ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

+16
மனோஜ்
Aathira
Yamini Devi
அசுரன்
சிவசங்கர்
சரவணன்
உதயசுதா
balakarthik
பிளேடு பக்கிரி
krishnaamma
பூஜிதா
கண்ணன்3536
Tamilzhan
ரபீக்
மகா பிரபு
தாமு
20 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty போலி சாமியார்களின் முன்மாதிரி - சத்திய சாய் பாபா !

Post by தாமு Mon Apr 25, 2011 7:45 am

முன்குறிப்பு : ஒருவர் இறந்த பிறகு பழிக்கலாமா ? என்ற கேள்விக்கு ஆன விடை, பாராட்டுதல்களைப் போலவே எதிர்ப்புகளும் சமகாலத்தில் பதிய வழிசெய்வது, கருத்துரிமையை மதித்தல் என்கிற புரிந்துணர்வு இருந்தால் இந்தக் கேள்வி பொருளற்றது.

தோற்றம் : அண்மையில் கல்லீரல், மூச்சடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிரேமானந்தம் என்கிற சாமியார் அவதாரத்தின் (?) சாமியார் ஆசைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தான் சத்திய சாய்பாபா. மக்களின் மனதில் உடனடியாகப் பதியவைக்க போதனைகளை விட உருவமே முதன்மையானது என்ற அடிப்படையில் தலைக்கு மேல் அடர்ந்த காட்டை வளர்த்து வைத்திருந்தவர் சத்திய சாய்பாபா. இது சாமி, ஒண்ணும் செய்யாது, கும்பிட்டுக் கொள் என்று சொல்லாவிடில் குழந்தைகள் பார்த்தால் பயந்துவிடும் தோற்றம் தான். ஒரு சாமியாரின் ஆன்மிக வியாபாரத்தில் தோற்றமே விளம்பரத்தின் ப்ளேவர் என்பதை நிருபனம் செய்து காட்டியவர் சத்திய சாய்பாபா. விவேகானந்தர், இராமகிருஷ்ணன் சீரடி சாய்பாபா மற்றும் நம்ம பக்கத்து வள்ளலார் உள்ளிட்டோர் மாறுபட்ட ஒரு தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்யவில்லை என்பது குறீப்பிடத் தக்கது. அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதன் மூலம் அவர்களது தோற்றங்களும் மனதில் நிற்கிறது. ஆனால் சத்திய சாய்பாபாவை நினைக்க அவரது அடர்ந்த தலையே போதுமானதாகும். இதே யுத்தியைத்தான் பிரேமானந்தம் பயன்படுத்தினார். அதே போன்று முடி வளர்ந்தாலும் கூந்தல் போல தொங்குவதால், பெண் போல தோற்றம் தருவதால் அதை அப்படியே தலைப்பாகையில் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தம். ஆக சாமியார் தொழிலுக்கு தலைமுடியோ மூலதனம் என்று செயல்காட்டி வென்றவர், முன்னோடி சத்திய சாய்பாபாதான்.

ஆன்மிக அதிசயம்: என்கிற பெயரிலும், அற்புதம் என்ற பெயரிலும் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது, கனவில் ஊடுறுவது, மோதிரம் வரவழைப்பது, லிங்கம் (வாந்தி எடுத்து) வரவழைப்பது உள்ளிட்ட மாய விளையாட்டுகள் (மேஜிக்) இதை பிரேமானந்தம் உள்ளிட்ட பல சாமியார்கள் பின்பற்றினார்கள், கடவுளால் வெறும் கையினால் முழம் போட முடியும் என்கிற நம்பிக்கை உடைய பக்தர்களை இந்த வித்தைகள் உடனடியாகக் கவர்ந்தது, இவர்களும் கடவுள் அல்லது கடவுள் அவதாரம் என்று அவர்களின் பக்தர்கள் நம்புகிறார்கள், படத்திலிருந்து விபூதி கொட்டுவது, படத்தில் இருக்கும் மாலையை வளரச் செய்வது போன்ற வித்தைகளை கொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரும் அவரது சக்தி வழிபாட்டு மன்றங்களும் வளர்த்திருப்பதும் கூட இத்தகைய வித்தைகளினாலே. மாலை வளரும் பின்புலன் என்ன வென்று தெரியாது, ஆனால் முதனாள் மாலை மறுநாள் ஒரு அடியாவது நீளமாக இருக்கும், அதாவது கொஞ்சம் அடர்த்தியாகக் கட்டப்பட்டபட்ட மாலை இழுத்துவிட்டது போல் கொஞ்சம் நீளம் கூடி இருக்கும் பூக்களின் எண்ணிக்கை கூடி இருக்காது, இதை நான் கண்ணால் பார்த்துள்ளேன். நூலை அல்லது மாலை கட்டப்பயன்படுத்தும் நாரை குறிப்பிட்ட இராசயணத்தில் நினைத்து எடுத்து மாலை கட்டினால் நீளும் தன்மை ஏற்படுமா ? அல்லது குறிப்பிட்ட நீளமுள்ள நாரை இராசயணத்தில் நனைப்பதன் மூலம் சுறுங்கி அதன் பிறகு மாலை கட்ட மறுநாள் முதல் நார் தன் ஒரிஜினல் நீளத்தை நோக்கி தளர்ந்து நீளுமா என்பது தெரியவில்லை, ஆனால் இவற்றில் இருப்பது வெறும் இராசயண மாற்றம் தான். இவை பயபக்தியுடன் கடவுளின் அற்புதமாக நம்பப்படுகிறது. இவர்களில் எந்த சாமியாரும் ஏழை பக்தர்களுக்கு தங்க மோதிரம், தங்கை சங்கிலி வரவழைத்துக் கொடுத்தது இல்லை, அவர்களுக்கு வெறும் கையால் கொட்டப்படும் திருநீறு மட்டுமே கிடைக்கும். கோவிலில் அருச்சனை தட்டில் நூறு ரூபாய் போட்டால் உபரியாகக் கொடுக்கப்படும் பிரசாதம் போல ஆசிரமங்களுக்கு வரும்படி தருபவர்களுக்கும், அரசியல் ரீதியில் அரசு ஆதரவு தருபவர்களுக்கு மட்டுமே தங்க மோதிரம், தங்க செயின் வழங்கப்படும். ஒருகிராம் தங்கத்தை மணலில் இருந்து பிரிக்க எத்தனை டன் மணல் தேவைபடுகிறது என்பது இந்த சாமியார்களுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.

செக்ஸ் சர்சை : சத்திய சாய்பாபா சிறுவர்களுடம் சில்மிசம் என்கிற சர்சையில் பலகாலம் அடிப்பட்டு வருகிறார், இன்றைய காலத்தைப் போலவே அவர் 50 வயதுவரை இருந்த காலத்தில் உயர் தொழில் நுட்பம் இருந்திருந்தால் நித்தியைப் போல் ஏதேனும் ஒரு விடியோவில் சிக்கி இருக்கக் கூடும், ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப முடியாது என்று சொல்லிக் கொள்வோரை விட சாமியார்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ? விருப்பதுடன் கூடிய பாலியல் தேவை தவறில்லையே என்று தனிமனித உரிமை பேசுவோர்கள் நிறைய உண்டு. ஆனால் பாபாவின் மீது பாலியல் குற்றச்சாட்டுவைத்தவர்கள் பலகாலம் அவருடன் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் என்பதால் அவர்களது குற்றச் சாட்டை புறம்தள்ளிவிட முடியாது. மாட்டிக் கொள்ளாதவன், ஆதரம் வைக்காதவன் குற்றவாளியே இல்லை என்கிற நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் வேண்டுமானால் பாபாவின் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று கூறலாம், ஆனால் அவ்வாறு குற்றம் சுமத்துபவர்களை இவர்கள் மானநஷ்ட வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்காதது இவர்களின் கள்ள மவுனம் பொருள் பொதிந்தது என்றும் கொள்ள வேண்டி இருக்கிறது. சத்தியசாய் பாபாவைப் போலவே செக்ஸ் சர்சைகளில் அடிபட்டு தண்டனை பெற்றவர் பிரேமானந்தம், தொடர்ந்து அடிபட்டாலும் இன்னும் தண்டனை பெறாதவர் நித்தி மற்றும் கல்கி, காஞ்சி பெரியவா சாமியார்கள்.

நானே கடவுள் : சத்தியசாய், பிரேமனந்தம், நித்தியானந்தம், கல்கி மற்றும் பங்காரு - இவர்கள் அனைவருமே தானே கடவுள் மற்றும் அவதாரம் என்று கூறிக் கொள்பவர்கள், இவர்களின் மடங்களில், மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இவர்களில் ஒருவர் அவதாரம் என்றால் மற்றவர்களெல்லாம் போலி. ஏனென்றால் இவர்களெல்லாம் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இவர்களுக்குள் பொதுவானக் கொள்கை என்று எதுவுமே கிடையாது. மக்களின் அடைப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக்கிக் கொண்டவர்கள் என்பது தவிர்த்து வேறெந்த ஒற்றுமையும் கிடையாது, ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் அவதாரம் தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளார் பக்தரிடம் சென்று நிதியானந்தம் கடவுளா என்று கேளுங்கள், எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இந்த அவதாரங்களின் (அவ)லட்சணம் அவரவர் பக்தர் என்ற அளவில் தான், ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமாகத் தலைவன் என்று உயர்த்திப் பாடுவது போலவே, மதவாதிகள் எங்களது கடவுளும் இறைத்தூதரும் தான் டாப்பு மற்றதெல்லாம் டூப்பு என்று சொல்வது போன்று உலகுக்கான ஒரே ஒளிவிளக்கு எங்கள் சாமி(யார்) தான் என்று கூவுவார்கள்.

ஒற்றுமை : பணக்காரர்களில் இருவகை தான் உண்டு, ஒன்று பரம்பரை பணக்காரன், மற்றொன்று திடிர் பணக்காரன், இராசாவைப் போன்ற திடிர் பணக்காரர்களில் பெரும்பாலோர் அரசை, மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி அந்த நிலையை அடைந்தவர்கள், அவர்களில் பலர் இல்லாத மனசாட்சி உறுத்துவதாக நினைத்தும், மன அமைதிக்காவும் இத்தகைய சாமியார்களை நாட, சாமியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் நெருக்கம் என்பது அடிப்படை தேவை என்ற அடிப்படையில் இயல்பாகவே ஏற்பட சாமியார்களின் சொத்துக்கள் இமயமலையை ஏளனம் செய்யத் துவங்குகின்றன. இந்த சாமியார்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் முறைகேடாக சம்பாதிப்பவர் எவரும் எங்களுக்கு நன்கொடை அளிக்கத் தேவை இல்லை என்று வெளிப்படையாக அறிவிப்பார்கள், ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெற்றதே இல்லை, கொள்ளைச் சொத்தில் எனது பங்கு என்பதாகத்தான் அவர்கள் வளர்ந்துள்ளனர். பணக்காரர்களை கொள்ளையடிப்பதில் சாமியார்கள் அனைவருமே முகமூடி இல்லாத திருடர்கள் போல் தான் செயல்படுகின்றனர். இதுவே இவர்களது தொழில் ஒற்றுமை.

தாதா : தாதா என்றால் வள்ளல், தற்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து நாளு பேருக்கு வேலு நாயக்கர் பாணியில் நல்லது செய்தால் அவர்கள் தாதா எனப்படுகின்றனர். பாபா உள்ளிட்ட சாமியார்களும் ஒருவகையில் தாதாக்களே, இவர்களிடமும் ஆள் பலம், பண பலம் எல்லாலும் உண்டு, அதே போன்று பணக்காரர்கள் கொடுக்கும் பங்கு பணத்தில் பல்வேறு உதவிகள் செய்கின்றனர். சென்னைக்கு தண்ணீர் கொடுக்க பாபா 200 கோடி தந்தார் என்று முதல்வர் புகழாரம் சூட்டி இருக்கிறார். 200 கோடியும் எந்த எந்த பாவங்களை குறைக்க வேண்டும் என்ற வேண்டுதலில் இவர்களிடத்தில் வந்ததோ. யார் யாரோ செய்த பாவத்தின் பரிகாரமாக சென்னைக்குத் தண்ணீர். 200 கோடி கொடுக்க மனது வேண்டுமே ? பில்லியன்களில் சொத்து மதிப்பு, 200 கோடி அவர்களுக்கு பெரிதே இல்லை. பாகிஸ்தான் மக்களுக்கு ரூ 500 கோடி சமூக நலன் நிதி என்று தாவூத் இப்ராஹிம் அறிவித்தால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பாமல் பாகிஸ்தான் தாவூத் இப்ராஜிமை கொண்டாடும் என்று தான் நினைக்கிறேன்.

பொது புத்தி : சாய் பாபா யாராக இருந்தால் என்ன ? மெஜிக் செய்தால் என்ன ? மக்களுக்கு நல்லது செய்கிறார், எனக்கு பிடிச்சிருக்கு.... நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லையாம். ஒருவர் எந்த வழியில் வேண்டுமானாலும், பணம், புகழ் ஈட்டலாம் ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் அவரது பின்புலன் பேசப்படாது, மக்கள் கொண்டாடுவார்கள். இராசபக்சே கூட சிங்களர்களுக்கு ஹிரோதான், மாவீரன் தான். சிங்களருக்கு நல்லது செய்கிறாரே.

பின்குறிப்பு : எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்


govikannan.blogspot.com சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Post by தாமு Mon Apr 25, 2011 7:57 am

இங்குள்ள விடியோக்களை கடைசியாக பார்த்துக்கொள்ளலாம். முதலில் பதிவை படித்துவிடுங்கள்.












கடந்த சில தினங்களாக தினமும் செய்திகளில் தவராமல் இடம் பிடித்த சாய்பாபா 24.04.11 அன்று இறந்தர். ஒரு மனிதனாக அவரை நான் நினைப்பதால் அவருக்கு அஞ்சலி. அவரை மகா அவதாரமாக நம்பிய அப்பாவி பக்தர்களுக்கு அனுதாபங்கள். ஆனால் அவரது மரணத்தை மிகவும் பரபரப்பாக்க தொடர்ந்து செய்திகளை போட்டு தாக்கிகொண்டே இருக்கிறார்கள் ஒன்னறை லட்சம் விவசாயிகள் இந்த நாட்டில் தற்கொலை செய்துகொண்ட போது கொஞ்சமும் கவலைப்படாமல் கல்நெஞ்சத்துடன் இருந்த பிரதமர் துவங்கி பல அரசியல் பிரமுகர்கள், பெருமுதலாளிகள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் ரொம்ப பீலிங்குடன் அறிக்கை விடுகின்றனர். பாபாசாமி 96 வயதில்தான் சாவேன் என்று சொல்லி முன்னடியே இறந்துவிட்டாறேன்னு யாரும் அதிர்ச்சியடைந்ததாக தெரியவில்லை. அவரபத்தி பலவித கதைகள் கிளப்பிவிடப்படுகிறது. உதாரணத்திற்கு கீழே ஒன்று.


சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா. சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது வானில் இருந்து வந்த அதிசய ஒளி ஈஸ்வரம்மா வயிற்றில் புகுந்தது போன்று இருந்தது. அதன் பிறகு ஈஸ்வரம்மா கர்ப்பம் ஆனார். குறிப்பிட்ட காலம் கடந்ததும் அவருக்கு குழந்தை பிறந்தது. சத்ய நாராயண ராஜு என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்கள்.


சிறு பருவத்திலேய சாய்பாபா எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார். நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல், என தொட்ட துறைகளில் எல்லாம் பிரகாசமாக இருந்தார். 1940-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி சாய்பாபா தனது சகோதரருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கொட்டி விட்டது. இதனால் அவர் சில மணி நேரம் தன்னிலை மறந்தவராக மாறிவிட்டார். அதன் பிறகு சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது என முற்றிலும் மாறுபட்ட நபராக தோன்றினார். இதனால் பயந்துபோன பெற்றோர்கள் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் சாய்பாபாவை பரிசோதித்து விட்டு நரம்பு தளர்ச்சி நோய் தாக்கி இருப்பதாக கூறினார்கள். அதற்கு சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் இல்லை. மத குருக்கள், சாமியார்களிடம் அழைத்து சென்றனர். பலன் கிடைக்கவில்லை.


இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் தேதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் தந்தை ராஜு ரத்னகரம் கோபம் அடைந்து ஏன் இப்படி மாய மந்திர வேலை செய்கிறாய் என்று கூறி திட்டினார். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார். சத்ய சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்புதான் சீரடி சாய்பாபா இறந்திருந்தார். இந்த நிலையில் சத்யசாய்பாபா நான் தான் சீரடி சாய்பாபாவின் மறுபிறவி என்று அவர் கூறியதால் அனைவரும் வியப்படைந்தனர். இந்த தகவல் சுற்று வட்டார பகுதி முழுவதும் பரவியது. அதுவரை சத்ய நாராயணராஜுவாக இருந்த அவர் சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.


தனது கை,கால்களில் இருந்தும் உடல்களில் இருந்தும் திடீரென பல்வேறு பொருட்களை எடுத்து காட்டி எல்லோரையும் அதிசயிக்க வைத்தார். இதனால் அவரது புகழ் தென்இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. 1944-ம் ஆண்டு பக்தர்கள் அனைவரும் சேர்ந்து சாய்பாபாவுக்கு புட்டபர்த்தியில் கோயில் கட்டி கொடுத்தனர். அங்கு பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். இதனால் விரிவான கோவில் கட்டப்பட்டது. அதற்கு பிரசாந்தி நிலையம் என்று பெயர் சூட்டினார்கள். 100 ஏக்கர் நிலம் கோவிலுக்காக வாங்கப்பட்டது. 1948-ல் அங்கு சாய்பாபா ஆசிரமத்தை கட்டினார். 1954-ல் சிறு ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினார். அவருடைய அருளாசி, அதிசயங்களால் கவரப்பட்டு இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் சாய் பாபாவுக்கு பக்தர்கள் உருவானார்கள்.


இந்தியா முழுவதும் சாய்பாபா சுற்றுப்பயணம் செய்தார். தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தார். அவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் கருதினார்கள். இந்தியா முழுவதும் சத்ய சாய்பாபா ஆசிரமங்கள் உருவாயின. 137 நாடுகளில் அவருக்கு பக்தர்கள் உருவானார்கள். பக்தர்கள் ஏராளமான பணத்தை ஆசிரமத்தில் கொட்டினார்கள். இவற்றை பொது மக்களின் நல்ல காரியங்களுக்காக செலவிட்டார். குடிநீர், சுகாதாரம் போன்ற பணிகளுக்காக அதிக அளவில் செலவிட்டார். தற்போது உலகில் 114 நாடுகளில் 1200 இடங்களில் சத்ய சாய்பாபா மையங்கள் உள்ளன. சாய்பாபா ஆசிரமத்தின் சொத்து மதிப்பு ரூ.2 1/2 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.
இவை மட்டுல்ல இன்னூம் கதை இருக்கிறது கேளுங்கள்


பாபா செய்யும் அற்புதங்களை வெறும் மேஜிக் என்று சொல்கின்றனர். சொல்பவர்களால் அந்த மேஜிக்கைச் செய்து காட்ட முடியுமா? சும்மா வெறும் கையில் விபூதி வரவழைப்பதல்ல. நோயை குணமாக்குவது, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றுவது, இறைக் காட்சி அளிப்பது என்பதை மாஜிக் என்று பிதற்றுபவர்களால் செய்து காட்ட முடியுமா? என்றும்,


ராமனின் அவதாரமாகத் தோன்றிய ஷிர்டி பாபாவின் மறுபிறவியே புட்டபர்த்தி பாபா என்பதும், அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் சக்தியோடு இவ்வுலகில் அவதரித்துள்ளார், மறுபிறவியில் அவர் பிரேமசாயி ஆக அவதரிப்பார் என்றும்.


தான் மறுபிறவியில் பிரேம சாயியாக மைசூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் அவதரிக்கப் போவதாக பாபா முன்னரே குறிப்பிடுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல; பாபாவின் முற்பிறவி அன்னையான ஸ்ரீமதி ஈஸ்வராம்பா சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளார். அவர் வயிற்றிலேயே பாபா மீண்டும் பிரேம சாயி ஆக அவதரிக்க இருக்கிறார். இதை பாபா குறிப்பிட்டுள்ளது மட்டுமல்ல; பிரேம சாயி அவதாரத்தில் அவர் க்ருஹஸ்தராகவும் தோன்ற இருக்கிறார்.


சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Sai100

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Sai103

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Sai105

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Sai106

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Sai108

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Sai109

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Sai110

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Sai111
அதெல்லாம் சரிதாம்பா 96 வயதில் இறப்பேன் என்று சொன்ன பாபா ஏன் பத்தாண்டுகள் முன்னால் இறந்துட்டாறேன்னு கேட்டல் அவர் விரைவிலேயே பிரேம சாயி அவதாரம் எடுத்து மேலும் மக்கள் பணியை முழு வீச்சில் செய்யத்தான் பத்து வருஷம் அட்வான்ஸா போயிட்டதா சொல்றாங்களே இது நியாயமா சார்.


http://natputanramesh.blogspot.com/2011/04/96-86.html

வீடியோவை இந்த லிங்க்கில் பார்க்கவும் சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty Re: சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Post by மகா பிரபு Mon Apr 25, 2011 8:16 am

அரசியல்வாதிகள், சாமியார்கள், ஏன் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கூட இப்படிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இதை நம்பவும் முடியவில்லை நம்பாமல், இருக்கவும் முடியவில்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty சாய்பாபாவின் சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்?

Post by ரபீக் Mon Apr 25, 2011 10:59 am

உலகம் முழுவதும் உள்ள இலட்சக் கணக்கான பக்தர்களால் பகவான் என்று கருதப்பட்ட சாய்பாபா காலமானதைத் தொடர்ந்து அவரது சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புட்டபர்த்தியில் சக்தி மிக்கவர்களாக வலம் வரும் ஏழு நபர்களின் மீதே பெரும்பாலோரின் கண்கள் நிலைத்துள்ளன.

புட்டபர்த்தியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்கு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்களில் இருந்து 1.5 இலட்சம் கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அறக்கட்டளையின் தலைவராக சாய்பாபாவே இருந்து வந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து ஏராளமான சொத்துகளை உடைய இந்த அறக்கட்டளையின் தலைவராக யார் பொறுப்பேற்பார் என்பதை அவரது பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இவர்கள் பற்றிய விவரம் வருமாறு:

கே. சக்கரவர்த்தி : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சக்கரவர்த்தி சாய் அறக்கட்டளையின் செயலாளராக இருந்து வருகிறார். செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற அறக்கட்டளையின் உறுப்பினர் மட்டுமே. ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்த சக்கரவர்த்தி தமிழகத்தைச் சேர்ந்தவர். 1981ஆம் ஆண்டு சாய்பாபாவின் வேண்டுகோளை ஏற்று ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகினார். 1994ஆம் ஆண்டு வரை சத்ய சாய் உயர்கல்விக் கூடத்தின் பதிவாளராகப் பதவி வகித்தார். பின்னர் இவரை சாய்பாபா தன்னுடைய அறக்கட்டளையின் செயலாளராக நியமித்தார்.

எஸ்.வி. கிரி : ஊழல் ஒழிப்பு தலைமை ஆணையராகப் பணியாற்றிய இவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 1998ஆம் ஆண்டு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த இவர், ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். சாய் கல்விக் கூடங்களின் வளர்ச்சியில் இவரது உழைப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

பி.என். பகவதி : இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த இவர், சாய் பாப அறக்கட்டளையின் மிகவும் அறியப்பட்ட மதிப்பு மிக்க உறுப்பினராகத் திகழ்கிறார். சாய் பாபாவின் தீவிர பக்தரான இவர், சாய் பாபாவின் வேண்டுகோளை ஏற்று அறக்கட்டளை உறுப்பினரானார்.

இந்துலால் ஷா : ஆடிட்டராக இருந்து தொழில் முனைவோராக மாறியவர். ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பை உருவாக்கி அதன் வெளிநாட்டு ஆலோசகராகத் திகழ்கிறார். உலக அளவில் சாய் நிறுவனங்களையும் இவர் நடத்தி வருகிறார்.

வேணு ஸ்ரீநிவாசன் : டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான இவர், சாய் குழும நிறுவனங்களின் இந்தியத் தலைவராகத் திகழ்ந்து வருகிறார்.

ஆர்.ஜே. ரத்னாகர் : சாய் பாபா அறக்கட்டளையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் இவர்தான். இவரது தந்தை ஜானகி ராமைய்யா சாய் அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்து வந்தார். அவர் 2005ஆம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டில் அறக்கட்டளை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 39 வயதான இவர் புட்டபர்த்தியில் கேபிள் டீவியை நடத்தி வருகிறார். பெட்ரோல் பங்க் ஒன்றும் இவருக்கு உண்டு.

பாபாவின் தனி உதவியாளர் சத்யஜித் : சாய் பாபா அறக்கட்டளையில் இவர் உறுப்பினராக இல்லை என்றாலும் பாபாவின் உதவியாளராக இருந்ததால் செல்வாக்கு உள்ளவராகத் திகழ்ந்து வருகிறார். இவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சாய்பாபா கூறியதாக கூறப்படுகிறது.

33 வயதான சத்யஜித்தும் தமிழகத்தைச் சார்ந்தவர்தான். சத்ய சாய் பள்ளியில் 5 வயதில் சேர்ந்த இவர் தொடர்ந்து சாய் கல்விக் கூடங்களிலேயே பயின்று, பின்னர் சத்ய சாய் உயர்கல்விக் கூடத்தில் பயின்று எம்பிஏ பட்டம் பெற்றவர். சாய் பாபா உயிருடன் இருந்தபோது இவர் அனுமதியின்றி ஒருவர்கூட சாய்பாபாவை சந்திக்க இயலாது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே வாரிசுப் போட்டி அதிகமானால், இந்து மதம் மற்றும் அறக்கட்டளைச் சட்டம் 1959ன் படி மொத்த சொத்துகளையும் ஆந்திர மாநில அரசே கையகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty Re: சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Post by தாமு Mon Apr 25, 2011 11:15 am

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty Re: சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Post by Tamilzhan Mon Apr 25, 2011 11:32 am

இறந்துவிட்ட ஒருவரை இழிவுப்படுத்துவது நாகரிகம் அல்ல இதுப்போல பதிவுகள் தொடரவேண்டாமே...? சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty Re: சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Post by கண்ணன்3536 Mon Apr 25, 2011 12:49 pm

நல்ல பதிவு .உண்மைகள் உறங்கக்கூடாது .
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty Re: சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Post by பூஜிதா Mon Apr 25, 2011 1:05 pm

ஒண்ணுமே புரியல உலகத்தில :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty Re: சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Post by krishnaamma Mon Apr 25, 2011 4:13 pm

இந்த செய்தி நான் தினமலர் இல் படித்தேன் :

சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.

இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று தெரிவித்தார்.


இதுக்கு என்ன சொல்லரெங்க?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  Empty Re: சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum