புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
25 Posts - 69%
heezulia
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
361 Posts - 78%
heezulia
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
8 Posts - 2%
prajai
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூல் விமர்சனங்கள் :இரா இரவி


   
   

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:51 pm

நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


தொகுப்பாசிரியர் : கவிஞர் மணிமேகலை நாகலிங்கம்
“இந்நூல்
உணர்வுகளை புரிந்து கொள்ளும் உயரிய உள்ளங்களுக்கு” என்று காணிக்கை
செய்துள்ளார். உண்மை தான் மனைவி இறந்த வீட்டிலேயே மறுமணத்திற்கு பெண்
தேடும் மாப்பிள்ளைகள் மலிந்து விட்ட காலம் இது. ஆனால் எங்கோ பிறந்து,
வளர்ந்து, வந்து, கணவன், குழந்தைகள் என தியாக வாழ்க்கை வாழ்ந்து மறைந்த
மனைவியின் நினைவாக கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் தொகுத்து உள்ள ஹைக்கு கவிதை
நூல். முன்னனி ஹைக்கூ கவிஞர்களின் தலா மூன்று கவிதைகள் நூலில் உள்ளது. தலா
ஒரு ஹைக்கூ மட்டும் தங்களின் ரசனைக்காக எழுதி உள்ளேன்.
என்னைப்
பொருத்தவரை ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் அவளுக்கு மறுமணம் அவசியம்.
ஆனால் ஓர் ஆண், குழந்தைகள் இருக்கும் போது மனைவி இறந்து விட்டால், மறுமணம்
செய்யாமலே அவரின் நினைவாகவே வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. குழந்தைகளுடன்
ஒரு தந்தை மறுமணம் செய்யும் போது குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி
விடுகின்றது. தந்தையின் மறுமணத்தின் காரணமாக அல்லல்பட்ட குழந்தைகள்
எண்ணிலடங்காதவை.என் வாழ்வில் நடந்த உண்மை. என் தாத்தா மறுமணம் செய்து
கொண்டதால் பேரனாகிய என் வாழ்க்கை வரை அந்த பாதிப்பு தொடர்ந்தது. அந்த வலி
என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. மறுமணம் செய்யும் ஆண்களையே வெறுத்தேன்.
ஹைக்கூ கவிதை சிறந்த வடிவம் என்பதை உணர்த்திடும் நூல். மனைவியின் மேன்மையை
மகாகவி பாரதி சொன்ன வைர வரிகள் நூலின் பின் அட்டையில் உள்ளது.
ஓ மனிதர்களே மண்ணுக்குள் எல்லா உயிர்களும்
தெய்வமென்று பேசுகிறீர்கள் அது உண்மையென்றால்
நீங்கள் மாலையிட்டு கைபிடித்த மனைவியும் ஒரு தெய்வமில்லையா?
கவிஞர்
மணிமேகலை நாகலிங்கம் மறைந்து விட்ட மனைவியின் நினைவாக இந்த கணவன்
கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது. மனைவியின் நினைவு நாட்களில் ஏதாவது
தொண்டு செய்யுங்கள்.
புத்தகம்
உள்ளே மயிலிறகு
கண்ணாய் நீ – ஒவியக்கவிஞர் அமுதபாரதி
உதிரும் ஒவ்வொரு பொழுதும்
மீண்டும் வரப் போவதில்லை
உன்னை மாதிரி – வண்ணை சிவா
வருடங்கள் கழிந்தும்
சரியாய் அடையாளம் சொன்னது
அவளின் ஓரப்பார்வை – ஜி.மாஜினி
மரணம் செத்துப் போனது
காதல் முன்னே
யமுனைக்கரை தாஜ்மகால் – துறவி
ஒருவருக்கும் தெரியாமல்
ஒளிந்திருக்கிறாள்
மனதுக்குள் அவள்-சிவபெருமான்
உளி வடிக்கா
உயிர் சிலை
இதயத்தில் அவள் – உ.பாலஹாசன்
எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் ரேகை -அறிவுமதி
நானும் அவளும்
பிரிவதில்லை
புகைப்படத்திலிருந்து – அய்யப்பன்
அறைகிறேன் என்னையே
ஆனந்தமாய் உன்
ஞாபகச் சிலுவையில் – கோ.பாரதி மோகன்
கனவைக் கிள்ளிப் போனாய்
வலிக்கத்தான் செய்கிறது
நீயில்லாத பகல் – மு.முருகேஷ்
உள்ளதை நேசிக்காமல்
உள்ளத்தை நேசிப்பவள்
மனைவி – எஸ்.பி.என்
சமாதியும்
சன்னதி தான்
தெய்வமாய் மனைவி – கலையருவி
எனக்குப் பயன்படாது
எதற்கும் என்னிடம் இருக்கட்டும்
உன் ஒட்டுப்பொட்டு – ஆர். எஸ்.நாதன்
இதயத்தில் இன்னும்
ஈரமாய்
அவள் தந்த முத்தம் – பாலபாரதி
என் பாதங்கள்
சுவடு பதிக்கும்
உன் பாதையில் – தமிழ்நெஞ்சன்
கண்மூடி ரசித்தேன்
உருண்டு விளையாடும்
அவள் விழியை – பா.உதயக்கண்ணன்
வீடு நிறைந்திருந்தும்
மனம் காலியாகவே
அவள் இல்லாமல் – முகவை முனியாண்டி
நீ ஒருமுறை இறந்தாய்
நான் தினம் தினம்
புதைக்கப்படாமல் – ச.காவியன்
காலி செய்த வீடு
மறக்காமல் எடுத்து வந்தேன்
பழகிய நாட்களை – நா.கவிக்குமார்
அடையாளம் தெரியும்
தூரமாய் இருந்தாலும்
அவளின் நடை – ஆலா
சோகம்
அதுவும் சுகம் தான்
நினைவில் நீ – மணிமேகலை நாகலிங்கம்
ஒவ்வொரு
ஹைக்கூ கவிதையும் ஒவ்வொரு உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. மலரும் நினைவுகளை
உருவாக்குகின்றன. இந்த ஹைக்கூ கவிதைகளைப் படிக்கும் போது வாசகர்களின்
நினைவிற்கு காதல் மனைவியின் நினைவு வருவது நிச்சியம். இந்நூல் பற்றி
கவிஞர் வெண்ணிலா ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று குறை சொல்லி
உள்ளார். அதுவும், அதற்கான மறுப்பும் நூலில் உள்ளது கூடுதல் சிறப்பு. இன்று
விமர்சனங்களை ஜீரணித்து கொள்ளும் பண்பு பலருக்கு இருப்பதில்லை. ஆனால்
தொகுப்பாசிரியருக்கு இப்பண்பு நிறையவே உள்ளது என அறிய முடிகின்றது.
காதலியை, மனைவியே வெறும் போகப் பொருளாகப் பார்க்காமல் உயிருள்ள சக மனுசியாக
மதித்து அவளது உழைப்பை, தியாகத்தை உணர்ந்து அவளின் நினைவாக வாழ்வதே
வாழ்க்கை.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:52 pm

மனிதனைத் தேடி , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி





நூல் ஆசிரியர் : கவி வேந்தர் மு.மேத்தா-

நூலின் அட்டைப்படத்தில் புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா-வின்
புகைப்படம் அலங்கரிக்கின்றது. “மனிதனைத் தேடி ” கவிதை நூலின் தலைப்பு
இன்றைக்கு மிகப்பொருத்தமாக உள்ளது. மேல்நாட்டு அறிஞர்கள்,”கையில்
விளக்குடன் மனிதனைத் தேடுகின்றேன்” என்று தேடுவதைப் போல,இன்றைக்கு
மனிதாபிமானமிக்க மனிதனாக வாழக்கூடிய நல்ல மனிதனை,தேடித்தான் கண்டுபிடிக்க
வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு
இதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது.
மனிதம் மறந்து,சாதிமதக் கலவரத்தில் ஈடுபட்டு,வன்முறை வளர்க்கும் மனித
விலங்குகளை,மனிதனாக்கும் விதமாக கவிதைகளைப் படைத்து உள்ளார் கவிஞர்
மு.மேத்தா,21.03.1999 அன்று எழுதிய கவிதையில் இணையம் பற்றியும்,மின்னஞ்சல்
பற்றியும் குறிப்பிட்டு உள்ளார் தொலைநோக்கு சிந்தனையாளர் கவிவேந்தர்
மு.மேத்தா. மு.மேத்தா என்றால்,புதுக்கவிதையின் முன்னோடி என்று பொருள்.
நூலில் அணிந்துரை,என்னுரை என்ற பெயரில் பக்கங்களை விரையம் செய்யாதல்
நேரடியாக கவிதைகளை அச்சிட்டு உள்ளனர்.
வெளிநடப்பு
ஆயுதம் ஏந்துகிறார்கள் பக்தர்கள்
ஆலறி ஓடுகிறான் கடவுள்
கவிதையின் கடைசி இரண்டு வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. வன்முறை
வெறியாட்டம் நடத்தி கடவுளுக்கு ஆலயம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு
கட்டினால்,கடவுள் அலறி ஓடி விடுவார் என வன்முறையாளர்களுக்கு புத்திப்
புகட்டும் விதமாக கவிதை உள்ளது.
சுயவரம்
சிறகுகள் உனக்கு சீதனமாய் வந்தன
நீ சிலுவைகளை தயாரித்துக் கொண்டாய்
பாரம் சுமப்பதாய்ப் பறைசாற்றுகிறாய்
வரங்களே உனக்கு வழங்கப்பட்டன அவற்றை
சாபங்களாய் மாற்றி ஏன் சங்கடப்படுகிறாய்?ஸ
சுயவரத்தில் தவறானவர்களைத் தேர்வுசெய்து விட்டு தவிக்கும் பெண்களின் சோகத்தை சொற்களால் வடித்து உள்ளார்.
நாதன் உள் இருக்கையில்,நட்டக் கல்லும் பேசுமோ என்ற சித்தர் பாடல்களை நினைவூட்டும் விதமாக ஒரு கவிதை உள்ளது.
தேடல்
கோவில் கோவிலாய் யாரைத் தேடுகிறாய்? கடவுளை
உனக்குள் இருப்பவரை நீ எப்படி வெளியே பார்க்க முடியும்?
அங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் மனிதர்களாக இல்லை!
நான் மனிதனாக இருக்கும் மனிதனைத் தேடுகிறேன்.
மனிதன் மனசாட்சியை தன்னையே கடவுளாகக் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை
இனிக்கும். மனிதனைத் தான் மனிதனாக இரு என்று அறிவுறுத்த வேண்டிய அவல
நிலை.விலங்கிலிருந்து வந்தவன் தான் மனிதன். அதற்காக மனிதன் விலங்காக மாறக்
கூடாது என எச்சரிக்கை செய்ய வேண்டி உள்ளது. இன்றைய படைப்பாளிகளின்
முக்கியக் கடமை என்னவென்றால்,மனிதனை மனிதனாக வாழ அறிவுறுத்தும் படைப்புகளே
இன்றைய தேவையாக உள்ளது.
பரமனுக்கு நீ தான் பாதுகாவலனா?
கறுப்புப் பூனைப் படையுடன் காட்சியளிக்க
கடவுள் என்ன கட்சித் தலைவனா?
உண்மை தான்.இப்போது பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களின் போது கட்சித்
தலைவருக்கு உரிய பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
அப்படி இருந்தும் விரும்பத்தகாத மோதல்கள் நடைபெற்று வருகின்றன. மசூதி
வழியாகத் தான் செல்வோம் என்பதும்,மசூதி முன்பு உரக்க மத்தளம்
அடித்தல்,வம்பு இழுத்தல் வன்முறை வளர்த்தல் வாடிக்கையாகி வருகின்றது வேதனை.
மலர்களை உதிர்க்கும் காற்றைக் கூட மன்னிக்க மனம் வராது
மனிதர்களை உதிர்க்கும் மதவெறிகளுக்கு மண்ணில் இடம் ஏது?
எந்த ஒரு தாயும் தன் மகன் நல்லவனாக இருக்க வேண்டுமென்றே விரும்புவான். அவன் கெட்டவன் ஆகி விட்டால் கொதித்துப் போவாள்.
தலைப்புச் செய்தி
விபத்தில் தப்பித்துக் கொண்ட தாய்
செய்தி கேட்டுச் செத்துப் போனால்
ரயிலுக்கு வெடி வைத்தவன் மகன்!
தீபங்களை அணைத்து விட்டு,தீப்பந்தங்களை உயர்த்திப் பிடித்தபடி ஊருக்குள்
புகுந்தது ஒரு மதவெறிக் குமபல். இந்திய தொழுநோய்க்கு மருத்துவம் பார்க்க
வந்த ஆஸ்திரேலிய மூலிகை அதன் தங்கத் தளிர்களுடன் சாம்பல் ஆனது.
ஓரிசாவில் ஸ்டீவர்ட் ஸ்டெயின்ஸ் என்ற பாதிரியாரை குழந்தைகளுடன்
எரித்துக் கொன்ற மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிச் செயலுக்கான கண்டனத்தை
கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.
யாதும் ஊரே
சாதிமத சமயப்பூசல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு
முந்திய அழுக்கு நாட்காட்டிகள்
மூலையில் வீச வேண்டிய அவற்றிலா முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?
பெரியகுளத்தில் பிறந்த கவிவேந்தர் மு.மேத்தா பெரிய உள்ளத்திற்குச்
சொந்தக்காரர். சாதிமத மோதல்களை விடுத்து மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்று
மனிதநேயம் வலியுறுத்தும் விதமாக இந்த “மனிதனைத் தேடி” நூலை எழுதி உள்ளார்.
புதுக்கவிதை ரசிகர்களுக்கு பலா இந்த நூல். கண்ணீர்ப் பூக்கள் என்ற முதல்
நூலி;ன் மூலம் பல்வேறு பதிப்புகள் வர காரணமாக இருந்த சாதனையாளர்,சாகித்ய
அகதெமி விருது பெற்ற கவிஞர் மு.மேத்தா அவர்களின் தரமான படைப்பு. வளரும்
கவிஞர்கள் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நூல். கவி வேந்தர் என்ற பந்தா
இல்லாத எளிமையான மனிதர். பழகுவதற்கு இனிமையான மனிதர். புதுக்கவிதைக்கு
புதுப்பாதைப் போட்டவரின் பூபாளம் இந்நூல்.


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:54 pm

கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் துளிர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூலின் தலைப்பைப் போலவே அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது. இந்நூல்
தாய்க்கும், தமிழுக்கும் என்று காணிக்கையாக்கி, தாய்ப்பற்றையும்,
தமிழ்ப்பற்றையும் பறைசாற்றியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் துளிர். மாற்றுத்
திறன் உடைய சகோதரர் கவிஞர் துளிர், கவிஞர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளர்
என்பதையும் பதிவு செய்தார். தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் செந்தமிழ்க்
கல்லூரி முதல்வர் பட்டிமன்ற நடுவர் க.சின்னப்பா அவர்களின் அணிந்துரை
முத்திரை பதிக்கின்றது. திரைப்படப் பாடலாசிரியர் விவேகா, புனித பிரிட்டோ
மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் மா.ஜெயராஜ் ஆகியோரின் அணிந்துரை
நூலிற்கு அழகு சேர்க்கின்றது.
நூலின் தலைப்பிற்கான கவிதை இதோ!
கடித்த கடலை மிட்டாயிலும்
மடித்த கைக் குட்டையாலும்
ஒவ்வொரு
அம்மாவின் கைக் குட்டையாலும்
அந்த அழகான வானம் திருடப்பட்டிருக்கிறது.

இருட்டு இதிகாசம்
உறக்கத்தில் எழு! ஏழுதுகோலால் உழு!
கவிதையைத் துடைத்து காகிதத்தில் படை

இப்படி இவர் இளமைக் காலத்தில், காகிதத்தில் படைத்த படைப்புகளை நூலாக்கி உள்ளார்.ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது கூடுதல் சிறப்பு.
மாநாடு
வறுமை ஒழிப்பு மாநாடு
அறிவிப்புப் பலகையில்
பிச்சைக்காரர்கள் நுழையத் தடை

இனிப்பு
அன்னையர் தின விழாவில்
அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறது
அனாதை இல்லத்திலுள்ள குழந்தை

இந்த ஹைக்கூ படித்தவுடன் சிந்தையில் சிறு மின்னல் வருகின்றது. அது தான் படைப்பாளியின் வெற்றி.
ஆசை
கரைந்து போகும் கிராமத்துப் பண்பாட்டை
கருவறையில் சேமிக்க ஆசை
தொலைந்து போன தொன்மைக் கலைகளை
தோண்டியெடுக்க ஆசை

உலகமயம் தாராளமயத்தால் தமிழன் இழந்து வரும் அடையாளத்தை பதிவு செய்கின்றார்.
வெற்றுத் தாளாய் இரு
வெற்றுத் தாளாய் இரு மனிதா
அங்கு தான் நீ நிரப்பப்படுகிறாய்

உண்மையிலும் உண்மை வைர வரிகள். எல்லாம் தெரிந்தவன் என்று ஏற்கெனவே
எழுதப்பட்ட தாளாக இருந்தால் பதிதாக எழுதிட இடம் கிடைப்பதில்லை. மிகப் பெரிய
கருத்தை மிக எளிதாக விளக்கி உள்ளார்.
நூலில் சிந்தனை விதைக்கும் கவிதைகள் உள்ளது, காதல் கவிதைகளும் உள்ளது.
ஹைக்கூ விற்கு தலைப்பு போடாமல் 3-வது வரியில் தலைப்புக் கொண்டு வந்தால்
ஹைக்கூ சிறக்கும். கவிஞர் துளிர் எதிர்காலத்தில் ஹைக்கூவை நன்கு உள்
வாங்கிக் கொண்டு இன்னும் சிறப்பாக படைக்க வேண்டும் என்பது என் ஆசை.
துளிர்க்கும் கவிஞரின் கன்னி முயற்சி முதல் படைப்பு. பாராட்டுக்குரிய
படைப்பு. தொடர்ந்து பல நூல்களை படைக்க வேண்டும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை
பெரியார், முழு மனிதன் என்பதற்கு கூறும் இலக்கணத்திற்கு ஏற்ப கவிஞர்
துளிர் நூல் எழுதி வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள்.
நிறைய கவிதைகள் எழுதி வைத்துக் கொண்டு, நூலாக்கத் தயங்கும் கவிஞர்கள்
ஏராளம். ஆனால் கவிஞர் துளிர் உடன் நூலாக்கிய துணிவிற்குப் பாராட்டுக்கள்.
நிறைய வாசியுங்கள். குறைவாக எழுதுங்கள்.
இன்னும் பல கவிதை நூல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது இலக்கிய
உலகம் தொடர்ந்து படைத்து முத்திரை பதிக்க வாழ்த்துக்கள். உலக அளவில்
மாற்றுத் திறன் உடையவர்கள் வியக்கத்தக்க வகையில் சாதனை படைத்து
வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞர் துளிர். கவிதை நூல் வெளியிட்டு சாதனை
படைத்துள்ளார்.





eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:55 pm

நூலின் பெயர் : களவு போன காலங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலின் ஆசிரியர் : கவிஞர் கு.சிவசுப்பிரமணியன்

நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. பாலைவனத்தில் ஒரு அழகிய பெரிய
மரம். களவு போன காலங்கள் பாலைவனமாகவும், காலம் களவு போகாமல்
இருந்திருந்தால் மரமாக செழித்து இருக்கும் வாழ்க்கை என்று சொல்வது போல்
உள்ளது. நூலாசிரியர் கவிஞர் கு.சிவசுப்பிரமணியன் கொஞ்சு தமிழ்க் கோவையின்
நற்றமிழ்ப் பாவலர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிக் கட்டுப்பாடு
அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்
இலக்கிய பணியிலிருந்து ஓய்வு பெறாமல் உழைத்து வரும் உழைப்பாளி. எழுந்திரு
பாப்பா இவரின் முதல் படைப்பு. இந்நூல் இரண்டாவது படைப்பு. ஒவியா
பதிப்பகத்தின் தரமான வெளியீடாக வந்துள்ளது.

மரபு அறிந்து மரபு மீறு
என்பார்கள். நூலாசிரியருக்கு மரபும் வருகின்றது. புதுக்கவிதையும்
வருகின்றது. மரபை ரசித்துப் படித்தவர்கள் புதுக்கவிதையை எளிதில்
ஏற்பதில்லை. மரபுக் கவி விரும்பிகளுக்கு விருந்தாக உள்ளது நூல். அரிமா
டாக்டர் பூவண்ணன் அணிந்துரை, கவிஞர் வதிலை பிரபாவின் வாழ்த்துரை
முத்தாய்ப்பாக உள்ளது. வருடம் தோறும் அற்புதமாக தொகுப்பு நூல் வெளியிட்டு
தமிழன்னைக்கு அணிகலன் பூட்டும் கோவை வசந்தவாசல் கவி மன்றத்தைச் சேர்ந்தவர்
நூல் ஆசிரியர் என்பது கூடுதல் சிறப்பு. "தாயே தமிழே" என்ற தொடங்கி
திருக்குறளின் முப்பால் போல மூன்று பகுதியாக பிரித்து 66 கவிதைகளின்
அணிவகுப்பு அழகான சொற்களின் சுரங்கமாக உள்ளது.

தாயே தமிழே

உலகின் மூத்த உயர் தனிச்செம்மொழி
மலையென உயர்ந்து கடலென விரிந்து
வானெனப் பரந்த வண்டமிழ்த் தாயே!
தேனமு தாகும் தொண்மொழித் திருவே!


உலகின் முதல் மனிதனான தமிழன் பேசிய தமிழ் மொழியின் சிறப்பை நன்கு விளக்குகிறார்.

கதிரவன்,நிலவு,காற்று,பனித்துளி,மலையருவி,
மலர் இப்படி இயற்கையை கவிஞர் மிகவும் ரசித்து,ருசித்துப் பாடி உள்ளார்.
இயந்திரமயமாகி விட்ட இன்றைய உலகில் மனிதனே இயந்திரமாக மாறி வரும் சூழலில்
இயற்கையை ரசிக்க மனமும், நேரமும் இருப்பதில்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற
நூலகளின் வாசிப்பின் மூலமாகவாவது இயற்கையை ரசிக்கலாம். பதச்சோறாக கவிதை.

மலையருவி

தூய நன் வெண்மைப்படலம்
துளிர்ந்திடும் தண்ணீர்த் திவலை
வேய்ங்குழல் மூங்கில் பட்டு
விதவித இசை பரப்பி
காய்ந்திடும் பாறை மோதி
கடுமொள காவிற் பரப்பி
பாய்ந்திடும் தெண்ணீர் வெள்ளப்
பனித்திரள் அழகே அருவி


கவிஞர் அருவியை கண்டுகளித்து கவிதையாக்கி இருக்கிறார். வாசகர்களும் இது
போன்ற கவிதை நூல்களை வாங்கிப் படித்தால் கவிதை பற்றிய புரிதலும் புதிய
சொற்களும் விளங்கும். வாசகர்கள் புகழ்பெற்ற கவிஞர்கள் கவிதையை மட்டுமே
படிப்பதால் புத்தகக் கடைகளில் வளரும் கவிஞர்களின் படைப்பை வாங்கி வைக்கவே
யோசிக்கின்றனர். வாசகர்களும் வளரும் கவிஞர்களை ஆதரிக்க முன்வர வேண்டும்.

தொடக்கம்

அன்னை வயிற்றில் அன்பின் வடிவாய்
அடைபடு குழந்தைச் செல்வம்
தன்னை விடுத்துத் தாரண காணும்
பிறப்பது வாழ்வின் தொடக்கம்
உருவெழில் பெற்று ஒவியம் நிகர்ந்த
உவந்திடும் புதுமணப் பாவை
பருவக் கோலம் பெற்றனன் மன்றல்
புகுவதும் வாழ்வின் தொடக்கம்.


இந்தியாவில் 61-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குத்தாட்ட நடிகைகளின் கும்மாளத்தை ஆபாச நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து
பரவசப்பட்டு பொழுது கழித்தனர். ஆனால் இன்னும் வறுமை ஒழிந்தபாடில்லை.
கொத்தடிமைத் தனங்களும் ஒழிந்தபாடில்லை. அதனை உணர்த்தும் அழகிய கவிதை இதோ!

கொத்தடிமை

நித்தம் பணியாற்றி
நீங்காத வறுமையினால்
கொத்தடிமை ஆனார்
குடும்பத்தை அடகு வைத்து
மாடாக உழைத்தார்
மனைவாழ்வில் நலங்கணார்
பாடுமிகப் பட்டும்
பயன்துய்க்க வழி காணார்


இந்தியாவில் இன்னும் முழுமையாக கொத்தடிமை ஒழிக்கப்படவில்லை என்பதை உணர்த்திடும் கவிதை

தெய்வத் தமிழ்

அமுதூறும் பாக்களினால்
அற்புதங்கள் பலகாட்டி
தமிழால் இறையோனைத்
துதிபாடி உயர்ந்தனரே
மீண்டும் கோவில்களில்
மடைதிறந்த வெள்ளமென
ஆண்டவன் புகழ்பாட
அருந்தமிழில் பாடுவமே


எல்லாம் அறிந்த கடவுளுக்கு உலகின் முதன்மொழி தமிழ்மொழி எனது தாய்மொழி
புரியாதா? புரியாது என்றால், என் மொழி புரியாத கடவுள் எனக்கு எதற்கு? என்று
ஒரு பாமரன் சொன்னான். ஆதுபோல தமிழ்நாட்டில் தமிழர்களின் காணிக்கைகளால்
நடக்கும் திருக்கோயில்களில் தமிழிலேயே அர்ச்சனைகள் நடைபெற வேண்டும்.
தமிழிலும் அர்ச்சணை செய்யப்படும் என்பது மாறி, தமிழில் மட்டுமே அர்ச்சனை
நடக்கும் என்ற நிலை வர வேண்டும் என்ற ஆவல் கவிஞருக்கு இருப்பது கவிதைகளில்
புலப்படுகின்றது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை வர வேண்டும்.
உயர் நீதிமன்றங்களிலும் தமிழ் இடம் பெற வேண்டும்.

கடலும் வானும்
என்ற தலைப்பில் கவிதை நாடகம் நூலில் உள்ளது. நல்ல நடை தெளிந்த நீரோடை
போன்ற கவிதைக்கு விளக்கவுரை தேவையின்றி எளிமையாக எல்லோருக்கும் புரியும்
விதத்தில் கவிதை படைத்த கவிஞர் கு.சிவசுப்பிரமணியன் பாராட்டுக்குரியவர்.
தொடர்ந்து பல நூல்களை எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள்


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:57 pm

கருகும் பிஞ்சுகள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி








நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.ஜீவா


நூலின் அட்டைப்படம் நூலின் பெயருக்கேற்றபடி கருகும் பிஞ்சுகளின் சோகத்தை
உணர்த்துகின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் இரா.ஜீவா மிகச் சிறந்த மனிதரான
ஜீவாவின் பெயரை வைத்து இருப்பதால் மிகச்சிறந்த கருத்துக்களை கவிதையாக்கி
உள்ளார். பேராசிரியர் த.இராஜாராம் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது.
புலர் மு.தமிழ்கூத்தன், திருமதி. காந்திமதி ஆகியோரின் வாழ்த்துரை வளம்
சேர்க்கின்றது.


“கவிதை ஆழ்மனத்தின் வெளிப்பாடு, உள்ளுள் கனன்று கொண்டிருக்கும்
உணர்ச்சிக் கொந்தளிப்பு சமூக அவலங்களுக்கு எதிரான போர்முரசு ஆம் தம்பி
இரா.ஜீவாவின் கவிதைகள் இத்தகையது தான்” என்று புலவர்” மு.தமிழ்க்கூத்தனின்
வைர வரிகள் நூலிற்கு தரத்தை பறைசாற்றுகின்றது.


வீர வணக்கம்

சமூக அவலத்தை வேரோடு சாய்க்க வந்த
ஈரோட்டு கிழவனுக்கு
என்று வித்தியாசமாக நூலை காணிக்கையாக்கி உள்ளார்
.


குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்போம் என அறிவிப்புகள் சொல்கின்றன.
சட்டங்களும் சொல்கின்றன.ஆனால் நம் நாட்டில் நடைமுறையில் எண்ணிலடங்கா ஏழைக்
குழந்தைகள் உழைத்து உயிர் வாழ வேண்டிய அவல நிலை இன்றும் தொடர்ந்து கொண்டு
தான் இருக்கின்றது.


மத்தாப்புக்கள் சிரிக்கின்றன
எங்கள் சிவகாசிக் குழந்தைகளின் அழுகையில்
கல்வி மறுக்கப்பட்ட இவர்கள்
தயாரிப்பதோ சரஸ்வதி சரவெடி



இந்த இரண்டு வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கு
ஊதியம்
கூட கொடுக்காமல், கொத்தடிமைகளாக வேலை வாங்கும் அவலம் நாட்டில் நடந்து
கொண்டு தான் இருக்கின்றது. எனக்குத் தோன்றிய உடன் ஒரு வரி,


லட்சுமியே கொடுக்காமல் லட்சுமி வெடி செய்ய சொல்கிறார்கள்.


னுட்டி ஜப்பான் என்று சொல்லப்படும் சிவகாசியில் குழந்தைத் தொழிலாளர்
முறை ஒழித்து விட்டதாக உதட்டளவில் சொன்னாலும் நடைமுறையில் இன்னும் சில
இல்லங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் வேலை பார்த்துக் கொண்டு தான்
இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.


இவர்கள் வாசிக்கவும் யோசிக்கவும் முடியாது
சுவாசிப்பதே வெடி மருந்துக் காற்று தான்
.


இன்றைக்கும் தீ விபத்து ஏற்பட்டு விலை மதிப்பற்ற மனித உயிர்கள்
பலியாவதும், பிஞ்சுகளும் பலியாவதும் தொடர்கதையாக நடைபெற்று வருகின்றது.


உங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தான் தீபாவளி
எங்களுக்கு தினம் தினம் தீ வலி தான்



வார்த்தை விளையாட்டுப் போல, தீபாவளி, தீ வலி என்ற சொற்களில் பிஞ்சுகளின்
மனவலியை உணர்த்துகின்றார் நூலாசிரியர் கவிஞர் இரா.ஜீவா.


தீபாவளி என்ற பண்டிகை நடந்து முடிந்து மறு நாளில் செய்தித் தாளில் தீ
விபத்து,காயம் பலி என்ற செய்தி வராமல் இருந்ததே இல்லை. இந்தச் செய்தியைப்
படிக்கும் போது தீபாவளி ஏன் வருகின்றது. அப்படியே வந்தாலும் ஆபத்து
விளைவிக்கும் பட்டாசு தேவையா?என முற்போக்காளர்கள் சிந்திப்பது உண்டு.


நீங்கள் விற்பது பட்டாசு வியாபாரமா?
இல்லை பிள்ளைக் கறியா?
குழந்தைகளின் உழைப்பைக்
கோணிப்பையில் அள்ளுகிறீர்கள்-சரி
அவர்களின் உடலையுமா?



இப்படி சிந்திக்க வைக்கும் கேள்விகளின் மூலம் பிஞ்சுகளின் வாழ்வில்
வசந்தம் வராதா? என ஏக்கத்தை விதைத்து விடுகிறார்.


எல்லோரும் இறைவன் குழந்தைகள் என்று பொன்மொழி பேசுகின்றோம். ஆனால்
கோயில்களில் காணிக்கை என்ற பெயரில் பணங்களையும், தங்கத்தையும்
கொட்டுவார்கள்.


ஆனால் ஒரு ஏழைக் குழைந்தைக்கு உதவ வேண்டுமென்ற மனித நேயம், பலருக்கு
இருப்பதில்லை. அதனை உணர்த்தும் கவிதை இதோ!


கடவுளின் குழந்தையானாலும்
கந்தக் கிடங்கில் கஞ்சிக்குப் போராட்டம் தான்.



இன்றைக்கு கோடிக்கணக்கானோரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி
செய்யப்படவில்லை என்பது முற்றிலும் உண்மை, உலகமயம், தாராளமயம் என்ற பெயரில்
சிறிய தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்தி உழைக்கும் மக்களின்
வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டனர்.


சிவகாசியில் நிறைய சிறுவர்,சிறுமிகள் விபத்துக்கு உள்ளானார்கள் என்பதை
யாரும் மறுக்க முடியாது. அந்த அச்சுபூமியைத் தோண்டிப் பாருங்கள்,
பிஞ்சுகளின் பிணங்கள் நிறைய கிடைக்கும்.


சிவகாசியும் ஒரு “நொய்ல்டா”
என்று எழுதி நொய்ல்டாவில் நடந்த மொட்டுக்களின் படுகொலைகளையும் நமக்கு
உணர்;த்துகின்றார் நூல் ஆசிரியர். கும்பகோணத்தில் பிஞ்சுகளைக் கொன்ற தீயையே
கவிஞர் வெறுக்கிறார்.


நெருப்பால் செய்த உணவும் எனக்கு வேண்டாம்
அதுதான் கும்பகோணத்தில் எங்கள் குழந்தைகளை
எரித்துக் கொன்றது.


பச்சையாக வேக வைக்காததை சாப்பிடுவதே நல்லது என மருத்துவர்கள்
சொல்கிறார்கள். எனவே நாமும் கடைபிடிக்கலாம்.


நூல் முழுவும் பிஞ்சுகளுக்காக உரக்கக் குரல் கொடுத்து உள்ளார். கவிஞரின்
கோபம் நியாயமானதே கோபம் தணிக்க சமுதாயமும் அரசும் முன் வர வேண்டும்.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 10:00 pm

2009
ஆம் ஆண்டு நாட்குறிப்பு , நூல் விமர்சனம்: கவிஞர் இராஇரவி




நூல் ஆசிரியர் : கி.கண்ணன்

நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. நூலாசிரியர் கவிஞர் கி.கண்ணன்
மானம்பாடியில் வாழும் கவிதை வானம்பாடி. மகாகவி பாரதியாரைப் போல ரௌத்திரம்
பழகு என பல இடங்களில் உள்ளக்குமுறலை நன்கு பதிவு செய்துள்ளார். சில
இடங்களில் கொச்சையான உடல்மொழிச் சொற்களை தவிர்த்து இருக்கலாம்.
மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை,மதம் மாறிய பின்னும் சாதி தொடரும்
அவலைத்தைச் சுட்டுகின்ற கவிதை.
ஆதுசரி
கீதையின் பாதை பயணித்த கீழத்தெரு இராமசாமி
மருவியிருந்தான் பைபிளுக்கு
தோத்திரம் வாசித்த பீட்டரும்
தூக்கிச் சுமந்தான் திருக்குர்ஆன்
அங்குமிங்கும் மாறி மாறியும்
மாறாதிருந்தன அவர்கள் சாதி

இக்கவிதை படித்ததும் என் நினைவிற்கு வந்தது, தாழ்த்தப்பட்ட சகோதரன்,
இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கோ, இஸ்லாமிய மதத்திற்கோ மாறினால்
சாதி மாறுவதில்லை,வகுப்பு மாறி விடுகின்றது. தாழ்த்தப்பட்டவர்,
பிற்படுத்தப்படுத்தப்பட்டவர் ஆகிவிடுவதால் சலுகைகள் பறி போகின்றன. சமூக
நீதி கிடைப்பதில்லை. தேர்தல் காலத்தில் மட்டுமே வாக்காளன்
நினைக்கப்படுகிறான் என்பதை உணர்த்தும் கவிதை.
ஏனவே வெட்கப்படுகிறேன் நானிங்கு
எப்போதெனில் கரும்புள்ளி மட்டுமே
நாம் உயிரோடிருப்பதை உறுதிப்படுத்தும்
தேர்தல் நினைத்து

கவிதைகளில் பகுத்தறிவு சிந்தனை உள்ளது
ஆனாலும் ரொம்பவே மோசம் மனிதன்
வேண்டுதலை நிறைவேற்றும் அய்யனாருக்கு
ஆட்டுத்தலை காணிக்கை
ஏழுதவே கூச்சமாயிருக்கிறது
உண்ணாத சிலைக்குத் தலையா?

இன்றைய அரசியல் தலைவர்களின் அவலநிலையை தோலுரித்துக் காட்டும் கவிதை.
பிறிதொரு நாள்
எதிர்க்கட்சித் தலைவர்கள்
ஒருவர் மாற்றி ஒருவர்
அறிக்கை சாணத்தால் அடித்துக் கொண்டார்கள்
வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய நாம்
அவர்களுக்கு வாக்களித்த பாவத்துக்கு

எதிர்கட்சித் தலைவர்கள் என்பதற்கு பதிலாக கட்சித் தலைவர்கள் என்றிருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும், பொருத்தமாக இருக்கும்
ஆதலால்
பணக்காரர்களுக்கே சட்டம் பேசத் தொடங்கி விட்டதால்
வம்பேனென்று ஊமைகளாயினர் ஏழைகள்
சட்டம் ஒரு இருட்டறை என்றார் அறிஞர் அண்ணா. ஏழைகளுக்கு நீதி வழங்கும்
மன்றமாக நீதிமன்றங்கள் மாற வேண்டும்.
இன்றைய திரைப்படங்களின் அவலநிலை கண்டு கொதித்துப் பாடுகிறார் கவிஞர்
கண்ணன்.
ஆதலின் நமீதாவின் சதைக்குத் திரளும் கூட்டம்
பூ
கதைக்கு போகாதது ஏன் ? விளங்கவில்லை
இரசிகர்களைத் திரையரங்கினுள் இழுப்பது
கதைகளா? சதைகளா?

நடிகையின் பெயர் குறிப்பிடத் தேவையில்லை, நடிகை என்று பொதுவாகவே
குறிப்பிட்டு இருக்கலாம். கவிஞரின் கோபம் உண்மை தான். மிகவும் சிரமப்பட்டு
கதையம்சத்துடன், கருத்துள்ள திரைப்படம் எடுத்தால்,திரையரங்கை விட்டு
விரைவில் ஓடி விடுகின்றது. நடிகைகளின் சதைகளைக் காட்டி, கதையே இன்றி
திரைப்படம் எடுத்தால், ஓகோ என்று ஓடி விடுகின்றது. இந்த அவலநிலை
மாறவேண்டும் என்பதே கவிஞரின் விருப்பம்.ஊடகங்களும் கதைப்பற்று இன்றி,
சதைப்பற்றுடன் நடந்து கொள்கின்றன.
தேர்தலே இன்றைக்கு மூடநம்பிக்கையாகி விட்டது. கண் துடைப்பாகி
விட்டது.ஜனநாயகம், பணநாயகம் ஆகி விட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு
என்று இனி கூறுவதில் அர்த்தம் எதுவுமில்லை. வாக்காளர் பட்டியலில் பலர்
விடுபட்டுப் போகும் விபத்து நடக்கின்றது. ஆதனை விளக்கும் கவிதை.பெயர்
இருந்தால் மட்டும் என்ன சாதிக்கப் போகிறோம்
குறிப்பாக
இருப்பவர் விடுபட்டுப் போய்
இறந்தவர் இடம் பெற்று விடுகிறார்கள்
வாக்காளர் பட்டியலில்

இன்றைக்கு இந்திய நாடு எப்படி இருக்கிறது. என்பதை நன்கு பதிவு
செய்துள்ளார்;.கண்டு உணர்ந்த உணர்வை கவிதையாக்கும் போது வெற்றி
பெறுகின்றது. ஏதுகை, மோனை இலக்கணங்கள் இல்லாவிட்டாலும், கருத்தின் காரணமாக
சுவை கூடி விடுகின்றது.
இவ்வாறாக இருக்கிறதென் நாடு
பசித்துப் புசிக்க உணவில்லாத
பஞ்சப் பரம்பரை அனேகம்
புசிக்கப் பசி;க்கவே இல்லையென
உண்ணாவிரதத்தில் பணக்காரர்
ரூபாய்த்தாள் தோதாய் இல்லாமையால்
மேறபடிப்புக்குப் படியேற முடியாது
அடிப்படைக் கல்வியோடு இந்நாட்டு மன்னர்கள்
சொல்வதெனில் வெட்கமென்ன
கோடி கோடியாய்குமிகின்றது
ஏழுமலiயானுக்கு உண்டியல் காணிக்கை

இந்தக் கவிதை சிந்திக்க வைக்கின்றது. ஏழுமலையான் கருவறை முழவதும்
தங்கமாக்கப்படுவதாக செய்தி படித்தேன். தினமும் ஒரு வேளை உணவு கூட
கிடைக்காமல் பசியால் வாழும் ஏழைகள் கோடி இருக்கும் இந்த நாட்டில்,
கோடிக்கணக்கில் தங்கம்,கடவுள்களுக்கு தங்கம் அவசியமா? நாட்டில் பகுத்தறிவு
பரவவேண்டும், ஏற்றத்தாழ்வுகள் சமநிலை அடையவேண்டும், வறுமை
ஒழிக்கப்படவேண்டும்
ஈழக்கொடுமை கண்டு கொதிக்காத கவிஞன் இல்லை. கொதிக்காதவன் கவிஞனே இல்லை.
கவிஞர் கண்ணனும் கொதித்து உள்ளார். நாம் வாய் இருந்தும் ஊமையான அவலம்
சுட்டும் கவிதை.
ஈழப்பிரச்சினையில்
நாம் ஆண்மை அற்றவர்களாய் இறுகிய பின்
பேசுவதற்கென்ன இருக்கிறது
இறையாண்மை பற்றி

இறையாண்மை என்ற கற்பனை பூச்சாண்டி காட்டியே தமிழர்களின் இன உணர்வை
மழுங்கடித்த அவலத்தை நன்கு பதிவு செய்துள்ளார். நல்ல முயற்சி,
பாராட்டுக்கள். நேர்த்தியான அச்சு, நூலில் சில இடங்களில் கவிதைக்கேற்ற
ஓவியங்கள் பயன்படுத்தி இருக்கலாம்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 10:01 pm

நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயபாலன்


நூலின் தலைப்பே இலக்கிய
தரமாக உள்ளது. பூ மலருவதை அருகில் இருந்து பார்த்தால் அந்த உணர்வே மிக
இனிமையாக இருக்கும்.அது போல இந்த “முதல் பூ பூத்தது” நூல்,மலரும் முன்
மொட்டாகப் பார்த்து நூலாக மலர்வதைப் பார்த்ததும் இன்பம் தான்.

திரைப்படத்திற்கான
பாடல்கள் எழுதி உள்ளார்.கவியரசு கண்ணதாசன் இல்லாத குறையைப் போக்க
வந்துள்ளார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களிடம் நீங்கள் ஏன்?
திரைப்படத்திற்கு பாடல் எழுதவில்லை என்ற கேட்ட பொழுது,அம்மி குத்த சிற்பி
எதற்கு?என்று கேட்டார்.ஆனால் இந்த சிற்பி அம்மியையும் மிக அழகாக,நுட்பமாக
இலக்கியத்தரமாக கொத்தி உள்ளார்.இந்தக் கவிஞர் வருங்காலத்தில் சிலை
செதுக்கவும் வர வேண்டும் என்பது என் ஆசை.இசையமைப்பாளர் கையில் இந்த நூலைத்
தந்தால் போதும்,கவிஞரை உடன் சென்னைக்கு அழைத்து விடுவார்கள்.அந்த அளவிற்கு
பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளது.புகழ்ச்சிக்காகச்
சொல்லவில்லை.படித்துப் பார்த்தால் உண்மை என்பதை உணர்வீர்கள்.உலகில்
உறவுகள் பல உண்டு.அம்மா என்ற உறவிற்கு ஈடு இணை இல்லை.அம்மா பற்றி பாடல்
இதோ,

கோயிலுக்கு நான் எதுக்குப் போகணும்
உன்னைத்தானே தெய்வமா தினம் வணங்கணும்
நீ தந்த சொல்லு வாழ்க்கை கருவாச்சு
நீ தந்த பாலு நல்ல அறிவாச்சு

இப்படி
வைர வரிகளால்,உள்ளத்தை கொள்ளை கொள்வதுடன் பாடல் வரிகளைப் படிக்கும் போது
நம் அம்மாவின் நினைவு வந்து விடுகின்றது.இது தான் படைப்பாளியின்
வெற்றி.எதுகை,மோனை,இயைபு மூன்றும் போட்டி போட்டு
நடனமாடுகின்றது.படிப்பதற்கு இனிமையாக உள்ளது.திரைப்படத்தில் காட்சியைச்
சொல்லி பாடல் கேட்பார்கள்.ஆனால் இவருடைய பாடலை வைத்தே திரைக்கதை எழுதி
விடலாம்,அவ்வளவு சிறப்பு.

இன்றைய திரைப்படப் பாடல்களில் தரம்
இல்லை.ஆங்கிலச் சொல் கலப்பு அதிகம் என்ற குற்றச்சாட்டும் உண்டு.ஆனால்
இவருடைய பாடல்களில் ஆங்கிலச் சொல் கலப்பு இன்றி,நல்ல தமிழில் நல்ல நடையில்
வந்துள்ளது.ஆங்கிலம் கலக்காததற்காகவே கவிஞரைப் பாராட்டலாம்.

ஆண்,பெண்
பாடுவது போல,கேள்வி கேட்டு பதில் சொல்வது போல,நல்ல பல உத்திகளைக் கையாண்டு
பாடல்கள் எழுதி உள்ளார்.இவரைப் போன்ற கவிஞர்கள் திரைத்துறையில்
நுழைந்தால்,தரமான திரைப்படப் பாடல்கள் வர வாய்ப்பாக அமையும்.

பள்ளியில்
ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே பாடல்களும் புனைந்து உள்ளார்.இலக்கியம்
என்பது மனிதனை ஆற்றுப்படுத்த உதவும்.கவிஞர் அவரை ஆற்றுப்படுத்த பாடல்
எழுதி,அதை நூலாக்கி படிக்கும் வாசகர்களை ஆற்றுப்படுத்தி வெற்றி
பெற்றுள்ளார்.

திருவள்ளுவரின் காமத்துப் போல,காதல் ரசம் சொட்டச்
சொட்ட பாடல் வடித்துள்ளார்.தனி முத்திரை பதித்து உள்ளார்.ஒரு இடத்தில் கூட
விரசமோ,இரட்டை அர்த்தங்களோ இன்றி மிகத் தரமாக பாடல் எழுதி உள்ளார்.மக்கள்
விரும்பும் பாடல்கள் எப்படி எழுத வேண்டும் என்பதை இவரைப் பார்த்துக்
கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் அனைவரும் இந்த நூலைப் படித்துப் பார்த்து அவர்களின் நடையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கவிஞர் விஜயபாலன் விரைவில் திரைப்படத்துறையில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துக்கள்.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 10:02 pm

* நூல் ஆசிரியர் : நகைச்சுவை அருவி விளாங்குடி விநாயகமூர்த்தி


“தமிழ்க்
களஞ்சியம்” என்ற பெயருக்கு ஏற்றபடி உண்மையிலேயே தமிழ்க் களஞ்சியமாக
உள்ளது. உண்மையிலேயே 10,000 வினா விடைகள் உள்ளது. வரிசையாக சோதனை செய்து
பார்த்தேன். என்சைக்ளோபீடியா போல உள்ளது. மாணவர்களுக்கு மட்டமல்ல, தமிழ்
ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் அற்புத நூல். தமிழின் பெருமையை பறைசாற்றும்
விதமாக உள்ளது. படித்து முடித்தவுடன் தமிழனாகப் பிறந்ததற்காக ஒவ்வொரு
தமிழனும் பெருமை கொள்ளும் விதமாக உள்ளது.
10,000 கேள்விகளையும்,
அதற்கான சரியான விடைகளையும், நூல் ஆசிரியர் விளாங்குடி விநாயகமூர்த்தி
தொகுத்ததை எண்ணிப் பார்க்கவே வியப்பாக உள்ளது. பட்டிமன்ற நடுவராக,
தொலைக்காட்சிகளில்; நகைச்சுவை அருவியாக, பள்ளி ஆசிரியராக, தனி முத்திரை
பதித்தவர், நூல் ஆசிரியராகவும் சிறப்பான முத்திரை பதித்து உள்ளார்.
பாராட்டுக்கள். இந்நூலை படித்த மாணவர்கள் வெல்வது உறுதி.

இதில்
உள்ள எத்தனை கேள்விகளுக்கு நமக்கு விடை தெரிகின்றது ? என்று நம்மை நாமே
சோதித்துக் கொள்ள உதவுகின்றது. நமக்கு விடை தெரியாத கேள்விகள் பல உள்ளன.
இந்த நூலைப் படிக்க உலகின் முதல் மொழியான தமிழ் மொழி பற்றிய அறிவு,
விரிவடைகின்றது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஒப்பற்ற தமிழ் மொழிக்கு
அழிவே இல்லை என்பதை உணர முடிகின்றது.

காக்சிச் சட்டைக்குள் இலக்கிய
இதயம், இனிய நண்பர், கவிஞர், காவல் ஆய்வாளர் ஆ. மணிவண்ணன் அவர்களின்
அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. சங்க இலக்கியம் தொடங்கி முக்கிய நாட்கள்
வரை தகவல் களஞ்சியமாக உள்ளது. முக்கிய நாட்கள், பாடத் திட்டம், விளக்கம்
இவை எல்லாம் 10000-ல் அடங்காமல், கூடுதல் சேர்க்கையாக உள்ளது. இந்த நூலைப்
படித்து விட்டு தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் மடல்களும் உள்ளது.
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டது இந்த நூல்.

கண்ணில் விளக்கு
எண்ணெய் ஊற்றிக் கொண்டு, நூலில் தவறு ஏதும் உள்ளதா? என ஆராய்ந்து
பார்த்தேன்? பட்டினத்தார் இயற்பெயர் என்ன? என்ற கேள்வி பதில் மட்டும்
கவனக்குறைவாக மூன்று முறை வந்துள்ளது. வேதநாயகம் பிள்ளை பற்றி பல அரிய
தகவல்கள், தமிழறிஞர்கள் பற்றி, தமிழ் இலக்கியங்கள் குறித்து, தமிழ்
மொழியின் தொன்மை குறித்து, எண்ணிலடங்கா தகவல்களின் சுரங்கமாக நூல் உள்ளது.
தமிழாசிரியர்கள் அனைவரும் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். இதைப்
படித்தால் தான் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க எளிதாக இருக்கும். தமிழர்களின்
இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய ஆவணம் இந்த நூல்.

தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார் இயற்றிய நூல்கள் யாவை?
காப்பியக் கதைகள், நல்லிசைப் புலவர்கள், ஆபுத்திரன் வரலாறு

தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
குளத்தங்கரை அரசமரம்

விடியுமா? என்ற சிறந்த சிறுகதையை எழுதியவர் யார்?
கு.ப. இராஜகோபாலன்

தமிழ் பல்கலைக்கழகத்தின் அய்ந்து புலங்கள் யாவை?
1.அறிவியல் புலம் 2. வளர்தமிழ்ப் புலம் 3. கலைப் புலம்,4. இலக்கியப் புலம் 5. சுவடிப் புலம்

கல்கி எழுதிய முதல் நாவல் எது?
விமலா

தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரம் மூலம் அச்சிட்ட இடம் எது?
தரங்கம்பாடி

தமிழின் முதல் நாளிதல் எது?
சுதேசமித்திரன்

முல்லை பாட்டின் ஆசிரியர் யார்?
நம்பூதனார்

நிலையாமை பற்றி கூறும் திணை எது?
காஞ்சி

தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல் யாது?
அகத்தியம்

மலையாள எழுத்துக்கள் எதை ஒட்டி அமைக்கப்பட்டவை?
தமிழ் கிரந்த எழுத்துக்களை ஒட்டி

முக்கிய நாட்கள்

தேசிய தூய்மை தினம் எது?
ஜனவரி 30
உலக நீர் தினம் எது?
மார்ச்22
உலக வன நாள் எது?
மார்ச்21
உலக புகையில்லா நாள் எது?
மே31
உலக சுற்றுச்சூழல் தினம் எது?
ஜூன்5

பெண்கள் சமத்துவ நாள் எது?
ஆகஸ்ட் 26

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 06, 2010 9:50 pm

நூல் விமர்சனங்கள் :இரா இரவி ?ui=2&ik=b81c859f46&view=att&th=12a1c9ad205c052c&attid=0
கவிதை ஓவியங்கள் : நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி







நூல் ஆசிரியர் : கவிஞர் மு.சந்திரசேகர் DSP ஓய்வு
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு அழகாக உள்ளது. செந்நாப் புலவர்
திருவள்ளுவர், மலர்கள், மயிலிறகு காட்சிக்கு இனிமையாக உள்ளது. காவல்
துறையில் கவிஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் காவல்
துறை துணை கண்கணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கவிஞர்
மு.சந்திரசேகரின் ” கவிதை ஓவியங்கள்” வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன.
ஆசிரியர் என்னுரையில் குறிப்பிட்டுள்ளது உண்மையிலும் உண்மை. அன்றைய இலங்கை
வானொலியில் அவரது தந்தை பாடல்கள், வசனங்கள் கேட்டு மகிழ்ந்த போது தானும்
கேட்டு மகிழ்ந்து தமிழ் மொழி மீது ஈடுபாடு வந்து கவிதை எழுதத் துவங்கினேன்
என்று குறிப்பிட்டுள்ளாh. ஒரு காலத்தில் இலங்கை வானொலி தமிழ் பரப்பியது.
இன்று இலங்கை அரசே இலங்கைத் தமிழர்களை வதம் செய்தது. உலக அரங்கில்
குற்றவாளியாக நிற்கின்றது.
டாக்டர்.முத்து செல்லப்பன், கவிஞர் பழநி ஜெயச்சந்திரன் அணிந்துரை
கவிதையால் அலங்கரிக்கின்றது. சிறந்த மரபுக்கவிஞர் கருமலைப்பழம் நீ
திரு.சி.ந.தமிழ்ப்பிரியன் ஆகியோhரின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துத் தொடங்கி 81 கவிதைகளின் தமிழ்ப்பற்றோடு சமுதாய
விழிப்புணர்வோடு கவிதைகள் பலவற்றை சொல் ஓவியமாகத் தீட்டி உள்ளார். அதனால்
தான் கவிதை ஓவியங்கள் என்று பெயர் சூட்டி உள்ளார். அவருடைய நோக்கத்தை
கவிதையிலும் கூறுகிறார் இதோ!
எனது நோக்கம்
நான் நாடறிந்த புலவனல்லன் மக்கள் பாடறிந்த தமிழன்
நாட்டின் ஓட்டைகள் அடைபடவே தமிழில் பாட்டுக்கள் நான் படைப்பேன்
மக்கள் குறைகள் களையப்பட்டால் உள்ளக் குமுறல்கள் நிற்கும் என்பேன்.

இந்த உணர்வு தான் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இன்றைய தேவையாகும். கவிதை
என்ற பெயரில் இயற்கையை அளவிற்கு அதிகமாக புகழ்ந்து விடுத்து, அலங்காரம்
செய்வது விடுத்து, மக்கள் துயர் நீங்கத் தீர்வு கூறி படைக்க வேண்டும்.
அந்த வகையில் வெற்றி பெறுகிறார் நூலாசிரியர் கவிஞர்.மு.சந்திசேகர்
இன்றைக்கு ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னியை அபகரித்து
சம்பாதிக்கும் இடைத் தரகர்களை கவிதையால் சாடுகின்றார். ஏழைகள் பலர் குருதி
விற்று, கிட்னி விற்று இன்னும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை
செய்து, பசி போகக் வேண்டிய அவல நிலையை கவிதைகளில் சுட்டிக் காட்டுகின்றார்.
கர்ப்பத் தடைக்குக் காசுகள் கிடைப்பதால்
கல்யாணமாகக் காளைகளும் காயடித்துக் கொள்கின்றனர்
.
நாட்டில் உள்ள வறுமையை படம் பிடித்து காட்டுகின்றார். இது கற்பனையல்ல. நடக்கும் உண்மை.
காக்கிச் சட்டைக்காரர்களிடம் கருணை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்,
அது தான் நாட்டு நடப்பு. ஆனால் இந்த நூலாசிரியர் கருணை என்ற தலைப்பில்
கவிதை எழுதி மனித நேயத்தை மட்டுமல்ல, பறவை நேசத்தையும் வெளிப்படுத்தி
உள்ளார். விதிவிலக்கான காக்கிச்சட்டைக்காரர் நூலாசிரியர்.
கருணை ஆடிக்காற்றே, பசுமரங்களைப் பகடைக்களாயாய் உருட்டுபவளே அந்தப் பட்டமரத்தை மட்டும் விட்டு விடு, அதில் ஜோடிக்கிளிகள்
தம் குஞ்சுகளுடன்

வேண்டுகோள்
விழிப்போடு நெருப்பாய் எழு,செழிப்போடு வாழ் – தமிழா
களிப்போடுழை, கனிபோல் மொழி இனிதாகவே இரு
அன்பே கல்வியே விழி – வெல்வமே குவி
புண்மையை ஒழி – தம்பி வன்மையே பலம்
வலிமையை திறம், மென்மையே ஒழி

இப்படி விழிப்புணர்வு விதைக்கும் கவிதைகள் பல நூலில்; உள்ளது. தன்னம்பிக்கை விதை விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளது.
இன்றும் புதிதாய்ப் பிறப்பெடு
உதிர்ந்த சிறகுகளுக்காக எந்தப் பறவையும்
ஒப்பாரி வைப்பதில்லை
புதிய சிறகுகளை கோதிவிட்டுக் கொண்டு குதூகலிக்கின்றது
உதிர்ந்த இலைகளுக்காக எந்த மரமும் மரணித்த விடுவதில்லை
கடந்த காலச் சேதங்களால் சிதைந்து சீரற்றுப் போகாதே
இன்று புதிதாய்ப் பிறப்பெடு, புதிய சிகரங்கள் நோக்கிப் புறப்படு

இந்த வரிகளைப் படித்த போது ஈழத்தில் ராஜபட்சேயின் வெறியால் சிதைந்து போன
நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் என்ற நினைவிற்கு வந்தனர்.
அவர்கள் வாழ்வில் வசந்தம் வர வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்களின்,
படைப்பாளிகளின், ஆசையாக உள்ளது. நூலாசியரியர் கவிஞர் மு.சந்திரசேகர்
அவர்களுக்கு உள்ள மனிதநேயத்தை, ஈரமனசை
காவல் துறையில் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது ஆசை.
நூலாசிரியர் காவல் துறையிலிருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டாலும்,
பணியாற்றிய போது தான் கவிதைகளை எழுதி உள்ளார். பல கவிதைகளில் எழுதிய
வருடத்தை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்குறள் என்ற பெயரில் சில மாணவர்கள் திருக்குறளுக்குக் களங்கம்
கற்பித்து உள்ளார். ஆனால் நூலாசிரியர் கவிஞர் மு.சந்திரசேகர் புதுக்குறள்
என்ற தலைப்பில் நல்ல பல கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
பொருள்கேட்டுப் பெண்கொண்டார் இல்லம் அன்பின்றி
அருளின்றி அல்லற் படும்.
இல்லத்தில் உன் வரவை எதிர்பார்ப்பார் என்றெண்ணி
மெல்லவே வாகனத்தை ஓட்டு
காடு வளர்த்திட நாடும் வளர்ந்திடும்
காடழிய அழியுமாம் நாடு
மற்றொரு கவிதையில் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கின்றார்.
நட்பினைக் காட்ட சால்வையிட்டு
நயந்தே வஞ்சிக்கும் தோழமையும்
நாவலிக்க வசைபாடி நல்லோர் தம்மை
நாள்தோறும் தூற்றுகின்ற காட்சி கண்டோம்

நாடாள்வோர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விலைவாசிகளை குறைத்து
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால்
நடப்பது என்ன? எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கு பதில் அறிக்கை
விடுவதிலேயே நேரத்தை விரயம் செய்து வருகின்றனர். இப்படி பல சிந்தனைகளை
கவிதை விதைத்து விடுகின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் மு.சந்திரசேகர் அவர்கள்
காவல்துறையில் அரிதாகப் பூத்த குறிஞ்சிப் பூ வாழ்த்துக்கள்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jan 13, 2011 9:44 pm

வைகை மீன்கள்



நூல் ஆசிரியர்: கவிஞர் வெ.இறையன்பு இஆப

நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி



கடலைச்
சேராத ஆறு வைகை. 'வைகை மீன்கள்' என்ற நூலின் பெயரே நம்மைச் சிந்திக்க
வைக்கின்றது. நூல் ஆசிரியர் வெ.இறையன்பு பன்முக ஆற்றலாளர், சிறந்த
சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், நாவல் ஆசிரியர், மிகச் சிறந்த
நிர்வாகி என்பது யாவரும் அறிந்த ஒன்று. கவிதை எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது. வைகை மீன்கள் வாசகர்களின்
உள்ளக்குளத்தில் நீந்தும் கவிதை மீன்கள்.



கவிதை எழுதிய
கவிஞரே வந்து விளக்கவுரை தந்தால் ஒழிய, புரிய இயலாத கவிதைகள் மலிந்துவிட்ட
காலத்தில், தெளிந்த நீரோடை போன்ற நடையில், படிக்கும் வாசகர்கள்
அனைவருக்கும் புரியும் எளிய நடையில் ஹைக்கூ கவிதைகளுக்குரிய
சொற்சிக்கனத்துடன் கவிதைகள் உள்ளன. சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன்
கவிதை வடித்துள்ளார். இக்கவிதைகளில் நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவம் பாதி,
கற்பனை மீதி கலந்த சேதியாக உள்ளது. நூலில் நம்மைக் கவர்ந்த வரிகளைக்
குறிப்பிடுவதற்கு வசதியாக நூலின் மேல் பகுதியை மடிக்கலாமா? என்று
கருதினேன். நூலின் அனேகப் பகுதி மடித்தால், நூல் அழகு போய்விடும் என்று
அடையாளமாக சிறுதாள்கள் வைக்கலாம் என்று முடிவெடுத்து, தாள்கள் வைத்து
வந்தேன். கடைசியில் பார்த்தால் அத்தனை பக்கங்களிலும் தாள் வைத்துவிட்டேன்.
புகழ்ச்சிக்காக எழுதவில்லை. நடந்த உண்மை. எதை எடுக்க, எதை விடுக்க
திகைப்படைந்தேன். பிடித்த வரிகளைப் பட்டியலிட்டால், நூல் முழுவதும்
குறிப்பிட வேண்டும். எனவே திரும்பவும் வாசித்து மறுபரிசீலனை செய்து
மனமின்றி பல தாள்களை அகற்றி விட்டேன்.



சாகித்ய அகதெமி
விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை
அற்புதமாக உள்ளது. நூலாசிரியர் கல்லூரி மாணவராக இருந்தபோது, சிற்பி
பாலசுப்பிரமணியம் தலைமையில் கவிதை பாடி இருக்கிறார். தலைமையேற்ற கவிஞர்
மறந்துவிட்டார். ஆனால் பாடிய மாணவர் மிகப்பெரிய இடத்தை இலக்கிய உலகிலும்,
நிர்வாகத் திறனிலும் அடைந்திட்டபோதும் மறக்காமல், கவியரங்கத் தலைமையிடம்
சொல்லி மகிழ்ந்தவர் நூலாசிரியர். மறக்காமல் அவரிடமே அணிந்துரை வாங்கிப்
பெருமை சேர்த்து தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டார். கவிஞர் சிற்பி
பாலசுப்பிரமணியம் அவர்கள் ஹைக்கூ கவிதையை விரும்புவதில்;லை. ஆனால் அவர்
எளிதில் யாரையும் பாராட்டமாட்டார். அவருடைய மனம் திறந்த பாராட்டாக
அணிந்துரை உள்ளது.



இக்கவிதைகளைப் படிக்கும் போது ஆண், பெண் இரு பாலருக்கும் அவரவர் காதலின் மலரும் நினைவுகளை மகிழ்வித்து விடுகின்றது என்பது உண்மை.



தினசரி பார்த்தாலும் சிலருடைய முகம்

நம் மனத்தில் பாதரசமாய் படியாமல் இருக்கிறது

சிலருடைய முகமோ ஒருமுறை பார்த்தாலும்

சுவரோவியமாய் நிலைத்து நிற்கிறது.



இந்த
வரிகளைப் படிக்கும்போது அவரவர் அன்புக்குரியவர்களின் முகம் உடன்
நினைவிற்கு வந்துவிடுகின்றது. உரை என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு
இலக்கணம் சொல்ல வைரவரிகள்:



பூங்காவின் அண்மையில் பூங்காயற்றாய்த் தவழ்ந்தது அவன் உரை

இசையாய்ச் சொற்களும் அபிநயமாய்ப் புருவ நேர்வுகளும்

நடனமாய்க் கையசைவுகளும், கவிதையாய் விழியசைப்பும்

அருவியாய் ஏற்ற இறக்கமும் அவன் சொற்பொழிவை

அழியாச் சிற்பமாய் அழகுபடுத்தின.



இன்றைய கல்வி குழந்தைகளை கிணற்றுத் தவளையாகவே வைத்து இருக்கின்றன. அதற்கான கண்டனத்தை மிக நேர்த்தியாக பதிவு செய்யும் வரிகள்.



பாடப்புத்தகமே வேதப் புத்தகமென நீங்கள் நினைத்தால்

நான் நாத்திகன்

பள்ளிக்கூடமே தேசமென உங்களுக்குப் போதிக்கப்பட்டால்

குழந்தைகளை நாடு கடத்துவதற்கு முன்மொழியும் முதல் மனிதன்



காதல் நுட்பத்தை நுட்பமாகச் சொல்லும் வரிகள் இதோ!



அவள் கண்களோடு தன் கண்கள் மோதும்போது

உச்சி வெயிலில் ஒருகோடி அருவியில்

குளிக்கிற அனுபவம் நேர்ந்தது.



இப்படி அருவியில் குளித்த அனுபவம், அனுபவித்தவர்களுக்கு நன்கு விளங்கும்.



இயற்கை நேசத்தையும் வலியுறுத்துகின்றார்.



தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு

தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகி விடுகிறான்.



வார்த்தைகள் சிந்துகள் போல வந்து விழுகின்றன.



அவன் மொட்டு விரிவதற்காகக் காத்திருந்தான்

பட்டு நெய்வதற்காக பாத்திருந்தான்



மொட்டு, பட்டு என சொற்கள் நடனமாடுகின்றது. வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. சொற்களஞ்சியமாக உள்ளது.



ஒரு
அதிகாரி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் வரிகள். இந்த
வரிகளின்படியே நூலாசிரியரும் வாழ்ந்துவருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.



தொடர்ந்த நேர்மையும், மக்கள் மீது மாறாத அன்பும்

நீர்த்துப் போகாத ஆர்வமும், உண்மைக்குச் சார்பாக வாழ்வதும்

ஒருங்கே அமையப் பெற்றால்தான் பணிக்குப் பெருமை

பணியால் நமக்குப் பெருமை.



வாழ்க்கையை,
'வெந்த சோற்றை சாப்பிட்டு விதி வந்தால் சாவோம்' என்று வாழ்வோரின் தலையில்
கொட்டும் விதமாக உள்ள கவிதை வாழ்க்கையைப் பொருத்தவரை,



பலர் வழிப்போக்கர்களாகவே இருக்கிறார்கள்

சிலர் சுற்றுலாப் பயணிகளாகச் சுகமடைகிறார்கள்

சிலர் விருந்தினர்களாக வசிக்கிறார்கள்

சிலர் மட்டுமே ரசித்து ருசித்து மகிழ்கிறார்கள்

இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உன்னதமாக்குவேன்.



சந்தர்ப்ப
சூழ்நிலை காரணமாக, பெற்றோரின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக மனம்இன்றி
சம்மதித்து நடக்கும் திருமணம் பற்றி கவிதைகளில் உள்ளது. கற்பனைக் கதையை
கவிதை நடையில் மிகவும் சுவையாக எழுதியுள்ளார்.



இருவது
ஆண்டு இடைவெளியில் அவன் நெஞ்சத்தில் கூடு கட்டிய அந்தப் பறவையின் தரிசனம்,
குலுக்கலில் விழுந்த பரிசாய்க் கிடைக்கும் பாக்கியம் நிகழ்ந்தது.



இந்த
வரிகளைப் படிக்கும் வாசகனுக்கு 20 ஆண்டுகள் கழித்து காதலியைச் சந்தித்த
உணர்வு பரவசம் ஏற்படுகின்றது. இதுதான் நூலின் வெற்றி. உள்ளத்தில் உள்ளது
கவிதை. உணர்வுகளின் வெளிப்பாடு கவிதை. மறக்க முடியாத கல்வெட்டு கவிதை.
இலக்கியத்தில் இனிய இடம் பிடித்த கவிதை. சமுதாய மாற்றம் நிகழ்த்துவது
கவிதை. உள்ளத்தில் தன்னம்பிக்கை விதை விதைப்பது கவிதை. வாசகனை பயணிக்க
வைப்பது கவிதை. இப்படி கவிதை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அத்தனை
சிறப்பும் வைகை மீன்கள் நூலில் உள்ளது. நூல் விமர்சனங்கள் :இரா இரவி 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» மயிலிறகின் முத்தம்' நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக