ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

+4
ஹாசிம்
சரவணன்
பூஜிதா
ரபீக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by Guest Thu Apr 21, 2011 1:27 pm

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைட் என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின் கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத் தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத் தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காது வலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத் தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும் 6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக் கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றை யும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். 9. வெங்காயத்தை சமை த்து உண்ண உடல் வெப்ப நிலை சமநிலை ஆகும். மூலச் சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற் றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குண மாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங் காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். 16. வெங்காய இரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண் டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயத்தில் குறைவான கொழுப்புச் சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத் தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது

. 22. வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைபிடிப்பவர்கள் வெங் காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். 24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண் ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும். 25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். 27. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும். 30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும். 31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். 32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். 41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். 42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும். 43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
avatar
Guest
Guest


Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by ரபீக் Thu Apr 21, 2011 1:28 pm

மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறீர்கள் நண்பரே ,,,
உரிய தலைப்பில் உங்களது பதிவை இடுங்கள் ,,

இதை நான் மாற்றி விடுகிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by பூஜிதா Thu Apr 21, 2011 3:04 pm

இதனால் தான் பெரியார் வெங்காயம் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுதினாரா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by சரவணன் Thu Apr 21, 2011 3:09 pm

மேலும்:
* பூரான், தேள், பூச்சிக் கடித்தால், கடித்த இடத்தில் சிறிய வெங்காயத்தை நான்கு தேக்க வலி குறைவதோடு, விஷம் முறியும். (சிறிய வெங்காயம்)

* தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிய வெங்காயத்தை சாப்பிட, குரல் இனிமையாக வரும் (குரல் வலம்).

செய்யக் கூடாதது:வெங்காயத்தை நறுக்கிய உடனே சமைத்து விட வேண்டும். ஏனெனில் நறுக்கிய வெங்காயம் காற்றி உள்ள மாசுக்களை மிக எளித்தில் ஈர்த்துவிடும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by ஹாசிம் Thu Apr 21, 2011 3:18 pm

நல்ல பதிவு நன்றி


நேசமுடன் ஹாசிம்
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by மனோஜ் Thu Apr 21, 2011 7:24 pm

பயனுள்ள பதிவு அன்பு மலர்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by varsha Fri Apr 22, 2011 2:57 am

பயனுள்ள பதிவு வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Moz-screenshot
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by md.thamim Fri Apr 22, 2011 4:10 am

பயனுள்ள பதிவு வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram 678642
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by md.thamim Fri Apr 22, 2011 4:14 am

பிச்ச wrote:மேலும்:
* பூரான், தேள், பூச்சிக் கடித்தால், கடித்த இடத்தில் சிறிய வெங்காயத்தை நான்கு தேக்க வலி குறைவதோடு, விஷம் முறியும். (சிறிய வெங்காயம்)

* தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிய வெங்காயத்தை சாப்பிட, குரல் இனிமையாக வரும் (குரல் வலம்).

செய்யக் கூடாதது:வெங்காயத்தை நறுக்கிய உடனே சமைத்து விட வேண்டும். ஏனெனில் நறுக்கிய வெங்காயம் காற்றி உள்ள மாசுக்களை மிக எளித்தில் ஈர்த்துவிடும்.

அப்ப நீங்க சூப்பர் சிங்கர் ல கலந்து வீடு வாங்கிடுவீங்க
வீடு வாங்கியதும் பால் காச்சும் போது கூப்புடுங்க வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram 755837

பயனுள்ள பதிவு வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram 678642
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by சரவணன் Sat Apr 23, 2011 1:13 pm

md.thamim wrote:
பிச்ச wrote:மேலும்:
* பூரான், தேள், பூச்சிக் கடித்தால், கடித்த இடத்தில் சிறிய வெங்காயத்தை நான்கு தேக்க வலி குறைவதோடு, விஷம் முறியும். (சிறிய வெங்காயம்)
* தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிய வெங்காயத்தை சாப்பிட, குரல் இனிமையாக வரும் (குரல் வலம்).
செய்யக் கூடாதது:வெங்காயத்தை நறுக்கிய உடனே சமைத்து விட வேண்டும். ஏனெனில் நறுக்கிய வெங்காயம் காற்றி உள்ள மாசுக்களை மிக எளித்தில் ஈர்த்துவிடும்.
அப்ப நீங்க சூப்பர் சிங்கர் ல கலந்து வீடு வாங்கிடுவீங்க
வீடு வாங்கியதும் பால் காச்சும் போது கூப்புடுங்க வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram 755837
பயனுள்ள பதிவு வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram 678642
பால் காச்சுறா பக்கிரி நான் கிடையதுங்கா. நாங்கல்லாம் காச்சுறா ஐட்டமே வேற! ஜாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்  -டாக்டர்.ram Empty Re: வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் -டாக்டர்.ram

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum