞர்களும்
பிஞ்சுக் குழந்தைகள் பலநூறோடு
பஞ்சுத் தலைகளைச் சாய்த்தனரே
எஞ்சிய ஈழவீரத் தமிழரின்
கல்லறை தோண்டிக் கொடியோர்கள்
மிஞ்சிய எலும்புத் துண்டுகள்
தெருவினில் வீசியும் மகிழ்ந்தனரே

கருங்குழல் பெண்கள் தலையினி
லியற்கை மணமுண்டு என்றவனே
கருகிடும் பெண்கள் கூந்தலும்
பொசுங்கிடும் மணத்தினை ரசித்தாயோ?
சுடுகின்ற கொடுஞ்செயல் புரிகின்றோனை
எரிதழல் கொண்டே தீய்க்காமல்
சுடுவிழி யொன்று நடுவினி
லிருப்பதை யீசாநீயேன் மறந்தாயோ?

காடையர் கொலைவெறி கொண்டே
தமிழனை உருக்குலைத் தெரிகின்றான்
ஆடைகள் அவிழ்த்துக் கண்களை
அடைத்துஆ டவர்பலரைச் சுடுகின்றான்
வாடைதான் பிணத்தின்வ ழியெங்கிலுமே
வதைத்தே உயிரை முடிக்கின்றான்
பீடையர் பிணந்திண்ணிக் கழுகாய்ப்
புவியினில் பிறந்ததும் இதற்காமோ?

மூடிய கண்ணுடன் முகத்தில்
முறுவலாய் மரத்தடி அமர்ந்தோனே
ஓடியே கதறித் துடித்திடும்
உயிர்களைக் காத்திட மறந்தாயோ?
நாடியே அடங்கிடும் வேளையிலா
வதுஉன்விழி திறப்பாயோ - அன்றி
நீடிய செவிப்பறை சேர்த்தே
அடைத்துச் செவிடாயி ருப்பாயோ?

யாழிசை மீட்டிப் பாடிடும்
குலத்தினில் ஏந்திழையா ளொருத்தி
ஏழிசை கீதம் பாடிடும்
குயிலாய் இசையுடன் இருந்தாளே
சூழவே காடையர் நின்றவள்
கற்பினைச் சூறையும் ஆடினரே
ஈழமே இஃதென் கொடுமையோ
என்றெம் நெஞ்சம் பதறியதே.

இம்மகள் சிங்கள வெறியருக்
கேதும் இடர்தான் செய்தனளோ
அம்மன மாக்கி மேனியைப்
பாவியர் அங்கனம் விட்டனரே
அம்மகள் மானம்காத் திடக்கீதைக்
கண்ணனும் அங்குவர வில்லையே
தம்மகள் தனையுமிழந் தவப்பேதை
தமிழளாய்ப் பிறந்ததா குற்றமங்கே?

கருவறை சிசுக்கள் உருவம்
அடையுமுன் மண்மேல் வீசுவதை
பெருவயி ரறுக்க வெளிவந்த
சிசுவும் உணர்ந்தந்தப் போழ்தினிலே
தருதலைப் படையினர் தமிழினம்
அழிப்பதைத் தடுத்திடத் திறள்கவென
ஒருகரம் நீட்டி உலகினை
நோக்கி அபயம் கேட்டதுவோ?

கொடியவச் சிங்களக் கொட்டம்
அடக்கி நம்மினம் காத்திடவே
நொடிப்பொழு தேனும் தாமதி
யாதுநா மொன்று சேர்ந்திடுவோம்
குடியது காத்துக் குலத்தமிழ்
வளர்ப்பது குலமக்கள் கடமையன்றோ
பொடிப்பொடி யாக்கிப் பகைதனைக்
கொன்று “தமிழீழம்” வென்றிடுவோம்!


Last edited by யாதுமானவள் on Tue Apr 26, 2011 4:33 pm; edited 1 time in total


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by ரபீக் Tue Apr 26, 2011 4:31 pm

தமிழக மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் ஏங்கிக்கொண்டிருக்கும் பிரச்சினையை ,வலியினை ,வேதனையை உணர்த்திய கவிதை ,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by யாதுமானவள் Tue Apr 26, 2011 5:16 pm

ரபீக் wrote:தமிழக மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் ஏங்கிக்கொண்டிருக்கும் பிரச்சினையை ,வலியினை ,வேதனையை உணர்த்திய கவிதை ,,,,

நன்றி ரபீக்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by balakarthik Tue Apr 26, 2011 5:22 pm

நிச்சயம் விரைவில் ஈழம் மலரும் உங்கள் , எங்கள் கனவு பலிக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அபயம் கேட்டதை அறிந்தோமா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by யாதுமானவள் Tue Apr 26, 2011 5:39 pm

balakarthik wrote:நிச்சயம் விரைவில் ஈழம் மலரும் உங்கள் , எங்கள் கனவு பலிக்கும் நன்றி அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196

நன்றி கார்த்தீ....


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by ஷீ-நிசி Thu Jun 23, 2011 11:35 pm

விரைவில் ஒரு விடியல் பிறக்கட்டும்
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum