புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
142 Posts - 79%
heezulia
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
1 Post - 1%
Pampu
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
307 Posts - 78%
heezulia
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழகம் வாசிக்கிறது Poll_c10தமிழகம் வாசிக்கிறது Poll_m10தமிழகம் வாசிக்கிறது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் வாசிக்கிறது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 2:29 pm


” நகைக்கடைகளை விடவும் புத்தகக் கடைகளில் அதிக விற்பனையும் லாபமும் கிட்டுகின்றன.”

என்ன மூச்சு நின்று விட்டதா?. என்னைக் கொன்றே போடலாம் என்று தோன்றுகிறதா?.

ஜனத்திரள் நிரம்பி வழியும் புத்தகக் கடைகளைப் பார்க்க ஏக்கமாய்த்தான்
இருக்கிறது.வருடத்திற்கு ஒரு முறையேனும் நகைக்கடைக்கு, ஆறேழு முறையேனும்
துணிக்கடைக்கு குடும்பத்தோடு போகும் நாம் மொத்த ஆயுளில் எத்தனை முறை
குடும்பத்தோடு புத்தகக் கடைக்குப் போகிறோம்? ஜூன் மாதத்தில் குழந்தைகளின்
பாடப்புத்தகங்களுக்காக புத்தகக் கடை வரிசைகளில் நிற்பதோடு நமக்கும்
புத்தகக் கடைகளுக்குமான உறவு சுருங்கிப் போகிறது.

“படித்து முடித்துவிட்டு சும்மா இருப்பதாகச்” சொல்லிக் கொள்கிற அவலம்
தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமே உரியது. பத்தாம் வகுப்பில் முப்பத்தொன்பது
சதம் மதிப்பெண்களோடு தேற்சி பெற்றவன் ஏதோ தான் படித்துக் களைத்துவிட்ட
களைப்பை உணர்வது என்பதும் நமக்கே உரிய சோகம்.

படித்தவன் எப்படி சும்மா இருக்க முடியும்? சும்மா இருப்பவன் எப்படி
படித்தவனாக முடியும்?

எதார்த்தம் இப்படி பல்லை இளித்துக் கொண்டு நிற்க, நகைக் கடைகளைவிடவும்
புத்தகக் கடைகளில் அதிக விற்பனையும் அதிக லாபமும் எப்படி?

27.04.1997 தினமணியில் வந்துள்ள அறிஞர். தமிழண்ணல் கட்டுரையின்
ஒருவரிதான் இந்தக் கட்டுரையின் தொடக்க வரி. இடைத் தொண்ணூறுகளில்
“அமெரிக்கா வாசிக்கிறது” என்கிற இயக்கம் லட்சோப லட்சம் டாலர்கள் செலவில்
தொடங்கப்பட்ட செய்தியும் நமக்கு கட்டுரையில் கிடைக்கிறது.

கற்றலும் வாசித்தலும் நுகர்பொருட்களே. அரசாங்கங்கள் இதற்கெல்லாம் மானியம்
ஒதுக்கக் கூடாது . மீறி ஒதுக்கினால் உலக வங்கி நிதியுதவி நிறுத்தப் படும்
என்று நேரடியாகவும் தனது எடுபிடியான உலக வங்கி மூலமாகவும் உலக
நாடுகளுக்கெல்லாம் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு உத்தரவு போட்டு அதில்
பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளது அமெரிக்கா.

பிசகற்று நுணுகினால் ஒரு உண்மை புரியும். கல்வி விலை பொருளானால்
இருப்பவன் மட்டுமே கல்வியை வாங்க முடியும். கற்றலுக்கும் வாங்கலுக்கும்
உள்ள இடைவெளி ஒரு குறுநூல் அளவுக்கு நீளும். கல்வியை காசின்றி கற்க
மட்டுமே முடிந்த உழைக்கும் , ஏழை, ஒடுக்கப் பட்ட பகுதி மக்களால்
கல்வியைக் காசு கொடுத்து வாங்க முடியாது. மத்தியத் தரவர்க்கத்தை இது
சற்று தாமதமாகத் தாக்கும்.

ஆக, மேற்சொன்ன உழைக்கும் மக்களிடம் இருந்து கல்வி களவு போகும். படித்தப்
பணக்காரனுக்கு தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். எனவே அடங்குதல்
அவனது இயல்பாகப் போகும். ஆகவே பணக்காரன் படிப்பதால் அமெரிக்காவிற்கு
ஆபத்தில்லை. ஆனால் , உழைப்பவன் படித்துத் தேர்ந்தால் அவனை அடக்க இயலாது.
கலியைப் பள்ளியிலிருந்து சந்தைக்குத் திருப்பாமெரிக்கா விரும்புவது
இதனால்தான். ஆனால் அமெரிக்கன் தடையின்றி செலவின்றி நிறைய வாசித்துவிட
வசதி செய்வதுதான் “ அமெரிக்கா வாசிக்கிறது” இயக்கத்தின் னோக்கமாக இருக்க
முடியும்.

தன் எல்லைக்கு எஞ்சிய உலகத்தில் அடிமைகள் மட்டுமே குவிந்துகிடக்க
ஆசைப்படும் அமெரிக்கா, குறைந்த பட்சம் தனது குடிகளாவது அறிவார்ந்து
இருக்க வேண்டுமென ஆசைப் படுவதற்காக நாமும் அவசரமாக அமெரிக்காவை ஒருமுறை
பாராட்டி விடலாம். அமெரிக்காவைப் பாராட்ட எஞ்சிய நம் வாழ்வில் வாய்ப்பே
கிட்டாமலும் போகலாம்.

பெசில்வேனியா பல்கலைகழகத்தில் இன்று வெளிவந்த தமிழ் நூல்களும் பைண்டு
செய்யப்பட்டு , தூசு தட்டப்பட்டு அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.7,56,640
சதுராடிப் பரப்பளவில் பன்னிரண்டு தளங்களில் சிகாகோ நூலகம் இயங்குகிறது
போன்ற தகவல்களும் தமிழண்ணல் கட்டுரையில் கிடைக்கின்றன.

இதில் நமக்கும் மகிழ்ச்சிதான். நமது வருத்தெமெல்லாம் அமெரிக்காவின்
உத்தரவுக்கு கீழ்ப்படிந்து வளரும் நாடுகள் நூலகத்திற்கான செலவை
நிறுத்திக் கொண்டதுதான்.

இன்று வெளிவந்த நூல்களும் வாங்கப் பட்டு, பைண்டு செய்யப்பட்டு சுத்தமாக
பாதுகாக்கப் படுகின்றன அங்கே. தமிழகத்து நூல்னிலையங்களில் தமிழ் நூல்கள்
நுழையப் படும் அவஸ்தை நம் நெஞ்சில் வலியைத் தருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் வாசகத் தளம் நீண்டுகொண்டுமிருக்கிறது.
அகன்றுகொண்டுமிருக்கிறது. களகட்டும் புத்தகக் கண்காட்சிகள் இதற்கு
சான்று. ஆனால், பெருகியுள்ள மக்கட் தொகையோடு விகிதாச்சாரப் படுத்த இந்த
விரிதல் மிக மிகக் குறைவுதான். இந்த முரண்பட்ட விகிதாச்சாரத்தை
நேர்படுத்த ஓரளவு பலம் கொண்ட சக்தி நூலகம்.

தமிழன் வாசிக்க வேண்டும் என்று நாம் ஏன் முட்டிக்கொள்ள வேண்டும்?

“தான்” சார்ந்த சிந்தனையை “சமூகம்” சார்ந்த சிந்தனையாக புத்தகங்கள் மாற்றிவிடும்.

ந.முருகேசபாண்டியன் அவர்கள் 1984 ல் ஈழ விடுதலைக்ககப் போராடும் ஒரு
ராணுவக் குழுவின் தலைவரைச் சந்திக்கிறார். (அவர் வெளிப்படையாய்
சொல்லவில்லை. ஆனாலும் அது பிரபாகரன் அவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள்
அதிகம்). இலங்கைத் தமிழர்களைச் சிதறாமல் ஒன்று திரட்டி தங்களது
போராட்டத்தில் ஈடுபடுத்த எப்படி முடிந்தது என்ற கேள்விக்குத் தான் பெற்ற
பதிலை அப்படியே “ யாழ்ப்பாண நூல்நிலையம் ஓர் ஆவணம்” என்ற நூலுக்கான தமது
மதிப்புரையில் தருகிறார்.

”யாழ்ப்பாணப் பகுதியில் கிராமங்கள் தோறும் தொடங்கப் பெற்ற வாசக சாலைகள்
தான் ஈழப் போரட்டத்தின் மையம்,. அதாவது வாசக சாலையில் நூல்களை வாசிக்க
ஆரம்பித்த இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட விழிப்புணர்வு ஈழத்
தமிழர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது.

உலகின் கழுத்தைப் பிடித்துத் திருகி அதன் கவனத்தைப் பல பத்து ஆண்டுகளாக
வைத்திருக்கும் ஒரு பெரும் போராட்டத்தின் மையமே நூலகங்கள்தான் என்பது நூலகங்களின் அழுத்தமான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இதை சராசரி அரசியல்வாதிகள் உணர்வதில் சிக்கலுண்டு. சராசரிகள் படிக்கப் படிக்க அவனுக்குப் பாதிப்பு என்பதால் சராசரி அரசியல்வாதி இதில் அக்கறை காட்டுவதென்பது அத்தையின் தாடிதான். ஆனால் இடதுசாரி மனங்கொண்ட இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் இதன் அழுத்தம் உணர்வது சமூக மாற்றத்திற்கான இந்த நொடித் தேவையாகும்.


தனது வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட பகல் பொழுதுகளைப் போர்க்களங்களிலேயே செலவு செய்த திப்பு இளைஞர்களையும் புத்தகங்களியும் இணைக்க அக்கறைப் பட்டிருக்கிறான். எத்தகைய வளமையும், பாதுகாப்பும் பாழாய்ப் போக ஒரே ஒரு படிக்காத தலைமுறை போதும். இது உணர்ந்த திப்பு, நூலகத்தின் மீது கவனம் குவித்துள்ளான்.

திப்பு வீழ்ந்ததும் நகைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களைச் சுருட்டிக் கொண்டு போன பறங்கியரின் நெற்றியடித்து பாடம் சொன்னது கீழையியல் ஆராய்ச்சியாளன் வில்கின்ஸ் கவர்னர் ஜெனரலுக்கு எழுதிப் போட்ட ஒரு கடிதம். அவன் எழுதினான், “ இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் இது.” அவன் சொன்னது திப்புவின் நூலகத்தை.

அழகூட்டும் ஆபரணங்களையும் வளமை கூட்டும் செல்வங்களையும் பொக்கிஷமென நினைத்து ஞானப் பட்டறையை விட்டுப் போன அறிவினேழைகளாய் தங்களை உணர்ந்த பறங்கியர்கள் அதையும் கொண்டு போனார்கள்.

பொதுவாகவே ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட மண்பரப்பில் எஞ்சி நிற்கும் புராதன கலைச் சின்னங்களையும், நூலகங்களையும் அழித்துவிடுவார்கள். ஏனெனில் ஆக்கிரமிப்பிற்கெதிராய் மண்ணின் குடிகளை கிளர்ந்தெழச் செய்யும். நாளந்தா சிதைக்கப்பட்டதற்கும் , பாக்தாத்தை கைப் பற்றிய தைமூர் அங்குள்ள நூலகங்களை எரித்ததற்கும், புஷ் இர்ராகில் இதையே செய்வதற்கும் இதுதான் காரணம்.

எனவே மின் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, ஆகியவற்றின் மீது செலுத்தப்படும் கவனமும், முக்கியத்துவமும் நூலகங்களின் கட்டமைப்பின் மீதும் திருப்பப்பட வேண்டும்.

இடதுசாரி சிந்தனைக் கொண்ட அமைப்புகள் குறிப்பாக, இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் தங்களது வேலைத் திட்டத்தில் நூலகங்களை உருவாக்குதல், பராமரித்தல், வளர்த்தெடுத்தல் என்பவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவர்கள் முடிவெடுத்து, இயக்கப் படுத்தி, ஒரே நேரத்தில் கல்லூரிகள், பள்ளிகள், ரயிலடிகள், பேருந்து நிலையங்கள் , கடைவீதி மற்றும் ஜனங்கள் திரளும் பகுதிகளில் உண்டியலடித்தாலே நூலகங்கள் உருவாகும். இவர்களது வல்லமையும் அர்ப்பணிப்பும் அத்தகையது.

நூலகங்கள் கட்டுவது, புத்தகங்கள் குவிப்பது என்பதோடு எதைப் படிப்பது, எதை விடுப்பது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். “கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான்” என்பது முதுமொழி. கண்டதையும் கற்க ஏது நேரம் இன்று. நேற்றைவிடவும் வேகமாய்ச் சுழலும் இன்று சொல்லும் பாடம் இதைவிடவும் வேகமாய்ச் சுழலும் நாளை என்பதுதான். கிடைக்கிற சன்னமான நேரத்தில் எதை வாசிப்பது என்பதைத் தேர்ந்தெடுக்கும் தெளிவையும் வாசகனுக்கு கற்றுத் தரவேண்டும்.

மனிதனை ரசிகனாக்குகிற வேலையை ஊடகங்கள் பார்க்கின்றன. நாம் ரசிகனை வாசகனாக்க வேண்டும். இந்நிலையில் இருக்கிற வாசகனும் ரசிகனாவது ஆபத்தானது. வாசகனை ரசிகனாக்குவது உலகமயமாக்களின் ரகசிய வேலைத் திட்டங்களில் ஒன்று. இதன் விளைவிலொரு சிதறல்தான் பாக்கெட் நாவல். பேருந்து ஏறும் போது ஒரு பாட்டில் மினரல் வாட்டரும், ஒரு பாக்கெட்நாவலுமாய் ஏரி இறங்கும்போது இரண்டையும் கிடாசிவிட்டுப் போகும் பழக்கம் வளர்வதை அனுமதிக்கக் கூடாது. காலிக் குப்பியையும் புத்தகத்தையும் ஒன்றாக நினைக்கும் அயோகியத் தனத்தை மாற்றியே ஆக வேண்டும்.

வாய்ப்புக் கொடுத்தால் தமிழகம் வாசிக்கும்.

வாசிக்கும் தமிழகம் நிச்சயம் சாதிக்கும்.

சரி, என்ன செய்யலாம்?

(இது சில ஆண்டுகளுக்கு முன்னால் “இளைஞர் முழக்கம்” இதழில் வந்தது. சென்னையில் உருவான நூலகம் ஒன்று தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை என்பதாலும், பெரிதாய் இதை யாரும் அப்போதும் , பிறகு “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற எனது நூலில் வந்தபோதும் படித்துவிடவில்லை என்பதாலும் இதைப் ‘உலக நூலக தின ‘ அடையாளமாகப் பதிவு செய்கிறேன்.)



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகம் வாசிக்கிறது 38691590

இரா.எட்வின்

தமிழகம் வாசிக்கிறது 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 2:42 pm

அண்ணே நல்ல பதிவுதான் ஒத்துக்குறேன் படிக்கும் பழக்கம் இங்கே குறைந்துவிட்டதுதான் ஆனா இன்னைக்கு உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் அநேகமாக எல்லாவகை புத்தகங்களும் இணயதில் கிடைக்கின்றனவே பிறகு ஒரு நூலகத்தில் உள்ள புத்கங்களை விட பலமடங்கு அதிகமாக இணயதில் சேமிக்கலாமே அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் வாசிக்கிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 2:46 pm

balakarthik wrote:அண்ணே நல்ல பதிவுதான் ஒத்துக்குறேன் படிக்கும் பழக்கம் இங்கே குறைந்துவிட்டதுதான் ஆனா இன்னைக்கு உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் அநேகமாக எல்லாவகை புத்தகங்களும் இணயதில் கிடைக்கின்றனவே பிறகு ஒரு நூலகத்தில் உள்ள புத்கங்களை விட பலமடங்கு அதிகமாக இணயதில் சேமிக்கலாமே அன்பு மலர் அன்பு மலர்

வாசிப்பு அனுபவம் என்பது அலாதியானது. ஆயிரம் தான் இணையங்கள் வந்தாலும் அவற்றின் பயன்பாடு சொல்லவே முடியாத அளவு அதிகம் என்றாலும் புத்தகத்தை எடுத்து வாசிக்கும் அனுபவம் சுகமானது. இரண்டும் தேவைதான்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகம் வாசிக்கிறது 38691590

இரா.எட்வின்

தமிழகம் வாசிக்கிறது 9892-41
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 23, 2011 2:56 pm

தமிழகம் வாசிக்கிறது 1194657695



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழகம் வாசிக்கிறது Scaled.php?server=706&filename=purple11
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 2:57 pm

ரோஜாகார்த்தி wrote:தமிழகம் வாசிக்கிறது 1194657695

மிக்க நன்றி ரோஜா கார்த்திக்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகம் வாசிக்கிறது 38691590

இரா.எட்வின்

தமிழகம் வாசிக்கிறது 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 3:30 pm

உண்மையே எட்வின்...

வாசிப்பு குறைந்து தான் போய்விட்டது.... மற்றவர்களைப்பற்றி எனக்கு தெரியாது.... ஆனால் எனக்கு அப்படி தான்....

கல்யாணத்திற்கு முன் எப்பவும் எதுனா புக் படிச்சிக்கிட்டே இருப்பேன்.... புத்தகப்புழு என்றே பெயர் எனக்கு..... இவ செத்தான்னா கட்டை வேண்டாம் புக் வைச்சு எரிச்சா தான் இவ ஆன்மா சாந்தியடையும்னு கிண்டல் செய்தப்ப என் நெருங்கிய தோழி விஜி சொன்னதை நினைவுக்கூறுகிறேன்....

அதெல்லாம் இப்ப தான்..... போக போக படிக்க கூட வாய்ப்பில்லாமல் படிக்க நேரமில்லாமல் படிக்க அலுப்பு பட்டுக்கிட்டு அப்படி ஆயுடுவா பாரேன்....

சாப்பிடும்போதும் புக் வேண்டும்... உறக்கம் வரும் வரை எதுனா புக் படிச்சுக்கிட்டே தான் இருப்பேன்.....

இப்பவும் ஒரு அருமையான கதை வாசித்தேன்.....

இணையத்தில் எத்தனை புத்தகங்கள் வந்தாலும்... நேர்ல புக் வாசிக்கும் சுகமே அலாதி.... இந்தியா போகும்போது ஃப்ளைட்ல புக் படிக்கும் பைத்தியம் பார்த்திருக்கீங்களா? நான் தான்......

ட்ரெயின்ல போகும்போதும் அள்ளிக்கிட்டு போவேன்... எல்லோரும் இயற்கை ரசிக்கும்போது நான் மட்டும் புத்தகத்தை மேய்வேன்...

வாசிப்பின் சுகம் அறிந்துவிட்டால் மக்கள் கண்டிப்பா அதனை விடமாட்டார்கள் மக்கள்.....

இப்ப இருக்கும் ஜெனரேஷனுக்கு புக் வாசிக்க டைம் கூட கிடைக்குதா என்ன?

நாமே ஏற்படுத்திக்கிறது தான் வாசிப்பு என்பதும்....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் எட்வின்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழகம் வாசிக்கிறது 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 3:34 pm

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே எட்வின்...

வாசிப்பு குறைந்து தான் போய்விட்டது.... மற்றவர்களைப்பற்றி எனக்கு தெரியாது.... ஆனால் எனக்கு அப்படி தான்....

கல்யாணத்திற்கு முன் எப்பவும் எதுனா புக் படிச்சிக்கிட்டே இருப்பேன்.... புத்தகப்புழு என்றே பெயர் எனக்கு..... இவ செத்தான்னா கட்டை வேண்டாம் புக் வைச்சு எரிச்சா தான் இவ ஆன்மா சாந்தியடையும்னு கிண்டல் செய்தப்ப என் நெருங்கிய தோழி விஜி சொன்னதை நினைவுக்கூறுகிறேன்....

அதெல்லாம் இப்ப தான்..... போக போக படிக்க கூட வாய்ப்பில்லாமல் படிக்க நேரமில்லாமல் படிக்க அலுப்பு பட்டுக்கிட்டு அப்படி ஆயுடுவா பாரேன்....

சாப்பிடும்போதும் புக் வேண்டும்... உறக்கம் வரும் வரை எதுனா புக் படிச்சுக்கிட்டே தான் இருப்பேன்.....

இப்பவும் ஒரு அருமையான கதை வாசித்தேன்.....

இணையத்தில் எத்தனை புத்தகங்கள் வந்தாலும்... நேர்ல புக் வாசிக்கும் சுகமே அலாதி.... இந்தியா போகும்போது ஃப்ளைட்ல புக் படிக்கும் பைத்தியம் பார்த்திருக்கீங்களா? நான் தான்......

ட்ரெயின்ல போகும்போதும் அள்ளிக்கிட்டு போவேன்... எல்லோரும் இயற்கை ரசிக்கும்போது நான் மட்டும் புத்தகத்தை மேய்வேன்...

வாசிப்பின் சுகம் அறிந்துவிட்டால் மக்கள் கண்டிப்பா அதனை விடமாட்டார்கள் மக்கள்.....

இப்ப இருக்கும் ஜெனரேஷனுக்கு புக் வாசிக்க டைம் கூட கிடைக்குதா என்ன?

நாமே ஏற்படுத்திக்கிறது தான் வாசிப்பு என்பதும்....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் எட்வின்...

இந்தத் தலைமுறை நிறைய வாசிப்பதிலும் விவாதிப்பதிலும் சொல்லிக்கொள்ளுமளவு நேரம் ஒதுக்குகின்றனர்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகம் வாசிக்கிறது 38691590

இரா.எட்வின்

தமிழகம் வாசிக்கிறது 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 3:37 pm

அட இது கண்டிப்பா சந்தோஷமான விஷயம் எட்வின்......





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழகம் வாசிக்கிறது 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 5:22 pm

மஞ்சுபாஷிணி wrote:அட இது கண்டிப்பா சந்தோஷமான விஷயம் எட்வின்......

ஹேப்பி ஈஸ்டர் எட்வின்.



ஈஸ்ட்டரா?
எனக்கு எந்த மதத்தோடும் சம்மதம் இல்லாதவன்.




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகம் வாசிக்கிறது 38691590

இரா.எட்வின்

தமிழகம் வாசிக்கிறது 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 5:23 pm

இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அட இது கண்டிப்பா சந்தோஷமான விஷயம் எட்வின்......

ஹேப்பி ஈஸ்டர் எட்வின்.



ஈஸ்ட்டரா?
எனக்கு எந்த மதத்தோடும் சம்மதம் இல்லாதவன்.

அப்போ நீங்க கூட்விண்ணு சொல்லுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் வாசிக்கிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக